Jump to content

மிகவும் சுவையான லெமன் பட்டர் சமன் (Lemon Butter Salmon)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும்  செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது  பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும்.
இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும்.  

spacer.png

spacer.png

செய்முறை கீழே உள்ளது:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே நன்றாகத்தான் இருக்கின்றது.......!

அவர்கள் தங்கள் ரெஸ்ட் எடுக்கிறதுக்காக உங்களை பாப்பாவில் ஏற்றுகிறார்கள்.......புகழ்ச்சிக்கு மயங்கி விடாதீர்கள், பல சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியே அதில் இருந்துதான் தொடங்குகிறது......அனுபவஸ்தன் சொன்னா கற்பூரம் மாதிரி புரிஞ்ச்சு கொள்ளணும்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் நானும் மீன்வகை விரும்பி சாப்பிடுவேன்.

சே
உங்க வீட்டுக்கு வந்திருந்தால் இப்படி சுவையாக வெட்டியிருக்கலாம்.

தவற விட்டுவிட்டோம்.

அடுத்த முறை பார்ப்போம்.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான்… இந்த மீனை,
சோறு, புட்டு, இடியப்பத்துடன் சேர்த்து, சாப்பிட எப்படி இருக்கும். 😁
பார்க்க அழகாகவும்… செய்முறையும் இலகுவாக உள்ளது. 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

பப்பாவில் ஏறி/ஏற்றி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இனி நினைத்தாலும் இறங்க முடியாது, உங்களை மாதிரி அனுபவஸ்தர்கள், முன் கூட்டியே எங்களை மாதிரி ஆட்களுக்காக எச்சரிக்கை பதிவுகள் போட வேண்டும் 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் நானும் மீன்வகை விரும்பி சாப்பிடுவேன்.

சே
உங்க வீட்டுக்கு வந்திருந்தால் இப்படி சுவையாக வெட்டியிருக்கலாம்.

தவற விட்டுவிட்டோம்.

அடுத்த முறை பார்ப்போம்.
இணைப்புக்கு நன்றி.

அண்ணை, நீங்களும் செய்து பாருங்கள், உண்மையிலேயே நல்ல சுவை. அடுத்த முறை வீட்டுக்கு வாருங்கள் செய்தால் போச்சு 

4 minutes ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்… இந்த மீனை,
சோறு, புட்டு, இடியப்பத்துடன் சேர்த்து, சாப்பிட எப்படி இருக்கும். 😁
பார்க்க அழகாகவும்… செய்முறையும் இலகுவாக உள்ளது. 👍🏽

இது ஒருவகை மிளகுடன் சேர்ந்த புளிப்பு சுவை கொண்டது, காரம் குறைந்தது. நமது புட்டு, சோறுடன் சேராது. Brocoli, beans போன்ற அவித்த காய்கறிகளுடன் சாப்பிடவே நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுக் காரனுக்கும் பிடித்தமான ஒன்று அடிக்க டி செய்வார். பேரப்பிள்ளைகளுக்கும் கொடுப்பார்  . எனக்கு ஏனோ  டேஸ்ட் பிடிப்பதில்லை. 

 இதில் வளர்ப்பு மீனும் உண்டா சுகாதாரமானதா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெள்ளிக்கிழமை, மீன் சமைத்தீர்களா? 😮
அல்லது முன்பு சமைக்கும் போது.. எடுத்த காணொளியை இன்று பதிந்தீர்களா… 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிலாமதி said:

என் வீட்டுக் காரனுக்கும் பிடித்தமான ஒன்று அடிக்க டி செய்வார். பேரப்பிள்ளைகளுக்கும் கொடுப்பார்  . எனக்கு ஏனோ  டேஸ்ட் பிடிப்பதில்லை. 

 இதில் வளர்ப்பு மீனும் உண்டா சுகாதாரமானதா ? 

நான் வாங்குவது Atlantic Salman எனப்படும் வளர்ப்பு மீன் வகையை சேர்ந்தது (farm raised). இங்கு வளர்ப்பதாலும் , Costcoவில் வாங்குவதாலும் இதன் quality controlஇல் நம்பிக்கையுண்டு. கடலில் நேரடியாக பிடிக்கப்படும் Pacific Salmon என்பது இன்னும் விலை அதிகமானது. சமன் மீன் நமது வகை மீன் குழம்பு மற்றும் பொரியல்களுக்கும் கூட நன்றாக இருக்கும். முன்பு chinese கடைகளில் எல்லாவகை மீன்களும் வாங்குவதுண்டு, அவர்களின் வளர்ப்பு முறைகளை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு வாங்குவதை குறைத்து விட்டேன்.

