Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்... ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்... ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல – நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன்.

எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன்.

இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக   பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று  நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும்.

கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம்  02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம்  செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, அனுகூலங்கள், பிரதிகூலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.

மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1272152

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

சுத்திச்சுத்தி அதுக்கையே நிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

மண்ணாங்கட்டி எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிக் கொண்டு. எவ்வளவு காலத்துக்குத் தான் இதையே சொல்லி காலத்தை ஓட்டப்போகிறியள்

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் அனுபவித்த ராணுவ அடக்குமுறையை சிங்கள மக்களும் அனுபவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடன் நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு - கோட்டாபய ராஜபக்ஸ

19 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய

பட மூலாதாரம்,PMD

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை அடுத்து, அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை ஆய்வு செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட தான் முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நாட்டு மக்களுக்கு இன்று (16) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இலங்கையின் கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து தாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய (15) கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது என ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

அந்த கலந்துரையாடல் மூலம் இலங்கை எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூல காரணம் அந்நிய செலாவணி நெருக்கடி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத் துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக் கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

 

கோட்டாபய

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார்.

இதேவேளை, இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60770810

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் பல துன்பங்களை அனுபவித்து, அந்த சவால்களை வென்ற தேசம் நாம். அந்நிய படையெடுப்புகள், பெரும் பஞ்சம், இயற்கை சீற்றங்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோம். கோவிட்-19 சூழ்நிலையை நாங்கள் கையாண்ட விதம் சர்வதேச அமைப்புகளாலும் பாராட்டப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை செயல்படுத்தும்போது சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்கள் அனைவரையும் சோர்வடையாமல் இந்த நெருக்கடியை சமாளிக்க ஒரு தேசமாக ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து  செயற்பட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு நெருக்கடிக்குள் சிக்கி மக்கள் விழிபிதுங்கி நிற்கும் சமயத்தில் ஜனாதிபதியின் உரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும், வழக்கம் போல எதிர்பார்க்கப்பட்ட விடயங்களையே பேசியுள்ளார்.

அவரது உரையின் முழு விபரம் வருமாறு

மிகவும் வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், பிற மத குருமார்கள், தாய்மார்கள், தந்தையர்கள், சகோதர சகோதரிகள், அன்பான குழந்தைகள் மற்றும் நண்பர்களே.

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு பற்றி நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற விடயங்களையும் நான் அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் அனுபவிக்கும் பல துன்பங்கள் குறித்தும் நான் மிகவும் உணர்திறன் உடையவன். இந்த சூழ்நிலைகள் தொடர்பாக நாம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டாலும், நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இன்று, மக்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு காண கடுமையான முடிவுகளை எடுப்பதில் உறுதியாக உள்ளேன். அதற்கு உதவுவதற்காக தேசிய பொருளாதார கவுன்சில் மற்றும் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளேன். இதன் மூலம் நான் எடுக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பேன். எனவே, மக்கள் சார்பாக நான் எடுக்கும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் படும் சிரமங்களை நான் நன்கு அறிவேன். கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முன்னணியில் இருந்த படையினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் என்னால் நன்கு புரிந்துகொண்டு நிர்வகிக்க முடிந்தது.

உலகில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் நமது நாடு மட்டும் பாதிக்கப்படவில்லை. முழு உலகமும் பல்வேறு இன்னல்களால் சூழப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் அதிகரித்து வரும் கப்பல் செலவுகள், பொருட்களின் விலை உயர்வு மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. எவ்வாறாயினும், மக்களின் நலனுக்காக நாங்கள் சலுகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த நெருக்கடி என்னால் உருவாக்கப்படவில்லை. இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் போது, இந்த நெருக்கடியை உடனடியாக தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிக்கிறேன்.

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பது ஒரு நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளின் பொறுப்பாகும்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு மூல காரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடிதான்.

