Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த ராஜபக்ஷ: "இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ: "இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்"

26 நிமிடங்களுக்கு முன்னர்
 

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். "மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும் அவர் கூறினார். முக்கிய இறக்குமதிகளை செய்ய இயலாத வகையில் போதிய பணமின்றி இலங்கை அரசாங்கம் தவித்து வருவதாகக் கூறி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமயாக உயர்ந்துள்ளன. எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படுமானால், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரான டளஸ் அழகபெரும கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அது பற்றி அவரிடம் ஊடகவியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளித்த பிரதமர், மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.

ஒவ்வொருவருடைய கொள்கைகளும், ஒவ்வொருவருடைய இணக்கப்பாடுகளும் இல்லாமல் எவ்வாறு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ மறுகேள்வி எழுப்பினார்.

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது வேறு அமைச்சர்களைக் கொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு, ஏனையோர் விரும்புவார்கள் என தான் நம்பவில்லை என்றும் மஹிந்த தெரிவித்தார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வரும் கருத்து குறித்தும் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கருத்தை பிரதிபலிக்கவில்லை. வரலாறு பற்றிய தெளிவில்லாத சிலர் அவ்வாறு கூறக்கூடும் என்றார்.

கட்சி தொடர்பிலும், அரசியல் தொடர்பிலும் தன்னிடம் எவரும் அத்தகைய கருத்தையும் முன்வைக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆளும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, ''போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், தீர்வை பெற்றுக்கொடுக்க அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தரவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தராதவரை போராட்டங்கள் தொடரவே செய்யும். பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அலரி மாளிகை திறந்திருக்கும். அவர்கள் வரும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டால், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் வருமாறு நான் அழைக்கிறேன்" என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61203602

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால...

இரண்டு முறை ஜனாதிபதி..... அலரிமாளிகை வாசம்.....

இன்னும் பதவியாசை முடியவில்லை.... அதனால்... எம்பியாகி..... பிரதமராகி......

மனிசன் செத்துக்கித்துப்போனா, அந்த அலரிமாளிகைக்குள்ளே புதைக்காட்டி, ஆவியா திரிவார் போல.... 🤭

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கொய்யால...

இரண்டு முறை ஜனாதிபதி..... அலரிமாளிகை வாசம்.....

இன்னும் பதவியாசை முடியவில்லை.... அதனால்... எம்பியாகி..... பிரதமராகி......

மனிசன் செத்துக்கித்துப்போனா, அந்த அலரிமாளிகைக்குள்ளே புதைக்காட்டி, ஆவியா திரிவார் போல.... 🤭

நாமலுக்கு…. வாய்ப்பு வரும் மட்டும், அந்தப் பதவியை வைத்திருக்க விரும்புகிறார்.
அது…. ஷிராந்தியின், அன்புக் கட்டளை. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாமலுக்கு…. வாய்ப்பு வரும் மட்டும், அந்தப் பதவியை வைத்திருக்க விரும்புகிறார்.
அது…. ஷிராந்தியின், அன்புக் கட்டளை. 😂

தமிழ்நாட்டு  காத்து கொழும்புப்பக்கமும் வீசுது எண்டோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது காணாதாம்...இன்னமும் வேணுமென்றால்...தொடர்ந்து இருக்கத்தானே வேணும்.. என்னுடைய முகப்புத்தகத்தில் வந்ததை காபி பேஸ்ட் செய்துள்ளேன்,,,,நன்றி அந்த உறவுக்கு ...நீர் கொழும்பு முகநூல் தளம்

 

