Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

Screenshot__52_.png?auto=format,compress

beluga_transport_test_loading.jpg?auto=format,compress&format=webp&w=700&dpr=1.0

சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST.

உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் இந்த கார்கோ விமானம், ஜூலை 7ம் தேதி பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர் இன்று இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகருக்குச் சென்றது.

இந்த ஏர்பஸ் பெலுகா விமானம் வந்தது சென்னைக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கே இதுதான் முதல் முறை. Airbus நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், வழக்கமான விமானங்களைப்போல் இல்லாமல் மிகப்பெரிய திமிங்கிலத்தைப்போல வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 56.16 மீட்டர், அகலம் 7.7 மீட்டர், உயரம் 17.25 மீட்டர். இது அதிகபட்சமாக சுமார் 155 டன் வரை எடை சுமக்கும் திறன் கொண்டது.

அதாவது திமிங்கிலத்தின் வாயைப்போல விரியும் இதன் முன்பக்க கேபினில் மிகப்பெரிய எந்திரங்கள், கிரேன், சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றையே ஏற்றிச் செல்லலாம்.

இதில் இருக்கும் 'semi-automated main deck cargo loading system', Multi-Purpose-Pallet (MPP) மற்றும் 'automated on-board cargo loader (OBCL)' போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வளவு பெரிய பொருள்களாக இருந்தாலும் விமானத்தில் எளிதாக ஏற்றி, இறக்கிவிடும். உண்மையில் இதன் அருகில் நின்று பார்த்தல் ஒரு பெரிய ஹெலிகாப்டரை இந்த விமானம் விழுங்குவதுபோல் காட்சி அளிக்கும்.

1996 முதல் இயக்கப்பட்டு வரும் இந்த வகை விமானங்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பெரிய அளவிலான பாகங்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இதன் சரக்குப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

உலகளவில் விமானம், ஹெலிகாப்டர், அதிவேக ஜெட்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கிவரும் 'Airbus' நிறுவனம், இந்தப் பிரமாண்டமான ஏர்பஸ் பெலுகாவைப்போல, 'Airbus Beluga XL' என்னும் அதைவிட பெரிய விமானம் ஒன்றையும் தன்வசம் வைத்துள்ளது. இவை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குச் சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன.

ஆனந்த விகடன்

 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஏர்பஸ் "பெலுகா" விமானம் எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பதை விளக்கும் காணொளி..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைபுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி வன்னியர்.

ஏற்கனவே பல தடவை உடைந்து விழுந்த விமானநிலையம் பெரிய விமானங்கள் வரும் போது அதிர்வினால் ஏதாவது பாதிப்புள்ளாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவன்னியன் இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்பிற்கு நன்றி, ராஜவன்னியன்.
ஒரே நேரத்தில் எத்தனை லீற்றர் எரிபொருள் அடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி வன்னியர்.

ஏற்கனவே பல தடவை உடைந்து விழுந்த விமானநிலையம் பெரிய விமானங்கள் வரும் போது அதிர்வினால் ஏதாவது பாதிப்புள்ளாகலாம்.

ஒரு வருடத்திற்கு மேல்…. ஒன்றும் உடைந்து விழவில்லை என நினைக்கின்றேன். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சென்னை வந்திறங்கிய ஏர்பஸ் பெலுகா, மீளவும் புறப்படும் அழகு..!

 

 

 

சின்ன திமிங்கல குட்டியை பார்த்து வடிவமைத்திருப்பார்கள் போலுள்ளது. 😌

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

 

சென்னை வந்திறங்கிய ஏர்பஸ் பெலுகா, மீளவும் புறப்படும் அழகு..!

 

 

 

சின்ன திமிங்கல குட்டியை பார்த்து வடிவமைத்திருப்பார்கள் போலுள்ளது. 😌

முகப்பு டொல்பின் போல இருக்கே!

நன்றி ராஜவன்னியன் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

முகப்பு டொல்பின் போல இருக்கே!

images?q=tbn:ANd9GcQNlDJsOn1GU53eKBRGgLB  images?q=tbn:ANd9GcRXcHNmOptOHyRbyRElAvL

திமிங்கல வகையறாக்களில், பெலுகா என்றொரு வகையும் உண்டு, ஏராளன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/7/2022 at 01:09, ராசவன்னியன் said:

சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST.

இந்த பென்னாம் பெரிய  கப்பல் மெட்ராஸ்ல வந்து இறங்க இடமிருக்கா சார்? நம்பவே முடியல.....🤪
நம்ம பலாலில கொன்கோர்ட் வந்து இறங்கும் தெரியுமெலே...:cool:

Concorde's Last Flight Documentary (1080p) GIF | Gfycat

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த பென்னாம் பெரிய  கப்பல் மெட்ராஸ்ல வந்து இறங்க இடமிருக்கா சார்? நம்பவே முடியல.....🤪
நம்ம பலாலில கொன்கோர்ட் வந்து இறங்கும் தெரியுமெலே...:cool:

Concorde's Last Flight Documentary (1080p) GIF | Gfycat

ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். 😎

காங்கேசன்துறையில் டைட்டானிக் கப்பலே வந்து நிற்குமல்லோ? (மயிலிட்டி மாதிரி அல்ல..!🤪)

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.