Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும் - ப.சிதம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும்

ப.சிதம்பரம்

spacer.png

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் இந்தப் போரால் மனதளவில் மிகவும் துயரம் அடைந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது போர் தொடங்கி முப்பது நாள்களைக் கடந்திருக்கும். உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என கவனிக்கத் தொடங்கியபோது, போப்பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் (நல்ல போப்பாண்டவர்) கூறிய ஆறு வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்தன: ‘இனி போரே கூடாது - வேண்டாம் இனி போர்!’

அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட உலகில் போர்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன – பெரியது, சிறியது; குறுகிய காலத்தது, நீண்ட காலத்தது; சொந்த மண்ணில் நிகழ்ந்தது, எல்லைகளில் நிகழ்ந்தது, தொலைதூர நாட்டில் நிகழ்ந்தது, வேறொருவருக்காக நடத்தப்பட்டது என அவை பலதரப்பட்டவை.

இருபதாவது, இருபத்தொன்றாவது நூற்றாண்டுகளில் நிகழ்ந்த போர்களில் இருந்து அறியப்படும் நிரந்தரமான உண்மை என்னவென்றால் - இந்தப் போர்களுக்குப் பிறகு வாகை சூடியவர் என எவரையுமே கூற முடிவதில்லை. நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு போர்கள் எந்த தீர்வையும் அளிப்பதில்லை.

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட 1971 போரில் இந்தியா திட்டவட்டமான வெற்றியைப் பெற்றிருந்தபோதிலும், பிரதேசம் தொடர்பான பூசல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிரந்தரமாக நீடிக்கின்றன. இரண்டு பெரிய வல்லரசுகள் ஆப்கானிஸ்தானை விடுவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் தங்களுடைய மாபெரும் படைகளுடன் போரிட்டபோதும், தாலிபான்களின் வலுவான கட்டுப்பாட்டிலேயே ஆப்கானிஸ்தான் தொடர்கிறது.

கரிச்சட்டியும் கரி பிடித்த அண்டாவும்

கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த ஆட்சியை முப்பதாண்டுகளுக்கு முன்னால் ரஷ்யா தூக்கி எறிந்துவிட்டது எனக் கருதப்படும் நிலையிலும், சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உலக நாடுகளால் மிகவும் அஞ்சப்பட்ட கேஜிபி என்கிற ரஷ்ய உளவு அமைப்பில் மூத்த அதிகாரியாக இருந்த விளாதிமீர் புடின்தான் இப்போது ரஷ்ய அதிபராகப் பதவி வகிக்கிறார்.

2000-வது ஆண்டு மே மாதம் அதிபராகப் பதவிக்கு வந்த புடின் இப்போதுவரை முழு அதிகாரத்துடன் நாட்டை நிர்வகிக்கிறார். புடினின் ஆட்சிக் காலத்தில்தான் கிரைமியாவைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது ரஷ்யா. உக்ரைனின் டோன்பாஸ் பிரதேசத்தில் ரஷ்ய இன மக்கள் பெரும்பான்மையினராக (அதிக எண்ணிக்கையில்) வசிக்கும் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகளைத் ‘தன்னாட்சி பெற்ற குடியரசுகள்’ ஆக அங்கீகரித்திருக்கிறார். ஜார்ஜியா நாட்டிலிருந்து அப்காசியா, தெற்கு ஆசேஷியா பிரதேசங்களையும் இப்படி ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு நிகழ்ந்தும் உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உலகம் தயாராக இருக்கவில்லை.

கடந்த இருபதாண்டுகளில் ரஷ்யா செய்துவரும் இது போன்ற ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற்கத்திய நாடுகள் – அதிலும் குறிப்பாக அமெரிக்கா – இருபதாவது நூற்றாண்டில் செய்துள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

பிற நாடுகளின் ஆட்சியாளர்களை மாற்றுவது என்பது அமெரிக்க அதிபர்களுக்கு பொழுபோக்காகவே இருந்தன. ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டுவது, திடீர் ராணுவப் புரட்சிகளுக்குத் தூபம்போடுவது, அரசியல் படுகொலைகளுக்கு சதித் திட்டமிடுவது, தங்களுடைய கைப்பாவைகளைத் தலைவர்களாக, பிற நாடுகளின் தலைமைப் பதவிக்கு நியமிப்பது, பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் என்கிற தண்டனைகளை விதிப்பது என இவை எதையுமே அமெரிக்கா விட்டுவைத்ததில்லை. மிகவும் கண்டிக்கத்தக்க – எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாத – போரை வியட்நாமில் நடத்தியது அமெரிக்கா. மக்களைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லக்கூடிய பயங்கர ஆயுதங்களைத் தயாரித்து மறைத்து வைத்திருக்கிறார் அதிபர் சதாம் உசைன் என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில், இராக் மீது 2003இல் படையெடுத்தது.

