Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Featured Replies

ஒவ்வருத்தரும் ஒவ்வோரு விதமா இரமாயனத்த சொல்லலுறிங்கள் நீங்கள் இப்படி கத்தி கத்தி விவாதிச்சு என்ன பிரியோசனம்? நாளைக்னே சிட்னிக்கு கம்பன் கழக ஜெயராச் வந்தால் சனம் கூட்டம் கூட்டமா போக போதுகள்... :lol::D:):D

அவருக்கு உங்கே ரசிகர்மன்றம் வேற இருக்கு சுண்டு....................சா சிட்னியில இவருக்கு எல்லாம் ரசிகர் மன்றம் வைக்கும் போது எனக்கு வைக்கக் கூடாத சுண்டு.......... :P

  • Replies 265
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உங்கள் தேடல்களை தொடருங்கள் பலவற்றை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.....ஆனால் மதங்களை புண் படுத்தாத வாறு கருத்துக்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..அவருடைய பேச்சு வல்லமை மிக சிறப்பாக இருக்கும் அவர் கதையை கூறுகின்ற அழகே தனி ஜம்மு..

ஆமாம் இப்படியே வாயால நம்மன்ட ஆட்கள் காலத்தை ஓட்டுவீனம் சுண்டல் அண்ணா........மதங்களை புண்படுத்த கூடாது சரி ஆனா மதத்தின் பெயரால் நடக்கிற அநியாயம் வெளிச்சதிற்கு வரும் நம்ம தேடலில்........... :lol:

இணையவன் சார்

உங்களின்..

இராவணன் = திராவிடன்

இராமன் = ஆரியன் என்ற நிறுவலுக்கு என்ன ஆதார அடிப்படைகளை வைச்சிருக்கிறீங்க..!

நாம் தந்த இணைப்பில் உள்ள கட்டுரையாளர் இப்படியும் சொல்கிறார்

இராவணன் = பிராமணன் ( வான்மீகியின் இராமாயண கூற்றுப்படி)

இராமன் = கறுப்பன் ( வான்மீகியின் கூற்றுப்படி)

இந்தளவுக்கு கூட இல்லாமல்.. உங்கள் தர்க்கம் விதண்டாவாதமாக எழுகிறதே தவிர ஆதாரங்களை தேடும் அளவிற்கு இல்லையே. விதண்டாவாதம் தேவையா.. ஆதாரத் தேடலைச் செய்யக் கூடிய அணுகுமுறைகள் தேவையா..??! தீர்மானியுங்கள்.

கொஞ்சம் அசந்தா கல்லோடு கட்டி கடலில போட்டுவிடுவீங்க போல, நெடுக்ஸ். :lol::D

1. இராமாயணத்தை கருத்தூன்றி படித்தால், ஒரு விடயம் தெளிவாகும். இலங்கையில் இராவணனுடனான போர் ஓய்ந்த பின், ஹனுமான் சீதையை அழைத்து வருகிறான். வந்த சீதை, இராமனிடம் எதுவும் பேசவில்லை.

"ஆரிய புத்ர" என்றுமட்டுமே விழித்து அமைதியடைகிறாள். சீதையே சொன்னபிறகு நாமெல்லாம் யார்? :):D

2. இராவணன் பிராம்மணனா?. என்ன பிரம்மாவின் பேரன் எண்ட "கதையை" விடுகிறீர்களா?

3. இராமன் "கறுப்பு" அல்ல. அவன் "நீல" வண்ணன். "விஷ" ரூபமான நாராயணனின் மறுபிரதி என்பதை காட்ட உருவாக்கபட்ட கட்தை.

