Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லலிதாவின் கதை!

Featured Replies

எமது தளத்தில் வெளிவந்த "ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்" என்ற கட்டுரை குறித்து பல தரப்பிடம் இருந்து நேரடியாகவும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பலவிதமான கருத்துக்கள் வந்தன. அதில் பெரும்பாலான கருத்துக்கள் டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றி வரும் அபிராமியை பற்றியதாக இருந்தது.

அபிராமியைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை தொடர்ந்தும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பாராட்டுக்களும் வந்தன. நடமாடும் தெய்வத்தை தவறாகப் பேசாதீர்கள் என்று கண்டனங்களும் வந்தன. அத்துடன் அபிராமி பற்றி மேலும் அறிந்து கொள்கின்ற ஆவலும் பலரிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அவர்களுடைய ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக டென்மார்க் அபிராமி பற்றிய மேலும் சில விபரங்களை சேகரிக்க முனைந்தோம். அப்படிச் சேகரித்ததில் டென்மார்க் அபிராமி பற்றி சில ஆச்சரியமான தகவல்களும் கிடைத்தன.

டென்மார்க் அபிராமியின் உண்மையான பெயர் லலிதா என்பது பலருக்கு தெரியாத செய்தி. இந்த லலிதா ஈழத்திலே ஒரு இளம் பெண்ணாக இருந்த காலத்திலேயே உரு ஆடி குறி சொல்கின்ற தொழிலை செய்து வந்திருக்கின்றார்.

lalithaic9.jpg

லலிதா தன்னுடைய ஊராகிய ஏழாலையில் ஒரு சிறு குடிலை அமைத்து, அதில் ஒரு அம்மன் சிலையை வைத்து உரு ஆடி வந்திருக்கிறார். ஏழாலையில் வேறு பலரும் உரு ஆடுகின்று வேலையை செய்து வந்தார்கள். அதில் சிலர் மனம் பேதலித்து உரு ஆடுபவர்களாகவும், சிலர் அதை தொழிலாகவும் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஏழாலையில் பலர் உரு ஆடுவதால் லலிதா பற்றிய தகவல்களை பெறுவது மிகவும் கடினமாகப் போய்விட்டது. பலர் ஏழாலையில் உரு ஆடிய மற்றைய பெண்களை லலிதாவோடு போட்டு ஒன்றாக குழப்பினார்கள். லலிதாவின் தந்தை உரு ஆடிக் குறி சொல்பவர் என்று சிலர் உறுதியாகச் சொன்னார்கள். கடைசியில் அது லலிதாவின் தந்தை அல்ல என்று தெரிய வந்தது. ஏழாலையில் உரு ஆடிய வேறொரு பெண்ணின் தந்தையை லலிதாவின் தந்தை என்று மாற்றி நினைத்து தகவல் சொல்லி விட்டார்கள். இப்படி பல குழப்பங்களோடுதான் லலிதா பற்றி அறிய முடிந்தது.

இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் சேகரித்த உண்மையான தகவல்கள்தான் இனி வருபவை.

ஏழாலையில் லலிதாவின் தாயின் சகோதரியும் உரு ஆடுதல், பேயோட்டுதல் போன்ற தொழில்களை செய்கின்ற ஒருவராக இருந்தார். (பேயாட்டுகின்ற போது லலிதாவின் பெரியம்மா முழிக்கின்ற முழியைப் பார்த்ததன் பாதிப்புத்தான் இப்பொழுது டென்மார்க்கில் லலிதா அடிக்கடி கண்களை உருட்டி உருட்டி முழித்துப்பார்ப்பது.) பெண்கள் உரு ஆடி குறி சொல்கின்ற பொழுது அதிக வசூல் வருவதைக் கண்ட லலிதா தானும் உரு ஆடும் தொழிலில் களம் இறக்க முடிவு செய்தார்.

ஏழாலையில் பல சைவ ஆலயங்கள் உண்டு. அவற்றில் ஒரு அம்மன் கோவில் சற்றுப் பெரியது. அதை ஏழாலை மக்கள் "பெரிய அம்மன் கோவில்" என்று சொல்லி வணங்குவார்கள். அந்தக் கோவிலில் உள்ள அம்மனையும் "பெரிய அம்மன்" என்றுதான் சொல்வார்கள்.

இந்த இடத்தில்தான் லலிதாவின் மூளை வேலை செய்தது. கோயில் என்ற பெயரில் ஒரு சிறிய குடிலைப் போட்டுக் கொண்டு லலிதா தன்னை "சின்ன அம்மன்" என்று சொல்லிக் கொண்டு உரு ஆடத் தொடங்கினார். ஏழாலையில் உள்ள பெரும்பாலான மக்கள் லலிதாவை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அயலூர்களில் இருந்து சிலர் "சின்ன அம்மனிடம்" குறி கேட்கச் சென்றனர்.

lalitha4uz0.jpg

இன்றைக்கும் டென்மார்க்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் லலிதாவிடம் செல்வதில்லை. அயல் நாடுகளில் உள்ளவர்கள்தான் செல்கின்றனர். சொந்த நாடான ஈழத்தில் பிரேமானந்தாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அவரை கடவுள் என்று நம்பி பலர் ஏமாந்து போகவில்லையா? அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.

