Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

 சார்!  இறங்கின இந்திய இராணுவ விமானம் எத்தினை நாளுக்கு நிக்கும் ? 😷

பெற்றோல் அடிக்க… அடிக்கடி இந்தியாவுக்கு போயிட்டு வந்து, 
இங்கை தான்… நிரந்தரமாய் நிற்கும். 😁

  • Replies 135
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைக்கிறேன்  ஏப்ரல் முதலாம் திகதி முடிய போய் மீண்டும் அடுத்த ஏப்ரலில்  இல் தான் வரும் 😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது.

https://tamonews.com/news/103424/

 

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

விரைவில்..  மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... 

ஏன் சார் பொதி ஒண்ணும் போடலையோ?

ரொம்ப பசியா இருக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது.

https://tamonews.com/news/103424/

 

கிருபன் ஜீ ... சத்தியமாக, இது நான் எழுதியது.
ஆரோ  என்னுடைய பதிவை.. அப்படியே... ஆட்டையை போட்டு விட்டார்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ ... சத்தியமாக, இது நான் எழுதியது.
ஆரோ  என்னுடைய பதிவை.. அப்படியே... ஆட்டையை போட்டு விட்டார்கள். 🙂

மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கிருபன் said:

மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜

என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

  • Like 1
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

இப்போ... வந்து இறங்கிய, இந்திய  இராணுவம்
ஸ்ரீலங்காவில் நிரந்தரமாக தங்கினால்... என்ன செய்வது?

ஈழப் போராட்டத்தின் போது..   முன்பு அமைதிப் படை என்று வந்த.. 
இந்திய இராணுவத்தை.. அடித்து, திரத்த.... புலிகள் இருந்தார்கள்.

ஆனால் இப்போ... அவர்களை, திருப்பி அனுப்ப... 
ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அவ்வளவு கெட்டித்தனம் இல்லை.  

சீன... இராணுவத்தை கூப்பிடவும்,
ஸ்ரீலங்கா தயங்காது என்று நினைக்கின்றேன்.

ஆனால்... இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடி... 
கைநீட்டி  வாங்கின கடனுக்காக,
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்....
ஸ்ரீலங்கா மனதிற்குள்.. புழுங்கிக் கொண்டு இருக்கப் போகுதா...
என்பதை, வருகின்ற காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்..
இந்தியாவின் பிரசன்னத்தை...  எவ்வளவு நாள்  
சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.

வாங்கிய பணம் திரும்ப கொடுக்க முடியாத பட்சத்தில் இலங்கை இந்தியாவுக்கு அறுதியாக போகிறது.

முதலில் யாழ் தீவகங்கள் இந்தியாவுக்கு போகிறது.

மொத்தத்தில் இந்தியாவின் புதிய மாநிலமாக இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது.

வசி நேற்று கறுப்புச் சந்தையில் டாலர் 425 ரூபாவரை போனதாக தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

ராஜீவ் காந்திக்கு பிடரியில போட்ட கோபத்தையும் வைத்து சாத்துவான்.

 

 

 

ராஜீவ் காந்திக்கு, பிடரியில் அடி  விழுந்ததை அடிக்கடி,
ஹிந்தியனுக்கு  நினைவு  படுத்த வேண்டும்.
அவங்களுக்கு.. மறதிக் குணம் அதிகம். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிந்திக்கிடைத்த செய்தி— மூண்டு விமானத்தில ஒண்டு அம்பாந்தோட்டையில் இருந்து சீனக்காரன் அடிச்ச ஏவுகணையில தரை இறங்க முன்னமே விழுந்து நொருங்கிப்போச்சு..

அம்பாந்தோட்டையில் இருந்து... சீனன் அடித்த ஏவுகணைக்கு, 
இந்தியா பதில் அடி கொடுத்தால்...
ஸ்ரீலங்காவில் ஒரு  ரஷ்ய - உக்ரைன் போர்  மாதிரி ஒன்று நிகழும்.

அதனை  நிகழ்த்த வேண்டாம்... என்ற நல்ல எண்ணத்தில், 
சீனாவின் ஏவுகணை தாக்குதலை, 
இந்தியா... மிக  உன்னிப்பாக அவதானிக்கின்றது.   🤣

4 hours ago, nunavilan said:

இந்தியாவின் சில மட்டங்களில் சிறிலங்காவை தங்களின் ஒரு மாநிலமாக கொண்டுவரும் எண்ணங்கள் அடிபடுகின்றன.

உண்மை... நுணா & ஈழப்பிரியன்.
இந்தியாவுக்கு அந்த ஆசை நெடு நாளாக உள்ளது.
ஆனால்... அதை வெளியில் சொன்னால், 
காறி  துப்புவார்களோ... என்று கூச்சமாக உள்ளது.   🤣

23 minutes ago, ஈழப்பிரியன் said:

வாங்கிய பணம் திரும்ப கொடுக்க முடியாத பட்சத்தில் இலங்கை இந்தியாவுக்கு அறுதியாக போகிறது.

முதலில் யாழ் தீவகங்கள் இந்தியாவுக்கு போகிறது.

