Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

 ரஸ்ஸியா:

ராணுவ ரீதியிலான உதவிகள் :

புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு  பெருமளவு உதவிகளை  ரஸ்ஸியா செய்துவந்திருக்கிறது. ஆயுதங்கள் , வெடிமருந்துகள், ராணுவ வாகனங்கள், விமானப்படைக்கான மிகையொலி விமானங்கள், அன்டனோவ் துருப்புக்காவி மற்றும் பொருட்களையேற்றும் சரக்கு விமானங்கள், தாக்குதல் மற்றும்  துருப்புக்காவி உலங்குவானூர்திகள், பிரதான யுத்தத் தாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள், நீண்டதூர ஆட்டிலெறிகள் என்று ஒரு பாரிய ராணுவ உபகரண உதவிகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது.

மேலும் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் களமுனைப் பயிற்சிகள் என்றும், யுத்த தந்திரோபாயங்கள், களமுனை நகர்வு ஆலோசனைகள் என்றும் யுத்தத்துடன் நேரடியாகச் சமபந்தப்பட்ட ஆலோசனைகளையும், உக்திகளையும் தொடர்ச்சியாக வழங்கியிருக்கிறார்கள்.

இலங்கை ராணுவத்திற்காக ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட பல ராணூவத் தளபாடங்களையும், ஆயுதங்களையும் தனது விற்பனைக்குப் பிந்திய சேவைகள், உதிரிப்பாக விற்பனை, பழுதுபார்த்தல்கள் ஆகிய யுத்தத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சேவைகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. அத்துடன், ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டு, பிற நாடுகளில் பாவிக்கப்பட்டு, இலங்கைக்கு இரண்டாம் தரமாக வழங்கப்பட்ட பல ராணுவ உபகரணங்களுக்கான தொடர்ச்சியான உதிரிப்பாக , மேம்படுத்தல் சேவைகளையும் ரஸ்ஸியா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருக்கிறது. 

இலங்கை ராணூவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான தொடர்ச்சியான வழங்கல்களும், சேவைகளும் ரஸ்ஸியாவினால் குறைந்தது 30 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

ரஸ்ஸியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ராணுவத் தளபாட, ஆயுதத் தொகுதியின் சில உதராணங்களைப் பார்க்கலாம்,

1. மிகோயன் குரேவிச் - மிக் - 27 மிகையொலி தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள்
2. எம் ஐ 24 தாக்குதல் மற்றும் எம் ஐ 17 துருப்புக்காவி உலங்குவானூர்திகள்
3. டி - 54 மற்றும் டி - 55 பிரதான யுத்தத் தாங்கிகள்
4. பி டி ஆர் - 80 ரக துருப்புக்காவி வாகனங்கள்
5. கெபார்ட் ரக கடற்படைக் கப்பல் ( ஆமெரிக டாலர் 160 மில்லியன்களுக்கு 2017 இல் ரஸ்ஸியாவினால் விற்கப்பட்டது)

அரசியல் ராஜதந்திர ரீதியிலான் உதவிகள்:

இலங்கைக்கெதிராக ஐ நா வில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகவே ரஸ்ஸியா இதுவரையில் வாக்களித்து வந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இனப்போரில் இலங்கையரசால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையும் விசாரிப்பதெனும் தீர்மானங்களுக்கெதிராக ரஸ்ஸியா கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, இலங்கையின் இறையாண்மை,  பாதுகாப்புக் குறித்து தான் அதிக கவனம் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தது.

இதே காலப்பகுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளை கனடா, மெக்சிக்கோ, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்தபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ரஸ்ஸியா இறங்கியதுடன், இவ்விவகாரம் இலங்கையின் உள்நாட்டு விடயம் என்றும், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற இலங்கைக்கெதிரான அனைத்து தீர்மானங்கள், நடவடிக்கைகளிலும் தனியாகவோ, சீனாவுடன் சேர்ந்தோ ரஸ்ஸியா தனது வீட்டொ அதிகாரத்தினைப் பாவித்து தடுத்தே வந்திருக்கிறது.

