Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு; நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு; நடந்தது என்ன?

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சித்தரிப்பு படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் சூழலில், தன் மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்படும் வரை உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியரின் மகள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம்‌ வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி காலை தங்களது மகள் உயிரிழந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வருகிறது. நேரில் சென்று பார்த்த மாணவியின் தாயாரிடம், அவரது மகள் பள்ளி மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த தாயார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார். காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்துள்ளார் உயிரிழந்த மாணவி. கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி மாணவியை விடுதியில் சேர்த்ததாக தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.

சந்தேக மரணம் என்று வழக்கு

இந்நிலையில் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிபட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த பள்ளி காவலர், நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சின்ன சேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ்(சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த தொடங்கினர்.

மேலும் மாணவியின் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய தினம் விடுதியில் தங்கிப் பயின்று வந்த மற்ற மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பள்ளி மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) வீட்டிற்கு வருவதாக தனது தாயிடம் கூறிய அவர் திடீரென்று உயிரிழந்து இருப்பது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற 13ஆம் தேதி காவல் துறையினரை, பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, "காலையில் மின்சார விளக்குகளை அணைக்க வந்த விடுதி காவலர், மாணவி அங்கு கிடப்பதை முதலில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பள்ளி வாகனம் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்," என்று தெரிவித்தார்.

இதனிடையே, தங்கள் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டார். எனவே மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது "மாணவியின் உடற்கூராய்வு பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்படும். பரிசோதனையின் போது உறவினர் ஒருவரும் அனுமதிக்கப்படுவார்" என்று உறுதியளித்தார்.

தாயார் கூறுவது என்ன?

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் மாணவியின் தாயார் கூறுகிறார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் செல்வி கூறியதாவது, "எனது மகள் அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்தாள். பதினொன்றாம் வகுப்பு வெளியே சென்று படிப்பதற்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டோம் ஆனால் தர மறுத்தனர். இதையடுத்து எனது மகள் அங்கேயே படிப்பைத் தொடர்ந்தாள். பின்னர்‌ அவள் 12ஆம் வகுப்பு சென்ற பிறகு கடந்த ஜூலை 1ஆம் தான் பள்ளி விடுதியில் சேர்த்தேன். ஆனால் 13ஆம் தேதி எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் உங்கள்‌ மகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.

அவள் உயிருடன் இருப்பதாக கூறினர். ஆனால், அடுத்த அரை மணி‌நேரத்தில் எங்களை மீண்டும் அழைத்து உங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தபோது எங்களது மகள் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்குக் கொண்டுவந்ததாக கூறினர். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த எனது மகளின் உடலைச் சென்று பார்த்தபோது தலை மற்றும் மார்பு பகுதிகளில் மட்டுமே அடிபட்டு இருந்தது. பள்ளிக்குச் சென்று, எங்கள் மகள் உயிரிழந்த இடத்தை பார்த்தபோது அங்கும் இரத்த அடையாளம் இல்லை," என்றார் அவர்.

பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ பதிவை காட்ட வலியுறுத்தினோம் ஆனால் மறுத்துவிட்டதாக கூறுகிறார் தாயார் செல்வி.

 

தாயார் செல்வி

"இரவு 10.30 மணிக்குப் பதிவான வீடியோ ஒன்றை காட்டினர். அதில் எதுவும் தெரியவில்லை. அவர்கள் பள்ளி முழுவதும் வைத்திருந்த எந்தவொரு கண்காணிப்பு கேமிராவிலுமா பதிவாகாமல் இருந்திருக்கும்? ஆனால் எந்த வீடியோ காட்சிகளையும் காட்ட‌ மறுத்துவிட்டனர்," என்றார் மாணவியின் தாயார்.

"மேலும் எனது மகள் கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்ததாக பொய் சொல்கின்றனர். விடுதியில் படிக்கின்ற மாணவி பள்ளி நிறைவடைந்ததும் சீருடை கூட மாற்றாமல் அதே உடையில் உயிரிழந்து இருக்கிறார். எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. எங்கள் மகளின்‌‌ மரணம் தொடர்பாக காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை செய்யவேண்டும்," என்று மாணவியின் தாயார் செல்வி தெரிவித்தார்.

மாணவி 12ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். "மறுநாள் அதிகாலை சுமார் 5.30 மணிக்குத் தான் மாணவி பள்ளி வளாகத்தின்‌ முன்பு கிடப்பதை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையில் யாருமே அவரின் உடலின் கவனிக்கவில்லை." என்று காவல் துறையினர் தெரிவிக்கிறது.

 

பள்ளியில் காவல்துறை

காவல் கண்காணிப்பாளர் கூறுவது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமாரை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், இரண்டு ஆசிரியர்கள் 'நீ படிக்கவில்லை என்றும் விளையாட்டுத்தனமாக இருப்பதாகவும் அனைவரின் முன்பும் கூறி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்' என்றும் அதனால் உயிரிழப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்ல குமார்

 

படக்குறிப்பு,

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்

இதனிடையே மாணவியின் தாயார் அவர் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு வைத்தார். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை செய்து வருகிறோம். மேலும் மாணவி உடலின், உடற் கூராய்வின் போது இரண்டு மருத்துவர்கள் இருந்தனர். அதில் ஒருவர் பெண் மருத்துவர். மேலும் உடற்கூராய்வு செய்ய தடயவியல் மருத்துவர் இருக்கும்படி செய்தோம். இதனை முழுவதுமாக வீடியோ பதிவும் செய்துள்ளோம். அதுமட்டுமின்றி உடற்கூராய்வு பரிசோதனைக்கு முன்பு உயிரிழந்த மாணவி உடலை அவர் குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இந்த மாணவி மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாட்சிகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சில சாட்சிகளை விசாரணை செய்து வருகிறோம். மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை செய்துள்ளோம். கடிதத்தில் குறிப்பிட்டபடி ஆசிரியரால் மாணவி தொடர்ந்து அவ்வாறு நடத்தப்பட்டாரா என்பது தொடர்பாக உடன் பயிலும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இப்படி முழுமையான விசாரணை நிறைவடைந்த பிறகே இந்த வழக்கின் தன்மை குறித்து முடிவெடுக்க முடியும்," என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

பள்ளியின் முகப்பு

 

படக்குறிப்பு,

பள்ளியின் முகப்பு

மாணவியின் மரணம் சிசிடிவியில் பதிவாகியுள்ளதா?

மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தாக கூறப்படும் பள்ளியில் மூன்று மாடிகள் உள்ளன. அதில், மூன்றாவது மாடியில் மாணவிகளின் தங்கும் விடுதி இருக்கிறது.

பள்ளி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமிராவின் மூலம் மாணவி எப்படி விழுந்தார் என்பதை அறிய முடிந்ததா என்று காவல் துறையினரிடம் கேட்டபோது. "மாணவி விழுந்ததாக கூறப்படும் மூன்றாவது மாடியானது மாணவிகள் தங்கும் விடுதி என்பதால் அங்குக் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. ஆனால் அதிகாலை கீழே இருந்த மாணவி உடலை விடுதி காவலர், நிர்வாகத்தினர் தூக்கிக்கொண்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் காணொளியானது தரைதளத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது" என்றனர்.

கடந்த நான்கு நாட்களாக, உயிரிழந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வுக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகளின் மரணத்திற்கு முறையான விசாரணை நடைபெறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

நீதி விசாரணை வேண்டும்

குறிப்பாக மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

"அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்துத் தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்," என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

"கடந்த பத்தாண்டில் இதேபோன்று மாணவிகள் அப்பள்ளியில் இறந்து போயிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது," என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இவருடன் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்திய அளவில் கவன ஈர்ப்பு

 

டிஎஸ்பி ராஜலக்ஷ்மி

மற்றொருபுறம் மாணவியின் மரணத்தைக் காவல் துறையினர் உரிய விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளி கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உயிரிழந்த மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு நீதி கிடைக்க சமூக வலைதளங்களில் இது குறித்த ஹாஷ்டேகுகளை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

"மாணவியின் உடற் கூராய்வு பரிசோதனை நிறைவடைந்துள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னர்‌ அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்," என்று இந்த வழக்கை தலைமை ஏற்று விசாரணை செய்து வரும் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62189130

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் தாக்குதல்: 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் - காவல்துறை

6 நிமிடங்களுக்கு முன்னர்
 

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியான நிலையில், அந்த அறிக்கை தவறானது என்று கூறி அவரது உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனாலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன சேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முற்பட்ட போது காவல் துறையினர் தடுப்பை மீறி‌ பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் மறுமுனையில் இருந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு தாக்க தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதில் போலீசார் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தை கற்களை கொண்டு போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்," என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

பள்ளியின் முகப்பு (கோப்புப் படம்)

 

படக்குறிப்பு,

பள்ளியின் முகப்பு (கோப்புப் படம்)

இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பிற மாணவர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பள்ளியின் உள்ளே போராட்டக்காரர்கள் புகுந்து பள்ளியின் கண்ணாடிகள் மற்றும் பள்ளி வாகன கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட காவலர்கள் பாதுகாப்பாக அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போலீஸார் தடியடி மற்றும் மற்றும் போராட்டக்காரர்கள் தாக்குதலால் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை காவல் துறை தரப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 20 காயமடைந்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தின் போது காவல் துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து பள்ளி பேருந்துகளையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் கலவரம் தீவிரமடையும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை கூடுதல் பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-62195386

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? #GroundReport

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
18 ஜூலை 2022, 01:50 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பேருந்துகள் எரிப்பு

கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மரணமடைந்ததையடுத்து ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கலவரத்தை நடத்தியது யார், அவர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர்?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்துவந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாயார் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சின்ன சேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ் (சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யத் தொடங்கினர்.

தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு பெற்றோரும் அவரைச் சார்ந்தவர்களும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒரு பகுதி வெளியான நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமையன்று மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுத் துவங்கியதாக சொல்லப்படும் போராட்டம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது.

போராட்டம் துவங்கியது எப்படி?

ஞாயிற்றுக் கிழமையன்று காலை. சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தின் முன்பு பாதுகாப்பிற்காக சுமார் 40 காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். காலை சுமார் 9 மணியளவில் இரு சக்கர வாகனங்களிலும் சிறிய சரக்கு வாகனங்களிலும் சிறிது சிறிதாக இளைஞர்கள் அந்தப் பகுதியில் கூட ஆரம்பித்தனர். சுமார் 500 இளைஞர்கள் வரை திரண்ட நிலையில், இறந்த மாணவிக்கு நீதி கோரி கோஷங்களை இட்டதோடு, பள்ளிக்கூடத்திற்கு முன்பாகவே சாலை மறியலில் அமர்ந்தனர். காவல்துறை அவர்களை அகற்றியதால், சாலையின் எதிர்ப்புறம் சென்று அமர்ந்து போக்குவரத்தைத் தடைசெய்தனர்.

அங்கிருந்தும் காவலர்கள் அவர்களை அகற்ற முற்பட்டபோது மெல்ல மெல்ல தள்ளுமுள்ளு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் காவல்துறையினர் அங்கு இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களிலிருந்து சேமக் காவல் படையினரை வரழைக்கும் பணிகள் துவங்கின.

 

போராட்டம்

ஆனால், பள்ளி முன்பாகக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. சுமார் ஆயிரம் பேர் அந்தப் பகுதியில் திரண்ட நிலையில், அவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசும் வேகம் அதிகரித்தது. விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் கண்ணீர் புகை குண்டுகளை சுட்ட நிலையில், அவர் மீதும் கல்வீச்சுத் தாக்கல் நடந்தது. அதில் அவர் காயமடைந்தார். விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்ட சுமார் 70 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது.

காவல்துறையினரை மீறி பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த கூட்டம், ஒவ்வொரு பகுதியாக முன்னேறி தாக்குதல் நடத்தியது. முதலில் சென்றவர்கள் வாசலில் இருந்த சிசிடிவி கேமராக்களை நொறுக்கினர். அந்த பள்ளியின் ஒவ்வொரு அறையிலும் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. பிறகு பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க ஆரம்பித்தனர்.

இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்ட நிலையில், மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளின் மீது போராட்டக்காரர்களின் கவனம் திரும்பியது. அங்கேயிருந்த டிராக்டர்களை ஓட்டிவந்து அந்தப் பேருந்துகளை சேதப்படுத்திய அவர்கள், முடிவாக அவற்றுக்கும் தீ வைத்தனர்.

பள்ளிக்கூடத்தை நோக்கி வந்த தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினரை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றை பள்ளிக்கூடம் அருகில் செல்ல போராட்டக்கரார்கள் அனுமதிக்கவில்லை. பிறகு ஒரு வழியாக இந்த வாகனங்கள் பள்ளிக்கூடத்தை நெருங்கின. வேறு மாவட்டங்களில் இருந்த வந்த காவலர்கள் மெல்ல மெல்ல அப்பகுதியில் வந்து இறங்கினாலும், பள்ளிக்கூடத்தை முழுமையாகச் சூறையாடிவிட்டே போராட்டக்காரர்கள் கலைந்தனர்.

இதற்குள் வேறு சிலர், பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து சேதமடைந்த பொருட்கள், எஞ்சிய மேஜை நாற்காலிகள் ஆகியவற்றை தங்களது இரு சக்கர வாகனங்களிலும் பிற வாகனங்களிலும் ஏற்றிச்சென்றனர்.

பிற்பகல் சுமார் 2 மணியளவில் காவல்துறை நிலைமையை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், அதற்கள் பள்ளிக்கூடம் முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டது எப்படி? யார் இவர்கள்?

பள்ளிக்கூட தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தனர். 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் சிலரும்கூட அந்தக் கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதில் தெளிவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் அக்கம்பக்கத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்தக் கலவரத்தை நேரில் பார்த்த உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

நேற்றைய சம்பவத்தைப் பார்த்த அனைவருக்கும் எழக்கூடிய ஒரு கேள்வி, இந்தப் போராட்டக்காரர்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர், அவர்கள் இந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் எப்படி காவல்துறைக்குத் தெரியாமல் போனது என்பதுதான்.

கடந்த இரண்டு நாட்களாகவே உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும் என்று கூறும் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.

பெரும்பாலும், திரை நட்சத்திரங்களை முகப்புப் படமாகக் கொண்ட டிவிட்டர் ஐடிகளே இந்த ஹாஷ்டாகின் கீழ் பதிவுகளை வெளியிட்டனர். கலவரம் வெடித்த பிறகு, அந்த ஹாஷ்டாகுடன் கலவரக் காட்சிகளை இந்த டிவிட்டர் ஐடிகள் தொடர்ந்து இப்போதும் வெளியிட்டு வருகின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்த ஹாஷ்டாகுடன் பதிவுகளை வெளியிட்ட ஒன்றிரண்டு ஐடிகளில், ஞாயிற்றுக் கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவிக்கு நீதி வேண்டும் என்பது போன்ற தலைப்பிலான போஸ்டர்களை இந்த ஐடிகள் பகிர்ந்திருந்தன. ஆனால், அப்படிப் பகிர்ந்த ஐடிகளுக்கு பெரிய அளவில் பின்தொடர்பவர்கள் இல்லை. ஆகவே, ட்விட்டர் மூலம் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமையன்று பெரிய அளவில் இளைஞர்கள் திரண்டதற்கு வாட்ஸப் குழுக்கள் மூலம் பரப்பப்பட்ட அழைப்புகளே காரணமாக இருக்கலாம் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இம்மாதிரி ஆட்கள் ஒருங்கிணைக்கப்படுவதை காவல்துறையோ, உளவுத் துறையோ எப்படி அறியாமல் போனது என்ற கேள்விக்கு இதுவரை விடைகிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும்கூட, பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் அங்கு நிறுத்தப்படாதது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தை நோக்கி சாரைசாரையாக வாகனங்களில் போராட்டக்காரர்கள் வர எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கும் விடையில்லை.

 

வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி

 

படக்குறிப்பு,

நேற்று வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி

கலவரமெல்லாம் ஓய்ந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தை நோக்கி இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை நிறுத்திய காவல்துறை, அவர்களது செல்போனில் கலவரக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருந்தாலோ வாட்சப் ஸ்டேட்டசாக வைக்கப்பட்டிருந்தாலோ, அவர்களை விசாரிக்க ஆரம்பித்தது.

இதற்குப் பிறகு முழு வீச்சிலான கைது நடவடிக்கைகள் துவங்கின. பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களது இருசக்கர வாகனங்களின் எண்களை வைத்து தேடப்பட்டு வருகின்றனர். மேலும், ஊடகங்களில் வெளியான காட்சிகளில் இடம் பெற்றவர்களையும் காவல்துறை விரைவில் தேடக்கூடும்.

இந்த கலவரத்தின்போது எந்த அமைப்பின் கொடியோ, அமைப்பு சார்ந்து கோஷங்களோ எழுப்பப்படவில்லை. இளைஞர்களில் பலர் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பதைத் தவிர, இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் பொதுவான ஒற்றுமை ஏதும் இருக்கவில்லை. எந்த ஒரு ஜாதி அமைப்பும் வெளிப்படையாகப் பங்கேற்றதாகவும் தெரியவில்லை.

