Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழிளாலர் காங்கிரசை சேர்ந்த ஐந்து அமைச்சர்,பிரதி அமைச்சர்கள் பதவி விலகல்

Featured Replies

இன்று மாலை தோட்டத் தொழிளாலர் காங்கிரசைச் சேர்ந்த ஐந்து அமைச்சர் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரியவருகின்றது. தலைவர் ஆறுமுகம் தொண்டைமான்,எஸ்.ஜெகதீஸ்வரன், சிவலிங்கம், செல்லசாமி ஆகிய ஐந்து அமைச்சர் பிரதியமைச்சர்கள் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்திலிருந்து

ஜானா

இது அவங்கட அரசியல் வாழ்கையில் சகஞமப்பா.இனி கொஞ்சம் கூட எலும்புத்துண்டை போட்டால் வாலாட்டி கொண்டு வந்திடுவார்

மகிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

ஜவியாழக்கிழமைஇ 2 ஓகஸ்ட் 2007இ 18:23 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகுவதாக அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் தற்போது அமைச்சராக ஆறுமுகம் தொண்டமானும் பிரதி அமைச்சர்களாக செல்லச்சாமியும் சதாசிவமும் முத்து சிவலிங்கமும் உள்ளிட்ட 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது பதவி விலகல் அறிவிப்பை மகிந்தவுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

கடந்த 19 ஆம் நாள் இடம்பெற்ற குடும்பிமலை ஆக்கிரமிப்பு கொண்டாட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசாரும் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சுப் பதவிகள் திருப்தியின்மை காரணமாகவே அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவை இ.தொ.கா. எடுத்திருப்பதாக தெரியவருகிறது.

Puthinam

இந்த வாரகாலக்கணிப்பை பார்த்திருப்பார் போல?

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

தற்போது காற்று எதிர்த்திசையை நோக்கி சிறிது வேகமாக வீசுவது போல தெரிகின்றது. அதனுள் தூற்றிக் கொள்ள முயறசிக்;கின்றார்கள் போல உள்ளது. அப்பாவி ஏழை மலையக தொழிளாளர் வர்க்கத்தின் வயிற்றிலடித்து அவர்கள் சந்தாப்பணத்தில் உண்டு கொழுத்தவர்கள். கையறிப்பு தாங்காமல் அரசாங்கத்தில் இணைந்து வெட்டி அள்ளிக் கொண்டு போகலாம் என்று நினைத்தவர்கள். இன்று கிள்ளி எடுக்கவும் எதுவும் இல்லை என்று தெரிந்தபின் ஏன் தொங்க வேண்டும் என்று எண்ணியிருப்பார்கள்.

ஜானா

பக்கத்து நாடான அவர்கள் ஏதும் சொல்லி இருப்பார்களோ?

உண்மையான அந்த மேலிடம் சொல்லி இருக்குமா? :rolleyes:

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்புபட்ட செய்தி இ.தொ.கா. முடிவால் சிறிலங்கா அரசியலில் குழப்ப நிலை ஜவியாழக்கிழமைஇ 2 ஓகஸ்ட் 2007இ 21:25 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களைக் கொண்ட கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியமையால் முஸ்லிம் காங்கிரசும் வெளியேறுமா? அரசாங்கம் கவிழுமா? ஜே.வி.பி. ஆதரிக்குமா என்று சிறிலங்காவின் அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 68இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 08 ஜாதிக ஹெல உறுமய- 07 முஸ்லிம் காங்கிரஸ்- 6 முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகிய - 04 ஈ.பி.டி.பியிலிருந்து - 01என்று மொத்தமாக 94 பேர் இருந்தனர். எதிர்க்கட்சி வரிசையில் ஐக்கிய தேசியக்கட்சி - 68 சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) - 02 ஜே.விபி - 39 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 22 என்று மொத்தம் 131 பேர் இருந்தனர்.முஸ்லிம் காங்கிரசும் விலகல்?சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து வெளியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.கிழக்கின் உதயம் நிகழ்வைத் தொடர்ந்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்இ மகிந்த அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.அதே

