Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம்

நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் வியூகத்தை மாற்றி நோட்டீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பின்னர் சில இடங்களுக்கு நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தார்.  ஆனால் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு  ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன.
இந்தநிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.
நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியைத் தொடருங்கள். உங்களை வெற்றி பெறச் செய்யாததை நினைத்து வருந்துமளவிற்குச் சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான். வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம். தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாதவை.
 
மற்றொன்று திருத்திக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னகரும் வாய்ப்புள்ளவை. நாம் சந்தித்திருக்கும் பின்னடைவு இரண்டாம் வகை. பல இடங்களில் 50% குறைவான வாக்காளர்களே தங்களது வாக்குகளைச் செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளைக் கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்தத் தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது சுட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.
 
இந்தச் சூழலை மாற்றவே முடியாது என சோர்ந்து போனவர்களும், அரசியல் நமக்குச் சொந்தமானதில்லை என ஒதுங்கிக்கொள்ளும் இளைஞர்களும் மனம் மாறி தங்களது ஜனநாயகப் பங்களிப்பைச் செய்கையில் சூழல் மாறும்.
 
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாகக் கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.
 
நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது. எங்களைப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டமான உண்மை.என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.”
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, nunavilan said:

நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம்

இதை சீமான் சொன்னால் கிழிஞ்சுது போ.....😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதை சீமான் சொன்னால் கிழிஞ்சுது போ.....😁

கமலஹாசனுடன்.... திராவிட கும்பல் சேட்டை விட்டால்,
பா.ஜ. க. மூலம்,  நொங்கு... எடுத்திடுவார்கள் என்ற பயம்.

இளகின  இரும்பை கண்டால் தான்...
பின் பக்கத்தை, தூக்கி... அடித்துக் கொண்டு இருப்பார்கள்.
திருட்டுக் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மைன்ட்  வாய்ஸ்: இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்பிக்கிட்டு இருக்குது.
அது சரி கடைசி தேர்தலுடன், தமிழ் நாட்டிலே மூன்றாவது பெரிய கட்சி என சொன்னவர்களுக்கு என்ன நடந்தது. 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

சீமான் மைன்ட்  வாய்ஸ்: இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்பிக்கிட்டு இருக்குது.
அது சரி கடைசி தேர்தலுடன், தமிழ் நாட்டிலே மூன்றாவது பெரிய கட்சி என சொன்னவர்களுக்கு என்ன நடந்தது. 🤪

Bild

இதற்கு உங்களிடம் பதில் உள்ளதா சார்?😷

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

Bild

இதற்கு உங்களிடம் பதில் உள்ளதா சார்?😷

போய் மோடியிடம் கேளுங்கள். உங்களுக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

போய் மோடியிடம் கேளுங்கள். உங்களுக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் என நினைக்கின்றேன்.

மற்றைய மாநிலத்தில்.... சொந்த மாநிலத்தவனுக்கு 
முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால்.... 
அந்த மாநில அரசு...  தமிழ் நாட்டு அரசு மாதிரி, 
திராவிடம் பேசிக் கொண்டு இருக்கும் என நினைக்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

மற்றைய மாநிலத்தில்.... சொந்த மாநிலத்தவனுக்கு 
முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால்.... 
அந்த மாநில அரசு...  தமிழ் நாட்டு அரசு மாதிரி, 
திராவிடம் பேசிக் கொண்டு இருக்கும் என நினைக்கிறீர்களா? 

தல, சும்மா சமூக ஊடகங்களில் வெட்டி பயல்கள் பரப்புகின்றார்கள் என்று, மத்திய அரசாங்க வேலைகளை யார் நியமிப்பது என்ற அடிப்படை அறிவில்லாமல் இங்க கொண்டு வந்து போடக்கூடாது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

மற்றைய மாநிலத்தில்.... சொந்த மாநிலத்தவனுக்கு 
முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால்.... 
அந்த மாநில அரசு...  தமிழ் நாட்டு அரசு மாதிரி, 
திராவிடம் பேசிக் கொண்டு இருக்கும் என நினைக்கிறீர்களா? 

10 minutes ago, zuma said:

தல, சும்மா சமூக ஊடகங்களில் வெட்டி பயல்கள் பரப்புகின்றார்கள் என்று, மத்திய அரசாங்க வேலைகளை யார் நியமிப்பது என்ற அடிப்படை அறிவில்லாமல் இங்க கொண்டு வந்து போடக்கூடாது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

நான் எழுதியதற்கு, இது பதில் இல்லையே ...
ப்ளீஸ்... மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, zuma said:

போய் மோடியிடம் கேளுங்கள். உங்களுக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் என நினைக்கின்றேன்.