தயவு செய்து "பொய் புழுகு கதைகளை" விஞ்ஞான உதவியுடன் முலாம் பூசுவதை தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அசந்தா கல்லோடு கட்டி கடலில போட்டுவிடுவீங்க போல, நெடுக்ஸ். :D:) 1. இராமாயணத்தை கருத்தூன்றி படித்தால், ஒரு விடயம் தெளிவாகும். இலங்கையில் இராவணனுடனான போர் ஓய்ந்த பின், ஹனுமான் சீதையை அழைத்து வருகிறான். வந்த சீதை, இராமனிடம் எதுவும் பேசவில்லை."ஆரிய புத்ர" என்றுமட்டுமே விழித்து அமைதியடைகிறாள். சீதையே சொன்னபிறகு நாமெல்லாம் யார்? :D:D 2. இராவணன் பிராம்மணனா?. என்ன பிரம்மாவின் பேரன் எண்ட "கதையை" விடுகிறீர்களா? 3. இராமன் "கறுப்பு" அல்ல. அவன் "நீல" வண்ணன். "விஷ" ரூபமான நாராயணனின் மறுபிரதி என்பதை காட்ட உருவாக்கபட்ட கட்தை.தயவு செய்து "பொய் புழுகு கதைகளை" விஞ்ஞான உதவியுடன் முலாம் பூசுவதை தவிருங்கள்.

அடப்பாவிகளா.. அயோத்தியின் புத்திரனே என்றதை ஆரிய புத்திரனா திரிச்சிட்டுக்களா..??! :lol:

உங்கள் கருத்துப்படியே.. கடவுளுக்கு பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன் தானே. அப்புறம் என்ன. இராவணன்.. தீவிர சிவ பூசை செய்பவன். சிவ பக்தன். அப்ப அவனும் பிராமணன்.. சா பார்பர்னன் தானே..??! :D

நீல வண்ணத்தில் மனிதப்பிறப்புக்கள் இருக்கா..??! வெளிர் மஞ்சள் கறுப்புத்தானே.. இருக்கு..??! இராமன் நீலம் என்றால்.. அப்படி ஒரு மனிதனே இருக்க முடியாது. அப்ப அவன் ஏலியனா...??! ஆரியனும் அல்ல திராவுடனும் அல்ல..! :lol::lol:

யம்மு..மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்யும் தவறுகளை வெளிக்கொணருங்கள் வரவேற்கலாம்.மதத்தை மனிதர்களின் தவறுக்காக திரிக்காதீர்கள்.. விமர்சிக்காதீர்கள்.மதம் என்றால் பலரின் கண்ணுக்குப் புலப்படுவது இந்து மதம். ஆனால் எல்லா மதத்தில் உள்ள மனிதர்களும் தவறுகள் செய்யினம்.. அதையும் சொல்லுங்கள்.மதமாற்றம் உட்பட..! :lol:

Edited by nedukkalapoovan

அடப்பாவிகளா.. அயோத்தியின் புத்திரனே என்றதை ஆரிய புத்திரனா திரிச்சிட்டுக்களா..??! :D:lol:

உங்கள் கருத்துப்படியே.. கடவுளுக்கு பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன் தானே. அப்புறம் என்ன. இராவணன்.. தீவிர சிவ பூசை செய்பவன். சிவ பக்தன். அப்ப அவனும் பிராமணன்.. சா பார்பர்னன் தானே..??! :lol:

நீல வண்ணத்தில் மனிதப்பிறப்புக்கள் இருக்கா..??! வெளிர் மஞ்சள் கறுப்புத்தானே.. இருக்கு..??!

இராமன் நீலம் என்றால்.. அப்படி ஒரு மனிதனே இருக்க முடியாது. அப்ப அவன் ஏலியனா...??! ஆரியனும் அல்ல திராவுடனும் அல்ல..! :):lol:

ஹி ஹி இதனால் தான் சொல்கிறேன். புனை கதைகள் என்றுமே ஆராய்வுக்கு பொருந்தியனவல்ல. இராமன் நீலவண்ணன் என்பது பச்சை புழுகு என்று தெரியும் உங்களுக்கு ஹனுமான் மலையை தூக்கியது அதைவிட ஆகாசப் புழுகு என்று தெரியவில்லையா? :D:D

அயோத்திக்கு "ஆரிய" என்று எந்தவொரு இலக்கியத்திலும் கூறப்படவில்லை. கதைகளை புதிது புதிதாக திரிக்க வேண்டாம்.

