Jump to content

பசை வாளி


Recommended Posts

பதியப்பட்டது

பசை வாளி

இந்த வார ஒரு பேப்பரில் வெளியான எனது அனுபவ தொடர்

கடந்த பேப்பரில் வெள்ளையடித்த மதிலில் தாரால் எழுதியதை படித்திருப்பீர்கள் எனவே இந்த பேப்பரில் சுவரொட்டி(நோட்டீஸ்) ஒட்டியதை பற்றிய ஒரு பதிவு . இதுவும் எண்பதுகளின் ஆரம்பத்து நினைவுதான். இந்த காலகட்டத்தில் முளைத்த பல இயக்கங்களும் தங்கள் தோற்றத்தை அல்லது இருப்பை வெளிக்காட்ட இலங்கையரசை எதிர்த்தும் தமிழ் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்தவும் தினமும் ஏதாவது ஒரு சுவரொட்டி ஊரின் மதிற்சுவர்கள் . சங்ககடை .தாபால்கந்தோர் பாடசாலை .கோயில் சுவர் இப்படி எங்கெங்கு எல்லாம் ஒட்ட முடியுமோ அங்கெல்லாம் ஒட்டியிருப்பார்கள்.

இப்படி அந்த நாளில் அதிகமானசுவரொட்டி ஒட்டிய இயக்கம் எது என்று ஒரு போட்டி வைத்திருந்தால் அதில் முதலிடம் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்திற்கோ கிடைத்திருக்கும்.ஏனெனில் கறுப்பு சிவப்பு எழுத்தில் ஒரு நாளைக்கு ஒரு சுவரொட்டியாவது மானிப்பாய் சுவர்களில் இவர்கள் ஒட்டியிருப்பார்கள். அந்த பழக்க தோசத்தில் தானோ என்னமோ காரைநகர் அடிக்க போக முதலே காரை நகர் கடற்படைத்தளம் தகர்க்கப்பட்டது பலநூறு கடற்படையினர் பலியென்று சுவரொட்டி எழுதி வைச்சிட்டு அடிக்க போனவை.அங்கை சண்டை தொடங்கவே மானிப்பாயிலை அவையின்ரை ஆதரவாளர்கள் சிலர் சுவரொட்டியை ஒட்டியும் போட்டினம். அதுக்கடுத்ததா அதிகளவு சுவரொட்டி ஒட்டினது புளொட் இயக்கத்தை சொல்லலாம். அந்த காலங்களிலை இந்த சுவரொட்டிகளை அந்தந்த இயக்கங்களின்ரை ஆதரவாளர்கள் அல்லது அந்த இயக்கங்களிலை உள்ள உறுப்பினர்களின் நண்பர்கள் தான் அனேகமா ஒட்டுவினம்.

சிலர் பொதுவா எல்லா இயக்கங்களின்ரை சுவரொட்டிகளையுமே ஒட்டுறவையும் இருந்தவை. இப்பிடி சுவரொட்டி ஒட்டுறவையை தான் பசைவாளியள் என்று ஊரிலை எல்லாரும் செல்லமா கூப்பிடுவினம்.இப்பிடியானதொ

Posted

நீங்கள் சென்றமுறையும் கதையில் அப்படி குறிப்பிட்டு இருந்தீர்கள்... அதாவது பொங்கலை புக்கை என்று எழுதி இருந்தீர்கள். சாதம் அல்லது பொங்கல் என்று எழுதுவது சரியாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. நான் கொழும்பில் சிங்கள வீடு ஒன்றில் இருந்த போது பொங்கல் தினம் அன்று புக்கை, புக்கை என்று கத்திக்கொண்டு இருந்தேன். பக்கத்து வீட்டு சிங்கள ஆக்கள் அதைக்கேட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.. :lol:

Posted

கலைஞன் நீங்கள் சொல்வது போல பொங்கல்என்பதுதான் சரியானது ஆனால் புக்கை பொங்குகிறோம் என்று ஊரில் பேச்சு வழக்கில் புக்கை என்றே சொல்லி பழகி விட்படியால் நானும் அப்படியே எழுதுகிறேன்

Posted

கதை சுவாரஸ்யமாய் இருக்கு ...தொடர்ந்தும் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி! கதை நன்றாகவுள்ளது.

பேச்சு வழக்கில் தமிழில் புக்கையென்றே சொல்லலாம். தப்பில்லை.

ஒவ்வொரு சொல் ஒவ்வொரு மொழியில் வேறு வேறு அர்த்தங்களைத் தந்து கொண்டிருக்கும். அதையெல்லாம் பார்த்துக்கொண்டு போனால் தமிலில எதுவும் மிஞ்சாது.

பொச்சு என்றால் மளையாளத்தில் வேறு அர்த்தம் வரும். ஆங்கிலத்தில் வரும் சில சொல் தமிழில் வேறு அர்த்தம் தரும்.பேச்சு வழக்கோ, எழுத்து வழக்கோ தமிழ் தமிழாகவே இருக்கட்டும். :lol::lol:

Posted

கதைக்கு பசை வாளி எண்டது மட்டு இல்லாமல் வாளிதான் ஹீரோவுமா...??? இருள் அழகனுக்கு கெவியான றோள் குடுக்கேல்லை... அடுத்த முறை இப்பிடி நடந்தா யாழிலை போராட்டம் வெடிக்கும்... சொல்லீட்டன்..

ஈப்பி காறரைத்தான் வம்புக்கு இளுக்கிறீயள் எண்டு பாத்தால் கடைசீல புளட் காறரையுமா...??? மட்டினீங்கள் சங்குதான்.... வவுனியா பக்கம் போற பிளான் இருந்தா மறந்திடுங்கோ....

