Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் முகவர் சுமந்திரனே வெளியேறு! தமிழகத்தில் வெடித்தது போராட்டம் (Video)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு ஆதரவாக கூச்சலிடும் துரோகி சுமந்திரனை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன், இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் உரிமைகளை முடக்கும் சிங்கள ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனே தமிழகத்தில் கால் வைக்காதே, ஐ.நாவில் ராஜபக்ச அரசை காப்பாற்றி வரும் சுமந்திரனை தமிழகத்தில் வரவேற்பது தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீர்த்தவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இலங்கை சிங்கள இராணுவத்தின் கைக்கூலி சுமந்திரனை கைகொடுத்து வரவேற்பது ராஜபக்சவை வரவேற்பதற்கு ஒப்பானதே,  சர்வதேச விசாரணையை நிராகரித்து இலங்கையின் உள்நாட்டு நீதிபொறிக்குள் ஈழத்தமிழர்களின் நீதியை முடக்கும் குள்ளநரி சுமந்திரனே வெளியேறு என வலியுறுத்தியுள்ளனர். 

மேலும், ஈழம் என்ற சிவபூமியை கிருஸ்தவ பூமியாக மதமாற்றம் செய்யும் மேற்குலகின் அருவருடி சுமந்திரனே தமிழகத்தை விட்டு ஓடிப்போ உள்ளிட்ட பல கோசங்களையும் அவர்கள் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/india-mahindarajapaksa-sumanthiran-protest-1647084605

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் மூலம் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கெதிராக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ததென்றால் அதன் பின்ணணி என்ன ? அதற்கான தேவை யாருக்கு இருக்கிறது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

தேர்தலின் மூலம் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கெதிராக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ததென்றால் அதன் பின்ணணி என்ன ? அதற்கான தேவை யாருக்கு இருக்கிறது? 

தமிழ்நாட்டு மக்களுக்கும் இதுவரை சுத்துமாத்து சிங்கத்தை தெரியாது இலவச விளம்பரம் ஒரு பத்து பேர் நின்று கத்திக்கொண்டு இருக்கினம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, Kapithan said:

தேர்தலின் மூலம் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரு

அதை சசிகலா ரவிராஜ் சொல்வாரா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதை சசிகலா ரவிராஜ் சொல்வாரா? 🤣

இந்த  ஆர்ப்பாட்டத்தின் பின்னாழுள்ள அரசியல்/நோக்கம் என்ன? 

பெருமாளுக்கு இது நிச்சயம்  தெரிந்திருக்கும். (இதை ஏற்பாடு செய்தவர்களை பெருமாளுக்குத் தெரிந்திருக்குமே..? என் நாஞ் சொல்றது சரிதானே.. 🤪)

யார் இதனை ஏற்பாடு செய்தது ? ஏன் செய்தார்கள் ? 

(தூணை விட்டுவிட்டு துரும்பைப் பிடிக்காதீர்கள் குசா.)

[இலங்கையில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கற்தில் TNA யும் அடங்குகிறதாம். அதில் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவியாம் என்று சிட்டுக்குருவி சொல்லுது- பெருமாள், அதிகாரத்திலுள்ளவர்களிடம் கூழைக் கும்பிடு போடமாட்டீர்கள்தானே 🤣)

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யோ! எங்க திரும்பினாலும் சுமந்திரனுக்கு எதிர்ப்பு, ஒருவருக்கும் இல்லாத எதிர்ப்பு இவருக்கு மட்டும், கூட்டணியிலுள்ள ஒருவருக்கு மட்டும். சிந்திக்க வேண்டியது! இவர் தமிழருக்காக எதையும் சாதிக்கவில்லை, இதுவரையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்குதோ அங்கே ஓட்டிக்கொண்டு பதவியும், பாதுகாப்பும் பெறுபவர், பெற்றுக்கொள்வார். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன். இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது தமிழக இந்து மக்கள் கட்சி....🤪

ஏன் பெருமாள்.. நீங்கள் இதனை இங்கே இணைக்கும்போது, நீங்கள்  யார்  என மக்கள் அடையாளம்காண மாட்டார்கள் என நினைத்தீர்களா..🤣

1 hour ago, satan said:

அய்யய்யோ! எங்க திரும்பினாலும் சுமந்திரனுக்கு எதிர்ப்பு, ஒருவருக்கும் இல்லாத எதிர்ப்பு இவருக்கு மட்டும், கூட்டணியிலுள்ள ஒருவருக்கு மட்டும். சிந்திக்க வேண்டியது! இவர் தமிழருக்காக எதையும் சாதிக்கவில்லை, இதுவரையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்குதோ அங்கே ஓட்டிக்கொண்டு பதவியும், பாதுகாப்பும் பெறுபவர், பெற்றுக்கொள்வார். 