பண்டைத் தமிழர் சிவனை வழிபட்டிருக்கின்றனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது என்ன? பிற்காலத்தில் அந்த சிவனை கட்டி இழுத்து சென்று வட இந்திய "இமய மலை"யில் உக்கார வைத்த பார்ப்பன சூழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி. ஆரிய மதத்தின் அடி நாதமாய் விளங்கும் "ரிக் வேத்த்தில்" சிவனின் நிலை என்ன? முழுமுதற் கடவுளா? சிவனை வழிபடுபவன் பிராம்மணன் அல்ல.

ஆ கடவுளே ஒரு பாளத்துக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிதா? :lol::D:)

Topic Title: இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம் 1 2 3 » 6

Forum: உலக நடப்பு

Topic Starter: கறுப்பி

Replies: 105

Views: 3,307

Last Action: Today, 05:48 PM

Last post by: Eelathirumagan

முடிவு என்னவெண்டு FBI இல்லாட்டி CIA தான் வந்து பதில் சொல்லவேணும் போல் இருக்கு.. பாப்பம் உந்த சுனாமி எப்ப ஓயிது எண்டு.. :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கம்பனை இக்கட்டுரையாளர் பார்பர்னிய விசுவாசி என்று கூறுவதை.. உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும்.. அகநானூற்றுப் பாடல்கள் அடிப்படையில் விவாதிப்பதைப் பாராட்டலாம்.

இறுதில் இவர்களுக்கு இப்படிச் சொல்கிறார்..

"இதனை படித்த பிறகாவது இராமாயணம் பார்ப்பன அடிவருடியான கம்பரால் மட்டுமே முதன்முதலில் எழுதப்பட்டது; அதனால் அதில் இராமனை பற்றியும் பார்ப்பனரைப் பற்றியும் போற்றி மட்டுமே இருக்கின்றன என்று கூறி திரியும் அறிவிலிகளுக்கு கொஞ்சம் அறிவு வரட்டும். இராமாயண நிகழ்ச்சிகள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் மிகப் பரவலாக தெரிந்திருந்தன என்பதற்கு அவற்றை தங்கள் பாடல்களில் 'உவமையாக' சங்ககால புலவர்கள் எடுத்தாண்டிருப்பதிலேயே தெரிகிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றையே ஒப்பாகவும் உவமையாகவும் சொல்வது வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே."

http://vittudhusigappu.blogspot.com/2006/0...og-post_28.html

நெடுக்காலபோவான்!

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

கம்ப ராமாயணம் என்றாலும் சரி, வான்மீகி இராமாயணம் என்றாலும் சரி, இராமன் பரசுராமனை கொல்லாததன் காரணம் பரசுராமன் பார்ப்பனன் என்றே சொல்கின்றது.

"வேதவித்து ஆய மேலோன்" என்ற பதம் பார்ப்பனரையே குறிக்கிறது.

நீங்கள் சொன்னது போன்று இராவணனும் வேதங்கள் கற்றிருந்தாலும், அவன் "மேலோனாக" இருக்கவில்லை.

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதற்கு, இராமனால் அவன் கொல்லப்பட்டதே சான்று.

அதே வேளை இராவணன் என்கின்ற பாத்திரம் திராவிடரைக் குறிக்கின்றது என்பது ஒரு ஆய்வு. அதை இராமாயணம் சொல்லவில்லை. அதை நாம்தான் வலுவான காரணங்களோடு சொல்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி இதனால் தான் சொல்கிறேன். புனை கதைகள் என்றுமே ஆராய்வுக்கு பொருந்தியனவல்ல. இராமன் நீலவண்ணன் என்பது பச்சை புழுகு என்று தெரியும் உங்களுக்கு ஹனுமான் மலையை தூக்கியது அதைவிட ஆகாசப் புழுகு என்று தெரியவில்லையா? :D:)

அயோத்திக்கு "ஆரிய" என்று எந்தவொரு இலக்கியத்திலும் கூறப்படவில்லை. கதைகளை புதிது புதிதாக திரிக்க வேண்டாம்.

