Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனிய தானிய ஏற்றுமதி - உருவாகியது ஒப்பந்தம் - என்கிறது துருக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாராம்சம்:

உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதியை கடல் போக்குவர்த்து மூலம் செய்ய ஏதுவாகும் வகையில் துருக்கி, ரஸ்யா, உக்ரேன் இடையே ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக துருக்கி அறிவிப்பு.

தானிய கப்பல்களை உக்ரேனிய படைகள் துறைமுகங்களுக்கு, கடற்கண்ணிகளை தாண்டி அழைத்து சென்று வரும் எனவும்,  தானிய கப்பல்கள் போகும் பொழுதில் ரஸ்யா யுத்த நிறுத்தத்தை கைக்கொள்ளும் எனவும்,ஆயுத கடத்தலை தடுக்கும்படி  கப்பல்களை துருக்கி சோதிக்கும் எனவும் முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.

https://www.bbc.co.uk/news/world-europe-62254597

  • Replies 106
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது!

உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

‘கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், உக்ரைன், ரஷ்யாவுடன் நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இரு தரப்பினரும் இஸ்தான்புல்லில் நடந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால் ஒரே மேசையில் அமரவில்லை.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முதலில் ரஷ்யாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதைத் தொடர்ந்து உக்ரைனிய உட்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் உக்ரைனின் ஒத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் அடைய இரண்டு மாதங்கள் எடுத்தது. இது 120 நாட்களுக்கு நீடிக்கும். இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் புதுப்பிக்க முடியும்.

இதற்காக, இஸ்தான்புல்லில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு மையம் நிறுவப்பட உள்ளது, ஐ.நா., துருக்கிய, ரஷ்ய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளால் இது இயக்கப்படும்.

https://athavannews.com/2022/1292071

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உலக உணவு நெருக்கடி தீரும் சாத்தியம்: ரஷ்யாவுடன் உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்!

கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளன.

உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம், தானிய ஏற்றுமதியைத் தடுப்பதற்கான மற்றொரு ஐ.நா. தலைமையிலான பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை துருக்கியில்) நடைபெறும் என்று உறுதிப்படுத்தியது. மேலும் ஒரு ஆவணம் கையொப்பமிடப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு நெருக்கமான உக்ரைனிய நாடாளுமன்ற ஒருவர், இந்த ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குரல் கொடுத்தார்.

ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வரவேற்றது. ஆனால் அதை செயற்படுத்துவதற்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியது.

‘நாம் முதலில் இந்த நிலையில் இருந்திருக்கக் கூடாது. இது ரஷ்யன் கூட்டமைப்பு வேண்டுமென்றே உணவை ஆயுதமாக்குவதற்கு எடுத்த முடிவு’ என்று திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.

இந்த திட்டத்தில், உக்ரைனிய கப்பல்கள் தானியக் கப்பல்களை துறைமுக நீர் வழியாக உள்ளேயும் வெளியேயும் வழிநடத்துகின்றன, ஏற்றுமதி நகரும் போது ரஷ்யா ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கிறது, துருக்கி – ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆயுதக் கடத்தல் குறித்த ரஷ்ய அச்சத்தைப் போக்க கப்பல்களை ஆய்வு செய்கிறது. கருங்கடல் வழியாக தானியங்கள் மற்றும் உரங்களை ரஷ்ய ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

https://athavannews.com/2022/1292002

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானிய ஒப்பந்தம் கைச்சாத்தான மை காயமுன்னம், ஒப்பந்தபடி ஏற்றுமதிக்கு திறந்து விடப்படும் என கருதப்பட்ட ஓடிசா துறைமுகத்தை மிசைல் மூலம் தாக்கியது ரஸ்யா!

https://www.ndtv.com/world-news/russian-missiles-strike-ukraines-odessa-port-key-to-grain-deal-3186385/amp/1

டிஸ்கி.