மரணமடைந்த சிறுமியின் சடலம் இன்னும் பெற்றோரால் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், பிரச்னையின் தீவிரம் நீடிக்கவே செய்கிறது. தற்போது பள்ளிக்கூட நிர்வாகிகள் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களைத் திங்கட்கிழமை முதல் மூடுவதற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

திங்கட்கிழமைக்குப் பிறகு இந்த விவகாரத்தை அரசு எப்படிக் கையாளப்போகிறது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

https://www.bbc.com/tamil/india-62202511

Edited by ஏராளன்
add more news

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2022 at 08:32, ஏராளன் said:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் தாக்குதல்: 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் - காவல்துறை

 

ஏழைகள்... ஒரு அளவுக்குத்தான் தமக்கு இழைக்கப் படும்  அநீதியை பொறுப்பார்கள்.
ஸ்ரீமதி என்ற அந்த மாணவி... 13´ம் திகதி இறக்கின்றார்.
அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, அது கொலை என்று அவரது  தாயார்....
கலெக்டர், போலீஸ் எஸ்.பி. ஆகியோரிடம் மனு கொடுக்கின்றார்.
பொறுப்பான இருவரும் கடந்த நான்கு நாட்களாக 
எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஊர்,  சுற்று வட்டார  மக்கள் கொந்தளித்து  பள்ளிக்கு உள்ளே போய்... பார்த்தால்,
அதிபர் அறையை சுற்றி, நிறைய ஆணுறைகள்.
மாணவி இறந்த இடத்தில்... இரத்தக் கறைகள்.
இதற்குப் பிறகும்... அரசு  நடவடிக்கை எடுக்காமல் இருந்தது,
மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்த...
சட்டத்தை  கையில் எடுத்து, செய்ய வேண்டியதை சிறப்பாக செய்து விட்டார்கள்.

ஏற்கெனவே... இந்தக் கல்லூரியில், கடந்த காலங்களில்... 
மூன்று மாணவிகள் இறந்துள்ளார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'SRIMHTH srimat ShareChat @saif_ajmal ajmal SRIMATHI rimathi srimathi srimathi srimath, siirath srimathi srimathi srimat srimathi thirimathi justie SRIMATH mathi HHIH இதற்கு பெயர்தான்மர்மமான முறையில் தற்கொலையா? அன்பு தங்கை ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முதல் அறிக்கை! தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடித்து இருகிறார்கள்! அணிந்திருந்த ஆடை முழுவதும் இரத்தம்! உடலில் உள்ள காயங்கள் அனைத்தும் புதிய காயங்கள்! அதிக அளவிலான இரத்த போக்கின் காரணமாக மரணம்! போராட்டகாரர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கும் டிஜிபி சைலேந்தர் பாபு அவர்களே உங்கள் வீட்டு பிள்ளை ஸ்ரீமதியை கொன்ற கயவர்களுக்கு ஏன் கடும் தண்டனை வழங்கவில்லை?'

அந்த மாணவி... மர்மமான முறையில், தற்கொலையாம்.

தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் வந்து விடும் என்று...
இந்தக் கொலையை பற்றி எழுதாமல் ... 
பெரும்பாலான  தமிழக ஊடகங்கள்  மௌனமாக உள்ளன. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கலவர பூமியான கள்ளக்குறிச்சி.. | உருக்குலைந்த பள்ளி... | நடந்தது என்ன..? முழு விவரம்

 

 

நீடிக்கும் போராட்டம்.. அடுத்தது என்ன?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி நிலையங்களை மாநில அரசின் நேரடி ஒழுங்குபடுத்தல்,  கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதுதான் பிரச்சனைகளை பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். அத்துடன் , காலப்போக்கில் சமூகத்தில் அமைதியையும் அதன் தொடர்ச்சியாக  சமூக வளர்ச்சியையும் ஏற்படுத்த வழிவகுக்கும். 

இலங்கையிலும் இந்த நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்த மாணவி... மர்மமான முறையில், தற்கொலையாம்.

தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் வந்து விடும் என்று...
இந்தக் கொலையை பற்றி எழுதாமல் ... 
பெரும்பாலான  தமிழக ஊடகங்கள்  மௌனமாக உள்ளன. 

மாணவி கொல்லப்பட்டதை விட பள்ளி தாக்கப்பட்டது தான் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Kapithan said:

கல்வி நிலையங்களை மாநில அரசின் நேரடி ஒழுங்குபடுத்தல்,  கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதுதான் பிரச்சனைகளை பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். அத்துடன் , காலப்போக்கில் சமூகத்தில் அமைதியையும் அதன் தொடர்ச்சியாக  சமூக வளர்ச்சியையும் ஏற்படுத்த வழிவகுக்கும். 

இலங்கையிலும் இந்த நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

வேலியே பயிரை மேய்வது போல் அரசியல் பின்பலத்துடனேயே சகலதும் நடந்தேறுகின்றது. இதை ஒழுங்கு செய்வதற்கென்றே ஆட்களும் இருக்கின்றார்களாம். பண இலஞ்சம் போல் பாலியல் இலஞ்சங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை.

இலங்கையிலும் வரத்தொடங்கி விட்டது.

Patting woman journalist on her cheeks leads to trouble for TN governor

One-man panel begins probe into Tamil Nadu sex scandal | India News - Times  of India

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

வேலியே பயிரை மேய்வது போல் அரசியல் பின்பலத்துடனேயே சகலதும் நடந்தேறுகின்றது. இதை ஒழுங்கு செய்வதற்கென்றே ஆட்களும் இருக்கின்றார்களாம். பண இலஞ்சம் போல் பாலியல் இலஞ்சங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை.

இலங்கையிலும் வரத்தொடங்கி விட்டது.

Patting woman journalist on her cheeks leads to trouble for TN governor

One-man panel begins probe into Tamil Nadu sex scandal | India News - Times  of India

முதற் படத்தில் மெய்ப்பாதுகாவலரின் சிரிப்பைக் கவனிக்கவும்..🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை - உயர் நீதிமன்றம்

43 நிமிடங்களுக்கு முன்னர்
 

வன்முறை

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் ஜூலை 13ஆம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக நீதிபதி சதீஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், மருத்துவர்கள் குழு மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது மாணவியின் தந்தைக்கான வழக்கறிஞர் கே.கேசவன் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்று கூறினார்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிய போராட்டக்காரர்களின் செயலுக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ஒரு சோதனை வழக்காகக் கருதி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யுமாறு காவல்துறையினரைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் ஒரு சமிக்ஞையை அனுப்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் நடந்தால், அந்த வழக்கை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு சிஐடி (சிபிசிஐடி) விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 3 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டார்.

 

உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரசு விளக்கம்

இந்த நிலையில், மாணவி உயிரிவந்த வழக்கை சிபிசிஐடி ஞாயிற்றுக்கிழமையே எடுத்துக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அவரது நிலைப்பாட்டை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பு ஊடகங்களுக்கு அளிக்கும் சர்ச்சை பேட்டிகளால் போலீஸ் விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்று காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

மகளின் மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றுக் கொண்டு அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்தவும் பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.திடீரென வன்முறையாக மாறிய அமைதிப் போராட்டம் எதேச்சையாக நடக்கவில்லை என்றும் அது "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போல் தோன்றுகிறது" என்றும் நீதிபதி சதீஷ் குமார் விசாரணையின்போது கூறினார்.

சட்டத்தை மீறி செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த சிறப்புக் குழுக்களை அமைக்குமாறும் காவல்துறையினரை நீதிபதி கேட்டுக் கொண்டார்.சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இணை விசாரணை மற்றும் விவாதங்கள் நடத்தி வன்முறையைத் தூண்டும் நபர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசுக்கு உத்தரவிட்டார். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குண்டர்கள் போல ஒரு கும்பல் செயல்படுமானால், பிறகு சட்டத்தை நிலைநாட்ட நீதிமன்றமும் அதை பராமரிக்க காவல்துறையும் எதற்கு என்றும் நீதிபதி சதீஷ் குமார் கேள்வி எழுப்பினார்.

 

வன்முறை

போலி காணொளி: எச்சரிக்கும் காவல்துறை

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கடலூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் சந்தேகம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதேவேளை, மாணவிக்கு மரணத்துக்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் உள்ளூர் அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அதன் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவி படித்த தனியார் பள்ளிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களில் சிலர் பள்ளி அறைகளுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் காவல்துறை பேருந்துக்கு தீ வைத்தனர்.

