Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு!

 

spacer.png

பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

spacer.pngதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் புரமோஷன், மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை(8.7.2022) நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் படத்தில் நடித்துள்ள முன்னணி கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம், “ எனது முதல் நன்றி கல்கிக்கு. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த போது பொன்னியின் செல்வனைப் படித்தேன். அன்றிலிருந்து அது என் மனதை விட்டு போகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்கவேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் பொன்னியின் செல்வன் படம் நடிப்பதாக இருந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அந்தப்படம் நின்று விட்டது.

spacer.png

இன்றுதான் எனக்கு அந்தப் படம் ஏன் நின்றது எனப் புரிந்தது. எங்களுக்காக எம்ஜிஆர் இந்தப் படத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தப்படத்தை எடுக்க பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். 1980களில் ஒரு முறை, 2000, 2010 என நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன். அதனால் இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது எனக்குத் தெரியும். எல்லோராலும் பொன்னியின் செல்வன் நேசிக்கப்படுகிறது என்பதும் தெரியும். நாவலைப் படித்தவர்கள் எல்லாம் அதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். நாவல் மீது ஈர்ப்புடன் இருப்பார்கள். நானும் அவர்களைப் போல தான்.

spacer.png

ஆனாலும் நான் இந்த படத்தில் பங்கேற்ற கலைஞர்களின் உதவி இல்லாமலும், ரவிவர்மன், ரஹ்மான், தோட்டாதரணி, ஸ்ரீகர் பிரசாத், ஜெயமோகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற ஒவ்வொருவரின் உதவி இல்லாமலும் இதனைச் செய்திருக்க முடியாது. முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் இடையில் படப்பிடிப்பில் பிபிஇ கிட் அணிந்து தான் வேலை நடந்தது. லாக் டவுனுக்கு இடை இடையில் பண்ண வேண்டிய படமாக இது மாறி விட்டது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, என்னைப் பொறுத்துக் கொண்டு கூட பயணம் செய்ததற்கு நன்றி” என்றார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “ 30 ஆண்டுகளாக எனக்கு பாஸ் மணிரத்னம் தான். சினிமாவில்நான் கத்துக்கிட்ட வித்தைகள், வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என என்னை வளர்த்தவர் இவர். இது இந்தியாவின் படம். லாக்டவுன் சமயத்தில் இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாய் எடுத்துள்ளனர். அதற்கே பெரிய நன்றி'' என்றார்.

spacer.png

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், “இந்த படம் கிடைத்தது பாக்கியம். அதை விட மணிரத்னம் சார் கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம். அவரது இயக்கத்தில் படங்கள் வெளியாகும் போதெல்லாம் படத்தின் விளம்பரத்தை ஏக்கத்துடன் பார்த்த காலம் உண்டு. இன்றைக்கு பொன்னியின் செல்வன் போஸ்டரில் எனது பெயர் உள்ளது. இதை விட என்ன வேண்டும். எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி, ஆசிரியர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் தமிழனின் அடையாளம். இது உலகம் முழுக்க இன்னும் பரவ வேண்டும். காலம் கடந்து தமிழ் இருக்கும் வரை இந்த படம் இருக்கும்'' என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “இந்த மேடையில் நிற்பதே மெய்சிலிர்க்க வைக்கிறது. இது நமது மண்ணின் சரித்திரம். சோழர்கள் உலகம் முழுக்க பயணித்துள்ளார்கள். தமிழ் மண்ணின் புகழை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தில் நான் இருந்தேன் என்பதே பெருமையாக உள்ளது. எத்தனை படங்கள் நான் நடித்திருந்தாலும் இந்த படம் எனக்கு ஸ்பெஷல். இந்த பயணத்தில் என்னை பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணி சார் கேட்டார். பெருமையாக இருந்தது. இந்த படம் மிகப் பிரம்மாண்டமாய் அமையும். எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் பெருமை மிகு படமாக அமையும்'' என்றார்.

அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி , “இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என மார் தட்டி சொல்லலாம். இது மாதிரியான ஒரு விஷயம் என் வாழ்வில் நடந்தது இல்லை. திடீரென கூப்பிட்டு பொன்னியின் செல்வன் படம் பண்ண போறோம். நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்றார் மணிரத்னம். இந்த டீசரை பார்த்ததை விட அப்போது இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என அவர் சொன்னபோது தான் அதிகம் மெய்சிலிர்த்தது. பல பேரின் கனவு நனவாகி உள்ளது. இந்த கனவை சாத்தியமாக்கிய மணி சாருக்கு நன்றி. இது எங்கள் படம் கிடையாது, நமது படம் என அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும். பல பேர் முயற்சித்து முடியாமல் போனதை இன்று மணிரத்னம் நடத்தி காட்டி உள்ளார்'' என்றார்.

spacer.png

நடிகர் கார்த்தி பேசுகையில், “நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு பாடம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைப்படுத்தியது தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்.

ஆனால், ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்.. படைக்க முடியாது. இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன்.

இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும். நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்தியதேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார். அம்மாடியோவ்... அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா? என்று கேட்டேன்.

spacer.png

அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்தியதேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரிக்கு எல்லாம் தெரியும். அது போல குதிரையேற்றம், போர் போன்ற எல்லாக் கலைகளையும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.அவருக்கென தனி பிரிவு கிடையாது என்று கூறினார். வந்தியதேவன் ஒரு இளவரசன். எனினும் அவனுக்கு நாடு கிடையாது. ஆனால் அவன் பேராசை கொண்டவன். அவனுக்கு பெண் ஆசையிலிருந்து பண ஆசை வரை எல்லா ஆசைகளும் உண்டு. ஆனால், மிகவும் நேர்மையானவன். இது தான் எனக்கு வந்தியதேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. மேலும், ஒரு நாவலை படமாக்குவதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால், இந்த நாவலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலிருக்கும். குறைந்தது 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்" என்றார்

spacer.png

குந்தவையாக நடித்துள்ள நடிகை திரிஷா, “மணிரத்னம் சாருக்கு மிக்க நன்றி. இது அவரின் படம். அதில் நான் மணிசாரின் குந்தவையாக நடித்துள்ளேன். இந்த படம் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்க வேண்டும். இது இந்தியாவை தாண்டி உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய படம். பான் இந்தியா என்று சொன்னால் தென்னிந்திய சினிமாவை தான் சொல்கிறார்கள். பொன்னியின் செல்வன் இந்தியா முழுக்க பார்க்க வேண்டிய படம். இது தான் உண்மையான பான் இந்திய படம்'' என்றார்.

 

 

https://minnambalam.com/entertainment/2022/07/09/15/ponniyin-selvan-teaser-release-function-actor-actress-speech

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Lica பாஸ்கரனுடைய பெயரையே காணோம் ? கல்கியின் பெயருக்குப் பின்னால்(நன்றி கூறுகையி) இவருடைய பெயரல்லவா வந்திருக்க வேண்டும்? 

திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறதா ? 

☹️

Posted
2 minutes ago, Kapithan said:

Lica பாஸ்கரனுடைய பெயரையே காணோம் ? 

திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறதா ? 

☹️

ஆம் என நினைக்கிறேன் கூட்டு தயாரிப்பு தானே 
நேற்று டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் கூட நன்றி சொல்லவில்லை ஓரிடமும் அவர் பெயர் வரவில்லை

பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களிற்குள் கார்த்தி மட்டுமே வந்தியத்தேவனாக ரசிகர்களின் கற்பனைக்குள் இருக்கும் பாத்திரத்திற்கு கிட்டவாக வருவார் என நினைக்கிறேன்.. வந்தியத்தேவனின் இளமையும் குறும்பும் காதலும் வீரத்தையும் நிச்சயமாக கார்த்தியால் கொஞ்சமாவது ஈடு செய்ய முடியும் என நம்புகிறேன்
படத்தில் பூங்குழலி வந்தியத்தேவனின் ரகளையையும்
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனின் கூட்டணி களேபரங்களையும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என பார்க்க ஆவலாக உள்ளேன் .
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, அபராஜிதன் said:

ஆம் என நினைக்கிறேன் கூட்டு தயாரிப்பு தானே 
நேற்று டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் கூட நன்றி சொல்லவில்லை ஓரிடமும் அவர் பெயர் வரவில்லை

இந்திய திரைப்பட வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பு. இதில் இலங்கைத் தமிழன் இடம்பெறக்கூடாது என நினைக்கிறார்கள் போல..Lica விடம் இருந்து படம் பிடுங்கப்படுமானாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடேய் அப்பிரசண்டுகளா பொன்னியின் செல்வன், அவனின் செல்வன் இருவரும் Pan Asian Emperors களடா.

பான் இந்தியன் என்று சொல்லி பான்பராக் வாயனுகள் போல ஆக்கிடாதிங்கடா😆.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் வருவாயில் கல்கிக்குப் பங்குண்டா? - அருஞ்சொல் ஆசிரியர்

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க  செய்திகள் இங்கே இடம்பெறும். 

யக்குநர் மணிரத்னத்தின் உரையைக் கேட்டேன்; ‘பொன்னியின் செல்வன்’ விழாவில். தன்னுடைய முதல் நன்றியைக் கல்கிக்குத் தெரிவித்து, உரையைத் தொடங்குகிறார். வரவேற்புக்குரிய மரியாதை. 

நாடு தழுவிய படமாக ‘பொன்னியின் செல்வன்’ எடுக்கப்பட்டிருக்கும் சூழலில், அதற்கான எழுத்து சார்ந்த பங்களிப்பைக் கல்கியின் குடும்பத்துக்கு மணிரத்னம் செலுத்துவதே அவர் சொல்லில் வெளிப்படுத்தும் மரியாதைக்கு செயல்பூர்வ அர்த்தம் கொடுக்கும் என்று எண்ணுகிறேன். 

அமரர் கல்கியின் எழுத்துகள் பொதுவுடைமை ஆகிவிட்டதால், சட்டபூர்வ நிர்ப்பந்தங்கள் ஏதும் மணிரத்னத்துக்கு இல்லை. அதேசமயம், தார்மிகரீதியாக இதை அவர் செய்வது அவசியம். 

புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’க்கும், மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று இரண்டையும் அறிந்த ஒருவர் கேட்கக்கூடும்; அவ்வளவுக்கு பெரும் வேறுபாடு இரு படைப்புகளுக்கும் இடையே. ஒருசமயம் மகேந்திரனிடம் உரையாடுகையில், இதைக் கேட்டபோது சொன்னார், “கரு யாருடையது, என் மனதுக்குத் தெரியும் இல்லையா?” 

இயக்குநர் வெற்றிமாறனிடமும் இதே மேன்மையை இன்று காண்கிறேன். அவர் எடுத்தாளும் கதைக்கும், படத்தில் அவர் உருவாக்கும் திரைக்கதைக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள்! ஆனால், எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்கு - அடையாள நிமித்தமாக அல்ல; கண்ணியமான தொகை - செல்வதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவர் கையாளும் ‘வாடிவாசல்’ கதைக்காக சி.சு.செல்லப்பாவின் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொகை பெரியது.

நீதிநாயகம் கே.சந்துருவின் வாழ்க்கையிலிருந்தும், எழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கதை என்பதால், ‘ஜெய்பீம்’ படத்துக்கு அவருக்குப் பெரிய தொகையைக் கையளிக்க முன்வந்தது சூர்யாவின் நிறுவனம். சந்துரு வழக்கம்போல அதை மறுத்துவிட்டார் (அவருடைய இத்தகு அணுகுமுறையை மட்டுமே தனித்து எழுத வேண்டும்). பின்னர் அடையாளபூர்வமாக வெறும் ரூ.100/- பெற்றுக்கொண்டு எழுதிக்கொடுத்தார். சந்துருவின் இந்த மேன்மைக்குப் பதில் மரியாதை செலுத்த முற்பட்டது ‘ஜெய்பீம்’ குழு. 

பழங்குடிகள் வாழ்வைப் பேசும் படம் என்பதால், ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய கதைகளே படமாகி இருப்பதால், தார்மிக அடிப்படையில் அவர்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று இயக்குநர் த.செ.ஞானவேலும், தயாரிப்பாளர் சூர்யாவும் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தனர். சந்துருவின் இந்த முடிவுக்குப் பின்னர் பழங்குடியினருக்கான தொகையை மேலும் அதிகமாக்கினர். விளைவாக ரூ.1 கோடியைப் பழங்குடிகள் சங்கத்தினருக்காகப் பேராசிரியர் கல்யாணியின் கைகளில் கொடுத்தது ’ஜெய்பீம்’ குழு.

மேலே சொன்ன எல்லாமே எழுத்தாளர்கள் / கதைக் கருவைத் தந்தவர்கள் மீதான தம்முடைய மரியாதையைத் தார்மிகரீதியில் கலைஞர்கள்   வெளிப்படுத்தியிருக்கும் தருணங்கள். ‘கல்கி குழுமம்’ இன்று பிரகாசமான நிலையில் இல்லை. சொல்லப்போனால், கடும் நெருக்கடிகளுக்கு இடையில், கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்கி தன்னுடைய உயிரென வளர்த்தெடுத்த ‘கல்கி’ அச்சிதழே நிறுத்தப்பட்டுவிட்டது.

கல்கிக்கான நன்றியை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய செயல்பாட்டால் வெளிப்படுத்த வேண்டும்; நானறிந்த வகையில் மேன்மையான மனிதர்; நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்!
 

https://www.arunchol.com/question-to-samas-on-ponniyin-selvan

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான அட்டாகாசமான கதை .........படம் பார்த்தால்தான் மிகுதி தெரிய வரும்.......!  👍

மணிரத்னம் இதுவரை எடுத்த பெரும்பாலான கதைகள் எல்லாம் புராணம் இதிகாசங்களைத் தழுவியதுதானே ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பொன்னியின் செல்வன் கதையை வாசித்து, அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உருவகப்படுத்தி வைத்திருக்கிறேன்.. எனது கற்பனையில்/மனதில் எந்த சோழ மகளிரும் ஐஸ்வர்யா மாதிரியோ இல்லை த்ரிஷா மாதிரியோ இல்லை.. ஏன் ஆதித்த கரிகாலன், வந்தியதேவன் கூட இந்த நடிகர்கள் மாதிரி இல்லை.. ஆகையால் படத்தை பார்ப்பேன் என தோன்றவில்லை.. 

ஜோதா அக்பரில், அக்பராக ஹீர்திக் ரோஷன்😰😰, ஆனால் அக்பர் உயரம் குறைவானவர் என்பது கூட தெரியாமல் படம் எடுத்திருக்கிறார்கள்🤦🏽‍♀️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வனும் இலங்கையும்

குமார் சுகுணா

இலங்கையில் பூங்குழலியோடு  யானை மீது சவாரி செய்த அருண்மொழிவர்மன். இந்த மண்ணுக்கு மன்னனாக முடி சூட்டிக்கொள்ளுமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்த போதும் அதனை விட்டு தமிழ்நாட்டை காப்பாற்ற கடல் தாண்டி சென்றான். கோடிக்கரையில்  கப்பலிலும்... படகிலும்  பயணித்தவன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக மாறி  ராஜராஜசோழனாக தெற்கே குமரி முதல் வடக்கே வேங்கடம் வரை ஆட்சி புரிந்தான்.

unnamed__2_.png

உலக அதிசயமான தஞ்சை பெரியார் கோயிலை கட்டியமைத்து ஆயிரம் வருடங்களுக்கு மேலும் , நீங்க புகழுடன் மரணத்தை கடந்து வாழும் அவனை  நாம் நேரில் காணாது தவறவிட்டோம் என்ற குறையை  கல்கி பொன்னியின் செல்வனில் தீர்த்திருப்பார். பொன்னியின் செல்வன் என்பதும் ராஜராஜனின் இன்னொரு பெயர்தான்.

நமது பண்பாடு கலாசாரம் என நமது இரத்தத்தில் ஊரிப்போன அம்சங்களை பறைசாற்றும் பொன்னியின் செல்வனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. அந்த கடமையை  எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை  செய்வதற்கு முயற்சித்து முடியாமல் போய்விட்டது. ஆம் திரைப்பட வடிவமாக பொன்னியன் செல்வனை உருவாக்க நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.  இந்நிலையில்  இயக்குநர் மணிரத்தினம் இன்று களத்தில் இறங்கியுள்ளார்.   

unnamed.png

ராஜராஜ சோழன் பற்றிய கல்கியின் நவாலை சினிமாவாக எடுக்கப்போகும் மணிரத்தினம் படப்பிடிப்புக்காக இலங்கை வந்ததாக செய்திகள் சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன.  இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் இலங்கையில் மணிரத்னம் படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் வெளியீடு தொடர்பான செய்தியும் வந்துவிட்டது.

இந்நிலையில், ராஜராஜ சோழனுக்கும்   இலங்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று  பார்ப்போம், ராஜராஜ சோழன் ஆரம்ப காலத்தில் அதாவது இளமைக்காலத்தில்  இலங்கையில்தான்  வாழ்ந்திருக்கிறார் .

சோழர்கள் காலத்தில் அவர்களின் மாகாணங்களில் ஒன்றாகவே  இலங்கை இருந்திருக்கிறது.   ராஜராஜசோழனின் சிறுவயதில்  அவரது பெயர் அருண்மொழிவர்மன்.

unnamed__4_.png

அவர் குழந்தையாக இருக்கும்பொழுது   பொன்னி நதியில் தவறி விழுந்து விடுகிறார்.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை  காப்பாற்றியது பொன்னி நதி என கருதப்பட்டதினாலேயே,  அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர் உருவானது.  அந்தப் பெயரிலேயே கல்கி காவியம் படைத்தார். அதனை தழுவியே  மணிரத்தினம் இப்பொழுது  திரைப்படத்தை எடுக்கிறார்.

ராஜராஜசோழன் இலங்கையில் வாழ்ந்த பொழுது அனுராதபுரம், பொலனறுவை ,தம்புள்ளை , சீகிரியா போன்ற பிரதேசங்களில் அவர் வலம் வந்திருக்கிறார் வாழ்ந்திருக்கிறார்.

கல்கியின் நாவலில் ஒரு காட்சி இலங்கையை அத்தனை அழகாக காட்டுகின்றது. ஆம், அப்போது இளவரசராக இருந்த ராஜராஜசோழன் இலங்கையில் இருந்த கால கட்டம். வந்திய தேவன் இந்தியாவிலிருந்து கடல்வழி மார்க்கமாக  அவரை பார்ப்பதற்காக  இலங்கை வருவார். 

unnamed__2_.png

அப்போது இலங்கை தொடர்பான ஒரு காட்சி, "

‘’வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.

அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம் காணப்பட்டது.

அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப் பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன.

unnamed__1_.png

படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது.

இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், "இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை!" என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.

"ஆம்! இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்ற பூமி. இந்த சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருக் கொண்ட அசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்" என்றாள் பூங்குழலி.

unnamed__3_.png

உண்மைதான் பூங்குழலி சொல்லியது போல பல அரக்கர்களினால் இந்த சொர்க்க பூமி இன்று நரகமாக காட்சியளிக்கின்றது.

வந்தியதேவனை போலவே ஆழ்வார்கடியேனும் இலங்கை  வருவதும் இங்கு பல சம்பவங்கள் நடைபெறுவதும் நாவலில் சிறப்பாக வர்ணிக்கப்பட்டிருக்கும்.