டென்மார்க்கிற்கு வந்த லலிதா உடனடியாக அபிராமி அவதாரம் எடுத்துவிடவில்லை. சிறிது காலம் மக்களை ஏமாற்றாமல் நல்ல ஒரு பெண்ணாக வாழ்ந்து வந்தார். ஆனால் பேராசை அவரை நீண்ட காலம் அப்படி இருக்க விடவில்லை. கிறிண்ட்ஸ்ரெட் என்ற நகரில் வாழ்ந்த லலிதாவும் அவருடைய கணவராகிய சிறிபாலனும் பிரண்டா என்ற நகருக்கு மாறி அங்கே ஒரு கோயிலை உருவாக்கினார்கள். இப்படித்தான் தாயகத்தில் சின்ன அம்மனாக இருந்த லலிதா டென்மார்க்கில் அபிராமியாக மாறினார்.

கிறிண்ட்ஸ்ரெட்டில் இருந்து பிரண்டாவிற்கு மாறியது பற்றி லலிதா பொய்யான கதை ஒன்றை பரப்பி வைத்திருக்கிறார். லலிதாவிற்கு திடீரென்று நோய் வந்து விட்டதாம். அம்மன் கனவில் வந்து தன்னை மறந்து போனதால்தான் இந்த நோய் வந்ததாக சொன்னாராம். அதன்பிறகு லலிதா ஊரில் வைத்து வழிபட்ட அம்மன் சிலையை தருவித்து பிரண்டாவில் தற்பொழுதுள்ள ஆலயத்தை உருவாக்கினாராம். இதுதான் லலிதா பரப்பியிருக்கின்ற கதை.

lalitha3vk6.jpg

ஆனால் கிறிண்ட்ஸ்ரெட்டில் உள்ள மக்கள் உண்மையைப் போட்டு உடைத்தார்கள். டென்மார்க்கில் இருக்கின்ற மக்களில் அதிகமானவர்கள் லலிதாவின் கோவிலுக்குப் போவதில்லை. அதிலும் கிறிண்ட்ஸ்ரெட்டில் உள்ள மக்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் லலிதாவின் கோயிலுக்கு செல்வதேயில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான பதிலில்தான் லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடிய காரணமும் இருக்கிறது.

லலிதாவின் கணவர் சிறிபாலன் கிறிண்ட்ஸ்ரெட்டில் செய்த அட்டாகசமே லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடியதன் காரணம். சிறிபாலன் அந்த நகரத்தில் கொண்டிருந்த தகாத உறவுகள் காரணமாக அங்குள்ள இளைஞர்களால் எச்சரித்து விரட்டப்பட்டார். (கண்ணியம் கருதி இது பற்றி விரிவாக எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறோம்) லலிதாவும் சிறிபாலனும் இளைஞர்களின் எச்சரிக்கைக்கு அஞ்சி பிரண்டாவிற்கு ஓடினார்களே தவிர, அம்மன் கனவில் வந்ததால் அல்ல.

பிரண்டாவிலே அமைக்கப்பட்ட ஆலயம் மக்கள் பணத்தில்தான் அமைக்கப்பட்டது. ஆனால் அதை தனது சொந்தப் பணத்தில் அமைத்ததாகத்தன் டென்மார்க்கின் ஊடகங்களுக்கு சொல்லி வருகிறார். மக்கள் தந்த பணத்தினால் அபிராமி என்கின்ற லலிதா பெரும் பணக்காரி ஆகிவிட்டார். ஒரு தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தை விலை கொடுத்து வாங்குகின்ற அளவிற்கு, ஐரோப்பாவில் இருக்கும் வருமானம் குறைந்த கோவில்களிற்கு சில அன்பளிப்புக்களை வழங்குகின்ற அளவிற்கு லலிதாவிடம் பணம் புரள்கின்றது.

லலிதாவின் ஆலயத்திலே நடக்கின்ற திருமணங்கள் பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. லலிதாவின் ஆலயத்திலே திருமணம் செய்பவர்கள் சம அந்தஸ்திலே இருக்க வேண்டுமாம். பொருளாதாரரீதியாகவும் அதை விட முக்கியமாக சாதிரீதியாகவும் சமமானவர்களாக இருக்க வேண்டுமாம். இதை லலிதா தரப்பினரே டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி வழங்குகின்ற போது சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த ஒரு பெண்ணை கடவுள் என்று எம்மவர்கள் சிலர் நம்புவது வெட்கப்பட வேண்டிய விடயம்.