நீங்கள் இந்த திரிக்குள் உள்ளே நுழைந்தது கருத்தெழுத.....அதே போல் தான் நானும்....
 கேள்வி கேட்டால் அதற்கேற்ற பதில் எழுத தெரியணும்....இல்லையேல் பார்வையாளராக இருக்கலாம் எல்லோ 😄
 
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

நான் எழுதியதற்கு, இது பதில் இல்லையே ...
ப்ளீஸ்... மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும். 

மற்ற மாநிலங்களிலும் அதுதான் நிலைமை அவர்கள் திராவிடம் பேசவில்லை, கம்யூனிசமும், காந்தியமும்  பேசுகின்றார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாளன் கமல்காசன் பேசுகிறார் சிரிப்பாயிருக்கு,

அன்புச்செல்வன் என்பவனிடம் அரசியவாதிகள் கொள்ளையடிப்பவர்கள் லஞ்ச லாவண்யம் செய்பவர்களது கணக்கில் வராத காசை வெள்ளையாக்க சினிமாவில் முதலீடு செய்யக்கொடுக்க அதைவைத்து அடாவடி செய்ய்வதும் 

மணிரத்தினத்தின் அண்ணஙாரன் ஜி வி ஜிடம் பெற்றகாசை வசூல் செய்ய அவரது வீட்டுப்பெண்களை அசிங்கப்படுத்தினது தாங்காமல் தூக்குப்போட்டதும் அவனால் என்பதை மறந்தும் 

நடிகர் சசிகுமாரது மாமன் விசம் குடிக்கக்காரணமாக இருந்ததுக்குக் காரணம் அன்புச்செல்வன் என்பது தெரிந்தும்

நேத்து அவனது வீட்டு விசேசத்துக்குச் சென்று கொட்டுண்டதைப் பொறுக்கிச் சாப்பிடுபவர்கள் எல்லாம் நேர்மையளர்களாம்.

ஜக்கி வாசுதேவும் அன்புச்செல்வனும் வைத்ததுதான் தமிழ் சினிமாவில் சட்டம். அவர்களுக்குத்தான் இப்போது கூட்டம் கூடுது.

இதில் சிஸ்டம் சரியில்லை எனச்சொன்ன நேர்மையாளரும் அடக்கம் 

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமா இங்கு தப்புச்செய்கிறார்கள் தப்புச்செய்யும் எமது நாட்டுத் தமிழ்த் தலைவர்களையும் தூக்கிச் சுமக்கும் எல்லோருமேதான் காரணம் தமிழர்களது மறதி நோய்.

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில்… ஒரு வாக்குக்கு, 40,000 ரூபாய் வரை இரு திராவிட கட்சிகளாலும் கொடுக்கப்  பட்டுள்ளதாக ஜூனியர் விகடன் தெரிவிக்கின்றது. நான்கு பேர் உள்ள குடும்பத்தில்… ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாயை கடந்த தேர்தல் மூலம் சம்பாதித்து விட்டார்களாம்.

 தி.மு.க.    13 கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பணத்தை வாரி இறைத்து…
கேலிக் கூத்தான தேர்தலை நடத்தி விட்டு… அதில் பெருமைப் பட வெட்கமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கோவையில்… ஒரு வாக்குக்கு, 40,000 ரூபாய் வரை இரு திராவிட கட்சிகளாலும் கொடுக்கப்  பட்டுள்ளதாக ஜூனியர் விகடன் தெரிவிக்கின்றது. நான்கு பேர் உள்ள குடும்பத்தில்… ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாயை கடந்த தேர்தல் மூலம் சம்பாதித்து விட்டார்களாம்.

 தி.மு.க.    13 கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பணத்தை வாரி இறைத்து…
கேலிக் கூத்தான தேர்தலை நடத்தி விட்டு… அதில் பெருமைப் பட வெட்கமில்லை.

பணம் கொடுத்து வாக்கு சேகரித்து வெற்றி பெற்றதை கதைக்காமல் சீமானை மட்டும் சதா கிண்டலடிப்பதும் ஒரு வித நோயே.

மானஸ்தர்கள் கள்ளவாக்கு,காசு வாக்கு  பற்றியெல்லாம் பேசமாட்டார்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பணம் கொடுத்து வாக்கு சேகரித்து வெற்றி பெற்றதை கதைக்காமல் சீமானை மட்டும் சதா கிண்டலடிப்பதும் ஒரு வித நோயே.