இலங்கையில் தம்புள்ளை  குகைவரை  கோயிலில் புத்தருடைய ஓவியம் , புத்தர்சிலைகள்தான் அதிகம் உள்ளன. அது மட்டும் அல்லாது விஸ்ணு ஆலயம் அருகில் மலையோடு ஒட்டி உள்ளது. அங்கு பெளத்த பிக்குகளே அதிகம் உள்ளனர். இந்த குகை ஒரு பிரதான சுற்றுலாத்தலமும் கூட.  கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஒரு குகைக்கோயில்தான்.  இதேபோல சிகிரியா என்பது மலை குன்று.

unnamed__7_.png

தட்டையான பகுதியில் ஒரு சிங்கம் படுத்திருப்பது போல இருக்கும்.  அந்த குன்றின் மேல்தான்    உலகப் புகழ்பெற்ற சிகிரியா ஓவியங்கள் உள்ளன. காசியப்பன்தான் அந்த ஓவியங்களை வரைந்ததாக கூறப்படுகின்றது. பொன்னியின் செல்வன் நாவலில்   ராஜராஜா சோழனின் வருகை  இங்குதான் ஆரம்பமாகும். இந்த சிகிரியாவிலிருந்து சீன யாத்திரிகளோடு  யானைப் பாகனாக அவர்களை அழைத்துக்கொண்டு ராஜராஜசோழன் சிகிரியாவில் இருந்து வருவார் அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்த வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும்  தம்புள்ளையில் நின்று கொண்டிருப்பார்கள் .

சிகிரியாவில் இருந்து ராஜராஜ சோழன் சீன யாத்திரிகர்களை யானையில் ஏறிக்கொண்டு யானைப் பாகனாக வரும் போது  அவரது முகம் மூடி இருக்கும். இப்பொழுது நாம் கொரானாவுக்கு மூடியிருப்பது போல துணியால் மறைத்திருப்பார்.  அவருடைய கண்கள் மட்டும் மிளிரும். அந்தக் கண்களின் ஒளியை  வைத்து ஆழ்வார்க்கடியான் இதுதான் ராஜராஜ சோழன் என்று கண்டுபிடித்து விடுவார். தம்புள்ளை குகைவரை கோயில் சிகிரியா தொடர்பில் காட்சிகள் பொன்னியின் செல்வனில் இடம் பெற்றிருக்கும்.

அதுபோல இலங்கையில் நடக்கும் பெரஹரா, தோரணங்கள் பொன்னியின் செல்வன் நாவலில் திரைப்படம் போல எழுதப்பட்டிருக்கும், அனுராதபுர வீதியில் பெரஹேரா வரும் காட்சிகள் நாம் இன்று பார்ப்பது போலவே இருக்கும்.

மேலும், பொன்னியின் செல்வனின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் மந்தாகினி இலங்கையில் காடுகளில் சுற்றித்திரிவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கும். மந்தாகினியை வாய் பேச முடியாத ஊமைப்பெண் என்றே குறிப்பிடுகிறார் கல்கி. ராஜ ராஜ சோழனுக்கு சிறுவயதில் இருந்து   வரும் ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுளாக மந்தாகினி தேவி வருகிறார். எளிய உடை அணிவதிலும், மக்கள் இல்லாத இடங்களிலும் இருக்க ஆசை கொள்கிறாள்.

இறுதியாக சுந்தர சோழருக்கு வரும் ஆபத்திலிருந்து அவரை காத்து தான் மடியும் வரை சோழரின் குடும்பத்தின் மீதான பாசத்தினை வெளிக்காட்டும் அபலைப் பெண்ணாகவே மந்தாகினி வாழ்ந்து மடிகிறார். அனுராத புரத்தில் ராஜராஜ சோழன் இருக்கும் போது அவர் மீது சுவர் ஒன்று இடிந்து விழ போகும், . அந்த ஆபத்தில் இருந்தும்  கூட மந்தாகினிதான் ராஜராஜசோழனை காப்பாற்றுவார்.

அடுத்து பூங்குழலியும் ராஜராஜசோழனும் காதல் வசப்படுவது என அனைத்தும் இலங்கையிலேயே அதிகம் நடப்பதாக இருக்கும்.

இப்படி பொன்னியின் செல்வனின் பாதி கதை இலங்யைில்தான் நடக்கும். இது வெறும் கற்பனை என்று கூறிவிட முடியாது காரணம், இன்றும் சோழர்களினால் கட்டப்பட்ட சிவாலயங்கள் பல பொலன்னறுவையில் இன்றும் இருப்பது இதற்கு சான்று.

பொன்னியின் செல்வனை வாசிக்கும் போதே திரைப்படம் பார்ப்பது போலதான் இருக்கும். இந்த அழகு குறையாமல் இதனை  திரைப்படமாக எடுக்கும் சவால்  இயக்குநர் மணிரத்னத்துக்கு  இருக்கின்றது.

பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க நினைத்து கடைசியில் கைவி்ட்டனர். மணிரத்தினம் கூட இதற்கு முன்னர் விஜய், மகேஸ்பாபு போன்றவர்களை வைத்து  திரைப்படம் எடுக்க நினைத்தவர்தான். ஆனால் அது முடியாமல் போய்விட்டது..

இந்நிலையில் ,தற்போது திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வர இருக்கின்றது. காத்திருந்து பார்ப்போம் ராஜராஜ சோழன் சுற்றிதிரிந்த நம் தேசத்தை மணிரத்னத்தின் கலையின் ஊடாக.. 

 

 

https://www.virakesari.lk/article/132244

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் பட 'முதல் பாடல்' வெளியீடு - வரலாற்றுப் பின்னணி

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. வந்தியத் தேவன் சோழ நாட்டிற்குள் நுழையும் தருணத்தை விவரிக்கும் இந்தப் பாடல் உருவானது எப்படி?

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் பரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே இந்த படத்தின் ஸ்டில்கள், டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், முதல் பாடல் ஞாயிற்றுக் கிழமையன்று வெளியானது.

வந்தியத்தேவன் சோழநாட்டிற்குள் நுழையும் தருணத்தில், வீர நாராயணம் ஏரியைக் கடக்கும்போது, அந்த நாட்டின் வளமையை அதிசயித்துப் பார்ப்பான். அந்தத் தருணத்தை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாட்டை எழுதியிருப்பவர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.

 

"காவிரியாள் நீர் மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்

நீர்ச் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும்

உளிச் சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும்

பகைச் சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும்

சோழத்தின் பெருமைகூற சொல் பூத்து நிற்கும்

பொன்னி நதி பார்க்கணுமேபொழுதுக்குள்ளே..." என்ற தொகையறாவுடன் எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

வந்தியத்தேவனின் சோழ பிரவேசம்

பொன்னியின் செல்வன் நாவலின் முதல் அத்தியாயமான ஆடித் திருநாள் என்ற அத்தியாயம், வந்தியத்தேவன் சோழ நாட்டிற்குள் நுழைந்து, வீர நாராயண ஏரிக் கரையின் மீது செல்லும் காட்சியை விவரிக்கிறது.

"ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.

அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.

உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.

 

மெட்ராஸ் டாக்கீஸ்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?

வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்?

வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா?

அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?" என்று அந்த விவரணை செல்லும்.

மேலும், வந்தியத்தேவன் மேற்கொண்டிருக்கும் ஒரு பணி குறித்த விவரணையும் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும்.

"வந்தியத்தேவா! நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.

வரலாற்றை காட்சிப்படுத்திய பாடல் குழு

 

மெட்ராஸ் டாக்கீஸ்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் இன்னொன்றை என் சகோதரி இளையபிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் ராஜ்ஜியத்தின் பெரிய, பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன்.

ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன்.

வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது! நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது!".

சோழ நாட்டின் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தரசோழ சக்கரவர்த்திக்கும் சகோதரி குந்தவை தேவிக்கும் எழுதிய ஓலைகளை எடுத்துக்கொண்டு அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தான் வந்தியத்தேவன். அந்த ஓலைகளை வேறு யாரும் பார்த்துவிடக்கூடாது என்பது அவனுக்கு இடப்பட்டிருந்த கட்டளை. இந்தப் பின்னணியில்தான் அந்த முதல் காட்சியை உருவாக்கியிருந்தார் கல்கி.

அந்த அத்தியாயத்திலேயே, "வடவாறு பொங்கி வருது, வந்து பாருங்கள், பள்ளியரே!

வெள்ளாறு விரைந்து வருது, வேடிக்கை பாருங்கள், தோழியரே!

காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே!" என்ற பாடலும் இருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இருந்தபோதும், இந்தத் தருணத்தை சிறப்பாக விளக்கும் வகையில் புதிதாக பாடலை எழுது உருவாக்கியிருக்கிறது படக்குழு.

"இந்த நாவலில் கல்கி அங்காங்கே பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஆனால், படத்திற்கு கதையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். ஏனென்றால் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் பாடல்களை உருவாக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த முதல் பாடலைப் பொறுத்தவரை, வழக்கமாக சினிமா பாடல்கள் உருவாக்கப்படுவதைப் போல உருவாக்கப்படவில்லை. வழக்கமாக முதலில் மெட்டமைத்து பாட்டெழுதுவார்கள் அல்லது பாட்டை எழுதிவிட்டு மெட்டமைப்பார்கள்.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை, ஒரு தாளக்கட்டுமானமும் பின்னணியும் கொடுக்கப்பட்டது. அதற்கு பாடலை எழுதினேன். அந்தப் பாடலுக்கு மெட்டமைக்கப்பட்டது. பிறகு அந்த மெட்டிற்கு ஏற்ற வகையில் பாடல் திருத்தப்பட்டது. இப்படித் தொடர்ந்து அந்தப் பாடலில் பணியாற்றினோம். முடிவில் பாடலுக்கான தொகையறா சேர்க்கப்பட்டது" என அந்தப் பாடல் உருவாக்கப்பட்டதைப் பற்றி பிபிசியிடம் பேசினார் பாடலை எழுதிய இளங்கே கிருஷ்ணன்.

சோழ நாட்டு அழகில் மயங்கிய வந்தியத்தேவன்

 

பொன்னியின் செல்வன்

பாடலின் உள்ளடக்கம் குறித்து எப்படி முடிவுசெய்தீர்கள் என்று கேட்டபோது, முதல் அத்தியாயத்தில் உள்ள விவரணைகள், வந்தியத்தேவனின் பயணத்தின் நோக்கம், அவனது மனநிலை ஆகியவற்றை மனதில் கொண்டு, அந்தப் பாடலை உருவாக்கியதாகக் கூறினார் இளங்கோ கிருஷ்ணன்.