அவர்களின் சொத்துக்களை அம்பலப்படுத்திய ஹேக்கர்கள்!
ஆயிரம் இலட்சம் கோடிக்கு மேல் -ஒரு டிரில்லியன் இலங்கை ரூபாய்கள் (1,050,000,000,000,000 LKR) என அந்த தகவகள் கூறுகின்றன
23-4-2022
ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்களை வெளிப்படுத்தும் உலகப் புகழ்பெற்ற அநாமதேய ஹேக்கர்கள் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அநாமதேய ஹேக்கர்கள், இலங்கையில் ஆட்சியில் இருந்து ராஜபக்சேக்கள் விலக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், 14 நாட்களுக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால், மறைத்து வைக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வெளிவரும் என்றும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, அநாமதேய ஹேக்கர்கள் குழுவினால் ராஜபக்சக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 14 நாள் அவகாசம் நேற்று முன் தினத்துடன் (21) முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அநாமதேய குழு உலகப் புகழ்பெற்ற பல இருட்டு இணையத்தளங்களுக்கு விசேட ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஆர்-எஸ் பேப்பர்ஸ் பை ஏ என்று பெயரிடப்பட்ட இந்த ஆவணம் இரண்டு பகுதிகளாக உள்ளது. ராஜபக்ச குடும்பம் இலங்கையில் (இலங்கையின் உள்ளே) தங்கள் முறைகேடான ஆதாயங்களுடன் முதலீடு செய்ததை முதல் பகுதி காட்டுகிறது. இரண்டாம் பாகம் இலங்கைக்கு வெளியே (இலங்கைக்கு வெளியே) ராஜபக்சே குடும்பம் செய்த முதலீடுகளைக் காட்டுகிறது.
இந்த இரண்டு பிரிவுகளின் கீழும் ராஜபக்சேக்கள் செய்த மொத்த முதலீடு பில்லியன் டாலர்கள் என்றும், இலங்கையில் காணாமல் போன டாலர் கையிருப்பு என்ன ஆனது என்றும் அநாமதேய ஹேக்கர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தரவுகள் அனைத்தும் இலங்கையின் நிதிப் பதிவுகள், கடல்கடந்த வங்கிக் கணக்குகள் மற்றும் இரகசிய இணையத்தளங்களை ஊடுருவியதன் மூலம் பெறப்பட்டவை, மேலும் இந்த ஆவணம் தொடர்பாக பல சர்வதேச நிதி நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
R-S தாள்கள் A - வகை 1 / நாட்டில் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடுகள்
* இல. 276/4, நீர்கொழும்பு வீதி, வத்தளையில் உள்ள சொத்து - இந்த சொத்து ரோஹித ராஜபக்ஷவால் வாங்கப்பட்டது.
* பட்டர் பூட்டிக் சூப்பர் உணவகம் - கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர உணவகம். யோஷித ராஜபக்ச இங்கு மறைந்திருக்கும் உரிமையாளர்.
* பெரேரா & சன்ஸ் (PnS) - நாடு தழுவிய உணவக சங்கிலி. நாமல் ராஜபக்ச 500 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளார்.
* ரிச்சி டீ - ஒரு தேயிலை உற்பத்தி தொழில். இது சமல் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட 35 மில்லியன் ரூபா வர்த்தக முயற்சியாகும். * மெல்வா சீமெந்து - பசில் ராஜபக்சவுக்கு 60% உரிமை உள்ளது.
* பிரமிட் வில்மர் நிறுவனம் - இலங்கையில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. இது ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்.
* டெம்பிள் குரூப் - ரூ.21 பில்லியன் வருடாந்த விற்றுமுதல் கொண்ட இலங்கையின் இயங்கு நிறுவனம். சுவிஸ் வங்கிகளின் வருடாந்த வருமானம் ராஜபக்ச குடும்பத்தின் உரிமையாளரான டட்லி சிறிசேனவினால் இங்கு டெபாசிட் செய்யப்படுகிறது.
* நண்டு அமைச்சகம் - இலங்கை சூப்பர் உணவகங்களின் உலகளாவிய சங்கிலி. முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுடன் நாமல் ராஜபக்ச 40% பங்குகளை வைத்துள்ளார்.
* கொலம்பா - ஒரு உணவகம். யோஷித ராஜபக்ச 70% பங்குகளை வைத்துள்ளார். * பிஸி பீன் கஃபே - ராஜபக்ச குடும்பத்தினர் பணத்தை முதலீடு செய்த மற்றொரு உணவகம்.
* Rythm and Blues (RNB) - V.I.P என்பது விருந்தினர்களுக்காக பிரத்தியேகமாக இலங்கையில் உள்ள சிறந்த இரவு விடுதிகளில் ஒன்றாகும். ரோஹித ராஜபக்ச 200 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து மதுபான உரிமங்களை வழங்கியுள்ளார்.