மானஸ்தர்கள் கள்ளவாக்கு,காசு வாக்கு  பற்றியெல்லாம் பேசமாட்டார்கள்.😁

அதிலும்…. வாரிசு அரசியலைப் பற்றி, மூச்சுக் கூட விடமாட்டார்கள்…. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அதிலும்…. வாரிசு அரசியலைப் பற்றி, மூச்சுக் கூட விடமாட்டார்கள்…. 

யூ மீன்......↓↓↓↓↓↓↓😄

VHDFJT.png

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

யூ மீன்......↓↓↓↓↓↓↓😄

VHDFJT.png

இந்தப் படத்திலை… அந்த தாடி வைச்ச பெடியன், இரண்டு வருசத்துக்கு முன்னம்….
அரசியல் பக்கமே எட்டியும் பார்க்கவில்லை.
தாத்தா செத்த கையோடை…. அரசியலுக்குள் குதித்து,
இப்ப சட்ட சபையிலை… முதலமைச்சருக்கு (அப்பாவுக்கு) பின்னாலை இருக்கிறான்.

சீமானை உற்றுப் பார்ப்பவர்கள் கண்களில்….
இந்தக் கண்றாவிகள், தெரிவதில்லையோ….

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் படத்திலை… அந்த தாடி வைச்ச பெடியன், இரண்டு வருசத்துக்கு முன்னம்….
அரசியல் பக்கமே எட்டியும் பார்க்கவில்லை.
தாத்தா செத்த கையோடை…. அரசியலுக்குள் குதித்து,
இப்ப சட்ட சபையிலை… முதலமைச்சருக்கு (அப்பாவுக்கு) பின்னாலை இருக்கிறான்.

அவிங்க முடிவு பண்ணிட்டாங்க சிறித்தம்பி......இனி எல்லாம் ரூ லேட்...😂

  • கருத்துக்கள உறவுகள்

“நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம்“

ஆம்…… நேர்மையான யோக்கியவான்கள் பலரும் அவர்கள் தம் கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன கமல் சார்!  🙄

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

யூ மீன்......↓↓↓↓↓↓↓😄

VHDFJT.png

4 hours ago, தமிழ் சிறி said:

கோவையில்… ஒரு வாக்குக்கு, 40,000 ரூபாய் வரை இரு திராவிட கட்சிகளாலும் கொடுக்கப்  பட்டுள்ளதாக ஜூனியர் விகடன் தெரிவிக்கின்றது. நான்கு பேர் உள்ள குடும்பத்தில்… ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாயை கடந்த தேர்தல் மூலம் சம்பாதித்து விட்டார்களாம்.

 தி.மு.க.    13 கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பணத்தை வாரி இறைத்து…
கேலிக் கூத்தான தேர்தலை நடத்தி விட்டு… அதில் பெருமைப் பட வெட்கமில்லை.

ஸ்டாலின் லட்சியம் உதயநிதியை அடுத்த முதல்வர்  ஆக்குவது  என்பதில்  மாற்று கருத்தில்லை (தந்தை பாசம்) , அதனை முடிவெடுக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களே. 
நிற்க, சீமான் அவர்கள் தனது மகனின் காது குத்துக்கு நூறு ஆடுகள் வெட்டி பெருவிருந்து வைத்து தனது தந்தை பாசத்தை வெளிப்படுத்தினர் என்பது யாம் அறிந்ததே.😋

திமுக, அதிமுக, பாஜக என்பன தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார்கள் என்பது ஊரறிந்த பரம ரகசியமாகும், அதற்காக மற்றவர்கள் கொடுக்க மாடடார்கள் என்பதிக்கில்லை, அவர்களிடம் கொடுப்பதிக்கு வசதி இல்லை என்பதேயாகும். 
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

திமுக, அதிமுக, பாஜக என்பன தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார்கள் என்பது ஊரறிந்த பரம ரகசியமாகும், அதற்காக மற்றவர்கள் கொடுக்க மாடடார்கள் என்பதிக்கில்லை, அவர்களிடம் கொடுப்பதிக்கு வசதி இல்லை என்பதேயாகும். 
 
இதன் மூலம்  நீங்கள்  சொல்லவருவது

அல்லது  ஊட்டமுயல்வது

வாக்குக்கு காசு  கொடுக்கலாம் என்பதாகும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதன் மூலம்  நீங்கள்  சொல்லவருவது

அல்லது  ஊட்டமுயல்வது

வாக்குக்கு காசு  கொடுக்கலாம் என்பதாகும்

நன்றி

சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  அதனை சுகித்து கொண்டு, எப்படி நான் சொல்லுவேன் பணத்துக்காக வாக்கு செலுத்துவது சரியென்று. நான் சொல்லவந்தது  யாதெனில் இந்திய( தமிழ்நாடு ) அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் யோக்கியவர்கள் அல்ல என்பதே.