CWC still with us! - Lanka President's Office

Aug 02 (Asian Tribune) Colombo- The Ceylon Workers Congress (CWC) has not resigned from the government. And the misunderstanding has now been sorted out, said Sri Lanka Presidential Office amidst conflicting reports on the desertion of its minority ally.

full story

தொண்டமான நம்ப்ப முடியாது சேர்ந்து சாப்பிட்ட கை காய முன்னம் முடிவுகளை மாற்றுவார்

நாளை காலை மறுப்பு செய்தி வந்தாலும் ஆச்சரியம் இல்லை :P

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டமான் அடுத்ததாக தொடும் மது_மாது வைபொறுத்து தான் முடிவுகள் எடுக்கப்படும். மலையக மக்களின் சாபக்கேடுகள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 03-08-2007 02:47 மணி தமிழீழம் [மயூரன்]

இந்திய அரசாங்கத்தின் ஆலோசனை- இ.தொ.க அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளது

இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமையவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த விரும்பும் இந்தியா அதற்கான நகர்வுகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் சிறப்பு தூதுவராக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான ஜீ.பார்த்தசராதி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளுடன் தனித்தனியே சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

இவற்றில் பெரும்பாலானவை இரகசியமானதாகவே நடைபெற்றுள்ளன.

இதன் போது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதொக மற்றும் மலையக மக்கள் முன்னணி முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அவர் கோரியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்திய தூதரகத்தில் நேற்று இரவு ஆரம்பமான கலந்துரையாடலில் இ.தொ.க அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்தின் முக்கிய இராஜதந்திரிகளும் இதொக பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்துவதும் அதன் மூலம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மீண்டும் தலையீடு செய்வதற்கும் இந்தியா விருப்பம் கொண்டுள்ளது.

எனினும் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற நேரடி தலையீடாக இல்லாமல் செல்வாக்கு செலுத்தும் காரணியாக (ஐகெடரநவெயைட குயஉவழச) தன்னை ஈடுபடுத்த இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நோர்வே ஊடக அதெரிக்க இலங்கை இனப்பிரச்சினையில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமெரிக்க மேலாதிக்கத்தை குறைக்கவும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்ச்சிகளின் ஒரு அம்சமே இதொகாவின் வெளியேற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கொண்டு வருவதற்கும் அதன் பின்னர் தான் விரும்பும் ஒரு தீர்வை அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் ஊடாக அறிவித்து அதற்கான ஆதரவை ஏனைய அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறுவவே இந்தியாவின் நோக்கம்.

இந்தியா முன்வைக் தீர்மானித்துள்ள யோசனைகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விட மிகக் குறைவான அதிகாரங்களையே தமிழர்களுக்கு வழங்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

தமது தீர்வு யோசனைகளை அங்கீகரிக்குமாறு இந்தியா இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu

நாளைக்கு மறுபடி சேந்திடுவாங்க........"

நாளைக்கு மறுபடி சேந்திடுவாங்க........"

சம்பளம் ஆரவாசியாக குறைக்க போக்கினம் எண்டதும்... மானத்தை இவ்வளவு சீப்பா விக்க வேணுமோ எண்டு ஒரு கேள்வி வந்து இருக்கும்.... அதுதான் வெளியேறீட்டினம்..... அடுத்தவை வரும் போது.... அவையும் இதையே உதாரணமாய் காட்டி தாறாதை குறைச்சு போடுவினம் தானே... அதை போக்க ஒர்ரு ஏற்பாடுதான் இது...

இப்ப பொருட்கள் மலிஞ்சா அதன் மதிப்பு குறையும் தானே.... அது போல ஒரு வியாபாரம்தானே அரசியல்.....

