Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. 

ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது.  

இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்த மைய நீரோட்ட அமைப்புக்களின் சிந்தனைப் போக்குக்கு மாற்றாக கொஞ்சமாவது மாற்றுச் சிந்தனையுடன் இயங்குபவர்களின் வட்டங்களை பௌஸர் போன்ற சிலர்தான் கொஞ்சம் கலகலப்பாக வைத்திருக்கின்றனர். 

IMG_2699.jpg?resize=640%2C480&ssl=1 பௌஸர் மஃறூப்

அதற்காக பௌஸர் எடுக்கும் முயற்சிகள் மிகச் சிரத்தையானவை. 

உண்மையில் மாற்றுச் சிந்தனையில் இயங்கும் பலர், அவர்களின் வாழ்க்கையில் பட்ட அடிகள் காரணமாக சோர்ந்துபோய் காணப்படுகின்றனர், அல்லது வயது போய் ஓய்வு நிலைக்கு வந்துள்ளனர். (அதற்காக நான் மைய நீரோட்டத்தில் செயற்படும் அமைப்புக்கள் எல்லாம் மிகவும் மும்முரமாக இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன, ஆக்கபூர்வமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று சொல்வதாக நீங்கள் கருதினால், அதற்கு நான் பொறுப்பல்ல.) அதுவும் கொரொனா தொற்றுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசம். 

கடந்த காலங்களில் இந்த கலகலப்புக்கும், சுவாரசியங்களுக்கும் பௌஸர் பல விடயங்களை செய்து வந்திருக்கிறார். தான் முரண்படும் விடயங்கள் குறித்து அலசக்கூட அவர் கூட்டங்களை ஏற்பாடு செய்வார். அவற்றுக்கு சோர்ந்துபோன மாற்றுச் சிந்தனையாளர் பெருமக்களை அழைக்க பெரும் சிரத்தையும் எடுத்துக்கொள்வார். தனித்தனியாக அழைப்பார்.  

IMG_2700.jpg?resize=356%2C267&ssl=1

இத்தகைய கூட்டங்களில் நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் கௌரவிப்புக்கள், இலக்கியச் சந்திப்புகள், அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள், இன இணக்கத்துக்கான கலந்துரையாடல்கள் என பலதும் பத்துமாக பௌஸரின் ஏற்பாடுகள் இருக்கும். ஆனால், நானும் கடந்த சுமார் 5 வருடங்கள் ஊருக்குப் போனது மற்றும் கொரொனா போன்றவற்றால் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்ளவில்லை. பௌஸரும் இந்தக் கூட்டங்களை இணையத்துக்கு மாற்றிவிட்டார். ஆனால், இணையத்தில் அவரால் செய்ய முடியாமல் போன ஒன்றுதான், இந்தத் தமிழ் புத்தகக் கண்காட்சி. அதனை அருமையாக நடத்தியிருக்கிறார், இங்கு லண்டன் மனோர் பார்க்கில் உள்ள ‘கேரளா இல்லத்தில்’ இந்த நிகழ்வு இனிதே நடந்தது. 

IMG_2703.jpg?resize=640%2C480&ssl=1

தான் செய்த காரியத்தை, அதன் முழுப்பலன் உரியவர்களுக்குக் கிடைக்க என்ன செய்ய தன்னால் முடியுமோ, அத்தனையையும் செய்திருக்கிறார். 

தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்துபோன காலமாக பொதுவில் பார்க்கப்படும் இந்த நாட்களில், சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவை தமிழ் வாசகர்களுக்கு கொஞ்சம் உற்சாகம் தருபவை. அதனைப் பின்பற்றி இலங்கையிலும் சில புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதுண்டு. அவை ஆரோக்கியமான விடயங்கள். ஆனால், அப்படியான ஒன்றை லண்டன் போன்ற புலம்பெயர் மண்ணில் நடத்துவதில் பல சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன. அதில் முதல் பிரச்சினை இப்படியானவற்றுக்கு ஆட்களை வரச்செய்வது. எத்தனை அழைப்பு விடுத்தாலும் “கேளா மடந்தைகள்” போல (நான் உட்பட) இருப்பது புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கான ஒரு குணாதிசயம். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நிலைமை அப்படித்தான் என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அதனை தவிர்க்க பௌஸர் செய்யும் முயற்சிகள் ஆக்கபூர்வமானவை. 