இதற்குப் பிரதியுபகாரமாக, உக்ரேனுக்கும் ரஸ்ஸியாவுக்கும் இடையிலான பிணக்கில், ரஸ்ஸியாவை ஆதரித்து நிற்கும் இலங்கை, ரஸ்ஸியாவின் நடவடிக்கைகளை நியாயபடுத்தியிருப்பதுடன், ரஸ்ஸியா தனது பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கையென்று உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரம் சார்ந்த உதவிகள்:

ரஸ்ஸியா இலங்கையுடன் பல்லாண்டுகளாக பொருளாதார உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் மொத்தத் தேயிலை ஏற்றுமதியில் ரஸ்ஸியாவுக்கு 17 முதல் 20 வீதமான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, இதன் மொத்தப் பெறுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரஸ்ஸியாவின் தேயிலைச் சந்தையில் 30 வீதமான விற்பனையினை இலங்கையின் தேயிலையே பெற்றுக்கொள்கிறது.2016 இல் மட்டும் குறைந்தது 58,000 ரஸ்ஸிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றனர். இவ்வெண்ணிக்கை பின்வந்த ஆண்டுகளில் கணிசமாகக் கூடிக்கொண்டே செல்கிறது. 

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கெதிரான இனக்கொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் ஒன்றான மே 07 ஆம் திகதி ரஸ்ஸிய அரசு அப்போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை கூறியிருந்தது. யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த சுமார் மூன்றரை லட்சம் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும், காயப்பட்டவர்களை மீட்டெடுக்கவும் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு சில மேற்குநாடுகள் முயன்றுகொண்டிருந்த இத்தருணத்தில் ரஸ்ஸியாவின் வெளிவிவகார அமைச்சரினால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை இலங்கைத் தமிழர் தொடர்பாக ரஸ்ஸியா எவ்வகையான நிலைப்பாட்டினை நடந்துகொண்டிருந்த கொடூரமான அழிவுகளுக்கு மத்தியிலும் கொண்டிருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

புலிகளை முற்றாக அழிக்கும் இலங்கையின் போருக்கு தனது முழு ஆதரவும் இருக்கும் என்று ரஸ்ஸியா அறிவித்திருக்கிறது.

புலிகளுக்கெதிராகத் தொடர்ச்சியாக இலங்கை ராணுவத்தால் ஈட்டப்பட்டுவரும் வெற்றிகளை வெகுவாகப் பாராட்டியிருக்கும் ரஸ்ஸியா, இப்போர் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கான தனது ஆதரவையும் தெரியப்படுத்தியிருக்கிறது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம்வுடன் தொலைபேசியூடாக உரையாடிய ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவரோவ், யுத்தம் தொடர்பான தனது திருப்தியினை தெரிவித்ததுடன், இலங்கை ராணுவத்தின் போர் முயற்சிகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார் என்று ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது.

அதேவேளை ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக்கும் ரஸ்ஸியாவின் தூதுவர், இலங்கைய்ன் போர் நிலவரத்தை பாதுகாப்புச் சபையில் பேச முடியாதென்றும், இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவோ அல்லது நியாயப்படுத்த சந்தர்ப்பம் வழங்காத நிலையில் இதுதொடர்பாக அங்கே விவாதிப்பதை தமது நாடு அங்கீகரிக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். 

இலங்கைக்கு அ ண்மையில் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ரஸ்ஸிய அமைச்சர், ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு, இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவுடம் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இலங்கைக்கு ராஜதந்திர ரீதியிலான ஆதரவினைச் செய்வதற்கும் தாம் விரும்புவதாக உறுதியளித்திருக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன்

இலங்கையின் விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்த அன்டனோவ் விமானங்கள், எம் ஐ தாக்குதல் உலங்குவானூர்திகள், மிக் 21 ரக மிகையொலிக் குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றில் உக்ரேனிய விமானமோட்டிகள் கூலிக்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இது, ரஸ்ஸியாவினால் தயாரிக்கப்பட்ட வானூர்திகளை இலங்கை பயன்படுத்த ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து நடந்து வந்திருக்கிறது. ரஸ்ஸிய விமானங்களை இயக்குவதில் பரீச்சயம் மிக்க உக்ரேனிய முன்னாள் விமானப்படை விமானிகள் புலிகளுக்கெதிரான தாக்குதல்களில் நேரடியாகப் பங்குபற்றியிருப்பதுடன், பல அழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள். 