இந்த நிலையில், மாணவி படித்த பள்ளியில் முன்தினம் இரவு ஒரு நபர் சிசிடிவி கேமராவை பார்த்தவாறு நுழைவதாக கூறி ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாயின. ஆனால், போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த லேப்டாப் திருட்டு தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட காவல்துறை எஸ்பி செல்வகுமார், "கனியாமூர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி சமூக ஊடகங்களில் போலியான காணொளி மற்றும் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என எச்சரித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62208900

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'SRIMHTH srimat ShareChat @saif_ajmal ajmal SRIMATHI rimathi srimathi srimathi srimath, siirath srimathi srimathi srimat srimathi thirimathi justie SRIMATH mathi HHIH இதற்கு பெயர்தான்மர்மமான முறையில் தற்கொலையா? அன்பு தங்கை ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முதல் அறிக்கை! தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடித்து இருகிறார்கள்! அணிந்திருந்த ஆடை முழுவதும் இரத்தம்! உடலில் உள்ள காயங்கள் அனைத்தும் புதிய காயங்கள்! அதிக அளவிலான இரத்த போக்கின் காரணமாக மரணம்! போராட்டகாரர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கும் டிஜிபி சைலேந்தர் பாபு அவர்களே உங்கள் வீட்டு பிள்ளை ஸ்ரீமதியை கொன்ற கயவர்களுக்கு ஏன் கடும் தண்டனை வழங்கவில்லை?'

அந்த மாணவி... மர்மமான முறையில், தற்கொலையாம்.

தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் வந்து விடும் என்று...
இந்தக் கொலையை பற்றி எழுதாமல் ... 
பெரும்பாலான  தமிழக ஊடகங்கள்  மௌனமாக உள்ளன. 

 

பாவம் நல்ல அழகான பிள்ளை .மலரத்துடிக்கும் மொட்டுப் போல ,பாவிகள்  உயிரை பறித்து   விடடார்கள்  . எங்கே நீதி  என்று  எங்கும் காலம். அமைதியில் உறங்கு மகளே. 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இலங்கையிலும் இந்த நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பு, பஸ்ஸை... ரக்ரரால்  இடித்து  தள்ளுதல், தீவைப்பு எல்லாத்துக்கும்...
விதை போட்டது.. நம்ம  காலி  முகத்திடல்தான்.  
பாடசாலை முதல்வர் அம்பிட்டு இருந்தால்.. ஜட்டி கழண்டு இருக்கும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாணவி கொல்லப்பட்டதை விட பள்ளி தாக்கப்பட்டது தான் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளதாம்.

நிச்சயம் இந்தப் பாடசாலை... அரசியல்வாதி ஒருவரின் பினாமியாக இருக்கும்.
சாராய ஆலை, பாடசாலை, மருத்துவமனை, குடிநீர் போத்தல் வியாபாரம் எல்லாம் இப்போ...
அரசியல் வாதிகளின் கைகளில் தானே..
அதுதான்... பாடசாலை எரிந்தது அவர்களுக்கு வலிக்குது.

இனி... மாணவர்களில் கைவைக்கும்,  
இந்த காமப் பிசாசுகளுக்கு நல்ல படிப்பினை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிமதியின் தாயாரின் செவ்வி. இதற்கு முதல் 7 கொலைகள் அப்பள்ளியில் நடந்ததாக கூறுகிறார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

kallakurichi-1-16581210613x2.jpg
 
GettyImages_1230804200.0.jpg
 

 

காவல்துறை மக்கள் போராட்டங்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பதை விரும்புவதில்லை. போலிசாரின் பேச்சைக் கேட்டு போராட்டத்தை கைவிட வில்லை என்றால் போலீஸார் தம் பிளான் பியை வெளியே எடுப்பார்கள். அல்லது ஆளுங்கட்சிக்கு தன் அதிகாரத்தை வலுப்படுத்த, உட்கட்சி தலைமைகள் சிலவற்றை பலவீனப்படுத்த ஒரு மக்கள் போராட்டம் அவசியப்படும். ஆனால் இப்போராட்டங்களுக்கு ஒரு காலக்கெடுவை போலிசார் வைத்திருப்பார்கள். அது முடிந்ததும் அப்போராட்டத்தை முடித்து வைக்க ஒரு பிளான் பியை தயாராக வைத்திருக்கும் நம் போலீஸ் துறை

 

அதென்ன பிளான் பி?

 

அண்மையில் ஜல்லிக்கட்டு போராட்டங்களில், தில்லியில் விவசாயிகள் போராட்டத்திலும், ஜெ.என்.யுவில் மாணவர் போராட்டங்களில், கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் என்ன நடந்தது? போலிசார் தமது கூலிப் படை கலவரக்காரர்க்ளை அனுப்பி கல்லெறியவும் அடித்து நொறுக்கவும் செய்து விட்டு அதை கலவரமாக சித்தரித்து போராடும் மக்களை கைது பண்ணினர். அல்லது சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். இந்த கலவரங்களின் பொதுப்பண்பு என்னவெனில் கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்படும் போதும் வாகனங்கள் கொளுத்தப்படும் போதும் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பார்கள். ஊடகங்களில் உள்ள காவல்துறை ஏஜெண்டுகள் (சவுக்கு சங்கரைப் போன்றோர்) காவல்துறை மிகுந்த பொறுமையுடன் போராட்டக்காரர்களை எதிர்கொண்டது, ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தடியடி பண்ணி கைது பண்ணினார்கள் என்பார்கள். இது ஒரு மீள மீள நிகழும் கதையாடல் இந்தியாவில் மட்டுமல்ல அண்மையில் இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை போராளிகள் ஆக்கிமித்து அங்கு படுத்துறங்கி சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து கொண்டாடிய போது இலங்கைப் போலீசும் ராணுவமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் இந்த அரசு அனுமதி பெற்ற மக்கள் போராட்ட சிற்றுலா ஜனாதிபதி தன் ராஜினாமாவை அளித்ததும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எம்ர்ஜென்ஸி கொண்டு வரப்ப்பட்டு ராணுவம் கடுமையாக போராட்டங்களை ஒடுக்கியது. ஏன் அதுவரை காத்திருந்தார்கள்? ஏனென்றால் ஜனாதிபதியை முழுகையாக அதிகார புலத்தில் இருந்து நீக்க பிரதமருக்கு அந்த போராட்டங்களின் அழுத்தம் தேவைப்பட்டது. ஆனால் இலங்கையிலோ இந்தியாவிலோ இந்த அரசு சதித்திட்டத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்துவதே இல்லை. அவர்கள் இப்போராட்டங்கள் தன்னிச்சையாக நடந்தேறி, தன்னிச்சையாகவே வன்முறை வெடித்தது எனப் பேசிப் பேசி ஓய்வர். அது தான் ஊடகங்களுக்கு அரசும் போலீஸ் துறையும் அளிக்கும் திரைக்கதை. தென்னமெரிக்க நாடுகளில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க உளவுத்துறை இவ்வாறே மக்கள் போராட்டங்களை ஊடகங்களின் துணை கொண்டு ஒருங்கிணைத்து தமக்கு உடன்படும் பொம்மைத் தலைமைகளை அரியணை ஏற்றுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக நாடு முழுக்க உள்ள ஒரு பிளான் பி தான் இது.

 

போலீஸ்காரகளே நேரடியாக களத்தில் இறங்கி கலவரங்கள் பண்ணுவதும் உண்டு - 98ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் இறந்தனர். ஆனால் இந்த குண்டுவெடிப்புக்கான ஏற்பாடுகளை அல் உம்மாவினர் பண்ணுவது உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் இதை ஊக்குவிக்கவும் செய்தனர். குண்டுவெடிப்புகள் நடந்ததும் அப்போது ஏற்பட்ட பதற்றத்தை, பீதியை பயன்படுத்தி இஸ்லாமியரின் வணிகவளாகங்களை போலிசாரே சூறையாடியதற்கு, தீக்கிரையாக்கியதற்கு நேரடி சாட்சியங்கள் உள்ளன. அடுத்து இந்த கலவரங்களை பயன்படுத்தி இஸ்லாமியரை பார்த்த இடத்தில் எல்லாம் தாக்கியும் சுட்டுக் கொன்றும் ஒழித்தனர். நிறைய இஸ்லாமியரை கைது பண்ணியதுடன் எளிய இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளை தொடர்கண்காணிப்பிலும் வைத்தனர். இதன் மூலம் இஸ்லாமிய வணிகர்களின் இருப்பு இல்லாமல் ஆக்கப்பட்டு அந்த இடத்தில் பனியா வணிக சமூகத்தினர் நுழைந்து ஆக்கிரமித்தனர். அந்த ஒட்டுமொத்த கலவர புரோஜெக்டை திட்டமிட்டது இந்த பனியாக்களும் இந்துத்துவர்களும் போலிசாரும் இணைந்தே. இந்த சதித்திட்டத்தில் சிக்கி பலியான இஸ்லாமிய இளைஞர்கள் உண்மையை உணர்ந்த போது மிகவும் தாமதமாகி விட்டது