இந்த unpredictable அரை லூஸ் மனிதனின் வாக்குறுதிகளை (புட்டின்) நம்பி நேட்டோ விலகி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால், நிச்சயம் அது ரஸ்யா படைகள் பரிசுக்குள் புகுவதில்தான் முடியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கடந்த 30 வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்த மனிதனை உங்கள் கூற்றுப்படி unpredictable ஆக மாற்றியது எது என்று கோசான் கூறப்போவதில்லை என்பது எனக்குத்  தெரியும். 😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

தானிய ஒப்பந்தம் கைச்சாத்தான மை காயமுன்னம், ஒப்பந்தபடி ஏற்றுமதிக்கு திறந்து விடப்படும் என கருதப்பட்ட ஓடிசா துறைமுகத்தை மிசைல் மூலம் தாக்கியது ரஸ்யா!

https://www.ndtv.com/world-news/russian-missiles-strike-ukraines-odessa-port-key-to-grain-deal-3186385/amp/1

டிஸ்கி.

இந்த unpredictable அரை லூஸ் மனிதனின் வாக்குறுதிகளை (புட்டின்) நம்பி நேட்டோ விலகி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால், நிச்சயம் அது ரஸ்யா படைகள் பரிசுக்குள் புகுவதில்தான் முடியும்.

இதை உக்ரேனும் தனக்குத்தானே செய்திருக்கலாம் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்படித்தான் யூகம் வெளியிடப்பட்டுவருகிறது. UN ன் கண்டனத்தைப் பதொவு செய்வதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.. 

ரஸ்யாவை எல்லா விதத்திலும் குரூரமானதாகக் காட்ட வேண்டிய தேவை உக்ரேனை விட மேற்குலகிற்கு அதிகம் இருக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

கடந்த 30 வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்த மனிதனை உங்கள் கூற்றுப்படி unpredictable ஆக மாற்றியது எது என்று கோசான் கூறப்போவதில்லை என்பது எனக்குத்  தெரியும். 😉

30  வருடமாக அவர் பிரச்சனை இல்லாமல் இருந்தார் என்பதில் இருந்தே நீங்கள் எந்தளவுக்கு ரஸ்ய narrative ற்கு உள்வாங்கபட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது கற்ப்ஸ்.

புட்டின் அதிபரானது 2000ம் ஆண்டு. 

இடையில் 8 வருடம் மேட்வெடேவ்வை பொம்மை அதிபராக்கி தான் பிரதமராக இருந்து நாட்டை இயக்கினார். மொத்தம் 22 வருடங்கள் அதிகாரத்தை கையில் வைத்துள்ளார்.

இதில் 

2000-2009 - 9 வருடங்கள்.

இலங்கையில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு நிகராக செச்னியாவில் கொடுமைகளை நிகழ்த்தி - அங்கே நிகழ்ந்த பிரிவினை போராட்டத்தை அடக்கினார்.

2008 இல் ஜோர்ஜியாவுக்கு படைகளை அனுப்பி, யுத்தம் செய்து - ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான அபகஷியாவை தனிநாடு என அறிவித்தார்.

அதே 2008ம் ஆண்டு ஜோர்ஜியாவுக்கு படைகளை அனுப்பி, யுத்தம் செய்து - ஜோர்ஜியாவின் இன்னும் ஒரு பகுதியான தெற்கு ஒசேசியாவை தனிநாடு என அறிவித்தார். 

2012 இல் இருந்து உக்ரேனில் இராணுவ ரீதியில் தலையிட்டு 2014 இல் கிரிமியாவை அபகரித்தார்.

(இங்கே சிரியா ஐரோப்பாவில் இல்லை என்பதால் அதை தவிர்கிறேன்).

புட்டின் ஒரு போதும் அமைதியை விரும்பியவர் அல்ல. அவர் ஒரு முன்னாள் KGB ஏஜெண்ட். 1990 இல் ரஸ்யா அவமானகரமாக தோற்றது. ரஸ்யா மீளவும் ஷார் சாம்ராஜ்யம் போல எழவேண்டும். ரஸ்யாவை சூழ உள்ள தேசிய நாடுகள் (nation states) நாடுகளே அல்ல அவை ரஸ்யாவின் அடிமைதேசங்கள் என்பதே புட்டினின் கொள்கை.

தனது 22 வருடத்தில் முதல் 10 வருடம் மேற்க்கோடு புட்டின் நட்போடு இருப்பது போல நடித்தது - to buy time.

