Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு

15 பிப்ரவரி 2018
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்
 
காதல் நிறைந்த துணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது.

ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர்.

அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற பெண்ணை தனது நான்காம் மனைவியாக 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தாங்கள் வாரத்திற்கு இரு முறை பாலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார்.

''இதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்'' என்கிறார் அவர்.

தானும், தனது மனைவியும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து, தங்களை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும், இதுவே ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்புடன் இருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.

துணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

''நான் நேரடியாக செல்கிறேன். இளம் பெண்ணான உங்களுக்கு, பெரிய தொப்பையுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் உங்களது கணவரை பார்த்தால் என்ன தோன்றும்? அவர் மீது ஈர்ப்பு வருமா?'' என்கிறார் அவர்.

80 வயதை கடந்தவர்களில், 6-ல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருந்ததாக உணர்ந்தாக தெரிவித்துள்ளனர்.

போதிய வாய்ப்புகள் கிடைக்காததாலே, தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6-ல் ஒருவர் கூறுகிறார்.

''பலர் நினைப்பதை விட, அதிக வயது முதியவர்கள் பாலுறவுவில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர்'' என சுதந்திர வயது தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லூசி ஹார்மேர் கூறுகிறார்.

முதுமை காதல் நிறைந்த உறவுகளை வைத்துக்கொள்ளச் சுதந்திர வயது தொண்டு நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

  • நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களது துணையிடம் பேசுங்கள். விஷயங்களை அவர்களது பார்வையில் இருந்து பார்க்க முயலுங்கள்.
  • பாலுறவில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன தேவை? என்பதை இருவரும் பேசுங்கள்.
  • உடலை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள்

https://www.bbc.com/tamil/global-43060453

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, ஏராளன் said:

பாலுறவில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன தேவை? என்பதை இருவரும் பேசுங்கள்.

ஹலோ இளம் பொடியளே! கேட்டியளே? பிபிசியே சொல்லீட்டுது.
நீங்கள் 20,25 வயதிலையே பாதாம் பருப்பு அந்தப்பருப்பு இந்தப்பருப்பு எண்டு தேடிக்கொண்டிருக்கிறியள்.

இஞ்சை பாருங்கோ50s,60s கிட்ஸ் எல்லாம் இப்பவும் தேக்குமரங்கள் கண்டியளோ 😂

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கூத்து?

இந்த ஆய்வு, தரவுகளின் நம்பத்தன்மை என்ன..?

1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ50s,60s கிட்ஸ் எல்லாம் இப்பவும் தேக்குமரங்கள் கண்டியளோ 😂

அந்த வயசுக்கு வரும்போது அனுபவத்தில் உணரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஹலோ இளம் பொடியளே! கேட்டியளே? பிபிசியே சொல்லீட்டுது.
நீங்கள் 20,25 வயதிலையே பாதாம் பருப்பு அந்தப்பருப்பு இந்தப்பருப்பு எண்டு தேடிக்கொண்டிருக்கிறியள்.

இஞ்சை பாருங்கோ50s,60s கிட்ஸ் எல்லாம் இப்பவும் தேக்குமரங்கள் கண்டியளோ 😂

அது தானே?
அதையும் நீங்க  சொல்லும்போது.....🤣

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வேலைகள் எதுவும் இல்லை. இருக்கிற வேலையைத்தானே செய்ய முடியும்  🧐

அதுசரி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வயதினருடன் பாலுறவு கொள்ள விரும்புகின்றனர் என்று  BBC சொல்கிறதா ? 

😉

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதிலை…. கோயில், குளத்துக்கு போறது…
பேரக் குழந்தைகளுடன் விளையாடுறது…
அதை விட்டுட்டு… சாகும் மட்டும், புணர்ந்து… கொண்டு இருக்க வேணுமா. 🤣

பொல்லு… பிடிக்கிற வயசிலை, பொ**…  போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதென்ன கூத்து?

இந்த ஆய்வு, தரவுகளின் நம்பத்தன்மை என்ன..?

உப்புடியான ஆய்வு ஆராய்ச்சிகள் ஐரோப்பாவிலை எக்கச்சக்கம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இதென்ன கூத்து?

இந்த ஆய்வு, தரவுகளின் நம்பத்தன்மை என்ன..?

இந்த இடத்தில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காதுக்கு இனிமையாகவும், மூளைக்கு சுகமாகவும் இருந்தால் அப்படியே நம்பவேண்டியதுதான். 