மொத்தத்தில் இந்தியாவின் புதிய மாநிலமாக இலங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

மிகவும் மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது, ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை திவாலாகும் என நிதி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆண்டின் ஆரம்பத்திலேயே யாழில் குறிப்பிடப்பட்டது, ஆனாலும் இலங்கையை வெளிநாடுகள் கைவிடாது என ஒரு கருத்து நிலவுவதனால் புலம்பெயர் தமிழர் அதிக கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது, இது ஒரு ஆபத்தானது இலங்கை திவாலாவதுதான்  வெளிநாட்டிற்கு அனுகூலம் அதனால்தான் தற்காலிக கடன் என்ற பெயரில் உலகை ஏமாற்றுகிறார்கள்.

உண்மையான அக்கறை இருந்தால் இலங்கைக்கு கடனல்லாமல் மானியமாக காசு வழங்கவேண்டும். 

இது பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களும் பாதிப்படையும் பிரச்சினை, அத்தியாவசிய உணவுப்பொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது.

கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது.

இலங்கை மீட்டெடுக்கும் நிலைமையைக்கடந்து விட்டது, இலங்கையின் இறையாண்மை என்பதே இனிமேல் இருக்காது.

பல அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு இரவோடிர்வாக தலை மறைவாகும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கையில் இவ்வாறு ஒரு பிரச்சினை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது புரியாமல் இருந்தபோதே யாழில் இலங்கை பொருளாதாரப்பிரச்சினை பேசப்பட்ட போது, இலங்கையிலிருந்த கள உறவுகள் கூட எதிர்வாதம் செய்த நிலை காணப்பட்டது.

இலங்கை இன்று உள்ள நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, இலங்கை தனது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிற்து என்பது ஏனோ பலருக்கு புரியவில்லை, இதனால் ஏற்படும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர் இன்னும் தாயாராகவில்லை, இது ஆபத்தான விளைவை உருவாக்கப்போகிறது.

வசி... ஸ்ரீலங்காவிற்கு  இவ்வளவு மோசமான நிலை வந்த பின்பும்,
சென்ற வாரம் அதன் பிதமராகிய மகிந்த ராஜ பக்ச,
புதிய  புத்த விகாரை ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட  யாழ். கந்தரோடைக்கு
வந்து சென்றதை பார்த்தால்... இவர்கள் எந்தக் காலத்திலும் 
திருந்தப் போவதில்லை என்றே தெரிகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

 

ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கை- தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆலோசனை! |  nakkheeran

تويتر \ Dinakaran على تويتر: "#திருவாரூர் #இடைத்தேர்தலில் #நாம் தமிழர்  கட்சி #தனித்து #போட்டியிடும் : #சீமான் அறிவிப்பு #Tiruvarur #byelection  https://t.co/KL6LocE9Po"

 ஸ்ரீலங்காவில்....  ஸ்ராலின்  அறிமுகப் படுத்த இருக்கும், திராவிட மாடலுக்கு...
வாய்ப்பில்லை ராஜா... என்று, செந்தமிழன் சீமான் தெரிவித்தார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் சார் பொதி ஒண்ணும் போடலையோ?

ரொம்ப பசியா இருக்கம்.

பொதியை... மேலை இருந்து போட்டால், சீனாக்காரன் எடுத்துப்  போடுவான்.  
இந்தியாவில் இருந்து, நாலு பில்லியன் அமெரிக்கன் டொலர் தந்திருக்கிறம்.
நீங்கள்... உங்களுக்கு, விரும்பினதை வாங்கி சாப்பிடுங்கோ. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது.

https://tamonews.com/news/103424/

 

1 hour ago, கிருபன் said:

மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜

கிருபன் ஜீ...   அந்த செய்தித் தளம், இந்தச் செய்தியை... 
தனது பிரதான செய்தியில் போட்டுள்ளதை நினைக்க, சிரிப்பாக உள்ளது.
பாவம்... அதன் வாசகர்கள்.

  • Haha 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

நீங்கள் பம்பலுக்கு எழுதினது வேசுபுக் எல்லாம் போய் சிலர் போன் எடுத்துக்கூட விசாரிக்கின்றனர், மெய்யா என்டு!🤣🤣

இலங்கையில இருந்து குடும்ப நண்பர் போன் எடுத்து விசாரிக்கிறார்.🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, nunavilan said:


 

 

🤣

இதை இணைக்க வந்தால் நுணா இணைத்திருக்கின்றார்😂

யூரியூப்பர்ஸ், ற்விற்றர்ஸ் விண்ணர்கள், முகநூல் ஆய்வாளர்கள், வாட்ஸப் பரப்பியர் எப்படி உழைக்கின்றார்கள் என்பதற்கு மேலுள்ளது சமர்ப்பணம்.

யாழில் பொய்யான விடயங்களை ஒட்டுவதில்லை என்று நல்ல அபிப்பிராயம் இருக்கின்றது போலுள்ளது. 😆

Posted

ஒரே போஸ்டில் தமிழ் சிறி ஒபாமா ஆகிவிட்டார்

  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எல்லாரும் மேல சிறி அவர்கள் எழுதியதை பொய்யென்று நினைத்துச் சிரிக்க வேண்டாம்.😭😭

ஓநாய் வருது ஓநாய் வருது என்று சொல்லி, உண்மையிலேயே ஓநாய் வந்துவிட்டது.

