Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வ நாடியையும் ஒடுங்க வைக்கும் “சிங்கப்பூர் பிரம்படி”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ நாடியையும் ஒடுங்க வைக்கும் “சிங்கப்பூர் பிரம்படி”.. மணிக்கு 160 கி.மீ வேகம்.. 4 அடிக்கே “Buttocks” சதை கிழிவது உறுதி!

caning-in-singapore-960x502.jpg

தண்டனைகள் கடுமையாக இல்லாமல் போனால் என்னவாகும்?… “என்ன பண்ணிடப் போறாங்க?”-னு மனம் திமிரில் எகிறும். ‘தப்பு செய்யலாம்’ என்று எண்ணுவதற்கு கடுமையான தண்டனைகள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான்.

ஆனால், நம் சிங்கப்பூர் இதற்கு அப்பாற்பட்டது. இங்கு யாராவது தவறு செய்தால், நடு ரோட்டில் வைத்து தூக்கில் இடமாட்டார்கள். அல்லது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். ஆனால், சினிமா வசனம் போல, ‘அதுக்கும் மேல’ என்று சிங்கப்பூர் அளிக்கும் ‘பிரம்படி’ தண்டனையை விவரிக்கலாம்.

சிங்கப்பூரில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது, இந்த “பிரம்படி” நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் புருனே உட்பட வேறு சில முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளிலும் இதேபோன்ற உடல் ரீதியான தண்டனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசின் சட்ட திட்டங்களை மீறினாலோ, விதிமுறைகளை மீறினாலோ, அல்லது வேறு ஒழுங்கீனமான செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ இங்கு பிரம்படி உறுதி. சில வழக்குகளில் பிரம்படிக்கு மாற்றாக, லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தும் ஆப்ஷனையும் நீதிமன்றம் கொடுக்கும். நம்பமாட்டீங்க… 4 பிரம்படி வாங்குறதுக்கு பதிலா, 10 லட்சத்தைக் கூட அபராதமா கொடுக்க தயாரா இருப்பாங்க. அவ்வளவு உக்கிரமான தண்டனை இது.

பிரம்படி எப்படி இருக்கும்?

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சியை 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்கம்படி தயார் செய்து கொள்வார்கள். அந்த குச்சி உடையாமல் இருக்க, அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் அதேபோல், அடிபடும் இடத்தில் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும். தண்டனைக்குரிய நபரை முழு நிர்வாணமாக்கி மேலே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து, சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் “ஜென்” நிலைக்கு சென்றுவிடுவார்கள். பேச்சு மூச்சு இருக்காது. அப்படி மயக்கம் அடைந்தாலும், 4 பிரம்படி என்றால், ஒவ்வொரு முறையும் மயக்கத்தை தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். சிங்கப்பூரில் மொத்தமாக 24 பிரம்படி வரை கொடுக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார். அதற்கும் மேல் சென்றால், 4 அடிக்கு மேல் வேறொரு அதிகாரி வந்து அடிப்பார். அதுக்காக சினிமாவில் வருவது போல், போற வர்ற போலீஸ்காரங்க எல்லாம் அடிக்க முடியாது. இதுக்கென்றே Caning Officers இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த பிரம்படி தண்டனையை கொடுக்க வேண்டும்.

உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே இந்த பிரம்படியின் விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே ஓங்கி அடிக்க வேண்டும். மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவரும் அங்கு உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை (Buttocks) கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது. தசை எப்படி கிழியும் என்ற புகைப்படங்கள் இணையத்திலே இருக்கின்றன. கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும்.

“இரவில் தனியாக நடந்து சென்ற பெண் பாலியல் வல்லுறவு” என்ற கான்செப்ட்டே சிங்கப்பூரில் கிடையாது. காரணம், இந்த பிரம்படி கொடுக்கும் மரணபயம் தான். இந்த அடி தான் சிங்கப்பூரில் ரவுடித் தனம், திருட்டு, கொலை, கொள்ளை என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒரு ஆள், தான் செய்த தண்டனைக்காக 24 அடி வாங்கியுள்ளார் என்றால், வாழ் நாளில் அவரால் ஒழுங்காக திரும்ப நடக்கக் கூட முடியாது. இவ்வளவு ஏன்.. 24 அடியையும் வாங்கி மூச்சு இருந்தால் அதிசயம் தான்.