 

இம்முறை கள்ளக்குறிச்சியில் ஶ்ரீமதியின் மரணம் நிகழ்ந்த பின்னர் போலிசார் அப்பள்ளி நிர்வாகத்தினரை கைது பண்ண தயங்குகிறது. இதுவும் வழக்கம் தான். பத்மசேஷாத்ரியிலும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி விவகாரங்களிலும் இத்தகைய தயக்கத்தை துவக்கத்தில் பார்த்தோம். ஆனால் குற்றம் சுமத்திய மாணவிகள் உயிருடன் இருந்ததால் போலிசால் நிர்வாகத்தை முழுக்க காப்பாற்ற முடியவில்லை. ஒரு மனைவி தற்கொலை பண்ணினால் அவருடைய பெற்றோர் புகார் அளித்தால் உடனடியாக கணவர் கைதாவார். ஆனால் ஏன் தனியார் பள்ளி நிர்வாக விசயத்தில் மட்டும் அத்தகைய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றால் அதுவே தனியார் பள்ளி முதலாளிகளின் பணத்தின் அரசியல் செல்வாக்கின் ஆற்றல். அதுவே கள்ளக்குறிச்சியில் கணியாமூரில் இயங்கி வரும் அப்பள்ளி நிர்வாகம் குற்றம் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை போலிஸார் விசாரணை முடியும் முன்பே எடுத்ததே ஶ்ரீமதியின் அம்மா மற்றும் உறவினர் தொடர்ந்து போராட பிரதான காரணம். போராட்டம் ஊடக கவனம் பெறவே போலீஸ் பிளான் பியை வெளியே எடுக்கிறது. பள்ளியைச் சுற்றி கற்கள் குவிக்கப்படுகின்றன, ஆயுதங்கள், உருட்டுக்கட்டைகளும் பதுக்கப்படுகின்றன. கலவரம் பண்ணுவதற்காக வெளியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பைக்கிலும் வேறு வாகனங்களிலும் வருகிறார்கள். இதெல்லாம் போலீசுக்குத் தெரிந்தே நடக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளிக் கட்டிடங்களும் வாகனங்களும் நாசமாக்கப்பட்ட பின்னர் பள்ளியின் செயலாளர் இதற்கெல்லாம் மொத்த பொறுப்பு ஶ்ரீமதியின் தாயார் தான் எனச் சொன்னதை கவனியுங்கள். கலவரங்கள் பண்ணியது தம் உறவினரோ ஊர்க்காரர்களோ அல்ல வெளியாட்கள் என ஶ்ரீமதியின் அம்மா சொன்னார். ஆக பழியை அமைதி வழியில் போராடியவர்கள் மீது போதுவதே பள்ளி நிர்வாகம் மற்றும் போலிசாரின் திட்டம், திரைக்கதை. அதன் வழியே சாந்தியும் இப்போது பேசுகிறார். இப்போது மகளுக்காக ஒரு தாய் நடத்திய போராட்டம் வன்முறையாக சித்தரிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டதை கவனியுங்கள். இதுவே பள்ளி நிர்வாகத்தும் போலிசுக்கும் தேவை. பெரும்பாலான ஊடகங்களில் அப்பள்ளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனியுங்கள்.

 

சாட்சியங்களை அழிப்பதற்காககோ கலவரம் நடத்துவதற்காகவோ நிர்வாகமோ பாஜகவோ இக்கலரவங்களை நடத்தியதாக சிலர் கூறுவதில் உண்மையில்லை என்பது தெளிவு. சாட்சியங்களை அப்பெண்ணின் உடலை ஒப்படைக்கும் முன்னரே அழித்திருப்பார்கள். மதக்கலவரம் பண்ணுவதற்கான சாத்தியங்கள் இக்கலவரத்தில் இல்லை என்பதால் பாஜக இதைச் செய்ய வேண்டிய அவசியம். இது முழுக்க முழுக்க போலிசின் பிளான் பி மட்டுமே.

 

மூன்றாம் உலக நாடுகளோ, இலங்கையோ, இந்தியாவில் தில்லியோ தமிழ்நாடோ ஆள்வது பாஜகவோ அதிமுகவோ திமுகவோ போலிசின் பிளான் பி மட்டும் மாறுவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயம் இந்தப் பாடசாலை... அரசியல்வாதி ஒருவரின் பினாமியாக இருக்கும்.
சாராய ஆலை, பாடசாலை, மருத்துவமனை, குடிநீர் போத்தல் வியாபாரம் எல்லாம் இப்போ...
அரசியல் வாதிகளின் கைகளில் தானே..

சிறித்தம்பி நேர்மையான அரசியல்வாதிகளுக்கு நல்ல காலமில்லை.

9 hours ago, nunavilan said:

சிறிமதியின் தாயாரின் செவ்வி. இதற்கு முதல் 7 கொலைகள் அப்பள்ளியில் நடந்ததாக கூறுகிறார்.

இதெல்லாம் தெரிந்த பின்னரா தன் பிள்ளையையும் அங்கு அனுப்பியிருக்கிறார்? 🤫

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில், குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், உடற்கூராய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உடலைப்பெற்றுக்கொள்ளும்படி மாணவியின் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை.இந்த நிலையில் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும்படி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி சார்பில் இறந்த மாணவியின் வீட்டில் நேற்றிரவு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

 

உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாயார் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார்.

இதற்குப் பிறகு பெற்றோரும் அவரைச் சார்ந்தவர்களும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒரு பகுதி வெளியான நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, பள்ளி வளாகம், வாகனங்கள் கொளுத்தப்பட்டன. பெரும் கலவரமாக மாறிய நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு தமிழக காவல்துறை டிஜிபி, உள்துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

உடற்கூராய்வு

இந்த நிலையில், மாணவியின் உடலுக்கு மறு-உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (ஜூலை 19) பிற்பகல் 4.15 மணியளவில் தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பரிசோதனை மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உடற் கூராய்வை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனையானது சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல் ஹக் மற்றும் ஏடிஎஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மாணவியின் பெற்றோருக்கு உடற் கூராய்வு தொடர்பாக தகவல் அறிக்கை உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த இந்த பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூராய்வு பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 19) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு உடற்கூராய்வு செய்யும்படியும் அதுவரை மறு-உடற்கூராய்வு செய்யாமல் நிறுத்திவைக்கும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை ஜூலை 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என்றும் தெரிவித்தது.

 

வன்முறை

நேற்று உடற்கூராய்வு நடத்தப்பட்டபோதும் பிணவறை பகுதிக்கு மாணவியின் பெற்றோர் வரவில்லை. இதையடுத்து பெற்றோர் இல்லாமல் உடற்கூராய்வு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-62233238

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு: ஊர் மக்கள் பங்கேற்பு, வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு

23 ஜூலை 2022, 05:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடல் 11வது நாளான இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு - சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பிறகு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான உறவினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

உயிரிழந்த மாணவியின் இறுதி அஞ்சலி கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மாணவி பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோளுடன் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்தில் 10 நாட்களுக்குப் பிறகு மாணவியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டனர். மேலும் மாணவியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்படுவதையொட்டி அவரது வீடு மற்றும் கிராமத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராம இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி.கணேசன், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் புவனகிரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உயிரிழந்த மாணவிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்க பாதுகாப்பாக காவல் துறையினர் ஈடுபட்டனர்.

 

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியரின் மகள் படித்து வந்துள்ளார். தற்போது 12ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 13ஆம் தேதி 5.30 மணிக்கு மாணவி உயிரிழந்த நிலையில் பள்ளி வளாகத்தில் இருப்பது தெரிந்தது. காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டு அதிர்ச்சியால் மாணவி உயிர் பிரிந்திருக்கும் என்று தோன்றுவதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டது.

இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய மாணவியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற் கூராய்வு செய்யவேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் மனு தொடுத்தனர்.

 

line

 

line

இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று‌ பள்ளி அருகே மர்மமான முறையில் மாணவி மரணித்ததற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மக்கள் போராடியது வன்முறையாக மாறியது.