இனி ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா சாத்...? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

[இலங்கையில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கற்தில் TNA யும் அடங்குகிறதாம். அதில் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவியாம் என்று சிட்டுக்குருவி சொல்லுது-

17 minutes ago, Kapithan said:

இனி ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா சாத்...? 

இதென்னடா வம்பாய் போச்சு!  தாங்கள் சொன்னதை, நான் ஆமோதித்தேன் அவ்வளவே. அப்போ, தாங்கள் சொன்னது பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இதென்னடா வம்பாய் போச்சு!  தாங்கள் சொன்னதை, நான் ஆமோதித்தேன் அவ்வளவே. அப்போ, தாங்கள் சொன்னது பொய்யா?

🤣😆😃 நீங்கள் சொல்ல வருவது புரியாதா என்.. 😉

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அய்யய்யோ! எங்க திரும்பினாலும் சுமந்திரனுக்கு எதிர்ப்பு, ஒருவருக்கும் இல்லாத எதிர்ப்பு இவருக்கு மட்டும், கூட்டணியிலுள்ள ஒருவருக்கு மட்டும். சிந்திக்க வேண்டியது! இவர் தமிழருக்காக எதையும் சாதிக்கவில்லை, இதுவரையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்குதோ அங்கே ஓட்டிக்கொண்டு பதவியும், பாதுகாப்பும் பெறுபவர், பெற்றுக்கொள்வார். 

படித்தவர்கள் எங்கு சென்றாலும் மதிப்பு என்பார்கள் அதுதான் இதுவா? நகைசுவையாக குறிப்பிட்டது மட்டுமே மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமல்ல, 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

படித்தவர்கள் எங்கு சென்றாலும் மதிப்பு என்பார்கள் அதுதான் இதுவா? நகைசுவையாக குறிப்பிட்டது மட்டுமே மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமல்ல, 

அவர் உண்மையிலே படித்தவர் என்றால் இப்படி நாடு நாடாய் கல் ஏறி வேண்டும் நபராய் இருக்க மாட்டார் அவருக்கு தேவை பணபெட்டியே தவிர தமிழர்களின் விடிவு அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

படித்தவர்கள் எங்கு சென்றாலும் மதிப்பு என்பார்கள் அதுதான் இதுவா? நகைசுவையாக குறிப்பிட்டது மட்டுமே மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமல்ல, 

படித்து, பண்பட்டவர்கள் மற்றவர்களைப்பற்றி தாங்கள் வைக்கும் கருத்து எதிர்மறையானதாகவிருந்தாலும் அடக்கமாக, அவர்கள் மனது புண்படாமல், அவர்களை  அவமதிப்பு செய்யாமல், மதிப்பாக சொல்லும் பண்பே தனி......!  த. தே. கூட்டணிக்குள் அதுவும் தமிழரசுக் கட்சிக்குள் படித்தவர் சுமந்திரன் மட்டுமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

யாழ். மத்திய கல்லூரி, அவுஸ்திரேலியா, கனடா, 
இங்கிலாந்து, முல்லைத்தீவு, தமிழ்நாடு என்று.... 
உலகம் முழுக்க...   சுமந்திரனை கழுவி ஊற்றுகிறார்கள். 

பிற்குறிப்பு: ஏதாவது... நாடுகள் விடு பட்டு இருந்தால்... அறியத் தரவும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

யாழ். மத்திய கல்லூரி, அவுஸ்திரேலியா, கனடா, 
இங்கிலாந்து, முல்லைத்தீவு, தமிழ்நாடு என்று.... 
உலகம் முழுக்க...   சுமந்திரனை கழுவி ஊற்றுகிறார்கள். 

