Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

 

சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகரில் தொழில்துறையின் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையை நோக்கி இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகப்படியான விமான சேவையை சமாளிக்க முடியாமல் திணறும் நிலைக்கு மீனம்பாக்கம் ஆளாகியுள்ளது.

எனவே நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, போதிய இடவசதி கொண்ட பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதுதொடர்பான விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. அதன்படி, பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டன.
 
இதுதொடர்பாக திமுக எம்.பி டாக்டர்.கனிமொழி சோமு மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 1) கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூர் அமைந்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க 4,791 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இங்கு போதுமான இடம் மற்றும் வான்வெளி இருக்கிறது.

விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கான விரிவானப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது.
 
இதற்கான நிதி திரட்ட பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ’டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மத்திய நிதி ஆகியவற்றைக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

கணபதி ஐயர்வாள்,

உங்கள் பேக்கரியிலிருக்கும் பலாலி விமான நிலையத்தையும் சூட்டோடு சூடா இயக்கப் பாருங்கள்..!🤗

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

 

 

கணபதி ஐயர்வாள்,

உங்கள் பேக்கரியிலிருக்கும் பலாலி விமான நிலையத்தையும் சூட்டோடு சூடா இயக்கப் பாருங்கள்..!🤗

ஐயர்வாள் மதுரையை தரம் உயர்த்தி பலாலி-மதுரை சேவையை நிரந்தரமாக்க வேண்டும்.

எப்போ விமானடிக்கெட் பார்த்தாலும் டெல்லி மிக மலிவாக இருக்கும். சென்னை அப்படி இல்லை. இடப்பற்றாகுறை தரையிறங்கு கட்டணத்தை அதிகரிக்க வைத்துள்ளது என நினைக்கிறேன்.

திருப்பதி போபவகளுக்கு பரந்தூரில் இறங்குவது வசதியாக அமையும் என எண்னுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான நிலைய கூரையில்... அதிக கவனம் செலுத்தவும்.  😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விமான நிலைய கூரையில்... அதிக கவனம் செலுத்தவும்.  😜

நீங்கள் உணவில் வல்லாரைக்.கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வீர்களோ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நீங்கள் உணவில் வல்லாரைக்.கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வீர்களோ? 

🤣

News18 Tamil Nadu - சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழ, காரணம் என்ன? |  Facebook

100 தரத்துக்கு மேல்.. இடிந்து விழுந்த, விமான நிலைய கூரையை  மறப்பதற்கு...
வல்லாரை கீரை தான்... சாப்பிட வேண்டுமென்றில்லை.
சாதா... கீரையே  போதும்.  😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விமான நிலைய கூரையில்... அதிக கவனம் செலுத்தவும்.  😜

'கோபுரங்கள் சாய்வதில்லை' மாதிரி இப்பொழுது 'கூரைகள் விழுவதில்லை'யாம்.

உதாரணத்திற்கு இப்பொழுது பன்னாட்டு முனைய விரிவாக்க பணிகளில் புதுவித தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகிறார்களாம்.

FY_Y3HLWYAEyEVO?format=jpg&name=large  FY_Y4NUWAAAmrlb?format=jpg&name=large  

FY_Y5PUWQAAxZ0Y?format=jpg&name=large  FY_Y6JKWIAIUrf_?format=jpg&name=large

இந்த மாதிரி, "சென்னை பசுமை விமான நிலையம்"(Chennai Greenfield Airport) அமைந்தால் எப்படி இருக்கும்? 🤔

FZEIeFfaMAAoAtx?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி, "சென்னை பசுமை விமான நிலையம்"(Chennai Greenfield Airport) அமைந்தால் எப்படி இருக்கும்? 🤔

FZEIeFfaMAAoAtx?format=jpg&name=small

பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது.
விமான நிலைய ஊழியர்களின்... சிடுமூஞ்சி தனத்தையும் குறைக்க, 
விசேட வகுப்புகள் கொடுக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

புதிய விமான நிலையம் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுக வேலைவாய்ப்பு என்றால் கள்ள வேலையா சார்? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மண் சாலைக்கு இடதுபுறம் தான் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளதாம்.

 

15 minutes ago, குமாரசாமி said:

மறைமுக வேலைவாய்ப்பு என்றால் கள்ள வேலையா சார்? 😎

கள்ள வேலையா?