இதென்ன உக்ரேன் யுத்தமா சண்டை பிடிக்க.

.🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வயதிலை…. கோயில், குளத்துக்கு போறது
 
அங்க  போய்  பார்த்தா தானே  ராசா  இன்னும் பொத்துக்கொண்டு  வருகுது??😝

1 minute ago, Kapithan said:

இந்த இடத்தில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காதுக்கு இனிமையாகவும், மூளைக்கு சுகமாகவும் இருந்தால் அப்படியே நம்பவேண்டியதுதான். 

இதென்ன உக்ரேன் யுத்தமா சண்டை பிடிக்க.

.🤣

அது தானே??😂

27 minutes ago, குமாரசாமி said:

உப்புடியான ஆய்வு ஆராய்ச்சிகள் ஐரோப்பாவிலை எக்கச்சக்கம் 🤣

ஆராய்ச்சி செய்யினம் என்றாலே அதிகம் ஆட்கள்  செயலில் இருக்கினம் என்றுதானே  அர்த்தம் அண்ணை?🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்த இடத்தில் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.

கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காதுக்கு இனிமையாகவும், மூளைக்கு சுகமாகவும் இருந்தால் அப்படியே நம்பவேண்டியதுதான். 

இதென்ன உக்ரேன் யுத்தமா சண்டை பிடிக்க.

.🤣

அப்போ, பழனியில் ஏழு தலைமுறை வைத்தியர் சிவராஜ் வகையறா, சொல்வதையும் நம்ப வேண்டி வருமே..? 🤔 😛

சிறு வயதில் கிராமத்து சலூன் கடைகளில், தினத்தந்தியில் இவ்வைத்தியரின் 'வாரத்தின் ஒவ்வொரு நாளும் முக்கிய தமிழக நகரங்களுக்கு விஜயம்' என விளம்பரம் வரும், வாசித்திருக்கிறேன், அப்பொழுது பொருளடக்கம் அவ்வளவாக புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது வயதில் தங்கியிருக்கவில்லை மாறாக உடல் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது   அந்தக் காலத்தில் சொந்தப்பிள்ளையுடன்.  போட்டி போட்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் நமது முததையார்கள். இங்கே வயது என்பது எண்ணிக்கை மட்டுமே   எனவே… 60....70.....80.....வயதானவர்கள். கூட.  உடல்ஆரோக்கியமிருப்பின்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது நன்றாக உடலுறவு கொள்ள முடியும்....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

கந்தையர் எப்பவுமே சீரியஸ்தான். 😡

13 minutes ago, ராசவன்னியன் said:

அப்போ, பழனியில் ஏழு தலைமுறை வைத்தியர் சிவராஜ் வகையறா, சொல்வதையும் நம்ப வேண்டி வருமே..? 🤔 😛

சிறு வயதில் கிராமத்து சலூன் கடைகளில், தினத்தந்தியில் இவ்வைத்தியரின் 'வாரத்தின் ஒவ்வொரு நாளும் முக்கிய தமிழக நகரங்களுக்கு விஜயம்' என விளம்பரம் வரும், வாசித்திருக்கிறேன், அப்பொழுது பொருளடக்கம் அவ்வளவாக புரியாது.

நம்பினால் போயிற்று. இதென்ன காசா பணமா இழப்பதற்கு.......ம் 😉

சிவராஜ் வைத்தியர் வகையறாக்களிடம் போற எண்ணம் போலும். மெலிதாக ஆலோசனை கேட்பதுபோல உள்ளது  உங்கள் எழுத்து ..🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இது வயதில் தங்கியிருக்கவில்லை மாறாக உடல் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது   அந்தக் காலத்தில் சொந்தப்பிள்ளையுடன்.  போட்டி போட்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் நமது முததையார்கள். இங்கே வயது என்பது எண்ணிக்கை மட்டுமே   எனவே… 60....70.....80.....வயதானவர்கள். கூட.  உடல்ஆரோக்கியமிருப்பின்.  சந்தர்ப்பம் கிடைக்கும் போது நன்றாக உடலுறவு கொள்ள முடியும்....

அனுபவம்??