ஹிட்லரும் இதே போலவே ஆரம்பத்தில் ரஸ்யாவுடன் நட்பும், சேம்பர்லீனுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

ஆகவே 22 வருடமாக தனது சாம்ராஜ்ய கனவை படிபடியாக அமல்படுத்த முனைகிறார் புட்டின் அதில் பத்து வருடம் சாம, பேத, தானத்தையும் அடுத்த 12 வருடம் தண்டத்தையும் உத்தியாக கையில் எடுத்துள்ளார் என்பதே உண்மை.

அடுத்து காரணத்தை பார்ப்போம்

நேட்டோ விஸ்தரிப்பு என்பதைதான் நீங்கள் நான் சொல்ல மாட்டேன் என குழந்தைபிள்ளைதனமாக எழுதியதாக கருதுகிறேன்.

நேட்டோ விஸ்தரிப்பு  ஒன்றும் வலுகட்டாயமாக நடக்கவில்லை. ஒவ்வொரு நாடும் அருகில் இருக்கும் ரஸ்யாவை விட சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அமெரிகாவை ஒப்பீட்டளவில் நம்புவதே நேட்டோ விஸ்தரிக்கபட காரணம்.

1991 இல் போலந்தை போல உடனேயே நேட்டோவில் இணையாமல் - ரஸ்யாவை நம்பி நடுநிலை எடுத்ததன் விழைவை ஜோர்ஜியாவும், உக்ரேனும் இப்போ அனுபவிக்கிறன.

இந்த நிலை தமக்கு வரக்கூடாது என பின்லாந்தும், சுவீடனும் முந்தி கொள்கிறன.

ஒரு கணம் யோசியுங்கள் - ரஸ்யாவை சூழ உள்ள அத்தனை ஐரோப்பிய நாடும் ஏன் ரஸ்யாவுக்கு எதிரான கூட்டணியில் சேர்கிறது?

நேட்டோ விஸ்தரிப்பின் மிக முக்கிய காரணி அமெரிக்கா அல்ல, ரஸ்யாவும் அதன் அயல்நாடுகளை கபளீகரம் செய்யும் போக்குமே.

ஆகவே நேட்டோ விஸ்தரிப்புக்கும், உக்ரேன் யுத்தத்துக்கும் அடிப்படை காரணம் புட்டினின் தான்மையும், சாம்ராஜ்ய கனவுமே. இப்போ வயது போக புட்டினுக்கு மேலும் பிடிவாதமும், அறளைகுணம், சின்னபிள்ளைதனங்கள் மேலும் கூடி அதுவும் பிரதிபலிக்கிறது. அதனால் முன்னர் போல இன்றி இப்போ மிகவும் unpredictable ஆக இருக்கிறார்.

ஆனால் இதை உங்கள் போன்றவர்கள் ஏற்க போவதில்லை.

அன்றும் கிட்லர் பாவம் அவரை unpredictable யுத்த வெறியன் ஆக்கியது யூதர்களே என சொன்னவர்கள் உண்டு. அவர்களை Hitler apologists (ஹிட்லருக்கு நியாயம் தேடுபவர்களென்பார்கள்). அதை போல உங்கள் போன்றவர்கள் Putin apologists.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதை உக்ரேனும் தனக்குத்தானே செய்திருக்கலாம் எல்லோ?

ஒரு பெற்றதாய் மகனின் குறைகளை மறைக்க அடுத்த வீட்டு பிள்ளையை சாட்டுவது போல, புட்டினுக்கு கவர் எடுக்கிறியள் பாருங்கோ அண்ணை

இதைத்தான்👇👆 அண்ணை சொல்லுவது being a Putin apologist எண்டு.

நீங்கள் விபரம்பல அறிந்த ஜேர்மன்காரர் - holocaust denial என்பதை கட்டாயம் தெரிந்து இருப்பீர்கள். அதே மனநிலைதான் இதுவும்.

விடுதலை புலிகள் செஞ்சோலையில் முகாம் நடதினார்கள் என அன்று பல படித்த சிங்களவர்கள் கூறியதும் இதே மனநிலையால்தான்.

46 minutes ago, Kapithan said:

அப்படித்தான் யூகம் வெளியிடப்பட்டுவருகிறது. UN ன் கண்டனத்தைப் பதொவு செய்வதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.. 