பிற்குறிப்பு: ஏதாவது... நாடுகள் விடு பட்டு இருந்தால்... அறியத் தரவும். 😜

சுமத்திரனின். நோக்கம் எப்படி இருத்தாலும்.  மக்கள் இப்படி நடப்பார்கள்  என்று அவருக்கு தெரிந்து இருந்தும்.  தொடர்ச்சியாக இவ்வாறான சந்தர்ப்பங்களை வழங்கி வருவதால் மக்களின் அபிலாஷைகளை  அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும். தெரியக்கூடிய  வாய்ப்பு எற்படுகிறது.  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசுவதற்க்கு இருக்கும் மதிப்பைவிட. மக்களின் மேற்படி செயற்பாட்டு மதிப்பு அதிகம் ........பிற்குறிப்புக்கான பதில் ...தமிழ்ஈழம்.  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இலங்கையில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கற்தில் TNA யும் அடங்குகிறதாம். அதில் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவியாம் என்று சிட்டுக்குருவி சொல்லுது- பெருமாள், அதிகாரத்திலுள்ளவர்களிடம் கூழைக் கும்பிடு போடமாட்டீர்கள்தானே

இவர்களையும்  முக்கியமாக ரணிலும் சுமத்திரனுக்கு அதிகாரம் கொடுக்கப்படுவது வழக்கம் போல் சர்வ்தேச மனித உரிமை அமைப்புக்களின் நெருக்குவாரங்களில் இருந்து சிங்கள இனவாத அரசு தப்பிக்க தமிழ்மக்களின் பிரதிநிதி என்று இவரை வைத்தே ஐநா உயர் அதிகாரிகள் மனித உரிமை வாதிகளை சந்திக்க வைத்து தமிழர்களின் நியாமான உரிமைகளை இல்லாமல் பண்ணுவதே இவரும் எஜமானுக்கு விசுவாசமாய் ஓடி ஓடி பல ரகசிய சந்திப்புக்களை செய்து தமிழர்களின் யுத்தத்தின் பின் கிடைக்கவேண்டிய நியாயமான தீர்வை கூட தேவையற்றதாக்கி விட்டுள்ளார் .

அதனால்தான் கோத்தபாயராஜபக்ச தமிழர்களுக்கு தீர்வு அவசியமா ? என்று கொடுப்புக்குள் சிரித்தபடி கேட்டவர் அதே நேரம் சுமத்திரனின் போலி பிம்பம் உடையக்கூடாது என்பதில் ராஜபக்ச குடும்பம் கண்ணும் கருத்துமாக உள்ளனர் கனடாவில் சுமத்திரனுக்கு விழுந்த திரத்து பாடு கண்டு அவசரத்தில் உளறியவர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் .தேர்தல் வரும் போது புலிகளை போற்றி பாடுவார் ராஜபக்சக்களின் அனுமதியுடன் ஏனெனில் வடகிழக்கு தமிழ் மக்களை ஏமாத்தி வாக்கு பெறணும் வென்றபின் புலிகளை திட்டி சிங்கள ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து பலன்ஸ்  பண்ணுவார் . மொத்ததில் இவரை வைத்து இனவாத சிங்கள அரசு கடந்த 12 வருடங்களில் பாரிய பலனை பெற்றுள்ளனர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி இப்படியானவர் அதிகாரத்துக்கு வந்தால் கபித்தான் நீங்கள் சுமத்திரனுக்கு சலூட் அடித்து கொள்ளுங்கள் அது உங்கள் அறிவின் எல்லை அது என்பது எனக்கு புரியும் ஆனால்  இதுவரை என் எழுத்துக்களோ நானோ கூழை கும்பிடு வது போல் பேசி எழுதியிருக்கேனா ? அப்படி எழுதி இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள் அப்படி முதலில் கூழைக்கும்பிடு செய்தது என்று எண்ணுவதே கழுத்தை கையால் அறுத்துக்கொண்டு உயிர் விடுவதுக்கு  சமமான ஒன்று என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

சுமத்திரனின். நோக்கம் எப்படி இருத்தாலும்.  மக்கள் இப்படி நடப்பார்கள்  என்று அவருக்கு தெரிந்து இருந்தும்.  தொடர்ச்சியாக இவ்வாறான சந்தர்ப்பங்களை வழங்கி வருவதால் மக்களின் அபிலாஷைகளை  அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும். தெரியக்கூடிய  வாய்ப்பு எற்படுகிறது.  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசுவதற்க்கு இருக்கும் மதிப்பைவிட. மக்களின் மேற்படி செயற்பாட்டு மதிப்பு அதிகம் ........பிற்குறிப்புக்கான பதில் ...தமிழ்ஈழம்.  😁