2 hours ago, விசுகு said:

இதன் மூலம்  நீங்கள்  சொல்லவருவது

அல்லது  ஊட்டமுயல்வது

வாக்குக்கு காசு  கொடுக்கலாம் என்பதாகும்

நன்றி

நீங்கள் தமிழ் நாட்டில் வாக்காளராக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?

நானாக இருந்திருந்தால், முண்டியடித்துக் கொண்டு காசு கொடுக்கும் எல்லா கட்சிகளிடமும் கற்பூரத்தின் மேல் அடித்து "உங்களுக்குத் தான் என் வாக்கு" என சத்தியம் செய்து காசை வாங்கிவிட்டு எனக்கு பிடித்த ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களித்து இருப்பேன். அவ்வாறுதான் பெரும்பாலான வாக்காளர்கள் அங்கு செய்து இருப்பார்கள்.

பணம் கொடுத்ததால் தான் திமுக வென்றது, தாம் தோற்றது என்பதெல்லாம் தோல்வியை ஏற்றுக் கொள்ளக் கூடியளவுக்கு பக்குவம் அற்ற கமலஹாசன் எனும் நடிகரின் புலம்பல் தான். அது உண்மையெனில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக + பா.ஜ.க கூட்டணிதான் வென்று இருக்க வேண்டும். பணத்தை வாரியிறைக்கவும் அதை வெளிப்படையாக செய்யவும், மானிலத்தின் அதிகாரம் மட்டுமல்ல மத்திய அரசின் அதிகாரமும் அவர்கள் கையில் தான் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  அதனை சுகித்து கொண்டு, எப்படி நான் சொல்லுவேன் பணத்துக்காக வாக்கு செலுத்துவது சரியென்று. நான் சொல்லவந்தது  யாதெனில் இந்திய( தமிழ்நாடு ) அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் யோக்கியவர்கள் அல்ல என்பதே.

குற்றம்  நிரூபிக்கப்பட்டவரும்

குற்றம் சாட்டப்பட்டவரும்  ஒன்றல்ல  என்பதையும்  நீங்கள்  சுகித்திருக்கணும்????

15 minutes ago, நிழலி said:

நீங்கள் தமிழ் நாட்டில் வாக்காளராக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?

நானாக இருந்திருந்தால், முண்டியடித்துக் கொண்டு காசு கொடுக்கும் எல்லா கட்சிகளிடமும் கற்பூரத்தின் மேல் அடித்து "உங்களுக்குத் தான் என் வாக்கு" என சத்தியம் செய்து காசை வாங்கிவிட்டு எனக்கு பிடித்த ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களித்து இருப்பேன். அவ்வாறுதான் பெரும்பாலான வாக்காளர்கள் அங்கு செய்து இருப்பார்கள்.

பணம் கொடுத்ததால் தான் திமுக வென்றது, தாம் தோற்றது என்பதெல்லாம் தோல்வியை ஏற்றுக் கொள்ளக் கூடியளவுக்கு பக்குவம் அற்ற கமலஹாசன் எனும் நடிகரின் புலம்பல் தான். அது உண்மையெனில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக + பா.ஜ.க கூட்டணிதான் வென்று இருக்க வேண்டும். பணத்தை வாரியிறைக்கவும் அதை வெளிப்படையாக செய்யவும், மானிலத்தின் அதிகாரம் மட்டுமல்ல மத்திய அரசின் அதிகாரமும் அவர்கள் கையில் தான் இருந்தது.

மக்கள் விருப்பப்படி தமக்குப்பிடித்த கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள்  என்றால் வென்ற  கட்சிகள்

அல்லது வெல்லும் கட்சிகள் எதற்காக தொடர்ந்து  காசைக்கொடுக்கின்றன???

கொடுக்க  முயல்கின்றன???

6 minutes ago, விசுகு said:

குற்றம்  நிரூபிக்கப்பட்டவரும்

குற்றம் சாட்டப்பட்டவரும்  ஒன்றல்ல  என்பதையும்  நீங்கள்  சுகித்திருக்கணும்????

மக்கள் விருப்பப்படி தமக்குப்பிடித்த கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள்  என்றால் வென்ற  கட்சிகள்

அல்லது வெல்லும் கட்சிகள் எதற்காக தொடர்ந்து  காசைக்கொடுக்கின்றன???

கொடுக்க  முயல்கின்றன???

தோற்பதற்கான ஒரு சிறு வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்று தான். அத்துடன் 'பில்டப்' காட்டத்தான். 

சில இடங்களில் விஜயகாந்தின் கட்சி கூட 100 ரூபா கொடுத்ததாம்... ஏழைக்கேற்ற எள்ளு உருண்டை என்று🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.