ஆனால் ஐரோப்பாவில் வாழ்கின்ற குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள சில தமிழர்கள் லலிதாவை அம்மன் என்று நம்புகின்றார்கள். லலிதா தங்களுடைய நோய்களை தீர்த்து வைத்ததாக சொல்கின்றனர். இவைகள் உண்மையா? இது பற்றிய மேலதிக விபரங்களோடு அடுத்த வாரம் உங்களைச் சந்திக்கின்றோம்.

- நமது நிருபர்கள்

  • Replies 71
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லலிதாவின் ஆலயத்திலே நடக்கின்ற திருமணங்கள் பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. லலிதாவின் ஆலயத்திலே திருமணம் செய்பவர்கள் சம அந்தஸ்திலே இருக்க வேண்டுமாம். பொருளாதாரரீதியாகவும் அதை விட முக்கியமாக சாதிரீதியாகவும் சமமானவர்களாக இருக்க வேண்டுமாம். இதை லலிதா தரப்பினரே டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி வழங்குகின்ற போது சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த ஒரு பெண்ணை கடவுள் என்று எம்மவர்கள் சிலர் நம்புவது வெட்கப்பட வேண்டிய விடயம்.

இந்த விசயம் பற்றி அதிகம் தெரியாது ஆனாலும் திருமணங்கள் பற்றி தெரிவித்திருப்பது எதிர்க்க வேண்டியது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட போலிகளை வளரவிடுவதால் தான் உண்மைகள் அழிந்து போகின்றன. மக்கள் இப்படிப் பட்ட போலிச் சாமியார்கள் பற்றிச் சிநதிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லலிதா போன்ற பெண்கள் உலகத்தை ஏமாற்றி அகலக்கால் பதிக்குமளவிற்குப் பெரிய ஆளுமையுடையவர்களாயிருக்கமாட

Edited by karu

அம்மனைச் சொல்லிக்குறையில்லை அம்மனை நாடும் பக்தர்களைத்தான் குறைசொல்லவேண்டும். மூடநம்பிக்கை என்று அழிகின்றதோ அன்றுதான் விடிவுகாலம். எனது உறவினர் ஓருவர் அங்கு இருக்கின்றார். அவர் கூறினார் முன்பு இந்த லலிதா நன்றாக அசைவ உணவுகளை அருந்துவாராம். தகாத உறவுகள் குடிப்பழக்கம் என உலகில் உள்ள அத்தனை தீய பழக்கங்களின் அடிமைதான் இந்த பெண் **

  • கருத்துக்கள உறவுகள்

அம்மனைச் சொல்லிக்குறையில்லை அம்மனை நாடும் பக்தர்களைத்தான் குறைசொல்லவேண்டும். மூடநம்பிக்கை என்று அழிகின்றதோ அன்றுதான் விடிவுகாலம். எனது உறவினர் ஓருவர் அங்கு இருக்கின்றார். அவர் கூறினார் முன்பு இந்த லலிதா நன்றாக அசைவ உணவுகளை அருந்துவாராம். தகாத உறவுகள் குடிப்பழக்கம் என உலகில் உள்ள அத்தனை தீய பழக்கங்களின் அடிமைதான் இந்த பெண் **

காளிக்குக் கடாவெட்டிப் பலியிடுகிறோம். அம்மன் பிடித்த பெண் அசைவ உணவு உண்பதோ பெரிய விடயமாகப் படுகிறது. ஆடு மாடுகளைப்போல் கொத்தையும் குழையையும் தின்பதால் மனிதனுக்குத் தாவரபட்சணியென்ற (கேபிவொறஸ்) பெரிய பட்டத்தைத்தவிர வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் ஐரோப்பாவில் வாழ்கின்ற குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள சில தமிழர்கள் லலிதாவை அம்மன் என்று நம்புகின்றார்கள். லலிதா தங்களுடைய நோய்களை தீர்த்து வைத்ததாக சொல்கின்றனர். இவைகள் உண்மையா?

நம்மன்ட சனம் எப்ப தான் திருந்த போகிறதோ தெரியாது............. உதில வேற அம்மன் படத்தில தன்ட படத்தை வேற ஓட்டி இருக்கா............என்ன செய்யிறது கேட்கிறவன் கேணயனா இருந்தா எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுறது என்கிறது இதை தானா................ :P :lol: :P

அம்மன் படத்தில தன் படத்த ஒட்டினத பார்த்தா கில்லாடியா தான் இருப்பாங்க

தகவல் உண்மையோ, பொய்யோ

எனக்கு தெரியாது. ஆனால் பரணியின்

நிலைப்பாடுதான் எனக்கும்.