அப்படிப்போடு அரிவாளையண்ணை?🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

அங்க  போய்  பார்த்தா தானே  ராசா  இன்னும் பொத்துக்கொண்டு  வருகுது??😝

அது தானே??😂

ஆராய்ச்சி செய்யினம் என்றாலே அதிகம் ஆட்கள்  செயலில் இருக்கினம் என்றுதானே  அர்த்தம் அண்ணை?🤣

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈

இந்த மனுசனுக்கு மட்டும்… வருசம் 365 நாளும் உறவு கொண்டது காணாது என்று,
65 வயதுக்கு மேலேயும்… உறவு கொள்ளும் ஆசை, விட்டுப் போகவில்லை. 😂

வேலை செய்தால்… பென்சன் எடுக்கிற மாதிரி, 😎
இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே. 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே

நீங்கள் எனது வங்கி இலக்கத்துக்கு பென்சன் அனுப்பினால்....எடுத்து கொள்ளுகிறேன....😂🤝

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

..சிவராஜ் வைத்தியர் வகையறாக்களிடம் போற எண்ணம் போலும். மெலிதாக ஆலோசனை கேட்பதுபோல உள்ளது  உங்கள் எழுத்து ..🤣

index.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

வேறு வேலைகள் எதுவும் இல்லை. இருக்கிற வேலையைத்தானே செய்ய முடியும்  🧐

அதுசரி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வயதினருடன் பாலுறவு கொள்ள விரும்புகின்றனர் என்று  BBC சொல்கிறதா ? 

😉

சட்டப்படி எந்த வயதினருடனும்  கலந்துரையாடலாம் என நினைக்கின்றேன். 🤪

43 minutes ago, தமிழ் சிறி said:

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈

அப்படியாகவா? 😂
மனிதர்களுக்கு எந்த மாதம்  இனப்பெருக்கத்துக்கு உகந்தது சார்? 🤣

46 minutes ago, தமிழ் சிறி said:

இந்த மனுசனுக்கு மட்டும்… வருசம் 365 நாளும் உறவு கொண்டது காணாது என்று,
65 வயதுக்கு மேலேயும்… உறவு கொள்ளும் ஆசை, விட்டுப் போகவில்லை. 😂

65 வயதுக்கு மேல இருமல்,காய்ச்சல்,கொட்டாவி, அது இது எல்லாம் நிண்டால் நானும் அதை நிறுத்த தயார் 😎

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈

இந்த மனுசனுக்கு மட்டும்… வருசம் 365 நாளும் உறவு கொண்டது காணாது என்று,
65 வயதுக்கு மேலேயும்… உறவு கொள்ளும் ஆசை, விட்டுப் போகவில்லை. 😂

வேலை செய்தால்… பென்சன் எடுக்கிற மாதிரி, 😎
இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே. 😁

எனது  வன்மையான  கண்டனங்களை கந்தையா  அண்ணை  சார்பில்  தெரிவித்துக்கொள்கின்றேன்😝

முந்தித்தான்  வேலை  வேலை  என  அலைந்தோம்

இப்ப  சும்மா  இருக்கும் நேரத்திலும்  சுரண்டிப்பார்க்கமுடியாதது என்றால் யாம் என்ன  செய்வோம்??

நாங்க  பாவம்  ராசா🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த வயதிலை…. கோயில், குளத்துக்கு போறது…
பேரக் குழந்தைகளுடன் விளையாடுறது…
அதை விட்டுட்டு… சாகும் மட்டும், புணர்ந்து… கொண்டு இருக்க வேணுமா. 🤣

பொல்லு… பிடிக்கிற வயசிலை, பொ**…  போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. 😂

சிவ சிவா அப்பனே முருகா பிள்ளையாரப்பா எண்டு கோயிலுக்கு போறதாலை தானே பிள்ளைப்பாக்கியம் கூடிக்கொண்டு போகுது.....🥰
நான் என்ன செய்யட்டும்??????? 🙃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சட்டப்படி எந்த வயதினருடனும்  கலந்துரையாடலாம் என நினைக்கின்றேன். 🤪

ஒரு  கட்டு  வைக்கோலை தூக்கமுடியுமென்றால் நீங்கள்  எந்த  வயதினருடனும் கலந்து உரையாடலாம்? என்கிறது  தமிழரது  ஆரம்ப  கால  ஆராய்ச்சி?😜

Just now, குமாரசாமி said:

சிவ சிவா அப்பனே முருகா பிள்ளையாரப்பா எண்டு கோயிலுக்கு போறதாலை தானே பிள்ளைப்பாக்கியம் கூடிக்கொண்டு போகுது.....🥰
நான் என்ன செய்யட்டும்??????? 🙃

