Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்..

ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன..

இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர..

கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்..  https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க..

அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு..

சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்..

கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக..  கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. 

அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன  மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில  வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. 

சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான்.

எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம்  செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. 

சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. 

இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். 

இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான்.

சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது.

வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். 

ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..

Edited by nedukkalapoovan
  • Like 8
  • Thanks 1
  • Haha 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோவிட் பிரச்சனை ஒருபக்கம், பொருளாதார பிரச்சனை மோசம் ஆனால் சனம் ஒவ்வொரு நாளும் இலங்கை போய்க்கொண்டு தான் உள்ளார்கள். க.பொ.த உயர்தரம் பரீட்சைக்கு வினாத்தாள் அடிக்கவே கடதாசி இல்லையாம். இப்படி ஒரு நிலமையை யார் எதிர்பார்த்தார்கள். இது எங்கே போகுமோ பார்ப்போம். அங்கு பொருட்கள் வெளிநாட்டு விலையில் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான அனுபவங்கள்.......தொடருங்கள் நெடுக்ஸ்......வழக்கம்போல் சரளமான எழுத்துநடை.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பவுன்சை உருவின கோவம் மனசுக்க முட்டிக்கிட்டு கிடந்தாலும் வெளில..கொட்ட முடியாத சூழலில்.... வந்த கோவத்தை அமுக்கிக்கிட்டு (வேற வழி) கிளம்பி.. எயார்போட் டியூட்டிபிறில.. என்ன இலாபமாக் கிடக்குன்னு பார்க்கப் போனால்.. அங்க எங்க.. எல்லாப் பொருட்களுக்கும்.. கோவிட் கால வருமான இழப்பையும்  விலையா வைச்சு.. விக்கிறாங்கள்.

ஏற்கனவே பஜெட் எகிறிட்டுது.. நமக்கு உது சரிப்பட்டு வராதுன்னுட்டு.. பிளைட்டைப் பிடிக்கப் போனால்.. அங்க.. றீம் லைனர் தான் இருக்கும் என்று பார்த்தால்.. போயிங் 777 விட்டிருந்தாங்கள். அது பார்க்கப் பழசாவே இருந்திச்சு. அதிலையே பாதி மனசு.. சோர்ந்திட்டுது. சரி இதாவது கிடைச்சுதேன்னு மனசை அரையும் குறையுமா தேற்றிக்கிட்டு. பிளைட்டுக்க ஏறினால்..

பிளைட்டுக்க.. எல்லாரும் மாஸ்கோட இருக்காங்க. அதிலும் சிலது டபிள் மாஸ்க் வேற போட்டிருக்குது. ஆனாலும் சிலது மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குது.. சிலது மாஸ்கை எடுத்திட்டு மூக்கைச் சிந்துது.. இப்படி பல வித மனிசர்களையும் தாண்டி ஒருமாதிரி நம்ம இருக்கையில் போய் இருந்தாச்சு. யன்னல் சீட் தான். அது புக் பண்ணும் போதே தெரிவு செய்ததால.. அதில பிரச்சனை இருக்கல்ல.

எனி என்ன..செய்யலாமுன்னிட்டு.. போனை சார்சரில அடிச்சிட்டு.. பாட்டைப் போட்டு கேப்பம் என்றிட்டு.. எயார்பொட் டை எடுத்து காதுக்க செருக்கிட்டு.. நிம்மதியா இருப்பமுன்னா.. கிளம்பின பிளேனுக்க இருந்து தண்ணி ஒழுகி.. தலையை முழுக்காட்டிவிட்டிச்சு. இதென்னடா கோதாரி.. பிளேனுக்கையும் தண்ணி ஒழுகுமான்னு நினைச்சிட்டு.. பழைய டப்பாவை.. கோவிட் காலத்தில பூசி மொழுகிட்டு விட்டிருக்கிறான் அரபிக்காரனுன்னு திட்டிக்கிட்டே.. அலேட் பட்டினை அமுக்கி.. விமானப் பணியாளை (மனையாள் அல்ல) அழைச்சால்..  நல்ல.. அரபிக்காரியா வருவாள் என்று பார்த்தால்... ஒரு சைனாக்காரி தான் வந்தாள். அரபிக் காரனெல்லாம்.. யூரோப் பக்கம்.. பிளேன் விட்டு நல்லா சம்பாதிச்சாலும்.. அரபிக்காரிகளை விமானப் பணிப்பெண்களாக வைச்சிருக்கிறது குறைவு.! மற்ற நாட்டுக்காரிகளை தான் வைச்சிருக்காங்கள். 

வந்தது சைனோவோ என்னவோ வந்த விசருக்கு.. இதென்ன.. பிளைட்டுக்க தண்ணி ஒழுகுது.. என்ன நடக்குது என்று அவளோட பாய.. அவளோ கொஞ்சம் பதறித்தான் போயிட்டாள். ஓடிப்போய் தன்ர கெட் டை கூட்டிக்கொண்டு வந்து.. விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள். நான் அதுக்கு.. என் வாழ்க்கையில் இப்படி முன்னம் எப்பவும் நடக்கவேயில்லையே.. இதென்ன பழைய பிளைட்டா என்று தொடர்ந்து கேள்வி கேட்டு.. அவளுக்கு தொந்தரவு கொடுக்க.. இன்னொருத்தி.. புதிய போர்வை.. தலையணை எல்லாம் கொண்டு வந்து தந்து.. தண்ணியையும் துடைச்சுவிட்டு.. நம்மளை குசிப்படுத்தி.. சமாதானப் படுத்தினாள்.