பண்டைத் தமிழர் சிவனை வழிபட்டிருக்கின்றனர். "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது என்ன? பிற்காலத்தில் அந்த சிவனை கட்டி இழுத்து சென்று வட இந்திய "இமய மலை"யில் உக்கார வைத்த பார்ப்பன சூழ்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி. ஆரிய மதத்தின் அடி நாதமாய் விளங்கும் "ரிக் வேத்த்தில்" சிவனின் நிலை என்ன? முழுமுதற் கடவுளா? சிவனை வழிபடுபவன் பிராம்மணன் அல்ல.

அயோத்தின் புத்திரனே என்பதுதான் அதன் பொருளாக அமைய முடியும். ஆரியம் என்ற பதமே வெள்ளைக்காரன் அளிச்சதுதான். அதெப்படி கம்பனுக்கு...????! திரிப்பது நாமல்ல.. பாடலில் உள்ள முழு வடிவத்தோடு " ஆரிய புத்திராவை" கொண்டு வாருங்கள் தெளிவான பதிலைத் தேடலாம்.

இதைத்தானே ஆரம்பத்திலேயே சொன்னோம்.. இராவணன்.. சிவ வழிபாடு செய்பவன்.

கோயிலில் பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன். இமய மலை ஆரிய மலை.. இதெல்லாம் நீங்களா பார்பர்ன எதிர்ப்பில் கிளப்பும் புரளிகளே தவிர.. உண்மைகள் அல்ல என்பதை இப்போ தென்னாடுடைய சிவனே போற்றியூடு நிறுவியாயிற்று.

முன்னுக்குப் பின் முரண்பட வேண்டிய நிலை என்ன..??! :D :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

கம்ப ராமாயணம் என்றாலும் சரி, வான்மீகி இராமாயணம் என்றாலும் சரி, இராமன் பரசுராமனை கொல்லாததன் காரணம் பரசுராமன் பார்ப்பனன் என்றே சொல்கின்றது.

"வேதவித்து ஆய மேலோன்" என்ற பதம் பார்ப்பனரையே குறிக்கிறது.

நீங்கள் சொன்னது போன்று இராவணனும் வேதங்கள் கற்றிருந்தாலும், அவன் "மேலோனாக" இருக்கவில்லை.

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதற்கு, இராமனால் அவன் கொல்லப்பட்டதே சான்று.

அதே வேளை இராவணன் என்கின்ற பாத்திரம் திராவிடரைக் குறிக்கின்றது என்பது ஒரு ஆய்வு. அதை இராமாயணம் சொல்லவில்லை. அதை நாம்தான் வலுவான காரணங்களோடு சொல்கின்றோம்.

நீங்கள் எந்த வலுவான காரணங்களையும் முன் வைக்கல்லையே. இராவணன்.. திராவிடன் என்று காட்ட.. ஆரியம் திராவிடம் என்பன கூட வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்திய பதங்கள். அப்படி இருக்க...???! எப்படி வலுவான காரணங்கள் இராமாயணத்துள் இராவணனுக்குத் தேட முடியும்..!

சிவ வழிபாடு என்பது தமிழர்களின் முன்னோர் செய்ததற்கான அடிப்படைகள் உண்டு. அதற்கான சான்றுகளுடன் சில ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

அடிப்படையில் மதம் என்றாலே பார்பர்னன்.. பிராமணன் என்று எதிர்கொள்ளும் நீங்கள் எப்படி.. இப்படி விவாதத்தில் சான்றுகள் காட்ட முடியும்..?! திரிபுகளைச் செய்வதை விட வேறு மார்க்கம் உங்களிடம் இருக்க இடமில்லை. :lol:

Edited by nedukkalapoovan

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹி ஹி. கதை. :lol::D

இராமாயணம் எழுதப்பட்டது வான்மீகியால். தேவைக்கேற்றபடி அதையும் திரிக்கிறார்களா? அப்போ வேடனுக்கு கொடுத்த சாபம் ( "மரா" என்று இருந்ததை ) "ராம" என்று "த்வ்விய நாமமாக" மாறி, பிரம்மனே வந்து வரங்கொடுத்த புனைகதையை எங்கு கொண்டுபோய் இணைக்க? :):D