ஆனால், இத்தாக்குதல்கள் உக்ரேனியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, சோவியத் ஒன்றியம் சிதறுண்ட காலத்தில் பெரும் பணப்பற்றாக்குறையினை எதிர்நோக்கிய உக்ரேனிய முன்னாள் போர்வீரர்கள் இலங்கை, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டார்கள். இதில் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில் இந்த முன்னாள் உக்ரேனிய வீரர்கள் கூலிப்படையினராக பணிபுரிந்த நாடுகள் எல்லாமே ரஸ்ஸியாவின் உதவிகளையும், ஆயுதத் தளபாடங்களையும் ஏற்கனவே தம்மிடம் கொண்டிருந்தவை என்பதுதன். 

ஆகவே, தமிழர்க்கெதிரான போரில் இவர்கள் விரும்பி ஈடுபடவில்லை என்பதும், தொழில் நிமித்தமே இவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும், கொள்கையளவில் அல்ல என்பதும் கவனிக்கத் தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தாராளவாத ஜனநாயகத்திலும், மனிதவுரிமைகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனாலும் ஒரு பேரரசைக் கட்டியெழுப்பி தமது பழைய மதிப்பை திரும்பவும் எடுத்துக்கொள்ள சர்வாதிகாரியாக செயற்படும் ரஷ்ய அதிபர் புட்டின் மீது பேரபிமானமும் கொண்டவர்கள். அவர் தன்னை கட்டுக்கடங்காத ஒரு பெருவீரனாகக் காட்ட எத்தனை பேரைப் பலிகொண்டாலும், கொல்லப்படும் மக்கள்மீது எதுவித அனுதாபமும் எமக்கு வராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வருமானத்தில் கணிசமானளவு வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் உல்லாசப் பயணத்துறையில் ரஸ்ஸியர்களுக்கு அடுத்ததாக அதிகளவு உக்ரேனியர்கள் இலங்கைக்கு வருகை தருகிறார்கள். கோவிட் கால தடை நீக்கல்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் சுமார் 19,000 ரஸ்ஸியர்களூம், 9,000 உக்ரேனியர்களும் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். 

ரஸ்ஸியாவினை உற்பத்தியிடமாகவும், உக்ரேனில் தயாரிக்கப்பட்டவையுமான அன்டனோவ் 32 ரக சரக்கு விமானங்கள மூன்றினை உக்ரேன் இலங்கைக்கு விற்பனை செய்திருக்கிறது. 2021 இல் இவ்விமானங்களில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரிசெய்து மீளவும் சேவையில் அமர்த்தும் முயற்சிகளில் உக்ரேன் இலங்கைக்கு உதவிவருகிறது. இவை தவிரவும் இன்னும் சில அன்டனோவ் விமானங்களை உக்ரேன் 1995 இல் இலங்கைக்கு விற்பனை செய்து இருந்ததுடன், இவற்றில் முன்னாள் உக்ரேன் விமானப்படை ஓட்டிகள் செலுத்திகளாகவும்  இருந்திருக்கின்றனர். இவ்விமானங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் சிலவற்றில் இந்த உக்ரேனிய விமானமோட்டிகளும் கொல்லப்பட்டிருக்கிரார்கள். 

இலங்கை விமானப்படைக்கென்று 2006 - 2007 காலப்பகுதியில் அந்நாள் பாதுகாப்பமைச்சர் கோட்டாபயல் 6 மிக் - 27 ரக இரண்டாம் தர விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தார். சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இவ்விமானங்கள் குறைந்தது இரு தடவைகள் உக்ரேனுக்கு பழுதுபார்த்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.  இந்த விமானக் கொள்வனவின் மூலம் கோட்டாபயல் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்றும், விமானப்படை அதிகாரிகளீன் வேண்டுகோளான இஸ்ரேலிய கிபிர்களை உதாசீனம் செய்துவிட்டே பெரும் பணத்திற்காக கோட்டாபயல் இதனைச் செய்தார் என்றும் நம்பப்படுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயல் அரச அதிபராக பதவியேற்றதன் பின்னர் உக்ரேனுடனான உறவுகளை புதுப்பிக்க தாம் விரும்புவதாக அறிவித்திருந்தார். உல்லாசப் பயணத்துறை, தேயிலை ஏற்றுமதி, தொழில்நுட்ப உதவிகள், விமானப்படை விமானங்களுக்கான சேவைகள் குறித்து உக்ரேனின் உதவி கோரப்பட்டிருந்ததாக அரசு அறிவித்திருந்தது. 