சரி சரி.. போங்கடி.. நடிச்சது காணுமுன்னு.. மனசுக்க தோனினாலும்... கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பமேன்னு விட்டால்.. அதுக்குப் பிறகு நம்ம மேல கவனிப்போ.. தனி தான்.

ஒரு மாதிரி.. ஒழுகிற பிளைட்டை சமாளிச்சு அரபுதேசம் ஒன்றில் இடைத்தங்கலுக்கு இறங்கினால்.. மனசுக்க.. பழைய நினைப்பில்.. ஒரே எதிர்ப்பார்ப்பு. அங்க டியுரிபிறில.. அரபிக் சொக்கலேட்டும்.. ஊரில உள்ள சில பேருக்கு.. தண்ணியும் (பச்சத்தண்ணி இல்லை..  பிறவுன் தண்ணி) வாங்கிட்டுப் போவம் என்று.. மனசு பல திட்டங்களைப் போட்டிச்சு.

ஆனாலும்.. பிளேன் இறங்கின கையோட.. அதை தூரத்தில நிப்பாட்டிட்டாங்கள். பிறகு ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் பிளைட்டுக்க வைச்சிருந்திட்டு... பேரூந்துகளில் ஏத்திக் கொண்டு போய்... ஒரு வழிப் பாதையில விட்டாங்கள். அங்க இறங்கினால்.. அம்புக் கோடுகள் காட்டிற வழியில மட்டும் தான் போகலாம் என்டாங்கள். அரபுக்காரன் தேசத்தில எனி உதுக்கு சண்டை பிடிக்கேலுமோ.. இல்லைத்தானே.. அவன் சொன்னதை வாயை மூக்கை பொத்திக்கிட்டு கேட்டுட்டு நடந்தால்.. அது நேராக் கொண்டு போய் அடுத்த பிளைட் எடுக்கிற இடத்தில விட்டிச்சு.  டியுரிபிறி எல்லாம் அடைச்சு காத்துக்கூட போக முடியாத அளவுக்கு மூடிக்கிடக்கு. அட கறுமமே.. இங்க டியுபிரில ஏதாவது வாக்கிட்டுப் போவம் என்று தானே இந்த ரான்சிட் போட்டது.. அதுவும் பாழாப் போச்சா.. என்றிட்டு.. குறைஞ்சது.. மாஸ்கை மாத்திட்டு.. மூஞ்சியைக் கழுவிட்டு.. நம்பர் 1 க்காவது போயிட்டுப் போவம் என்று போனால்.. அங்கையும்.. கியூ. 

கியூவை தாண்டி.. எப்படி போனது பயணம்.. தொடரும்.. 

Edited by nedukkalapoovan
  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கால்கடுக்க.. பொறுமை சோதிக்க கியூவில் நின்று வாஸ் றூமை அடைந்து மாஸ்கை கழட்டினால்.. மாஸ்கை இங்கே குப்பையில் போட வேண்டாம்.. என்று எழுதி அதை போட தனியான ஒரு பாதை அமைச்சு.. அதில ஒரு தொட்டி வைச்சு.. அதில.. கொண்டு போய் போடச் சொல்லிக் கிடக்கு. இதுகளை எல்லாம் சமாளிச்சு.. ஒரு மாதிரி பிரஸப் பண்ணிக் கொண்டு.. பிளைட்டில தந்த சான்விச்சை மிச்சம் பிடிச்சு.. கொண்டு வந்ததால.. அதையும் சாப்பிட்டிட்டு.. பிளைட்டில தந்த தண்ணிப் போத்தலையும்.. மிச்சம் பிடிச்சு கொண்டு வந்ததால.. அதையும் குடிச்சிட்டு (நாம யாரு.. சுழியன்கள் எல்லோ).. அடுத்த பிளைட்டுக்குள்ள ஏறினால்.. 

அதுக்க ஆடு மாடுகளை ஏத்திற மாதிரி ஏத்துறாங்கள் ஏத்துறாங்கள்.. ஏறி முடியாத அளவுக்கு ஏத்திறாங்கள். கடைசியில நின்று போகாத குறைக்கு.. சனம். அதுக்குள்ள பெரிய பெரிய கான்ட் லக்கேஜ்ஜோட.. இலங்கைக்குப் போக.. என்று வரும்.. மத்திய கிழக்குப் பணியாளர்கள். அதுகளையும் சொல்லிக் குற்றமில்லை.. ஊருக்கு கொண்டு போகக் கூடிய மக்ஸிமத்தை கொண்டு போவம் என்ற துடிப்பு. ஆனாலும்.. சக பயணிகளை.. ரெம்ப அசெளகரியப்படுத்திட்டாய்ங்க. 