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் மேலதிகச் செய்தியில்

இ.தொ.கா. வை மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச விமர்சித்தமையாலும் அமைச்சுப் பதவிகளில் திருப்தியின்மையாலும் அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவை இ.தொ.கா. எடுத்திருப்பதாக தெரியவருகிறது.

இது குறித்து மகிந்த அரசாங்கத்துடன் இன்று கலந்துரையாடிய பின்னர் இ.தொ.கா இந்த முடிவை எடுத்ததாக இ.தொகா. தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இ.தொ.கா. வின் இந்த முடிவை அடுத்து அமைச்சுக்களுக்கு சொந்தமான வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 5 ஆம் நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் இ.தொ.கா. சார்பில் ஆறுமுகம் தொண்டமானும் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடிய பின்னணியிலேயே இ.தொ.கா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் விரைவில் ரணில் விக்கிரமசிங்கவை ஆறுமுகம் தொண்டமான் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தெரிகிறது.

இருப்பினும் மகிந்த அரசாங்கம் இதனை மறுத்திருக்கிறது. இ.தொ.கா. வினர் தொடர்ந்தும் அரசாங்கத்துடனேயே இருப்பர் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட இவங்கள விடுங்கப்பா. குரங்கு அரசியல் வாதிகள்.

  • தொடங்கியவர்

மங்கள பக்கம் இ.தொ.கா சாய்ததால் வந்த விளைவு!

அரசுத் தரப்பிலிருந்து வெளியேறிய மங்கள சமரவீர - சீரிபதி அணியின் பக்கம் இ.தொ.காவின் தலைமை, அதிகம் தொடர்பு வைத்து அதனுடன் நெருங்கிச் செயற்பட முயற்சித்த காரணத்தினாலேயே அக்கட்சியோடு அரசுத் தலைமை முறுகும் நிலைமை உருவானது.

இப்படி அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. மங்கள அணியுடன் இ.தொ.காவினர் மிக நெருக்கமாகச் செயல்பட ஆரம்பித்துள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் அரசுத் தலைமைக்கு எட்டியபோதே இத்தகைய விரிசல் எதிர்பார்க்கப்பட்டது தான் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

"ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இ.தொ.கா தலைவர்களுக்கும் இடையில்தான் நேரடி முறுகல் இடம் பெற்றுள்ளது. இநத முறுகலை - முரண்பாட்டை ஜனாதிபதி தாமே நேரடியாகத் தலையிட்டு, இரு சாரரையும் அழைத்து சமரசம் செய்வதற்கான வாய்ப்பு உண்டா?" என்று கேட்டதற்கு அதை நிராகரிக்க முடியாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : சுடர் ஒளி வெள்ளி ஓக 03

  • தொடங்கியவர்

அரசுப்பக்கத்திலிருந்து இ.தொ.கா வெளியேறியதை அடுத்து நாடாளுமன்றில் தற்போதைய அரசின் பெரும்பான்மைப் பலம் மயிரிழையில் ஊசலாடும் கட்டத்தை அடைந்திருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா, ஜாதிக ஹெல உறுமைய போன்றவை அரசுப் பக்கம் சாய்ந்ததை அடுத்து நாடாளுமன்றில் அரசுத் தரப்பு எம்.பிக்களின் எண்ணிக்கை 121 ஆக இருந்தது.

அதன் பின்னர் மங்கள,ஸ்ரீபதி ஆகியோர் எதிரணிப் பக்கத்துக்கு வந்ததை அடுத்து அது 119 ஆகக் குறைந்தது. இதற்கிடையில் ஐ.தே.க பக்கத்திலிருந்து அரசு பக்கத்திற்கு வந்த 17 எம்.பிக்களில் ஒருவர் மீண்டும் ஐ.தே.க பக்கம் திரும்பிவிட்டதால் மேலும் ஒரு எம்.பியை அரசு தரப்பு இழந்தது.

