Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது நாங்கள் இளைப்பாறும் நேரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்னில் - 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி - இடம்பெற்ற அற்புதமான சம்பவம் ஒன்றுக்கான பதில் நிகழ்வை, சரியாக 13 வருடங்களில் இந்த ஆஸ்திரேலிய மண், இன்று என் கைகளில் தந்து கணக்குத் தீர்க்கும் என்று நான் நம்பியிருக்கவேயில்லை. ஆனாலும், காலம் எப்போதும் யாருக்கும் கடன் வைக்காது என்பதை, இன்று மாலை பெடரேஷன் சதுக்கத்திலுள்ள கோப்பிக்கடையிலிருந்து கப்பிச்சீனோவை உறிஞ்சும்போது உற்சாகமாக உணர்ந்துகொண்டேன். 

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முள்ளிவாய்க்காலை இராணுவ ஆட்லறிகள் கிட்டத்தட்ட முழுதாக விழுங்க ஆரம்பித்திருந்தன. தமிழ் நெற்றும் புதினம் இணையத்தளமும் சாவின் எண்ணிக்கைகளை சலாகை வரைவில் போட்டு, கணக்குச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்த தமிழர்கள், யார் யாரோ கால்களிலெல்லாம் விழுந்தார்கள். முகவரி தெரியாத கவுன்ஸிலர்கள் கைகளையெல்லாம் பிடித்தார்கள்.

மெல்பேர்னிலும் ஆர்ப்பாட்டங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என்று எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறின. ஆஸ்திரேலிய அரசுதான் செவிசாய்ப்பாதாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களிடமாவது பிரச்சினையைச் சொல்லி, அவர்களின் ஊடாக அரசுக்கு கொடுத்து, போரை நிறுத்தலாம் என்று அப்பாவிகளாக யோசித்தார்கள்.

இதன் ஒரு பகுதியாக - ஏப்ரல் 4 ஆம் திகதி - மெல்பேர்ன் மேற்கிலுள்ள 
Footscray பிரதேசத்திலிருந்து வாகன பவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வாகன பவன ஒழுங்கின்படி, சிறிலங்கா அரசின் போரை நிறுத்தக்கோரும் பதாகைகளை வாகனத்தின் வெளிப்புறமாகக் கட்டிக்கொண்டு, தமிழீழத் தேசியக்கோடியோடு 
Footscray பிரதேசத்திலிருந்து மெல்பேர்ன் நகர் ஊடாக தென்கிழக்கிலுள்ள Dandenong பிரதேசத்தைச் சென்றடைவது. 

நண்பனது காரில் அவனையும் அவனது தாயாரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். சனிக்கிழமையென்று நினைக்கிறேன். அதிகம் நெரிசல் இல்லாத மெல்பேர்ன் தெருக்களில் எங்களது வாகனங்கள் அனைத்தும் ஓரளவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஓடியது. மெல்பேர்ன் நகருக்குள் புகுந்ததும், வாகனங்கள் சிக்னல் சந்திகளால் பிரிந்துகொண்டன். 

நான் செலுத்திக்கொண்டிருந்த வாகனம் மெல்பேர்ன் நகருக்குள் தனித்து ஓடத்தொடங்கியது. அப்போது, மெல்பேர்ன் Russel வீதியிலிருந்து Bourke வீதி வழியாகச் சென்று, Spring வீதியிலுள்ள விக்டோரிய நாடாளுமன்றத்தின் முன்பாகச் சென்று, நகரிலிருந்து வெளியேறுவதாக நானும் நண்பனும் முடிவெடுத்தோம். மெல்பேர்ன் நகருக்குள் வார விடுமுறையன்று திரண்டிருந்த மக்களுக்கு ஓரளவு எமது வாகனத்தில் கட்டியிருந்த பாதாகையை - அதிலிருந்து செய்தியை - காண்பிப்பது அந்தப் பயணப் பதையின் நோக்கமாக இருந்தது. 

