Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் வேப்ப மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரசமரம் நட்டு வளர்க்கும் படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வேப்ப மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரசமரம் நட்டு வளர்க்கும் படையினர்

கே .குமணன் 

spacer.png

முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்துவந்த வேப்ப மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை அதே இடத்தில் நாட்டி வளர்க்கும் வேலையை படையினர் மேற்கொண்டுள்ளார்கள் .

குறித்த பகுதியில் கடந்த சிலவருடங்களாக செழிப்பான வகையில் வளர்ந்த வேப்பமரம் ஒன்று காணப்படுத்துள்ளது. அந்த மரம் அந்த சந்தியில் இருந்ததுக்கான ஆதாரமாக 2016 ஆம் ஆண்டு கூகுள் நிலப்படங்களில் அந்த மரம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் அந்த சந்தியில் காணப்பட்ட வேப்ப மரம் இராணுவத்தினரால் வெட்டி அகற்றப்பட்டு அவ்விடத்தில் புதிதாக அரசமர கன்று ஒன்று நாட்டப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது. 

13 ஆம் கட்டை சந்தி என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தி இப்போது படையினரால் ஹாகம்பகஸ் ஹந்தி என பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்பட்டு வருவதோடு அந்த சந்தியை சூழவுள்ள அனைத்து பகுதிகளிலும் 3 பாரிய படைமுகாம்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக அமைக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த பகுதி கொக்குத்துடுவாய் கிராமத்துக்கு மிக அண்மையாகவுள்ள பகுதியாக இருப்பதோடு இப்பகுதியை சூழவுள்ள காணிகள் பல வன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் மற்றும் கனிய மணல் கூட்டு தாபனம் ஆகியவற்றால் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ள பகுதியாகவும் காணப்படுகிறது. 

இந்நிலையில் செழிப்பாக நின்ற வேப்ப மரத்தை வெட்டி அஃக்ற்றிவிட்டு அரச மரத்தை நாட்டி வளர்ப்பது எதிர்காலத்தில் அவ்விடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான முன்னாயத்தமாக இருப்பதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
https://www.virakesari.lk/article/122340

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளைப் பற்றி... ஒரு தமிழ் அரசியல் வியாதியும் கதைக்க மாட்டுதுகள்.
ஒன்றுபட்ட  நாட்டுக்குள்... பிரச்சினையை  பேசி தீர்ப்போம் என்று...
பொக்கை வாயால்.... அறிக்கை விட்டு, சிங்களவனை குளிர்விக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்துவந்த வேப்ப மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை அதே இடத்தில் நாட்டி வளர்க்கும் வேலையை படையினர் மேற்கொண்டுள்ளார்கள் .

மோட்டுச்சிங்களவன் எண்டு சொல்லுறதிலை தப்பே இல்லை 😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மோட்டுச்சிங்களவன் எண்டு சொல்லுறதிலை தப்பே இல்லை 😡

நாங்கள் மோடரோ அல்லது சிங்களவன் மோடனோ ? ஒருக்கா வடிவா யோசிச்சுச் சொல்லுங்கோ சாமியர்.. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

நாங்கள் மோடரோ அல்லது சிங்களவன் மோடனோ ? ஒருக்கா வடிவா யோசிச்சுச் சொல்லுங்கோ சாமியர்.. 

தர்மத்துக்கு  புறம்பாக

அநீதியான  வழிகளில்

தூர  சிந்தனையின்றி

மற்றவர்  சொத்தை  எவன்  அபகிரிக்கின்றானோ

அவனே  மோடன்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

தர்மத்துக்கு  புறம்பாக

அநீதியான  வழிகளில்

தூர  சிந்தனையின்றி

மற்றவர்  சொத்தை  எவன்  அபகிரிக்கின்றானோ

அவனே  மோடன்

உந்த உலோகம் தர்மத்தின் வழியேதான் இயங்குகின்றதா ?  

உந்த சேர்மனிக்காறர ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

உந்த உலோகம் தர்மத்தின் வழியேதான் இயங்குகின்றதா ?  