காரணம் உண்மையான காரணமல்ல

உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருப்பது இதயங்களைப் பிழிந்தெடுக்கக்கூடிய சோகம். ரஷ்யா – உக்ரைன் போருக்கு மூல காரணம் எது என ஆராய்ந்தால், ஓரளவுக்கு அது அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகளின் ராணுவக் கூட்டை இடைவிடாமல் விரிவுபடுத்தும் நிகழ்வுதான் என்பது புலனாகும்.

அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான ‘பனிப் போர்’ ஓய்ந்த பிறகு, மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்ட ஜெர்மனியானது, மேற்கு ஜெர்மனி நேட்டோவில் முன்னர் வகித்த இடத்தைப் பெற்றது. அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் பேக்கர், நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு இனி ஜெர்மனியைத் தாண்டி ஓர் அங்குலம்கூட நகராது (மேற்கொண்டு நாடுகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது) என்று ரஷ்யாவுக்கு வாக்குறுதி தந்தார். ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி 5,439 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், 1999 முதல் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பானது 14 நாடுகளைப் புதிய உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொண்டுள்ளது. ஜார்ஜியாவும் உக்ரைனும் - 30 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட - நேட்டோ அமைப்பின் பக்கம் சாயத் தயாரானபோது, அந்த அமைப்பும் சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. இதை அடுத்தே ரஷ்யா சிவப்புக் கோடுகளைக் கிழித்தது.

ஜார்ஜியாவும் உக்ரைனும் நேட்டோவில் சேர்ந்துவிட்டால், ரஷ்யா தன்னுடைய எல்லையில் இருந்து நேராக நேட்டோ முகத்தில்தான் விழிக்க வேண்டியிருக்கும். ஜெர்மனிக்கு அப்பால் ஓர் அங்குலம்கூட நகர மாட்டோம் என வாக்குறுதி தந்த நேட்டோ, இதற்குப் பிறகு ரஷ்யாவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளிதான் என்ற அளவுக்கு அண்மையில் வந்துவிடும்.

தன்னுடைய நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து நெருங்குகிறது எனும் ரஷ்யாவின் அச்சம் நியாயமானது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நம்பகமான வாக்குறுதிகளை அமெரிக்காவோ பிற நேட்டோ நாடுகளோ அளிக்கவில்லை. அதேவேளையில், ரஷ்யா உடனடியாக அச்சப்படுகிற வகையில் எந்த நாடும் ரஷ்யா கிழித்த சிவப்பு எல்லைக் கோட்டைத் தாண்டவும் இல்லை.

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரைமியாவையும், ஜார்ஜியாவின் இரு பிரதேசங்களையும் ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டதை அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும், வாய் திறந்து ஏதும் பேசாமல் மவுனமாக ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக திடீரென போர்க்கோலம் பூண்டு நாசகரமான தாக்குதலைத் தொடங்க ரஷ்யாவுக்கு வலுவான காரணம் ஏதும் இல்லை.

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தும் தாக்குதல்களால் இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்களும் உயிரிழப்புகளும் மிகவும் மோசமானவை. 440 லட்சம் (4.4 கோடி) மக்கள்தொகைக் கொண்ட உக்ரைனிலிருந்து இதுவரை 350 லட்சம் மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறிவிட்டனர். 65 லட்சம் பேர் (இவர்களில் சரிபாதி குழந்தைகள்) தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறி நாட்டுக்குள்ளேயே பிற இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நகரங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. மரியபோல் என்கிற துறைமுக நகரம் ஏவுகணைகளாலும் பீரங்கி குண்டுகளாலும் விமானங்கள் மூலமான குண்டுவீச்சுகளாலும் வெறும் கட்டிட இடிபாடுகளாலான குவியலாக்கப்பட்டுவிட்டது.

லட்சக்கணக்கானவர்கள் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, காயங்களுக்கும் நோய்களுக்கும் தகுந்த மருந்து – மாத்திரைகள் இன்றி நிர்கதியாக விடப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான உக்ரைன்கள் இதுவரை கொல்லப்பட்டுவிட்டனர். அப்படியிருந்தும் உக்ரைனிய அதிபர் விளாடிமீர் செலன்ஸ்கியும், குடிமக்களும் ரஷ்யா விரும்புகிறபடி அதன் ராணுவத்திடம் சரண் அடையத் தயாராக இல்லை. இந்தப் போர் என்றைக்கு முடிவடைந்தாலும் அதில் யாரும் வெற்றியாளராக இருக்கப்போவதில்லை.

