Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிங்கிலம் தவிர்ப்போம்

Featured Replies

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம்.

எடுத்துக்காட்டு:

காய் கவ் ஆர் யூ?

வட் ஆர் யூ டூஇங்

பேர்த்டே

டவுட்

நோர்மலா

...

இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are you doing என்று களத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது எப்படி தவிர்க்கப்பட்டுள்ளதோ அதேபோன்று "வட் ஆர் யூ டூஇங்" என்று எழுதுவதும் நிறுத்தப்படவேண்டும். எனவே, படைப்புகள் தவிர்ந்து (அதிலும் அவசிமெனின் மட்டுமே) ஏனைய கருத்துக்களில் தவிர்க்க முயல்வோம்.

உங்கள் கருத்துக்களையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு யாழ் இணைய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி

  • Replies 54
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிங்கிலத்தில் எழுதுவது மட்டுமல்ல விவாதங்களில் கொச்சைத்தமிழில் எழுதுவதையும் தவிர்க்கச் செய்வது நல்லது. சில இடங்களில் என்ன எழுதுகின்றார்கள் என்று புரிவதே இல்லை.

தவிரவும் புலத்தில் உள்ளவர்களுக்கு ( முக்கியமாகக் குழந்தைகளுக்கு) தூயதமிழை இணையங்களில் இருந்து தான் பெரும்பாலும் பெற முடியும். நாங்கள் கொச்சைத் தமிழில் எழுதும் பட்சத்தில், அதையே தமிழாக அவர்கள் இனம் காண வாய்ப்புண்டு.

அது எதிர்காலத்தில் பாரிய பின்வளைவுகளையும், தமிழழிவுக்கும் வழி சமைத்துவிடும்

நானும் பல இடங்களில் சில தமிங்கிலம் பாவிச்சதுண்டு. மன்னிக்கவும்.. இனிமேல் அத்தவறு ஏற்படாது.

யாருக்காவது அப்படி தமிழ் தெரியாத வார்த்தைகள் இருந்தால் கூச்சப்படாமல்..இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்னைக் கேட்காதீர்கள்..

கேட்க நாடக்கூடியவர்கள்.. தமிழ்த்தங்கை..

தமிழ்வானம்..

விகடகவி மாமா அவர்களிற்கு சில சொற்கள் தெரியாட்டி என்னை நாட சொல்லி இருக்கலாம்.....சரி சரி................நீங்க கவலைபடுகிறது விளங்குது கவலை படவேண்டாம்.............எல்லாரும் திருந்த வேண்டும் என்னை தவிர.............இதில நான் என்ன சொல்ல வாரேன் என்று விளங்கி இருக்கும்........ :P :P <_<<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ட்ரை பண்றன் அண்ணா.... சீ முயற்சி செய்யிறன் அண்ணா.............. <_<

பூஸ் குட்டி அண்ணா கவ் ஆர் யூ ஓ மன்னியுங்கோ எப்படி சுகம் கண்டு கனகாலம்........... :P

பூஸ் குட்டி அண்ணா கவ் ஆர் யூ ஓ மன்னியுங்கோ எப்படி சுகம் கண்டு கனகாலம்........... :P

ஜம்மு உதுதானே வேணாங்கிறது? :angry: :angry: :angry: :angry: :angry:

தேவையானதை தலைப்பின் கீழ் உரையாடவும் ஜம்மு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்காவது அப்படி தமிழ் தெரியாத வார்த்தைகள் இருந்தால் கூச்சப்படாமல்..இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்னைக் கேட்காதீர்கள்..

கேட்க நாடக்கூடியவர்கள்.. தமிழ்த்தங்கை..

தமிழ்வானம்..

<<

விகடகவி ஐயா, நீங்களே இப்படிச்சொல்லலாமோ?! :lol: தமிழை தமிழாய் எழுதும் போது தமிழ் வாழும்! அதை வாழவைக்கவேண்டும் என்று முரசு கொட்டத் தேவையில்லை . முதலில் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து எழுதப் பழக வேண்டும்.