ஆனால், அண்மய ரஸ்ஸிய - உக்ரேன் மோதலில் இலங்கை ரஸ்ஸியாவின் பக்கமே நின்றாலும்கூட, "நடுநிலைமை" வகிக்கப்போவதாகக் கூறியிருப்பது மேற்குலகின் அழுத்தங்களுக்குப் பயந்துதான் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

உக்ரேனிலிருந்து வாங்கப்பட்டதாக இலங்கை அரசு கூறும் மிக் தாக்குதல் விமானக் கொள்வனவு உக்ரேன் அரசுடன் தொடர்பற்றது என்று அந்நாட்டு நீதியமைச்சர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உக்ரேனின் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவரூடாக வாங்கப்பட்ட இந்த இரண்டாம் தர விமானங்கள் தரமற்றவையாகக் காணப்பட்டதாகவும் ஆனால், இந்தக் கொள்வனவில் இடம்பெற்ற பெருமளவு தரகுப் பணத்திற்காக கோட்டாபயல் சார்பாக இந்தக் கொள்வனவில்  உக்ரேனின் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஈடுபட்டதாகவும் இலங்கை விசாரனைக் குழுவினரை ஆதாரம் காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

https://www.newsfirst.lk/2018/03/18/further-revelations-on-the-infamous-mig-deal/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ரஸ்ஸியா, உக்ரேன் ஆகிய இரு நாட்டவருமே பல அழிவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இதல் ரஸ்ஸியா கொள்கையளவிலும், ஆயுத தளபாட ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் மிகப்பெரும் அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இனக்கொலையின் இறுதிக்காலத்திலும், ஐ நா மனிதவுரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கெதிரான தீர்மானங்களின்போதும் ரஸ்ஸியா மிருகத்தனமாகவே நடந்திருக்கிறது, இனிமேலும் அப்படியேதான்.

உக்ரேனைப் பொறுத்தவரை ராணுவ சரக்கு விமானங்களையும், தாக்குதல் விமானங்களையும் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக இலங்கைக்கு விற்றிருக்கிறது. சில முன்னாள் விமானமோட்டிகளும் தனிப்பட்ட ரீதியில் கூலிக்காக தமிழர் மீது தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், கொள்கையளவில் உக்ரேன் எனும் நாடு ஈழத்தமிழருக்கெதிரான போக்கினை இதுவரை காட்டவில்லை. உக்ரேன் இலங்கையில் செலுத்தியிருக்கும் தாக்கத்திற்கு ஒப்பான தாக்கங்களை இன்னும் பல நாடுகள் கூடச் செலுத்தியிருக்கின்றன. ஆனால், இவை தனிப்பட்ட ரீதியில், நிறுவனங்கள் மூலமாக செய்யப்பட்டவை. அந்நாடுகளின் அரசியல், ராஜதந்திர ரீதியிலான கொள்கைகளின் பால் அல்ல. 

இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தில் உக்ரேனைக் காட்டிலும் ரஸ்ஸியாவே அதிக வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஆகவே, ஈழத்தமிழரான எமை பொறுத்தவரை இவ்விரு நாடுகளிலும் ரஸ்ஸியாவே கொள்கை ரீதியில் எமது இருப்பிற்கு எதிரானது. அதுமட்டுமல்லாமல் அதன் கையில் எப்போதும் இருக்கும் பலம் மிக வீட்டோ அதிகாரம் இலங்கையினை எந்தச் சந்தர்ப்பத்திலும் காப்பதற்கு உதவிவருகிறது. ஆனால், உக்ரேன் அப்படியல்ல. எம்மைப் போலவே, ரஸ்ஸிய ஆக்கிரமிப்பிற்கு முகம்கொடுத்து நிற்கும் இன்னொரு மக்கள் கூட்டமே உக்ரேன்.

இவை எப்படியாக இருப்பினும், இன்று நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் அப்பாவி உக்ரேனியர்களுக்காக நாம் கவலைப்படவேண்டாம், குறைந்தது சக மனிதர்களாக அவர்களின் அழிவில் அகமகிழும் கீழ்ச்செயலினைச் செய்யாமலாவது இருக்கலாமே? இதே களத்தில் திண்ணைப்பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவிகள் பற்றிப் பேசும்போது, "137 சவப்பெட்டி இன்று அனுப்பப்பட்டது" போன்ற அப்பாவிகளின் அழிவில் சுகம் காணும் எமது அரக்கக்குணம் களையப்பட வேண்டும்.