ரஸ்யாவை எல்லா விதத்திலும் குரூரமானதாகக் காட்ட வேண்டிய தேவை உக்ரேனை விட மேற்குலகிற்கு அதிகம் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

30  வருடமாக அவர் பிரச்சனை இல்லாமல் இருந்தார் என்பதில் இருந்தே நீங்கள் எந்தளவுக்கு ரஸ்ய narrative ற்கு உள்வாங்கபட்டுள்ளீர்கள் என்பது புரிகிறது கற்ப்ஸ்.

புட்டின் அதிபரானது 2000ம் ஆண்டு. 

இடையில் 8 வருடம் மேட்வெடேவ்வை பொம்மை அதிபராக்கி தான் பிரதமராக இருந்து நாட்டை இயக்கினார். மொத்தம் 22 வருடங்கள் அதிகாரத்தை கையில் வைத்துள்ளார்.

இதில் 

2000-2009 - 9 வருடங்கள்.

இலங்கையில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு நிகராக செச்னியாவில் கொடுமைகளை நிகழ்த்தி - அங்கே நிகழ்ந்த பிரிவினை போராட்டத்தை அடக்கினார்.

2008 இல் ஜோர்ஜியாவுக்கு படைகளை அனுப்பி, யுத்தம் செய்து - ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான அபகஷியாவை தனிநாடு என அறிவித்தார்.

அதே 2008ம் ஆண்டு ஜோர்ஜியாவுக்கு படைகளை அனுப்பி, யுத்தம் செய்து - ஜோர்ஜியாவின் இன்னும் ஒரு பகுதியான தெற்கு ஒசேசியாவை தனிநாடு என அறிவித்தார். 

2012 இல் இருந்து உக்ரேனில் இராணுவ ரீதியில் தலையிட்டு 2014 இல் கிரிமியாவை அபகரித்தார்.

(இங்கே சிரியா ஐரோப்பாவில் இல்லை என்பதால் அதை தவிர்கிறேன்).

புட்டின் ஒரு போதும் அமைதியை விரும்பியவர் அல்ல. அவர் ஒரு முன்னாள் KGB ஏஜெண்ட். 1990 இல் ரஸ்யா அவமானகரமாக தோற்றது. ரஸ்யா மீளவும் ஷார் சாம்ராஜ்யம் போல எழவேண்டும். ரஸ்யாவை சூழ உள்ள தேசிய நாடுகள் (nation states) நாடுகளே அல்ல அவை ரஸ்யாவின் அடிமைதேசங்கள் என்பதே புட்டினின் கொள்கை.

தனது 22 வருடத்தில் முதல் 10 வருடம் மேற்க்கோடு புட்டின் நட்போடு இருப்பது போல நடித்தது - to buy time.

ஹிட்லரும் இதே போலவே ஆரம்பத்தில் ரஸ்யாவுடன் நட்பும், சேம்பர்லீனுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

ஆகவே 22 வருடமாக தனது சாம்ராஜ்ய கனவை படிபடியாக அமல்படுத்த முனைகிறார் புட்டின் அதில் பத்து வருடம் சாம, பேத, தானத்தையும் அடுத்த 12 வருடம் தண்டத்தையும் உத்தியாக கையில் எடுத்துள்ளார் என்பதே உண்மை.

அடுத்து காரணத்தை பார்ப்போம்

நேட்டோ விஸ்தரிப்பு என்பதைதான் நீங்கள் நான் சொல்ல மாட்டேன் என குழந்தைபிள்ளைதனமாக எழுதியதாக கருதுகிறேன்.

நேட்டோ விஸ்தரிப்பு  ஒன்றும் வலுகட்டாயமாக நடக்கவில்லை. ஒவ்வொரு நாடும் அருகில் இருக்கும் ரஸ்யாவை விட சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அமெரிகாவை ஒப்பீட்டளவில் நம்புவதே நேட்டோ விஸ்தரிக்கபட காரணம்.

1991 இல் போலந்தை போல உடனேயே நேட்டோவில் இணையாமல் - ரஸ்யாவை நம்பி நடுநிலை எடுத்ததன் விழைவை ஜோர்ஜியாவும், உக்ரேனும் இப்போ அனுபவிக்கிறன.

இந்த நிலை தமக்கு வரக்கூடாது என பின்லாந்தும், சுவீடனும் முந்தி கொள்கிறன.