நாங்கள் எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டே இருக்கின்றோம் !.

நன்றிகள் ஐயா.

டென்சன் ஆகவேண்டாம் பூஸ் குட்டி அண்ணாவும் நாமளும் தான் உறவோசை பகுதியில நல்ல நண்பர்கள் அது தான் கண்டு கனகாலம் சுகம் விசாரித்தனான்..............அண்ணா கூட இப்ப அடிகடி என்னட்ட வாறதில்லை அது தான்......சரி தலைபோட போங்கோ நான் ஜீட்............ :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சாத்துப்படி(அறிவுறுத்தல்) யாருக்கு விழுகின்றதென்பது அநேகமாக எல்லோருக்கும் தெரியும்.இதே போல் தனி ஆங்கிலத்தில் வருபவைகளையும் கண்காணித்தால் நல்லாயிருக்குமென நிர்வாகத்திடம் வேண்டிக்கொள்கின்றேன் .எனினும் ஒரு சில தமிங்கில வார்த்தைகள் வெறும் கலகலப்புக்காகவும் நகைச்சுவைக்குமாகவே இடம் பெறுவதாக நான் நினக்கின்றேன்.இப்படியே எல்லா தமிழில் வரும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த முயற்சித்தால் யாழுக்கு கருத்தெழுத வருபவர்களுக்கெல்லாம் ஏதோ பிரம்புடன் காத்திருக்கும் வாத்தியாரிடம் தமிழ் படிக்கப்போவது போன்ற உணர்வு ஏற்படுமென எண்ணுகின்றேன் மீண்டுமொருமுறை நினைவுபடுத்த விருப்புகின்றேன் தமிழில் எழுதப்படும் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் நகைச்சுவைக்காக மட்டுமே.அது இங்கு விருந்தினராக வரும் அனைவருக்கும் புரியுமென நினைக்கின்றேன் உலக்கை போற இடத்தை விட்டுட்டு ஊசி போற இடத்தை பார்க்காதேங்கோப்பா :lol:

குமாரசாமியார் சொல்வது ஒரு விதத்தில் எனக்கு ஞாயமாப் படுகுது. நண்பர்களோடு கலந்துரையாடுவது போல்தான் கருத்துக்களை இங்கு பரிமாறிக் கொள்வதை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். திடீரென சுத்த தமிழில் எழுது என்றால் கொஞ்சம் சிரமம்தான் . பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எழுத வேண்டிய கருத்துக்களை மறந்து போய்விட வாய்ப்பிருக்கு.

வலைஞன் பேச்சுத் தமிழுக்குத் தடை இல்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எழுத ஆரம்பிக்கும் போது ஆங்கிலச்சொற்கள் வரும். ஆனாலும் அதை தவிர்த்தே எழுதுறேன்.

இனி கூட கவனம் எடுக்கனும் .

  • தொடங்கியவர்

மேலே தெளிவாகவே உதாரணங்களோடு குறிப்பிட்டிருக்கிறேன். தவிரவும், இதனை கருத்துக்கள விதிமுறையாக அல்லாமல் "தவர்த்துக் கொள்வது நல்லது" என்ற தொனியோடே எழுதியுமிருக்கிறேன். உடனடியாக அனைத்தையும் நிறுத்தமுடியாது என்பதால், "முயற்சிசெய்க" என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

முழுமையாக ஆங்கிலத்தில் எழுதப்படும் கருத்துக்களை கருத்துக்களத்தில் அனுமதிப்பதில்லை. அப்படி பயனுள்ள பிறமொழி ஆக்கங்கள் இணைக்கப்பட்டால் அவை யாழ் திரைகடலோடி பிரிவுக்கு நகர்த்தப்படுகின்றன. அதேநேரம் செய்திகளுக்குத் தொடர்புடையவற்றை, அவசியம் கருதி தமிழ்ச் சுருக்கத்தோடு இணைக்கும்போது அவை அனுமதிக்கப்படுகின்றன. இப்படியல்லாது, ஆங்கிலத்தில் கருத்துக்கள் எங்கும் எழுதப்பட்டிருப்பின் சுட்டிக்காட்டுக.