சங்ககாலம், சங்கம் மருவிய காலம் என்பன இராமாயணத்துக்கு பிந்திய காலங்கள். இப்பவே சரியான முறையில் சிந்திக்க தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்தக் காலத்தில் எல்ல்லோரும் "கும்பலில் கோவிந்தா" தான், புலவர் ஒருவர் தெரிந்த கதையை உவமையாக சொல்லி உள்ளார். அவ்வளவே. கதை உண்மை என்பதற்கு அதில் எந்த வலுவான பிடிப்பும் இல்லை. :D:lol:

அயோத்தின் புத்திரனே என்பதுதான் அதன் பொருளாக அமைய முடியும். ஆரியம் என்ற பதமே வெள்ளைக்காரன் அளிச்சதுதான். அதெப்படி கம்பனுக்கு...????! திரிப்பது நாமல்ல.. பாடலில் உள்ள முழு வடிவத்தோடு " ஆரிய புத்திராவை" கொண்டு வாருங்கள் தெளிவான பதிலைத் தேடலாம்.

இதைத்தானே ஆரம்பத்திலேயே சொன்னோம்.. இராவணன்.. சிவ வழிபாடு செய்பவன்.

கோயிலில் பூசை செய்பவன் எல்லாம் பார்பர்னன். இமய மலை ஆரிய மலை.. இதெல்லாம் நீங்களா பார்பர்ன எதிர்ப்பில் கிளப்பும் புரளிகளே தவிர.. உண்மைகள் அல்ல என்பதை இப்போ தென்னாடுடைய சிவனே போற்றியூடு நிறுவியாயிற்று.

முன்னுக்குப் பின் முரண்பட வேண்டிய நிலை என்ன..??! :D :P :lol:

நம் கண்ணுக்கு தெரியாமல் படு சாதுரியமாக மறைக்க பட்டிருந்த "ஆரிய" என்ற பதத்தை பதிப்பித்தவர் வெள்ளையர்ரே.

இங்கு யாரும் முன்பின் முரண்படவில்லை. எனது கருத்தில் உறுதியாகவே இருக்கிறேன். இராமாயணம் புனை கதை. அதை புனைந்ததன் நோக்கம் "ஆரியம்" என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தவே. :D:lol:

"எழுதாக்கிழவி" என்று புகழ்பாடப்படும் வேதம் எழுதப்படாமல் இருப்பதன் நோக்கம் "அட்ஷர சுத்தமான" ஒலிபேதம் ஆகிவிடும் என கூறுபவர்கள், "ஆரிய புத்ர" என சொல்பிறளாமல் சீதை கூறியதை அப்படியே ஏற்க வேண்டும். ஆரிய என்ரால் அயோத்தியாகவும் இருக்கலாம் என்ற வீண்வாதம் ஏற்புடையதல்ல. :):D

இராவணன் ஒரு பார்ப்பனன் அல்ல என்பதைத்தான் நான் தர்க்கித்திருந்தேன்.

இராவணன் திராவிடன் என்பது ஒரு தனி ஆய்வு. இராவணன் ஒரு திராவிடன் என்பது பற்றிய வாதங்களை நான் இன்னும் வைக்கவில்லை.

நெடுக்காலபோவான்! நீங்கள் இதை புரியாது கருத்து எழுதுகிறர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகன்..

ஆர்ய புத்ரா.. ஆரிய புத்திரனா..??!

வெள்ளைக்காரன் புகுத்தியதை எப்படி சீதை அறிஞ்சாவு..??!

சபேசன்..

உங்கள் கருத்துப்படி இறைவனை பூசை செய்யுறவன் எல்லாம்.. பிராமணன் பார்பர்னன்.. வேதம் பயின்று சிவ பூசை செய்த.. இராவணன் மட்டும் பிராமணன் அல்ல. பார்பர்னன் அல்ல. நல்ல விளக்கம்..! :lol::D

ஈழத்திருமகன்..

ஆர்ய புத்ரா.. ஆரிய புத்திரனா..??!