இதுகளை எல்லாம் தாண்டி.. அந்த ஏயார் பஸ் விமானம்.. 30 நிமிடம் முந்தியே.. கட்டுநாயக்காவை அடைந்துவிட்டது. கட்டுநாயக்கா பார்க்க அப்படியே தான் இருக்குது. என்ன மூலைக்கு மூலை புத்தர் தரிசனம் கொடுப்பது அதிகரித்திருந்தது.  கட்டுநாயக்காவுக்க இறங்கிட்டு.. புத்தரை அந்நியராப் பார்க்க ஏலுமோ.. நம்ம புத்தர் தானே.. என்ற தோறணையில்.. அவரைத் தாண்டி.. இமிகிரேசனுக்கு போனால்.. என்ன ஒரு பவ்வியம் பணியாளர்கள் இடத்தில். கொஞ்ச வெளிநாட்டவர்கள் தான் கியூவில். பாஸ்போட் செக் எல்லாம் ஒரு 10 நிமிடத்துக்குள் முடிஞ்சு போச்சு. அந்தளவுக்கு வெளிநாட்டவருக்கான கவுண்டர்கள்.. பிறியாக கிடந்துது. 

செக் முடிஞ்சு.. விசாவையும் குத்திக்கிட்டு வெளில வந்தால்.. இன்னொரு சந்துக்கு போக வேண்டும். அங்க தான்...

அங்க என்னாச்சுன்னு பின்னர் தொடரும்...

  • Like 1
  • Haha 1
Posted

தொடருங்கோ நெடுக்கு.... 

உங்கள் எழுத்து நடை வாசிக்க கொஞ்சம் கடினமாக எனக்கு இருப்பினும் தொடர்ந்து வாசிக்கின்றேன்...

இடையிடையே படங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/3/2022 at 17:18, nedukkalapoovan said:

எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது.

வயிறு குலுங்க சிரிக்கவைத்த உங்கள் பல வரிகளில் இது தனி ரகம். செங்கைஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" போல "நெடுக்ஸ் வடக்ஸ் போகிறார்" சூப்பர் ஜீ   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் தமிழ் ஏள் அரை குறையாக மாறுது...கலப்படம் ..✍️🤭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா மாட்டிக்கிட்டான்யா மாட்டிக்கிட்டான்.

நான் போன கிழமையே தம்பி சனசந்தடி இல்லாமல் ஊருக்கு போய் வந்திருக்கான் என்று சொல்லிடன்.

அதுசரி ஊருக்கு போகும்போது குடும்பமா போறலையோ?

1 hour ago, nedukkalapoovan said:

இதுகளை எல்லாம் சமாளிச்சு.. ஒரு மாதிரி பிரஸப் பண்ணிக் கொண்டு.. பிளைட்டில தந்த சான்விச்சை மிச்சம் பிடிச்சு.. கொண்டு வந்ததால.. அதையும் சாப்பிட்டிட்டு.. பிளைட்டில தந்த தண்ணிப் போத்தலையும்.. மிச்சம் பிடிச்சு கொண்டு வந்ததால.. அதையும் குடிச்சிட்டு (நாம யாரு.. சுழியன்கள் எல்லோ).. அடுத்த பிளைட்டுக்குள்ள ஏறினால்.. 

தம்பி கஸ்டப்பட்டு படித்து நல்லா உழைக்கிறான்னு பார்த்தா பச்சை கஞ்சபையனா இருக்கானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொறிலங்கா வந்து போட் சிற்றி சுத்திப்பார்த்திட்டு போயிருக்குறீங்க படம் எல்லாம் நானும் பார்த்தன் 

23 minutes ago, யாயினி said:

உங்கள் தமிழ் ஏள் அரை குறையாக மாறுது...கலப்படம் ..✍️🤭

சும்மா வாசிங்க அதுவா பழகிடும் நாமெல்லாம் இந்திய சினிமா பார்ப்பதில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Sasi_varnam said:
On 31/3/2022 at 14:18, nedukkalapoovan said:

ல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது.

வயிறு குலுங்க சிரிக்கவைத்த உங்கள் பல வரிகளில் இது தனி ரகம். செங்கைஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" போல "நெடுக்ஸ் வடக்ஸ் போகிறார்" சூப்பர் ஜீ

சசி
இது ஊர்போகிறவர்களின் ஒரு பழக்கம்.

ஒரு றாத்தல் என்றாலும் கூட கொண்டு போனால்த் தான் திருப்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/3/2022 at 23:46, நியாயத்தை கதைப்போம் said:

கோவிட் பிரச்சனை ஒருபக்கம், பொருளாதார பிரச்சனை மோசம் ஆனால் சனம் ஒவ்வொரு நாளும் இலங்கை போய்க்கொண்டு தான் உள்ளார்கள். க.பொ.த உயர்தரம் பரீட்சைக்கு வினாத்தாள் அடிக்கவே கடதாசி இல்லையாம். இப்படி ஒரு நிலமையை யார் எதிர்பார்த்தார்கள். இது எங்கே போகுமோ பார்ப்போம். அங்கு பொருட்கள் வெளிநாட்டு விலையில் போகுது.

இதுக்குப் பதில்..  பயணப் புதினத்துக்க வரும். விடுப்புப் பார்த்திட்டே இருங்க. 😀

On 1/4/2022 at 10:59, suvy said:

சிறப்பான அனுபவங்கள்.......தொடருங்கள் நெடுக்ஸ்......வழக்கம்போல் சரளமான எழுத்துநடை.....!  👍

நீங்க தொடர்ந்து விடுப்புப் பார்க்கனுன்னு தானே எழுதிறம். நன்றி அண்ணா. 😀

1 hour ago, நிழலி said:

தொடருங்கோ நெடுக்கு.... 

உங்கள் எழுத்து நடை வாசிக்க கொஞ்சம் கடினமாக எனக்கு இருப்பினும் தொடர்ந்து வாசிக்கின்றேன்...

