Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீனாவின் யுவான் வேங் – 5 (Yuan Wang 5) அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்ததோடு இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த வகைக் கப்பல்களில் செயற்கைக் கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல், தகவல் தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கும் போன்ற வசதிகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2022/1294829

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild

 

May be a cartoon

 

May be an image of train and railroad

 

Bild

சீனக் கப்பல் வருகையும், அதற்கு இந்தியாவின் சந்தேகமும்... 
ஸ்ரீலங்காவின் நிலைமையையும்,   
அழகாக.. கருத்தோவியத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய உளவு விமானம் என்ன ஓய்வெடுக்குதா..??!

ஹிந்தியாவுக்கு இது நல்ல சுதந்திர தினப் பரிசு. ஹிந்திய ராஜதந்திரம் படுதோல்வியில். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

இதென்ன இது? இவ்வளவு வாக்குவாதப்பட்டு வந்து வந்தவேகத்திலேயே கிளம்புறார். ஓகோ .... இந்தியாவின் வயித்தில் புளியை கரைக்கத்தான் வந்தாரோ? நீ எவ்வளவு அள்ளிக்கொட்டினாலும் எனது வருகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாது என்கிற செய்தியை சொல்லிப்போக வந்தாராக்கும். வந்தவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு போயிருந்தால் இந்தியா கொஞ்ச  நாள் தூங்காமல் பகவத் கீதை படித்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதென்ன இது? இவ்வளவு வாக்குவாதப்பட்டு வந்து வந்தவேகத்திலேயே கிளம்புறார். ஓகோ .... இந்தியாவின் வயித்தில் புளியை கரைக்கத்தான் வந்தாரோ? நீ எவ்வளவு அள்ளிக்கொட்டினாலும் எனது வருகையை உன்னால் கட்டுப்படுத்த முடியாது என்கிற செய்தியை சொல்லிப்போக வந்தாராக்கும். வந்தவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு போயிருந்தால் இந்தியா கொஞ்ச  நாள் தூங்காமல் பகவத் கீதை படித்திருக்கும்.

எப்பிடியோ... இந்தியாவுக்கு, ஒரு விமானம் நட்டம். ஸ்ரீலங்கா... ஆயுத கிடங்கிலை ஒரு விமானம் அதிகரிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஹிந்திய உளவு விமானம் என்ன ஓய்வெடுக்குதா..??!

ஹிந்தியாவுக்கு இது நல்ல சுதந்திர தினப் பரிசு. ஹிந்திய ராஜதந்திரம் படுதோல்வியில். 

இந்தியா விமானம் கொடுத்தாலும்….இலங்கை விமானிக்கு வாந்திபேதி, வயித்து போக்கு என்று ஏதாவது சொல்லி விமானத்தை கட்டுநாயக்காவில் கட்டி போட்டிருக்கும், சீன கப்பல் வெளியேறும் வரை.

ஐயருக்கு நல்ல தகடு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

அப்பாடா ரொம்பவும் நிம்மதியாக இருக்கிறது.

இந்திய சுதந்திர தினத்துக்கு பரிசு கொடுக்கவென்றே திட்டம் போட்டு வந்திருக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த சீன கப்பலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதியில்லை.

By T YUWARAJ

16 AUG, 2022 | 09:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை,இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவான் வான் -05 அறிவியல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல் இன்று காலை 08. மணியளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது.

இவ்வாரம் இறுதி வரை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் குறித்த கப்பலுக்குள் செல்வதற்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

298867211_461021139213020_24060712788817

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது.

இலங்கைக்கான சீன தூதுவர் கி-சென்ஹொங்,கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்களான அட்மிரல் சரத் வீரசேகர,விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க,வாசுதேவ நாணயக்கார,அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்று காலை 08.மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த யுவான் வான் கப்பலை துறைமுக வளாகத்தில் கூடியிருந்தவர்கள் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேசிய கொடியினை அசைத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து சகலரும் எழுந்து நின்று கப்பலை வரவேற்றனர்.