* Camera.lk - விமல் வீரவன்ச மூலம் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடு. தற்போது இலங்கை முழுவதும் ஒரு கேமரா கடை உள்ளது.
* ஹெலகுரு & ஹெல பே - இலங்கையின் முன்னணி IT வணிகங்களில் ஒன்று. தனிக பெரேரா என்ற நபரின் ஊடாக ரோஹித ராஜபக்ச 80 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து இந்த தொழிலை ஆரம்பித்துள்ளார்.
* MAS ஹோல்டிங்ஸ் (18% பங்கு) - இலங்கையின் முன்னணி ஏற்றுமதியாளர். மகிந்த ராஜபக்சவுக்கு 18% வர்த்தகம் உள்ளது. அதுதான் புதிய ஆடைத் தொழிற்சாலைகள் தொடங்க கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு.
* கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்களில் நாடு முழுவதும் காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. உண்மையான உரிமையாளர் நாமல் ராஜபக்ஷ.
* மஹாராஜா குழுமத்தின் 18% பங்குகளை செவன் டேனியல் என்ற நபர் மூலம் நாமல் ராஜபக்ச மகாராஜா வாங்கியுள்ளார். இதன் பெறுமதி 760 மில்லியன் ரூபா.
* Roar Media Network - Royal Raymond என்ற பெண் மூலம் நாமல் ராஜபக்ச வங்கதேசத்தில் Roar Media Network ஐ வாங்கியுள்ளார்.
* Siyatha Media Network - யோஷித ராஜபக்ச அர்ஜூன் அலோசியஸுக்கு சொந்தமான சியத ஊடக வலையமைப்பில் 3% முதலீடு செய்துள்ளார்.
R-S தாள்கள் மூலம் A - தொகுதி II /
வெளிநாட்டில் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடுகள் கஃபே சிலோன் - உகாண்டா - $ 1 மில்லியன் மதிப்பு.
* உகாண்டா ஏர்லைன்ஸின் ஆறு விமானங்களில் இரண்டு - 800 மில்லியன் டாலர் முதலீட்டில் ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமானது.
* இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸில் கால்பந்து அணியின் பங்குகள் - சவூதி இளவரசர்களிடம் ராஜபக்சே குடும்பத்தின் 420 மில்லியன் டாலர் முதலீடு.
* சீஷெல்ஸ் லா டியாகோ தீவு - ரோஹித ராஜபக்ச தனது மனைவியை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு $60 மில்லியன்.
* தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய்யின் சர்கார், மாஸ்டர், பிகில் படங்களை இந்திய நிறுவனங்கள் மூலம் ரோஹித ராஜபக்சே தயாரித்துள்ளார். இதன் மதிப்பு 220 மில்லியன் டாலர்கள்.
* Naughty America Pornography Company - ரோஹித ராஜபக்ச $20 மில்லியன் முதலீடு செய்துள்ளார். * மிரிஹி ஐலண்ட் ரிசார்ட் - மாலத்தீவுகள், $ 20 மில்லியன் மதிப்புடையது.
* மரதூ தீவு - மாலத்தீவு, $26 மில்லியன் மதிப்பு. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த உதயங்க வீரதுங்க இந்த உரிமையை பெற்றுள்ளார்.
* டியாஜியோ - இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம். இதன் மதிப்பு 120 பில்லியன் டாலர்கள்.
* பாப்லோ பிக்காசோவின் அழுகை பெண் ஓவியம் - வெளிநாட்டு பெட்டகத்தில் சேமிக்கப்பட்டது. இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர். * மடகாஸ்கரின் இலகாக்கா பகுதியில் உள்ள நீலக்கல் சுரங்கம் 3 மில்லியன் டாலர் முதலீட்டில் கோத்தபாய ராஜபக்சவால் நடத்தப்படுகிறது.
* தான்சானியாவில் உள்ள சின்ஜியாங் வைரச் சுரங்கம் - கோத்தபாய ராஜபக்சவுக்குச் சொந்தமானது, இதன் மதிப்பு 7 மில்லியன் டாலர்கள்.
* பனாமா கொடியிடப்பட்ட கிரேஸ் ஆஃப் ராணி - மதிப்பு $30 மில்லியன்.
* ஏழு சொகுசு படகுகள் - ராஜபக்ச குடும்பத்தினரால் பாலி, மாலத்தீவு மற்றும் பிற நாடுகளில் விடுமுறையில் இயக்கப்பட்டது. இதன் மதிப்பு 850 மில்லியன் டாலர்கள்.
* சீனாவின் பைடு நிறுவனம் - யோஷித ராஜபக்ச பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 7 பில்லியன் டாலர்.
* துபாய் மேரியட் ஹோட்டல் - $ 7 பில்லியன் மதிப்பு
* துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மூன்று சொகுசு வீடுகள் - நந்தன லொக்குவிதான என்ற நபர் மூலம் ராஜபக்ச குடும்பத்தினர் செய்த முதலீடு. இதன் மதிப்பு 140 மில்லியன் டாலர்கள்.