உக்ரேனிய விமானமோட்டிகள் எம்மைக் கொன்றார்கள், அதனால், அவர்களின் நாட்டு மக்கள் கொல்லப்பட்டது மகிழக்கூடிய விடயம் என்றால், இதே காரணத்துக்காக புலிகளின் உறவுகளான நாம் சிங்களவர்களால் கொல்லப்பட்டதும் நியாயப்படுத்தப்பட முடியும் என்பதை எம்மவர்கள் நினைவில் வைப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு... உக்ரேன் செய்ததும் துரோகம், ரஷ்யா செய்ததும் துரோகம்.
இதில் யார் கூட துரோகம் செய்தது என்று... தராசு வைத்து, நிறுத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இரண்டும்... அடிபட்டு சாகட்டும். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஈழத்தமிழர்களுக்கு... உக்ரேன் செய்ததும் துரோகம், ரஷ்யா செய்ததும் துரோகம்.
இதில் யார் கூட துரோகம் செய்தது என்று... தராசு வைத்து, நிறுத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இரண்டும்... அடிபட்டு சாகட்டும். 😁

அப்பாவிகள் கொல்லப்படுவதைப் பார்த்து அகமகிழும் நாம், இதே நிலையில் முன்னர் இருந்திருக்கிறோம் என்பதையும், எமக்காக எவருமே குரல் கொடுக்கவில்லையென்று அழுதிருக்கிறோம் என்பதையும் நினைவில் வைப்பது நல்லது. எமது அழிவில் எவராவது அகமகிழ்ந்திருந்தால் எமது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அப்பாவிகள் கொல்லப்படுவதைப் பார்த்து அகமகிழும் நாம், இதே நிலையில் முன்னர் இருந்திருக்கிறோம் என்பதையும், எமக்காக எவருமே குரல் கொடுக்கவில்லையென்று அழுதிருக்கிறோம் என்பதையும் நினைவில் வைப்பது நல்லது. எமது அழிவில் எவராவது அகமகிழ்ந்திருந்தால் எமது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

 

ஐயா

கூலிக்காக  கொன்றார்களா?

வியாபாரத்துக்காக  கொன்றார்களா? என்பதல்ல முக்கியம்

எமது  உறவுகளை  கொன்றார்களா இல்லையா??

கொன்றால்  எமது  உறவுகளை கொன்றவன் கொல்லப்படும்போது ...?

மனிதனையா  நாங்க?

நீங்கள்  தெய்வங்கள்

உங்கள்  அரசியலை உங்கள்  ஆலோசைனைகளை 

உங்கள் ஆதரவுகளை அவர்களுக்கு  தெரிவியுங்கள்

நீங்களும்  உங்கள் அரசியலும் வேண்டும்  எம்  இனத்தின் விடுதலைக்கு.

நன்றி கட்டுரைக்கும் நேரத்துக்கும்

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

ஐயா

கூலிக்காக  கொன்றார்களா?

வியாபாரத்துக்காக  கொன்றார்களா? என்பதல்ல முக்கியம்

எமது  உறவுகளை  கொன்றார்களா இல்லையா??

கொன்றால்  எமது  உறவுகளை கொன்றவன் கொல்லப்படும்போது ...?

மனிதனையா  நாங்க?

நீங்கள்  தெய்வங்கள்

உங்கள்  அரசியலை உங்கள்  ஆலோசைனைகளை 

உங்கள் ஆதரவுகளை அவர்களுக்கு  தெரிவியுங்கள்

நீங்களும்  உங்கள் அரசியலும் வேண்டும்  எம்  இனத்தின் விடுதலைக்கு.

நன்றி கட்டுரைக்கும் நேரத்துக்கும்

என்னைத் தெய்வமாக்க வேண்டாம் அண்ணை. அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்தவேண்டாம், அவர்களின் அழிவில் மகிழவேண்டாம், ஏனென்றால் நாமும் இதே அழிவை எதிர்கொண்ட மக்கள் கூட்டம் என்னும் அடிப்படையிலிருந்து இதனை நாம் அணுகவேண்டும் என்றுதான் கேட்கிறேன். 

