Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

 

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

 

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

 

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

 

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

  • Like 6
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேடடால் சொல்லுவினம் இலங்கை சாப்பாட்டு

சாமான்கள் வரத்து இல்லை என 

கரீபியனில்  இருந்து இறக்கும்  மீன்களைக் காட்டி

சிலோன் விளை என்பார். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனித் தலைப்பில் இணைத்தமை… சிறப்பு அல்வாயன். 👍🏽
இவ்வளவு அழகாக கவிதை எழுதுவீர்கள் என்று, இப்போதான் தெரியும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்க தான் போனாலும் எமது சாப்பாடுக்காக தவிக்கும் போதுதான் சாப்பாட்டின் அருமை புரியும்.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

அண்மையில் சிறி சிகிச்சைக்காக தங்கியிருந்த போது எமது உணவுக்காக எப்படி ஏங்கியிருப்பார்?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றிகள் ..நிலாமதி,யாயினி,ஈழப்பிரியன்..தமிழ் சிறியர்

 

கரீபியனில்  இருந்து இறக்கும்  மீன்களைக் காட்டி

சிலோன் விளை என்பார். 

இதுதான் எங்கும்

 

தனித் தலைப்பில் இணைத்தமை… சிறப்பு அல்வாயன். 👍🏽
இவ்வளவு அழகாக கவிதை எழுதுவீர்கள் என்று, இப்போதான் தெரியும்

நிறையக் கிறுக்கி வைத்திருக்கின்றேன்...அதில் ஒன்று..நன்றி...

 

ஈழப்பிரியன் ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி....சாப்பாடு...இது ஆரையும் விட்டு வைப்பதில்லை.. மீண்டு வந்த சிறியர்..நல் ஆரோக்கியத்துடன்...நன்றாகச் சாப்பிட்டு நலமே வாழ ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் நம்ம சாப்பாடுதான் பிடிக்கும்......அப்பதான் சாப்பிட்டது போல் இருக்கும்......!

நல்லதொரு புலம்பல் கவிதை அல்வாயன்......தொடர்ந்து கிறுக்குங்கள்.....!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, alvayan said:

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

அல்வாயன் அவர்களே தமிழ்க் கடைகளில் இலங்கைச் சாப்பாடு சாப்பிட்டால் இறுதியில் பத்தியச் சாப்பாட்டில்தான் அது கொண்டுவிடும் என்று கவிதையும் எழுதத்தெரிந்த உங்களுக்கு ஏன் இந்த வீண் ஆசை 🤫😩.

10 hours ago, alvayan said:

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

 ஆனாலும் கவிதை இலங்கைச் சாப்பாட்டை எண்ணவைத்து வாயைச் சப்புக்கொட்ட வைக்கிறது.😋

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டொரொன்டொவில் சிங்களவனின் கடைகள் உள்ளதா? இங்கு போல் அங்கு பொல்ச‌ம்போல், கட்ட சம்பல், கிரிபத், மாலு எபுல் கறி, சிறிய ரோஸ்பாண், பருப்பிகறி, கொலகெத எல்லாம் கிடக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைய கிறுக்கியது இருக்கிறது எண்டால் அவ்வப்போது எடுத்துட்டு வாங்களன்..✍️🖐️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, alvayan said:

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

என்னப்பா அல்வாய் கவிதை எல்லாம் எழுதி கலாய்க்கிறியள்? பலே பலே 👈👍👍👍

21 hours ago, alvayan said:

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

வயிறு ஒரு நாளும் இலங்கை சாப்பாடு கேக்காது கண்டியளோ...:cool:
உந்த கெட்டாஸ் 8 சென்ரிமீட்டர் நாக்கன் இருக்கிறான் எல்லோ. எல்லாம் அவன்ரை திருவிளையாடல்...👅

ஊரிலை சில பாலன்கள் பள்ளிக்கூடம் போய் அருவரி படிச்சிட்டு வந்தும் தாய்ப்பாலுக்கு அலையுங்களாம். அந்த அலையிற பாலன்களுக்கு தாய்மார் முலையிலை கொஞ்ச வேப்பெண்ணையை தடவி விடுவினமாம்.குடிக்கில் குடிச்சு பாருமன் 🤪



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
    • எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள்  8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு சேவை அதிகாரிகள் 9 பேர் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தடைப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணைகள் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளை உரியவாறு நிறைவுசெய்யப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ‘பிரகீத் எக்னெலிகொடவின் வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினர் 14 ஆண்டுகளாகத் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே இச்சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம். இச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் எவரெனினும், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவத்தொடர்புகளுக்கு அப்பால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.kuriyeedu.com/?p=642470
    • நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள்    சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள்  இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான  அபிவிருத்தி நடைபெற  உதவலாம்..ஆனால்  அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
    • புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் ! Shana     முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர். அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். பல வருடங்களாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். உணவு பரிசோதகர்கள் கூட பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதுவரை 116 பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா? என்பது சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.   https://www.battinews.com/2024/12/116_14.html  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.