இடையிடையே படங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

சொந்தப் பயணப் புதினம் என்பதால்.. இயல்பைக் கலந்து எழுதினால் தான் விடுப்பு நல்லா இருக்கும் என்பது எண்ணம். வாசிக்க சிரமமாக இருந்தாலும் விடுப்பு இருக்கும். தொடர்ந்து வாசியுங்கோ.

படங்களை இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்குது. படங்களை யாழில் தரவேற்ற முடியாத அளவுக்கு அவை அளவில் கூடி இருக்குது. வேறு சமூக ஊடகங்களின் ஊடாக ஏற்றி இணைப்பைக் கொடுத்தால்.. அதையும் தற்காலிகமாக அனுமதித்து பின் தடை செய்திடுறாங்க. இப்ப எல்லாம் நாம் எடுத்த படங்களை நிரந்தரமாகத் தெரிய யாழில் பகிர்வது சிரமமாக உள்ளது. வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.  எழுத ஆரம்பிக்க முன்னே படம் இணைக்கும் நோக்கமிருந்தது. ஆனால்.. இன்னொரு தலைப்பில் சமூக ஊடகமொன்றில் தரவேற்றி..  போட்ட படங்களே.. தற்காலிக காண்பித்தலுக்குப் பின்.. காணாமல் போயிட்டதால்.. இங்க படம் போடேல்ல.

நிச்சயம் படங்கள் இருக்கு.. போட்டால் நல்லாவும் தான் இருக்கும்.. ஆனால்.. நிரந்தரமாக தெரிய தான் வழி தெரியல்ல. 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, Sasi_varnam said:

வயிறு குலுங்க சிரிக்கவைத்த உங்கள் பல வரிகளில் இது தனி ரகம். செங்கைஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" போல "நெடுக்ஸ் வடக்ஸ் போகிறார்" சூப்பர் ஜீ   🤣

வழமையா.. ஒரு கிலோன்னாலும் கீழ தான் கொண்டு போவது. இம்முறை கொஞ்சம் கூடத்தான் போயிட்டுது.. ஏன்னா.. கொண்டு போனது எல்லாமே அவசியம் என்று படும் வகைக்கு நிலைமை அப்படி.. அல்லது வாசிச்ச செய்திகளின் தாக்கம் அப்படி. 😃

41 minutes ago, யாயினி said:

உங்கள் தமிழ் ஏள் அரை குறையாக மாறுது...கலப்படம் ..✍️🤭

இயல்பு கலப்படமாத்தானே இருக்குது. இயல்பை கடந்து மொழின்னு வந்தால்.. மொழித் தூய்மை அதிகம் வரும். 😀

31 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா மாட்டிக்கிட்டான்யா மாட்டிக்கிட்டான்.

நான் போன கிழமையே தம்பி சனசந்தடி இல்லாமல் ஊருக்கு போய் வந்திருக்கான் என்று சொல்லிடன்.

அதுசரி ஊருக்கு போகும்போது குடும்பமா போறலையோ?

தம்பி கஸ்டப்பட்டு படித்து நல்லா உழைக்கிறான்னு பார்த்தா பச்சை கஞ்சபையனா இருக்கானே?

வீட்டுக்காரிக்கு வீட்டில இருந்து வேலை என்பதால்.. அவா முன்னாடியே கிளம்பிட்டா. நம்மளுக்கு வேலை அப்படி. கோவிட்டுக்குள்ளும் ஆஸ்பத்திரியே தான் தஞ்சம் என்பதால்.. நம்மள லேசில விடமாட்டன் என்றிட்டாங்கள். கிடைச்ச அனுமதிக்குள் தானே போய் வர முடியும்.

கஞ்சப்பையன் இல்லையண்ணா.. சமயோசிதப்பையன். நல்ல காலம்.. அந்த சாண்ட்விச்சும் தண்ணிப் போத்தலும் இல்லைண்ணா.. அடுத்த பிளைட்டுக்குள்ள சாப்பாடு தண்ணி காட்டும் வரை பசியோட தான் இருந்திருக்கனும். ஏன்னா.. ரான்சிட் வழியில் அமைந்த.. டியுடிபிரிக்க.. உணவுச் சாலைகள் எல்லாம் பூட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சொறிலங்கா வந்து போட் சிற்றி சுத்திப்பார்த்திட்டு போயிருக்குறீங்க படம் எல்லாம் நானும் பார்த்தன் 

சும்மா வாசிங்க அதுவா பழகிடும் நாமெல்லாம் இந்திய சினிமா பார்ப்பதில்லையா??

உண்மையில்.. துறைமுக நகர் போகனுன்னு வரேல்ல. One Galle face mall பக்கம் தான் போக என்று வந்தது. ஓசில விட்டதால்..  துறைமுக நகருக்குள் நுழைஞ்சாச்சு. ஓசின்னா.. தெரியும் தானே... 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, nedukkalapoovan said:

படங்களை இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்குது. படங்களை யாழில் தரவேற்ற முடியாத அளவுக்கு அவை அளவில் கூடி இருக்குது. வேறு சமூக ஊடகங்களின் ஊடாக ஏற்றி இணைப்பைக் கொடுத்தால்.. அதையும் தற்காலிகமாக அனுமதித்து பின் தடை செய்திடுறாங்க. இப்ப எல்லாம் நாம் எடுத்த படங்களை நிரந்தரமாகத் தெரிய யாழில் பகிர்வது சிரமமாக உள்ளது. வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.  எழுத ஆரம்பிக்க முன்னே படம் இணைக்கும் நோக்கமிருந்தது. ஆனால்.. இன்னொரு தலைப்பில் சமூக ஊடகமொன்றில் தரவேற்றி..  போட்ட படங்களே.. தற்காலிக காண்பித்தலுக்குப் பின்.. காணாமல் போயிட்டதால்.. இங்க படம் போடேல்ல.