குறிப்பு: சிங்கப்பூரில் இந்த தண்டனை ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு கிடையாது

https://tamilsaaga.com/sg/caning-in-singapore/?fbclid=IwAR2qHl3F1A2dJc9IR2JH1Lu1t8bhRe94w7NUqQTtmNgFuS2eF6PSDDNAzxQ

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

24 சூடு வாங்குவது எனபது அந்த மாதிரி வேற லெவல் தண்டனை,
ஒரே தடவையில் சூடு வைக்க மாட்டினம் அதிக பட்சம் 4-6 உடல் நிலையை பொறுத்து, 
பிறகு களிம்பு தடவி ஆறவைத்து  அதே இடத்தில் 3-6 மாதத்தில் மீண்டும் உரிப்பினம்.
24 சூடு வாங்கி திரிபவர்கள் என்றாலே ஒரு தனி கெத்துதான். அமெரிக்கனுக்கே சூடு பறக்க உரித்து அனுப்பிய நாடு சிங்கை  

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, அக்னியஷ்த்ரா said:

24 சூடு வாங்குவது எனபது அந்த மாதிரி வேற லெவல் தண்டனை,
ஒரே தடவையில் சூடு வைக்க மாட்டினம் அதிக பட்சம் 4-6 உடல் நிலையை பொறுத்து, 
பிறகு களிம்பு தடவி ஆறவைத்து  அதே இடத்தில் 3-6 மாதத்தில் மீண்டும் உரிப்பினம்.
24 சூடு வாங்கி திரிபவர்கள் என்றாலே ஒரு தனி கெத்துதான். அமெரிக்கனுக்கே சூடு பறக்க உரித்து அனுப்பிய நாடு சிங்கை  

எதுக்கும் நீங்க கவனம் பின் பக்கமும் கவனம் 🤪🤪🤪

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எதுக்கும் நீங்க கவனம் பின் பக்கமும் கவனம் 🤪🤪🤪

இதுதான் நட்புக்கு இலக்கணம்......என்ன ஒரு அக்கறை.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் புலிகள் செய்தபோது எங்கடை படித்த அதிமேதாவிகள் அழுத அழுகை இருக்கே சொல்லி மாளாது இங்கும் பச்சை மட்டை அடி பற்றி கதைத்த போது  சிலர் அதுக்கு அழுத அழுகை இருக்கே இப்ப என்னடா என்றால் யாழில் பச்சை மட்டை அடி திரும்ப வேணும் என்று மாங்கு மாங்கு என்று  முகநூல் போன்றவற்றில் எழுதி முறிகினம் அதில் சிலது புலி எதிர்ப்பாளர்கள் உதாரணத்துக்கு கீழே ஒரு முகநூல் இணைப்பு .

பச்சை மட்டை அடி மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாதா என்று ஏங்கும் பெற்றோர்கள்:-:யாழில் இருந்தால் நீயும் கெட்டு குட்டிச்சுவராவாய் போவாய் என்று கூறி பெடியளை கொழும்புக்கு அனுப்பும் பெற்றோர்!
ஒரு காலத்தில் கொழும்புக்கு பிள்ளைகளை அனுப்ப யாழில் வசித்து வந்த பெற்றோர் அஞ்சுவார்கள். அங்கே கலாச்சாரம் வேறு. நாகரீகமாக இருப்பார்கள்.
இதனால் கொழும்பு சென்றால் தனது மகன் கெட்டுவிடுவானோ என்று தமிழ் பெற்றோர் நினைப்பது வளக்கம். ஆனால் தற்போது பல தமிழ் குடும்பங்கள் தமது ஆண் பிள்ளைகளை, கொழும்புக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
அந்த அளவு யாழ்ப்பாண நிலை மாறிவிட்டது. 14 வயது சிறுவர்களிடம் கூட கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருக்கிறது. அதுபோக அவர்களுக்கு 18 வயது தொடர்க்கம் 24 வயதுடைய இளைஞர்களோடு நல்ல தொடர்பும் இருக்கிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு 15 வயதுச் சிறுவன் தனது சக மாணவனோடு சண்டையிட்டால் அதே தினம் மாலை தனக்கு தெரிந்த நாலு ரவுடிகளை வரவளைத்து அவனை வாளால் வெட்டவைக்க முடியும் என்ற நிலை தற்போது யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது.
கூடாத சகவாசங்கள் அதிகரித்துள்ளது. பல இளைஞர்களுக்கு நண்பர்களாக இருப்பதே சிறுவர்கள் தான். இவர்கள் தமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கூட, தனக்கு தெரிந்த ரவுடிகளை வைத்து பிரட்டி எடுக்க தயங்க மாட்டார்கள்.
அதுபோக அவர்கள் சிறுவர்கள் போல இருப்பதும் இல்லை. எகத்தாளமாக ஒரு தெனாவட்டாக தான் திரிகிறார்கள். அவர்களை தட்டிக் கேட்க்கவும் முடியாது.
புலிகள் யாழில் பலமாக இருந்தவேளை பச்சை மட்டை அடி என்ற வைத்தியத்தை கையாண்டு வந்தார்கள். அது மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாதா என்று தற்போது பெற்றோர்கள் ஏங்குகிறார்கள்