இப்போது இ.தொ.காவின் ஆறு எம்.பிக்கள் மீண்டும் எதிரணிக்கு வந்துவிட்டதால் நாடாளுமன்றில அரசின் பலம் 112 ஆகக் குறைந்திருக்கின்றது.

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில சபாநாயகர் நீங்கலாக இறுதி 224 எம்.பிக்களில் சரி அரைவாசித் தொகையினர் இப்போது அரசு பக்கத்திலும் உள்ளனர்.

நன்றி : சுடர் ஒளி

இனப்பிரச்சனையில் இந்தியா மேற்கொள்ளும் திரைமறைவிலான காய்நகர்த்தல்கள் நமக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை.

ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து ரணில் ஆட்சிக்கு வந்தால், அரைகுறை தீர்வுத் திட்டம் ஒன்றை தமிழர்கள் மேல் திணிக்க இந்தியா முற்படலாம். தமிழீழம் அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள ராஜபக்ஷ அரசாங்கம்தான் சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

உதயனில் இருந்து சில தகவல்கள்

நேற்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜ பக்ஷவுக்கும், இ.தொ.கா. தலைவர்களுக் கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பில் வாக்கு வாதம் முற்றி, முரண்பாடு தீவிரமடைந் ததை அடுத்தே இந்தத் திடீர் விலகல் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

இ.தொ.காவிலி ருந்து தம்பாட்டில் அரசுப்பக்கம் பாய்ந்து பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சுகாதாரப் பிரதி அமைச் சர் வடிவேல் சுரேஷûம், உல்லாசப் பயணத் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் தொடர்ந்தும் அரசுப்பக்கமே இருப்பர் எனக் கூறப்பட்டது. என்றாலும் சில சமயங்களில் வி.புத்திரசிகாமணி எம்.பி. இ.தொ.கா. தலைமையோடு முரண்பட்டுக்கொண்டு அரசுப் பக்கத்தில் தொடர்ந்து இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என அரசுத் தரப்புத் தக வல் தெரிவித்தது.

நேற்று முற்பகல் ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் கட்சியின் பிரதித்தலைவர் இரா. யோகராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்போது, மலையகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆற்றிய உரை தொடர்பாக பஸில் ராஜபக்ஷ சூடாகக் கேள்வி எழுப்பினார் எனக் கூறப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை "மஹிந்த சிந்தனை' யின் அங்கமாக அறிவிக்காமல் புறம் ஒதுக்கி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் பேசினார் எனக் குறிப்பிட்ட பஸில், அதற்காக இ. தொ. காவினரைக் கடுமையாகக் கடிந்து கொண்டாராம்.

ஆனால் சம்பந்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கை "மஹிந்த சிந்தனை' உருவாக்கத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்பதால் அதை "மஹிந்த சிந்தனை' அடிப்படையிலானது எனக் கூறவே முடியாது என இ. தொ. காவினர் வாதிட்டிருக்கின்றனர்.

இதையடுத்தே வாதம் முறுகி சூடு பிடித்திருக்கின்றது. மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்துக்கு உள்ளான இ. தொ. கா. தலைவர்கள் அந்தச் சந்திப்பில் வைத்தே பதவி விலகி, அரசில் இருந்து வெளியேறத் தீர்மானித்து, அந்த முடிவை உடனடியாகச் செயற்படுத்தினர் என்று கூறப்பட்டது.

மிகத் தரக்குறைவான வார்த்தைகளினாலான அர்ச்சனைக்கு இ.தொ.கா. தலைவர்கள் உட்பட்டமையை அடுத்தே இந்த முடிவை எடுக்கும் நிøலக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்று இ. தொ. கா. வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவியை ராஜினாமாச் செய்ததை அடுத்து, இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கொட்டகலைக்கு விரைந்தார். அவரோடு தொடர்புகொள்ள அரசுத் தலைமை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனத் தெரியவந்தது.

இதற்கிடையில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினார் எனத் தெரிகிறது.