முன்னதாக பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18ஆம் தேதி அன்று மறு உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளும்படி குற்றவியல் புலனாய்வுத் துறை மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பின்பற்ற அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

இந்த சூழ்நிலையில் நேற்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று(ஜூலை 23) காலை 7 மணிக்கு மாணவியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அருகே உள்ள சொந்த கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டுவரப்பட்டது.

மாணவி உயிரிழந்து 11வது நாள்(ஜூலை 23) அவரது உடலை தாய் தந்தையர் பெற்றுக்கொண்டனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

 

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

இதனிடையே பாதுகாப்பு கருதி கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தலைமையில், ஏடிஎஸ்பி விஜிகுமார், 7 டிஎஸ்பிக்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேப்பூர் மற்றும் பெரியநெசலூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வண்டி, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா மற்றும் வருண் வண்டிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கடுமையான பரிசோதனைக்குப் பிறகே வண்டிகளை ஊருக்குள் போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும் வெளியூர் ஆட்கள், பிற இயக்கம் மற்றும் அமைப்பினருக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

https://www.bbc.com/tamil/india-62275531

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'போலீசார் விசாரணையில் குறைபாடு' - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் மரணித்த வழக்கில், போலீசார் விசாரணையில் சில குறைபாடு இருந்துள்ளது என்றும் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தெரிவித்துள்ளார்.

மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், விசாரணை அதிகாரிகள் ஆகியோரிடமும், பள்ளி விடுதிக்கு சென்றும் சுமார் ஐந்தரை மணி நேரம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி வந்தனர். முதற்கட்டமாக மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர், பள்ளியில் மாணவி தங்கியிருந்த விடுதி மற்றும் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் பள்ளி வளாகம், இறுதியாக மாணவி மரணம் தொடர்பாக ஆரம்பம் முதல் இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தேசிய மற்றும் மாநில குழுவினர் இணைந்து விசாரணை

இன்று காலை கள்ளக்குறிச்சி வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தது.

 

இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாணவி தங்கியிருந்த விடுதி, அவர் படித்த வகுப்பு, அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படும் இடம், மாணவி தரை தளத்தில் விழுந்ததாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரணை செய்து வந்த அதிகாரிகள், பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், காவல் துறையினர், மாணவியை உடற் கூராய்வு செய்த மருத்துவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், போலீசார் விசாரணை குறைபாடு

 

போலீசார்

இன்று(ஜூலை 27) காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை மூன்று இடங்களில் நடைபெற்றது. இந்த விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ, "தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று முதலில் விசாரணை செய்தோம். இதையடுத்து மாணவி உயிரிழந்த பள்ளிக்கு சென்று அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டோம்.

அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து விசாரணை செய்துள்ளோம். இதில் மாணவிக்கு உடற் கூராய்வு செய்த மருத்துவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டோம்

மேலும் நாங்கள் கவனித்தது வரை ஆரம்பக்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதி இயக்கியது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகமும் மாணவி மரணத்தில் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் மாணவர்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து சரியாக ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளனர். நாங்கள் விசாரணை செய்த அனைத்தையும் அறிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்," என தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில் என்ன குறைபாடு என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அதை அறிக்கையில் குறிப்பிடுவோம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62320705

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை தூண்டியதாக வாட்சாப் குழு அட்மின்கள் உள்பட 4 பேர் கைது

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட வாட்சாப் குழு அட்மின்கள் மற்றும் காவல் துறையினரை கற்களால் தாக்கியவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாய் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

 

இதற்கு நீதி கேட்டு ஜூலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பள்ளி வண்டிகள், கட்டடம் கொளுத்தப்பட்டதோடு காவல்துறை வண்டிகளும் தீக்கிரையாயின. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தமிழக உள்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய டிஜிபி, கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சிக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.

இந்த நிலையில், கலவரத்துக்குக் காரணமானவை என்று கூறப்படும் வாட்சாப் குழுக்களின் அட்மின்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி

 

படக்குறிப்பு,

வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி

இதுவரை 322 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் ஈடுபட்டது, காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தது, பள்ளிக்கூடத்தை சேதப்படுத்தியது, காவல் துறையினரை தாக்கியது, மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக வாட்ஸ்அப் குழுவை நிர்வகித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கலவரத்தைத் தூண்டும் வகையில் வாட்சாப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களைச் சேர்த்து கலவரம் உருவாகும் விதமான கருத்துக்களைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம் துருவூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி, காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாக புது பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

காவல்துறை

இவர்களை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இந்த நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சியின் கணியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கருத்துக்களை பதிவு செய்த வாட்ஸ் அப் குழு அட்மின்கள் உள்ளிட்ட 16 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே, கலவரத்தில் ஈடுபட்டதாக 20 சிறார்கள் உள்ளிட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக சிறப்பு புலனாய்வு பிரிவு, காவல்துறை சார்பில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-62359346

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி வன்முறை: வழியில் சென்றவர்களும் கைதானதாக புதிய சர்ச்சை - கள நிலவரம்

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
18 நிமிடங்களுக்கு முன்னர்
 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

கலவரம் நடந்த பள்ளியின் முகப்புப்பக்கம்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வுக்கு ஆயத்தமானவர்கள் என்றும் சிலர் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேலத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கேரளாவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர். தனது மகன் கள்ளக்குறிச்சி வன்முறையில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்பதை அறிந்து அந்த தந்தை மகனை மீட்க முடியாமல் தவித்து வருகிறார்.

வன்முறையில் மகன் ஈடுபட்டிருக்க மாட்டான் என்று கூறும் அவர், கடந்த இரண்டு வாரங்களாக மகனை விடுவிக்க யாரை பார்ப்பது? யார் துணையை நாடுவது? என்று தெரியாமல் உள்ளார்.

இதேபோல, குரூப் 4 மாதிரி தேர்வெழுத தயாராகி வந்த தங்களுடைய இரண்டு மகன்களை போலீஸார் கைது செய்து விட்டதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குரியதாகி விட்டதாக வேறொரு பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகள் தேர்வு எழுதச் சென்ற ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் அந்த பெற்றோர் அலைந்து வருகின்றனர்.

 

தொடரும் கைது நடவடிக்கை

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

ஜூலை 17ஆம் தேதி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக நடந்த கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட பள்ளி கட்டடம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மான முறையில் மாணவி இறந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி முதல் கட்டமாக 221 இளைஞர்கள், 20 சிறார்கள் உட்பட 241 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சம்பவத்தில் அடுத்துதடுத்து மேலும் பலர் கைது செய்யப்பட்டதையடுத்து மொத்த கைது எண்ணிக்கை 322 ஆக உள்ளது.

இதில் வன்முறைக்கு முக்கிய காரணங்களாக, வன்முறையாளர்களை ஒருங்கிணைக்க உதவிய வாட்ஸ் அப் குழுவை தோற்றுவித்தவர்கள், அதில் பலரை இணைத்தவர்கள், கலவரத்தில் போலீஸ் பேருந்துக்கு தீ வைத்தவர்கள், பள்ளி கட்டடத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என 16 பேரை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தது.

இந்த நிலையில், வன்முறை நடந்தபோது பள்ளி வளாகத்துக்கு அருகே இருந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து, சின்ன சேலம் வழியாக செல்ல முற்பட்டவர்கள் மற்றும் வன்முறையில் எந்த வகையிலும் பங்கேற்காதவர்கள் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளதாக பிடிபட்டுள்ள சிலரது உறவினர்கள் ஆதாரங்களை காண்பித்து முறையிடுகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

பள்ளி வளாகத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பேருந்துகள்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கையை சர்ச்சையாக்கும் வகையில் அவர்கள் வெளியிடும் பல தகவல்கள் உள்ளன.

குறிப்பாக, சின்ன சேலத்தை சேர்ந்த செல்வராஜ், மல்லிகா தம்பதியின் இரண்டு பிள்ளைகள் சம்பவ நாளில் குரூப் 4 தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தனர். சின்ன சேலம் பேரூராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் செல்வராஜ், கடுமையான பொருளாதார சூழலில் தமது பிள்ளைகளை படிக்க வைத்ததாகக் கூறுகிறார்.

இவரது மூத்த மகன் குடியரசு(26) முதுகலை கணிதவியல் மற்றும் இளங்கலை கல்வியியல் படித்துள்ளார். இளைய மகன் வசந்த்(25) பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவருமே அரசு வேலையில் சேர பல்வேறு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

கடந்த ஜூலை 24ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான 'மாதிரி குரூப் 4 தேர்வு' கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது. அதற்காக அன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வெழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது போலீசார் இருவரையும் கைது செய்து விட்டதாக அவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

ஹால் டிக்கெட்டை கிழித்ததாக புகார்

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

சிறையில் உள்ள மகன்களை மீட்க மாவட்ட நிர்வாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு அலையும் தாயார் மல்லிகா, தந்தை செல்வராஜ்.