யாழ் விம்பகம் ஊடாக இணைத்தால் நிரந்தரமாக இருக்கும் என்று பலரும் அதனூடாக தானே இணைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழ் விம்பகம் ஊடாக இணைத்தால் நிரந்தரமாக இருக்கும் என்று பலரும் அதனூடாக தானே இணைக்கிறார்கள்.

ஆனால் விம்பகத்துக்குள் இணைக்க குறித்த அளவுக்குள் (MB) படங்கள் இருக்கனும் என்று நினைக்கிறேன். அதற்கு மேல் என்றால் இணைக்க அனுமதிக்காது. முன்னர் முயன்று முடியாததால் தான் இம்முறை முயற்சிக்கவே இல்லை. நன்றி அண்ணா வழிகாட்டலுக்கு. 😀

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nedukkalapoovan said:

உண்மையில்.. துறைமுக நகர் போகனுன்னு வரேல்ல. One Galle face mall பக்கம் தான் போக என்று வந்தது. ஓசில விட்டதால்..  துறைமுக நகருக்குள் நுழைஞ்சாச்சு. ஓசின்னா.. தெரியும் தானே... 😃

அதானே ஓசியென்டால் ஓமவாட்டர் கூட ஒரு போத்தல் குடிப்பம் தானே எப்படி இருக்கு சைனா சாமான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே ஓசியென்டால் ஓமவாட்டர் கூட ஒரு போத்தல் குடிப்பம் தானே எப்படி இருக்கு சைனா சாமான்

பெரிசா கவர்ச்சியா இல்லை. இப்போதைக்கு.. நட்டு வைச்ச தென்னை மரம் தான்.. சைனா சாமானக் கிடக்கு. ஆனால் நட்டு வைச்சுள்ள விளம்பரங்கள் மட்டும் சொல்லி வேலையில்ல. வேற லெவல். லண்டன்.. பாரிஸ்.. சிட்னி.. நியுயோர்க்..டுபாய்.. எல்லாம் தோத்திடுமாம்.😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதானே ஓசியென்டால் ஓமவாட்டர் கூட ஒரு போத்தல் குடிப்பம் தானே எப்படி இருக்கு சைனா சாமான்

நீங்க சாமான்னு எதைச் சொல்றீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, nedukkalapoovan said:

பவுன்சை உருவின கோவம் மனசுக்க முட்டிக்கிட்டு கிடந்தாலும் வெளில..கொட்ட முடியாத சூழலில்.... வந்த கோவத்தை அமுக்கிக்கிட்டு (வேற வழி) கிளம்பி.. எயார்போட் டியூட்டிபிறில.. என்ன இலாபமாக் கிடக்குன்னு பார்க்கப் போனால்.. அங்க எங்க.. எல்லாப் பொருட்களுக்கும்.. கோவிட் கால வருமான இழப்பையும்  விலையா வைச்சு.. விக்கிறாங்கள்.

ஏற்கனவே பஜெட் எகிறிட்டுது.. நமக்கு உது சரிப்பட்டு வராதுன்னுட்டு.. பிளைட்டைப் பிடிக்கப் போனால்.. அங்க.. றீம் லைனர் தான் இருக்கும் என்று பார்த்தால்.. போயிங் 777 விட்டிருந்தாங்கள். அது பார்க்கப் பழசாவே இருந்திச்சு. அதிலையே பாதி மனசு.. சோர்ந்திட்டுது. சரி இதாவது கிடைச்சுதேன்னு மனசை அரையும் குறையுமா தேற்றிக்கிட்டு. பிளைட்டுக்க ஏறினால்..

பிளைட்டுக்க.. எல்லாரும் மாஸ்கோட இருக்காங்க. அதிலும் சிலது டபிள் மாஸ்க் வேற போட்டிருக்குது. ஆனாலும் சிலது மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குது.. சிலது மாஸ்கை எடுத்திட்டு மூக்கைச் சிந்துது.. இப்படி பல வித மனிசர்களையும் தாண்டி ஒருமாதிரி நம்ம இருக்கையில் போய் இருந்தாச்சு. யன்னல் சீட் தான். அது புக் பண்ணும் போதே தெரிவு செய்ததால.. அதில பிரச்சனை இருக்கல்ல.

