Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, Paanch said:

சரி போகட்டும்! இத்தனை ஆயிரம் மக்கள் கூட்டத்தில் 14,000 இராணுவத்தினரில் ஒரு இராணுவத்தினனைக் கூடக் காணவில்லையே....??? ஒரு பொலீசு படையினனைக்கூடக் காணவில்லையே....

தமிழர் பகுதியில் அதுவும் யாழில் இத்தனை ஆயிரம் மக்கள் சுதந்திரமாக ஒன்றுகூட முடியுமென்றால்...???🤔🤔🤔

 அதாலைதான் கவுண்மேந்தின்ரை சப்போட்டோடைதான் இதெல்லாம் நடக்குதெண்டு பேஸ்புக்கிலை அலசிக்கொண்டிருக்கினம்....🤣

  • Replies 59
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அங்கை இருக்கிற சனத்துக்குத்தான் எது என்ன செய்யோணும் எண்டு தெரியும் எண்டவையள் தான் இப்ப......🤣

இப்ப புரியுதா அண்ணா

நாங்க எதை விரும்புகிறோம் என்று.???

12 hours ago, குமாரசாமி said:

🤣

 

13 hours ago, புலவர் said:

 அதை விட கோவணம் இல்லாமலேயே இப்போது இருப்பதைப்போல இருக்கலாமே.

13 உடன் ஒப்பிட்டு கோவணத்தை அசிங்கப்படுத்த வேண்டாம் சகோ.

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தச் சட்டம் எமது பிரச்சினைக்கான தீர்வு அல்ல. ஆனால், இலங்கையின் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள இந்த சடம் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆகவே அதனை நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஒப்பந்தத்தில் கைத்தாச்சிட்ட இன்னொரு தரப்பான இந்தியாவிடம் கேட்பது சரியானதே. ஆனால், இந்தியா இதனைச் செய்யுமா இல்லையா என்பது வேறுவிடயம்.  அத்துடன், இந்தியா தமிழர் தொடர்பாக இலங்கையில் தலையிடுவதை தமது அரசோ, சிங்கள மக்களோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் நீதியமைச்சின் நடமாடும் செயலகத்தில் நீதியமைச்சர் அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.  13 ஆம் திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சமான வடக்கும் கிழக்கும் "இணைந்த" தமிழர் தாயகம் எனும் கோட்பாடு 2006 இல் மக்கள் விடுதலை முன்னணியினரால் தொடரப்பட்ட வழக்கொன்றின்மூலம் நிரந்தரமாகவே பிரிக்கப்பட்டு விட்டன. இந்தியா இதுதொடர்பாக மெளனமே சாதித்தது, பெயரளவில்த் தன்னும் தனது எதிர்ப்பினை பதிவுசெய்ய முயலவில்லை. ஆகவே, இப்போது 13 ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறிதான். 

13 ஆம் திருத்தச் சட்டம் முற்றாக அமுல்ப்படுத்தப்பட்டால்க் கூட அது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யப்போவதில்லையென்று அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலேயே தமிழர்களால் முழுமனதோடு உணரப்பட்டு, நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதனை மீண்டும் தூசு தட்டி இந்தியாவிடம் கொண்டுபோய்க் கேட்பது மீண்டும், இந்தியாவை தனது விருப்பிற்கேற்ப எம்மை மீண்டும் கையாளுங்கள் என்று கேட்பது போல ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

கஜேந்திரகுமாரின் அரசியல்பற்றி பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். இத்திரியில் ஒரு அன்பர் "தகப்பன் சமஷ்ட்டியை எதிர்த்தார், மகன் 13 ஐ எதிர்க்கிறார் " என்று ஒப்பிட்டு எழுதியிருந்தார். ஆனால், 13 ஐ கஜேந்திரக்குமார் எதிர்ப்பதன் நோக்கம் என்னெவென்று தெரியாமலேயே இந்த விமர்சனம் முன்வைக்கப்படுவதாகவே எனக்குப் படுகிறது. ஒற்றையாட்சி முறையினை ஏற்றுக்கொண்டு, மிகவும் பலவீனமான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இந்த சட்டத்தின்மூலம் இன்றிருக்கும் தமிழரின் அதிகாரங்களையோ அல்லது நிலத்தினையோ காப்பாற்றமுடியாதென்பதே அவரின் வாதம் என்று நான் நினைக்கிறேன்.