வந்தியத்தேவனைப் பொறுத்தவரை, வட பகுதியிலேயே நாட்களைச் செலவழித்தவன். காவிரி பாயும் வளமிக்க சோழ நாட்டைப் பார்க்க வேண்டும், தஞ்சாவூரைப் பார்க்க வேண்டுமென்பது அவனது ஆவல். அதற்கான வாய்ப்பை பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனே உருவாக்கித் தருகிறான். அவனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு செல்லும் வந்தியத்தேவன், சோழ நாட்டிற்குள் நுழைந்ததும் அதன் அழகில் மயங்கி விடுகிறான். அங்கேயே தங்கிவிட நினைக்கிறான். ஆனால், அது நடக்காது என்பதும் புரிகிறது.

"இந்தப் பின்னணியில்தான் பாடலை உருவாக்கினோம். அதனால்தான் பொன்னி நதி பாக்கனுமே என்றும் பொழுத்துக்குள் போய்விட வேண்டும் என்றும் ஆரம்பித்தோம். அந்த நதியின் மடியிலேயே படுத்திருக்க வேண்டுமென நினைக்கிறான் வந்தியத்தேவன். ஆனால், அதற்கான காலம் கனியவில்லை. அதைத்தான், 'காலம் கனியாதோ, கால்களுக்கு ஓய்வு கிடைக்காதோ' என்ற வரியில் குறிப்பிட்டோம்" என்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியான இந்தப் பாடல் ஒரு நாளைக்குள்ளேயே 52 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62378932

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

PS1 - Ponni Nadhi Live In Houston | AR Rahman | Mani Ratnam | Subaskaran | Ponniyin Selvan

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன்-1 டிரைலர் & இசை வெளியீட்டு விழா: சில சுவாரசிய தகவல்கள்

14 நிமிடங்களுக்கு முன்னர்
 

பொன்னியின் செல்வன்-1 டிரைலர் & இசை வெளியீட்டு விழா

பட மூலாதாரம்,MADRAS TALKIES

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

அது குறித்த சில சுவாரசிய தகவல்கள் இங்கே.

  • பிரபல நாவலாசிரியர் கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் (செப்டம்பர் 30-ம் தேதி) திரைக்கு வர உள்ளது.
  • சமீபத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்னி நதி பாக்கணுமே' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து பாடியுள்ளார்.
  • இப்படத்தின் பாடல் உரிமை மட்டும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
  • இப்படத்தின் தொடக்க அறிவிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்தாலும் 2022 செப்டம்பரில்தான் இப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகிறது. ஆனால் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் 120 நாட்களில் நிறைவு செய்துள்ளார் மணிரத்னம்.
 

பொன்னியின் செல்வன்-1 டிரைலர் & இசை வெளியீட்டு விழா

பட மூலாதாரம்,LYCA PRODUCTION TWITTER PAGE

  • நாளை நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்காக பிரம்மாண்ட செட்டுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவுடன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
  • இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சோழர் காலத்தில் பயன்படுத்திய பல இசை கருவிகளை பயன்படுத்தி உள்ளார்.
  • படக்குழுவினருடன் இணைந்து பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள உள்ளனர்.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை Tips official நிறுவனம் பெற்று இருந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு மற்றும் திரைப்பட தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
  • உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றி உள்ளது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62800709

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை Tips official நிறுவனம் பெற்று இருந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு மற்றும் திரைப்பட தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றி உள்ளது.

 

அட இதுஎன்ன அப்பன் வீட்டுப்பணமா....போனாப்போவுது...வந்தால் வருகுது...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் : ரஜினிக்கு பெரிய பழுவேட்டரையர் மீது என்ன ஆர்வம்?

6 செப்டெம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

பொன்னியின் செல்வன் பாகம் 1, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி நடைபெற்றது. இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நட்சத்திரங்களின் வருகையால் இந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டது.

படக்குழுவினருடன் இணைந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பாக டிரெண்ட் ஆகும் பாடல்கள்

 

பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி, சோழா சோழா என இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. இந்த நிலையில், படத்தில் உள்ள மேலும் 4 பாடல்களின் போஸ்டர்கள் தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி துவங்கும் முன்பே ஸ்பாட்டிஃபை போன்ற இசை தளங்களில் படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் வெளியாகி வைரலாகின.

நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக பொன்னியின் செல்வம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு பகுதிக்கு வந்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 

பொன்னியின் செல்வம்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

நடிகர் ரஜினிகாந்த் பேசியது என்ன?

பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ரஜினியும் கமலும் ஒரே மேடையில் தோன்றினர், படம் குறித்து முதலில் பேசிய ரஜினி காந்த் "மணி ரத்னம் எவ்வாறு இயக்குவார் என்று எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் ' தளபதி' படத்தில் நடித்த போது டயலாக் சொல்லிக்கொடுப்பார் அது போல் நான் பேச மாட்டேன் அவரும் அதனை ஒப்புக்கொள்ளமாட்டார், Feel பண்ணுனும் சார் அந்த Feel மிஸ் ஆகக்கூடாது என்பார் நமக்கு அது வராது நம்ம படத்துல எல்லா டயலாக்கும் 'ஏய் எட்ரா வண்டிய' அப்படி தான் இருக்கும்" என்று கூறிய போது அரங்கமே சிரிப்பலையானது. மேலும் அவர் கூறுகையில் 'பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்படத்தை குறித்து என்னிடம் மணிரத்னம் பேசியுள்ளார், அப்போது கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் தொடரை படித்துள்ளேன், அத்தொடர் வெளியாகும் ஒவ்வொரு வாரமும் ஒரு படமே வெளியாவது போல் ஒரு உணர்வு இருக்கும், அந்த வகையில் இப்படத்தை நீங்கள் இயக்கினால் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றேன் அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லை' என்று கிண்டலாக கூறினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

"பொன்னியின் செல்வன் இசை நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. நம் தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படம் இது. நிறைய பேர் இதை படமாக்க முயற்சித்தனர், மணி சார் அதை சாத்தியமாக்கியுள்ளார். இப்படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பே இசைப் பணிகளை தொடங்கினோம். ஆனால் அந்த பணிகளை தொடர்ந்து செய்ய முடியவில்லை. பல தரப்பட்ட இசை நுணுக்கங்களை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளோம். இந்தக் கால ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும், அதே வேளையில் பாரம்பரிய இசையும் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது."

நடிகர் கார்த்தி

"பல ஆண்டுகள் தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த ஒரு படம் இது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த தலைமுறையில் இப்படம் வெளிவருவது இன்னும் பெருமையாக உள்ளது, படத்தில் சில உண்மை கதாபாத்திரமும் சில கற்பனை கதாபாத்திரமும் உள்ளது. அதை ஒருங்கிணைப்பதே பெரிய விஷயம். அதை இயக்குநர் சிறப்பாக செய்துள்ளார்."

ஐஸ்வர்யா ராய்

"இருவர் படத்துக்குப் பிறகு மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ள படம் இது. இது நிச்சயம் உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியையும் சிறந்த அனுபவத்தையும் தரும் என்று நம்புகிறேன்."

த்ரிஷா

என் வாழ்நாளில் நான் பங்குபெறும் மிக பிரமாண்டமான நிகழ்ச்சி இது. இந்த படத்துக்காக நிறைய உழைத்துள்ளோம், ஒரு இளவரசி ஆக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, கனவு என்று கூட சொல்லலாம். என் கனவை நனவாக்கிய மணிரத்னம் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கொள்கிறேன். ரஜினி மற்றும் கமல் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெயம் ரவி

மிகப்பெரிய சவாலான விஷயத்தை சாத்தியமாக்கி உள்ளார் மணி சார், இப்படம் கற்பனையின் உச்சகட்டம். அந்த காலத்தில் ராஜா கதைகளை கேட்டு இருப்போம். ஆனால், பார்த்தது இல்லை. மணி சாரின் திரைக்கதையும் வசனமும் இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளன. மணி சார் நமக்குள் கதாபாத்திரத்தை விதைப்பார், ஒரு கட்டத்தில் கதாபாத்திரமாகவே வாழ்வோம். அந்த அனுபவம் இப்படத்தில் எனக்கு கிடைத்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி.

 

பொன்னியின் செல்வன் திரைப்படம்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

பி.ஆர்.ஓ.வை அடித்த பவுன்ஸர்கள்

இசை வெளியிட்டு நிகழ்ச்சி நடைப்பெறும் இடத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்லவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனியார் நிறுவன ஒப்பந்தம் பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

பணியில் இருந்த பவுன்சர்கள் உதவி பி.ஆர்.ஓ விக்கி என்பவரை தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட பவுன்சர்கள், உதவி பி.ஆர்.ஓவிடம் மன்னிப்பு கேட்பர் என்று சமாதானம் செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62812587

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் - 33 குறிப்புகளில் மொத்த படமும்

  • நபில் அகமது
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் என ஒட்டுமொத்த திரையுலகமே சங்கமித்த இந்த நிகழ்ச்சி அந்த படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் தூண்டியுள்ளது.

அந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த விரிவான அலசல் இதோ...

  • மொத்தம் 3 நிமிடங்கள், 23 விநாடிகள் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர், 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், நடிகர் கமல் ஹாசன் குரலுடன் தொடங்குகிறது, 1,000 வருடங்களுக்கு முன்... சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன்பு... என்று ஆரம்பமாகிறது டிரெய்லர்.
YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

2. முதல் காட்சியிலேயே ஒரு வால் நட்சத்திரத்தை காண்பிப்பார்கள். பொன்னியின் செல்வன் நாவலின்படி அதை 'தூமகேது' என்று அழைப்பர். அப்படியென்றால் கெட்ட சகுனம் என்று அர்த்தம். கதைப்படி பார்த்தால், சோழ அரசில் பெரும் இழப்பொன்று நிகழபோவதாக காண்பிக்கின்றனர்.

