Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

முள்ளிவாய்க்காலும்  உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
-------------------------
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்
பாடுகள் ஒன்றானபோதும்
கோடுகள் வெவ்வேறானது!
முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட
அனைத்துலகும் ஒன்றாய் நின்றது
நன்றாய் அள்ளியும் கொடுத்தது!
உக்கிரேனென்றதும்
உலகம் மூன்றாய் நான்காய்
முகம் காட்டி நடக்கிறது!
எல்லா உயிர்களும் 
ஒன்றெனச் சொல்கிறோம்
பதின்மூன்று ஆண்டுகள் முன்
இவர்கள் எங்கே போயினர்
பனியாய் உறைந்து போயா கிடந்தனர்!
மேற்கின் தெருவெங்கும்
கெஞ்சியும் அழுதும் 
யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் 
அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க 
அனைத்துலகின் படிகளில் நின்றோம்
ஆனாலும் நடந்தது என்ன
வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?)
கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர்
கொலைக்கான அறிவும் கொடுத்தனர்
கொலைக்கான வேவும் சொன்னார்கள்
கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே
கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே 
மேற்கின் கூலிகள் வழி காட்டின  
எல்லாம் எம்மினக் கொலைக்காகவே!
பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும்
ஐரோப்பிய ஒன்றியமும்
நேட்டோ கூட்டணியும் 
ஜீ ஏழு நாடுகள் குழுவும்
உக்கிரேனென்றதும் உடனே கூடுது
ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே 
கண்டனம் செய்தே தடைகளை போட்டன!
மனித உயிர்கள் ஒன்றெனும் 
அதனை மதித்து நடத்தல் 
அரசுகளின் கடனென்றும் 
அடிக்கடி கூறிடும் ஐநாவே
பதின்மூன்றாண்டின் முன்
எங்கேபோனது உன் சமன்பாடு!
முள்ளிவாய்க்காலில் 
உன் முகம் இழந்து போனாயே!
உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று
எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே
என்ற உணர்விலே வாழும் தமிழனோ
பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன்
பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன்
இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர்
காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது
இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால்
எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம்
எங்கே ஒருமுறை சிந்திப்பீரா
எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா?

அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Edited by நிழலி
நொச்சி கேட்டதுக்கு இணங்க தலைப்பு மாற்றம்
  • Like 7
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

“முள்ளிவாய்க்காலும், உக்ரேனும்” சமன்பாடு, ஒப்பீட்டை…
மிக அழகாக உங்கள் கவிதையில் கொண்டு வந்தீர்கள், நொச்சி. 👍🏽

மேற்குலகு தான்…, முள்ளிவாய்க்காலை ஓர வஞ்சனையுடன் அணுகியது என்றால்…
நம்மவர் சிலரும்… வெள்ளைத் தோல் மோகத்தில்,
உக்ரைனை… முள்ளி வாய்க்காலுடன் ஒப்பிட்டு…
கண்ணீர் வடிக்கும், அறியாமையை… என்ன வென்று சொல்வது.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nochchi said:

இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால்
எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம்
எங்கே ஒருமுறை சிந்திப்பீரா
எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா?

இதே சிந்தனை தான் எனக்கும்.

நன்றி நொச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nochchi said:

இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர்

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

நன்றி. 

  • Like 1
Posted
7 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

நன்றி. 

பிரபா,

எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா?

எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? 

மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நிழலி said:

எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா?

நீங்கள் யாரிடம் கேட்கலாம் என நினைக்கிறீர்கள்?  இந்த இந்தியா, சீனா, ரஷ்யாவிடமா? அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே, இன்னமுமா அவர்களை நம்புகிறீர்கள்? 

சரி, அதைவிடுங்கள்  முன்பு எங்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்(மேற்கு) இன்று தங்களது தேவைக்கு வரும் பொழுது அதை  முறியடிப்பது யார்? 

//எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? //

போராட்டதை அவர்கள் மட்டுமா முறியடித்தார்கள்?

//மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.//

இருக்கலாம். ஆனால்  தற்பொழுது மனித உயிர்கள் அநியாயமாக பலியிடப்படும் பொழுது அதை நியாயப்படுத்துவது கூட அறமென்பது இல்லை என்பதுதான் என் எண்ணம்.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உணர்வுபூர்வமான கவிதை நொச்சி.........உளமார வரவேற்கிறேன்......!   👍

Posted
59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் யாரிடம் கேட்கலாம் என நினைக்கிறீர்கள்?  இந்த இந்தியா, சீனா, ரஷ்யாவிடமா? அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே, இன்னமுமா அவர்களை நம்புகிறீர்கள்? 