அம்மனைச் சொல்லிக்குறையில்லை அம்மனை நாடும் பக்தர்களைத்தான் குறைசொல்லவேண்டும். மூடநம்பிக்கை என்று அழிகின்றதோ அன்றுதான் விடிவுகாலம்.
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எத்தனையோ ஏமாற்றுப் பேர்வழிகள் எத்தனையோ வகைகளில் ஏமாற்றிக் கொண்டு தான் உள்ளனர். சிலர் ஏமாற்றிக் கொண்டு நல்ல பிள்ளைக்கும் நடித்துக் கொண்டும் உள்ளனர். அதையெல்லாம் உலகில் பேச வெளிக்கிட்டால் பலர் துண்டக் காணம் துணியக் காணம் என்றுதான் ஓட வேண்டி இருக்கும்.

தனிப்பட்ட முறையில் குறித்த பெண்ணை விமர்சிப்பதை தவிர்த்து.. தாந்தோன்றித்தனமாக அவர் செய்யும் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை தடுக்கனும்.

இந்து மதமோ.. சைவமோ.. உரு எடுத்து ஆடு... அம்மன் படத்தை வரைந்து அதில் முகத்தை ஒட்டு என்றோ.. மக்களை கடவுளின் பெயரால் வதை.. மக்களிடமிருந்து காசு பறி என்றோ எங்கும் சொல்லேல்ல.

எந்த மதமானாலும் உயர் மனித விழுமியங்களை பெறும் வகையிலேயே தங்கள் ஆழ்ந்த சிந்தனைகளை வெளியிடுகின்றன. ஆனால் மனிதர்கள் தான் இடையில் தங்களுக்கு ஏற்ற மாதிரி அவற்றை திரித்து அடுத்தவர்களை ஏமாற்றவும் அதைக் கொண்டு தாங்கள் பிழைப்பு நடத்தவும் பிரச்சாரம் நடத்தவும் அரசியல் நடத்தவும் செய்கின்றனர்.

இன்னும் சிலர் இவர்களைத் தூண்டி விட்டு.. இன்னொரு பகுதியால் இவர்களைக் கண்டிப்பத்துபோல கண்டித்துக் கொண்டு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். வியாபாரமும் செய்து கொள்கின்றனர். சிலர் அதனை வைத்து அரசியலும் செய்து கொள்கின்றனர்.

இதில் இந்தப் பெண் மட்டுமல்ல.. புலம்பெயர் நாடுகளில் ஆகம.. சைவ சித்தாந்த விதிகளுக்கு முரணாகத்தான் கோயில்கள் தொடங்கி.. அனைத்தும் காசு பார்க்கும் நோக்கில் நடத்தப்படுகின்றன. பெரிய மேடைப் பேச்சாளர்களும் காசு பார்க்கும் நோக்கில்.. இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

மதம் இன்று காசு உழைக்கும் மூலதனமாக மாற்றப்பட்டுள்ளது. அதையே இந்தப் பெண்ணும் செய்கின்றார். ஏன் நம்மூரில காதலை விலை பேசிக் கூட புலம்பெயர் தேசங்களுக்கு ஆட்கள் வரல்லையா..??! எல்லாம் சுயநலமிகுதிகளின் வெளிப்பாடு.

இப்பெண்ணை மட்டுமல்ல.. இப்படி பல்வேறு வகைகளில் பல்வேறு சுயநலத்தேவைகளை பூர்த்தி செய்ய என்று பல்வேறு வேடங்கள் அணிந்திருக்கும் அனைத்து மனிதர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் போது.. யாரும் யாருக்குப் பின்னாலும் ஒளிஞ்சிருக்க முடியாத நிலைதான் தோன்றும்.

எது எப்படியோ மக்களை மதத்தின் பெயரால் ஏமாற்றுவதை வன்மையாகக் கண்டிப்பது அவசியம். மக்களுக்கு இப்படியான போலிகளை இனங்காட்டுவதும் நல்லதே. இப்படியானவர்கள் அங்கு மட்டுமல்ல.. புலம்பெயர் நாடுகள் எங்கும் உள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்குப் பின்னாலும் இப்படிப் பல கதைகள் உண்டு. இவை எவையும் மத கோட்பாட்டியலை தழுவியவை அல்ல. முற்று முழுதாக மதத்துக்கு எதிரான செயல்கள். இவற்றை குறித்த அரசுகளுக்கு சான்றுகளோடு சுட்டிக்காட்டி கோயில்கள் உள்ளடங்க இப்படியான அனைத்துச் செயற்பாடுகளையும் மதத்தின் பெயரால் வியாபாரமாக்குதலை தடை செய்ய வேண்டும். அதுவே இப்படியான தவறானவர்களின் தவறான சிந்தனைகள் செயலுருவம் பெறுவதை தடுக்க சிறந்த வழிமுறை. :angry: ;)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை ஊரிலை இருக்கிற ஒருத்தர் சொன்னார் தான் டென்மார்க் அம்மனை குடும்பத்தோடை போய் தரிசித்துட்டு வந்தாப் பிறகுதான் தன்ரை மூண்டு பொம்புளைப்பிள்ளையளுக்கும் கலியாணப்பேச்சுக்கள் எல்லாம் சரி வந்துட்டுதாமே என்னப்பா ஒரு இழவும் விளங்குதில்லை :)