அது "Indirect Jobs" என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, ராசவன்னியன் said:

கள்ள வேலையா?

அது "Indirect Jobs" என நினைக்கிறேன்.

சும்மா தமாஷ்க்காக கேட்கப்பட்டது. ☺️

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மண் சாலைக்கு இடதுபுறம் தான் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளதாம்.

ஐயரபாத் ரெட்ஹில்ஸ் விலை ஏற்றம் போல் இங்கேயும் ஒரு செங்குத்தான விலை ஏற்றம் வருமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஐயரபாத் ரெட்ஹில்ஸ் விலை ஏற்றம் போல் இங்கேயும் ஒரு செங்குத்தான விலை ஏற்றம் வருமோ?

நிச்சயம் வரும்.

நானும் பங்களூர் செல்லும் வழியில் சென்னைக்கு அண்மித்த பகுதியில் சிறிய காலி மனை ஒன்றை வாங்கிப் போட்டுள்ளேன். கோயம்பேட்டிலிருந்து கூவம் நதி ஓரமாக இன்னொரு மெட்ரோ வழித் தடம் திட்ட வடிவில் உள்ளது, அது இந்த விமான நிலையம் வரை நீட்டிக்கப்படலாம்.

பார்க்கலாம். 😌

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

நிச்சயம் வரும்.

நானும் பங்களூர் செல்லும் வழியில் சென்னைக்கு அண்மித்த பகுதியில் சிறிய காலி மனை ஒன்றை வாங்கிப் போட்டுள்ளேன். கோயம்பேட்டிலிருந்து கூவம் நதி ஓரமாக இன்னொரு மெட்ரோ வழித் தடம் திட்ட வடிவில் உள்ளது, அது இந்த விமான நிலையம் வரை நீட்டிக்கப்படலாம்.

பார்க்கலாம். 😌

நன்றே செய்தீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இணையத்தில் வெளிவந்த மாதிரி வரைவு படம்.

ஏறக்குறைய பத்து ஏரி குளங்களை நிரப்பி அமையப்போகிறது போலும்.
இது ஆக்கிரமிப்பு இல்லையா? எவ்வளவு விவசாய நிலங்கள், சுற்றுப்புற சூழல்கள் பாதிக்கப்பட போகிறதோ? 🤔

FZIRNj3agAAhxJe?format=jpg&name=large

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Proposals & Facts:

 

parandur_airport___web.jpg?auto=format,compress&fit=max&format=webp&w=768&dpr=1.0

dtnext_2022_08_04331b11_0933_44df_9b18_fd4ee52d6aed_03c704a8_7f58_4ace_8e0e_55213a9cc908.avif?auto=format,compress&format=webp&w=768&dpr=1.0

dtnext_2022_08_8f9caea2_07bc_4b09_a141_ca86c78c24d8_Air.avif?auto=format,compress&format=webp&w=768&dpr=1.0

DT-NEXT

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1659403022202-png.3597014

1659403043832-png.3597017

Source: Times of India.

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/8/2022 at 05:32, ராசவன்னியன் said:

ஏறக்குறைய பத்து ஏரி குளங்களை நிரப்பி அமையப்போகிறது போலும்.
இது ஆக்கிரமிப்பு இல்லையா? எவ்வளவு விவசாய நிலங்கள், சுற்றுப்புற சூழல்கள் பாதிக்கப்பட போகிறதோ? 🤔

இவையெல்லாம் யாரால் மேற்கொள்ளப்படுகின்றது? மத்திய அரசா அல்லது மாநில அரசா? இதற்கு எதிர்ப்புகள் இல்லையா?

ஜேர்மனியில் இப்படியான இயற்கை அழிப்புகளுக்கு பாரிய போராட்டங்கள் நடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

இவையெல்லாம் யாரால் மேற்கொள்ளப்படுகின்றது? மத்திய அரசா அல்லது மாநில அரசா? இதற்கு எதிர்ப்புகள் இல்லையா?

ஜேர்மனியில் இப்படியான இயற்கை அழிப்புகளுக்கு பாரிய போராட்டங்கள் நடக்கும்.

ரெண்டு அரசுகளும் சேர்ந்துதான் இச்செயலை செய்கின்றன..!