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

இதுதான் நட்புக்கு இலக்கணம்......என்ன ஒரு அக்கறை.......!  😂

நண்பனுக்காக அண்ணை 😆😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, பெருமாள் said:

இதைத்தான் புலிகள் செய்தபோது எங்கடை படித்த அதிமேதாவிகள் அழுத அழுகை இருக்கே சொல்லி மாளாது இங்கும் பச்சை மட்டை அடி பற்றி கதைத்த போது  சிலர் அதுக்கு அழுத அழுகை இருக்கே இப்ப என்னடா என்றால் யாழில் பச்சை மட்டை அடி திரும்ப வேணும் என்று மாங்கு மாங்கு என்று  முகநூல் போன்றவற்றில் எழுதி முறிகினம் அதில் சிலது புலி எதிர்ப்பாளர்கள் உதாரணத்துக்கு கீழே ஒரு முகநூல் இணைப்பு .

பச்சை மட்டை அடி மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாதா என்று ஏங்கும் பெற்றோர்கள்:-:யாழில் இருந்தால் நீயும் கெட்டு குட்டிச்சுவராவாய் போவாய் என்று கூறி பெடியளை கொழும்புக்கு அனுப்பும் பெற்றோர்!
ஒரு காலத்தில் கொழும்புக்கு பிள்ளைகளை அனுப்ப யாழில் வசித்து வந்த பெற்றோர் அஞ்சுவார்கள். அங்கே கலாச்சாரம் வேறு. நாகரீகமாக இருப்பார்கள்.
இதனால் கொழும்பு சென்றால் தனது மகன் கெட்டுவிடுவானோ என்று தமிழ் பெற்றோர் நினைப்பது வளக்கம். ஆனால் தற்போது பல தமிழ் குடும்பங்கள் தமது ஆண் பிள்ளைகளை, கொழும்புக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
அந்த அளவு யாழ்ப்பாண நிலை மாறிவிட்டது. 14 வயது சிறுவர்களிடம் கூட கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருக்கிறது. அதுபோக அவர்களுக்கு 18 வயது தொடர்க்கம் 24 வயதுடைய இளைஞர்களோடு நல்ல தொடர்பும் இருக்கிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு 15 வயதுச் சிறுவன் தனது சக மாணவனோடு சண்டையிட்டால் அதே தினம் மாலை தனக்கு தெரிந்த நாலு ரவுடிகளை வரவளைத்து அவனை வாளால் வெட்டவைக்க முடியும் என்ற நிலை தற்போது யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது.
கூடாத சகவாசங்கள் அதிகரித்துள்ளது. பல இளைஞர்களுக்கு நண்பர்களாக இருப்பதே சிறுவர்கள் தான். இவர்கள் தமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கூட, தனக்கு தெரிந்த ரவுடிகளை வைத்து பிரட்டி எடுக்க தயங்க மாட்டார்கள்.
அதுபோக அவர்கள் சிறுவர்கள் போல இருப்பதும் இல்லை. எகத்தாளமாக ஒரு தெனாவட்டாக தான் திரிகிறார்கள். அவர்களை தட்டிக் கேட்க்கவும் முடியாது.
புலிகள் யாழில் பலமாக இருந்தவேளை பச்சை மட்டை அடி என்ற வைத்தியத்தை கையாண்டு வந்தார்கள். அது மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாதா என்று தற்போது பெற்றோர்கள் ஏங்குகிறார்கள்

உதைத்தான் நானும் யோசிச்சனான் 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.