அது சரி ஈப்பிக்காறரை "லௌஸ்பிக்கர்" எண்டும் உதாலைதான் சொல்லுறவை..., புளட் காறரை "சோத்து பாசல்" எண்டது பிரபல்யம்...

Posted

கன்றாவி இப்படியொரு வாழ்க்கை தேவையா?? பசைவாளி, பச்சைமண்ணு, இருளழகன் எண்டு, என்னை மாதிரி நல்ல கூட்டுகளே கிடைக்கிறதில்லையா உங்களுக்கு?? :angry: :angry:

அதுசரி அச்சுவேலி, பத்தமேனி, இடைக்காடு, வளலாய் (ஊர் இடங்கள்) எண்டு அந்த பக்கமும் ஏதோ ஒட்டினியளாமே நெசமாவா?? :):huh::lol::lol: :angry:

Posted

கலைஞன் நீங்கள் சொல்வது போல பொங்கல்என்பதுதான் சரியானது ஆனால் புக்கை பொங்குகிறோம் என்று ஊரில் பேச்சு வழக்கில் புக்கை என்றே சொல்லி பழகி விட்படியால் நானும் அப்படியே எழுதுகிறேன்

புக்கை எண்ட சொல் மலயாளத்தில் இருந்து தருவிக்க பட்டது.... நிறைய ஐயர் மாருக்கு மலயாள தொடர்பு இருப்பதால் அந்த சொல் தமிழருக்குள் உள் நுளைந்து விட்டது...

Posted

கன்றாவி இப்படியொரு வாழ்க்கை தேவையா?? பசைவாளி, பச்சைமண்ணு, இருளழகன் எண்டு, என்னை மாதிரி நல்ல கூட்டுகளே கிடைக்கிறதில்லையா உங்களுக்கு?? :angry: :angry:

அதுசரி அச்சுவேலி, பத்தமேனி, இடைக்காடு, வளலாய் (ஊர் இடங்கள்) எண்டு அந்த பக்கமும் ஏதோ ஒட்டினியளாமே நெசமாவா?? :):huh::lol::lol: :angry:

ஏனப்பு ஒட்டக புலத்தை விட்டனீயள்...??? அங்கைதானே வடிவா ஒட்டலாம்.... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சுவாரசியமாக இருக்கு உங்கள் கதை சாத்திரி!

Posted

ஹீஹீ சாத்ரி மாமா பசைவாளி" நல்லாக இருக்கு. ஓ ஒரு சந்தர்ப்பத்தில் பசைவாளியா? நண்பனா? என்று கூட சிந்தித்திருக்கிறியள் என்றால் இறுதியில் வாளி இல்லாமல் வீட்டுக்கு போனப்போ என்ன நடந்திருக்கும் என சிந்திக்க ......................அழுவதா சிரிப்பதா?

ம்ம் அடுத்த பேப்ப்ரில் சந்தியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி! கதை நன்றாகவுள்ளது.

Posted

பராட்டிய அனைவரக்கும் நன்றிகள் டண் வளலாய் பத்தை மேனிஅச்சுவேலி ஞாபங்களையும் தாயா ஒட்டகப்பு ஞாபங்களையும் கிழறவேண்டாம் பிறகு என்ன நடக்கும் தெரியும்தானே :angry: :angry: நான் அழுதிடுவன் அதை தான் சொல்ல வந்தன் :lol::(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியார் என்ட வீட்டு சுவரும் மதிலும் வீதியோரத்திலேயே இருப்பதால் அதிகாமாக பசைவாளி விளையாட்டு நடைபெறுவது நீங்க எங்கள் வீட்டு மதிலிலும் ஓட்டி இருப்பீர்கள் என்று நினைகிறேன்.

யாழ்ப்லநோக்கு கூட்டுறவுசங்க காவலாளிகள் இருவரை யாழ்பொலிசார் சுட்டு கொன்று போட்டு பயங்கரவாதிகளை சுட்டுபோட்டோம் என்று செய்திகளை பரப்பினவர்கள் அது உண்மையாக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை நோட்டிஸ் ஒட்டி கொண்டிருந்தவர்கள் எல்லாரும் பொலிசை கண்டவுடன் ஓடிவிட்டார்கள்,இரவு வேலையில் காவலிற்கு நின்ற இருவரையும் பொலிசார் சுட்டுவிட்டார்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

கதை நன்றாக இருக்கிறது.

Posted

புத்தன் உங்கள் மானிப்பாய் வீட்டு சுவர்தானெ அதில் என்னுடையகை வண்ணத்தில் கட்டாயம் பசை வண்ணம் பர்திருப்பீர்கள் பாத்திட்டு திட்டியிருப்பீங்கள் . :P :P அடுத்தாய் மானிப்பாய் பலு நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் சுடப்பட்டது ஞாபம் இருக்கிறது ஏனெனில் அங்கு என்னுடைய உறவினர்களும் வேலை செய்தனர் ஆனால் அந்த சம்பவத்தன்று நோட்டீஸ் ஒட்டியது நான் இல்லை :lol::lol:

Posted

பசைவாளி கதை நன்றாக இருக்கிறது ஆனால் கிணத்துக்கு பசை கொட்டினதை பொலிடோல் என்று எழுதினதை நினைக்க சிரிப்பு தாங்க முடியலை.

  • 4 weeks later...
Posted

எண்பதுகளில் மீண்டும் ஒருமுறை வாழ்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். அவசியமான பதிவும்கூட

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.