299576779_480541903408547_87116772521838

யுவான் வாங் 05 என்ற கப்பலானது 2007ஆம் ஆண்டு சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு, கண்காணிப்பு கப்பலாகும். இந்த கப்பல் 11000 மெற்றிக்தொன் எடையுடைய பொருட்களை ஏற்றிச் செல்ல கூடியதுடன் 222 மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் உடையது.

சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-05 லொன்ங் மார்ச்-5 பி ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்க பயன்படுத்தப்படுகிறது

சீனாவின் ஜியாங்ஜின் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யுவான் வான் கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய திட்டமிட்டிருந்தது.

300049730_1219678365454355_6262630025163

இருப்பினும் இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதால் தமது நாட்டின் இரகசிய தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து யுவான் வான் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தற்காலிகமாக பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அறிவித்தது.

அதற்கமைய யுவான் கப்பல் கடந்த 11ஆம் திகதி திட்டமிட்ட வகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதை தாமதப்படுத்தியது.

யுவான் கப்பல் விவகாரம் குறித்து இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை தொடர்;ந்து குறித்த கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு முறைமைகளை பேணுதல்,மற்றும் இலங்கை கடற்பரப்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள கூடாது என பாதுகாப்பு அமைச்சு நிபந்தனை விதித்ததை தொடர்ந்து யுவான் வான் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.எரிபொருள் மற்றும் உணவு பொருட்கள் இடைப்பட்ட காலத்தில் பெற்றுக்கொள்ள யுவான் வான் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்திருக்கும்.

30 நாட்களாக கடலில் நாட்களை கடத்திய யுவான் கப்பல் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கைக்கும்,சீனாவிற்கும் இடையிலான நட்புறவினை பலப்படுத்தும் வகையில் இந்த கப்பலின் பிரவேசம் அமைந்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த சீன கப்பலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதியில்லை | Virakesari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

எப்பிடியோ... இந்தியாவுக்கு, ஒரு விமானம் நட்டம். ஸ்ரீலங்கா... ஆயுத கிடங்கிலை ஒரு விமானம் அதிகரிப்பு. 

சீனக்கப்பல் இலங்கைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் இந்தியா,  இலங்கைக்கு விமானம் அன்பளிப்பாக வழங்குமா? இந்திய விமானங்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்த பின் தான் சீன தன் ஆராய்ச்சியை  ஆரம்பிக்குமாமில்லே!

5 hours ago, பிழம்பு said:

இன்று காலை 08.மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த யுவான் வான் கப்பலை துறைமுக வளாகத்தில் கூடியிருந்தவர்கள் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேசிய கொடியினை அசைத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து சகலரும் எழுந்து நின்று கப்பலை வரவேற்றனர்.

நல்ல சம்பிரதாயப்படிதான் வரவேற்கிறார்கள்! இந்திய விமானத்தை தண்ணீர் பீச்சியடித்து வரவேற்றார்கள், இது தண்ணீருக்குள் நிக்கிறபடியால் கொடியை அசைத்து வரவேற்றிருக்கிறார்கள் போல். இங்கு வரவேற்பு கூட்டம் அதிகம் போல்தெரிகிறது. சரத் வீர சேகர கையை நீட்டுகிறார் கப்பலை பார்வையிட நினைத்தாரோ என்னவோ, சீனன் கையை உயர்த்தி தடை விதிக்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

298867211_461021139213020_24060712788817

 

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

சீன கப்பலின், இலங்கை வருகையை அடுத்து... இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்!

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையிலேயே, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1295012

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2022 at 00:06, satan said:

சரத் வீர சேகர கையை நீட்டுகிறார் கப்பலை பார்வையிட நினைத்தாரோ என்னவோ, சீனன் கையை உயர்த்தி தடை விதிக்கிறார். 

https://www.facebook.com/100001504539901/videos/593839742474847

அமைச்சர்  சரத் வீரசேகரவுக்கு... கை கொடுக்க மறுத்த, சீன கப்பல் தளபதி.
இதனைத்தான்... "பல்பு" வாங்குவது என்று சொல்வார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

https://www.facebook.com/100001504539901/videos/593839742474847

அமைச்சர்  சரத் வீரசேகரவுக்கு... கை கொடுக்க மறுத்த, சீன கப்பல் தளபதி.
இதனைத்தான்... "பல்பு" வாங்குவது என்று சொல்வார்கள். 🤣

இந்திய விமானம் நன்கொடை என்றதால் அங்கே போனோருக்கு மரியாதை கொடுத்தார்கள்.