வெள்ளைக்காரன் புகுத்தியதை எப்படி சீதை அறிஞ்சாவு..??!

"ஆர்ய புத்ர" என்பதே அந்தப் பதம். வெள்ளைக்காரன் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருந்ததை வெள்ளைக்காரன் வெளிப்படுத்தினான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"ஆர்ய புத்ர" என்பதே அந்தப் பதம். வெள்ளைக்காரன் புகுத்தவில்லை. ஏற்கெனவே இருந்ததை வெள்ளைக்காரன் வெளிப்படுத்தினான். :lol:

வெள்ளைக்காரன் தான் ஆரியம் என்ற பத்ததை அறிமுகப்படுத்தியவன். அதற்கான சான்றுகள் உண்டு.

அரிய.. புத்ர.. என்பதை ஆரிய புத்ர என்ற கருத்தாடியுள்ளீர்கள். இதற்கு அயோத்தியமல்ல.. ஆரியரும் அல்ல.. பொருள்.. அதன் பொருள் வேறு.

நீங்கள் குறிப்பிட்டது போல கம்பன் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவன் அல்ல. எனவே கம்பராமாயாண விடயங்கள் எப்படி சங்க காலத்துள் நுழைந்தது.

கம்பர் வாழ்ந்த கால 9-ஆம் நூற்றாண்டு என்பர். சிலர் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு எனவும் கணக்கிடுவர்.

சங்க காலம் (கி.மு 300 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

எனது முந்தைய பதிவை பாருங்கள். "ஆர்ய புத்ர" என்றே எழுதியுள்ளேன். அதன் தமிழ் வடிவம் "ஆரிய புத்திரன்" என வரும்.

மேலும் நான் பேசுவது கம்பராமாயணம் அல்ல. கம்பனை பற்றி நான் அக்கறைப்படவில்லை. வால்மீகி இராமாயணத்தை அழகுற மெருகூட்டி தமிழில் பாடியவன் கம்பன். "முதலுக்கே" மோசம் வரும்போது "வட்டியை" பற்றி நினைப்பது தகுந்ததல்ல.

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.

அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. :D:D

இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.

அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.

கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!

இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??! :):lol:

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. :):lol: இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??! :lol::lol:

நண்பரே!!

ஆர்ய என்பது தமிழல்ல. தமிழுக்கும் "ஆர்ய" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மொழிபெயர்ப்பு "ஆரிய" என்று வரும். இந்த ஆரியர்களின் விதண்டா வாத கூத்துக்களை ஒருவர் தமிழில், "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ! காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!" என்று பாடவில்லையா? "ஆர்ய" என்பதன் தமிழ் வடிவம் "ஆரிய" என்பதாகும்.

என்னை பொறுத்தவரை "கம்ப ராமாயணத்துக்கு மிஞ்சிய தமிழ் அழகுள்ள" பாடல்களை சங்கப் புலவர்கள் படைக்கவில்லை. இன்றும் தமிழர் மத்தியில் இராமாயணத்தை தூக்கி நிறுத்தியிருப்பது "கம்பனின் கவித்துவமே". அதாவது தமிழின் அழகு. இதைவிட, இராமாயணம் தொடர்பில் ஒரு "கடவுள் போதை" யிலே பலபேர் இருப்பதை காணலாம்.

அதுசரி. தென்னாட்டில் நடந்த மிகப்பெரும் போராக வருணிக்கப்படும் இராமாயணம் அதே காலத்தில் "தமிழில்" எழுதப்படாமல் விடப்பட்டது ஏன்? வடமொழியில் இராமாயணத்தை எழுத வேண்டிய தேவை எழுந்தது ஏன்? தமிழ்க் கவிகள் (குரங்குகள் அல்ல) தென்னாட்டில் இல்லாமல் போய்விட்டார்களா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், எனது ஊரில் நடந்த பெருஞ்சண்டையை நாம்யாரும் எழுதாமல் அமெரிக்கா காரன் வந்து எழுதித் தந்தது போல் இருக்கிறது. கண்டதற்கெல்லாம் பரணிபாடும் புலவர்கள் இதைமட்டும் விட்டு வைத்திருப்பார்களா? :D:D

இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.