அத்தோடு தூயதமிழ் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. இங்கு நாம் குறிப்பிட்டுள்ளது அன்றாடம் நாம் கதைக்கும் அல்லது எழுதும் விடயங்களில் நாம் பல ஆங்கிலச் சொற்களை திணித்து எழுதுகிறோம். அவை தொடர்ந்து எழுதப்படும்போது - வழக்கமாகும் போது - அதுவே இயல்பான மொழிநடையாக மாறிப்போகிற அபாயம் இருக்கிறது. இதில் தூயவன் குறிப்பிட்டுள்ள விடயத்தையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

ஒரு படைப்பில் இப்படியான தமிங்கில மொழிநடையை தேவைகருதி பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் நகைச்சுவைக்காக, கலகலப்பான கருத்தாடலுக்காக இப்படி தமிங்கிலத்தில் எழுதுகிறோம் என்று சொன்னால் அது சில கேள்விகளை எழுப்பும்: நகைச்சுவைக்காக கெட்ட வார்த்தைகளை கருத்துக்களத்தில் எழுதலாமா? நகைச்சுவைக்காக ஆபாசப் படங்களை இணைக்கலாமா? போன்றன.

எனவே யாரையும் நாம் கட்டாயப்படுத்தவில்லை - கட்டளைகளும் இடவில்லை. நாம் தமிழர் - நம் மொழி தமிழ் - என்கிற உணர்வோடு ஒவ்வொருவருக்கு முன்னும் இருக்கும் கடமையைச் சுட்டிக்காட்டுகிறோம். முடிந்தளவு தவிர்த்துக்கொள்வதற்கு முயற்சிசெய்யும்படி சொல்கிறோம். அவ்வளவே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தெரிந்திருந்தும் ஆங்கிலத்தில் வேணுமென்றே எழுதும் கருத்துக்களை தடை செய்ய வேண்டும். இதனை கருத்துக்கள விதியாக அமுலாக்கப்படல் வேண்டும்.

கந்தப்பு தாத்தா நல்ல ஒரு கருத்து சொன்னீங்க ஓ கட்டாயம் தடை செய்ய வேண்டும் முக்கியமான என்னை தாத்தா.................தமிங்கிலத்தால் தமிழிற்கு வெறி சாறி யாழிற்கு பிரச்சினை என்று நினைக்கிறீங்க போல நீங்க சொன்னா சரியா தான் இருக்கு தாத்தா............சில பேர் சொல்லீனம் சமூகத்திற்கு பிரச்சினை என்று அது தான் பேபிக்கு விளங்கவில்லை தாத்தா.......... :D

யூ நோ ஒன் தீங் தாத்தா................. :lol:

சமூகத்தில தமிங்க்கிலம் பிரச்சினை என்று சொல்லுறீங்க ஆனா பாருங்கோ கொஞ்சம் தமிங்கிலம் தெரிந்து வைத்திருந்தா...........அதை ஆங்கிலமாக சேர்த்து கதைத்து தப்பிவிடலாம் பாருங்கோ...........ஆனா பாருங்கோ சமூகத்தில் சிட்னியை பொறுத்தவரை என்னை சூழவுள்ள தமிழ் சமூக சிறுவர்களிடம் வடமொழிங்கிலம் வந்து இருகிறது பாருங்கோ............அதிலையும் தமிழ் "ஓம்" கூட ஒருவருக்கும் தெரியாது தாத்தா வடமொழி "ஓம்" தான் தெரியும் பாருங்கோ..................வணக்கம் சொல்லீனமோ இல்லையோ "சாய்ராம்" என்று தான் சொல்லீனம் பாருங்கோ இப்படி பல புது சொற்கள் வந்துவிட்டது............