எனி என்ன..செய்யலாமுன்னிட்டு.. போனை சார்சரில அடிச்சிட்டு.. பாட்டைப் போட்டு கேப்பம் என்றிட்டு.. எயார்பொட் டை எடுத்து காதுக்க செருக்கிட்டு.. நிம்மதியா இருப்பமுன்னா.. கிளம்பின பிளேனுக்க இருந்து தண்ணி ஒழுகி.. தலையை முழுக்காட்டிவிட்டிச்சு. இதென்னடா கோதாரி.. பிளேனுக்கையும் தண்ணி ஒழுகுமான்னு நினைச்சிட்டு.. பழைய டப்பாவை.. கோவிட் காலத்தில பூசி மொழுகிட்டு விட்டிருக்கிறான் அரபிக்காரனுன்னு திட்டிக்கிட்டே.. அலேட் பட்டினை அமுக்கி.. விமானப் பணியாளை (மனையாள் அல்ல) அழைச்சால்..  நல்ல.. அரபிக்காரியா வருவாள் என்று பார்த்தால்... ஒரு சைனாக்காரி தான் வந்தாள். அரபிக் காரனெல்லாம்.. யூரோப் பக்கம்.. பிளேன் விட்டு நல்லா சம்பாதிச்சாலும்.. அரபிக்காரிகளை விமானப் பணிப்பெண்களாக வைச்சிருக்கிறது குறைவு.! மற்ற நாட்டுக்காரிகளை தான் வைச்சிருக்காங்கள். 

வந்தது சைனோவோ என்னவோ வந்த விசருக்கு.. இதென்ன.. பிளைட்டுக்க தண்ணி ஒழுகுது.. என்ன நடக்குது என்று அவளோட பாய.. அவளோ கொஞ்சம் பதறித்தான் போயிட்டாள். ஓடிப்போய் தன்ர கெட் டை கூட்டிக்கொண்டு வந்து.. விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள். நான் அதுக்கு.. என் வாழ்க்கையில் இப்படி முன்னம் எப்பவும் நடக்கவேயில்லையே.. இதென்ன பழைய பிளைட்டா என்று தொடர்ந்து கேள்வி கேட்டு.. அவளுக்கு தொந்தரவு கொடுக்க.. இன்னொருத்தி.. புதிய போர்வை.. தலையணை எல்லாம் கொண்டு வந்து தந்து.. தண்ணியையும் துடைச்சுவிட்டு.. நம்மளை குசிப்படுத்தி.. சமாதானப் படுத்தினாள்.

சரி சரி.. போங்கடி.. நடிச்சது காணுமுன்னு.. மனசுக்க தோனினாலும்... கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பமேன்னு விட்டால்.. அதுக்குப் பிறகு நம்ம மேல கவனிப்போ.. தனி தான்.

ஒரு மாதிரி.. ஒழுகிற பிளைட்டை சமாளிச்சு அரபுதேசம் ஒன்றில் இடைத்தங்கலுக்கு இறங்கினால்.. மனசுக்க.. பழைய நினைப்பில்.. ஒரே எதிர்ப்பார்ப்பு. அங்க டியுரிபிறில.. அரபிக் சொக்கலேட்டும்.. ஊரில உள்ள சில பேருக்கு.. தண்ணியும் (பச்சத்தண்ணி இல்லை..  பிறவுன் தண்ணி) வாங்கிட்டுப் போவம் என்று.. மனசு பல திட்டங்களைப் போட்டிச்சு.

ஆனாலும்.. பிளேன் இறங்கின கையோட.. அதை தூரத்தில நிப்பாட்டிட்டாங்கள். பிறகு ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் பிளைட்டுக்க வைச்சிருந்திட்டு... பேரூந்துகளில் ஏத்திக் கொண்டு போய்... ஒரு வழிப் பாதையில விட்டாங்கள். அங்க இறங்கினால்.. அம்புக் கோடுகள் காட்டிற வழியில மட்டும் தான் போகலாம் என்டாங்கள். அரபுக்காரன் தேசத்தில எனி உதுக்கு சண்டை பிடிக்கேலுமோ.. இல்லைத்தானே.. அவன் சொன்னதை வாயை மூக்கை பொத்திக்கிட்டு கேட்டுட்டு நடந்தால்.. அது நேராக் கொண்டு போய் அடுத்த பிளைட் எடுக்கிற இடத்தில விட்டிச்சு.  டியுரிபிறி எல்லாம் அடைச்சு காத்துக்கூட போக முடியாத அளவுக்கு மூடிக்கிடக்கு. அட கறுமமே.. இங்க டியுபிரில ஏதாவது வாக்கிட்டுப் போவம் என்று தானே இந்த ரான்சிட் போட்டது.. அதுவும் பாழாப் போச்சா.. என்றிட்டு.. குறைஞ்சது.. மாஸ்கை மாத்திட்டு.. மூஞ்சியைக் கழுவிட்டு.. நம்பர் 1 க்காவது போயிட்டுப் போவம் என்று போனால்.. அங்கையும்.. கியூ. 

கியூவை தாண்டி.. எப்படி போனது பயணம்.. தொடரும்.. 

நல்ல பகிடியுடன், வித்தியாசமான எழுத்து நடையுடன்.. 
வாசிக்க... அருமையாக உள்ளது. தொடருங்கள் நெடுக்ஸ்.   👍 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தான் விடுப்பு பாக்க ஊருக்கு போய்ட்டு. நாங்க விடுப்பு பாக்கிறம் எண்டு சொல்லுறார் பாருங்களள்..

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்க சாமான்னு எதைச் சொல்றீங்க?