இந்த ஆண்டுக்கான கணிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்த இரண்டு மாத தரவுகளின்படி, இந்த ஆண்டு இறக்குமதி செலவாக 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, இது 10 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏற்றுமதி சேவைகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களின் பணம் மூலம் 2 பில்லியன் டாலர்கள் பெறுவோம். அதன்படி, வர்த்தக பற்றாக்குறை 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களில் செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படும்.

மற்ற மானியங்கள் மற்றும் முதலீடுகளிலிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்ட எதிர்பார்க்கிறோம். அதன்படி, அந்நியச் செலாவணியில் மொத்தப் பற்றாக்குறை 9.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

எவ்வாறாயினும், ரூபாயின் மதிப்பை உயர்த்தியவுடன், ஏற்றுமதி வருவாய் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 22 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலராக இறக்குமதி செலவையும் குறைக்கும். அப்படி நடந்தால், வர்த்தக பற்றாக்குறை 7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறையும். இந்த இலக்கை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்.

ஏற்றுமதி சேவைகளை வழங்குவதன் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்புவதையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தகப் பற்றாக்குறை 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

இந்தப் பற்றாக்குறையை நிரப்பவும், அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், நமது நட்பு நாடுகளுடனும் எங்களது கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக விவாதங்களை ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இடம்பெற்றது.

அந்த விவாதங்கள் மூலம், எங்களின் வருடாந்திர கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பலவற்றை செலுத்துவதற்கான வழியை நாங்கள் கண்டுபிடிப்போம். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலைத் தொடர்ந்து, நன்மைகள் மற்றும் தீமைகளை ஆராய்ந்த பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன்.

கடந்த காலங்களில் நான் எடுத்த சில தீர்மானங்களினால் இறக்குமதி செலவினங்களை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த சிக்கலை முன்கூட்டியே பார்த்ததால் வாகனங்களை இறக்குமதி செய்வதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி வைத்தோம். மேலும், உள்ளூர் தொழில்களை ஊக்குவித்தோம். மேலும் பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, அந்த பயிர்களை எங்கள் நாட்டிலேயே பயிரிட நடவடிக்கை எடுத்தோம். அந்த முயற்சிகளின் வெற்றிகரமான முடிவுகளை நாம் இப்போது பார்க்கலாம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை உலகச் சந்தையில் வேகமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையாகும். பொதுவாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்துக்கும் மேல் எரிபொருள் வாங்குவதற்குச் செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டில் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சாரம் தயாரிக்கவும் நம் நாட்டில் எரிபொருள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக நான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தேன்.

எனவே, எரிபொருள் மற்றும் மின்சார பாவனையை முடிந்தவரை மட்டுப்படுத்துவதன் மூலம், குடிமக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு தங்கள் ஆதரவை வழங்க முடியும். இந்த சவாலான நேரத்தில் உங்கள் பொறுப்பை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறை, புத்துயிர் பெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை தெளிவாக அதிகரித்துள்ளது.

மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு வழங்குவதை முடுக்கி விடுவதால், இந்தத் துறைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருகிறது.

வரலாற்றில் பல துன்பங்களை அனுபவித்த அதே சமயம் அந்த சவால்களை வென்ற தேசம் நாம். அந்நிய படையெடுப்புகள், பெரும் பஞ்சம், இயற்கை சீற்றங்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோம். கோவிட்-19 சூழ்நிலையை நாங்கள் கையாண்ட விதம் சர்வதேச அமைப்புகளாலும் பாராட்டப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை செயல்படுத்தும்போது சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்கள் அனைவரையும் சோர்வடையாமல் இந்த நெருக்கடியை சமாளிக்க ஒரு தேசமாக ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பான, ஒழுக்கமான, நவீன வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்புமாறும், உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைக் கட்டியெழுப்புமாறும் நீங்கள் என்னிடம் கேட்டுக் கொண்டீர்கள். எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் உங்களையும் உங்கள் குழந்தையையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டது. அந்த அசல் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு எனது பணிக்காலத்தின் மீதமுள்ள காலத்தை அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் பொது அதிகாரிகள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்கான எமது விருப்பமான இலக்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் அடையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அழைப்பின் பேரில் நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் அனைவரும் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன், அதை மிகுந்த அர்ப்பணிப்புடன் பாதுகாக்கிறேன்.