* ஷென்யாங் கோட்டியார் விமான உற்பத்தி நிறுவனம். லிமிடெட் - ஒரு சீன இயக்க நிறுவனம். 20 பில்லியன் டொலர் பெறுமதியான மஹிந்த ராஜபக்ஷ இணை உரிமையாளர் ஆவார்.
* லைகா மொபைல் - இங்கிலாந்தில் உள்ள ஒரு தொலைபேசி நிறுவனம். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை நபர் மூலம் இயக்கப்பட்டது. உண்மையான உரிமையாளர் மஹிந்த ராஜபக்ஷ. இதன் மதிப்பு 40 பில்லியன் டாலர்.
* De La Rue PLC - நிறுவனத்தின் 13% பங்கு ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானது.
* அதானி குழும நிறுவனங்கள், இந்தியா - இந்தியாவில் ஒரு பில்லியனர் நிறுவனம். நாமல் ராஜபக்ச 20% பங்குகளை வைத்துள்ளார்.
* குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணி - $150 மில்லியன். ரோஹித ராஜபக்ச செய்த முதலீடு.
* வரலாறு உச்ச பாய்மரக் கப்பல்
* புர்ஜ் துபாய் ஹோட்டல் - $ 1 பில்லியன்
* அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் கவ்பாய்ஸ் அணியில் 30% - உலகப் புகழ்பெற்ற பேஸ்பால் அணி. புஷ்பா ராஜபக்ச 2 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளை வைத்துள்ளார்.
* இங்கிலாந்தில் உள்ள அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் ஷசீந்திர ராஜபக்சே 11% பங்குகளை வைத்துள்ளார்.
*ஹோலோகிட்டி மூலம் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ராணுவ மற்றும் ரகசிய உபகரண உற்பத்தி நிறுவனமான தேல்ஸ் நிறுவனத்தில் 29% பங்குகளை மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார். அவர் இரண்டாவது பெரிய ஒற்றை பங்குதாரர் ஆவார். முதல் உரிமையாளர் பிரபல முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன்.
* உலகின் மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனமான ARUP இன் அதிகாரப்பூர்வமற்ற உரிமையாளர்கள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்தின் மூலம் சட்டப்பூர்வமாக பணம் பரிமாற்றம் செய்ய அனைத்து முறைகேடான ஆதாயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் 2302 மில்லியன். உதயங்க வீரதுங்க நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார்.
* குமரன் பத்மநாதனுக்குச் சொந்தமான 3 தாய்லாந்து கப்பல் நிறுவனங்கள் (பெயர்கள் வெளியிடப்படவில்லை)
* சூப்பர் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரின் பெயர்களில் நாடு முழுவதும் காணிகள் வாங்கப்படுகின்றன. சீகிரியாவில் காணிகளை கொள்வனவு செய்த போது சங்கக்காரவும் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
* ரோஹித ராஜபக்ச, ரூ.200 மில்லியன் மொபைல் போன் இறக்குமதியாளரான Walk & Talk (PVT) Limited நிறுவனத்திற்குச் சொந்தமானவர்.
* அரசாங்கத்தின் மிகவும் நட்புறவான தொலைத்தொடர்பு வலையமைப்பான டயலொக்கில் 38% பங்குகளை ஷசீந்திர ராஜபக்ச வைத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர்களுக்கு பலகோடி வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன
* ராஜபக்ச குடும்பம் சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக ஜோன் கீல்ஸ் பிஎல்சி குழுமத்திற்கான பாதையில் 12 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. ஹேமாஸ் மற்றும் யூனிலீவர் நிறுவனமும் ரூ. சுமார் 10 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது
* ஷசீந்திர ராஜபக்சே இலங்கையில் விபச்சார தொழிலையும் நடத்தி வருகிறார். இங்கே அவரது வணிக மேலாளர் சுரேந்திர வசந்த பெரேரா (கிளப் வசந்தா). சமல் ராஜபக்ச தனது சன்ஹில் ஹோட்டல் சங்கிலியின் உண்மையான உரிமையாளர். இதற்கு உக்ரேனிய விபச்சாரிகளை உதயங்க வீரதுங்க வழங்குகிறார். உக்ரைன், ரஷ்யா மற்றும் உலகம் முழுவதும் உள்ள விபச்சாரிகளின் Utopia வலையமைப்பையும் உதயங்க வீரதுங்க வைத்துள்ளார்.
* உக்ரைனில் பிரபலமான மிதக்கும் விபச்சார விடுதியான ரிவர் பேலஸ் என்ற சொகுசு படகின் உரிமையாளரும் உதயங்க வீரதுங்க ஆவார். மிக் ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர் அதை வாங்கினார், பின்னர் திவாலானார்.