அதிலேயும் நம்ம முருகனிடம்  போனால் பக்கத்து  வீட்டுக்கும் கலக்கச்சொல்லுதே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விளையாட்டுக்கும்… சுய கட்டுப்பாட்டுடன்  பென்சன் எடுக்கலாம்  தானே. 😁

பிபிசி சொன்னாப் பிறகும் முரண்டு பிடிக்கப்படாது 🤣

2 minutes ago, விசுகு said:

ஒரு  கட்டு  வைக்கோலை தூக்கமுடியுமென்றால் நீங்கள்  எந்த  வயதினருடனும் கலந்து உரையாடலாம்? என்கிறது  தமிழரது  ஆரம்ப  கால  ஆராய்ச்சி?😜

கருங்காலி எப்ப வைரம் பெறும் எண்டு தெரியும் தானே விசுகர் 🏋🏼‍♂️ 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, விசுகு said:

அதிலேயும் நம்ம முருகனிடம்  போனால் பக்கத்து  வீட்டுக்கும் கலக்கச்சொல்லுதே?

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்....

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பிபிசி சொன்னாப் பிறகும் முரண்டு பிடிக்கப்படாது 🤣

கருங்காலி எப்ப வைரம் பெறும் எண்டு தெரியும் தானே விசுகர் 🏋🏼‍♂️ 😁

நம்ம  சிறியருக்கு  காலில  தானே  அண்ணை காயம் பட்டது?🤣

4 minutes ago, குமாரசாமி said:

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்....

சும்மா  சிலிர்க்குதில்ல?😜

(இணையவன் வாறதுக்குள்ள ஓடிவிடுவம்?😅

  • கருத்துக்கள உறவுகள்

கையிலே அமிர்தமே இருந்தாலும் ....
அதைவிட சுவையானது எங்கே அன்று அலைவதே மனித மனம்.
அதுதான் இந்த மனிதன் இந்த அழகான பூமியையே அழித்துக்கொண்டு இருக்க காரணம் 

கையிலே சக்கரை கிடைத்தாலே ....
அமிர்தம் என்ற அளவுக்கு கொண்டாட தெரிந்தால் 
மனதை வென்று ஒரு கொண்டாட்ட நிலையிலேயே வாழ்ந்து கொள்ளலாம் 

வயதில் ஒரு பக்குவம் வருவது மனதுக்கு  மட்டுமல்ல வாழ்வுக்கும் அவசியமான ஒன்று 
பெண்கள்  பறவைகள் மிருகங்கள் காடுகள் மலைகள் போன்ற இயற்கை எவ்வளவு 
அழகானது என்ற ஆழமான ரசனை கண்களில் தெளிவு இருந்தாலே தெரிய தொடங்கும் 

மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு 
மதங்களின் சார அம்சம் தெளிவான அறிவிலேயே புரிய தொடங்கும் 
அல்லாஹ் சிவன் கிறிஸ்து போன்றவர்கள் எங்குமே இல்லாதவர்கள் ... இல்லாமையிலேயே எல்லாம் 
இருக்கிறது என்பதைத்தான் மதங்கள் சொல்கின்றன என்ற புரிதல் வரும் 
அப்போ மூட நம்பிக்கைகள் கலைந்து போகும் ... 
அது இல்லாதவர்களுக்கு சமூக பணி நற்பணிகளின் பலா பலன் புரியத்தொடங்கும் 

அவசர வாழ்க்கையில் ஏமாற்றங்கள்.... பிறருடனான உறவுகள் கடமைகள் 
அடுத்தவரின் அலங்கோல வாழ்க்கையினால் வரும் கோபம் தாபம் போன்றவை 
ஒரு முட்டு கட்டையாக இருந்துகொண்டே இருக்கும் 

காமத்தில் கற்பனையை கடந்துவிட்டால் ... அதை கடந்து அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை 
வீண் கற்பனைகள்தான் முழு சிக்கலுக்கும் காரணம் ஆகிறது என்ற தெளிவு ஆறுபதில் 
வரவில்லை என்றால் வாழ்க்கை பெரும் சிக்கலாவே அமையும். இந்த வாழ்வை திருப்திகரமாக முடித்து  
சாவை மகிழ்ச்சியுடன் அணைக்கும் பாக்யம் கைதவறி போகும்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.