உன்னத மும்மூர்த்திகள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்!

https://pagetamil.com/2022/03/16/வரலாற்றில்-பல-துன்பங்களை/

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறை, புத்துயிர் பெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை தெளிவாக அதிகரித்துள்ளது.

 

22 minutes ago, பெருமாள் said:

மேலும், உள்ளூர் தொழில்களை ஊக்குவித்தோம். மேலும் பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, அந்த பயிர்களை எங்கள் நாட்டிலேயே பயிரிட நடவடிக்கை எடுத்தோம். அந்த முயற்சிகளின் வெற்றிகரமான முடிவுகளை நாம் இப்போது பார்க்கலாம்.

 

22 minutes ago, பெருமாள் said:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு வழங்குவதை முடுக்கி விடுவதால், இந்தத் துறைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருகிறது.

 

23 minutes ago, பெருமாள் said:

பாதுகாப்பான, ஒழுக்கமான, நவீன வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்புமாறும், உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைக் கட்டியெழுப்புமாறும் நீங்கள் என்னிடம் கேட்டுக் கொண்டீர்கள்.

மாத்தையா! பொய் சொல்லலாம், அதுக்காக ஏக்கர் கணக்கில எல்லாம் சொல்லக்கூடாது. எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன? விவாசாயிகள் வீட்டுக்குள் முடங்க  வைப்பட்டுள்ளனர் என்பதை சொல்ல மறுத்து விட்டீர்களே!

29 minutes ago, பெருமாள் said:

உங்கள் அழைப்பின் பேரில் நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் அனைவரும் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன், அதை மிகுந்த அர்ப்பணிப்புடன் பாதுகாக்கிறேன்.

பதவியிலிருந்து விலகுகிற எண்ணம் இல்லை. விலகினாலும் அவ்வளவே! சண்டித்தனத்தினாலும், மக்களின் ஆதரவினாலும் மோசடி, கொள்ளைகளிலிருந்து தப்பினார்கள் கடந்த காலத்தில். இப்போ மக்களே கொழுத்திப்போடுவார்கள் இவர்களை. காலம் சந்தர்ப்பம் பாத்து பதுங்கி இருக்கும், தன் நேரம் வரும்போது கப்புண்டு அமத்திப்போடும். இது அநிஞாயம் செய்யும்  எல்லோருக்கும் பொருந்தும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் செத்தாலும் திருந்தான்கள் ஒருபுறம் டன்  கணக்கில் பொய் மறுபுறம் தமிழர் பகுதிகளில்  அரசமரத்தை கண்டாலே ஆடுமாடுகள் தோற்கும் வண்ணம்  பாய்ந்து பாய்ந்து புத்தர் சிலை வைப்பது இந்த நேரம் மறவன் புலவு சச்சியார் கோவணத்துடன் பங்கருக்குள் இருக்கிறார் போல் ஆக்கும் .

May be an image of 2 people, people standing, fire and outdoors

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த நேரம் மறவன் புலவு சச்சியார் கோவணத்துடன் பங்கருக்குள் இருக்கிறார் போல் ஆக்கும் .

ஏன் அவரை இப்போ இந்த நேரத்தில கூப்பிடுறியள்? எரியிற நெருப்பிலே எண்ணெய் ஊத்தவோ? அவர் கிறிஸ்தவர்களுக்கெதிராகவே ஊளையிடுவார், இந்த நேரத்திலெல்லாம் பதுங்கி விடுவார்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

ஏன் அவரை இப்போ இந்த நேரத்தில கூப்பிடுறியள்? எரியிற நெருப்பிலே எண்ணெய் ஊத்தவோ? அவர் கிறிஸ்தவர்களுக்கெதிராகவே ஊளையிடுவார், இந்த நேரத்திலெல்லாம் பதுங்கி விடுவார்!