இந்த முடிவ்வுக்கு உங்களை வரச்செய்த என் கூற்று எது என கூறமுடியுமா? :D

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!!

ஆர்ய என்பது தமிழல்ல. தமிழுக்கும் "ஆர்ய" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதன் மொழிபெயர்ப்பு "ஆரிய" என்று வரும். இந்த ஆரியர்களின் விதண்டா வாத கூத்துக்களை ஒருவர் தமிழில், "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ! காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!" என்று பாடவில்லையா? "ஆர்ய" என்பதன் தமிழ் வடிவம் "ஆரிய" என்பதாகும்.

என்னை பொறுத்தவரை "கம்ப ராமாயணத்துக்கு மிஞ்சிய தமிழ் அழகுள்ள" பாடல்களை சங்கப் புலவர்கள் படைக்கவில்லை. இன்றும் தமிழர் மத்தியில் இராமாயணத்தை தூக்கி நிறுத்தியிருப்பது "கம்பனின் கவித்துவமே". அதாவது தமிழின் அழகு. இதைவிட, இராமாயணம் தொடர்பில் ஒரு "கடவுள் போதை" யிலே பலபேர் இருப்பதை காணலாம்.

அதுசரி. தென்னாட்டில் நடந்த மிகப்பெரும் போராக வருணிக்கப்படும் இராமாயணம் அதே காலத்தில் "தமிழில்" எழுதப்படாமல் விடப்பட்டது ஏன்? வடமொழியில் இராமாயணத்தை எழுத வேண்டிய தேவை எழுந்தது ஏன்? தமிழ்க் கவிகள் (குரங்குகள் அல்ல) தென்னாட்டில் இல்லாமல் போய்விட்டார்களா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், எனது ஊரில் நடந்த பெருஞ்சண்டையை நாம்யாரும் எழுதாமல் அமெரிக்கா காரன் வந்து எழுதித் தந்தது போல் இருக்கிறது. கண்டதற்கெல்லாம் பரணிபாடும் புலவர்கள் இதைமட்டும் விட்டு வைத்திருப்பார்களா? :D:)

இந்த முடிவ்வுக்கு உங்களை வரச்செய்த என் கூற்று எது என கூறமுடியுமா? :lol:

ஆரியக்கூத்து என்பது தனிச் சொல். அதிலும் இது ஆரியர் கூத்தாக கருத்தில் எடுக்கப்பட முடியுமா..??! உங்கள் ஆரிய புத்ரா என்பது ஆரியர் புத்திரா என்பதாக எல்லோ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது உங்களால்..!

இராமாயணத்தின் சமூக ஆதிக்கமே அது சமஸ்கிரதத்தில் எடுதப்படவும்.. கடவுள் வடிவம் புகுத்தப்பட்டு எழுதப்படவும் காரணம். இராமாயணம்.. ஒரு வரலாற்றுப் பதிவாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் சில இன்றும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இராமாயண விடயங்களை வெறும் கற்பனை புளுகு மூட்டை என்ற அடிப்படையில் அணுகுவதிலும்.. வரலாற்று அடிப்படையில் அறிவியல் கொண்டு அணுகனும் என்று வாதிடுறம்..! அதுதான் சான்றுகளூடு வரலாற்றை மீட்டிட உதவும். :D

இராமாயணம் சங்க காலத்துக்கு முந்தையது என்பதை எழுதி இருந்தேன். சங்கப் புலவர்கள் அதை எடுத்து தமது படைப்புக்களில் பயன்படுத்தி இருப்பார்கள். நீங்கள் "கம்பன் வால்மீகிக்கு முதல்..." என்று பதிந்ததாலேயே அந்த பதிலை எழுதினேன்.