ஒரு கணம் யோசியுங்கள் - ரஸ்யாவை சூழ உள்ள அத்தனை ஐரோப்பிய நாடும் ஏன் ரஸ்யாவுக்கு எதிரான கூட்டணியில் சேர்கிறது?

நேட்டோ விஸ்தரிப்பின் மிக முக்கிய காரணி அமெரிக்கா அல்ல, ரஸ்யாவும் அதன் அயல்நாடுகளை கபளீகரம் செய்யும் போக்குமே.

ஆகவே நேட்டோ விஸ்தரிப்புக்கும், உக்ரேன் யுத்தத்துக்கும் அடிப்படை காரணம் புட்டினின் தான்மையும், சாம்ராஜ்ய கனவுமே. இப்போ வயது போக புட்டினுக்கு மேலும் பிடிவாதமும், அறளைகுணம், சின்னபிள்ளைதனங்கள் மேலும் கூடி அதுவும் பிரதிபலிக்கிறது. அதனால் முன்னர் போல இன்றி இப்போ மிகவும் unpredictable ஆக இருக்கிறார்.

ஆனால் இதை உங்கள் போன்றவர்கள் ஏற்க போவதில்லை.

அன்றும் கிட்லர் பாவம் அவரை unpredictable யுத்த வெறியன் ஆக்கியது யூதர்களே என சொன்னவர்கள் உண்டு. அவர்களை Hitler apologists (ஹிட்லருக்கு நியாயம் தேடுபவர்களென்பார்கள்). அதை போல உங்கள் போன்றவர்கள் Putin apologists.

திரும்பவும் முதலிலிருந்தா 🤦🏼‍♂️ பெயின்ற் வாளியோடதான் திரிகிறீர்கள் கோசான். 

முதலில் பெயின்ற் அடிப்பதை நிறுத்துங்கோ. 

இந்த உக்ரேன்  ரஸ்ய யுத்தத்தில் நீங்கள் ஒருபக்கம் சார்பாக மட்டுமே பிரச்சாரம் செய்கிறீர்கள் என்பதை கவனிக்கவில்லையோ ? 

Liss Truss இடத்தை பிடித்துவிட்டீர்கள் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

கருத்து பஞ்சம் இங்கேதான் கொண்டு வந்து விடும் என்பது எதிர்பார்ததே🤣.

கூல் டவுன் கற்ப்ஸ்😆

நன்றி வணக்கம்🙏

பிகு

நான் பல திரிகளில் இதில் நேட்டோவின் நரி வேலை என்ன, அமெரிக்கா எப்படி சிண்டு முடிகிறது, துருக்கி எப்படி இடையால ஓடுகிறது, செலன்ஸ்கியின் வாய்துடுக்கு என பலதையும் விமர்சித்துள்ளேன்.

ஆகவே “புட்டினே தெய்வம், ஆதார தீபம்” என்பவர்கள் போல் நான் மேற்கின் ஊதுகுழலாக எழுதவில்லை. ஆனால் எந்த பிணக்கிலும் இரு தரப்பு நியாயம் இருக்கும்.

நான் இங்கே எழுதியது ரஸ்யாவை சூழ உள்ள சிறிய தேசிய இன தேசங்களின் தரப்பு நியாயத்தை எண்டு வேணும் எண்டால் சொல்லலாம்.

# பெயிண்ட் அடிப்பவருக்கு சேறு அடிப்பவர் 😆

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வாயை வைத்திருந்தால் எண்ணை விலையாவது குறைந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

கருத்துப் பஞ்சம் அல்ல கோசான்.

நேரமின்மை. தொடர்ச்சியான வேலை. கொவிட் தொற்றின் பின்னர் முன்புபோல உடல்நிலை இல்லை. அதிக சோர்வு. தளர்ச்சி. மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது இடையிடையே கிறுக்குகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

சும்மா வாயை வைத்திருந்தால் எண்ணை விலையாவது குறைந்திருக்கும்.

எண்ணை விலைக்கு என்ன நடந்தது என்பது கீழே.

https://www.hl.co.uk/shares/trading-commodities/brent-crude-oil

இந்த செய்திதளம் RAW வினது என்கிறார்கள் உண்மையா?

செய்திகள் அநேகம் ஐயர்தான் அடுத்த நாட்டாமை என்ற தொனியிலேயே இருக்கும்.