அந்தாள் பிக்குவுக்கு வேட்டியை கழட்டி கொடுத்து சொற்சுடன் இருந்த நிகழ்வில் இருந்து அவரை எனக்கு கண்ணிலும் காட்ட முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

அந்தாள் பிக்குவுக்கு வேட்டியை கழட்டி கொடுத்து சொற்சுடன் இருந்த நிகழ்வில் இருந்து அவரை எனக்கு கண்ணிலும் காட்ட முடியாது .

இது எப்போ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

இது எப்போ?

நம்ம யாழ்பாணத்துள் தான் நடந்தது தேட வேணும் . யாரோ எழவு பிக்கு யாழ் விசிட் அடிக்க அவர்களின் மத சம்பிரதாயப்படி இருக்கையில் வெள்ளை துணி போர்த்தி விட்டு அதன் மேல் இருப்பது வளமை வந்த பிக்குவின் கதிரையில் வெள்ளை துணி இல்லை உடனே சச்சியார் தன்ரை வேட்டியை கழட்டி அந்த பிக்குவின் இருக்கையில் போர்த்தி விட்டு இவர் உள்ளே போட்டு வந்த சோர்ட்ஸுடன் கதிரையில் இருக்கும் படம் பிரசித்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ....  ஐயோ! அந்த அருமையான காட்சியை கண்ணார கண்டு மகிழ தவறிவிட்டேனே. அது அடிமைகள் செய்கிற வேலையல்லவா? அது இருக்கட்டும், கர்தினால் அரசாங்கத்துக்கெதிராக ஐ .நா. வில் முறையிடப்போகிறேன் என்று ஒரு அறிவித்தல் விட்டார் பாருங்கள்! உடனே இவர் ஓடோடி வந்து, முந்தைய காலத்தில் சைவ ஆலயம் ஒன்றை கிறிஸ்தவ ஆலயமாக ஆக்கினார்களாம், அதற்கு சைவரும் உதவினார்களாம், இப்போ ஏதோ குறை சொல்லிக்கொண்டு தானும் அதற்கு எதிராக ஐ. நா. வுக்கு போகப்போகிறேன் என்று ஒரு அறிக்கை விட்டார் என்றால் பாருங்களேன் உறவின் உச்சத்தை. சுத்த கோமாளி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:
3 hours ago, பெருமாள் said:

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பது ஒரு நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளின் பொறுப்பாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல

வகைதொகையில்லாமல் கடன்வாங்கி, குடிமக்களை கொன்று குவித்தது யார்? வெளிநாட்டு ஆயுதங்களையும், போர்வீரர்களையும் வருவித்தது யார்? போர் வெற்றி நினைவுக் கோபுரங்களை கட்டி வெற்றி விழாக்களை கொண்டாடியது யார்? சும்மா இருந்த மக்களுக்கு பணத்தை கொடுத்து புண்பட்ட மக்களின் நிலைகளை காட்டி மகிழ்ந்தது யார்? தேவையற்ற குடும்ப சமாதிகளை அலங்கரித்தது யார்? இது தெரியாமல் ஏன் தேர்தலில் நின்கிறீர்கள்? இதுகள் வெளியில் வராமல் தவிர்ப்பதற்காகவே.

வெற்றிகளுக்கு அவர்கள் மட்டும் பொறுப்பு, நெருக்கடிகளுக்கு எல்லோரும் பொறுப்பெடுக்க வேண்டுமாம்! அவர்கள் அனுபவித்ததற்கு எல்லோரும் சுமக்க வேண்டுமாம், அதுவரை மக்கள் இருந்தாற்தானே! இப்போ இவர்களை விட்டு ஒவ்வொருவராக கழன்று கொண்டிருக்கிறார்கள், அழிவு உறுதி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

வெற்றிகளுக்கு அவர்கள் மட்டும் பொறுப்பு, நெருக்கடிகளுக்கு எல்லோரும் பொறுப்பெடுக்க வேண்டுமாம்! அவர்கள் அனுபவித்ததற்கு எல்லோரும் சுமக்க வேண்டுமாம், அதுவரை மக்கள் இருந்தாற்தானே! இப்போ இவர்களை விட்டு ஒவ்வொருவராக கழன்று கொண்டிருக்கிறார்கள், அழிவு உறுதி!