சீனாவின் துறைமுகத்துக்கு, சீனா தன் கப்பலை கொண்டு வரும் போது சும்மா விடுப்பு பார்க்க போன முன்னாள் அமைச்சருக்கு இந்த “மரியாதையே” அதிகம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

https://www.facebook.com/100001504539901/videos/593839742474847

அமைச்சர்  சரத் வீரசேகரவுக்கு... கை கொடுக்க மறுத்த, சீன கப்பல் தளபதி.
இதனைத்தான்... "பல்பு" வாங்குவது என்று சொல்வார்கள். 🤣

தமிழனுக்கு கை கொடுக்க மாட்டானுகள்.

சீனனுக்கு விழுந்தடித்து ஓடிப் போனார்.

ஐயாவுக்கு வேணும்.

வெல்டண் சீனன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்திய விமானம் நன்கொடை என்றதால் அங்கே போனோருக்கு மரியாதை கொடுத்தார்கள்.

சீனாவின் துறைமுகத்துக்கு, சீனா தன் கப்பலை கொண்டு வரும் போது சும்மா விடுப்பு பார்க்க போன முன்னாள் அமைச்சருக்கு இந்த “மரியாதையே” அதிகம்🤣

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

தமிழனுக்கு கை கொடுக்க மாட்டானுகள்.

சீனனுக்கு விழுந்தடித்து ஓடிப் போனார்.

ஐயாவுக்கு வேணும்.

வெல்டண் சீனன்.

வீரசேகர… முதலில், ஆங்கில முறையில் கை கொடுக்க…
சீனன் அதனை ஏற்காமல், கை காட்டுகிறார்.
தன் முயற்சியில்… சற்றும் மனம் தளராத வீரசேகர…
ஓரு அடி பின் நகர்ந்து… இரண்டு கையையும் கூப்பி,  “ஆய் போவன்” 😜 சொல்கிறார். 🤣
சீனன்… அப்பவும், “ஆய் போவன்” சொல்லவே இல்லை. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அப்பவும், “ஆய் போவன்” சொல்லவே இல்லை

எனக்கு பார்த்தால்…நீ ஆயி போரெண்டா அங்காலா போவன், இஞ்ச ஏன் வந்தனி? எண்டு சொன்னமாதிரி கிடக்கு🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

300049730_1219678365454355_6262630025163

 

Bild

கப்பல் பார்க்கப் போன சரத் வீரசேகரவுக்கு... கப்பல் தளபதி கொடுத்த மரியாதை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

300049730_1219678365454355_6262630025163

 

Bild

கப்பல் பார்க்கப் போன சரத் வீரசேகரவுக்கு... கப்பல் தளபதி கொடுத்த மரியாதை. 

rbHqaj.gif

டிஸ்கி 

கிந்தியனுக்கு இதையும் விட அவமானம் தோழர்..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

rbHqaj.gif

டிஸ்கி 

கிந்தியனுக்கு இதையும் விட அவமானம் தோழர்..😊

ஆமா .... ஐயா இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

rbHqaj.gif

டிஸ்கி 

கிந்தியனுக்கு இதையும் விட அவமானம் தோழர்..😊

கண்டது மகிழ்ச்சி தோழர்........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஆமா .... ஐயா இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர்கள்?

 

5 hours ago, suvy said:

கண்டது மகிழ்ச்சி தோழர்........!   

 தாய் சேய் அனைவரும் நலம் தோழர்..👌

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 தாய் சேய் அனைவரும் நலம் தோழர்..👌

வாழ்த்துக்கள்! பதவியுயர்வு ....? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.