4 minutes ago, Kapithan said:

கருத்துப் பஞ்சம் அல்ல கோசான்.

நேரமின்மை. தொடர்ச்சியான வேலை. கொவிட் தொற்றின் பின்னர் முன்புபோல உடல்நிலை இல்லை. அதிக சோர்வு. தளர்ச்சி. மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது இடையிடையே கிறுக்குகிறேன். 

சந்திப்போம் கற்ப்ஸ். கொவிட் களைப்பை அப்படியே விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சக்தியை மீள பெறுங்கள்.

எனக்கும் கொவிட்டின் பின் கவனம் சிதறுவது போல ஒரு உணர்வு. அடிக்கடி quiz, puzzles etc செய்கிறேன். memory games உம். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

எண்ணை விலைக்கு என்ன நடந்தது என்பது கீழே.

https://www.hl.co.uk/shares/trading-commodities/brent-crude-oil

இந்த செய்திதளம் RAW வினது என்கிறார்கள் உண்மையா?

செய்திகள் அநேகம் ஐயர்தான் அடுத்த நாட்டாமை என்ற தொனியிலேயே இருக்கும்.

சந்திப்போம் கற்ப்ஸ். கொவிட் களைப்பை அப்படியே விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சக்தியை மீள பெறுங்கள்.

எனக்கும் கொவிட்டின் பின் கவனம் சிதறுவது போல ஒரு உணர்வு. அடிக்கடி quiz, puzzles etc செய்கிறேன். memory games உம். 

அந்த செய்தித் தளம்  RAW வினது என்பது உண்மை. தென்னாசியா, தென்Kழக்காசியா வை இலக்கு வைத்துச் செயற்படுகிறது.

முக்கியமாக, சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள்தான் இலக்கு. 

Dekan Herald என்றொரு பத்திரிகை  அது RAW மட்டும்தான்  நடாத்துகிறது. அந்தப் பத்திரிகையுடன் எம் ஆட்களும் தொடர்புபட்டுள்ளனர். 

https://fb.watch/b7x0dhH3B5/

முடிந்தால் அந்த video  வை இங்கே இணைத்துவிடுங்கள். நான் கைபேசியை மட்டுமே யாழ் களத்திற்குப் பாவிப்பதால் என்னால் விரும்பியபடி எதனையும் இணைக்க முடிவதில்லை. 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

தகவலுக்கு நன்றி. நானும் கைபேசிதான். உங்கள் லிங்கை தட்டினால் பகாவன் சிங்கின் வீடியோ தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

2008 இல் ஜோர்ஜியாவுக்கு படைகளை அனுப்பி, யுத்தம் செய்து - ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான அபகஷியாவை தனிநாடு என அறிவித்தார்.

அதே 2008ம் ஆண்டு ஜோர்ஜியாவுக்கு படைகளை அனுப்பி, யுத்தம் செய்து - ஜோர்ஜியாவின் இன்னும் ஒரு பகுதியான தெற்கு ஒசேசியாவை தனிநாடு என அறிவித்தார். 

இங்கே சிறிய சிறிய கிராமங்களை எல்லாம் தனிநாடாக அறிவிக்கிறார்.    எங்கள் தமிழ்ஈழத்தையும்  தனிநாடாக அறிவித்தல்..புடின். உக்ரேனை முழுமையாக அளித்தலும். அது ரொம்ப சரி என்று சொல்லுவோம் இல்லையா?.  

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி. நானும் கைபேசிதான். உங்கள் லிங்கை தட்டினால் பகாவன் சிங்கின் வீடியோ தெரிகிறது.

இவரேதான் அவர், அவரேதான் இவர்.

இவரது இரண்டாவது மனைவி இலங்கை, வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். 

கனடாவிலும் நம்மாட்களுடன்  ஏராளமான தொடர்புகள். அடிக்கடி கள விஜயம் மேற்கொள்வார. 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

இங்கே சிறிய சிறிய கிராமங்களை எல்லாம் தனிநாடாக அறிவிக்கிறார்.    எங்கள் தமிழ்ஈழத்தையும்  தனிநாடாக அறிவித்தல்..புடின். உக்ரேனை முழுமையாக அளித்தலும். அது ரொம்ப சரி என்று சொல்லுவோம் இல்லையா?.  