ஆனால், அப்படியல்ல, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயமானது, அவர்கள் கொல்லப்படுவது எமக்கு மகிழ்வினை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், நாம் அழிக்கப்பட்டதுகூட எவரோ ஒருவரால் நியாயப்படுத்தப்படும், இன்னொரு மக்கள் கூட்டத்தால் மகிழ்ந்து வரவேற்கப்படும். 

இதுபற்றி உங்களுடன் பேச எனக்கு வேறு எதுவும் இல்லை. நன்றி உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் அண்ணை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காணொளியை ஒருகணம் பார்த்துவிட்டு நீதி நியாயங்களை பேசுங்கள்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இந்த காணொளியை ஒருகணம் பார்த்துவிட்டு நீதி நியாயங்களை பேசுங்கள்.

 

 

ஏற்றுக்கொள்கிறேன், உக்ரேனிய விமானமோட்டியிருவன் தான் ஓட்டிச்சென்ற விமானத்தை காட்டுக்குள் இறக்கிவிட்டு, சிங்களத்தில் பேசிக்கொண்டு தமிழர்களை இனக்கொலை செய்யும் நோக்கத்தில் இதனைச் செய்தான்.

எனது தவறான புரிதலுக்காக வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ரஞ்சித் said:

அவர்கள் கொல்லப்படுவது எமக்கு மகிழ்வினை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், நாம் அழிக்கப்பட்டதுகூட எவரோ ஒருவரால் நியாயப்படுத்தப்படும், இன்னொரு மக்கள் கூட்டத்தால் மகிழ்ந்து வரவேற்கப்படும். 

2009 க்கு பின்னர் எம்மவர் அழிவுகளை வைத்து  தினசரி மகிழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள். நாம் மட்டும் ஏன் நீதி நியாய பறவைகளாக அழுத கண்ணீரும் சோறுமாக அலைய வேண்டும்?

3 minutes ago, ரஞ்சித் said:

ஏற்றுக்கொள்கிறேன், உக்ரேனிய விமானமோட்டியிருவன் தான் ஓட்டிச்சென்ற விமானத்தை காட்டுக்குள் இறக்கிவிட்டு, சிங்களத்தில் பேசிக்கொண்டு தமிழர்களை இனக்கொலை செய்யும் நோக்கத்தில் இதனைச் செய்தான்.

எனது தவறான புரிதலுக்காக வருந்துகிறேன்.

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, ரஞ்சித் said:

 

 

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

2009 க்கு பின்னர் எம்மவர் அழிவுகளை வைத்து  தினசரி மகிழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள். நாம் மட்டும் ஏன் நீதி நியாய பறவைகளாக அழுத கண்ணீரும் சோறுமாக அலைய வேண்டும்?

ஆகவே நாமும் உக்ரேனியர்கள் கொல்லப்படுவதையும், நீதி நியாயம் கேட்டு உயிரைக் கையில்பிடித்துக்கொண்டு ஓடுவதையும் பார்த்து மகிழலாம் என்கிறீர்கள். சரி, பரவாயில்லை.

 

24 minutes ago, குமாரசாமி said:

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

ஆம், உக்ரேன் காரணம், ரஸ்ஸியா காரணம், இந்தியா காரணம், சீனா காரணம், அமெரிக்கா காரணம், பாக்கிஸ்த்தான் காரணம், இங்கிலாந்து காரணம், பங்களாதேஷ் காரணம், மாலைதீவு காரணம், அவுஸ்த்திரேலியா காரணம், கனடா காரணம், ஜேர்மனி காரணம், பிரான்ஸ் காரணம்…….இப்படிப் பல நாடுகள் காரணம். அந்த அரசுகள் செய்த தவறுக்காக அந்த நாட்டு மக்கள் கொல்லப்படுவது நியாயமானதா? இப்படிப் பார்த்தால் உலகில் பல இனத்தவர்கள் கொல்லப்படவேண்டுமே? 