அருமையான கருத்து, சாத்தான். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சுத்திச்சுத்தி அதுக்கையே நிப்பினம்.

 

15 hours ago, வாதவூரான் said:

மண்ணாங்கட்டி எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிக் கொண்டு. எவ்வளவு காலத்துக்குத் தான் இதையே சொல்லி காலத்தை ஓட்டப்போகிறியள்

 

May be an image of 5 people, beard and text that says '~2009 ல நாங்க பயங்கரவாதத்த அழிச்சப்போ memes gp'

அண்ணைக்கு 2009 காலை 6 மணி இருக்கும்………..

அதேதான்(டா).... இன்னும்  சோறு போடுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அந்தாள் பிக்குவுக்கு வேட்டியை கழட்டி கொடுத்து சொற்சுடன் இருந்த நிகழ்வில் இருந்து அவரை எனக்கு கண்ணிலும் காட்ட முடியாது .

யாழ் கள உறவுகளுக்காக மறவன் சச்சியின் காற்சட்டை தரிசனம் 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கினி. வேட்டி வாங்கியவர் இருக்கிற உல்லாசம். இவரைபாத்தால் ஒடுங்கிப்போய் இருக்கிறார். காற்சட்டை இருந்த தைரியதிற்தான்  உடனை உருவி கொடுத்திருப்பார், இல்லையென்றால் இவரின் நிலை என்னாவது? எப்பிடி துடித்திருப்பார்? ஆமத்துறுவுக்கு உதவ முடியாமற் போனோமேயென்று.

வெட்கங்கெட்டது,

  • கருத்துக்கள உறவுகள்

இவரை ஜனாதிபதி ஆக்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து நிறைய சிங்களவர்கள் வோட்டுப்போட போனார்கள், அமெரிக்காவில் இருந்து மாத்திரம் அந்த நேரத்தில் 50000 பேர்வரை இலங்கை போனதாக ஒரு தகவல். நோக்கம், சிங்களவர்களை மாத்திரம் வைத்து அரசாங்கத்தை உருவாக்குதல், சிறுபான்மையினரை  ஒடுக்கி கட்டுக்குள் வைத்திருத்தல், நாட்டை இன்னும் தீவிர வலதுசாரி நாடாக்குதல். நாட்டின் பொருளாதாரம் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை. இவர்களில் எவனையாவது ஒருவனை இப்ப சந்திக்கவேண்டும் என்று ஒரு ஆசை. இவங்கள் நிச்சயமாக அங்கே இப்ப கஷ்டப்படுபவனுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.இந்த இலங்கையர், இந்தியர்களில் ஒரு குணம் உண்டு, இங்கு இடது சாரிகளை (Liberals) ஆதரிப்பார்கள், மறந்தும் Trump போன்றவர்களுக்கு ஒட்டு போட்ட மாட்டார்கள், ஆனால் மற்றவனை ஒடுக்குவதுக்கு அவர்களுது நாட்டில் மாத்திரம் வலதுசாரிகள் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை ஒடுக்கி, நாடு முழுவதும் விகாரைகளை கட்டி, சிங்களத்தை திணித்து விட்டால் சிங்களவர் தங்களை தலைமேல் வைத்து கொண்டாடுவர், சரித்திரத்தில் இடம்பிடித்து வருங்கால சந்ததி தங்களை கொண்டாடும் எனும் நோக்கில் ஆடிய ஆட்டத்தை ரசித்து வரவேற்ற மக்கள், வயிறு கடிக்க உண்மையை உணர, இனக்கலவரத்திற்கு பதிலாக இப்போது அரசியல் கலவரம் நடக்கிறது. அறிவு குறைந்தவர்களின் சிந்தனை இப்படி சிக்கலிலேதான் முடியும். இவர்கள் தங்கள் காலம் முடியமுன்னே அதை காண போகிறார்கள். கோத்தா அமெரிக்காவுக்கு போனாலும் அங்கே காத்திருக்கு ஆப்பு அவருக்கு. தலைமறைவு? தற்கொலை? ..... சேச்சே அதெல்லாம் துணிந்தவர்கள் செய்யிற வேலை அவர் முடிவை அவரை ஆதரித்த மக்களே முடிவு செய்வர். பாவம் நாமலின் ஜனாதிபதி கனவு, தன் தனயனை  ஜனாதிபத்தியாக்கி காணும் தந்தையின் கனவும் முளையிலேயே கருகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