IMG_2702.jpg?resize=640%2C480&ssl=1

ஓரிரு நண்பர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, அவர்களையும் தன்னோடு சேர்த்து வருத்தி தனது முயற்சிகளை செய்வது வெளிப்படையாகவே தெரியும். 

அருமையான பல புத்தகங்களை, பல வகையான புத்தகங்களை, பல எழுத்தாளர்களின் தமிழ்ப் புத்தகங்களை அங்கு பார்த்தேன். இருக்கக்கூடிய சிறிய இடத்துக்குள் அவற்றை தானே எங்கும் ஓடி, ஓடி பௌஸர் அடுக்கி வைப்பதைப் பார்த்ததால் எனக்கும் கொஞ்சம் குற்ற உணர்வு வந்தது. நானும் இரண்டு புத்தகத்தை அடுக்கி வைத்தேன். 

IMG_2694.jpg?resize=640%2C480&ssl=1

இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து புத்தகங்களை லண்டன் கொணர்ந்து, விற்று பௌஸர் காசு பார்த்து வருகிறார் என்று யாரும் சொல்ல முயற்சித்தால், அது பெரும் புனைகதை. அப்படி ஒரு கதையை யாரும் எழுதினால், அதனையும் பௌஸர் அங்கு பார்வைக்கு, விற்பனைக்கு வைப்பார்.  

IMG_2688.jpg?resize=640%2C480&ssl=1

அடுத்தது, இது வெறும் புத்தகக்கண்காட்சி மாத்திரமல்ல. தமிழ்ப் புத்தகத்தைக் காதலிக்கச் செய்ய, அதனை நோக்கி ஆட்களை கவர, எழுத்தாளரை ஊக்குவிக்க என்னவெல்லாம் செய்யலாமோ, அத்தனையையும் சேர்த்துத்தான் இந்தக் கண்காட்சி. புத்தகக் காட்சிப்படுத்தல் மாத்திரமல்லாமல், எழுத்தாளர் விமர்சனம், கவிதை விமர்சனம், காலமாகிப்போன எழுத்தாளர்களை நினைவு கூரல் இப்படியாக பல நிகழ்வுகளும் அந்தச் சிறிய இடத்துக்குள் நடந்து முடிந்தன. அங்கு வரும் ஆட்கள் போதாது என்றோ அல்லது கொரொனா காரணங்களுக்காகவோ, அனைத்து நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி/ஒளி பரப்புச் செய்யப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், கமெரா முதல் அனைத்தையும் இயக்கி, ஒழுங்கு செய்வதும் அவர்தான்.  

IMG_2692.jpg?resize=361%2C271&ssl=1

“புத்தகக் கண்காட்சி என்பது வெறும் ஒரு நிகழ்வல்ல! அது பெரும் பண்பாட்டினதும் அறிவினதும் சேகரங்களை கொண்டு வந்து சேர்ப்பதும் மற்றவர்களுக்கு கையளிப்பதுமான அரசியல் கலை, இலக்கிய சமூக அறிவு நிகழ்வாகும்!”– இது பௌஸர் தனது நடவடிக்கைகள் மூலம் சொல்ல முயற்சிப்பது. அந்தக் கொள்கைக்கு எந்தவிதமான சமரசமும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். வாழ்த்துகள் தலை! 

IMG_2697.jpg?resize=640%2C480&ssl=1

நான் திருப்பவும் சொல்கிறேன், பௌஸரை அரசியல் ரீதியாக நம்புங்கள் என்று சொல்ல இதனை நான் எழுதவில்லை. ஆனால், அவர் முயற்சிகளை வெறுமனே கடந்து செல்ல முடியாது என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன். அத்தோடு. கிழக்கைச் சேர்ந்தவன் என்ற வகையில் (பிரதேசவாதம்?) ஒரு அம்பாறையானின் இந்த முயற்சியையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். 

IMG_2690.jpg?resize=640%2C480&ssl=1

நானும் ஒரு தவறு விட்டுவிட்டேன். கண்காட்சிக்கு முன்னதாக இதனை நான் எழுதியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இன்னும் நான்கு பேராவது கண்காட்சிக்கு மேலதிகமாக வந்திருப்பார்கள். வராதவர்கள் பௌஸரின் முகநூலில் அங்கு நடந்தவற்றின் பதிவுகளை பார்க்க முடியும். புத்தகங்கள் வாங்கும் நோக்கம் இருந்தால், அவரை 00447817262980 (வட்ஸ்ஸப்பும் உண்டு) இல் தொடர்புகொள்ளலாம். திட்டவும் முடியும். 