""நீங்கள் என்னுடைய அரசில் அமைச்சர்களாக இருக்கிறீர்களா அல்லது பஸில் ராஜபக்ஷவின் அரசில் அமைச்சர்களாக இருக்கிறீர்களா? பஸிலோடு கோபித்துக்கொண்டு எனது அரசில் இருந்து வெளியேறுவது சரியா?'' என்று ஜனாதிபதி, முத்துசிவலிங்கத்திடம் கேட்டார் எனத் தெரிகிறது.

இதேசமயம், இ.தொ.காவுடனான முரண்பாடு தீர்க்கப்பட்டுவிட்டது என்ற சாரப்பட சில செய்திகள் அரச தரப்பினால் நேற்று மாலை கசியவிடப்பட்டன. ஆனால், இ.தொ.கா வட்டாரங்கள் அதை அடியோடு மறுத்ததோடு, இணக்க நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிவித்தன.

இந்தப் பின்னணியில் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் சமரசம் செய்யும் நோக்கில் அரச உயர்மட்டம் தனது தூதுவர்களை இன்று காலை கொட்டகலைக்கு அனுப்பக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள பக்கம் இ.தொ.கா. சாய்ந்ததால் வந்த விளைவு?

அரசுத் தரப்பிலிருந்து வெளியேறிய மங்கள சமரவீர சிறிபதி சூரியாராய்ச்சி அணியின் பக்கம் இ.தொ.காவின் தலைமை, அதிகம் தொடர்பு வைத்து அதனுடன் நெருங்கிச் செயற்பட முயற்சித்த காரணத்தினாலேயே அக்கட்சியோடு அரசுத் தலைமை முறுகும் நிலைமை உருவானது.

இப்படி அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மங்கள அணியுடன் இ.தொ.காவினர் மிக நெருக்கமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் அரசுத் தலைமைக்கு எட்டியபோதே இத்தகைய விரிசல் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

""ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இ.தொ.கா. தலைவர்களுக்கும் இடையில்தான் நேரடி முறுகல் இடம்பெற்றுள்ளது. இந்த முறுகலை முரண்பாட்டை ஜனாதிபதி தாமே நேரடியாகத் தலையிட்டு, இரு சாரõரையும் அழைத்து சமரசம் செய்வதற்கான வாய்ப்பு உண்டா?'' என்று கேட்டதற்கு

அதை நிராகரிக்க முடியாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுக்கு நாடாளுமன்றில் மயிரிழை பெரும்பான்மை!

அரசுப் பக்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியதை அடுத்து நாடாளுமன்றில் தற்போதைய அரசின் பெரும்பான்மைப் பலம் மயிரிழை யில் ஊசலாடும் கட்டத்தை அடைந்திருக் கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய போன்றவை அரசுப் பக்கம் சாய்ந் ததை அடுத்து நாடாளுமன்றில் அரசுத் தரப்பு எம்.பிக்களின் எண்ணிக்கை 121 ஆக இருந்தது.

அதன் பின்னர் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராய்ச்சி ஆகியோர் எதிரணிப் பக்கத்துக்கு வந்ததை அடுத்து அது 119 ஆகக் குறைந்தது. இதற்கிடையில் ஐ.தே.க. பக் கத்திலிருந்து அரச பக்கத்திற்கு வந்த 17 எம்.பிக்களில் ஒருவர் மீண்டும் ஐ.தே.க. பக்கம் திரும்பிவிட்டதால் மேலும் ஒரு எம்.பியை அரச தரப்பு இழந்தது.

இப்போது இ.தொ.காவின் ஆறு எம்.பிக் களும் மீண்டும் எதிரணிக்கு வந்துவிட்ட தால் நாடாளுமன்றில் அரசின் பலம் 112 ஆகக் குறைந்திருக்கின்றது.