இதில் தான். கம்பன் வான்மீகிக்கு முதல் என்று நாம் குறிப்பிடவும் இல்லை. வான்மீகி சங்ககாலத்தில் வாழ்ந்தார் என்பதற்கும் நாம் சான்று தரல்ல. வான்மீகி கூட சங்காலத்துக்குரியவர் அல்ல என்ற நிறுவலையும் செய்யல்ல. :lol::D

Edited by nedukkalapoovan

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அப்போ இது என்ன?

சரி, "இது எனது கருத்தல்ல. வலைப்பதிவாளரின் கருத்து" எனின் ................................. :D:D

ஆரியக்கூத்து என்பது தனிச் சொல். அதிலும் இது ஆரியர் கூத்தாக கருத்தில் எடுக்கப்பட முடியுமா ..??! உங்கள் ஆரிய புத்ரா என்பது ஆரியர் புத்திரா என்பதாக எல்லோ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது உங்களால்..!

இராமாயணத்தின் சமூக ஆதிக்கமே அது சமஸ்கிரதத்தில் எடுதப்படவும்.. கடவுள் வடிவம் புகுத்தப்பட்டு எழுதப்படவும் காரணம். இராமாயணம்.. ஒரு வரலாற்றுப் பதிவாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அது குறிப்பிடும் புவியியல் அம்சங்கள் சில இன்றும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இராமாயண விடயங்களை வெறும் கற்பனை புளுகு மூட்டை என்ற அடிப்படையில் அணுகுவதிலும்.. வரலாற்று அடிப்படையில் அறிவியல் கொண்டு அணுகனும் என்று வாதிடுறம்..! அதுதான் சான்றுகளூடு வரலாற்றை மீட்டிட உதவும். :)

தமிழ்ப்பண்பாடு என்பது தனிச்சொல். இது தமிழர் பண்பாடு என எடுக்கமுடியுமா என்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. :D:D

இராமாயணம் என்பது "ஒரு சமூகத்துக்காக" அவர்களால் எழுதப்பட்டது. இதைத்தான் கத்திக் கத்தி சொல்கிறேன். இது புனைகதையேயன்றி வேறல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயின்ச்ரைன் அய்யா நீங்கள் சுத்திரமாதிரி எனக்குப்படுது, இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக குறிப்பிட்ட பந்தி

ஆரிய என்ற ஒரு சொல் தமிழில் இல்லையே... அப்ப எப்படி தமிழில் அப்படி வரும்.அரிய.. அரி.. இவைதான் தமிழில் உண்டு. இன்னொரு விடயத்தை அழகாகச் சொல்லிட்டிங்கள். இராமாயணம்.. வான்மீகிக்கும் சொந்தமல்ல.. கம்பனுக்கும் சொந்தமல்ல. அது வேறோ யாருக்கோ சொந்தம்.அதுவும் தமிழில் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அதற்குமிடையில் தொடர்பு இருந்திருக்கிறது.கம்பன் இராமாயணத்தில் காட்டியதை விட சிறப்பாக சங்ககாலம் சங்கம் மருவிய காலப் புலவர்கள் இராமாயணத்தை அடையாளம் காட்டியுள்ளனரே. ஆக இராமாயணம்.. கற்பனை என்று இலகுவாக மறுதலிக்க முடியாது.. அதற்கு என்று ஒரு வரலாற்று பின்னணி உண்டு என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் உடன்படுவீர்களா..??!இராமாயணம்.. கம்பனின் புளுகு.. வான்மீகியின் ஆரிய எச்சம்.. இதெல்லாம்.. போய்...?? இப்போ சங்கத் தமிழுள் இருக்கும் கவிக்குள் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு.. அதன் பின்னணி என்ன..??!

பிறகு இதுவும் நீங்கள் நெடுக்கண்ணா போட்டதாக போட்ட பந்தி

இராமாயணம்.. கம்பனால் வான்மீகியால் மட்டுமல்ல.. அதற்கு முதலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு அகநானூற்றில் சில பாடல்களூடு ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இடையில இருந்தது மாயமா மறைஞ்சு திரிவுபட்டு வேறமாதிரியான தோற்றப்பாட்ட தரேல்ல?

சுத்தலாம் ஆனா இப்பிடி சுத்த கூடாது :angry:

Edited by Aadhi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.