குறிப்பு: ஒரு குறையும் உண்டு. வழமையாக கூட்டங்களில் வைக்கும் வடை, தேநீர் வைக்கப்படவில்லை. இலவசமாக இல்லாவிட்டாலும், காசுக்காவது வைச்சிருக்கலாம். 2 மணிநேரம் கார் ஓட்டி வந்துபோகும் போது, பசி வந்திட்டுது. 

— அன்புடன் சீவகன் —

https://arangamnews.com/?p=7410

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன் ......என்னதான் கணனி வசதி இருந்தாலும் கையில் புத்தகத்தை ஏந்தி வாசிப்பதும் எழுந்து போகும்போது அதில்  அடையாளம் இட்டு செல்வதும் பின் மறந்துபோய் சில நாட்களின் பின் மீண்டும் எடுத்து வாசிப்பதும் தனி சுகம்தான். அந்த சுகத்தை இப்போதும் அனுபவிக்கிறவன் என்ற ரீதியில்........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போன வாரம் கனடா வன்கூவரில் வசிக்கும் நண்பன் ஒருவரின் பிறந்தநாளுக்கு 50 புத்தகங்கள் சர்ப்பரைஸாக  அனுப்பமுடியுமா என்று நண்பனின் மனைவி கேட்டார். பெளசருக்கு புத்தக லிஸ்டை அனுப்ப அடுத்த நாளே அவற்றைப் பெட்டிகளுக்குள் தேடி எடுக்க பலமணி நேரம் செலவழித்து அனுப்பியிருந்தார். நண்பருக்கு அவரது பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாகவே புத்தகப் பொதி கிடைத்தது😀

👇🏾

large.94E9FE68-D968-420F-982D-7E4A3347DF65.jpeg.14a072c281d7ed5b290a4d012cad51a6.jpeg

சரிநிகர் காலத்தில் இருந்து பெளசருடன் எனக்கு பழக்கம். ஆரம்பத்தில் அவர் ஈபிடிபி யிலும், பின் முஸ்லிம் காங்கிரசிலும் இருந்து பின் அவற்றில் இருந்து விலகியவர். இன்று ரிஷாட் பதியுதீன் இன் அரசியலை, அதாவுல்லாவின் அரசியலை மிகவும் விமர்சிப்பவராகவும் உள்ளார்.  

பெளசரின் அரசியலில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு இல்லை.  ஆனால் அன்றில் இருந்து இன்று வரைக்கும் அவரது இலக்கிய முயற்சிகளிலும், புத்தகங்களில் உள்ள அவரின் ஈடுபாடுகளிலும் எந்த சந்தேகமும் இல்லை. 

இவற்றுக்கு அப்பால், பழகுவதற்கும் இனிமையானவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2022 at 1:43 AM, கிருபன் said:

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. 

ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது.  

இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்த மைய நீரோட்ட அமைப்புக்களின் சிந்தனைப் போக்குக்கு மாற்றாக கொஞ்சமாவது மாற்றுச் சிந்தனையுடன் இயங்குபவர்களின் வட்டங்களை பௌஸர் போன்ற சிலர்தான் கொஞ்சம் கலகலப்பாக வைத்திருக்கின்றனர். 

IMG_2699.jpg?resize=640%2C480&ssl=1 பௌஸர் மஃறூப்

அதற்காக பௌஸர் எடுக்கும் முயற்சிகள் மிகச் சிரத்தையானவை. 

உண்மையில் மாற்றுச் சிந்தனையில் இயங்கும் பலர், அவர்களின் வாழ்க்கையில் பட்ட அடிகள் காரணமாக சோர்ந்துபோய் காணப்படுகின்றனர், அல்லது வயது போய் ஓய்வு நிலைக்கு வந்துள்ளனர். (அதற்காக நான் மைய நீரோட்டத்தில் செயற்படும் அமைப்புக்கள் எல்லாம் மிகவும் மும்முரமாக இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன, ஆக்கபூர்வமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று சொல்வதாக நீங்கள் கருதினால், அதற்கு நான் பொறுப்பல்ல.) அதுவும் கொரொனா தொற்றுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசம். 