6 minutes ago, குமாரசாமி said:

 

Bild

இந்தப்படங்களை ஏதோ புறத்தியானுக்குக் காட்டுவதுபோலக் காட்டுகிறீர்களே? இனக்கொலை நடக்கும்போது நானும் உங்களைப்போல இதே படங்களைப் பார்த்தும், செய்திகளைக் கேட்டும் இருந்தவன் தான். அதனாலேயே இன்று அப்பாவி உக்ரேனியர்கள் கொல்லப்படும்போதும், உயிரைக் கையில்ப்பிடித்துக்கொண்டு ஓடும்போது அவர்களின் அவலம் எனக்குப் புரிகிறது. அதனாலேயே இந்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரஞ்சித் said:

என்னைத் தெய்வமாக்க வேண்டாம் அண்ணை. அப்பாவிகளைக் கொல்வதை நியாயப்படுத்தவேண்டாம், அவர்களின் அழிவில் மகிழவேண்டாம், ஏனென்றால் நாமும் இதே அழிவை எதிர்கொண்ட மக்கள் கூட்டம் என்னும் அடிப்படையிலிருந்து இதனை நாம் அணுகவேண்டும் என்றுதான் கேட்கிறேன். 

ஆனால், அப்படியல்ல, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயமானது, அவர்கள் கொல்லப்படுவது எமக்கு மகிழ்வினை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால், நாம் அழிக்கப்பட்டதுகூட எவரோ ஒருவரால் நியாயப்படுத்தப்படும், இன்னொரு மக்கள் கூட்டத்தால் மகிழ்ந்து வரவேற்கப்படும். 

இதுபற்றி உங்களுடன் பேச எனக்கு வேறு எதுவும் இல்லை. நன்றி உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் அண்ணை!

 

இன்றைய உலகு இது  தான்  சகோ

இனித்தான் உக்ரைன்  மக்கள்  எமக்கு  ◌தாம் செய்தவற்றையும்

இனி தாம் சேரவேண்டியவர்களையும்  அடையாளம்  காணப்போகிறார்கள்

தற்கு  எமது  இந்த  கோபமும் பரப்புரைகளும்  அவசியம்

செய்திகளையும்  காணொளிகளையும் பரப்புங்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு முதலில் தமிழர்கள்தான் காரணம். போராட்டத்தில் பங்குபற்றாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதி கொடுத்தால் போதும் என்ற நிலைதான் காரணம். அந்த குற்றவுணர்வை மறைக்க மற்றைய எல்லோரையும் குற்றம்சாட்டி மனச்சாட்சியின் கேள்விகளில் இருந்து இலகுவாகத் தப்பிக்கும் உளவியலையும் புரிந்து கொள்ளமுடிகின்றது.

போராளிகளை நிர்வாணப்படுத்தி கொன்ற காணொளிகளைப் பார்த்துவிட்டு கோபம் கொண்டு சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினாமோ? இல்லைத்தானே! 

ஒரு வலிமையற்ற மக்கள் கூட்டம் சர்வாதிகாரி ஒருவனின் பேரரசுக்காக கொல்லப்படும்போது அம்மக்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்கவேண்டும். ஆனால் தமிழர்களில் இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ரஷ்யாவை ஆதரித்து வியாக்கியானங்கள் கொடுக்கின்றார்கள். 

இடதுசாரிகள், ரஷ்யா இப்போதும் ஒரு சோஷலிச நாடு என்ற மயக்கத்தில் இருக்கின்றார்கள். ரஷ்யா மேற்கத்தைய ஏகாபத்திய விஸ்தரிப்புக்கு எதிராகவும், உக்ரேயின் நேட்டோவில் சேருவதைத் தடுக்கவும் உக்ரேனிய நாட்டை ஆக்கிரமித்து, உக்கிரேனிய மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு எதிராக ஒரு பொம்மை அரசை நிறுவுவதை இந்த இடதுசாரிகள் கண்டிப்பதில்லை. கொல்லப்படும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

வலதுசாரிகள், ரஷ்ய அதிபர் பூட்டின்மீது பேரபிமானம் கொண்டவர்கள். ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் மீதான ஆழமான விருப்பு, ஹிட்லைரைப் போல நடக்கும் பூட்டின் மீதும் விருப்பம் வரக் காரணம். பெரும்தொகையில் உக்கிரேனிய மக்கள் கொல்லப்படவேண்டும் என்று மனதார விரும்புவர்கள் இந்த வலதுசாரிகள். அதற்கு கொடுக்கும் நொண்டிச்சாட்டு எம்மக்களை உக்கிரேனிய வானோட்டி குண்டுபோட்டு அழித்தான் என்பது. ஆனால் அதே உக்கிரேனினடமிருந்துதான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், பிற ஆயுதங்களையும் புலிகளும் பெற்றிருந்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த சம்பவங்கள் உருவாக உதவி புரிந்ததில் உக்ரேனுக்கும் உண்டு என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