சைனா  கட்டின கொழும்பு போட் சிற்றி ய சொன்னன் இவர் இவருக்கு தெரிந்த ஏதோ ஒன்றை நினைச்சிருக்கார்  இதற்கு கம்பனி பொறுப்பேற்காது  🤣

2 minutes ago, யாயினி said:

தான் விடுப்பு பாக்க ஊருக்கு போய்ட்டு. நாங்க விடுப்பு பாக்கிறம் எண்டு சொல்லுறார் பாருங்களள்..🤭

அப்ப பாருங்களன் முசுப்பாத்திய

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

நல்ல பகிடியுடன், வித்தியாசமான எழுத்து நடையுடன்.. 
வாசிக்க... அருமையாக உள்ளது. தொடருங்கள் நெடுக்ஸ்.   👍 🙂

நன்றி தமிழ்சிறி அண்ணா. 😃

2 hours ago, யாயினி said:

தான் விடுப்பு பாக்க ஊருக்கு போய்ட்டு. நாங்க விடுப்பு பாக்கிறம் எண்டு சொல்லுறார் பாருங்களள்..

புதினம்... விடுப்பு இதெல்லாம் சகஜம்.. தானே தங்கச்சி. அதுவும் ஒரு வகை மன மகிழ்ச்சி தானே. 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம்.. அந்தச் சந்தில் தான் கோவிட்-19 தாண்டி நாட்டுக்குள் செல்லவும் நடமாடவும் அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்படும். அதை வழங்க மூடிய கூட்டுக்குள் ஒருவர் எல்லா சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றிக் கொண்டு.. குந்தி இருந்தார். அவரிடம்.. நான் ஏற்கனவே பெற்றிருந்த லொக்கேட்டர் கியு ஆர் கோட் டை காட்டி.. அதன் பின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு.. ஒரு அனுமதித் துண்டு சுகாதார அமைச்சின் இலச்சனை பொறித்து தரப்பட்டிச்சு. அதுதான் கோவிட்டுக்குள் நாட்டுக்குள் சென்று வர அனுமதிக்கும் பத்திரம். அது இன்றேல்.. நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை.

ஒருவாறு உந்தச் செக்கிங் எல்லாம் முடிச்சு வெளில வந்தால்.. வழமையான நெருக்குவாரமோ.. தொந்தரவோ டியுடிபிறில இல்லை. வாங்க வந்து வாங்குங்க.. என்று ஆக்களுக்கு பின்னால் துரத்துவது முற்றாக இல்லாமல் போயிருப்பது கண்டு வியந்தேன்.

எல்லாரும் ஒழுங்காக மாஸ்க் அணிந்து அவரவர் வணிக நிலையங்களுக்கு முன் நிற்கிறார்கள் அவ்வளவும் தான். லண்டனில் கூட இந்த ஒழுங்கை காண முடியாது. சிலது மாஸ்க் போடும்.. ஆனால் மூக்கு கீழ். அப்படி எல்லாம்.. அங்கு இருக்கவில்லை. 

அப்படியே நடந்து.. லக்கேஷ் பொறுக்க வேண்டிய இடத்துக்கு வந்தால்.. போட்டர்கள் தொந்தரவு வெகுவாக குறைச்சிருந்திச்சு. ஆனாலும்..... போட்டர் ஒருத்தன் வந்து.. உதவி தேவையா என்று கேட்டதோடு.. பதிலை எதிர்பார்க்காமலேயே.... ரொலியை தள்ளிக்கிட்டு வந்து நின்றான். கெல்ப் பண்ணுவதாக சொல்லிக்கிட்டே நின்றான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லவும் செய்தான். பிறகு திடீர் என்று உங்கள் லக்கேஷின் நிறமென்ன.. அதில என்ன அடையாளம் போட்டிருக்கு.. என்ன  அட்ரஸ் எழுதி இருக்கென்று விபரம் கேட்டான். நமக்கு இவங்கட தில்லாலங்கடி ஏலவே தெரிந்திருந்தால்.. சொல்லவேயில்லை. பிறகு எல்லாத்தையும் விட்டிட்டு லக்கேஷ் தள்ளி வரும் பெலிட்டின் உள்பக்கம் போனான்... வந்தான். ஆனால்.. நான் எதுவுமே அவனுக்கு சொல்லாததால்.. அவனின் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை. நைசாக கழன்று நகர்ந்து சென்று விட்டான். போக முன் பவுன்ஸ் பவுன்ஸ் என்று கெஞ்சிவிட்டுத்தான் சென்றான். எப்படியோ.. விமானங்கள் வரும் நேரம்.. வகை.. நாடுகளை வைச்சு.. இவர் இங்கிருந்து தான் வருகிறார் என்று மோப்பம் பிடிப்பதில்.. போட்டர்கள் செமக் கில்லாடிகளாகவே இருக்கிறாய்ங்க. 

ஒருவாறு விமான நிலையத்துக்குள் இருந்து வெளிய வந்து பிக் அப் பொயின்றில் நின்றால்.. அங்கு விமானப்படை ஆட்கள் ஒரு சிலர் நின்றாங்கள். அவங்கள்.. இப்ப எல்லாம்.. ரி56 வைத்திருப்பதில்லை. காமாண்டோ.. வகை சிறிய துப்பாக்கிகள் தான் வைச்சிருக்காங்கள். உடைகளும் அமெரிக்க துருப்புக்களின் தரத்துக்கு உயர்ந்திருக்குது. உதுக்கெல்லாம் காசிருக்குது.. என்று நினைச்சுக் கொண்டே அவங்களை கடந்து சென்று காத்திருந்தால்..

காத்திருப்பின் போது நிகழ்ந்தது என்ன..... தொடரும்..