கடந்த காலங்களில் இந்த கலகலப்புக்கும், சுவாரசியங்களுக்கும் பௌஸர் பல விடயங்களை செய்து வந்திருக்கிறார். தான் முரண்படும் விடயங்கள் குறித்து அலசக்கூட அவர் கூட்டங்களை ஏற்பாடு செய்வார். அவற்றுக்கு சோர்ந்துபோன மாற்றுச் சிந்தனையாளர் பெருமக்களை அழைக்க பெரும் சிரத்தையும் எடுத்துக்கொள்வார். தனித்தனியாக அழைப்பார்.  

IMG_2700.jpg?resize=356%2C267&ssl=1

இத்தகைய கூட்டங்களில் நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் கௌரவிப்புக்கள், இலக்கியச் சந்திப்புகள், அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள், இன இணக்கத்துக்கான கலந்துரையாடல்கள் என பலதும் பத்துமாக பௌஸரின் ஏற்பாடுகள் இருக்கும். ஆனால், நானும் கடந்த சுமார் 5 வருடங்கள் ஊருக்குப் போனது மற்றும் கொரொனா போன்றவற்றால் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்ளவில்லை. பௌஸரும் இந்தக் கூட்டங்களை இணையத்துக்கு மாற்றிவிட்டார். ஆனால், இணையத்தில் அவரால் செய்ய முடியாமல் போன ஒன்றுதான், இந்தத் தமிழ் புத்தகக் கண்காட்சி. அதனை அருமையாக நடத்தியிருக்கிறார், இங்கு லண்டன் மனோர் பார்க்கில் உள்ள ‘கேரளா இல்லத்தில்’ இந்த நிகழ்வு இனிதே நடந்தது. 

IMG_2703.jpg?resize=640%2C480&ssl=1

தான் செய்த காரியத்தை, அதன் முழுப்பலன் உரியவர்களுக்குக் கிடைக்க என்ன செய்ய தன்னால் முடியுமோ, அத்தனையையும் செய்திருக்கிறார். 

தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்துபோன காலமாக பொதுவில் பார்க்கப்படும் இந்த நாட்களில், சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவை தமிழ் வாசகர்களுக்கு கொஞ்சம் உற்சாகம் தருபவை. அதனைப் பின்பற்றி இலங்கையிலும் சில புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதுண்டு. அவை ஆரோக்கியமான விடயங்கள். ஆனால், அப்படியான ஒன்றை லண்டன் போன்ற புலம்பெயர் மண்ணில் நடத்துவதில் பல சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன. அதில் முதல் பிரச்சினை இப்படியானவற்றுக்கு ஆட்களை வரச்செய்வது. எத்தனை அழைப்பு விடுத்தாலும் “கேளா மடந்தைகள்” போல (நான் உட்பட) இருப்பது புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கான ஒரு குணாதிசயம். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நிலைமை அப்படித்தான் என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அதனை தவிர்க்க பௌஸர் செய்யும் முயற்சிகள் ஆக்கபூர்வமானவை. 

IMG_2702.jpg?resize=640%2C480&ssl=1

ஓரிரு நண்பர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, அவர்களையும் தன்னோடு சேர்த்து வருத்தி தனது முயற்சிகளை செய்வது வெளிப்படையாகவே தெரியும். 

அருமையான பல புத்தகங்களை, பல வகையான புத்தகங்களை, பல எழுத்தாளர்களின் தமிழ்ப் புத்தகங்களை அங்கு பார்த்தேன். இருக்கக்கூடிய சிறிய இடத்துக்குள் அவற்றை தானே எங்கும் ஓடி, ஓடி பௌஸர் அடுக்கி வைப்பதைப் பார்த்ததால் எனக்கும் கொஞ்சம் குற்ற உணர்வு வந்தது. நானும் இரண்டு புத்தகத்தை அடுக்கி வைத்தேன். 

IMG_2694.jpg?resize=640%2C480&ssl=1

இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து புத்தகங்களை லண்டன் கொணர்ந்து, விற்று பௌஸர் காசு பார்த்து வருகிறார் என்று யாரும் சொல்ல முயற்சித்தால், அது பெரும் புனைகதை. அப்படி ஒரு கதையை யாரும் எழுதினால், அதனையும் பௌஸர் அங்கு பார்வைக்கு, விற்பனைக்கு வைப்பார்.  