சரி, அதைவிடுங்கள்  முன்பு எங்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்(மேற்கு) இன்று தங்களது தேவைக்கு வரும் பொழுது அதை  முறியடிப்பது யார்? 

இந்தியா, சீனா, ரஷ்சியா மட்டுமல்ல, எந்த நாடுகளிடமும் நாம் எதனையும் கேட்டுப் பெற முடியாது தான் நிதர்சனம். ஆனால் இதில் சீனாவும் ரஷ்சியாவும் இலங்கைக்கு செய்த உதவிகளை விட (ஆயுத உதவி மற்றும் இலங்கையை ஐ.நாவில் காப்பாற்றுவது)  மேற்கு எமக்கு செய்தது தான் மிகப் பெரும் துரோகம். 

எம் போராட்ட வலுவை முற்றாகச் சிதைத்ததில் மேற்கினது பங்களிப்பு முக்கியமாக அமெரிக்காவினது பங்களிப்பு இந்தியாவின் பங்களிப்புக்கு நிகரானது.

59 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இருக்கலாம். ஆனால்  தற்பொழுது மனித உயிர்கள் அநியாயமாக பலியிடப்படும் பொழுது அதை நியாயப்படுத்துவது கூட அறமென்பது இல்லை என்பதுதான் என் எண்ணம்.. 

எனக்கு தெரிந்து இருவரைத் விர மனித உயிர்களின் இழப்பை எவரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தப் போரை ஆரம்பிக்க கூடிய தவிர்க்க முடியாத நிலைக்கு ரஷியாவை கொண்டு நிறுத்திய காரணங்களை நியாயப்படுத்துகின்றதை தான் அவதானிக்க முடிகின்றது.

இன்று வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் கொண்ட மக்களின் இறப்புக்காக இங்கு கவலைப்படும் பலர் அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி யேமனில் நடாத்தும் படுகொலைகளுக்கு கவலைப்படுவதை காண முடியுது இல்லை. அதே போன்று அன்று அலெப்போ நகர் மீது 4 வருடங்கள் முற்றுகையிட்டு இறுதியில் குளோரின் குண்டுகள் உட்பட இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தி சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, தமிழ் சிறி said:

“முள்ளிவாய்க்காலும், உக்ரேனும்” சமன்பாடு, ஒப்பீட்டை…
மிக அழகாக உங்கள் கவிதையில் கொண்டு வந்தீர்கள், நொச்சி. 👍🏽

மேற்குலகு தான்…, முள்ளிவாய்க்காலை ஓர வஞ்சனையுடன் அணுகியது என்றால்…
நம்மவர் சிலரும்… வெள்ளைத் தோல் மோகத்தில்,
உக்ரைனை… முள்ளி வாய்க்காலுடன் ஒப்பிட்டு…
கண்ணீர் வடிக்கும், அறியாமையை… என்ன வென்று சொல்வது.

படித்துப் பாராட்டியமைக்கு நன்றி.

19 hours ago, ஈழப்பிரியன் said:

இதே சிந்தனை தான் எனக்கும்.

நன்றி நொச்சி.

படித்தமைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.இன்றைய சூழலை கையாளும் திறனற்ற தலைமைகளால் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் போராடினால் மட்டுமே மாற்றம்வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

நன்றி. 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம் நாமாக இருப்பதே எமக்கு நன்மை. அதேவேளை மனித உயிர்களின் அழிவினை யார் ஏற்படுத்தினாலும் கண்டித்தல் அவசியம்.
மேற்குலகின் நகர்வுகளனைத்தும் தலைமைப்பாத்திரம் மாறிவிடுமோ என்ற ஐயத்தின் வெளிபாடே. யூகோசிலாவியாவை மேற்குத் துண்டாடியதபோல்(அதற்கான கரணியங்களும் இருந்தன) உக்கிரேன் துண்டாடப்படுமானால் மேற்கின் பாத்திரம் ஆட்டம்காணலாம்.

10 hours ago, suvy said:

உணர்வுபூர்வமான கவிதை நொச்சி.........உளமார வரவேற்கிறேன்......!   👍

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

9 hours ago, நிழலி said:

சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.

ஒருவேளை நாங்களும் மதவாதக் கண்ணாடியூடாக நோக்கியதன் விளைவாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரகால கவிதை அருமை நொச்சி. 👏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

நேரகால கவிதை அருமை நொச்சி. 👏

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

விருப்பையும் நன்றியையும் வழங்கி உற்சாகமூட்டும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!!

ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!!

யார் மேற்கின் எதிரி?
ரஷ்யாவா நிச்சயமாக இல்லை?
கிழக்கு மேற்கு ஜேர்மனி இணைவிற்கு பின் பனிப்போர் முடிவிற்கு வந்து விட்டது என கிழக்குலகு கொண்டாடியது. அதை நயவஞ்சமாக துர்பிரயோகம் செய்தது மேற்குலகு குறிப்பாக அமெரிக்கவும் பெரிய பிரித்தானியாவும்...... ரஷ்யாவை நம்ப வைத்து கெட்ட வேலைகளை செய்தது இந்த மேற்குலகு. இன்று கூட ஜேர்மனிய பழம்பெரும் அரசியல்வாதிகள் ரஷ்யாவின் பக்கம். அதனால் அவர்களின் செய்திகள் வெளியில் வருவருவதில்லை(மேற்குலக ஊடக சுதந்திரம்) ரஷ்ய அதிபர் புட்டின் மேற்குலக ஐரோப்பிய தலைவர்களுடன் மிக மிக நட்பாக  இருந்தவர். பனிப்போர் முடிந்து விட்டது என ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தவர்.எல்லா மக்களுக்கும் சுதந்திரம் உண்டு என அறிவித்தவர். இது அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை. காரணம் இவர்கள் ஒன்று பட்டால் தன் பிழைப்பு கெட்டுப்போய் விடும் என அமெரிக்கா பயந்தது.

வரலாறுகள்  செய்திகள் தெரியாவிட்டால் திரும்ப படியுங்கள்.

  • Like 1
  • நிழலி changed the title to முள்ளிவாய்க்காலும்  உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 hours ago, குமாரசாமி said:

வரலாறுகள்  செய்திகள் தெரியாவிட்டால் திரும்ப படியுங்கள்

வணக்கம் குமாரசாமி அண்ணா!

வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட  எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. 

ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா? 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் குமாரசாமி அண்ணா!

வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட  எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. 

ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா? 

உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. 🙏

இலங்கைத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி ஏதும் நடக்க சாத்தியமுள்ளதா என சொல்லுங்கள். அதன் பின் உக்ரேன் சண்டையை பற்றி விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

இலங்கைத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி ஏதும் நடக்க சாத்தியமுள்ளதா என சொல்லுங்கள்

இல்லை, ஆனால் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தம் தரக்கூடிய நாடுகள் எங்கே இருக்கின்றன என்றால் அது மேற்குலக நாடுகளில்தான் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் இணைந்தோ இல்லை அனுசரித்தோ நடக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாக இருக்கலாம். எங்கள் விடயத்தில் யார் ஓரளவிற்கேனும் உதவுவார்கள் என்பதை/சரியானதை விளங்கப்படுத்தினால் விளங்கிக்கொள்கிறேன்..

இந்த உக்ரோன் போரைப் பற்றி இணையத்தளங்களில் அவர்கள் மீது வெறுப்பை காட்டி எழுதியதால்தான் இந்தளவு கருத்துக்களும், இல்லாவிடில் ஏதோவொரு செய்தியாக பார்த்துவிட்டு மனதிற்குள் புடினை சபித்துக்கொண்டு பாதிக்கப்படும் மக்களிற்காக இரக்கப்பட்டிருப்பேன் ஏனெனில் போர் ஏற்படுத்திய வலிகளை அனுபவித்துக் கொண்டு இருப்பதால் அதனை வெறுக்கிறேன்.. அவ்வளவுதான்.. 

நன்றி அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னுமா மேற்கை நம்புகிறீர்கள்? 

நாங்கள் எப்படி வாய்கிழியக் கத்தினாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை.

அவர்கள் தங்களுக்குத் தேவையென்றால்  எங்களைப் பாவிப்பார்கள், தேவை இல்லையென்றால் தூக்கி எறிவார்கள். தேவைக்கு ஆட்கள் இல்லையென்றல் உருவாக்கிக்கொள்வார்கள். தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவார்கள். 

இப்போது உக்ரேனுக்கு என்ன நடந்ததோ/ நடக்கிறதோ அதைத்தான் இந்தியா எமக்குச் செய்தது. மேற்கும் செய்கிறது. 

சிங்களம்சீனாவிடம் போகாமல் மேற்கிடம் அல்லது இந்தியாவிடம் சரணடைந்தால் எங்கள் நிலை என்னாகும் ?

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.