3. அடுத்த காட்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தோன்றுகிறார். கதைப்படி இவர் சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தான் ஆதித்திய கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன் ஆகியோரின் தந்தை.

 

சம்புவரையர் மாளிகையில் ரகசிய கூட்டம்

 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

4. பிறகு சில போர் காட்சிகள் காண்பிக்கப்படுன்றன. அதன் பின் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒரு கூட்டம் நடப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழுவேட்டரையர்களும் சிற்றரசர்களும் கடம்பூர் அரசர் முன்னிலையில் கலந்தாலோசித்துக் கொண்டு இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அவர்கள் இந்தக் காட்சியில் என்ன விவாதித்து இருப்பார்கள் என்பதை விரிவாக அறிய பொன்னியின் செல்வன் நாவலை படித்தால் தான் புரியும்.

 

Presentational grey line

 

Presentational grey line

5. சுந்தர சோழன் உடல்நலிவுற்று இருப்பதால் அடுத்ததாக ஆதித்திய கரிகாலனை அரசராக்கும் திட்டம் இருக்கும். அது இக்கூட்டத்திற்கு பிடிக்காததால் எப்படியாவது உத்தம சோழனை பேரரசராக்கி விட வேண்டும் என விவாதித்து கொண்டு இருப்பர்.

6. அடுத்ததாக, சில அலைச் சீற்ற காட்சிகள் வரும். பிறகு, நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா பச்சன் தோன்றும் காட்சியில் அவர் அறிமுகம் செய்யப்படுகிறார். இப்பாகத்தின் கதாநாயகனாகிய ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவர் அறிமுக காட்சிக்கு அடுத்ததாக ஒரு போர் காட்சி காண்பிப்பர். அதை நாவலின் அடிப்படையில் பார்த்தால், சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய போர் நடக்கும். அதில் வீரபாண்டிய அரசன் தலையை வெட்டப்படுவதாக காட்சிப்படுத்தி உள்ளனர்.

7. அடுத்த காட்சியில் மிகபெரிய கப்பல் படை ஒன்று தயாராக இருப்பது போல் காட்சி உள்ளது. இது அருண்மொழி வர்மன் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதாக இடம்பெற்ற காட்சிகள்.

8. அதன் பின் குகைக்குள் பெளத்த பிக்குகளுடன் அருண்மொழி வர்மனான ஜெயம் ரவி உரையாடுவது போல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியை பொறுத்தவரை இலங்கையை அருண்மொழி வர்மன் வென்று இருந்தாலும் நேரடியாக அவர் ஆட்சி செய்யவில்லை. அதனால் பெளத்த பிக்குகள், தங்களின் கீழ் உள்ள ஆட்சியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதனால் நீங்களே இலங்கைக்கு அரசராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவர். அதற்கு அருண்மொழி வர்மன், நான் எந்த நாட்டை வென்றாலும் எனக்கு என் தந்தையிட்ட கட்டளை 'சோழர்களை காக்க வேண்டும் என்பதே. அதனால் நான் சோழ தேசத்தில் இருப்பது தான் சிறந்தது," என்று நாவலில் கூறிய காட்சியை இங்கு வைத்துள்ளனர்.

கார்த்திக்கு வலுவான கதாபாத்திரம்

 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

9. அடுத்ததாக இப்பாகத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான வல்லவரயான் வந்தியத்தேவன் ஆக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். வந்தியத்தேவன் கதாபாத்திரம் என்பது ஆதித்திய கரிகாலனின் நம்பிக்கைக்குரிய நண்பர் கதாபாத்திரம்.

10. ஆதித்திய கரிகாலன் வந்தியதேவனிடம் கடம்பூர் மாளிகையில் ஏதோ தவறாக நடப்பதாக உளவு செய்தி வந்துள்ளது. அதை கண்டுபிடிக்க அனுப்பப்படுவது போல் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. வந்தியத்தேவனை பொறுத்த வரையில் எப்படிபட்ட கோட்டையாக இருந்தாலும் இலகுவாக உள்ளே சென்று வெளியே வந்து விடுபவர்.

11. அடுத்த காட்சியில் வந்தியதேவன் குதிரையில் பயணம் செய்வது போன்று ஒரு காட்சி இருக்கும். அநேகமாக இங்கு தான் பொன்னிநதி பாக்கனுமே பாடல் இடம்பெறலாம்.

12. வந்தியத்தேவன் தன் நண்பனும் சிற்றரசர் செங்கண்ணர் சம்புவரையர் மகன் கந்தன் மாறன் உதவியோடு கடம்பூர் மாளிகைக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கடம்பூர் அரண்மனையில் குரவைக்கூத்து என்று சொல்லப்படக்கூடிய நடனம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.

13. அந்த நடன நிகழ்ச்சி முடிந்த பின் ஒருவர் குறி சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அதில் அவர் தூமகேது தோன்றியுள்ளதால் அரச குடும்பத்தில் ஒருவர் உயிர் பறிபோகும் என்று கூறியிருப்பார். அதன் பின் தான் சம்புவரையர், பழுவேட்டரையர்கள், குறுநில மன்னர்கள் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் சதி திட்டம் தீட்டுவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

14. கூட்டத்தில் எப்படியாவது ஆதித்ய கரிகாலனை வீழ்த்தி அந்த இடத்தில் உத்தமசோழனை அரியணை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அக்கூட்டத்திற்கு நாவலில் 'மந்திர ஆலோசனைக்கூட்டம்' என்று அழைத்திருப்பார் நாவலாசிரியர்.

15. மந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதை வந்தியத்தேவன் உளவு பார்ப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்னொரு கதாபாத்திரமும் உளவு பார்க்கும். அவர் பெயர் ஆழ்வார்க்கடியான் நம்பி. இக்கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். அதன் பின் அடுத்த காட்சியில் ஆழ்வார்க்கடியான் நம்பியும் வந்தியத்தேவனும் இரவு நடந்த கூட்டத்தைப் பற்றி ஆலோசித்து வருவது போல் இருக்கும்.

அகோரிகளுடன் நடிகர் ரகுமான்

16. அதன் பின் உத்தம சோழனாக நடிக்கும் நடிகர் ரகுமான் அகோரிகளுடன் வருவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

17. பிறகு உத்தம சோழன் தன் தாயாரான செம்பியன் மாதேவியுடன் பேசுவது போல் காட்சி உள்ளது. அடுத்த காட்சியில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தோன்றியுள்ளார்.

 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

18. அடுத்ததாக வந்தியத்தேவன் ஓடுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இது குறித்து நாவலில் பார்த்தால், தன் நண்பரான கந்தன் மாறனுக்கு ஒரு சண்டையில் அடிபட்டு இருக்கும். அவரை காப்பாற்றி விட்டு அதன் பின் காவலர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சியாக அது இருக்கலாம்.

19. அடுத்தாக தோன்றுவது, குந்தவை அதாவது அருண்மொழி வர்மனுடைய அக்கா இக்கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.

20. இக்காட்சியை பொருத்தவரை ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவனிடம் ஒரு ஓலை அனுப்பி வைப்பான். அதில் ஓலை கொண்டு வரும் வந்தியத்தேவனை நம்பி எல்லா ரகசியங்களையும் கூறலாம் என்று எழுதி இருக்கும். அதை சுந்தர சோழனிடமும் குந்தவையிடமும் கொடுக்க ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவன் கூறி இருப்பார். அந்த காட்சி தான் இங்கு இடம்பெற்றுள்ளது.

குந்தவையின் வேண்டுகோள்

21. வந்தியத்தேவனிடம் குந்தவை, தன் தம்பியான அருண்மொழி வர்மனை இங்கு அழைத்து வரவேண்டும் என்பார். நாவலின்படி அருண்மொழி வர்மன் அப்போது இலங்கையில் இருப்பார்.

22. அடுத்த சில காட்சிகள் போன பின் குந்தவை ஆதித்திய கரிகாலனோடு உரையாடுவது போல் காட்சி உள்ளது. அதில் ஏன் தஞ்சை வராமல் உள்ளீர்கள் நந்தினிக்காவா என்று குந்தவை கேட்க, அதற்கு ஆதித்திய கரிகாலன் 'உனக்காகதான் என்று நான் வரவில்லை," என்று குந்தவையிடம் கூறுவார்.

23. அடுத்தாக நந்தினி கதாபாத்திரம் காண்பிக்கப்படும். அதில் மிக முக்கிய காட்சியாக திரைச்சீலையை நந்தினி விலக்கிப் பார்ப்பது போல் உள்ளது. இக்காட்சி நாவலில் இரண்டு இடங்களில் இடம்பெறுகிறது. ஒன்று கடம்பூர் அரண்மனைக்கு நந்தினி செல்லும் போதும், மற்றொன்று வந்தியத்தேவனை பார்க்கும் போதும் உள்ளது.

24. நந்தினி தன் கணவரான பெரிய பழுவேட்டரையரிடம் ஆதித்யா கரிகாலனும் அருண்மொழி வர்மனும் இணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பார்.

25. நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பச்சனும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்துள்ளனர்.

26. அடுத்த சில காட்சிகளுக்கு பின் ரவிதாசன் கதாபாத்திரம் தோன்றுகிறது. நாவலில் வரும் பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். மேலும் பழுவூர் இளயராணி நந்தினி தேவியின் துணையுடன் வீரபாண்டியனின் மரணத்திற்காக சுந்தர சோழரின் குடும்பத்தை பழிவாங்க முயற்சிக்கும் நபராக வருகிறார்.

27. அதிலும் குறிப்பாக, ஆதித்ய கரிகாலனை கொல்ல கையில் சூடமேற்றி சபதம் எடுப்பது காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. ரவி தாசனை மந்திரவாதியாகவும் நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

வாளுடன் நந்தினி - யார் இவர்?

28. அடுத்த காட்சி வந்தியத்தேவனும் அருண்மொழி வர்மனும் சண்டையிடுவது போல் இருக்கும். அதன் பின் நடிகர் பிரபு தோன்றுகிறார். இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பூதி விக்ரம கேசரி. இவர் சோழர்களில் படைத்தளபதியாக இருந்தவர்.