இவரை ஜனாதிபதி ஆக்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து நிறைய சிங்களவர்கள் வோட்டுப்போட போனார்கள், அமெரிக்காவில் இருந்து மாத்திரம் அந்த நேரத்தில் 50000 பேர்வரை இலங்கை போனதாக ஒரு தகவல். நோக்கம், சிங்களவர்களை மாத்திரம் வைத்து அரசாங்கத்தை உருவாக்குதல், சிறுபான்மையினரை  ஒடுக்கி கட்டுக்குள் வைத்திருத்தல், நாட்டை இன்னும் தீவிர வலதுசாரி நாடாக்குதல். நாட்டின் பொருளாதாரம் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை. இவர்களில் எவனையாவது ஒருவனை இப்ப சந்திக்கவேண்டும் என்று ஒரு ஆசை. இவங்கள் நிச்சயமாக அங்கே இப்ப கஷ்டப்படுபவனுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.இந்த இலங்கையர், இந்தியர்களில் ஒரு குணம் உண்டு, இங்கு இடது சாரிகளை (Liberals) ஆதரிப்பார்கள், மறந்தும் Trump போன்றவர்களுக்கு ஒட்டு போட்ட மாட்டார்கள், ஆனால் மற்றவனை ஒடுக்குவதுக்கு அவர்களுது நாட்டில் மாத்திரம் வலதுசாரிகள் வேண்டும்.

வோட்டுப்போட வரவழைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. அவர்களின்  பயணச்செலவு ராஜபக்ஸ குடும்பத்துக்கே வெளிச்சம்!

 இலங்கைக்கு விடுமுறைக்கு செல்வதற்கு  எடுத்த விசாவை ரத்து செய்து விட்டார்களாம். இலங்கையிலிருந்து வரும் அழைப்புகளை எடுப்பதில்லையாம். இன்னும் தங்களை தொடர்பு கொள்ளும்  விபரங்களை மாற்றுவது பற்றியும் ஆலோசனையாம். சொல்லப்போனால் கோத்தாவின் மகனும் அந்த நிலையில்த்தான் போலுள்ளது. தந்தையாரைப்பற்றி வரும் முறைப்பாடுகளுக்கு பதிலளிக்க முடியாமல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ புலம்பெயர்ந்த தமிழர் தாராளமாக இலங்கை அரசுக்கெதிராக போராட்டங்களை நடத்தலாம். கேட்பதற்கு ஒரு பயபுள்ளை வரமாட்டானுக, வேணுமென்றால் நம்ம சேர்ந்தது சிலது வரும் வெள்ளையடிக்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல – பிரதமர்!

போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர். இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிரணியினர், ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர்.

அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி இதில் உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1272348

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அப்போ.....  தொடர் போராட்டம் நடத்துவோர், பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் நாள்முழுவதும் வெயிலில் வரிசையில்  நிற்பதும், வேற்றுகிரக வாசிகளோ? அவர்களுக்குத்தான் கோத்தா உரை நிகழ்த்தினாரோ?

2 hours ago, தமிழ் சிறி said:

அவர்கள், தமது ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர்.

இவர்கள் இந்நாட்டு மக்களில்லையா? இவர்களுக்கு மட்டுந்தான் நெருக்கடியா? அறுபத்தொன்பது லட்ஷம் மக்களும் செல்வச் செழிப்புடனே இருக்கிறார்களா? அப்படியெனில் கோத்தாவின் உரை தம் செழிப்பைத்தான் பறை சாற்றியதா?  அப்போ பசில் ஏன் நாடுநாடாய் கடன் கேட்டு அலைகிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.