மத்திய அரசால் நினைத்த நேரத்தில் கலைக்கப்படும் நிலையிலிருக்கும் மிகவும் நலிந்த ஒரு நிர்வாக அமைப்பினை ஏற்றுக்கொள்வதன்மூலம் நாம் அடைய நினைப்பது என்னவென்கிற கேள்வி இருக்கிறது. இன்றிருக்கும் சிங்கள மேலாதிக்க மனோபாவத்தில், ஒருவேளை இந்தியா இலங்கையினை நிர்ப்பந்தித்து 13 இனை முழுமையாக அமுல்ப்படுத்தினால்க் கூட, மறுநாளே சிங்களவர்கள் அதனைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவரும் வாய்ப்புக்களே அதிகம். 13 இனி முழுமையாக எதிர்க்கும் முழுச் சிங்கள தேசமும், தம்மீது வலிந்து சுமத்தப்படும் இந்த அமைப்பை தம்மால் முடிந்த அனைத்து வழிகளையும் பாவித்து செயலற்றதாக்குவார்கள் என்பதுதான் உண்மை.

மேலும், இலங்கை அரசின் ஆதரவுடன் தான் இந்தப் பேரணி நடப்பதாக கூறுவது சரியாகப்படவில்லை. 13 தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகாது. சமஷ்ட்டி அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களே எமது தாயகம் என்று கூறிக்கொன்டு திலீபனின் நினைவிடத்தில் சபதமேற்று, கிட்டு பூங்காவில் முடிவடைந்த தேசியத்திற்கு ஆதரவான பேரணி எப்படி இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் ஆதரவுடன் நடைபெறுகிறது என்று எம்மால் எண்ண முடிகிறது.

கஜேந்திரக்குமாரோ கஜேந்திரனோ செய்வது பாராளுமன்ற ஆசனங்களுக்காகத்தான் என்றால், ஏனைய தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் செய்வது எதற்காக? 

13 இன் மூலம் எமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஆனால், தெரிந்துகொண்டே இந்தியாவிடம் செல்கிறோம். அதன் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? 13 ஐக் காட்டிலும் அதிகமான எதனையும் இந்தியா கொடுக்க விரும்பாது. 13 தீர்வில்லையென்றால், இந்தியாவைத் தாண்டி இன்னொரு தீர்வுக்கு இக்கட்சிகள் போகப் போகின்றனவா? அப்படியானால் அதனை இப்போதே செய்யலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்+

பாஞ் ஐயன் சொன்னது போல,

என்ன குண்டரையோ காடையரையோ காணேல?

எனக்கு என்னமோ, சிங்களவன் ஒரே கல்லில மூன்று மாங்காய் அடிக்கப் பார்க்கின்ற மாதிரியே தோன்றுகிறது.

1 - 13ஐ அதுவும் தமிழரை வைத்தே போராடி இல்லாமால் செய்துவிட்டால் இந்தியாவுடனான பிடியை அறுத்து விடலாம். 
2 - இந்தப் போராட்டத்தை பிற்காலத்தில் 'இந்நாட்டில்(சிறீலங்கா) தமிழர்கள் அடக்கப்படவில்லை. தமது உரிமைக்காக ஆயுதமற்றதாக போராடுவதற்கு அவர்கட்கும் உரிமை உண்டு' என்ற தருக்கத்திற்கு பயன்படுத்துவதற்காக எந்தவொரு இடைஞ்சலோ இடையூறோ செய்யாமல் விட்டுள்ளான். ஏனெனில் தனது நன்மையும் நிறைந்துள்ளதால்! 
3 - இதில நல்ல ஊக்கமகிழ்வோடு கலந்துகொள்ளும் இளைஞர்களை அடையாளம் கண்டு - தமிழ்தேசிய உணர்வினால் உந்தப்பட்டவர்கள் - பிற்காலத்தில், இன்னமும் அந்த உணர்வோடு உள்ளுக்குளே இருப்பவர்களை 'இனந்தெரியாத ஆட்களால் ******* '  போட்டுத் தள்ளி அகற்றிவிடலாம்.