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் சபாநாயகர் நீங் கலாக இறுதி 224 எம்.பிக்களில் சரி அரை வாசித் தொகையினர் இப்போது அரசு பக்கத் திலும், எதிரணிப் பக்கத்திலும் உள்ளனர்.

-உதயன்

எங்களுடைய போராட்டதிற்க்கு வலுச்சேர்க்கும் மகிந்தவின் அரசு பலவீனப்படுவதால் தமிழர் தரப்பிற்க்கு நன்மை ஏதும் வரப்போவதில்லை என்கிற இந்தக் கட்டுரையாளரின் கருத்தோடு உடன் படுகிறேன்.

ஆதாரம்: http://www.webeelam.com

மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை!

சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார்.

இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்கள சமரவீர போன்றோர் அரசில் இருந்த விலகினர் அல்லது விலக்கப்பட்டனர். விலகிச் சென்றவர்கள் மங்களவின் தலைமையில் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு" என்னும் கட்சியை தொடங்கினர்.

மங்களவின் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது. மகிந்தவிற்கு எதிரான கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்ட பேரணியையும் நடத்தின. மகிந்தவிற்கு ஆதரவான பேரணியும் நடைபெற்றது. ஆனால் எதிர்கட்சிகள் நடத்திய பேரணியிலேயே அதிகளவு மக்கள் திரண்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதாக மகிந்தவின் அரசு சிங்கள மக்களை நம்ப வைத்தாலும், அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவிற்கு எதிரான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

மகிந்தவின் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் வேகமடைந்து வரும் நிலையில், தற்பொழுது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் அரசில் இருந்து வெளியேறியுள்ளது. தான் வகித்த அமைச்சர் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ{ம் அரசில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. அரசு அமைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்பொழுது ஏறக்குறைய 70 உறுப்பினர்களையே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஈடாட்டத்தில் இருப்பதால், உண்மையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கூறமுடியாது உள்ளது.

மங்கள சமரவீரவால் மேலும் சில உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னுடைய கட்சிக்குள் இழுக்க முடிந்தால் மகிந்தவின் அரசு கவிழ்ந்து விடும். ஜேவிபி (39 உறுப்பினர்கள்), ஜாதிக ஹெல உறுமய (7 உறுப்பினர்கள்) போன்ற கட்சிகள் ஆதரவு வழங்கினாலும் மகிந்தவின் அரசால் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது போய்விடும்.

மகிந்தவினுடைய அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளுக்கு மேற்குலகின் ஆசிர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஸ மீது கடும் அதிருப்தியில் மேற்குலகம் இருக்கிறது. மகிந்தவின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை குழப்புகின்றன. மகிந்தவின் போர்முனைப்பு நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள் மீது ஒரு அளவிற்கு மேல் அழுத்தங்களை செலுத்துவதில் தர்மசங்கடமான நிலையை மேற்குலம் எதிர்நோக்கியுள்ளது. மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி நடக்கக்கூடியவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார்.

ஆகவே மேற்குலகின் ஆசீர்வாதத்தோடு மகிந்த ராஜபக்ஸவின் அரசைக் கவிழக்கும் நடவடிக்கைகள் மேலும் வேகம் பெறும். சில வேளைகளில் மகிந்தவின் அரசைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறவும் கூடும்.

ஆனால் அவ்வாறான ஒரு நிலை உருவாவது தமிழர் தரப்புக்கு நல்லது அல்ல. மேற்குலகின் ஆதரவோடு அமைகின்ற ரணிலின் அரசு தமிழர் தரப்பை சர்வதேசரீதியில் மேலும் பலவீனப்படுத்திவிடும். ரணிலின் புதிய அரசோடு தற்பொழுது உள்ள நிலையிலேயே பேசும்படி விடுதலைப் புலிகளுக்கு மேற்குலகம் கடும் அழுத்தங்களையும் கொடுக்கும்.