முன்பே சொல்லியுள்ளேன் அண்ணை, தர்மமான வெளிநாட்டு கொள்கை என்று எதுவும் இல்லை. எல்லாமும் தன்னல அடிப்படைதான். புட்டின் அப்படி அறிவித்தால், உக்ரேனையும் மேற்க்கையும் தூக்கி குப்பையில் போட்டு விட்டு, ஒவ்வொரு வைரவர் கோவிலிலும் வைரவத்தூக்கி போட்ட்டு, புட்டினை பிரதிஸ்டை பண்ணி, வடமாலையும் சாத்துவோம்🤣.

ஆனால் அவர் எப்போதும் ஐநா சபையில் இலங்கையை காத்து நிண்ட, நிற்கிற காவல் தெய்யோ. போன கிழமை கூட இது உள்நாட்டு அலுவல் என ஒதுங்கி கொண்டார்.

ஆகவே அவர்கள்தான் அவருக்கு புட்டின் சரணம் கச்சாமி, செலன்ஸ்கி வீட்டில ரெட் ஆமி எண்டு பிரித் ஓத வேணும்😆.

37 minutes ago, Kapithan said:

இவரேதான் அவர், அவரேதான் இவர்.

இவரது இரண்டாவது மனைவி இலங்கை, வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். 

கனடாவிலும் நம்மாட்களுடன்  ஏராளமான தொடர்புகள். அடிக்கடி கள விஜயம் மேற்கொள்வார. 

இது எனக்கு புதிசு. நன்றி.

ஒருக்கால் என்ர வேலணை ஒற்றரிடம் கேட்கத்தான் இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இங்கே சிறிய சிறிய கிராமங்களை எல்லாம் தனிநாடாக அறிவிக்கிறார்.    எங்கள் தமிழ்ஈழத்தையும்  தனிநாடாக அறிவித்தல்..புடின். உக்ரேனை முழுமையாக அளித்தலும். அது ரொம்ப சரி என்று சொல்லுவோம் இல்லையா?.   

கந்தையா அண்ணா, புடின் ஸ்ரீலங்கா அரசை உறுதியாக ஆதரிக்கிறார். ஆனால் மேற்குலகநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்களோ உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிப்பது சரியானது , உக்ரேன் ரஷ்யாவுக்கு சொந்தமானது  புரின் ஒரு பாவம்  என்று அல்லவா சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைரவருக்கு பதில் பைடன், பொறிஸ் போன்ற தெய்வங்களையும்  சிலர் வணங்குகிறார்கள்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, kalyani said:

வைரவருக்கு பதில் பைடன், பொறிஸ் போன்ற தெய்வங்களையும்  சிலர் வணங்குகிறார்கள்.🤣

zip wire இல் தொங்கிய முட்டாபீசு பொரிசையும், சைக்கிள் ஓடி கவிழ்ந்த மொக்கபீசு பைடனையும் வணங்குபவர்கள் என்றால் அவர்கள் புட்டினை வணங்குவோர் அளவுக்கு மூளை பிசகியோராகத்தான் இருக்க வேண்டும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இதை உக்ரேனும் தனக்குத்தானே செய்திருக்கலாம் எல்லோ?

ஒடிசா துறைமுகத்தில் தாமே தாக்குதல் நடத்தியதாக ஒப்பு கொண்டது ரஸ்யா.

https://www.aljazeera.com/amp/news/liveblog/2022/7/23/russia-ukraine-live-news-no-deals-with-moscow-kyiv-says

இது ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்த துருக்கியின் முகத்தில் கரி பூசும் செயல்.

துருக்கியை ரஸ்யா ஆக கடுப்பாகினால் இஸ்தான்புல் ஊடான போக்குவரத்தில் துருக்கி கைவைத்தால் - ரஸ்யாவுக்கு மூச்சு முட்டும்.

19 hours ago, Kapithan said:

அப்படித்தான் யூகம் வெளியிடப்பட்டுவருகிறது. UN ன் கண்டனத்தைப் பதொவு செய்வதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.. 