இதையடுத்து சிறையில் தற்போதுள்ள இரு இளைஞர்களின் பெற்றோரை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது. நம்மிடையே பேசிய இளைஞர்களின் தாய் மல்லிகா, "ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி மையத்தில் காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை குரூப் 4 மாதிரி தேர்வு எழுதிவிட்டு, தென்வீரலூரில் உள்ள உறவினர் வீட்டுக்குபிள்ளைகள் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கனியாமூரில் கலவரம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் கலவரம் ஓய்ந்த பிறகு வீட்டுக்கு செல்லலாம் என்று அங்கேயே இருந்துள்ளனர். பிறகு கலவரம் ஓய்ந்த தகவலறிந்து வீட்டுக்கு புறப்பட்டனர். கனியாமூர் தனியார் பள்ளி எல்லை அருகே சென்றபோது காவலர்கள் வழிமறித்துள்ளனர். இருவருமே தங்களது 'குரூப் 4' ஹால் டிக்கெட்டை காண்பித்துள்ளனர். ஆனாலும் அதை கிழித்துப் போட்டுவிட்டு இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்," என்கிறார்.

இந்த விவகாரத்தில் கலவரம் நடந்த ஜூலை 17ஆம் தேதி தனது இரண்டு மகன்கள் எங்கு சென்றனர், அவர்கள் மாதிரி தேர்வு எழுத சென்ற நேரம் முதல் வீடு திரும்பியது வரை உள்ள சிசிடிவி ஆதாரங்கள், தேர்வு மதிப்பெண் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து, திருச்சி சிறையில் இருக்கும் மகன்களை விடுவிக்க வேண்டும் என்று இரு இளைஞர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்ற காவலில் இருந்த மகன்களை பிணையில் வெளியே எடுக்க முயன்ற முயற்சி பலன் கொடுக்காததால், அவர்களால் ஜூலை 24ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை எழுத இயலவில்லை.

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

தாயார் மல்லிகா

"சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன்களை பார்த்தோம். தவறே செய்யாமல் எங்களை இந்த அரசு குற்றவாளியாக ஆகிவிட்டது என்று கூறி அழுகின்றனர்," என்கிறார் தாயார் மல்லிகா.

இளைஞர்களின் தந்தை செல்வராஜ், "எனது பிள்ளைகள் இருவருமே தாசில்தாராக வேண்டும், விஏஓ ஆக வேண்டும் என்று கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்து வந்தனர். அவர்களது கனவு வீணாகிவிட்டது. இனி சிறையில் இருந்து வெளியே வந்தால் கூட, இருவரையும் குற்றவாளிகள் போலத்தான் இந்த சமுதாயம் பார்க்கும். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அரசாங்கமே முன்வந்து உதவி செய்தால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். இல்லையென்றால் அவர்கள் கனவு பாழாகும்," என்கிறார்.

மகனின் ஐபிஎஸ் கனவு - தந்தை உருக்கம்

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

கேசவன்

இதேபோல, கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம் தலைவசால் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞரும் ஒருவர். அவரது தந்தை கேசவன் பிபிசி தமிழிடம் பேசும்போது, வழிப்போக்கனாக அந்த பகுதி வழியாக சென்ற தனது மகனை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறுகிறார்.

சேலத்தைச் சேர்ந்த கேசவன், கேரளா மாநிலத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது மகன் கலவரத்தில் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே சாப்பிட முடியும் என்ற நிலையில்தான் இவரது குடும்பம் உள்ளது.

"எனது மகன் முதுகலை சமூகவியல் முடித்துவிட்டு, தற்போது இளங்கலை கல்வியியல் படித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு அரசு போட்டி தேர்வுகள் எழுதி வந்துள்ளார். அவனுக்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. ஆனால், இப்போது எல்லாம் தகர்ந்து விட்டது," என்கிறார் கேசவன்.

போலீஸ் தரப்பு பதில்

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் பகலவனை தொடர்பு கொண்ட பிபிசி தமிழ், கலவர சமயத்தில் முதல் கட்டமாக நடந்த கைது நடவடிக்கையின்போது தவறுதலாக சிலர் பிடிபட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர் முறையிடுவது குறித்து கேட்டது.

அதற்கு அந்த அதிகாரி, "பெற்றோர் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாத்தை சொல்கின்றனர். உண்மையிலே அவர்கள் கூறியபடி அங்கே அவர்களின் பிள்ளைகள் வந்தனரா இல்லையா அல்லது கடைசி நிமிடத்தில் அவர்கள் இணைந்தார்களா உள்ளிட்ட கோணத்தில் எல்லாம் எங்களுடைய விசாரணை நடந்து வருகிறது. பெற்றோரின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையை பொருத்தவரை அப்பாவிகள் யாரும் கைதாகவில்லை என்றே கூறுவோம். வன்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த வன்முறை கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்புடையவர்கள். அதன் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்கிறார்.

இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்பட்டவர்கள் என்றும் எஸ்பி பகலவன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பெற்றோர் சிலர் காட்டும் ஆதாரங்கள் பற்றி குறிப்பிட்டபோது, "என்ன நடந்தது என்பது முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். இதில் ஒவ்வொருத்தரின் பங்கு என்ன என்பதை முழுமையாக விசாரித்து வருகிறோம். அதற்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த அதிகாரி பதிலளித்தார்.

மாவட்ட ஆட்சியர் உறுதி

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

ஷ்ரவன் குமார் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

இதே விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

"இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. பெற்றோர் சிலர் தங்களுடைய பிள்ளைகளுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி சில ஆதாரங்களை வழங்கியுள்ளனர். மகனை பிணையில் விடுவிக்கவும் கோரினர். மாவட்ட நிர்வாகத்தை பொருத்தவரை இதில் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கு முக்கியத்தும் கொடுத்துள்ளோம். கைது நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் பிடிபட்ட நபர்கள் உண்மையிலேயே ஈடுபட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். யாராவது ஒரு நபர் காவல் துறையினர் தங்களை சும்மா பிடித்துவிட்டனர் என்று கூறினாலும் கூட, அவர்கள் கலவரம் நடந்த சுமார் ஒன்றரை மணி நேரம் எந்த பகுதியில் இருந்தனர் என்பது சரிபார்க்கப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்றார் ஆட்சியர்.

இந்த விஷயத்தில் உண்மையை சரிபார்க்க காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறார்கள். இறுதியில் பிடிபட்ட நபர் எந்த வகையிலும் கலவரத்துக்கு தொடர்பில்லை எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தையும் காவல் துறையினர் நீக்கி விடுவார்கள். இதில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், தவறே செய்யாதவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதும் எங்களுடைய கடமை," என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

https://www.bbc.com/tamil/india-62456961

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'சிபிசிஐடி தாமதமாகச் செயல்படுகிறது' முதல்வரை சந்தித்த பெற்றோர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஜூலை மாதம் மரணமடைந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் இறப்புக்கான காரணங்களை அளிக்கும் இரண்டு உடற்கூராய்வு அறிக்கைகளும் நம்பிக்கை தருவதாக இல்லை என்றும் தங்கள் மகளுக்கு நீதி வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்த பெற்றோர், முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். ''எங்கள் மகளின் உடலில் காயங்கள் இருந்தன. மகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என்ன காரணங்களால் இந்த காயங்கள் ஏற்பட்டன என எங்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். என் மகளுக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வேண்டும் என முதல்வரிடம் கேட்டோம். தப்பு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என முதல்வர் உறுதி கொடுத்தார். எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது,'' என பெற்றோர் தெரிவித்தனர்.

கடந்த மாதம், கள்ளக்குறிச்சியில் இறந்த தங்கள் மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் அறிக்கையில் தெரிய வந்ததை அடுத்து, மகளின் உடலை வாங்க மறுத்து நான்கு நாட்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடித்து, இறந்த மாணவிக்கு நீதிவேண்டும் என பல்வேறு வாட்ஸ்அப் குரூப் மூலமாக தனியார் பள்ளியில் திரண்ட போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர்.