அதே போன்று மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவராக இருந்தால், அதுவும் தமிழர் தரப்பிற்கு பாதகமாகவே அமையும். தற்போது உள்ள நிலையில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது. பொது தேர்தல் ஒன்று நடந்தால், கள்ளவாக்குகள் மூலம் ஒட்டுக் குழுக்கள் நாடாளுமன்றத்தி;ற்குள் நுளையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே மகிந்தவின் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெளியேறுவது குறித்து உண்மையில் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. தமிழ் மக்களுக்கு மகிந்த ராஜபக்ஸ மிகப் பெரும் அவலங்களைக் கொடுத்தாலும், அவருடைய போர்முனைப்பான அடவாடித்தனமான நடவடிக்கைகளே தமிழர்களுக்கு சாதகமான பலன்களையும் கொடுக்கப் போகின்றன.

மகிந்தவினுடைய நடவடிக்கைகளே சர்வதேச வலைப்பின்னலில் இருந்து தமிழர் தரப்பை ஓரளவு விடுவித்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

விடுதலைப் புலிகள் பெரும் போருக்கு தயாராகி வரும் நிலையில், மேற்குலகம் அவசரம் அவசரமாக இலங்கை அரசியலை தலைகீழாக மாற்ற முயற்சிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் முக்கிய நிலப் பரப்புக்கள் வரும் முன்னர், விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர மேற்குலகம் முனைந்து நிற்கிறது. அதற்காக இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது.

ஆனால் விடுதலைப் புலிகள் வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுபவர்கள் என்பதையே உலகம் மீண்டும் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாரும் திங்கிங் நெக்கட்டிவ். தலைவரோட சேந்துதான் இதுவள் நடக்கிரது. அண்னை சிக்னல் குடுத்திருக்கிரார் இல்லாட்டி எல்லருடய பதவியையும் துரந்து இந்தநேரம் ஏன் விலகுரினம்? B)

Basil Rajapaksa insulted Thondaman - CWC MP

[TamilNet, Friday, 03 August 2007, 14:39 GMT]

A leading Ceylon Workers Congress (CWC) member and CWC parliamentarian Muttu Sivalingam Friday told media at Kotagala in the up-country that their party would sit as an independent group in the opposition seats of the Sri Lankan parliament following their resignation of ministerial portfolios Thursday. The CWC decision to withdraw its support was made following the disagreement on 'Mahinda Chintanaya'. Mr. Muttu Sivalingam accused Mr. Basil Rajapaksa, the brother and political advisor of SL President Mahinda Rajapaksa for verbally abusing the CWC leader Arumugam Thondaman for not subjugating to Mahinda doctrine.

"Our leader was totally insulted by Mr. Basil Rajapaksa," Sivalingam told media at Kotagala.

"We only joined the UPFA government for the sake of our people in up-country. But, there has been no concrete achievement. Our support to the UPFA government so far, was based on a mutual agreement. "

"We will not subjugate for threats and intimidation," he further said.

Meanwhile, another CWC member said that the relationship between the CWC and Rajapaksa government severed recently when the government detained satellite communication equipment which were brought from India to set up an IT communication facility in Kotagala.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22909

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.. இவர்கள் தமிழினத்தைப் பற்றிச் சிந்திப்பவர்களா? ஏதாவது எலும்புத் துண்டு தரும்படி வார்தையால் மிரட்டப் பார்த்திருப்பார்கள். பாசில் பதிலுக்கு வேட்டி கழன்று விழுவதுமாதிரி சொல்லியிருப்பான். ஏதோ மானம் இருக்கிதென்று காட்ட வெளியில் போயிருப்பினம். ரணிலுடன் "டீல்" பண்ண கொஞ்சக்கால அவகாசம் தேவை; அதுதான் தனிக்குழுவாக தற்போது இயங்குகின்றார்கள்.. கிடைக்கும் எலும்பின் அளவைப் பார்த்து விசுவாசத்தை எவர்பக்கமாவது திருப்புவார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.