ஆனால், அன்றைய தினம் மதியம், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக - அது நடத்திக்கொண்டிருந்த போருக்கு ஆதரவாக - மெல்பேர்ன் சிங்களவர்கள் ஏற்பாடு செய்திருந்த மிகப்பெரியதொரு ஆர்ப்பாட்டம், விக்டோரிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது என்பது, Bourke வீதிக்குள் வாகனத்தை திருப்பிக்கொண்ட சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. விக்டோரிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக பெரும் பைலா கோஷ்டியொன்று, கூத்தும் கும்மாளமும் அடித்தபடி ஆக்ரோஷித்துக்கொண்டிருந்தது. சிறிலங்கா கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் முதல் 15 ஓவர்கள்போல, எங்கு பார்த்தாலும் சிங்களக்கொடிகள். குறைந்தது இரண்டாயிரம் பேரிருப்பர். 

அத்தனை பேரையும் எதிர்கொண்டபடி, புலிக்கொடியுடன் ஒரு வாகனம் போனால் எப்படியிருக்கும்? எங்களை நோக்கி வேட்டை நாய்கள் போல ஓடிவந்தார்கள். எப்படியாவது காரைப் பிரித்து, உள்ளிருப்பவர்களை உப்புப் புளிபோட்டு தின்றுவிடலாம் என்ற வெறி, ஓடிவந்த ஒவ்வொரு சிங்களவனின் கண்களிலும் பார்த்தேன். தவறான இடத்திற்குள் நுழைந்துவிட்டோமே என்று சுதாரித்துக்கொள்வதற்குள், கொடியை பிய்த்துக்கொண்டு ஓடினார்கள். கட்டியிருந்த பதாகையை கழற்றிக்கொண்டு ஓடினார்கள். காரை முதலில் உதைந்தார்கள். தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் காரின் மீது ஒவ்வொருத்தராக ஏறி ஓடினார்கள். ஒருவன் ஏறி நின்று, கையில் கிடந்த தடியால் கண்ணாடியை ஓங்கி ஓங்கி குத்தினான். ஒரு holden commodore குறித்த மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்த நாள் அன்றுதான் எனலாம். கண்ணாடி உடையவில்லை. ஆனால், காரின் கூரையின் மீது ஏறிக்குதித்து, இயன்றளவு வளைத்துவிட்டார்கள்.

எங்கிருந்தோ ஓடிவந்த பொலீஸார் கடுகுப்புகையடித்து, அத்தனைபேரையும் கலைத்துவிட்டு, எங்களது காரைக் கவனமாக மெல்பேர்ன் நகரிற்கு வெளியே பாதுகாப்புடன் அழைத்து வந்து, வெளியேற்றினார்கள். 

அன்று எங்களது காரின் மீது ஏறி ஓடியவர்களும் - 

யுத்தம் முடிந்த பிறகு தலைநகர் கன்பராவுக்குச் சென்று களியாட்டம் போட்டவர்களும் - 

கோட்டபாய ஜனாதிபதியாகவேண்டும் என்பதற்காக சிறிலங்காவுக்கு டிக்கெட்டு எடுத்துச் சென்று வாக்களித்துவிட்டு வந்தவர்களும் - 

கோட்டபாய வெல்லவேண்டும் என்று மெல்பேர்னில் புளகாங்கிதம் பொங்க கூட்டம் போட்டவர்களும் - 

இன்று மெல்பேர்ன் பெடரேஷன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள். 

"கோட்டா ஹொற ஹொற" என்று கூவினார்கள். "ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்பாதீர்கள். ஜெயிலுக்கு அனுப்புங்கள்" - என்று குழறினார்கள். "இனியும் எங்கள் நாட்டினை இந்தக் கொடியவர்களின் கைகளில் விட்டுவைக்கமுடியாது" - என்று கன்னத் தசை துடிக்கக் கத்தினார்கள்.

மூன்று மணிக்கே ஆர்ப்பாட்டத்தில் ஆஜராகியிருந்தேன். 

இன்று சிங்கள தேசத்தினை சில்லு சில்லாக சிதைத்துக்கொண்டிருப்பவன், அன்று தமிழர்களின் தேசத்தை யுகத்துக்கும் மீளமுடியாதபடி கருக்கியபோது, அவனுக்கு ஆதரவாக எங்களது காரின் மீது ஏறி நின்றவர்களின் கண்கள் எங்காவது தெரியுதா என்று பார்த்தேன்.

"இன்னும் இருபது கிலோ மீற்றர்தானிருக்கு. அதுக்குப் பிறகு முழு நாடும் எங்களுக்கு. பிறகு என்னடா செய்வாய் நாயே" - என்று பொலீஸின் பாதுகாப்போடு கூட்டிச்சென்ற எங்களது - காரின் மீது காறித்துப்பியவனின் கண்கள் எங்காவது தெரியுதா என்று பார்த்தேன். 