உண்மையிலேயே இந்தியன் வந்து இறங்கிட்டான். 😥😥😤😤

 

என்ர மாமா ஒராள் கொழும்பு கட்டுநாயக்காவில் வேலை செய்கிறார். அவர் இன்று மதியம் (வெளிநாட்டு நேரம்), போனில் கூறும் போது,

 3 கெர்குளிஸ் சி- 17 வானூர்திகள் இரவு வந்து இறங்கியுள்ளதாகவும் அவற்றில் ஒவ்வொன்றிலும் சுமார் 250 படை வீரர்கள், குறிப்பாக இந்தியாவின் "ரெட் டெவில்ஸ்" என்ற அதிரடிப்படைஞர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வந்துள்ளவர்களில் சிலபேர் கூலிங் கிளாஸ் அணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். (இதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் அனைவரும் புலனாய்வுத்துறையினராக இருக்க வாய்ப்புண்டு. இவர்கள் கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க அரசாங்கத்தால் வரவளைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். பண்டாரநாயக்கா காலம் போன்று! கடவுளே, என்னவெல்லாம் நடக்கப்போகுதோ)

மேலும் இனந்தெரியாத வேறு சில மிகையொலி வேக விமானங்களும் அங்கு திடீரென தரித்து நிற்பதாகவும் தெரிவித்தார். அவையெல்லாம் நீல வெள்ளை வண்ணம் பூசியதகாவும் இருக்கிறதாம் (இந்தியன்ர விமானங்கள்தான் நீலம் வெள்ளை என்பது குறிப்பிடத்தக்கது)

நானும் அவர் முதலில் கூறியதை மேலே குறிப்பிட்டு நகைத்தனான். ஆனால் இப்போது அவரே அதை உறுதிசெய்துவிட்டார். வந்தன் இந்தியந்தானாம். ஐயோ!

இந்தப் படத்தில் இருப்பது போன்ற வானூர்திதான் உண்மையிலேயே அங்கு வந்து நிற்கின்றதாம்.

indian planes at kattunaayakka.jpg

 

என்ர கடவுளே, நினைக்கவே உடம்பெல்லாம் வேர்க்குது. அந்தச் சிங்களச் சனங்கள் என்ன அல்லோலகல்லப்படப் போகுதோ... கடவுளே நீதானப்பா🙏🙏

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

 

கிருபன் ஜீ...   அந்த செய்தித் தளம், இந்தச் செய்தியை... 
தனது பிரதான செய்தியில் போட்டுள்ளதை நினைக்க, சிரிப்பாக உள்ளது.
பாவம்... அதன் வாசகர்கள்.

சிறி இந்த செய்தியை யூரியூப்பில் ஓடவிட்டிருந்தால் பிச்சுக்கிட்டு ஓடியிருக்கும்.

ஒரே நாளில் பணக்காரனாகியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

 

அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்..
இந்தியாவின் பிரசன்னத்தை...  எவ்வளவு நாள்  
சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.

அதற்காக தான் உதயகம்பன் பிலா,விமல் வீரவம்சா,இன்னும் சில இடசாரிகளை வெளியனுப்பியதாக கதை அடிபடுகிறது ....அரசாங்கத்திலிருந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது ....வெளியில் போய் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க சொன்னதும் ராஜ்பக்சா குடும்பமாம்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

இதை இணைக்க வந்தால் நுணா இணைத்திருக்கின்றார்😂

யூரியூப்பர்ஸ், ற்விற்றர்ஸ் விண்ணர்கள், முகநூல் ஆய்வாளர்கள், வாட்ஸப் பரப்பியர் எப்படி உழைக்கின்றார்கள் என்பதற்கு மேலுள்ளது சமர்ப்பணம்.

யாழில் பொய்யான விடயங்களை ஒட்டுவதில்லை என்று நல்ல அபிப்பிராயம் இருக்கின்றது போலுள்ளது. 😆

தமிழ் சமூக  ஊடகங்களில் உள்ள அரைகுறையள் வெடிப்புளுகு ஆய்வாளர்கள் மற்றையவரின் செய்தியை திருடி தங்களின் செய்தி போல் போடும் கள்வர்கள் சகலரும் இன்று சிறியன்னாவின் மிசேல் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளனர் சில தளம்கள் செய்தியை போட்டுவிட்டு உண்மையை தேட பொய் என்றவுடன் அவசர அவசரமாய் தூக்கினவையல் அப்பதான் தெரியுது முழு கூட்டமும் யாழை பார்க்கினம் என்ற விடயம் .

 வாழ்த்துக்கள் தமிழ் சிறியண்ணாவுக்கு .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி லங்கா சிறியே வெளியிட்டுவிட்டது. ஜேவிபிலையும் வந்துள்ளது... 

கடவுளே, ஆண்டவா

https://jvpnews.com/article/colombo-cames-india-military-aircraft-gotabaya-1648835513

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.