உந்த சேர்மனிக்காறர ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ 🤣

நானும் நீங்களும்  தர்மத்தை விரும்புவதால்

அதன்படி நடக்க முயல்வதால்

அது  தானே உலகம் சகோ?

மூன்று  கால்  முயல்களை  விட்டு  விடுவோமா?😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

நானும் நீங்களும்  தர்மத்தை விரும்புவதால்

அதன்படி நடக்க முயல்வதால்

அது  தானே உலகம் சகோ?

மூன்று  கால்  முயல்களை  விட்டு  விடுவோமா?😂

அப்படியென்றால் நம் இனம் இலவுகாத்த கிளிதான் ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் மோடரோ அல்லது சிங்களவன் மோடனோ ? ஒருக்கா வடிவா யோசிச்சுச் சொல்லுங்கோ சாமியர்.. 

அப்ப ஊர் முழுக்க கடன் வாங்கி சீவிக்கிறது கெட்டித்தனமே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்ப ஊர் முழுக்க கடன் வாங்கி சீவிக்கிறது கெட்டித்தனமே? 🤣

கடன் கொடுத்தவன்ர நிலமைய ஒருக்கா யோசிச்சுப்பாருங்கோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்ப ஊர் முழுக்க கடன் வாங்கி சீவிக்கிறது கெட்டித்தனமே? 🤣

இப்ப பிழைக்கத்தெரிந்த வழி  அது  தானாம் அண்ணை

மற்றவன்  காணியில  ஒரு  துண்டு  கூட வேண்டாம் என்பவர்கள் இலகு  காத்த  கிளிகளாம்

அப்ப  பாருங்கோவன்😭

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

இப்ப பிழைக்கத்தெரிந்த வழி  அது  தானாம் அண்ணை

மற்றவன்  காணியில  ஒரு  துண்டு  கூட வேண்டாம் என்பவர்கள் இலகு  காத்த  கிளிகளாம்

அப்ப  பாருங்கோவன்😭

உஎன்னுடைய உங்களுடைய தனிப்பட்ட கருத்தை நான் கேட்கவில்ல. தற்போதைய உலக நடைமுறை நீதியின்படிதான் இயங்குகிறதா ? 

(நீதி, நியாயம் கூட பண்பாடுகளுக்குப் பண்பாடு வேறுபடுகிறது)

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

உஎன்னுடைய உங்களுடைய தனிப்பட்ட கருத்தை நான் கேட்கவில்ல. தற்போதைய உலக நடைமுறை நீதியின்படிதான் இயங்குகிறதா ? 

(நீதி, நியாயம் கூட பண்பாடுகளுக்குப் பண்பாடு வேறுபடுகிறது)

இங்கே இயங்குகிறதா? ?  இல்லையா  என்பதல்ல கேள்வி

உலக ஒழுங்கு அதன்படி இயங்கணுமா?  வேண்டாமா??? என்பதே கேள்வி

அரசும் அமைப்புக்களும் சட்டங்களையும்  யாப்புக்களையும் நீதி நேர்மை  தர்மப்படி  எழுதி  வைத்து  விட்டுத்தானே இயங்குகின்றன??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இங்கே இயங்குகிறதா? ?  இல்லையா  என்பதல்ல கேள்வி

உலக ஒழுங்கு அதன்படி இயங்கணுமா?  வேண்டாமா??? என்பதே கேள்வி

அரசும் அமைப்புக்களும் சட்டங்களையும்  யாப்புக்களையும் நீதி நேர்மை  தர்மப்படி  எழுதி  வைத்து  விட்டுத்தானே இயங்குகின்றன??

அப்படியானால் இலங்கை இந்திய அரசுகளும் தங்கள் யாப்புக்களின்படிதானே இயங்குகின்றன. 

பிறகேன் இந்த மயிர் பிடி. ? ஏன் இத்தனை   அழிவுகள்? இத்தனை  போராட்டங்கள்? 

உலகில் எங்கேனும் நீதியின் அடிப்படையில் இயங்கும் ஓர் அரசை உங்களால் காட்ட முடியுமா?

எல்லா  அரசுகளும் தங்கள் நாட்டின் நலன் என்கின்ற கோட்டிலேயே இயங்குகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

நாங்கள் மோடரோ அல்லது சிங்களவன் மோடனோ ? 