தமிழ் பிள்ளைகளிற்கு தேவாரம் தமிழ்ல் பார்த்தா இங்கே அரைவாசி பேருகு தெரியாது ஆனா தெலுங்கு கீர்த்னை மற்றும் வடமொழி கீர்தனை நல்லா பாடுவீனம்.........அதற்காக நம்ம தேவாரம் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை அதிலையும் ஒரு பிரயோசனம் இல்லை என்று எனக்கு நல்லா தெரியும் ஆனா இது மொழி என்றபடியா தான் சொல்லுகிறேன் தாத்தா..........பிகோஸ் சமூக பிரச்சினையா இது தான் பாரிய பிரச்சினை தாத்தா................

அடுத்தது பாருங்கோ தாத்தா சைவ வகுபிற்கு நம்ம ஆட்கள் போகீனமோ இல்லையோ...........பாலவி கிளாஸ் என்று வடமொழி மதம் சார்ந்த கிளாசிற்கு ஒரு சப்பேர்பில இருந்தும் கடைசி 20 பேராவது போகீனம் தாத்தா என்றா பாருங்கோ..............பிறகு எப்படி தாத்தா தமிழ் வளரும்..........

அடுத்து பாருங்கோ பிறந்தநாள் கேக்கில கூட............இப்ப தெலுங்கு "ஒம்" போடீனம் மற்றது பிள்ளைக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு தமிழ் பெயர் வைத்து விட்டு கடைசியா சாய் என்று முடிபோம் தாத்தா பார்தீங்கள் தானே இவைய என்ன செய்ய.............இது எல்லாம் நான் ஏன் சொல்லுறேன் என்றா சமூக பிரச்சினை பாருங்கோ...............

மற்றது தாத்தா யாழில வந்து தமிங்கிலம் கதைகிறது பாதிக்கும் என்று சொன்னீங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் ஆனா இந்த பிரச்சினை தான் முக்கிய சமூக்ல பிரச்சினை...........இதால தான் பாரிய சிக்கல் எல்லாம் ஏற்படும் தாத்தா...........ஏன் என்றா இறுதியில் இங்கே உள்ள ஆட்களிற்கு வடமொழி சொல் ஏது தமிழ் மொழி சொல் ஏது என்று தெரியாம கூட போகலாம் தாத்தா..........ஆங்கிலம் இங்கே இருகிறவைக்கு தெரியும்..........அதனால பாரிய பிரச்சினை வராது என்று நினைகிறேன்................

யாழில தமிங்கிலம் எழுதி போட்டு போயிடுவோம் அதை வாசித்து சமூகத்தில் பிரச்சினை வருது என்றா தாத்தா என்னால ஏற்று கொள்ள முடியாது பாருங்கோ................பிகோஸ் நம்ம சமூகம் வேறு மொழி கலவையில நல்லா ஊறி போய் கிடக்கீனம் அதுதான் தெலுங்கிலம் தாத்தாவிற்கு தெரியும் தானே சிட்னியில என்ன நடக்கிறது என்று........... B)

தாத்தா தமிங்கில பிழை தான் என்று நீங்க சொல்லுறது சரியா இருக்கும்............அதை யாழில மட்டும் கட்டுபடுத்தி சமூகத்தை திருத்த போறீங்க என்றா சூப்பரா தான் இருக்கு.....அத்தோட சிட்னியை பொறுத்தவரை தமிங்கிலம் இவ்வாறும் கதைபதில்லை எப்படி என்று உதாரணம் தருகிறேன்.......................

முதாலாவது உதாரணம்..............

1) வட் லா.........

2) கவ் ஆர் யூ லா.......

3)திங்கிங் லா.......

இப்படி ஒரு சொல்லில் ஆங்கிலமும் தமிழும் சேர்ந்து நல்ல மொழி ஒன்று கதைப்பார்கள் மேலதிக உதாரணம் பிறகு சொல்கிறேன்........... ;) .

