Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா? - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?

ஜூலை 22, 2022
Photo_1658464475739.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மொட்டு கட்சியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுப்பதற்கென்று த. தே. கூ. ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?“ என அவர் பதிவிட்டுள்ளார்.
 

spacer.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதையும் கெடுத்தான்... நொள்ளிக்கண்ணன் என்ற மாதிரி,  
இந்த சுமந்திரன்... நெடுக பினாத்திக் கொண்டு இருக்காமல்,
கொஞ்ச  நாளைக்காவது...  வாயை மூடிக் கொண்டிருக்க சொல்லுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உள்ளதையும் கெடுத்தான்... நொள்ளிக்கண்ணன் என்ற மாதிரி,  
இந்த சுமந்திரன்... நெடுக பினாத்திக் கொண்டு இருக்காமல்,
கொஞ்ச  நாளைக்காவது...  வாயை மூடிக் கொண்டிருக்க சொல்லுங்கள்.

ஜனாதிபதி மொட்டுக் கட்சியோ, பூக்கொத்து கட்சியோ.... உந்தாள் பிரச்சணை அதுவா?

வாழையிலையா, தட்டா என்பதா பிரச்சணை?

சோறு வருமா, வராதா எண்டு தானே பார்க்க வேண்டும்....

சம்பந்தரின் முட்டாள் தேர்வே, சுமந்திரன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உள்ளதையும் கெடுத்தான்... நொள்ளிக்கண்ணன் என்ற மாதிரி,  
இந்த சுமந்திரன்... நெடுக பினாத்திக் கொண்டு இருக்காமல்,
கொஞ்ச  நாளைக்காவது...  வாயை மூடிக் கொண்டிருக்க சொல்லுங்கள்.

கட்சியை விட்டே நீக்க வேண்டும். வேறு யார் மூலமாவது நல்லது நடக்கும்.கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சகுனி இவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டலஸ் அழகப்பெருமா வந்திருந்தா மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில்  பூக்கொத்து கொடுத்து வாழ்த்தியிருப்பாரா என்பதையும் சொல்லிவிட வேண்டியதுதானே? சும்மா வாய் இருக்கு என்பதற்காக அலம்பிக்கொண்டு திரியுறதே. கோத்தாவின் ஆட்சியில் எல்லாம் சரியென்று ஆமோதித்திருந்தவர், இப்ப மட்டும் மாறி செய்துபோடுவாராம். ரணிலும், டலசும் ஒரு கட்சிக்குத்தான் சேவை செய்கிறார்கள் என்பது தெரியாததுபோல் கதை அளக்கிறார். ஏன் இவர்களின் ஆட்சியில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது இவருக்கு தெரியவில்லையோ? இது விக்கினேஸ்வரன் ரணிலுக்கு வாக்களித்த, தனக்கு கிடைக்காத  பதவி அவருக்கு கிடைத்து விடப்போகிறதே என்கிற கடுப்பில், ஏதோ தாங்கள் பெரிய சாதனை செய்ததுபோல உளறுறார்.  இவர்களுக்குள்ளேயே ரணிலுக்கு, காசுக்காக வாக்களித்தவர்கள் இருக்கிறார்கள்  என்பது தெரியாத மாதிரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் என்று பிணாத்துறார். த .தே. கூட்டமைப்பு ஏகமானதாய் எடுத்த தீர்மானங்களை எத்தனை தடவை இவர் மறுதலித்து, இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து, கூட்டணியின் கருத்தல்ல என்று மறுப்பறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பது இவருக்கு மறந்து போச்சு.                

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்காக போட்ட ஒப்பந்தம் என்கிறார்களே!🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?

அதுதானே

தீர்க்கதரிசியல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் முழங்கித் தள்ளும் சாணக்கியன்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தில் முழங்கித் தள்ளும் சாணக்கியன்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

 பிறகு மாற்றியடிக்க உதவியாக இருக்கும். ஏற்கெனவே ரணிலோட தகராறு இது வேற!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தில் முழங்கித் தள்ளும் சாணக்கியன்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

Expand  

 பிறகு மாற்றியடிக்க உதவியாக இருக்கும். ஏற்கெனவே ரணிலோட தகராறு இது வேற

இதில் என்ன தான் சொல்லுகிறார் என்றால் ஒருதரும் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லியோ?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.