29. அதன் பின் விக்ரம் பிரபு தோன்றும் காட்சி. இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபேந்திர பல்லவன். இவர் ஆதித்ய கரிகாலனின் நண்பர். பல்லவ நாட்டிலிருந்து ஆதித்ய கரிகாலனுக்கு உதவி புரிய சோழ தேசத்திற்கு வருகை புரிந்திருப்பார்.

30. அடுத்த சில காட்சிகளுக்கு பின், ஆதித்ய கரிகாலன் அரண்மனையில் உள்ள ஓர் அறையில் நுழைவது போல் காட்சி இருக்கும். இது நாவலில் ஆதித்ய கரிகாலனை கொல்ல நந்தினி ஒரு வாள் எடுப்பது போன்றதாக இருக்கும்.

31. அடுத்த சண்டை காட்சிகளுக்குப் பின் நடுக்கடலில் பெரிய படகில் அருண்மொழி வர்மனும் வந்திய தேவனும் இணைந்து சண்டை போடுவது போல் இருக்கும். இது குறித்து நாவலில் பார்க்கும் போது இலங்கையிலிருந்து தஞ்சை வரும் அருண்மொழி வர்மனை கொல்ல ரவிதாசன் உள்ளிட்டோர் முயற்சிப்பதாக காட்சி இருக்கும்.

32. இறுதியாக நந்தினி கதாபாத்திரம், சோழர்களின் சிம்மாசனத்தை பார்ப்பது போல் டிரெய்லர் முடிகிறது. நந்தினியின் அந்தப் பார்வையின் அர்த்தம், சோழர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின் பாண்டியர்களின் ஆட்சியை நிலைநாட்டுவதே.

33. நமது கணிப்பின்படி ஆதித்ய கரிகாலன் கொல்லப்படுவதுடன் முதல் பாகம் முடிவு பெறும். 

https://www.bbc.com/tamil/arts-and-culture-62825127

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் படத்தில் 'ஈழ நாடு' என்பது 'இலங்கை' என வருவது சரியா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
59 நிமிடங்களுக்கு முன்னர்
 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்தின் ஒரு வசனம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

''நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும். அங்கு என் தம்பி அருண்மொழியை பார்த்து, அவனை என்னிடம் அழைத்து வர வேண்டும்" என குந்தவை (த்ரிஷா) வந்தியத்தேவனிடம் (கார்த்தி) கூறும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இதில் 'இலங்கை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு, இலங்கையர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் காவியத்தில் 'ஈழ நாடு' என்ற பெயரே இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை என்ற பெயரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
 

Presentational grey line

 

Presentational grey line

'ஈழம்' - வரலாற்று ரீதியாக எவ்வளவு பழமையானது?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஈழம்' என்னும் சொல் தவிர்க்கப்பட்டு 'இலங்கை' என பயன்படுத்தப்பட்டடிருப்பது கவலைக்குரியது என வரலாற்றுத் துறை ஆர்வலரும், ஊடகவியலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,UMA CHANDRAPRAGASH

'ஈழம்' என்பது இலங்கையின் பூர்வீக பெயரல்ல எனில், "ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி." சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்ட 'ஈழம்' எது? எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

"அது மாத்திரமல்லாமல் ஈழத்து பூதந்தேவனார் யார்? ஈழ நாட்டிலிருந்து பாண்டிய நாடு போய் மதுரைச் சங்கத்தில் புலவராய் விளங்கியவர். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை வந்து கற்று புலவரானார் என்றும் கூறுவார்கள். ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது. அப்படியானால் 'ஈழம்' எனும் பெயர் வரலாற்று ரீதியாக எவ்வளவு பழைமையானது" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும், "சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரத்ணம், (வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம்) 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்னும் நூலில் ஈழம் தொடர்பான பல வரலாற்றுத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்ற நூலை பேராசிரியர் ஆக்கியுள்ளமை தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

ஆகவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஈழம்' என்னும் சொல் தவிர்க்கப்பட்டு 'இலங்கை' என பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் திரைத்துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும்" என, உமாச்சந்திரா பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஈழம் என்ற பெயரே பொருத்தமானது"

பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னரான கதை என்பதனால், பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் இலங்கை என பயன்படுத்துவதை விடவும், 'ஈழம்' என பயன்படுத்தியிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் என ஊடகவியலாளர் யசிஹரன் தெரிவிக்கின்றார்.

 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,YASIHARAN FB

பொன்னியின் செல்வன் புத்தகத்தில் சில இடங்களில் இலங்கை என்ற பெயர் பயன்படுத்தப்பட்ட போதிலும், அந்த இடத்திற்கு ஈழம் என்ற பெயரே பொருத்தமானது எனவும் அவர் கூறுகின்றார்.

''ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கதை என்பதனால், ஈழம் என்று தான் பயன்படுத்த வேண்டும். புத்தகத்தில் அப்படி இருந்ததற்கு, அந்த கதை 1000 வருடங்களுக்கு முன்னர் செல்கின்ற கதை. ஆயிரம் வருடத்திற்கு முன்னர் ஈழம் என்ற நாடு இருந்தது" என அவர் கூறுகின்றார்.

"இலங்கை என்பது சரியானது"

ஈழம் என்று சொல்லி இருக்கலாம் என்றாலும், இலங்கை என பயன்படுத்தியது தவறு கிடையாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரத்ணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

பொன்னியின் செல்வன்

''பிற்பட்ட காலப் பகுதியை பார்க்கும் போது, ஈழம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த காலத்தில் பொதுவாக இலங்கை என்றே அழைக்கப்பட்டது. இப்போது ஸ்ரீலங்கா என்பது அப்போது இலங்கை என்றே அழைக்கப்பட்டது. 72ம் ஆண்டுக்கு பின்னரே ஸ்ரீலங்கா என்று கொண்டு வந்தார்கள். அதற்கு முதல் 'இலங்கையை', இலங்கை, தாமிரபரணி, தம்பபண்ணி, ஈழம் என்று பல பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டு மொழிக்கு ஏற்றப்படி சொல் வழக்கத்தை கையாளுகிறது. சோழ கல்வெட்டில் தென் இலங்கை என்று வருகின்றது. ஈழம் என்றும் வருகின்றது. நான் பொதுவாக 'இலங்கை தமிழர் வரலாறு' என்று தான் எழுதுவேன். மற்றது 'ஈழத் தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்று புத்தகம் எழுதும் போது, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மரபுரிமை என்ற படியால், 'ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்' என்ற பெயரை பயன்படுத்தினேன்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் இலங்கை என்று பயன்படுத்தப்படுகின்றது. ஸ்ரீலங்கா என்று பயன்படுத்தியிருந்தால், கண்டனத்திற்குரியது தான். இலங்கை என்பது தமிழ் பெயர்" என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் கூறினார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62924875

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் - பாகம் 1

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

''Trailer is Just Glimpse'' Ponniyin Selvan பற்றி மனம் திறந்த Maniratnam, Karthi, Trisha, Jayam Ravi

Ponniyin Selvan Press Meet: ''நல்லா நிமிர்ந்து நில், ராஜா தானே நீ? அப்படியே அவனுக்கும் சொல்லு''

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் - பாகம் 2

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியப் பாத்திரங்கள் எவை, அவற்றின் பின்னணி என்ன?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,MADRASTALKIES/TWITTER

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வரவிருக்கும் நிலையில், அந்த நாவலில் உள்ள முக்கியப் பாத்திரங்கள் எவை, அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

பொன்னியின் செல்வன் நாவலில் மொத்தம் 55 பாத்திரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வருகின்றன. அதில் 37 கதாபாத்திரங்கள் முக்கியமானவை. அவற்றிலும் முக்கியமான 15 பாத்திரங்கள் எவை, அவை அந்த நாவலில் என்ன பங்கை வகிக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

வல்லவரையன் வந்தியத்தேவன்

 

வல்லவரையன் வந்தியத்தேவன்

பட மூலாதாரம்,@KARTHI_OFFL/TWITTER

பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகன் வந்தியத்தேவன்தான். அருள்மொழி வர்மனின் பட்டப் பெயரிலேயே நாவல் அமைந்திருந்தாலும், அதில் மிக முக்கியப் பாத்திரமாக வருவதென்னவோ வந்தியத்தேவனின் பாத்திரம்தான். இந்தப் பாத்திரத்தின் பார்வையில்தான் நாவலின் பெரும் பகுதி நகர்கிறது. இந்த நாவலில், வந்தியத்தேவன் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனின் நண்பன். சோழ இளவரசி குந்தவைப் பிராட்டியின் காதலன். பிறகு, அருள்மொழி வர்மனின் உயிர்த் தோழன்.

 

டி.வி. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரம் நூலில், "குந்தவைப் பிராட்டி வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மணம் செய்து கொடுக்கப் பெற்றனள். அவ்வரச குமரன் வேங்கி நாட்டில் வாழ்ந்த கீழைச் சாளுக்கிய மரபினனாதல் வேண்டும்" என்கிறார். ஆனால், கல்கி இதில் இரண்டாவது கருத்தை ஏற்கவில்லை. வந்தியத்தேவன், வல்லத்து வாணர் குல இளவரசனாய் இருக்கலாம் என்ற நோக்கிலேயே நாவலில் அவனது பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் "ஸ்ரீ ராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்" என வந்தியத்தேவனது பெயர் காணப்படுகிறது. சதாசிவ பண்டாரத்தாரின் நூலிலும் தஞ்சை கல்வெட்டிலும் சேர்த்து வல்லவரையன் குறித்து நமக்குக் கிடைக்கும் செய்திகள் சில வரிகள்தான். ஆனால், கல்கியின் நாவலில் பல ஆயிரம் வரிகளில் வந்தியத்தேவனின் பெயர் வருகிறது.

பொன்னியின் செல்வன் நாவல் மட்டுமல்லாமல், வந்தியத்தேவன் வாள், நந்திபுரத்து நாயகி, வேங்கையின் மைந்தன், உடையார் ஆகிய நாவல்களிலும் வந்தியத்தேவன் வருகிறான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.