இப்படி தான் தமிழ் போய் கொண்டு இருகிறது.......இதில தாத்தா யாழில தான் கதைத்து சமூகம் கெட்டு போகுது என்றா நல்லா தான் இருக்கு...........

சரி தாத்தா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்..............யாழை மட்டும் பார்க்காம கொஞ்சம் வெளியால வந்து சமூகத்தையும் பார்த்தா நல்லது தாத்தா......... :D

அப்ப நான் வரட்டா தாத்தா............. :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு ஒரு கிளியர் பண்ணி வையுங்கோ எல்லாரும் சேர்ந்து அதாவது சிவாஜிபடம் நான் பார்க்கவில்லை ஆனா பாட்டு கேட்டனான அதில ஒரு பாட்டு வரும் அதற்கு கொஞ்சம் விளக்கம் தாங்கோ.

பூம்பாவா ஜாம்பல் ஜாம்பல்

புன்னகையோ மெளவல் மெளவல்

இது தமிழா அல்லது தமிங்கிலமா அல்லது வேற ஏதாவது தெய்வீக ஒலியா? :lol:

இந்த திமிங்கிலத்தில் நானும் சிலவேளை மாட்டுப்படுகின்றேன். அவ்வாறு இருந்தால் மன்னியுங்கள்.

புத்தன் அந்தப்பாட்டு இதுதான்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்

புன்னகையோ மௌவல் மௌவல்

உன் பூவிழி பார்வை போதுமடி

என் பூங்கா இலைகளும் மலருமடி

உன் கால்கொலுசொலிகள் போதுமடி

பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

Edited by Paranee

  • கருத்துக்கள உறவுகள்

எழுத ஆரம்பிக்கும் போது ஆங்கிலச்சொற்கள் வரும். ஆனாலும் அதை தவிர்த்தே எழுதுறேன்.

இனி கூட கவனம் எடுக்கனும் .

தமிழ் ஆசிரியை உங்களுக்குமா பிரச்சனை

புத்து மாமா அந்த வரியை மட்டும் ஏன் பார்கிறீங்க மிச்ச வரியை பாருங்கோ எவ்வளவு நல்ல வரிகள்....................அப்படி தான் தமிங்கிலமும் நல்லதை பாருங்கோ கூடாததை ஏன் பார்கிறீங்க..................... :angry: :angry:

நானும் சில வரி அந்த பாட்டில் இருந்து சொல்லுகிறேன்................... :P

வெண்ணிலவை மணக்கும் மன்மதனா

என் தேநிலவே நிலவுடன் தான்

அவள் யாரும் இல்லை இதோ இவள் தான்.....................

இப்படி ஒரு அழகிய வரிகள் இருக்கு அதை பார்க்கமாட்டீங்க..................... :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

எழுத ஆரம்பிக்கும் போது ஆங்கிலச்சொற்கள் வரும். ஆனாலும் அதை தவிர்த்தே எழுதுறேன்.

இனி கூட கவனம் எடுக்கனும் .

தமிழ் ஆசிரியை உங்களுக்குமா பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்

பூஸ் குட்டி அண்ணா கவ் ஆர் யூ ஓ மன்னியுங்கோ எப்படி சுகம் கண்டு கனகாலம்........... :P

அமெரிக்கா வந்த புதிதில் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தார்கள்.ஒரு நாள் வெளியில் போக வரும் போது பூனை ஒன்று வந்தது.நானும் பிள்ளைகளுக்கு காட்டுவதற்காக பூஸ் பூஸ் என்ற போது பக்கத்தில் இருந்த ஒரு வெள்ளை இனத்து பெண்ணெருவரும் வெளியில் வந்தார்.இப்படி பூனையைக் கூப்பிடக் கூடாது இது கெட்ட வார்த்தை என்று சொன்னார்.பதிலுக்கு நன்றி சொல்லிவிட்டு இருந்துவிட்டேன்.இப்போது ஜமுனா பூஸ் என்று எழுதும் போது பழைய நினைவு வந்தது எழுதுகிறேன்.அதுக்காக கத்தி கோடரி எடுக்காதீங்கப்பா