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

காத்திருப்பு குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி தொடர்ந்து கொண்டிருந்தது.. காரணம் ஏற்ற வர வேண்டிய வாடகை வாகனங்கள் எல்லாம்.. கொழும்பு நகரின் ரபிக் நேரத்தை காட்டி.. முன் கூட்டிய பதிவுகளை (புக்கிங்கை) கான்சல் பண்ணிக் கொண்டிருந்தமையால்.. ஏற்ற வர வேண்டியவர் குறித்த நேரத்துக்கு வரவேயில்லை.

இந்த நேர இடைவெளியில்.. நான் காத்திருந்த இடத்துக்கு முன்னால் ஒரு இராணுவ ஆள்.. மோப்ப நாயோடு இருந்தார். அந்த நாய் நம்மையும் நம்ம பெட்டிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதும்.. பின் சலிப்புத் தட்டி.. சுருண்டு படுப்பதுமாய் இருந்தது. ஆனால் எனக்குள்ளோ.. ஒரு வித பயம். ஏன்னா.. நம்ம பெட்டிக்குள்.. நம்ம சொந்தம் ஒன்று அண்மையில் தனது பாதுகாப்புக்கென்று வாங்கின german shepherd நாய்க்குட்டிக்குரிய சாப்பாடுகளும் இருந்தன. ஆனால்.. அந்த மோப்ப நாய்க்கு pedigree போட்டு வளர்த்திருப்பாய்ங்களோ தெரியவில்லை.. அது என்னையும் பெட்டிகளையும் பாத்து முறாய்ப்பதோடு நின்று விட்டது. குரைக்கவோ.. கொட்டாவி விடவோ இல்லை. அதற்காக.. மனதுக்குள் தங்கியூ உஞ்சு.. என்று சொல்லிக் கொண்டே காத்திருந்தேன்.

காத்திருப்பு நேரம் நீடிக்க நீடிக்க.. அருகில் காவலுக்கு நின்ற இராணுவ ஆளின் பார்வையில் மாற்றம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில்.. ஆள்.. அருகே வந்து.. சிங்களத்தில்.. நீங்கள்.. ஓகேயா.. போக வாகனம் ஏதும் பிடிச்சு தாறதோ என்று கேட்டார். நான் அதற்கு.. கொஞ்சமும் பதட்டப்படாமல்.. உடனே பதில் அளித்தேன்.. வாகனம் வந்து கொண்டிருக்குது.. கேட்டதுக்கு நன்றி என்று. அந்த இராணுவ ஆளும்.. அதற்கு மேல் பேசாமல்.. அங்கிருந்து அகன்று சென்றுவிட்டார். இது வழமையான இராணுவ ஆக்களின் கெடுபிடி அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாகத் தோன்றியது. ஒருவேளை நாட்டுக்குள் வருபவர்களை எந்த தொந்தரவும் செய்யாமல்.. உள்ள அனுமதிக்கும் படி பணிப்புரை வழங்கப்பட்டிருக்குமோ என்னமோ என்று நினைக்கத் தோன்றியது. இந்தப் பக்குவமான நடத்தைக்குரிய பணிப்புரைக்கு.. நாட்டின் தற்போதைய பொருண்மிய நிலையும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்று எண்ணத்தோற்றியது. 

ஆனாலும்.. எங்களை எல்லாம் வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் காணும் பார்வை அங்கு குறைவு. ஏனெனில்.. நம்ம தோற்றம் கலர் அப்படி. இதற்கு நல்ல உதாரணம்.. அதுவும் இந்தப் பயணத்திலேயே நிகழ்ந்தது.

குறித்த எயார் பஸ் விமானம்.. இலங்கையில் தரையிறங்க முதல்.. விமானப் பணிப்பெண் (தெற்காசியப் பெண்) வெளிநாட்டவர்கள் நிரப்ப வேண்டிய.. இலங்கை குடிவரவு குடியகழ்வு பத்திரம் ஒன்றை வெள்ளைத் தோல் பயணிகளுக்கு பார்த்துப் பார்த்து வழங்கிக் கொண்டிருந்தார். நானும் தான் அமர்ந்திருந்தேன். நம்மிடம் ஒரு கேள்வியும் கேட்காமல்.. அந்தப் பத்திரத்தையும் தராமல் கடந்து செல்ல முற்பட்ட வேளை.. நானே வலிந்து கேட்டேன்.. ஏன் அந்த பத்திரத்தை எனக்கு தர வேண்டுமா என்று கேட்கவில்லை என்று. அதற்கு அவர் சொன்னார்.. நீங்கள் சிறீலங்கன் என்று நினைத்தேன் என்று. அவருக்குச் சொன்னேன்.. அது தவறு.. நீங்கள் கேட்டிருக்கனும்.. ஏன்னா நான் சிறீலங்கன் இல்லை. எனக்கும் அந்தப் பத்திரம் தேவை என்று. அதற்கு அந்த பணிப்பெண் மன்னிப்கோரிக் கொண்டே.. பத்திரத்தை தந்துவிட்டு நகர்ந்து சென்றார்.

ஒரு சில மணி நேரக் காத்திருப்பின் பின்.. ஏற்ற வேண்டிய வாகனம் வந்தது. ஆனாலும் வாகனத்தைக் கண்டதும் ஒரு வித அதிர்ச்சியில் உறைந்தேன்..

அதிர்ச்சிக்குரிய காரணத்தோடு தொடரும்.. 

Edited by nedukkalapoovan

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.