அருள்மொழி வர்மன்

 

அருள்மொழி வர்மன்

பட மூலாதாரம்,@ACTOR_JAYAMRAVI/TWITTER

பொன்னியின் செல்வன் என்பது அருள்மொழிவர்மனையே குறிக்கிறது. பிற்காலத்தில் ராஜராஜசோழன் (ஆட்சிக் காலம்: கி.பி. 985 - கி.பி. 1014) என சரித்திரத்தில் இடம்பெற்ற மன்னனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அருள்மொழி வர்மன். சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனுக்கும் அவனது பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த மூன்றாவது மகன்.

பொன்னியின் செல்வன் நாவலில், குந்தவையின் தம்பி, வந்தியத்தேவனின் தோழன் என்ற வகையில் இந்தப் பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தனது சித்தப்பனான உத்தமசோழனுக்கு விட்டுக் கொடுத்ததாகவும் இந்தப் பாத்திரம் புகழப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளின்படி பார்த்தால், தன் தமக்கை குந்தவைப் பிராட்டி மீது பெரும் பற்றுக் கொண்டவராக ராஜராஜ சோழன் காணப்படுகிறார். அதை, பொன்னியின் செல்வன் நாவல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி இந்த பாத்திரத்தில் நடிக்கிறார்.

குந்தவைப் பிராட்டி

 

குந்தவைப் பிராட்டி

பட மூலாதாரம்,@TRISHTRASHERS/TWITTER

சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனின் புதல்வி. ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி. வல்லவரையன் வந்தியத்தேவனின் மனைவி. பொன்னியின் செல்வன் நாவலில், பெரும்பாலான சம்பவங்களின் பின்னணியில் குந்தவையின் பாத்திரமே இருக்கிறது. தெளிவான, முக்கியமான முடிவுகளை குந்தவையே எடுப்பதாகக் காட்டப்படுகிறது.

சுந்தர சோழன் தஞ்சையில் வசித்தாலும் பழையாறை நகரில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள் குந்தவை. வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க குந்தவையே முடிவெடுப்பதாகவும் நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதாகவும் இந்த நாவலில் கல்கி காட்டியிருக்கிறார். தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுகளில் "ஸ்ரீ ராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்" என குந்தவையின் பெயர் குறிப்பிடப்படுகிறது. தன் தந்தை மற்றும் தாயின் உருவங்களை தஞ்சை பெரிய கோவிலில் வடிக்கச் செய்த குந்தவை, தன் தந்தையின் பெயரால் சுந்தர சோழ விண்ணகர் ஆதூர சாலை என்ற மருத்துவ நிலையத்தை நடத்த நிலங்களை அளித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

அநிருத்த பிரம்மராயர்

 

அநிருத்த பிரம்மராயர்

பட மூலாதாரம்,MOHANRAMAN0304/INSTAGRAM

சுந்தர சோழனின் முதன்மை அமைச்சராக பொன்னியின் செல்வன் நாவலில் வருகிறார். மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் என்பது இவருடைய முழுப் பெயர்.

தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு திருவழுந்தூரில் உள்ள கருணாகரமங்கலம் என்ற ஊரை சுந்தரசோழன் வழங்கிய செய்திகள் அன்பில் செப்பேடுகளின் மூலம் தெரியவருகின்றன. இதுவரை கிடைத்துள்ள சோழர் காலச் செப்பேடுகளிலேயே இந்த அன்பில் செப்பேடுகளே பழமையானவை.

சோழ நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் அறிந்தவராக அநிருத்த பிரம்மராயர் நாவலில் காட்டப்படுகிறார். சுந்தர சோழரின் குடும்பத்திற்கு எதிராக நடக்கும் சதிகளை முறியடிப்பதில் முக்கியப் பங்கு விகிக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மோகன் ராமன் இந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பெரிய பழுவேட்டரையர்

பொன்னியின் செல்வன் நாவலில் கதாநாயகர்களுக்கு இணையான ஆளுமையும் முக்கியத்துவமும் கொண்ட பாத்திரம் இது. கண்டன் அமுதன் என்பது இவரது பெயர். சோழ நாட்டிந் தன அதிகாரியாகவும் சுங்க வரி விதிக்கும் அதிகாரியாகவும் இருப்பதாக நாவலில் காட்டப்படுகிறது. தற்போதைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழுவூர் பகுதி இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் குடும்பத்திற்கு எதிராக கடம்பூர் அரண்மனையில் நடத்தப்படும் சதியாலோசனைக் கூட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார் பெரிய பழுவேட்டரையர். சோழர்களுக்காக போரில் ஈடுபட்டு அறுபத்தி நான்கு காயங்களைப் பெற்றவராக இந்த நாவலில் பெரிய பழுவேட்டரையர் அறிமுகப்படுத்தப்படுகிறார். சுந்தர சோழருக்குப் பிறகு, பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக, உத்தம சோழன் எனும் மதுராந்தகச் சோழன் அரியணைக்கு வர வேண்டுமென பழுவேட்டரையர் விரும்புவதாக நாவலில் காட்டப்படுகிறது. ஆதித்த கரிகாலனை சோமன், ரவிதாஸன், பரமேஸ்வரன், ரேவதாஸ கிரமவித்தன் ஆகியோரே கொலை செய்ததாக கல்வெட்டுகள் கூறும் நிலையில், கடம்பூர் அரண்மனையில் கத்தியை எறிந்து பழுவேட்டரையரே ஆதித்த கரிகாலனைக் கொன்றதாக நாவலில் வருகிறது.

நாவலின் முடிவில் பழுவேட்டரையர் தன்னைத் தானே குத்திக்கொண்டு இறந்துவிடுகிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் சரத் குமார் நடிக்கிறார்.

நந்தினி

 

நந்தினி

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS/TWITTER

பொன்னியின் செல்வன் நாவலிலேயே மிகவும் கவர்ச்சிகரமான அதே சமயம் மிக ஆபத்தான கதாபாத்திரமாக புனையப்பட்டுள்ள பாத்திரம். சிறு வயதில் ஆதித்த கரிகாலனை காதலித்தவள். பின் வீரபாண்டியனின் மனைவியாவதாக காட்டப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்ற பின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளைய ராணியாகிறாள். வீர பாண்டியனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் ஆசைகொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள்.

இந்தப் பாத்திரத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. துவக்கத்தில் வீர பாண்டியன் மனைவியாக காட்டப்படும் நந்தினி, ஓரிடத்தில் பாண்டிய மன்னனின் மகளாகவும் குறிப்பிடப்படுகிறாள்.

இந்த நாவலில் மட்டுமல்லாமல், நா. பார்த்தசாரதி எழுதிய பாண்டிமாதேவி நாவலிலும் இந்தப் பாத்திரம் வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

சின்ன பழுவேட்டரையர்

நாவலில் பெரிய பழுவேட்டரையரின் தம்பியாக வரும் இவரது பெயர் காலாந்தகக் கண்டர். இவரது கட்டுப்பாட்டில்தான் தஞ்சை அரண்மனை நாணய சாலை, தானிய அறை, பாதாளச் சிறை, சுரங்கப்பாதை ஆகியவை இருந்தன. தன்னுடைய அண்ணன் நந்தினியிடம் சிக்கியிருப்பது குறித்து அவ்வப்போது வருத்தத்தை வெளியிடுவார். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவராகவும் சோழ நாட்டின் விசுவாசியாகவும் நாவலில் வருகிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

ஆதித்த கரிகாலன்

 

ஆதித்த கரிகாலன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS/TWITTER

சுந்தர சோழன் எனப்படும் இரண்டாம் பராந்தகச் சோழனின் மகன். சுந்தர சோழனுக்குப் பிறகு அரசனாக வேண்டிய பட்டத்து இளவரசன். நாவலில் வந்தியத்தேவனின் நண்பன். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனை இளம் வயதிலேயே போரிட்டுக் கொன்றதாக ஆனை மங்கலத்துச் செப்பேடுகள் கூறுகின்றன. கி.பி. 966ல் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.

பொன்னியின் செல்வன் நாவலில், மிகவும் நிலையற்ற ஒரு கதாபாத்திரமாக ஆதித்த கரிகாலனின் பாத்திரம் காட்டப்படுகிறது. சிறு வயதில் நந்தினியைக் காதலித்ததாகவும் பிறகு அவள் கண் முன்பாகவே, அவளது கணவனான வீர பாண்டியனைக் கொன்றதாகவும் அதை நினைத்து நினைத்து வருந்துவதாகவும் நாவல் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் பொன்னாலான மாளிகையை கட்டியவன் இந்த ஆதித்த கரிகாலன்.

பட்டம் கட்டப்பட்ட மூன்றாவது ஆண்டில், 969ல் சிலரால் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு, ஆதித்த கரிகாலனைக் கொன்ற நான்கு பேரைப் பட்டியலிடுகிறது. சுந்தர சோழருக்குப் பிறகு அரசனான உத்தம சோழனின் காலத்தில் இந்த நால்வரும் தண்டிக்கப்படவில்லை. உத்தம சோழனுக்குப் பிறகு அருள்மொழி வர்மன் அரசனான பின், நால்வரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு, விரட்டப்படுகின்றனர்.

பொன்னியின் செல்வன் பாத்திரத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்

நாவலில் முதன்மந்திரி அநிருத்த பிரம்மராயரின் ஒற்றன். தீவிர வைணவராக நாவலில் சித்தரிக்கப்படும் ஆழ்வார்க்கடியான், நந்தினியின் சகோதரனாகவும் குறிப்பிடப்படுகின்றான். திருமலை என்பது இவனது இயற்பெயர். ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டு தன் பெயரை ஆழ்வார்க்கடியான் நம்பி என்று மாற்றிக் கொண்டவன். உடல் முழுவதும் நாமம் இட்டுக் கொண்டு, கையில் எப்போதும் தடியுடன் இருப்பவர். வைணவத்தின் மீதான பற்றினால் சைவர்களை காணும் பொழுதெல்லாம் சண்டையிடுபவராக நாவலில் வருகிறார்.