இந்த கேள்வியை என்னையே நான் பலதடவை கேட்டதுண்டு.

ஈவிரக்கமற்று தன் பிடிக்குள் எந்த ஆதரவும் இன்றி நின்ற ஒரு சிறுபான்மையினத்தை அடியோடு அடித்து கொன்ற அழிக்க நினைத்த சிங்களவன் மோடன் தான்.

அதேநேரம் அறிவாற்றலும், ஆயுத போராட்ட வலிமையும் கொண்டு நிமிர்ந்த எம்மினத்தை மிக இலகுவாக உடைத்து பலவீனபடுத்தி எம் விரல்களை கொண்டே எம் கண்களை குத்தி குருடாக்கி எப்போதும்  பலவீனமாக  வைத்திருக்க தெரிந்த சிங்களவன் நிச்சயமாக உலகின் அதி சிறந்த புத்திசாலிகளில் ஒருவன்.

அன்று அரசியலால் எம்மவர்களை வைத்தே எம்மை தோற்கடித்தான்.

பின்னாளில் ஆயுத போராட்டத்தையும் எம்மவர்களை வைத்தே எம்மை தோற்கடித்தான்...

அப்புறம் எப்படி அவன் மோடன் ஆவான்?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் விரலை வைத்து எங்கள் விரலை குத்தியவன் புத்திசாலிதான், ஆனால் அதற்காக நாட்டை அடகுவைத்து  தலை புழுத்த நாய்போல நாலுபக்கமும் ஓடித்திரியுறானே  அவன் எப்படி புத்திசாலி ஆவான்?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நாங்கள் மோடரோ அல்லது சிங்களவன் மோடனோ ? ஒருக்கா வடிவா யோசிச்சுச் சொல்லுங்கோ சாமியர்.. 

தமிழனை துன்பப்படுத்துவது அல்லது அடக்கி ஆள்வது  என்றால் சிங்கள  அரசியவாதிகளில் இருந்து அடித்தட்டு சிங்களவன் வரை அவர்களின் மூளை கெட்டித்தனமாக இயங்கும் கடந்தகால வரலாறு தமிழனை விட பல சாதிகள் கொண்ட இனம் சிங்களம் அது தங்களுக்குள் அடிபட்டு அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழ் ரை கண்டால்  சிங்களம் துவேசம் கொள்வது வழமையான ஒன்று .

ஆனால் மறுவளம்  பார்த்தால் உலகத்திலே ஒண்ணாம் நம்பர் சோம்பேறி கூட்டம் இந்த சிங்கள கூட்டம் மலையக தமிழர் 6 லட்சம் பேரை நாடு கடத்தல் செய்யும்போது சிங்களவனால் அந்த வேலைகளை செய்து கொள்ள முடியவில்லை விளைவு @ஈழப்பிரியன் அண்ணா கூறியது போல் அந்த ஆறு லட்ஷம் தமிழர்களின் மனித வளத்தை டெல்லி இலகுவாக வாங்கிக்கொண்டது சொறிலங்கா இழந்து கொண்டது தேயிலை ரப்பர் கறுவா போன்ற ஏற்றுமதி தொழில்கள் உற்பத்திகளில் சுணக்க தன்மையை கொடுக்க மற்றைய போட்டி நாடுகள் முந்திக்கொண்டன ஏற்றுமதி குறைவால் கடன்வாங்கும் கலாச்சாரம் தொடக்கி வைக்கப்பட்டது விளைவு பூர்விக தமிழனுக்கு ஒரு துண்டு நிலம் கொடுக்கமாட்டம் என்று இனவாதம் ஆடியவர்கள் கடைசியில் அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் நிலங்கள் பறி போய் கொண்டு இருக்கின்றது .

அதான் தமிழனின் மீது இனவாதம் கொள்வதென்றால் திறமாக சிந்தித்து கொள்வார்கள் மற்றைய பக்கத்தில் உலகத்திலே அதிகூடிய முட்டாள்களும் சோம்பேறிகளும்  நிறைந்த கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

அப்படியானால் இலங்கை இந்திய அரசுகளும் தங்கள் யாப்புக்களின்படிதானே இயங்குகின்றன. 