IMG_2688.jpg?resize=640%2C480&ssl=1

அடுத்தது, இது வெறும் புத்தகக்கண்காட்சி மாத்திரமல்ல. தமிழ்ப் புத்தகத்தைக் காதலிக்கச் செய்ய, அதனை நோக்கி ஆட்களை கவர, எழுத்தாளரை ஊக்குவிக்க என்னவெல்லாம் செய்யலாமோ, அத்தனையையும் சேர்த்துத்தான் இந்தக் கண்காட்சி. புத்தகக் காட்சிப்படுத்தல் மாத்திரமல்லாமல், எழுத்தாளர் விமர்சனம், கவிதை விமர்சனம், காலமாகிப்போன எழுத்தாளர்களை நினைவு கூரல் இப்படியாக பல நிகழ்வுகளும் அந்தச் சிறிய இடத்துக்குள் நடந்து முடிந்தன. அங்கு வரும் ஆட்கள் போதாது என்றோ அல்லது கொரொனா காரணங்களுக்காகவோ, அனைத்து நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி/ஒளி பரப்புச் செய்யப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், கமெரா முதல் அனைத்தையும் இயக்கி, ஒழுங்கு செய்வதும் அவர்தான்.  

IMG_2692.jpg?resize=361%2C271&ssl=1

“புத்தகக் கண்காட்சி என்பது வெறும் ஒரு நிகழ்வல்ல! அது பெரும் பண்பாட்டினதும் அறிவினதும் சேகரங்களை கொண்டு வந்து சேர்ப்பதும் மற்றவர்களுக்கு கையளிப்பதுமான அரசியல் கலை, இலக்கிய சமூக அறிவு நிகழ்வாகும்!”– இது பௌஸர் தனது நடவடிக்கைகள் மூலம் சொல்ல முயற்சிப்பது. அந்தக் கொள்கைக்கு எந்தவிதமான சமரசமும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். வாழ்த்துகள் தலை! 

IMG_2697.jpg?resize=640%2C480&ssl=1

நான் திருப்பவும் சொல்கிறேன், பௌஸரை அரசியல் ரீதியாக நம்புங்கள் என்று சொல்ல இதனை நான் எழுதவில்லை. ஆனால், அவர் முயற்சிகளை வெறுமனே கடந்து செல்ல முடியாது என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன். அத்தோடு. கிழக்கைச் சேர்ந்தவன் என்ற வகையில் (பிரதேசவாதம்?) ஒரு அம்பாறையானின் இந்த முயற்சியையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். 

IMG_2690.jpg?resize=640%2C480&ssl=1

நானும் ஒரு தவறு விட்டுவிட்டேன். கண்காட்சிக்கு முன்னதாக இதனை நான் எழுதியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இன்னும் நான்கு பேராவது கண்காட்சிக்கு மேலதிகமாக வந்திருப்பார்கள். வராதவர்கள் பௌஸரின் முகநூலில் அங்கு நடந்தவற்றின் பதிவுகளை பார்க்க முடியும். புத்தகங்கள் வாங்கும் நோக்கம் இருந்தால், அவரை 00447817262980 (வட்ஸ்ஸப்பும் உண்டு) இல் தொடர்புகொள்ளலாம். திட்டவும் முடியும். 

குறிப்பு: ஒரு குறையும் உண்டு. வழமையாக கூட்டங்களில் வைக்கும் வடை, தேநீர் வைக்கப்படவில்லை. இலவசமாக இல்லாவிட்டாலும், காசுக்காவது வைச்சிருக்கலாம். 2 மணிநேரம் கார் ஓட்டி வந்துபோகும் போது, பசி வந்திட்டுது. 

— அன்புடன் சீவகன் —

https://arangamnews.com/?p=7410

பசிர்வுக்கு நன்றியண்:ணா..👋

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அழியாமல் பாதுகாப்பதில் முசுலீம்களின் பங்கு அளப்பரியது. இதனைத் தமிழாராச்சி மகாநாடுகளில் காணவும், அறியவும் முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

போன வாரம் கனடா வன்கூவரில் வசிக்கும் நண்பன் ஒருவரின் பிறந்தநாளுக்கு 50 புத்தகங்கள் சர்ப்பரைஸாக  அனுப்பமுடியுமா என்று நண்பனின் மனைவி கேட்டார். பெளசருக்கு புத்தக லிஸ்டை அனுப்ப அடுத்த நாளே அவற்றைப் பெட்டிகளுக்குள் தேடி எடுக்க பலமணி நேரம் செலவழித்து அனுப்பியிருந்தார். நண்பருக்கு அவரது பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாகவே புத்தகப் பொதி கிடைத்தது😀