* உலகின் மூன்றாவது பெரிய La Belle விபச்சார விடுதி, தாய்லாந்து - உரிமையாளர் உதயங்க வீரதுங்க, $ 2 பில்லியன் மதிப்பு.
* தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், லிமிடெட் - யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானது. 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளன.
* டார்செல் கிளப் ஆபாச திரைப்பட நிறுவனம் - ரோஹித ராஜபக்ஷ $ 5 மில்லியன் முதலீடு செய்துள்ளார். * துஷி ஆபாச படங்கள் - ரோஹித ராஜபக்ச $11 மில்லியன் முதலீடு செய்துள்ளார்.
* நாமல் ராஜபக்ச இந்திய நடிகர் சல்மான் கான் மூலம் பாலிவுட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். * நிபுன ரணவக்க, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இன்டர்நெட் நிறுவனமான ஸ்டார்லிங்கில் $70 மில்லியன் பங்குகளை வாங்குகிறார்.
* நாமல் ராஜபக்ச தனது மனைவிக்கு 350 மில்லியன் டாலர் நம்பிக்கை வைரத்தை திருமண பரிசாக வழங்கினார். * 2005 மற்றும் 2015 க்கு இடையில் லேண்ட் ரோவர், ஜீப், அஸ்டன் மார்ட்டின் மற்றும் புகாட்டி ஆகிய நிறுவனங்களின் சுமார் 15% பங்குகளை ராஜபக்சே குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.
* அனோமா ராஜபக்ச டோல்ஸ் & கபானா, அர்மானி, பிராடா, குஸ்ஸி, பர்பெரி, டியோர், லூயிஸ் உய்ட்டன், ரால்ப் லாரன், எஸ்சென்ஸ் மற்றும் மைக்கேல் கோர்ஸ் ஆகிய நிறுவனங்களில் 40% பங்குகளை வாங்கியுள்ளார்.
* சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்கள், தங்க பிஸ்கட்கள் மற்றும் டெபாசிட்கள் சுவிஸ் வங்கி, எக்சிம் வங்கி, ஜேபி மோர்கன் சேஸ், சைனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி, பேங்க் ஆஃப் சீனா மற்றும் பார்க்லேஸ் வங்கி கணக்குகளில் செய்யப்பட்டுள்ளன.
* கிரிபோடோ கரன்சியில் பெரும் தொகை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அது ஒரு டிரில்லியன் டாலர்கள் என்றும் அநாமதேய குழு வெளிப்படுத்துகிறது.
ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வணிகங்களும் அவற்றை நடத்துபவர்களும் வளைகுடாப் போராட்டத்திற்கு அவர்களின் எதிர்கால விதியை முன்னறிவிப்பதற்காக உதவி செய்திருக்கலாம் என்பதும் சிந்திக்கத்தக்கது.
இந்த மதிப்பீடுகளின்படி ராஜபக்சக்கள் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் சொத்துக்களை திருடியுள்ளனர்.
இந்தத் தொகை ஒரு டிரில்லியன் இலங்கை ரூபாயாகும். (1,050,000,000,000,000 LKR) எனவும் அந்த தகவகள் கூறுகின்றன
அதாவது உரு லட்சம் கோடியல்ல , 10-லட்சம் கோடியுமல்ல, 100-லட்வம் கோடியுமல்ல அது 1000 இலட்சம் கோடி......
Copyright Facebook
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையானால்; இவர்கள் பதவி விலக மாட்டார்கள். அப்படி விலகினால் இவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு, கொள்ளையடித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வாய்ப்புண்டு. எந்த மக்களை ஏமாற்றி, நீதித்துறையையும், காவற்துறை, இராணுவம் என்பவற்றை வளைத்து, தமக்கு வேண்டாதவர்களை தண்டிக்கவும், தம்மை பாதுகாக்கவும் தமிழ் மக்களை பலிகொடுத்து  செய்த கொடூரங்கள் தமக்கு எதிராக திருப்பினால் இவர்களால் தப்பிக்க முடியுமா? இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவர்கள் செய்த பாவங்கள் இவர்களின் கால்களுக்கு பொறி வைத்து காத்திருந்து விழுத்தியிருக்கிறது, அதிலிருந்து தப்புவது கஷ்ரந்தான். எல்லா சிங்கள அரசுகளும் செய்தவையேயானாலும் இவர்கள் செய்தது அதிகம். சந்திரிகா சொன்னது இவர்கள் கொள்ளைகூட்டம் என்பது உண்மை. இவர்களின் இந்த கொள்ளைகளின் வெளிப்படுத்தலின் பின்னால் அமெரிக்கா உள்ளது போலுள்ளது.  ஏதோ திட்டத்தின்படியே எல்லாம் நகருகிறது. முக்கிய கதாபாத்திரத்தை விலத்தி   இந்த நாடகம் முற்றுப்பெறாது. தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் வீதியில் அலையும் நம் உறவுகளின் நிலை ஒரு தண்டனையை உரியவர்களுக்கு கொடுக்கும்.                       