 

சிங்களவன் இல்லாத போராட்டம் பார்க்கவே உப்புச்சப்பில்லாமல் போன மாதிரி உள்ளது.😜

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

13 இன் மூலம் எமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஆனால், தெரிந்துகொண்டே இந்தியாவிடம் செல்கிறோம்.

ஏனெனில் இந்தியாவை விட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை. எங்கள் மரபினதும்,கலாச்சாரத்தின் ஆணிவேரும் ஆழச்சென்று இந்திய நீரையே உறுஞ்சி அதன்மூலமே நாங்கள் வாழவேண்டிய நிலைக்கு இந்தியா எங்களை வைத்துள்ளது. நாங்களும் வளர்ந்தோம், வளர்ந்தும் வருகிறோம். மறுபுறம் இந்தியா எங்களை ஏமாற்றுவதுகண்டு மனம்நொந்து எங்கள் கடவுள்கள் அத்தனைபேரையும் பணிந்து வேண்டினோம். அவர்களும் எங்கள் பக்திகண்டு பரவசமடைந்து தந்த பிரபாகரன் படையையும் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்து விட்டோமே.😭

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்பன் : சமஷ்டி வேண்டாம் என்டவர்.
மகன் : 13 வேண்டாம் எண்டுறார். 

ஆக மொத்தம் இவர்களுக்கு சனத்துக்கு ஏதும் கிடைக்க கூடாது.. அவ்வளவுதான்.. 

ஆனால்… 13ஆல் கிடைத்த.. இதுவரை நடந்த ஒரு மாகாணசபை தேர்தலைக்கூட இவர்கள் இதுவரை புறக்கணித்தது இல்லை.... தோல்வியடைந்த 13ஆல் கிடைத்த மாகாண சபைக்கு ஏன் போகத் துடிக்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள்… பதில் இருக்காது… சம்பளம், வண்டிவாகனம், பதவிகள் இல்லாது இவர்களால் உயிர் வாழ முடியாது… தங்களுக்கு இலங்கை அரசு மூலம் கிடைக்கும் எதையுமே இவர்களால் புறக்கணிக்க முடியாது.. ஆனால் மக்கள் மட்டும் எல்லாத்தையும் புறக்கணித்து அம்மணமாக தெருவில் நிக்கனும்.. அப்படித்தானே?

அவர்கள் 13 ஆல் கிடைத்த மாகாணசபைக்காக இது வரை போட்டியிடவில்லை. புறக்கணித்தார்கள்.  உள்ளூராட்சி சபைத் தெர்களிலும் பொதுத்தேர்தல்கில் மட்டுமே பங்குபற்றியிருந்தார்கள். ஆனால் இனி மாகாணசபை த்தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.  ஒரு அரசியல்கட்சியானது தேர்தல்களில் பங்களிக்காது இருக்குமானால் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகும் வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் மக்கள் தவறானவர்களைத் தெரிவு செய்வார்கள். இதனாNலெயே கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்புறக்கணித்த கூட்டமைப்பு பிள்ளையான் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டதால் அடுத்து வந்த மாகாணசபைத் தேர்களில் போட்டியிட்டார்கள். இதுவே வரலாறு. மாகாணசபைத் தேர்களுக்கும் உள்ளூராட்சிபைத் தேர்தல்களுக்குமான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
கஜேந்திரகுமாரைப் பிடிக்காதவர்கள் அவர் மகிந்தவிடம் கோட்டவிடம் காசு வாங்கி விட்டார் என்று சொல்வார்கள். யாரிடமும் காசு வாங்கி வாழ வேண்டிய தேவை கஜேந்திரகுhமருக்கு இல்லை. தலைவரை மகிந்தவிடம் காசு வாங்கிக்கொண்டு 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தவர் நாவில் நரம்பில்லாக் கூட்டம் பேசுவதற்கெல்லாம் காது கொடுப்பது நெரத்தைதை வீணடிக்கும் செயல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