மே 18 ஆம் திகதி போர் முடிந்த பிறகும், இருபதாம் திகதி வரைக்கும், இதே பெடரேஷன் சதுக்கத்தில் செய்வதறியாது, புலிக்கொடியுடன் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த சிலரைப் பார்த்து, அவ்வழியால் நடு வீரலைக் காண்பித்துவிட்டுப்போன - சிங்க ஸ்டிக்கர் போட்ட - வாகனச் சாரதிகள் எங்காவது தெரிகிறார்களா என்று பார்த்தேன். 

போர் முடிந்து எத்தனையோ வருடங்களான பிறகும், மே மாதம் வந்தால், தமிழ் மக்கள் செத்த உறவுகளுக்கு சுட்டியில் தீபம் ஏற்றுவதற்கே உரிமை மறுக்கப்பட்டிருந்த வேளையில், கிரிபத் சட்டியோடு அலைந்த சிறிலங்கா என்ற தேசத்தின் அற்புதப் பிறவிகளின் கண்கள் எங்காவது தெரியுதா என்று பார்த்தேன்.

இவ்வளவும் ஏன், மகிந்தவிற்கு பக்கத்தில் நின்று படம் எடுப்பதையெல்லாம் பிறவிப்பெரும் பயனாகவும் - அவர் குடும்பமே தமிழ் மக்களின் குலம் செழிக்க வந்த தலைவர்கள் என்றும் - வாய் நீர் வடியச் சொல்லித் திரிந்த, கோட்டாவின் கோடரிகளைக்கூடத் தேடிப்பார்த்தேன்.

யாரையும் காணவில்லை. 

பெடரேஷன் சதுக்கத்தில் ஒரு கோப்பிக் கடையுள்ளது. சும்மா சொல்லப்படாது. அதில், இன்று எதை வாங்கிக்குடித்தாலும் நல்ல சுவையாகவே இருந்தது.

large.BC56E5F7-85F8-49B1-A4E6-FA0D48130568.jpeg.17772fffa8fbf9b2200abcd2bbdf37e3.jpeg

https://www.facebook.com/584910603/posts/10166745393640604/?d=n

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சாக்களின் அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் வலுக்கும் போராட்டம். பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் போராட்டம்.

 

ஜேர்மனிய தலைநகர் பெர்லினில்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் இருக்கே காலம் - அது ரெண்டு கையிலயும் புழுதியும் விபூதியும் படிச்சு உக்காந்திருக்கு எவ்வளவு பெரிய வெற்றியா இருக்கட்டும்! சூ!மறைஞ்சு போ'ன்னு புழுதியடிச்சு வெற்றிய மறைச்சு விட்டுப் போயிருது எவ்வளவு பெரிய துன்பமாயிருக்கட்டும்! 'சூ!மறந்து போன்னு விபூதியடிச்சுத் துன்பத்த மறக்கடிச்சிட்டுப் யோயிருது.

காலத்துக்குண்ணு மாறாம இருக்கிற கொணம் இது ஒண்ணுதான்.

யாரு பொறந்தாலும் ஆகாயத்துல வெள்ளி மொளைக்கிறதுமில்ல யாரு செத்தாலும் சூரியன் நெஞ்சப்புடிச்சு நிண்டு போறதுமில்ல..

காலம்தான் ஞானம்; காலத்தை போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி..

     -வைரமுத்து

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்!

 

கொலை மிரட்டல் - பிரிகேடியர் பிரியங்க - வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் - தீர்பும்  பிடியாணையும்... - GTN

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Y4hZIVQ1?format=jpg&name=small

இது போனஸ் ⇩ 🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒரே மாதிரி பைலாதான் போடுறாங்கண்ணே.....ஒரே மருந்துதானோ/