சில ஆண்டுகளுக்கு முன்பே இப்போதிருக்கும் விமான நிலையத்தை 'விரிவாக்கம் செய்ய, இரண்டாவது ஓடுதளத்தை நீட்டிக்க..' என்ற முனைப்போடு மீனம்பாக்கம் அண்மித்த நிலங்களை அரசுக்கு கொடுக்க சொல்லி அப்பகுதி மக்களுக்கு நில ஆர்ஜித ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது அங்கே அதிக வீடுகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் நீதி மன்றத்தில் வழக்குகளும், எதிர்ப்புகளும் வலுக்கவே மீனம்பாக்க விமான நிலைய விரிவாக்கம் கைவிடப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே காலியாக கிடக்கும் ராணுவ இடத்தையும் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

விளைவு..?

ஏறக்குறைய 70 கி.மீ தூரத்திற்கும் மேலே தாண்டி, அத்துவான காட்டில் விவசாய நிலங்கள், நீர் நிலைகளை அழித்து இப்பொழுது இத்திட்டம் வரப்போகிறது..! 😪

சில நல்ல திட்டங்களை சிறு குழு மக்களின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றத்தான் வேண்டும், பதவியிலிருக்கும் அரசுக்கு அந்த துணிவு இருக்கவேண்டும். முடிவில் பின்வாங்கக்கூடாது.

உதாரணத்திற்கு, சென்னை கடற்கரை-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) இறுதி இணைப்பாக வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை 500 மீ தூர நிலப்பகுதிக்கு நீதிமன்றங்களில் வழக்கு மேல் வழக்காக 15 வருடங்கள் நடைபெற்றது. இப்பொழுதான் அத்திட்டதின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு பணிகள் மேற்கோள்ளப்படுகின்றன.

ஆனால் திட்டச் செலவு 5 மடங்காகிவிட்டது. யாருக்கு நட்டம்..? சிரமங்கள்..? மற்ற மக்களுக்குத்தானே..?

சென்னை துறைமுகம்-மதுரவாயல் 18 கிமீ.மேம்பால திட்டம் செயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியால், 'ஈகோ'வால் திட்டம் கைவிடப்பட்டு இன்னமும் திக்கி திணறுகிறது..இப்போதிருக்கும் அரசு திடம்கொண்டு மறுபடியும் கொண்டுவந்தால் தான் உண்டு.

அரசுக்கு வரும் தலைவர்களுக்கு சீரிய எதிர்கால திட்டங்களும், அதை நிறைவேற்ற துணிவும் இருக்க வேண்டும். சுயநலம் கூடாது..!

பரந்தூரில் இருந்து சென்னை வர 2 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இது மிக அதிகம். பரந்தூரிலிருந்து சென்னைக்கு அதிவேக வாகனப் பாதை அல்லது நேரடி அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/8/2022 at 05:32, ராசவன்னியன் said:

ஏறக்குறைய பத்து ஏரி குளங்களை நிரப்பி அமையப்போகிறது போலும்.
இது ஆக்கிரமிப்பு இல்லையா? எவ்வளவு விவசாய நிலங்கள், சுற்றுப்புற சூழல்கள் பாதிக்கப்பட போகிறதோ? 🤔

Bild

எப்போதும் விவசாய நிலங்கள் தான் பலிக்கடாக்கள்.பாவம் விவசாயிகள்.:(

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2022 at 19:32, குமாரசாமி said:

Bild

எப்போதும் விவசாய நிலங்கள் தான் பலிக்கடாக்கள்.பாவம் விவசாயிகள்.:(

👉 https://www.facebook.com/100075227957359/videos/pcb.173159575201640/380341097592510  👈

திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது புதிய விமான நிலையத்தைப் பற்றி சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிட்ட காணொளி இது...1

அப்போது👇
"விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை..."
பரந்தூர் விமான நிலைய அறிவிப்புக்கு பின்பான புதிய காணொளி இது -2
தற்போது 👇
"விமான நிலையம் அமைவதால் மக்கள் மகிழ்ச்சி. புதிய விமான நிலையத்திற்கு மக்கள் வரவேற்பு"

Edited by தமிழ் சிறி

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம்

900 நாட்களைக் கடந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டம்: கள நிலவரம் என்ன?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது. அங்கே கள நிலவரம் என்ன?