24 minutes ago, தமிழ் சிறி said:

இன்று வெள்ளிக்கிழமை, மீன் சமைத்தீர்களா? 😮
அல்லது முன்பு சமைக்கும் போது.. எடுத்த காணொளியை இன்று பதிந்தீர்களா… 😁

இல்லை சிறி இது நேற்று சமைத்தது. வெள்ளிக்கிழமை சமைத்தால் மனைவி சாப்பிட மாட்டார்😁. முன்பு எடுத்த காணொளிகளும் உள்ளது, நான் special ஆக சமைப்பவற்றை உடனேயே போட்டோ/வீடியோ எடுத்து வைத்துவிடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும்  செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது  பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும்.
இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும்.  

spacer.png

spacer.png

செய்முறை கீழே உள்ளது:

Hospital items 😄👋..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

என் வீட்டுக் காரனுக்கும் பிடித்தமான ஒன்று அடிக்க டி செய்வார். பேரப்பிள்ளைகளுக்கும் கொடுப்பார்  . எனக்கு ஏனோ  டேஸ்ட் பிடிப்பதில்லை. 

நிலாமதி அக்கோய்….
தொட்டு தாலி கட்டிய புருசனை….
வீட்டுக்காரன் என்று சொல்லப் படாது,
வீட்டுக்காரர் என்று சொல்ல வேணும். 😜

Link to comment
Share on other sites

நான் கிழமையில் 2 தரமாவது உண்ணும் மீன் இது. ஒவ்வொரு கிழமையும் ஒரு நாளாவது சமன் மீன் Bake பண்ணி இரவுணவாக அதை மட்டுமே உண்ணுவது வழக்கம்.

இவ்வாறு ஒவ்வொரு கிழமையும்பிள்ளைகளுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடுவதற்கான காரணம் அதில் உள்ள நல்ல கொழுப்பும் (HDL) மற்றும் ஒமேகா 3 உம் உள்ளமையே. ஆனால் நீர்வேலியான் செய்யும் முறையில் பட்டரும், கிரீமும் (Fat 30 இல் இருந்து 36 வீதம்) சேர்ப்பதால் ஆரோக்கியத்துக்குரிய விடயங்கள் குறைந்து போகும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வேறு பொருட்கள் சேர்க்க விரும்பாதவர்கள் bake பண்ணியோ அல்லது BBQ போட்டும் சாப்பிடுவது உண்டு, என்ன இந்த முறையில் சுவை கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் உள்ளது. Low carb அல்லது keto முறையில் உண்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான ரெசிபி, தேவையான கொழுப்பும் கிடைக்கும்,  கொழுப்பு விரும்பாதவர்கள் சுவைக்காக சாஸ் ஐ குறைத்து போட்டுப்பார்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நீர்வேலியான் said:

இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி,

spacer.png

நான் ஒரு சமையல்காரன் என்ற முறையில்  உங்களுக்கு 100 புள்ளிகள் வழங்குகின்றேன். 
100 புள்ளிகளுக்கான காரணம் அடுத்த கருத்து பதிவில்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

spacer.png

நான் ஒரு சமையல்காரன் என்ற முறையில்  உங்களுக்கு 100 புள்ளிகள் வழங்குகின்றேன். 
100 புள்ளிகளுக்கான காரணம் அடுத்த கருத்து பதிவில்......

நன்றி அண்ணை, என்ன ஒரே சஸ்பென்ஸ் ஆ இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

நான் வாங்குவது Atlantic Salman எனப்படும் வளர்ப்பு மீன் வகையை சேர்ந்தது (farm raised). இங்கு வளர்ப்பதாலும் , Costcoவில் வாங்குவதாலும் இதன் quality controlஇல் நம்பிக்கையுண்டு. கடலில் நேரடியாக பிடிக்கப்படும் Pacific Salmon என்பது இன்னும் விலை அதிகமானது. சமன் மீன் நமது வகை மீன் குழம்பு மற்றும் பொரியல்களுக்கும் கூட நன்றாக இருக்கும். முன்பு chinese கடைகளில் எல்லாவகை மீன்களும் வாங்குவதுண்டு, அவர்களின் வளர்ப்பு முறைகளை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அங்கு வாங்குவதை குறைத்து விட்டேன்.

கடந்த மாதம் கொஸ்கோவில் விலை குறைத்து போட்டிருந்தார்கள்.

6-7 பைக்கற் எடுத்து வைத்து இப்ப தான் முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2022 at 02:22, நீர்வேலியான் said:

இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும்  செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது  பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும்.
இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும்.  

spacer.png

spacer.png

செய்முறை கீழே உள்ளது:

பகிர்ந்தமைக்கு நன்றி!!

நான் அடிக்கடி செய்யும் ஒரு recipe..broccoliniயுடன் சேர்த்து உண்பதுண்டு.. 

Thickened creamற்குள் herbs chili flakes போட்டு ஒரு தரம் கொதித்தவுடன் இறக்கி அதனை chicken brothற்கு பதிலாக பாவிப்பதுண்டு..

0-A516171-66-E0-40-C9-8-C4-D-3-A2-C2-DC0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.