இதைவிட பெரியப்பங்கை வகித்ததில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உள்ளடக்கம். நீங்களும் அங்கே இருந்து குப்பை கொட்டுவதால் எஜமான் விசுவாசம் அதுதானே!! விவேக் சொன்னமாதிரி 1000 பிரபாகரன் வந்தாலும் எங்கடைசனம் திருந்தப்போவதில்லை!அப்பாவிப்பொதுமக்களின் அழிவில் களிப்புறும் நாமெல்லாம் வெளிநாடு உதவவில்லை என்று இன்றுவரை சப்பைக்கட்டு கட்டுவது சகிக்கமுடியவில்லை! இப்படியானவர்களுக்காகவா போராட வெளிக்கிட்டேன் என்று நினைத்துத்தான் தலைவரும் தனது  முடிவை தானே தேடிக்கொண்டாரோ!!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

அப்பாவிகள் கொல்லப்படுவதைப் பார்த்து அகமகிழும் நாம், இதே நிலையில் முன்னர் இருந்திருக்கிறோம் என்பதையும், எமக்காக எவருமே குரல் கொடுக்கவில்லையென்று அழுதிருக்கிறோம் என்பதையும் நினைவில் வைப்பது நல்லது. எமது அழிவில் எவராவது அகமகிழ்ந்திருந்தால் எமது மனோநிலை எப்படியிருந்திருக்கும் என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

எனது நிலைப்பாடு;

நாங்கள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டோம். அழிக்கப்படும்போது இந்த உலகம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது.

இனிமேல் யார் அழிந்தால் என்ன அழியாவிட்டால்தான் எனக்கென்ன ?

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே புலம்பெயர் தமிழர்களை குற்றம் சாட்டாமல், ஒவ்வொருவரும் தமிழீழம் நோக்கிய போராட்டத்தில் தமது வகிபாகம் யாது என்பதை உற்று நோக்க / ஆராய  வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் பலம் இருந்தால் பல நாடு வரும் இல்லையென்றால் கைகட்டி வேடிக்கை பார்க்கும். உக்ரேன் நாட்டு நிலை சான்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரஞ்சித் said:

இந்தப்படங்களை ஏதோ புறத்தியானுக்குக் காட்டுவதுபோலக் காட்டுகிறீர்களே? இனக்கொலை நடக்கும்போது நானும் உங்களைப்போல இதே படங்களைப் பார்த்தும், செய்திகளைக் கேட்டும் இருந்தவன் தான். அதனாலேயே இன்று அப்பாவி உக்ரேனியர்கள் கொல்லப்படும்போதும், உயிரைக் கையில்ப்பிடித்துக்கொண்டு ஓடும்போது அவர்களின் அவலம் எனக்குப் புரிகிறது. அதனாலேயே இந்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன்.

எமது பூமியில் ஆயுதங்கள் எல்லாம் மௌனிக்கப்பட்ட பின்னர் தான் ஒட்டு முழுவதுமாக அரிந்தெடுத்தார்கள்.

ஆனால் உக்ரேனில் அப்படியில்லை.இப்போது பல நாடுகள் வெளிப்படையாகவே ஆயுதம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆகவே அதன் அர்த்தம் மக்களை பாதுகாக்கின்றோம் என்ற அடிப்படையில் நீயா நானா சண்டை நடக்கின்றது.சம்பந்தப்பட்டவர்கள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் ஆயுதங்களை வழங்கியபடி நீலிக்கண்ணீர் வடிக்க...

எம்மவர்களோ கண்ணீர் மல்க........🤣

உயிரிழப்புகள் பற்றி எனக்கும் கவலைதான்......ஆனால் எனது பூமியில் நடந்த அவலங்களை பார்த்து விட்டு உக்ரேன் அவலத்தை பார்க்கும் போது என் கண்கள் குளமாகவில்லை. மாறாக வரட்சி....வரட்சி 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உயிரிழப்புகள் பற்றி எனக்கும் கவலைதான்

இதுபோதும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.