இப்ப புரியுதா அண்ணா

நாங்க எதை விரும்புகிறோம் என்று.???

கோபுரத்திற்கு கலசம் வைப்பதுதான் குறையாக இருந்த ஒரு விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுப்புகள் செய்தோரும்,தனிப்பட்ட விரோதங்களால் எதிர்ப்பு தெரிவித்தோரும், இனவாத அரசின் கைக்கூலிகளும், ஆதரவு வழங்காதோரும் முள்ளிவாய்க்கால் அழிவுவரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு.......

இன்று சொல்கிறார்கள் விடுதலைப்புலிகள்   ஈழப்பிரச்சனையை சூனிய பிரதேசத்தில் நிறுத்தி விட்டார்களாம். இதை சொல்லபவர்களின் பங்களிப்பு எப்படியிருந்தது என தங்களை  சுய பரிசோதனை செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு தமிழ் அரசியல் கோஸ்டியும் விடிஞ்சா பொழுதுபட்டால் 13 ஆம் திருத்தம் எண்டுது... ஆனா கொஞ்சம் பொறுங்கோ இன்னும் இரண்டு மாதத்திலை வருகுது ஒரு சட்டம்... ஒரு நாடு ஒரு சட்டம்.. அதை தடுத்து நிறுத்த ரெண்டு கட்சியிலை ஒருத்தனுக்கும் வக்கில்லை.. ஒரு குரூப் 13 ஜ கொண்டு வா எண்டும் இன்னொரு குரூப் 13 வேண்டாம் எண்டும் உங்கட எலெக்சன் ஓட்டு எண்ணிக்கையை கூட்ட 13 பூச்சாண்டி காட்டி மக்களை எப்பிடி எல்லாம் ஏமாத்துறியள் ரெண்டு கோஸ்ட்டியும்.. கள்ளர் கூட்டம்.. அரசாங்க காசிலை வயிறு வளர்க்க விடுதலைக்காக எல்லாத்தையும் இழந்து நிக்குர மக்களை வச்சு எப்படி பேய்க்காட்டுது…😡😡😡 நினைச்சா வயிறு பத்தி எரியுது.. உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை எண்டு சும்மாவா சொல்லிவச்சிருக்கிறார்கள் அந்தக்காலத்தில்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/aUgPTxRTld/

சிறிதரனின் பேட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரெண்டு தமிழ் அரசியல் கோஸ்டியும் விடிஞ்சா பொழுதுபட்டால் 13 ஆம் திருத்தம் எண்டுது... ஆனா கொஞ்சம் பொறுங்கோ இன்னும் இரண்டு மாதத்திலை வருகுது ஒரு சட்டம்... ஒரு நாடு ஒரு சட்டம்.. அதை தடுத்து நிறுத்த ரெண்டு கட்சியிலை ஒருத்தனுக்கும் வக்கில்லை.. ஒரு குரூப் 13 ஜ கொண்டு வா எண்டும் இன்னொரு குரூப் 13 வேண்டாம்

அரசியல் கூட்டம் இரண்டு, 

சம் சுங் இரண்டு

பாவம் ஆனந்தசங்கரியும் இப்போ இரண்டு

தமிழினமும் நிலம் புலம் என இன்று இரண்டு

இயற்கையும் இரண்டாகத்தான் உயிர்களைப் படைக்கிறது

என்ன உலகமடா இது......???🧐🤔😲  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.