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:
ஷசீந்திர ராஜபக்சே இலங்கையில் விபச்சார தொழிலையும் நடத்தி வருகிறார். இங்கே அவரது வணிக மேலாளர் சுரேந்திர வசந்த பெரேரா (கிளப் வசந்தா).
 
சமல் ராஜபக்ச தனது சன்ஹில் ஹோட்டல் சங்கிலியின் உண்மையான உரிமையாளர். இதற்கு உக்ரேனிய விபச்சாரிகளை உதயங்க வீரதுங்க வழங்குகிறார்.
 
உக்ரைன், ரஷ்யா மற்றும் உலகம் முழுவதும் உள்ள விபச்சாரிகளின் Utopia வலையமைப்பையும் உதயங்க வீரதுங்க வைத்துள்ளார்.
 
* உக்ரைனில் பிரபலமான மிதக்கும் விபச்சார விடுதியான ரிவர் பேலஸ் என்ற சொகுசு படகின் உரிமையாளரும் உதயங்க வீரதுங்க ஆவார். மிக் ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர் அதை வாங்கினார், பின்னர் திவாலானார்

மற்றதெல்லாம் விடுமன்.. இதெல்லாம்  நாட்டுல ஒரு பெரிய மனுசன் குடும்பம் செய்யுற வேலையா..? 😢

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மற்றதெல்லாம் விடுமன்.. இதெல்லாம்  நாட்டுல ஒரு பெரிய மனுசன் குடும்பம் செய்யுற வேலையா..? 😢

கொள்ளைகூட்டம் பெரிய மனுசாள் போல் வேஷம் கலையுது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2022 at 04:27, தமிழ் சிறி said:

நாமலுக்கு…. வாய்ப்பு வரும் மட்டும், அந்தப் பதவியை வைத்திருக்க விரும்புகிறார்.
அது…. ஷிராந்தியின், அன்புக் கட்டளை. 😂

அதுவரை காத்திருந்தால், எல்லோரும் கூண்டோடு போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிமாவுக்கு  குடியுரிமை பறித்தது போல் மகிந்த சகோதரர்களுக்கும் பறித்து நாட்டை விட்டு ஓடாத படி செய்ய வேண்டும். சொத்துக்களையும் பறிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

சிறிமாவுக்கு  குடியுரிமை பறித்தது போல் மகிந்த சகோதரர்களுக்கும் பறித்து நாட்டை விட்டு ஓடாத படி செய்ய வேண்டும். சொத்துக்களையும் பறிக்க வேண்டும்.

எனது ஆசையும் அதுதான். ஆனால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அதன்பிறகு இவர்கள் பல்லுக்கழட்டின பாம்புதான். அதிகாரத்தை வைத்து ஆடின ஆட்டமெல்லாம் இவர்களுக்கு எதிராக கிளம்பும். பெரிய மாற்றம்! மக்கள் இவர்களுக்கு எதிராக திரண்டது, எதுவும் தயங்காமல் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.