Pasumai Vikatan - 25 July 2020 - ஐ.பி.எஸ் வேலை வேண்டாம்; தற்சார்பு வாழ்க்கை  போதும்!| Karur youngster Annamalai took organic farming instead of his IPS  job - Vikatan

Pasumai Vikatan - 25 July 2020 - ஐ.பி.எஸ் வேலை வேண்டாம்; தற்சார்பு வாழ்க்கை  போதும்!| Karur youngster Annamalai took organic farming instead of his IPS  job - Vikatan  Annamalai K BJP - Good Morning. | Facebook

tn bjp annamalai: என்னது பாஜக அண்ணாமலைக்கு ஆஸ்கர் விருதா..? என்ன சொல்றீங்க!  - tirupur district bjp cadres goat gift to tamil nadu bjp chief annamalai |  Samayam Tamil

கந்தையா அண்ணேய்....
இலங்கைப் பிரச்சினை... இவ்வளவு நாளும், வெளிநாடுகளுக்கு  தெரியாமலா இருக்கு. 
அப்ப என்னத்துக்கு...  வெளிநாட்டு தூதரகங்கள், இருக்கு?
அதுக்கு ஏன், வீணாய்... வாடை கட்டிக் கொண்டு இங்கை இருக்கிறார்கள்.

சுமந்திரன் போலை... கொஞ்ச ஆட்களை பிடித்து, நாட்டு நிலைமையை...  
ஆட்டுக் குட்டி  அண்ணாமலை, போன்ற ஆட்களிடம் தெரிவிக்கலாமே...  😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணேய்....
இலங்கைப் பிரச்சினை... இவ்வளவு நாளும், வெளிநாடுகளுக்கு  தெரியாமலா இருக்கு. 
அப்ப என்னத்துக்கு...  வெளிநாட்டு தூதரகங்கள், இருக்கு?
அதுக்கு ஏன், வீணாய்... வாடை கட்டிக் கொண்டு இங்கை இருக்கிறார்கள்.

சுமந்திரன் போலை... கொஞ்ச ஆட்களை பிடித்து, நாட்டு நிலைமையை...  
ஆட்டுக் குட்டி  அண்ணாமலை, போன்ற ஆட்களிடம் தெரிவிக்கலாமே...  😜

அப்ப இது என்ன சிறித்தம்பி?  😁

Bild

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அப்ப இது என்ன சிறித்தம்பி?  😁

Bild

குமாரசாமி அண்ணேய்….
நம்ம ஆபிரகாம்…. 2 மாசத்துக்கு மேலை, சும்மா இருக்க மாட்டார்.
அப்படி செய்த லீலைகளில்… ஒன்றுதான், ஆட்டுக் குட்டியுடன் நடந்த சந்திப்பு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

தமிழ்நாட்டு மக்களுக்கும் இதுவரை சுத்துமாத்து சிங்கத்தை தெரியாது இலவச விளம்பரம் ஒரு பத்து பேர் நின்று கத்திக்கொண்டு இருக்கினம் 

கத்துபவர்கள் காவித்துண்டை போட்டிருப்பதாலும் பிஜேபி அண்ணாமலையின் பெயரை உச்சரிப்பதாலும் மறவன்புலவு சச்சிக்கு வேண்டப்பட்டவர்கள். மற்றும்படி வேறெந்த அக்கறையும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

அவர் உண்மையிலே படித்தவர் என்றால் இப்படி நாடு நாடாய் கல் ஏறி வேண்டும் நபராய் இருக்க மாட்டார் அவருக்கு தேவை பணபெட்டியே தவிர தமிழர்களின் விடிவு அல்ல .

கல்லை யார் எறிகிறார்கள் என்று பார்க்க வேண்டாமா..😃

அந்த செய்தியை யார் காவித்திரிகிறார்கள் என்றும் பார்க்க வேண்டுமா இல்லையா? 

இந்தியாவில் இந்திய அரசின் முகவர்கள் இயங்குவது ஒரு விடயமே அல்ல.

ஆனால்......களத்தில் ☹️

பூனை கண்களை மூடிப் பால் குடித்தாலும் பார்ப்பவர்களின் கண்கள் திறந்துதானே இருக்கிறது...