ஈழபிரியன் பெரியப்பா நல்ல தகவம் ஒன்று தந்திருகிறீங்க எனக்கு தெரியும் ஆனாலும் கூப்பிட்டு பார்தனான் பாருங்கோ.........எனி அப்ப எப்படி கூப்பிடுறது என்று சொல்லுங்கோ ஈழபிரியன் பெரியப்பா................ :P ;)

சின்னா தாத்தா யாரை போங்கோ என்று சொல்லுறீங்க.......... :angry:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பாவிக்கும் எல்லாச் சொற்களையும் தூய தமிழ்ப் படுத்திப் பாவிப்பது கடினம். ஏராளமான பாவனைச் சொற்களுக்கு இன்னும் தமிழ் பெயர்கள் வரவில்லை. ஏற்கனவே வந்தவையும் மக்கள் பலருக்கு தெரியாது. ஆனால் பொதுவாக தெரிந்த தமிழ்ச் சொற்களை நடைமுறைப் படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. முயன்றால் முடியும். இதற்கு சில தீவிர நடவடிக்கைகள் வேண்டும்.

புதினம், சங்கதி போன்ற இணையத்தளங்களில் செய்திகளில் கார், பஸ், இரயில் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு

முறையே தூய தமிழில் மகிழூர்ந்து, பேரூர்ந்து, தொடரூந்து என்று எழுதுவதினைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சிலருக்கு இதனை வாசிக்க கடினமாக இருந்தாலும் ,பிறகு காலப் போக்கில் அவர்களுக்கு இச் சொற்கள் பழக்கத்தில் வரத் தொடங்கி விட்டது.

இவ்வாறே தமிழீழத்துக்கு சென்றால் அங்கே வணிக நிலையங்கள், அறிவுப்புக்களில் தூய தமிழ்ச் சொற்களே காணப்படுகிறது. அங்கே பேக்கரி என்ற பெயர்பலகைக்கு பதிலாக வெதுப்பகம் என்ற பெயர்ப்பலகையே உபயோகிக்கிறார்கள். அங்கே தமிழீழ வானொலியில் வரும் விளம்பரங்களில் அழகுமாடம், அழகுநிலா நகைமாடம் போன்ற சொற்களே உபயோகிக்கிறார்கள். இதனால் அங்குள்ளவர்கள் குளிர்களி என்றே ஐஸ்கிறீமை அழைக்கிறார்கள்.

"மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்".என்று தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் அவர்கள் சொல்லி இருந்தார். திரு இளங்குமரன் கிளிநொச்சியில் சென்ற மாசி மாதம் நடைபெற்ற கிளிநொச்சி தமிழ்ச் சங்க பணிமனையின் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

எமது மொழியை வளர்க்கின்ற உலகின் ஏனைய மொழிகளுக்கு நிகராக எமது மொழியை கொண்டு செல்லக்கூடிய அளப்பரிய பணி எம் முன்னால் உள்ளது. இந்த வகையிலே தான் இந்த மண்ணிலே எமது தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இழந்த மண்ணை மீட்கின்ற, இறைமையை மீட்கின்ற போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இப்போராட்டத்திற்கு வழிகாட்டுகின்ற தலைவர் அவர்கள், நாங்கள் பெறப்போகின்ற தமிழீழத்தில் வாழ்வதற்கு தமிழர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே, இந்த மண்மீட்பு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதேவேளை எமது மொழியை பிறமொழி கலப்பிலிருந்து மீட்டெடுக்கின்ற அந்த அரிய பணியை தூய்மையானது என உணர்ந்து தான் இயக்கத்தின் ஒரு பிரிவாக தமிழ் வளர்ச்சி கழகம் என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி, தமிழ் வளர்ச்சி கழகத்தின் குறிக்கோளாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருக்கக்கூடிய வகையில் செயற்பாடுகளை செய்யுமாறு பணித்திருந்தார்கள்.