வெற்றி பெற்ற நாடாக ரஷ்யா நிச்சயம் இருக்கப்போவதில்லை. உக்ரைனை அதனால் தன்னுடன் சேர்த்துக்கொண்டுவிட முடியாது. அதற்கு மாறாக, தனது எல்லைக்குப் பக்கத்திலேயே நிரந்தரமான ஒரு பகை நாட்டை அது பெற்றுவிடும். ஆயிரக்கணக்கான இளம் ரஷ்ய வீரர்கள், கோடிக்கணக்கான ரூபிள்கள் மதிப்புள்ள ராணுவ சாதனங்களையும் ஆயுதங்களையும் அது இழந்துவிடும். திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் ரஷ்யாவிலிருந்து பிழைப்பு தேடி வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். அதனுடைய பொருளாதாரம் முடங்கிவிடும். உலக அரங்கில் இனி ரஷ்யாவுக்குப் பாதுகாப்போ மரியாதையோ இருக்காது.

குன்றிவிட்ட இந்தியா

ஓர் இந்தியனாக கையறு நிலையில் இருக்கிறேன். இந்திய அரசின் கொள்கை இந்தப் போர் தொடர்பாக எப்படிப்பட்டது என்று ஏதும் தெளிவுபடாமல் இருக்கிறது. இந்தப் போரை யாரும் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இது தொடர்பாக ஆறு கொள்கைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இருந்தாலும் இந்தப் போரை நியாயப்படுத்தவே முடியாது என்று ஏன் வெளிப்படையாக இந்தியா அறிவிக்கவில்லை?

உக்ரைன் மக்கள் மீதும், வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்காதீர்கள் என்று இந்தியா ஏன் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுக்கக் கூடாது? இஸ்ரேலியப் பிரதமர் துணிச்சலாக மேற்கொண்டதைப் போல - இந்திய பிரதமரும் ஏன் மாஸ்கோவுக்கும் கீவ் நகருக்கும் நேரில் பயணித்து போரை நிறுத்த சமரச முயற்சிகளில் ஈடுபடக் கூடாது? எந்தவித சமாதான முயற்சியும் மேற்கொள்ள முடியாமல் இந்தியாவை மலடாக்கிவிட்டது எது?

இந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆய்வுக்கான கட்டுரை அல்ல இது. தெளிவு மிக்க சில அரசியல் பார்வையாளர்களுடன் பேசிய பிறகு எனக்குத் தோன்றிய சிந்தனையே இது. தார்மிகரீதியில் நியாயப்படுத்தவே முடியாத ஒரு நிகழ்வின்போது மவுனம் சாதிப்பதும், சர்வதேச அரங்கில் போரை நிறுத்தக் கோரும் அல்லது கண்டிக்கும் தீர்மானங்களில் பங்கேற்று வாக்களிக்கப் போகாமலேயே இருப்பதும் இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் சரித்துவிட்டது.

https://www.arunchol.com/p-chidambaram-on-ukraine-war

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ப.சிதம்பரம் முன்ஜாமின்: அவசர விசாரணைக்கு மறுத்த உச்ச நீதிமன்றம் - BBC News  தமிழ்

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய  தினம் இன்று ! - oredesam

ஈழப் போர் உக்கிரமாக  நடந்த போது.... 
அப்போதைய... தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,
ஈழப் போரை நிறுத்தச்  சொல்லி... உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போது... இந்த ப. சிதம்பரம், காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தவர்.
அவர் முள்ளிவாய்க்காலில்... குண்டுகள்  விழுந்து கொண்டு இருக்க, 
ஈழத்தில்... போர் நின்று விட்டது, 
என்று கருணாநிதிக்கு, தவறான தகவலை சொல்லி.... 
மூன்று மணித்தியாலத்தில்... உண்ணா விரதத்தை, முடிவுக்கு கொண்டு வந்தவர்.

ப. சிதம்பரம் போர் முடிவுக்கு வந்தது என்று சொல்லிய பின்... 
80´000 ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டார்கள்.

உன்னுடைய... இனத்தவன், பல ஆயிரக் கணக்கில் இறக்கும் போது...வராத கவலை, 
உக்ரைனில் வெறும் ஆயிரம் மக்கள் மட்டுமே.. 
30 நாளில் இறக்கும் போது,  வருகின்றது என்றால்....   என்ன அர்த்தம்?  😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ரஷ்யா தன்னுடைய எல்லையில் இருந்து நேராக நேட்டோ முகத்தில்தான் விழிக்க வேண்டியிருக்கும். ஜெர்மனிக்கு அப்பால் ஓர் அங்குலம்கூட நகர மாட்டோம் என வாக்குறுதி தந்த நேட்டோ, இதற்குப் பிறகு ரஷ்யாவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளிதான் என்ற அளவுக்கு அண்மையில் வந்துவிடும்.