பிறகேன் இந்த மயிர் பிடி. ? ஏன் இத்தனை   அழிவுகள்? இத்தனை  போராட்டங்கள்? 

உலகில் எங்கேனும் நீதியின் அடிப்படையில் இயங்கும் ஓர் அரசை உங்களால் காட்ட முடியுமா?

எல்லா  அரசுகளும் தங்கள் நாட்டின் நலன் என்கின்ற கோட்டிலேயே இயங்குகின்றன. 

சரி சகோ 

உலகின் அநேகமான அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் பொய் சொல்பவர்கள்

ஆனால் நாம் அவர்களுக்கு வாக்களிப்பதில்லையே?

உலகில் அநேகமான பணக்காரர்கள் நேர்மையான முறையில் பணம் சேர்ந்தவர்கள் அல்ல. அதே வழியில் நாமும் பணம் சேர்ப்பது இல்லையே?

எமது அடுத்த தலைமுறைக்கு அதை பிரேரிப்பது இல்லையே?

காவல் நிலையத்தில் கொள்ளைக்காரன் படம் இருக்கும். அதை வீரத்துக்கு அடையாளமாக கொள்பவர் உண்டோ???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

எங்கள் விரலை வைத்து எங்கள் விரலை குத்தியவன் புத்திசாலிதான், ஆனால் அதற்காக நாட்டை அடகுவைத்து  தலை புழுத்த நாய்போல நாலுபக்கமும் ஓடித்திரியுறானே  அவன் எப்படி புத்திசாலி ஆவான்?

அவனிடம் அடகு வைக்க  நாடிருக்கெல்லோ......😉

ஏலுமானபோது(சந்தர்பம் வரும்போது ) மீட்டுக்கொள்வான். 

எம்மை நாமே புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டிருக்கும்வரை நாம் நிச்சயம் முட்டாள்கள்தான். 

எம்மவர்களை வைத்து எம்மை எப்படி கையாண்டாண்டான் என்பதே எமது இனத்தின் தோல்வியும் வெற்றியும்.

கடன் சுமையில் இருப்பதால் ஒருவன் முட்டாளாகிவிடமுடியாது, உலகில் அதிக கடன் சுமையை சுமப்பது அமெரிக்காதான், அதனால் அமெரிக்கா முட்டாள்களின் தேசமாகிவிடாது.

கடன் சுமையிலிருந்து சிங்களவன் ஒருகாலம் மீளும் வாய்ப்புக்களுண்டு, சிங்களவனிடமிருந்து எம் தேசம் இனி மீளும் சாத்தியமுண்டா?

அதற்கு எம் அரசியல்வாதிகளே இடம் கொடுப்பார்களா satan? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

தமிழனை துன்பப்படுத்துவது அல்லது அடக்கி ஆள்வது  என்றால் சிங்கள  அரசியவாதிகளில் இருந்து அடித்தட்டு சிங்களவன் வரை அவர்களின் மூளை கெட்டித்தனமாக இயங்கும் கடந்தகால வரலாறு தமிழனை விட பல சாதிகள் கொண்ட இனம் சிங்களம் அது தங்களுக்குள் அடிபட்டு அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழ் ரை கண்டால்  சிங்களம் துவேசம் கொள்வது வழமையான ஒன்று .

ஆனால் மறுவளம்  பார்த்தால் உலகத்திலே ஒண்ணாம் நம்பர் சோம்பேறி கூட்டம் இந்த சிங்கள கூட்டம் மலையக தமிழர் 6 லட்சம் பேரை நாடு கடத்தல் செய்யும்போது சிங்களவனால் அந்த வேலைகளை செய்து கொள்ள முடியவில்லை விளைவு @ஈழப்பிரியன் அண்ணா கூறியது போல் அந்த ஆறு லட்ஷம் தமிழர்களின் மனித வளத்தை டெல்லி இலகுவாக வாங்கிக்கொண்டது சொறிலங்கா இழந்து கொண்டது தேயிலை ரப்பர் கறுவா போன்ற ஏற்றுமதி தொழில்கள் உற்பத்திகளில் சுணக்க தன்மையை கொடுக்க மற்றைய போட்டி நாடுகள் முந்திக்கொண்டன ஏற்றுமதி குறைவால் கடன்வாங்கும் கலாச்சாரம் தொடக்கி வைக்கப்பட்டது விளைவு பூர்விக தமிழனுக்கு ஒரு துண்டு நிலம் கொடுக்கமாட்டம் என்று இனவாதம் ஆடியவர்கள் கடைசியில் அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் நிலங்கள் பறி போய் கொண்டு இருக்கின்றது .