ரஸ்யாவை எல்லா விதத்திலும் குரூரமானதாகக் காட்ட வேண்டிய தேவை உக்ரேனை விட மேற்குலகிற்கு அதிகம் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
24 Jul, 2022 10:12 
 
Moscow reveals target of strike on key Ukrainian port

A military vessel and a stockpile of Harpoon missiles were hit during Saturday’s attack, the defense ministry has said
 
©  Russian Defense Ministry

The Russian Ministry of Defense has confirmed striking targets in the major Ukrainian port of Odessa on Saturday, revealing that its missiles hit military infrastructure and arms stockpiles.

“In the seaport of Odessa, on the territory of a shipyard, a docked Ukrainian warship and a warehouse of Harpoon anti-ship missiles, supplied by the US to the Kiev regime, have been destroyed by sea-based high-precision long-range missiles,” the ministry said on Sunday.

The attack also crippled a repair facility where vessels of the Ukrainian navy have been fixed, it added.

The strike on the target in Odessa, which is a major trade hub in the southwest of Ukraine, came a day after the signing of a UN-brokered deal to unblock grain exports from Ukrainian ports.

During the conflict that has been underway since February 24, Moscow has insisted that its troops only fire at Ukrainian forces and military infrastructure, not civilian facilities.

https://www.rt.com/russia/559553-odessa-port-grain-ukraine/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நடந்தது (facts)

1. ஒடிசாவில் இருந்து தானிய ஏற்றுமதி செய்வோம்.

ம்கப்பல்களை துறைமுகத்துள்/வெளியே உக்ரேன் escort பண்ணும்.

கப்பல்கள் வரும் போது இருபகுதியும் அந்த பகுதியில் போரை நிறுத்தும்.

கப்ப்லகள் ஆயுதம் கடத்தவில்லை என துருக்கி சோதிக்கும்.

2. ஒப்பந்தம் எழுதி 2 மணியுள் ரஸ்யா ஒடிசா துறைமுகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.

RT யின் ரஸ்யக் கதையாடல் ( RT’s Russian narrative)

துறைமுகத்தில் நின்ற உக்ரேனிய இராணுவ இலக்கினையே தாக்கினோம்.

ரஸ்யக் கதையாடலை கையிறு விழுங்காமல், சுயமாக சிந்திக்க வேண்டியது

1. இதை ஏன் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முதலில் தாக்கவில்லை?

2. தாக்குவதற்கு வேறு இராணுவ இலக்குகள் இல்லையா?

3. அப்படி உக்ரேனின் மிக முக்கிய இராணுவ சாதனங்கள் உள்ள துறைமுகம் என்றால் - ரஸ்யா ஏன் அவை விலக்கி கொள்ளபடும் வரை ஒப்பந்தம் செய்யாமாட்டோம் என சொல்லவில்லை?

முடிவு

ரஸ்யா மீண்டும் ஒரு தடவை சீண்டி பார்க்கும் (இங்கே சீண்டல் துருக்கி அதிபருக்கு - புட்டினை காக்க வைத்தமைக்கு பதிலாக இருக்கலாம்) சில்லறைதனத்தை செய்கிறது.

இராஜதந்திரத்தில் statesmanship, brinkmanship  என இரு சொல்லாடல்கள் உள்ளன.

பிரச்சனைகளை இராஜதந்திரமாக கையாள்வது statesmanship- துருக்கி அதிபர் பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்கும் படலத்தில் நடந்து கொண்ட முறை இதுக்கு நல்ல உதாரணம்.

மாறாக ஒரு பிரச்சனையை மேலும் பூதாகரமாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட முனைவது, அதாவது பிரச்சனையை விளிம்புக்கு (brink) கொண்டு போய் வைப்பது, brinkmanship.

பூட்டின் brinkmanship மட்டுமே செய்ய தெரிந்தவர். கூடவே அவருக்கு இருக்கும் சில்லறை விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு. இவைதான் இந்த தாக்குதலின் காரணங்கள்.

பிகு

narrative கதையாடலுக்கு - இன்னுமொரு நல்ல உதாரணம். முள்ளிவாய்காலில் யுத்த சூனிய பகுதி என அறிவித்த பகுதி மீதே தாக்குதல் நடத்தி விட்டு அங்கே புலிகளின் கட்டளையிடும் தலைமை  இருந்தது என defence . lk எழுதியமை. 

https://dictionary.cambridge.org/dictionary/english/statesmanship

https://en.m.wikipedia.org/wiki/Brinkmanship

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.