என்னாஞ் சொல்றது..😃

3 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

யாழ். மத்திய கல்லூரி, அவுஸ்திரேலியா, கனடா, 
இங்கிலாந்து, முல்லைத்தீவு, தமிழ்நாடு என்று.... 
உலகம் முழுக்க...   சுமந்திரனை கழுவி ஊற்றுகிறார்கள். 

பிற்குறிப்பு: ஏதாவது... நாடுகள் விடு பட்டு இருந்தால்... அறியத் தரவும். 😜

யார்  கழுவி ஊற்றுகிறார்கள்..? 

மதத் துவேசிகளும், சாதி வெறியர்களும்தானே...

(ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், இன்னும் நாகரீகமடையாத காட்டான்கள் சிலரைத் தவிர....😃)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இவர்களையும்  முக்கியமாக ரணிலும் சுமத்திரனுக்கு அதிகாரம் கொடுக்கப்படுவது வழக்கம் போல் சர்வ்தேச மனித உரிமை அமைப்புக்களின் நெருக்குவாரங்களில் இருந்து சிங்கள இனவாத அரசு தப்பிக்க தமிழ்மக்களின் பிரதிநிதி என்று இவரை வைத்தே ஐநா உயர் அதிகாரிகள் மனித உரிமை வாதிகளை சந்திக்க வைத்து தமிழர்களின் நியாமான உரிமைகளை இல்லாமல் பண்ணுவதே இவரும் எஜமானுக்கு விசுவாசமாய் ஓடி ஓடி பல ரகசிய சந்திப்புக்களை செய்து தமிழர்களின் யுத்தத்தின் பின் கிடைக்கவேண்டிய நியாயமான தீர்வை கூட தேவையற்றதாக்கி விட்டுள்ளார் .

அதனால்தான் கோத்தபாயராஜபக்ச தமிழர்களுக்கு தீர்வு அவசியமா ? என்று கொடுப்புக்குள் சிரித்தபடி கேட்டவர் அதே நேரம் சுமத்திரனின் போலி பிம்பம் உடையக்கூடாது என்பதில் ராஜபக்ச குடும்பம் கண்ணும் கருத்துமாக உள்ளனர் கனடாவில் சுமத்திரனுக்கு விழுந்த திரத்து பாடு கண்டு அவசரத்தில் உளறியவர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் .தேர்தல் வரும் போது புலிகளை போற்றி பாடுவார் ராஜபக்சக்களின் அனுமதியுடன் ஏனெனில் வடகிழக்கு தமிழ் மக்களை ஏமாத்தி வாக்கு பெறணும் வென்றபின் புலிகளை திட்டி சிங்கள ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து பலன்ஸ்  பண்ணுவார் . மொத்ததில் இவரை வைத்து இனவாத சிங்கள அரசு கடந்த 12 வருடங்களில் பாரிய பலனை பெற்றுள்ளனர் .

எப்போதும் அம்பை மட்டும்தான் நோவீர்களா ?

சுமந்திரன்  TNA யைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தவர்களும் அவர்களே. நீங்கள் திட்ட வேண்டுமாயின் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.

ஆனால்  தற்போது இப்பொது TNA தியாகியாகிவிட்டதுபோல.. 😆

குறிப்பு;     சுமந்திரனின் போராளிகளின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. 

2 hours ago, பெருமாள் said:

இனி இப்படியானவர் அதிகாரத்துக்கு வந்தால் கபித்தான் நீங்கள் சுமத்திரனுக்கு சலூட் அடித்து கொள்ளுங்கள் அது உங்கள் அறிவின் எல்லை அது என்பது எனக்கு புரியும் ஆனால்  இதுவரை என் எழுத்துக்களோ நானோ கூழை கும்பிடு வது போல் பேசி எழுதியிருக்கேனா ? அப்படி எழுதி இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள் அப்படி முதலில் கூழைக்கும்பிடு செய்தது என்று எண்ணுவதே கழுத்தை கையால் அறுத்துக்கொண்டு உயிர் விடுவதுக்கு  சமமான ஒன்று என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் .