அந்த வகையில் தமிழ் வளர்ச்சி கழகத்தினூடாக நாங்கள் தமிழீழத்தின் அடையாளத்தை அழிந்து விடாமல் நிலை நிறுத்துகின்ற வகையில், தமிழர்கள் தமிழ்ப் பெயரை இட்டுக்கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழ் வணிக நிலையங்கள், தெருக்கள், பள்ளிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி முழுப்பயன்பாட்டில் வரவேண்டும் என்பதோடு, என்றும் நாங்கள் எண்ணுகின்ற போது பேசுகின்ற போது எழுதுகின்ற போது தமிழை தமிழாக தூய்மையான தமிழாக பயன்படுத்துகின்ற அளவுக்கு எமது நிலை ஏற்பட வேண்டும் என்கின்ற வகையில் தான் தமிழ் வளர்ச்சிக் கழகம் தனது குறிக்கோள்களை வகுத்து புகழோர்களின் தொடக்கத்திலிருந்து தலைவரின் வழிகாட்டலின் கீழே கட்டளையின் கீழே இந்த தமிழ் வளர்ச்சிக் கழகம் செயற்பட்டு வருகின்றது. அதன் பொறுப்பாளராக இருந்த வகையில் யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முன்பதாகவே அரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.

அந்நேரத்தில் தலைவர் அவர்கள் ஒரு நாள் அழைத்துக் கூறினார். இந்த மாவீரர்களின் பெயர்ப்பட்டியலை பார்க்கின்றபோது பெயர்களில் கிட்லர் முசோலினி என்ற பெயர்கள் எல்லாம் காணப்படுகிறது. இந்த பெயர்களை பார்க்கின்ற போது எதிர்காலத்திலே இந்த தமிழீழத்தை கிட்லர் முசோலினி எல்லாம் வென்றெடுத்து தந்தார்கள் என்று எமது வரலாறு கூறக்கூடாது. அதலால் எமது இயக்கத்தின் போராளிகளிற்கு நாங்கள் முதலில் தமிழ்ப் பெயர்களை சூட்டுவோம். மக்களிடம் இக்கருத்தை கூறுவதற்கு முதல் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தி மக்களிற்கும் வழிகாட்டியாக நாங்கள் திகழுவோம் என்றார்.

ஒரே நாள் ஒரு இரவுக்குள் தலைவரின் கட்டளைப்படி நாலாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றினோம். அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்திலே வணிக நிலையங்கள் அனைத்தும் தமிழில் சூட்டப்பட வேண்டும் என்ற ஒரு செயற்பாட்டை அறிவித்தது மட்டுமல்ல அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி செயற்படுத்தினோம். அது மட்டுமல்ல இந்த தமிழ்மொழி காப்பு என்பதும் வளர்ப்பு என்பதும் எமது கல்வியினூடாக கல்வித்துறையினூடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. எமது இந்த தமிழ்மொழியை வளர்க்கின்ற பணி, காக்கின்ற பணி பள்ளிகளின் ஊடாக வளர்த்தெடுக்கப்படுகின்றது என்ற வகையிலே நாங்கள் தொடக்கப்பள்ளி செயற்பாடுகளிலே இந்த தூயதமிழை வளர்த்தெடுக்கின்ற, அறிமுகப்படுத்துகின்ற பணியை மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20112

யாழிலும் வடமொழி, ஆங்கிலம் கலந்த சொற்களை முடியுமானால் தவிர்த்து தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தையும், வடமொழியையும் தமிழில் திணிக்காதீர்கள். தமிழ் மொழியை இழந்தால் நாம் தமிழர் என்ற அடையாளத்தை இழப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.