👇🏾

large.94E9FE68-D968-420F-982D-7E4A3347DF65.jpeg.14a072c281d7ed5b290a4d012cad51a6.jpeg

உங்கட ஐம்பதாவது பிறந்த நாள் எப்ப சார்😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

உங்கட ஐம்பதாவது பிறந்த நாள் எப்ப சார்😎

என்றும் மார்க்கண்டேயன்😃 என்பதால் இந்தக் கேள்வி செல்லாது😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

என்றும் மார்க்கண்டேயன்😃 என்பதால் இந்தக் கேள்வி செல்லாது😜

அவர் உங்கட நண்பர் அவருக்கு 50 வது பிறந்த தினம் இந்த வருடம் என்றால் , உங்களுக்கும் இந்த வருசம் தானே tw_lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அவர் உங்கட நண்பர் அவருக்கு 50 வது பிறந்த தினம் இந்த வருடம் என்றால் , உங்களுக்கும் இந்த வருசம் தானே tw_lol:

எல்லா வயதிலும் நண்பர்கள் இருக்கின்றார்கள். வயசு கூடியவர்களுடன் பழகித்தான் “பிஞ்சில் பழுத்தது” என்று அஞ்சாம் வகுப்பு வாத்தியாரே அடிபோட்டவர்🙁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எல்லா வயதிலும் நண்பர்கள் இருக்கின்றார்கள். வயசு கூடியவர்களுடன் பழகித்தான் “பிஞ்சில் பழுத்தது” என்று அஞ்சாம் வகுப்பு வாத்தியாரே அடிபோட்டவர்🙁

நம்பிட்டன் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

தமிழ் அழியாமல் பாதுகாப்பதில் முசுலீம்களின் பங்கு அளப்பரியது. இதனைத் தமிழாராச்சி மகாநாடுகளில் காணவும், அறியவும் முடிந்தது.

இலங்கையில் அல்ல..

39 minutes ago, alvayan said:

இலங்கையில் அல்ல..

இலங்கையில் நவீன தமிழ் இலக்கியத்தில் முஸ்லீம்களின் பங்கு காத்திரமானது. முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அவர்களின் பங்களிப்பு அதிகம். சிறு பத்திரிகை, மொழிபெயர்ப்பு நாவல்கள் என்று பங்களிப்புகள் தொடர்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அப்ப..நாங்கவேறு..நீங்க  வேறு ..என்பது இப்ப மோசமாக இருக்கே..இது..

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 23:38, alvayan said:
On 6/4/2022 at 22:07, நிழலி said:

இலங்கையில் நவீன தமிழ் இலக்கியத்தில் முஸ்லீம்களின் பங்கு காத்திரமானது. முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அவர்களின் பங்களிப்பு அதிகம். சிறு பத்திரிகை, மொழிபெயர்ப்பு நாவல்கள் என்று பங்களிப்புகள் தொடர்கின்றன.

அப்ப..நாங்கவேறு..நீங்க  வேறு ..என்பது இப்ப மோசமாக இருக்கே..இது..

எப்படி சிங்கள பௌத்த தேசியவாதம் இனவாதிகளால் ஊட்டப்படுகிறதோ, அதேபோன்று முசுலிம் மதவாதிகளால் ஊட்டப்படும் மதவெறி மற்றும் சிங்களத்தின் எடுபிடிகளான முசுலிம் அரசியல்வாதிகளின் தூண்டுதல் எனப் பல்வகையான உருவேற்றல்களும், தமிழ் அரசியல்வாதிகளின் தொலைநோக்கற்ற செயற்பாடும் , கருத்தாடல்களை, கலந்துரையாடல்களை தொடர்சசியாக நிகழ்த்திப் புரிந்துணர்வை வளர்க்காமை போன்றனவும் கூட முசுலிம்களின் முரண்பாட்டு மனப்போக்கிற்குக் கரணியமாக இருக்கலாம். இவைகள் எதிர்காலத்திலாவது களையப்படுதல் அவசியம் என்பதை இருதரப்பும் புரிந்துகொண்டு செயற்படாவிடின் அழிவைத்தவிர வேறெதையும் அடையமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.