சென்னையிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள பரந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் புதிய விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் திங்கட்கிழமையன்று (ஜன. 20) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இந்தப் பகுதிக்கு வருகை தந்து, தங்களைச் சந்தித்து ஆதரவளித்தது புதிய உத்வேகத்தைத் தந்திருப்பதாக போராட்டக்காரர்கள் கருதுகிறார்கள்.

"இந்தப் போராட்டத்துக்கு உறுதியாக துணை நிற்பேன் என்று சொல்லிச் சென்றிருக்கிறார் விஜய். அவர் இங்கே வந்திருப்பது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் இங்கே வருவதாக தகவல் வெளியானதிலிருந்து இந்த விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. விவாதங்கள் நடைபெற்றன. ஆகவே, அவருடைய வருகையும் ஆதரவும் இந்தப் போராட்டத்துக்கு நிச்சயம் வலு சேர்க்கும்" என நம்பிக்கையுடன் பேசுகிறார், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பின் செயலாளரான க. சுப்பிரமணியன்.

 

தங்கள் பகுதியில் நிலமெடுப்பதை எதிர்த்து, 2022ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்திவருகின்றனர். ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது 910 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில்தான் விஜய் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

சென்னைக்கு என இன்னொரு விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் என்பது சுமார் முப்பது ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம்தான். 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னைக்கு என புதிதாக ஒரு விமான நிலையத்தைக் கட்டுவது குறித்து ஆலோசித்து வருவதாக, அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்தார். ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மேற்கே பத்து கி.மீ. தூரத்தில் போரூருக்கு அருகில் திட்டமிடப்பட்டது. ஆனால், முன்னேற்றமேதும் இல்லை.

பிறகு, 2007ஆம் ஆண்டில் சென்னைக்கென புதியதொரு விமான நிலையத்தை ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகில் சுமார் 4,820 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். 2011வாக்கில் இது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்குள் ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலைகள் பெருக ஆரம்பிக்க, புதிய விமான நிலையம் தொடர்பாக பணிகள் ஏதும் நடக்கவில்லை.

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது விமான நிலையம் தொடர்பான பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன. திருப்போரூர், பண்ணூர், பரந்தூர், படாளம் ஆகிய பகுதிகள் ஆராயப்பட்டு, புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என இறுதிசெய்யப்பட்டது. இந்தப் புதிய விமான நிலையம் 4,970 ஏக்கர் நிலத்தில் அமையும் என அறிவிக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம்
படக்குறிப்பு, ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்

இந்த நிலம், பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், தொடூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்ப் பிறகுதான், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அருகில் சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளன இந்த கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள். ஏரி, ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றின் மூலமும் மழையை ஆதாரமாக வைத்தும் இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.

"எனக்கு இந்த ஊரில் 27 சென்ட் நிலம்தான் இருக்கிறது. அதில் விவசாயம் செய்தும் ஆடு, மாடுகளை வைத்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் இந்த இடத்தை கொடுப்பதாக இல்லை. இந்த நிலத்தை எடுப்பதற்கு பதிலாக எங்களுக்கு விஷத்தைக் கொடுத்து சாகடித்துவிடலாம். அல்லது ராணுவத்தை வைத்து சுட்டுவிடலாம். எங்களுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த இடம். அதைவிட்டுப் போக முடியாது. எங்களுக்கு இந்த மண்தான் வேண்டும்" என ஆவேசமாகப் பேசுகிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த குமார்.

பரந்தூர் விமான நிலையம்
படக்குறிப்பு, இந்த போராட்டம் 1,000 நாட்களை நெருங்கிவருகிறது

ஏகனாபுரத்தில்தான் தொடர் போராட்டம் நடக்கிறது என்றாலும், பாதிக்கப்படக்கூடிய மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஏகனாபுரத்திற்கு அருகில் உள்ள நாகப்பட்டைச் சேர்ந்த கே. முருகன், இதுவரை யாரையும் சாராமல் வாழ்ந்துவிட்ட தங்களை வேறொரு இடத்திற்கு மாற்றினால், இதே போன்ற வாழ்க்கை கிடைக்குமா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், இவரைப் போன்ற நிலமற்ற விவசாயிகளுக்கு வேறு பிரச்னைகள் இருக்கின்றன.