ஒருவர் நல்லாயிருந்தா பிரபல்யம் அடைந்த எங்கடை ஆக்களுக்கு பொறுக்காது வயித்தெரிச்சல் பத்திவிடும். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி குற்றம் குறை கண்டு பிடித்து மட்டம் தட்டுவதே வேலையாப் போச்சு.

அபிராமி அம்மன் செய்வதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை. அவர் கடவுளின் அவதாரம் இல்லை என்று உங்களால் நிறுவமுடியுமா? அப்படி நிறுவ முடியாதவரை அவரை கடவுளின் மறு அவதாரமாகவே நடமாடும் உயிர்வாழுத் தெய்வமாக பார்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அம்மன் அல்ல என்று நிறுவாவதவரை இந்துமதம் சொல்லும் கடவுள் வடிவங்களில் ஒன்றினுள் தன்னை புகுத்தி மக்களிற்கு அருள் கொடுக்க முனைவதை நல்வழிப்படுத்துவதை ஏமாற்றாக பார்ப்பது ஏன்?

அபிராமி அம்மன் எவரையும் காசு தா பொருள் தா என்று நிர்ப்பந்திக்கவில்லையே. நீங்களாக விரும்பு உங்களுக்கு கிடைக்கும் அருளிற்கும் ஆத்ம திருப்த்திக்கு மன நிம்மதிக்கும் பிரதி உபகாரமாக கொடுக்கும் காணிக்கைகளையே ஏற்றுக் கொள்கிறா.

இங்கு அபிராமி அம்மா ஏமாற்றுகிறா என்பதே ஒரு மிகவும் தவறான பாரதூரமான குற்றச்சாட்டு. ஏமாற்றுவதற்கு அங்கு செல்லும் பக்த்தர்கள் சிறுவயதினரும் இல்லை வைத்தியரின் கணிப்பில் மனநலம் குன்றியவர்களும் அல்ல.

இங்கு அபிராமி அம்மனில் அபாண்டமான குற்றச்சாடுகள் வைப்பவர்கள் ஒன்றில் அவரை கடவுள் இல்லை என்று நிறுவுங்கள் அல்லது இது தான் கடவுள் என்று உதாரணத்தைக் காட்டுங்கள். இல்லை நீங்கள் தான் கடவுளின் உண்மையான அவதாரம் என்றால் அதையாவது வெற்றிகரமாக அபிராமி அம்மன் போல் செய்து காட்டலாம். ஒன்றுமில்லாது தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதுமல்லாது அபிராமி அம்மனில் நம்பிக்கை கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் பக்த்தர்களின் மனதை புண்படுத்தும் தரம் குறைந்த நடத்தையை தவிருங்கள். கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் அளவிற்கு இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஆக்கள் கனபேர் கடவுளை நேரில கண்டிருக்கிறாங்க. குறிப்பாக இந்தக் களத்தில அந்தம்மாவை விமர்சிக்கிறவங்க பலரும் அம்மனை நல்லா நேரில கண்டு அறிஞ்சவங்க அதாலதான் அபிராமி அம்மா கடவுளில்ல எண்ட முடிவுக்கு வந்திருக்கிறாங்க. கடவுள் அவங்களுக்குத் தெரிஞ்ச உருவத்தில தவிர வேறமாதிரி வரமாட்டார். மனிச உருவத்தில வரக் கடவுளுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. ஆபிராமி அம்மா உடான்ஸ் விடுறா. விமர்சிக்கிற எல்லாரும் கடவுளைக் கண்ட மகான்கள். அவையளிட்ட இவவுட பருப்பு அவியாது. அந்த மகான்களைப் போற்றுவோம். ஆமென்.