தன்னுடைய வளர்ப்புச் சகோதரியான நந்தினி சோழ நாட்டிற்கு தீங்கு செய்ய நினைத்தாலும் சோழ நாட்டின் விசுவாசியாகவே ஆழ்வார்க்கடியான் இருக்கிறான்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.

சுந்தர சோழர்

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் என வரலாற்றில் குறிக்கப்படும் இந்த மன்னரின் இறுதிக் காலத்தில்தான் பொன்னியின் செல்வன் நாவல் நடைபெறுகிறது. இவரது ஆட்சிக் காலம் கி.பி. 957 முதல் கி.பி. 970 வரை. அரிஞ்சய சோழனின் இரண்டாவது மகன். இவரது இயற் பெயர் இரண்டாம் பராந்தகச் சோழன். ஆனால், மிகுந்த நல்ல தோற்றமுடையவர் என்பதால் மக்கள் இவரை சுந்தர சோழன் என்று அழைத்தனர்.

மதுரை கொண்ட கோ ராசகேசரிவர்மன், பாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமாள் ஸ்ரீ சுந்தரசோழ தேவர் என கல்வெட்டுகள் இவரைக் குறிப்பிடுகின்றன. தன் மகனும் பட்டத்து இளவரசனுமாகிய ஆதித்த கரிகாலன் இறந்த துக்கத்திலேயே சுந்தரசோழன் இறந்தார். இவருடைய உருவமும் மனைவி வானவன் மாதேவியின் உருவமும் தஞ்சை பெரிய கோவிலில் சிலைகளாக உள்ளன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

செம்பியன் மாதேவி

சுந்தரசோழனின் பெரியம்மா. அதாவது சுந்தர சோழனின் தந்தையான அரிஞ்சய சோழனின் அண்ணன் கண்டராதித்த சோழனின் மனைவி. கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜராஜ சோழன் என பல சோழ மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கும் உயர்ந்த இடத்தில் இருந்தவர்.

கண்டராதித்த சோழன் மறைந்தபோது, தம்முடைய மகன் குழந்தையாக இருந்ததால், தன் கொழுந்தனான அரிஞ்சய சோழனை அரசனாக்கியவர் இவரே. சோழ நாட்டில் உள்ள சைவத் திருத்தலங்கள் அனைத்தும் செங்கலால் கட்டப்பட்டிருந்த நிலையில், அவற்றை மாற்றி கல்லால் கட்டியவர் இவர்தான். சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோவில்களை இவர் கற்கோவில்களாக மாற்றியுள்ளார். அவை தற்போதும் நிலைத்திருக்கின்றன.

சுந்தர சோழனின் குழந்தைகளான ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழிவர்மன் ஆகியோரை வளர்த்தவர். இவரது சமாதி செம்பியன் கிழானடி நல்லூர் என்ற சேவூரில் இருக்கிறது. திருவேள்விக்குடி கல்வெட்டுகளில் இவரது பெயர் குறிப்பிடப்படுகிறது.

பொன்னியின் செல்வன் நாவலில் போலியான மதுராந்தகச் சோழனை இவர் வளர்ப்பதாகவும் பிறகு உண்மையான மதுராந்தகச் சோழன் பட்டம் ஏற்பதாகவும் வருகிறது. கி.பி. 1001ஆம் ஆண்டுவரை இவர் உயிர்வாழ்ந்தார். செம்பியன் மாதேவியில் உள்ள திருக்கைலாயமுடையார் கோவிலில் இவருடைய உருவச் சிலை இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஜெயசித்ரா நடித்திருக்கிறார்.

பூங்குழலி

பொன்னியின் செல்வன் நாவலில் மிகுந்த உள்ளக் கொந்தளிப்புள்ள மற்றொரு பாத்திரம் பூங்குழலி. தனியாக படகோட்டிச் செல்வது, மிகுந்த துணிச்சலுடன் பிரச்னைகளைச் சமாளிப்பது, வந்தியத்தேவனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் உதவிகளைச் செய்வது என மிக வலுவான பாத்திரமாக பூங்குழலி படைக்கப்பட்டிருக்கிறால். இளவரசன் அருள்மொழிவர்மன் மீது ஆசை கொண்டவளாகக் காட்டப்படும் பூங்குழலி, பிறகு சேந்தன் அமுதனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

நாகப்பட்டனத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொள்ளும் தியாகவிடங்கரின் மகள்.

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?" என்ற பாடலை அவள் அடிக்கடி பாடுவதாக வரிகள் பூங்குழலி பாடுவதாய் பொன்னியின் செல்வன் நாவலில் அமைந்துள்ளன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.

வானதி

 

வானதி

பட மூலாதாரம்,@SOBHITAD/TWITTER

கொடும்பாளூர் இளவரசியாகவும் குந்தவை பிராட்டியின் தோழியாகவும் பொன்னியின் செல்வன் நாவலில் வருகிறார் வானதி. கொடும்பாளூர் சிற்றரசரும் சோழநாட்டு சேனாதிபதியுமான பூதிவிக்கிரம கேசரியின் சகோதரரின் மகள் இவர். சுந்தர சோழனின் காலத்தில் இவளுடைய தந்தை ஈழத்துப் போரில் உயிரிழக்கிறார்.

அருண்மொழிவர்மன் மீது மிகுந்த காதல் கொண்ட பெண்ணாக நாவலில் வானதி காட்டப்படுகிறாள். அருள்மொழிவர்மனை வானதி திருமணம் செய்துகொண்டாலும், அவரது பட்டமகிஷியாக இருந்தவர் உலகமாதேவி என்ற வேறொரு பெண். அருள்மொழிவர்மனை திருமணம் செய்துகொண்டதும் வானவன் மாதேவி என்ற பெயரில் இவர் அறியப்படுகிறார். இவருடைய மகனே ராஜேந்திரச் சோழன் என்ற பெயரில், ராஜராஜசோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வருகிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ஷோபிதா துலிபலா நடிக்கிறார்.

சேந்தன் அமுதன்

பொன்னியின் செல்வன் நாவலில் இந்தப் பாத்திரம் மிக எளிமையான முறையில் அறிமுகமாகும் சேந்தன் அமுதன், முடிவில் உத்தம சோழன் என்ற பெயரில் அரசனாகிறான். வந்தியத்தேவனின் நண்பனாகவும் பூங்குழலியின் காதலனாகவும் நாவலின் பெரும் பகுதியில் வரும் சேந்தன் அமுதன், பிற்பகுதியில் சோழ இளவரசனாக முன்னிறுத்தப்படுகிறான். கண்டராதித்தருக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்த உண்மையான மகன் இவர்தான் என சொல்லப்படுகிறது.

அருள்மொழிவர்மனுக்கு முடிசூட்டும் தினத்தில், கிரீடத்தை சேந்தன் அமுதனுக்குச் சூட்டி, அவனை அரசனாக்குவதாகக் காட்டப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் அஸ்வின் நடித்திருக்கிறார்.

மதுராந்தகச் சோழர்

பொன்னியின் செல்வன் நாவலின் துவக்கத்தில், கண்டராதித்த சோழனுக்கும் செம்பியன்மாதேவிக்கும் பிறந்த மகனாக காட்டப்படும் பாத்திரம் இது. ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக இந்த மதுராந்தகச் சோழனுக்கு முடிசூட்டவே பெரிய பழுவேட்டரையர் கடம்பூர் அரண்மனையில் சதியாலோசனைக் கூட்டத்தை நடத்துவார்.

சரித்திரத்தில், மதுராந்தகச் சோழராக ஒருவரே உண்டு. அந்தப் பாத்திரத்தையே கல்கி, தனது நாவலில் மதுராந்தகச் சோழன், சேந்தன் அமுதன் என இரு பாத்திரங்களாக பிரித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-63066662

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படத்தில் வசனங்கள் பழையபாணியில் இல்லாமல் தற்காலப் பாணியில்  இருந்ததல்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று மணிரத்தினம் கருதியதாகவும் அவ்வாறே வசனங்கள் அமைந்திருப்பதாகவும் பேட்டிகள் மூலம் அறிய வருகிறது. இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது படம் பாரக்கம் போதுதான் தெரிய வரும்.பாகுபலியில் வசனங்கள் பழைய கால வரலாற்றுப்படங்களின் பாணியிலேயே அமைந்திருந்தன.அது வெற்றியும் அடைந்திருந்தது. நந்தினி கதாபாத்திரத்திற்கு ஜஸ்வரியாராய் எவ்வாறு பொருந்ர்வார் என்பதில் தெளிவில்லை. வெறும் அழகுப் பொம்மையாக மட்டும்வருவரா அல்லது  இன்னொரு நீலாம்பரியாக அதகளம் பண்ணக்கூடிய மொழிவளம் இருக்கிறதா என்பதில் தெளிவில்லை. கடந்த கால மணிரத்தினத்தி; படங்களில் வரலாறுகளை இருட்டடிப்புப் செய்தது போல இந்தப்பட்திலும் நடக்குமா என்பதைப் பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்த போதிலும் இந்தப்படம் வெளியாவது தெற்காசியாவையே கட்டியாண்ட சோழ சாம்ராஜ்யத்தையும் தமிழர்களின் வரலாற்றையும் ஓரளவுக்காவது காட்டும் என நம்புவோம். வந்தியத் தேவனுக்கு கார்த்தியும் குந்தவையாக திரிசாவும்  பெரிய சின்ன பழவேட்டையர்களாக சரத்தும் பார்த்திபனும் நல்ல தெரிவாகவே படுகிறது. படத்தைப்பார்த்தபின் தான் மிகுதியைப்பற்றித் தெரிய வரும்.அநேகமாக எங்கள் வயதுக்காரர்களில் பொன்னியின் செல்வன் வாசிக்காதவர்கள் மிக அரிதாகலவ இருப்பார்கள். இளந்தலைமுறையினருக்கு கதையில் குழப்பங்கள் இல்லாமல் கதை சொல்லப்படுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இன்றைய தொழல்நுட்பம் கெ கொடுக்கும் என்றே நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்வார்க்காடியானாக ஜெயராம் நல்ல தெரிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ponniyin Selvan Story: பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் பாகம் 3 - Explained

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.