"இந்த ஊரில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எங்களுக்குத் தெரியாது. தலைமுறை தலைமுறையாக இதே ஊரில் வாழ்கிறோம். எனக்குச் சொந்தமாக மிகக் குறைவான நிலமே இருந்தாலும், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மூன்று போகம் பயிர் செய்து வாழ்கிறேன். இழப்பீடு தருவதாகச் சொல்பவர்கள், என்னைப் போல நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களின் நிலையை யோசித்துப் பார்த்தார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் கே. முருகன்.

பரந்தூர் விமான நிலையம்
படக்குறிப்பு, கடந்த திங்கட்கிழமை தவெக தலைவர் விஜய் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்

பொதுவாக இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்காக நிலம் எடுக்கப்படும்போது, நிலத்தின் மதிப்பைப் போல மூன்று மடங்குவரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என்கிறார் சுப்பிரமணியன்.

"எவ்வளவு கூடுதல் இழப்பீடு வழங்கிவிட முடியும்? பத்திரப் பதிவு ஏதும் செய்ய முடியாது என்பதால் ஒரு அவசரத்துக்கு நிலத்தை விற்கக்கூட முடியவில்லை. இதனால், 2019ல் இருந்து பொருளாதார நெருக்கடியிலும் மன உளைச்சலில் இருக்கிறோம். இப்போது இங்கே (ஏகனாபுரத்தில்) ஒரு சென்ட் நிலம் சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரசு நாற்பதாயிரம் ரூபாய் தருவதாக வைத்துக்கொள்வோம். சற்று தள்ளியிருக்கும் பரந்தூர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்கிறது. நாங்கள் இங்கே ஒரு ஏக்கரை அரசுக்குக் கொடுத்துவிட்டு, அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்? இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சதுர அடி நிலம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய். அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்?" என கேள்வி எழுப்புகிறார்.

பரந்தூர் விமான நிலையம்
படக்குறிப்பு, எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என, இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்

பரந்தூர் பகுதி கற்கால கிராமங்கள் இருந்த பகுதியாக தொல்லியல் துறை சொல்கிறது எனக்கூறும் சுப்பிரமணியன், இப்படிப்பட்ட இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் தங்களை இங்கிருந்து அகற்றி, தங்களின் அடையாளங்களை அழிப்பது சரியா எனக் கேள்வி எழுப்புகிறார்.

கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்துக்கு என எந்தெந்த நிலங்கள் கையகப்படுத்தப்படவிருக்கின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு. அதற்குப் பிறகு, ஆகஸட் மாத வாக்கில் அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டது. போராட்டக் குழுவினர் திரண்டு சென்று தங்கள் ஆட்சேபங்களைப் பதிவு செய்தனர். நிலமெடுப்பு முயற்சிகள் அதற்குப் பிறகு நகரவில்லை.

பரந்தூர் விமான நிலையம்

இப்போது விஜய் இப்பகுதிக்கு வந்துசென்ற பிறகு, இந்தத் திட்டம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. பண்ணூருக்குப் பதிலாக பரந்தூர் ஏன் தேர்வு செய்ப்பட்டது என்பது குறித்தும், சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையத்திற்கான தேவை குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"பண்ணூரில் உள்ள உத்தேசப் பகுதியில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது இப்பகுதியில் விமானச் செயல்பாடுகளுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைவாகவே உள்ளன" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரந்தூரில் உள்ள உத்தேசத் தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லை என்றும் பண்ணூர் அருகே உள்ள நிலங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

"பரந்தூரைச் சுற்றி காலி இடங்கள் உள்ளதால், எதிர்கால மேம்பாடுகளுக்குத் திட்டமிட முடியும். பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப்பகுதி, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. பண்ணூர் திட்டப் பகுதியின் வளர்ச்சியடைந்த தன்மை, கையகப்படுத்தும் செலவை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் 2020ஆம் ஆண்டிலேயே தேர்வுசெய்யப்பட்டுவிட்டது என்றும் டெல்லி விமான நிலையம் 5,106 ஏக்கரிலும் மும்பை விமான நிலையம் 1,105 ஏக்கரிலும் ஹைதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கரிலும் பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கரிலும் அமைந்துள்ளன என்றும் சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளது, அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது எந்த அறிக்கை. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் 8 கோடி பேர் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

"அரசியல் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டுவரும் பட்சத்தில் தமிழக அரசு அந்தக் குறைகளை பரிவுடன் ஆராயும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அறவழிப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.