இறந்த மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போராட்டக்காரர்கள் மோசமாக நடந்துகொண்ட காட்சிகளை தொலைகாட்சியில் பார்த்ததாக கூறிய நீதிபதி, அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதோடு, மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யும் நேரத்தில் எந்த அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என மாணவியின் தந்தையிடம் அறிவுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 300க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் தற்போது மாணவியின் பெற்றோர் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட உடற்கூறாய்வுகளின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போதுவரை தனக்கு அளிக்கப்படவில்லை என்கிறார் தயார் செல்வி. ''எங்கள் மகளின் மரணத்திற்கான காரணங்களை விசாரிக்கும் சிபிசிஐடி தாமதமாக செயல்படுகிறார்கள் என்று கருதுகிறோம். விசாரணை பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தி சொல்லவேண்டும். எங்கள் சந்தேகங்களை தீர்க்கவேண்டும். அவர்கள் விரைவாக வேலைசெய்யவேண்டும். எங்கள் மகளின் இறப்புக்கு முன்னதாக பதிவான சிசிடிவி காட்சிகளை இதுவரை எங்களுக்கு தரவில்லை. அதை எங்களுக்கு காட்டவேண்டும்,'' என்கிறார்.

மேலும், தங்கள் மகளுக்கு நீதி வேண்டும் என்று திரண்ட இளைஞர்களில் ஒரு சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, அப்பாவி பள்ளிமாணவர்களை கைது செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பின்னணி

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம்‌ வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சி கலவரம்

 

படக்குறிப்பு,

ஜூலை 17ஆம் தேதி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக நடந்த கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட பள்ளி கட்டடம்

ஜூலை 13ஆம் தேதி காலையில் இவர்களின் மகள் இறந்து விட்டதாக பெற்றோருக்குத் தகவல் வந்தது. நேரில் பார்த்த மாணவியின் தாயாரிடம், அவரது மகள் பள்ளி மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த தாயார், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று கூறினார். இதையடுத்து மாணவியின் மரணத்தை சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டு அதிர்ச்சியால் மாணவி உயிர் பிரிந்திருக்கும் என்று தோன்றுவதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டது.

உடற்கூராய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய மாணவியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற் கூராய்வு செய்யவேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் மனு தொடுத்தனர்.

இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று‌ பள்ளி அருகே மர்மமான முறையில் மாணவி மரணித்ததற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மக்கள் போராடியது வன்முறையாக மாறியது.

 

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்

 

படக்குறிப்பு,

மாணவியின் இறுதிச் சடங்கு கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

முன்னதாக பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18ஆம் தேதி அன்று மறு உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளும்படி குற்றவியல் புலனாய்வுத் துறை மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பின்பற்ற அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில், பெற்றோ மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, மாணவியின் உடல் 11வது நாளான ஜூலை 23ஆம் தேதியன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.

உயிரிழந்த மாணவியின் இறுதி அஞ்சலி கடுமையான காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. மாணவி பயன்படுத்திய புத்தகம், எழுதுகோலுடன், கள்ளக்குறிச்சி மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராம இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-62698949

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: யூடியூப் சேனல்கள் நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற கோருவது ஏன்?

  • நபில் அஹமது
  • பிபிசி தமிழுக்காக
34 நிமிடங்களுக்கு முன்னர்
 

கள்ளக்குறிச்சி உயர் நீதிமன்றம்

ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது என்று யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அதில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் தரப்பிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பிலும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு போரட்டமும் அதைத்தொடர்ந்து கலவரமும் நடந்தன.

இந்த போரட்டத்தில் ஈடுபட்டோரில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.

 

இது தொடர்பாக நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் 'மாணவி மரணம் தொடர்பாக இணை விசாரணை நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தகைய யூடியூப் சேனைல்களை முடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இந்த உத்தரவு தொடர்பாக யூடியூப் சேனல்கள் நடத்தும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நீதிபதியின் கருத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று 13 யூடியூப் சேனல்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

 

கள்ளக்குறிச்சி உயர் நீதிமன்றம்

அதில் ஒரு யூடியூப் சேனலான 'அரண் செய்' நிறுவனர் ஹசீஃப் முகம்மதிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

 

யூடியூப்

 

படக்குறிப்பு,

ஹசீஃப் முகம்மது

"அரண் செய் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சட்டத்திற்கு உள்பட்டேசெயல்படுள்ளன, பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக பிரதிபலிப்பதே ஒரு ஊடகத்தின் வேலை அதையே இவ்வழக்கிலும் நாங்கள் செய்தோம். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதிய மாணவியின் தாயாரை பேட்டுக்கொண்டு ஒளிப்பரப்பினோம்," என்றார்.

 

யூடியூப்

"சம்பவ நாளில் தொடங்கிய போராட்டம், திடீரென்று வன்முறையாக மாறிய பின் அதில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அப்பாவிகள் என தெரிய வந்தது. அவர்கள் யார் ? என்பதை செய்தியாக்கினோம். உதாரணமாக ஒருவர் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு வீடு திரும்பியபோது வன்முறை நடக்கிறது. அவரும் இதில் கைதாகிறார், இன்னொருவர் டி.என்.பி.எஸ்.சி மாதிரி தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்புகிறார். அவரையும் இவ்வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை," என்று ஹசீஃப் தெரிவித்தார்.

"இது போன்ற தவறுகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வது தானே ஊடக கடமை. அதை நாங்கள் சரியாகவே செய்துள்ளோம். நீதிபதியின் இத்தகைய கருத்து, ஊடக சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. தமிழக அரசு அதை செய்யும் என்று நம்புகிறோம்," என்றார் ஹசீஃப்.

நீதிபதியின் கருத்து குறித்து 'ஜீவா டுடே' யூடியூப் சேனலின் உரிமையாளர் ஜீவாவிடம் பிபிசி தமிழுக்காக பேசிய போது, "நாங்களே முடிவெடுத்து எதையும் ஒளிபரப்பவில்லை. நடந்தவற்றைத்தான் ஒளிபரப்பினோம்," என்றார்.

 

ஜீவா

 

படக்குறிப்பு,

ஜீவசகாப்தன்

இது குறித்து விவரித்த அவர், "மாணவியின் மரணம் தொடர்பாக பலர் எழுப்பிய சந்தேகங்களைத் தான் நாங்கள் ஊடகங்களில் ஒளிப்பரப்பினோமே தவிர நாங்கள் எதனையும் முன்முடிவோடு அணுகவில்லை, மாணவியின் தாயார், உறவினர்கள் என பலரின் பேட்டியை ஒளிப்பரப்பினோம், அதே போல் தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம்பெற்ற விசாரணை அதிகாரி சாந்தியின் பேட்டியை வெளியிட்டோம், இவை எவ்வகையில் வழக்கை பாதித்ததுள்ளது? நீதிபதியின் கருத்து ஊடகச் சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் எதிரானது. அதனை தமிழக அரசு உரிய வகையில் கையாளும் என்று நம்புகிறேன்," என்றார்.

இந்த விவகாரத்தில் வழக்குரைஞர் மனோகரனிடம் பேசினோம்.

" ஒரு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்போது, அதற்கு இணையாக ஒரு விசாரணை ஊடகங்களில் நடைபெற்றால், அது வழக்கின் போக்கை பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் பல நிகழ்வுகளில் பாதிப்படைந்தவர்களுக்கு பாதகமாக வழக்கு போன வரலாறு உண்டு, அதே போல் ஊடகங்களின் பங்களிப்பால் பல முக்கிய வழக்குகளில் நீதியும் கிடைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது," என்றார்.

"பல வழக்குகளில் நீதிபதிகள் ஊடக செய்திகளை உதாரணம் காட்டி நீதியும் வழங்கியுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே கருத்து சுதந்திரத்தை பற்றி வரையறுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு ஊடகங்கள் செயல்பட்டால், அவற்றை நீதிபதிகள் கண்டிப்பது தவறு. இன்றைய சூழ்நிலையில் அச்சு ஊடகங்கள் துவங்கி தொலைக்காட்சிகள் வரை பெரும்பாலானவை கார்பரேட் நிறுவனங்களின் வசம் சென்று விட்டன. ஓரளவிற்கு நேர்மையாக நடப்பது இது போன்று சுயாதீன டிஜிட்டல் ஊடகம் மட்டுமே. அதை முடக்கும் வகையில் நீதிபதியின் கருத்து அமைந்திருப்பது சட்டம் நமக்கு அளித்துள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று தான்," என்று அவர் தெரிவித்தார்.

ஊடகங்கள் தவறு செய்தால் அதனை நெறிப்படுத்த உத்தரவிடும் கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு ஊடகங்களே கண்காணிக்கவே ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை தலைவராக கொண்டு 1966ம் ஆண்டு தொடங்கிய Press council of India என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது, சில நேரங்களில் நீதிமன்றமும் இது போன்ற தவறான கருத்துகளை தெரிவித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டும் பொறுப்பு ஊடகங்களுக்கும் நமக்கும் உண்டு என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

https://www.bbc.com/tamil/india-62756694

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.