பொதுவாக இல்லை என்பவா் நிருபீக்கும் அவசியம் கிடையாது. இருக்கும் என்பவர்தான் நிறுவவேண்டும். தாவரத்தில் இருந்து பெற்றோல் தயாரிக்கலாம் என்டு ராமர்பிள்ளை சொன்னால் அதை அவர்தான் நிறுவவேண்டும். அது முடியாது என்பவர் என்னத்தை நிறுவுவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னையள், உதுவள் தேவையில்லை. சுகன் அண்னை ஓரு ரிப் தந்தவர், சூரியனை கும்பிட்டு மூலிகை பாளையத்தம்மன் செஞ்சு தீத்தமாடி, வேப்பங்குழையடிச்சு வேண்டினா குத்தம் குறையெல்லாம் நீங்குமெண்டு. மூண்டு நாளைக்கு முதல்தான் சொன்னவர் அந்த மூண்டு நாளில பக்கா றிசல்றண்னே. மனசுக்கும் நின்மதி, நீங்களும் செய்யுங்கோ பலன் கிடைக்கும். பக்கத்து தமிழ் கடையில ஓடர்பண்ணினால் பெட்டியா வந்திறங்கும் வேப்பங்குழை, கொஞ்சப்பேர சேத்து சின்டிக்கட் போட்டா இன்னும் சீப்பா முடியுமண்னே.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ! அவர் இருக்கிறார் அல்லது இல்லையென்று விதண்டாவாதம் புரியும் முட்டாள்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்வரை கடவுளும் இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி லலிதா முதலில் assule கேட்டது பிரான்சில். அது நிராகரிக்கப்பட்டதன் பின்னர் டென்மார்க்கிற்கு களவாக சென்றார். ஏன் இத்தனை அருள் கொண்டதாக ரீல் விடும் இந்த மனிசி ஏஜன்சிக்கு காசுகட்டி களவாய்த்தான் வெளிநாடு வந்தா. புலியில் ஏறி சவாரி வரவில்லை. புலிப்பயத்தில் வந்தது எண்டு சொன்னாவோ தெரியாது.

இதுகளுக்கு வக்காலத்து வாங்கிறதுகளும் இங்கை இருக்குது எண்டு நினைக்க வயிறுபற்றி எரியுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் தனது மகளிற்கு 27 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இந்த "அம்மா"வை பார்த்தால் சரியாகிவிடும் என்று சென்ற வருடம் சென்று வந்தனர். இன்னமும் கல்யாணம் ஆன பாடில்லை....

இந்த "அம்மா"க்களே இப்டி தான் போங்கோ...

லலிதாவின் கணவர் சிறிபாலன் கிறிண்ட்ஸ்ரெட்டில் செய்த அட்டாகசமே லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடியதன் காரணம். சிறிபாலன் அந்த நகரத்தில் கொண்டிருந்த தகாத உறவுகள் காரணமாக அங்குள்ள இளைஞர்களால் எச்சரித்து விரட்டப்பட்டார். (கண்ணியம் கருதி இது பற்றி விரிவாக எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறோம்) லலிதாவும் சிறிபாலனும் இளைஞர்களின் எச்சரிக்கைக்கு அஞ்சி பிரண்டாவிற்கு ஓடினார்களே தவிர, அம்மன் கனவில் வந்ததால் அல்ல.

புலம்பெயர் ஊடகங்கள் வெளியிடும் ஐரோப்பியச் செய்திகள் பலவற்றில் "இளைஞர்கள் தலையிட்டதால்...", "இளைஞர்கள் விரட்டியதால்..." போன்ற விடயங்கள் இடம்பெறுவதனை இக்கட்டுரைக்கு முன்னரும் அவதானித்துள்ளேன். இது தொடர்பில் ஒரு சிறு கருத்து.

சட்ட ஒளுங்கு என்றும் அதை அமுல் படுத்துவதற்கென்றும் புலம்பெயர் நர்டுகளில் கட்டமைப்புக்கள் இருக்கின்றபோது, இவ்வாறு தமிழ் சினிமா ஸ்ரைலில் இளைஞர்கள் சட்டத்தின் காவலர் பொறுப்பினைத் தேவைப்படும் போது தம் கைகளில் எடுத்துக் கொள்வது உண்மையில் ஐரோப்பாவில் பரந்து பட்டு நடக்கின்றதா? அல்லது இது கட்டுரைச் சுவாரசியத்திற்காக மட்டும் சொல்லப் படுகின்றதா?

சம்பந்தப்பட்ட "குற்றவாளி" குறிப்பிட்ட நாட்டுச் சட்டத்தை எதனையேனும் மீறி இருந்தால் அது தொடர்பில் காவல்துறைக்கு முறையிடுவது ஏன்இவ்வாறான சந்தர்ப்பங்களில் தவிர்க்கப்படுகின்றது?

"இல்லை சட்டமெதையும் மீறவில்லை எமது கலாச்சாரத்திற்குப் புறம்பான விடயமாக மட்டுமே குறிப்பிட்ட சம்பவம் அமைவதனால் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியாது அதனால் தான் இளைஞர்கள் தலையிட்டார்கள்" என்று எவரும் கூறின், அது தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன:

1) தமிழ் இளையோர்கள் மத்தியில் எமது புலம்பெயர் சமூகம் வன்முறைச் சிந்தனையையும் எழுந்தமான செயற்பாட்டையும் ஊக்குவிக்கின்றதா?