கழுத்தறுப்பானும் இப்ப லண்டனிலை அசைலம் அடிச்சிருப்பாரே/

  • கருத்துக்கள உறவுகள்

6-E93747-D-F0-C6-44-E2-9777-36-FC38862-C

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

எதுக்கும் ஒரே மாதிரி பைலாதான் போடுறாங்கண்ணே.....ஒரே மருந்துதானோ/

கழுத்தறுப்பானும் இப்ப லண்டனிலை அசைலம் அடிச்சிருப்பாரே/

இஞ்ச கனடாவில் கனபேர் கையத் தூக்கியிருக்கினம. அதில கனக்க சிங்கங்களும் தொப்பிகளும் இருக்கினம். எல்லாருமே பெரிய பெரிய ஆக்கள்.  காசும் அதிகாரத்திலும் புரண்ட பெரிய ஆக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

இஞ்ச கனடாவில் கனபேர் கையத் தூக்கியிருக்கினம. அதில கனக்க சிங்கங்களும் தொப்பிகளும் இருக்கினம். எல்லாருமே பெரிய பெரிய ஆக்கள்.  காசும் அதிகாரத்திலும் புரண்ட பெரிய ஆக்கள். 

கனடா நியூசு உங்களுக்கு அத்துப்படி....கண்டுபிடிக்கிறதிலை விண்ணன்தான்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

கனடா நியூசு உங்களுக்கு அத்துப்படி....கண்டுபிடிக்கிறதிலை விண்ணன்தான்....

ஏனென்றால் நான் வசிப்பது கனடாவில். எனது நண்பர்கள் பலர்  இத்துறை(?)யுடன் தொடர்புபட்டவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இது நாங்கள் இளைப்பாறும் நேரம்!

2009 மேயில் இருந்து தமிழர்கள் இளைப்பாறிக்கொண்டுதானே இருக்கின்றார்கள். இப்ப சம்மருக்கு சிறிலங்காவுக்கு ஹொலிடேயில் போய் கோவில் திருவிழா எல்லாம் பார்த்து காலாற இளைப்பாறமுடியவில்லையே என்ற கவலையைத் தவிர வேறு என்ன இருக்கும்?

சிங்களவர் ஒரு தேக்கரண்டி சம்பலுக்கு 20 ரூபா கொடுத்துச் சாப்பிடும் நிலை இன்று. நாளை பாணும் சம்பலும் கூட இல்லையென்றாலும் இனவாதத்தையும், பெரும்பான்மைச் சிந்தனையையும் இழக்கமாட்டார்கள். பொலிஸும், இராணுவமும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேரும் நிலை வந்தால் அரச சொத்துக்களுடன்,  தமிழர், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேர்த்துத்தான் கொள்ளையடிப்பர். 

அப்பவும் தமிழரும், தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

2009 மேயில் இருந்து தமிழர்கள் இளைப்பாறிக்கொண்டுதானே இருக்கின்றார்கள். இப்ப சம்மருக்கு சிறிலங்காவுக்கு ஹொலிடேயில் போய் கோவில் திருவிழா எல்லாம் பார்த்து காலாற இளைப்பாறமுடியவில்லையே என்ற கவலையைத் தவிர வேறு என்ன இருக்கும்?

சிங்களவர் ஒரு தேக்கரண்டி சம்பலுக்கு 20 ரூபா கொடுத்துச் சாப்பிடும் நிலை இன்று. நாளை பாணும் சம்பலும் கூட இல்லையென்றாலும் இனவாதத்தையும், பெரும்பான்மைச் சிந்தனையையும் இழக்கமாட்டார்கள். பொலிஸும், இராணுவமும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேரும் நிலை வந்தால் அரச சொத்துக்களுடன்,  தமிழர், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேர்த்துத்தான் கொள்ளையடிப்பர். 

அப்பவும் தமிழரும், தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள்.

அது சிங்கள்ளர்கள் வழமையாய் செய்வதுதானே......அவர்களுக்கு பஞ்சம் வரும்போதெல்லாம் யாழ்தேவியை மறித்து கொள்ளை அடிப்பது, கொழும்பில் தமிழர் கடைகளை உடைப்பது, வீடுகளுக்குள் புகுந்து சூறையாடுவதுதானே அவர்களின் வழக்கம்......நாங்களும் சளைத்தவர்களல்ல. அடிவாங்கி அவலத்தோடு கப்பலில் யாழ்ப்பாணம் வந்தாலும் அடுத்த மாதமே "தொலைத்ததை அந்த இடத்தில்தான் எடுக்க வேண்டும்" என்று ஒருமாதத்தில் மீண்டும் போய் விடுவோம்மெல்லோ......!   🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.