இந்தியாவுக்கும் BJP க்கும் RAWக்கும் மட்டும்தான் கூழைக்கும்பிடோ..😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்ப இது என்ன சிறித்தம்பி?  😁

Bild

அதுதான் எனக்கும் புரியவில்ல.😉

எங்களில் பலர் RAW agents, BJP supporters. ஆனால் சுமந்திரன் எதிர்ப்பாளர்கள். ஆனால் தற்போது இவர்களோ ஆட்டுக்குட்டியிடம் சுகம் விசாரிக்கிறார்கள் 😆

இப்போது எம் இந்திய விசுவாசிகளின் நிலை தர்ம சங்கடம..🤣

ஆனால் TNA யின் இந்த நகர்வு எப்போதோ செய்திருக்க வேண்டியது. (இராசதந்திர ரீதியில் )

1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணேய்….
நம்ம ஆபிரகாம்…. 2 மாசத்துக்கு மேலை, சும்மா இருக்க மாட்டார்.
அப்படி செய்த லீலைகளில்… ஒன்றுதான், ஆட்டுக் குட்டியுடன் நடந்த சந்திப்பு. 😂

சந்திப்பு நல்ல விடயம்தானே.. இதில் உங்கள் நிலைப்பாடென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Pasumai Vikatan - 25 July 2020 - ஐ.பி.எஸ் வேலை வேண்டாம்; தற்சார்பு வாழ்க்கை  போதும்!| Karur youngster Annamalai took organic farming instead of his IPS  job - Vikatan

Pasumai Vikatan - 25 July 2020 - ஐ.பி.எஸ் வேலை வேண்டாம்; தற்சார்பு வாழ்க்கை  போதும்!| Karur youngster Annamalai took organic farming instead of his IPS  job - Vikatan  Annamalai K BJP - Good Morning. | Facebook

tn bjp annamalai: என்னது பாஜக அண்ணாமலைக்கு ஆஸ்கர் விருதா..? என்ன சொல்றீங்க!  - tirupur district bjp cadres goat gift to tamil nadu bjp chief annamalai |  Samayam Tamil

கந்தையா அண்ணேய்....
இலங்கைப் பிரச்சினை... இவ்வளவு நாளும், வெளிநாடுகளுக்கு  தெரியாமலா இருக்கு. 
அப்ப என்னத்துக்கு...  வெளிநாட்டு தூதரகங்கள், இருக்கு?
அதுக்கு ஏன், வீணாய்... வாடை கட்டிக் கொண்டு இங்கை இருக்கிறார்கள்.

சுமந்திரன் போலை... கொஞ்ச ஆட்களை பிடித்து, நாட்டு நிலைமையை...  
ஆட்டுக் குட்டி  அண்ணாமலை, போன்ற ஆட்களிடம் தெரிவிக்கலாமே...  😜

தமிழ் சிறி அண்ணா நம்ம தமிழ் மக்களில் பெரும்பாலன மக்களுக்கு என்ன பிரச்சனை என்று சரியாக தெரியாது.......கிராமங்களில் தோட்டம் மற்றும் கூலி வேலை செய்பவர்களுக்கு.....பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியோ....பிரச்சனை பற்றியோ போதிய அறிவு இல்லை...அவர்களை வளரவிடமால....பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வைத்துள்ளார்கள்.....இதில் இந்த அரசியல்வாதிகள் பங்குமுண்டு.   .....அப்படி இருந்தால் தான் தொடர்ந்தும் இவர்களுக்கு வாக்குகள் போடுவார்கள்   மேலும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு  தமிழர் பிரச்சனை முற்று முழுதாகத் தெரியாது     காரணம் அவர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள்   நீங்கள் தான் சம்பந்தன்.  பாராளுமன்ற உறுப்பினர் என வைத்து கொள்வோம் 🤣😂. சிங்களவன்  ஒன்றும் தரமாட்டார்கள்.  உங்களால் என்ன செய்ய முடியும் 😁🤣🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

யார்  கழுவி ஊற்றுகிறார்கள்..? 

மதத் துவேசிகளும், சாதி வெறியர்களும்தானே...

கருத்து  வெறுமை நீங்கள் தஞ்சமடைவது மதத்தில் அது வழமையான ஒன்று .

39 minutes ago, Kapithan said:

சுமந்திரன்  TNA யைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தவர்களும் அவர்களே. நீங்கள் திட்ட வேண்டுமாயின் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.

ஆனால்  தற்போது இப்பொது TNA தியாகியாகிவிட்டதுபோல..

TNA யில் அடாத்தாக உட்கார்ந்து இருப்பவர் முடிந்தால் தனியே போய்  வென்று காட்டவும் முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.