2) இளைஞர்களின் நடவடிக்கைக்குள்ளாகும் சம்பந்தப்பட்ட நபர், தன்னை இளைஞர்கள் தாக்கினர் என்றோ வெருட்டினர் என்றோ காவல் துறையில் முறையிட்டால் அதனால் இவ்விளைஞர்களிற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய சிந்தனை சம்பந்தப்பட்ட மட்டங்களில் எவ்வாறு உள்ளது?

3) தனது கலாச்சாரம் பாதிக்கப்படுகின்றது என்று நினைத்து, எழுந்தமானத்தில் இளைஞர்களோ அல்லது தனியொருவரோ செயற்படுவது நியாமெனின், நெற்றியில் பொட்டோடு சேலை அணிந்து கோடை காலத்தில்புலம் பெயர் தெருக்களில் நடக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்தை மீறுகிறார்கள் என "ஸ்கின்கெட்ஸ்" போன்றோர் எழுந்தமானத்தில் தாக்குவதையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோமா?

இன்னும் எத்தனையோ கேள்வியை அடுக்கலாம் எனினும் மேற்படி இப்போதைக்குப் போதுமானது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஊடகங்கள் வெளியிடும் ஐரோப்பியச் செய்திகள் பலவற்றில் "இளைஞர்கள் தலையிட்டதால்...", "இளைஞர்கள் விரட்டியதால்..." போன்ற விடயங்கள் இடம்பெறுவதனை இக்கட்டுரைக்கு முன்னரும் அவதானித்துள்ளேன். இது தொடர்பில் ஒரு சிறு கருத்து.

சட்ட ஒளுங்கு என்றும் அதை அமுல் படுத்துவதற்கென்றும் புலம்பெயர் நர்டுகளில் கட்டமைப்புக்கள் இருக்கின்றபோது, இவ்வாறு தமிழ் சினிமா ஸ்ரைலில் இளைஞர்கள் சட்டத்தின் காவலர் பொறுப்பினைத் தேவைப்படும் போது தம் கைகளில் எடுத்துக் கொள்வது உண்மையில் ஐரோப்பாவில் பரந்து பட்டு நடக்கின்றதா? அல்லது இது கட்டுரைச் சுவாரசியத்திற்காக மட்டும் சொல்லப் படுகின்றதா?

சம்பந்தப்பட்ட "குற்றவாளி" குறிப்பிட்ட நாட்டுச் சட்டத்தை எதனையேனும் மீறி இருந்தால் அது தொடர்பில் காவல்துறைக்கு முறையிடுவது ஏன்இவ்வாறான சந்தர்ப்பங்களில் தவிர்க்கப்படுகின்றது?

"இல்லை சட்டமெதையும் மீறவில்லை எமது கலாச்சாரத்திற்குப் புறம்பான விடயமாக மட்டுமே குறிப்பிட்ட சம்பவம் அமைவதனால் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியாது அதனால் தான் இளைஞர்கள் தலையிட்டார்கள்" என்று எவரும் கூறின், அது தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன:

1) தமிழ் இளையோர்கள் மத்தியில் எமது புலம்பெயர் சமூகம் வன்முறைச் சிந்தனையையும் எழுந்தமான செயற்பாட்டையும் ஊக்குவிக்கின்றதா?

2) இளைஞர்களின் நடவடிக்கைக்குள்ளாகும் சம்பந்தப்பட்ட நபர், தன்னை இளைஞர்கள் தாக்கினர் என்றோ வெருட்டினர் என்றோ காவல் துறையில் முறையிட்டால் அதனால் இவ்விளைஞர்களிற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய சிந்தனை சம்பந்தப்பட்ட மட்டங்களில் எவ்வாறு உள்ளது?

3) தனது கலாச்சாரம் பாதிக்கப்படுகின்றது என்று நினைத்து, எழுந்தமானத்தில் இளைஞர்களோ அல்லது தனியொருவரோ செயற்படுவது நியாமெனின், நெற்றியில் பொட்டோடு சேலை அணிந்து கோடை காலத்தில்புலம் பெயர் தெருக்களில் நடக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்தை மீறுகிறார்கள் என "ஸ்கின்கெட்ஸ்" போன்றோர் எழுந்தமானத்தில் தாக்குவதையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோமா?

இன்னும் எத்தனையோ கேள்வியை அடுக்கலாம் எனினும் மேற்படி இப்போதைக்குப் போதுமானது.

நியாயமான சாத்தியப் படுத்தப்பட வேண்டிய பார்வையின் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து.

இங்கு ஒன்றில் காழ்ப்புணர்ச்சியை கொட்ட இப்படியான கருத்துக்கள் முளைக்குமே தவிர சமூக நலன் நோக்கிய பரிந்துரைகளோடு செயற்பாட்டு சாத்தியம் பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்படுறதில்ல.