மேற்குலநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் இப்படி சொல்கிறார்கள் என்றால் இந்திய தமிழருமா?
ரஞ்சித்தின் மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் - விஷமப் பிரச்சாரம் 6 ல் விளக்கம் உள்ளது.

 உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1)

விளக்கம் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் ஒரே ரத்தங்கள் கொன்றழிக்கப்பட்டபோது இந்த வா(நா)ய் எங்கே பல்லிழிச்சு பதவிக்கு வாலாட்டிக்கொண்டிருந்தது???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

பக்கத்தில் ஒரே ரத்தங்கள் கொன்றழிக்கப்பட்டபோது இந்த வா(நா)ய் எங்கே பல்லிழிச்சு பதவிக்கு வாலாட்டிக்கொண்டிருந்தது???

ஏன் அந்தளவுக்கு போவான்.. ஈழத்தமிழர்கள் ஹிந்தியாவின் எதிரிகளுன்னே இருக்கட்டும்.

ஆனால்.. உக்ரைனிற்கு படிக்கப் போன ஹிந்தியர்களை.. ரஷ்சியா தான் பாதுகாப்பாக வெளியேற்ற உதவியது. உக்ரைன்காரங்கள் நிறவெறியோடு நடந்து கொண்டதை எல்லாம் எப்படி இவ்வளவு இலகுவாக மறக்கிறாய்ங்களோ..!!

Foreign citizens of colour, mainly students from Africa and Asia, have faced discrimination and violence as they’ve attempted to flee Ukraine.

https://www.theguardian.com/world/2022/mar/03/sumy-more-than-500-international-students-trapped-in-ukrainian-town-battered-by-shelling

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, விசுகு said:

பக்கத்தில் ஒரே ரத்தங்கள் கொன்றழிக்கப்பட்டபோது இந்த வா(நா)ய் எங்கே பல்லிழிச்சு பதவிக்கு வாலாட்டிக்கொண்டிருந்தது???

ஈழமக்கள் அழிவின் போது நித்திரை போல் நடித்ததுகள் எல்லாம் இப்ப உக்ரேனுக்கு சாட்சி சொல்லுதுகள்.
எல்லாம் காலத்தின் கோலம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருப்பது இதயங்களைப் பிழிந்தெடுக்கக்கூடிய சோகம். ரஷ்யா – உக்ரைன் போருக்கு மூல காரணம் எது என ஆராய்ந்தால், ஓரளவுக்கு அது அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகளின் ராணுவக் கூட்டை இடைவிடாமல் விரிவுபடுத்தும் நிகழ்வுதான் என்பது புலனாகும்.

காரணம் எதுவாக இருந்தாலும் போரை நிறுத்த்துவதற்கு நேட்டோ தயாராக இல்லை

என் வீட்டு வாசலில்  எந்த எதிரி வந்தாலும் நான் கவனமாகவே இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, வாத்தியார் said:

காரணம் எதுவாக இருந்தாலும் போரை நிறுத்த்துவதற்கு நேட்டோ தயாராக இல்லை

என் வீட்டு வாசலில்  எந்த எதிரி வந்தாலும் நான் கவனமாகவே இருக்க வேண்டும்

பெயருக்குத்தான் அது நேட்டோ. மற்றும் படி பல கூலிகள்  சேர்ந்த அமெரிக்க படை.

ஐரோப்பிய யூனியனின் ராணுவப்படை தொடங்கினால் நேட்டோவின் கதை கந்தல். எனவே நேட்டோவை தக்க வைக்க அமெரிக்க எதையும் செய்யும். நேட்டோ இல்லையேல் அமெரிக்காவின் செல்வாக்கு ஐரோப்பாவில் குறையத்தொடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் இப்படி சொல்கிறார்கள் என்றால் இந்திய தமிழருமா?
ரஞ்சித்தின் மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் - விஷமப் பிரச்சாரம் 6 ல் விளக்கம் உள்ளது.

 உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1)

விளக்கம் உள்ளது

இலங்கைத் தமிழர் பலர் கூறியும் நம்பாத நீங்கள், இந்தியத் தமிழரும் கூறுகின்ற காரணத்தால், கொஞ்சம் விசாலமாக உண்மையைத் தேடித்தான் பாருங்களேன் (உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல்). உண்மை புரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.