அதான் தமிழனின் மீது இனவாதம் கொள்வதென்றால் திறமாக சிந்தித்து கொள்வார்கள் மற்றைய பக்கத்தில் உலகத்திலே அதிகூடிய முட்டாள்களும் சோம்பேறிகளும்  நிறைந்த கூட்டம் .

சாரம்;

ஒரு இனம் அழிந்து போயிற்று/ அழிந்துகொண்டிருக்கிறது. 

இன்னொரு இனம் தன்னை கடந்த 2500 வருடங்களாக  தற்காத்துக்கொண்டு வருகிறது.

இதில் புத்திசாலி எந்த இனம்?

2 hours ago, விசுகு said:

சரி சகோ 

உலகின் அநேகமான அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் பொய் சொல்பவர்கள்

ஆனால் நாம் அவர்களுக்கு வாக்களிப்பதில்லையே?

உலகில் அநேகமான பணக்காரர்கள் நேர்மையான முறையில் பணம் சேர்ந்தவர்கள் அல்ல. அதே வழியில் நாமும் பணம் சேர்ப்பது இல்லையே?

எமது அடுத்த தலைமுறைக்கு அதை பிரேரிப்பது இல்லையே?

காவல் நிலையத்தில் கொள்ளைக்காரன் படம் இருக்கும். அதை வீரத்துக்கு அடையாளமாக கொள்பவர் உண்டோ???

ஐயோ ...🧐

உங்கள் இனத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதிலிருந்து   எடை போடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

அவனிடம் அடகு வைக்க  நாடிருக்கெல்லோ......😉

ஏலுமானபோது(சந்தர்பம் வரும்போது ) மீட்டுக்கொள்வான். 

எம்மை நாமே புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டிருக்கும்வரை நாம் நிச்சயம் முட்டாள்கள்தான். 

உங்கள் நிலை புரிகிறது சகோ.

ஆனால் நாம் தேர்ந்து எடுக்கும் பாதைதான் எம்மை நகர்த்தி செல்லும்.

தலைவரிடமும் சிங்களவனிடம் இருந்த இரண்டு தெரிவும் இருந்தன. கிடைத்தன. ஒன்றை புறக்கணித்து இன்னொன்றை ஏற்றுக் கொண்டார். 

முடிவு.

காலம் பதில் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

உங்கள் நிலை புரிகிறது சகோ.

ஆனால் நாம் தேர்ந்து எடுக்கும் பாதைதான் எம்மை நகர்த்தி செல்லும்.

தலைவரிடமும் சிங்களவனிடம் இருந்த இரண்டு தெரிவும் இருந்தன. கிடைத்தன. ஒன்றை புறக்கணித்து இன்னொன்றை ஏற்றுக் கொண்டார். 

முடிவு.

காலம் பதில் சொல்லும் 

காலம் பதில் சொல்லும்போது எமது இனம் என்கின்ற ஒன்று இலங்கையில்  இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

காலம் பதில் சொல்லும்போது எமது இனம் என்கின்ற ஒன்று இலங்கையில்  இருக்குமா?

சங்கிலியின் தோற்றபோதும் 

எல்லாளன் தோற்றபோதும் 

ஆங்கிலேயர் எம்மை ஆண்டபோதும் கூட இதே கேள்வி எழுந்திருக்கும். ஆனால்???

தர்மம் என்பது என்றும் பலமானது தான்.

ஆனால் காலம் எடுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஏலுமானபோது(சந்தர்பம் வரும்போது ) மீட்டுக்கொள்வான். 

ஒருவேளை புத்தன் உயிர்த்து வந்தால் அந்த அதிசயம் நடக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.