யாழில் கூட 90 களின் முற்பகுதியில் சில சாமியார்கள் விடுதலைப்புலிகள் நேரடித் தலையீட்டின் மத்தியில் தான் மக்களை சமூகவிரோத எண்ணத்தோடு அணுகுவதை கட்டுப்படுத்த முனைந்தனர். ஊரில் உள்ளவர்களை எல்லாம் பொல்லெடு தடியெடு என்று உசுப்பிவிடல்ல. தமிழீழக் காவல்துறையின் நேரடித் தலையீடுகளும் கண்காணிப்புக்களும் சில சாமியார்கள் மீதிருந்தன. யாழ் நகரை அண்டி. :lol:

சாமிமாரும், அம்மாக்களும் மனித உருவில் இருப்பது உண்மை எனில், ஈழத்தில் தமிழன் தினம் தினம் காணாமலும்,செத்தும் மடிகிறானே அதை இவர்களால் தடுக்கமுடியுதா, அல்லது ஈழம் கிடைப்பதற்க்கு சிறிதளவேனும் உதவ முடியுதா?(இவர்களை நம்பி புலிகள் இல்லை) அல்லது சுனாமி வந்து எத்தனை ஆயிரம் மக்கள் உயிர் இழந்தினமே அதை எல்லாம் முன்பே எதிர்வு கூறி தடுக்க முடிந்துதா?? :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமிமாரும், அம்மாக்களும் மனித உருவில் இருப்பது உண்மை எனில், ஈழத்தில் தமிழன் தினம் தினம் காணாமலும்,செத்தும் மடிகிறானே அதை இவர்களால் தடுக்கமுடியுதா, அல்லது ஈழம் கிடைப்பதற்க்கு சிறிதளவேனும் உதவ முடியுதா?(இவர்களை நம்பி புலிகள் இல்லை) அல்லது சுனாமி வந்து எத்தனை ஆயிரம் மக்கள் உயிர் இழந்தினமே அதை எல்லாம் முன்பே எதிர்வு கூறி தடுக்க முடிந்துதா?? :D:D

அம்மா தாயே கேட்டியே ஒரு கேள்வி அது போதும் எங்கடை சில்லறைச்சாமியளுக்கு .......... அதுசரி எங்கடை உறவுகளுக்கு உதவி செய்யாத சனமெல்லாம் அங்கை போய் அம்மன்ரை அர்ச்சனை தட்டிலை நூறுநூறாய் எண்ணி வைக்கினமாமே :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தாங்க ஒரு இடத்தில் வியாபாரத்தில் நல்லா லாபம் கிடைச்சது எண்டு ஒரு லட்சம் ரூபா பணத்தை எடுத்து கோயில் உண்டியலில் போட்டாராம் ஒருவர் . அதுவும் சுனாமி நடந்த கால பொழுதுகளில் நடந்தது.

தெய்வக் குற்றம் முற்பிறப்பு பாவ புண்ணியங்கள் தான் இந்தப் பிறப்பில் உங்கள் வாழ்கையைத் தீர்மானிக்கிறது.

செய்த பாவங்களிற்கு பிராயச்சித்தம் செய்து விடுதலை பெறுங்கள் அதற்கு வசதியில்லாவிட்டால் அனுபவித்து தான் கழிக்க முடியும். ஆண்டவனின் வரவு செலவுக் கணக்கில் எந்தத் தில்லு முல்லும் செய்ய முடியாது. அவன் இன்றி அணுவும் அசையாது என்று சும்மாவா சொன்னார்கள்?

அததோடு இன்னுமொருவன் "இளைஞர்கள் தலையிட்டார்கள்" பற்றி ஆய்வு ஒன்றைச் செய்து மிகவும் முக்கியமான விடையம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அதாவது கடவுள் பயபக்த்தி இல்லாத பெரியாரிஸ்ரிகளின் போதனை புலம்பெயர்ந்த சமூகத்து இளைஞர்கள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கிறது. எவற்றையுமே தம்மால் மாற்ற முடியும் அது சமூகப்பிரச்சனை என்றாலும் பறவாயில்லை என்ற தான் தோன்றித்தனம் இவ்வாறு தான் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாவ புண்ணியங்கள் பற்றி நம்பிக்கை அற்றவர்களால் தான் கள்ள மட்டை கூட அடிக்க முடியும். அதாவது பெரியாரிஸ்ரிக்களால் தான் நம்மவர்கள் மத்தியில் கள்ள மட்டைப் பிரச்சனை கூட என்று கூறினால் மிகையாகாது.

  • தொடங்கியவர்

குறுக்காலபோவானின் கடவுச் சொல்லைத் திருடிய ...........னை வன்மையாகக் கண்டிக்கின்றேன் :D:):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.