Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தலைநகரின் பல பகுதிகளில் சிறிய ரக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர் முழுவதும் கரும் புகை எழுவதைக் காண முடிந்தது.

பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சண்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஐ.நா ஆதரவு தேசிய ஒற்றுமை அரசாங்கம், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ‘ஜாவியா வீதி பகுதியில் சென்ற ஒரு இராணுவக் குழுவானது, திரிபோலிக்கு மேற்கே 27வேது வாயிலில் ஆயுதக் குழுக்கள் கூடிக்கொண்டிருந்த போது, ஒரு இராணுவக் குழு சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த மோதல்கள் தூண்டப்பட்டன’ என தெரிவித்துள்ளது.

லிபிய செஞ்சிலுவைச் சங்கம், ஒரு ட்வீட்டில் அனைத்து தரப்பினரையும் ‘லிபிய ரெட் கிரசண்ட் அணிகள் நகரத்திற்குள் தங்கள் மனிதாபிமான பணிகளைச் செய்ய ஆதரவளிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வன்முறையை ‘உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.
லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் பி. நோர்லாண்ட், ‘திரிபோலியில் வன்முறை மோதல்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்று லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் செழுமைக்கு வழிவகுத்த ஸ்திரத்தன்மை தற்போது சிதைந்துவிட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மொஅம்மர் கடாபிக்கு எதிரான நேட்டோ ஆதரவு கிளர்ச்சியைத் தொடர்ந்து லிபியா 2014ஆம் ஆண்டு முதல் போரிடும் பிரிவுகளுக்கு இடையே பிளவுபட்டுள்ளது.

https://athavannews.com/2022/1296488

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது.

மேற்குக் கூட்டணியால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுப் போட்டிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் நாடு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nochchi said:

மேற்குக் கூட்டணியால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுப் போட்டிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் நாடு. 

ஒரு நாடு நன்றாக இருந்தால்… மேற்குலகுக்கு, வயித்தெரிச்சல் ஆரம்பித்து விடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

எண்ணெய் வளம் மிக்க வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் செழுமைக்கு வழிவகுத்த ஸ்திரத்தன்மை தற்போது சிதைந்துவிட்டது.

அன்று ரஷ்யா மேற்குலகிற்கு ஒத்துழைத்ததின் விளைவு. கிலாரியின் கழுத்தை திருக உண்மைகள் வெளிவரும்.இன்று டொனால்ட் ரம்ப் பழிவாங்கப்படுவதற்கு  இதுவும் ஒரு காரணம். உண்மைகள் வெளிவந்திடுமோ என பைடன் நிர்வாகம் பயப்பிடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்வாதிகாரி எப்படி அந்நாட்டில் பிறக்கும்  ஒவ்வொரு  குழந்தைக்கும் ங்கியில் அக்குழந்தையின் கல்விக்காக வங்கியில் பணம் இட்டார்?

லிபியாவை குட்டிச்சுவராக்கியது அமெரிக்கா  தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உபயம்; அமெரிக்கா + ஐரோப்பிய யூனியன் + இஸ்ரேல். 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு செய்த பைத்தியகாரத்தனங்களிலேயே முதன்மையானது சதாமையும், கடாபியையும் அழித்ததுதான்.

குறிப்பாக கடாபி - கடைசி காலங்களில் எல்லாவற்றையும் கைவிட்டு மேற்கின் உற்ற தோழன் ஆகி விட்டார். பிளேர் கடாபியின் டெண்ட்டில் போய் டீ குடிக்கும் அளவுக்கு நெருக்கம்.

கடாபியும், சதாமும் இருந்திருதால் - ஐசில் தலை தூக்கி இராது. சவுதி அடக்கி வாசித்திருக்கும்.

இவர்களை நீக்கிய பின் அதனால் மேற்கு பெரும் இலாபத்தை அடைந்தது என்றும் சொல்லமுடியாது.

நீண்ட, குறுகிய கால நோக்கில் எப்படி பார்த்தாலும் - இவர்கள் இருவரையும் அகற்றியது மேற்குக்கு பின்னடைவே.

சதாம் - புஷ்சின் பழிவாங்கும் குணம் மட்டுமே காரணம் என நினைக்கிறேன்.

கடாபி - காரணம் தெளிவில்லை, சிலவேளை ஹிலரியுடன் எண்ணை வியாபாரிகள் டீல் போட்டிருக்கலாம்.

தேர்தலில் சாயிப் கடாபி போட்டியிட போவதாக சொன்னார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

மேற்கு செய்த பைத்தியகாரத்தனங்களிலேயே முதன்மையானது சதாமையும், கடாபியையும் அழித்ததுதான்.

இது போன்ற   தெளிவான பிந்திய ஞானோதயம் உக்கல் உக்ரேன் விடயத்திலும் 5/6 வருடங்களுக்கு பின் நிச்சயம் வரும். அது வரை காத்திருங்கள்.

9 minutes ago, goshan_che said:

குறிப்பாக கடாபி - கடைசி காலங்களில் எல்லாவற்றையும் கைவிட்டு மேற்கின் உற்ற தோழன் ஆகி விட்டார். பிளேர் கடாபியின் டெண்ட்டில் போய் டீ குடிக்கும் அளவுக்கு நெருக்கம்.

இது போலவே புட்டினும் மேற்கின் உற்ற தோழனாக இருந்தார்.தொடர்ந்து இருக்க விரும்பினார்.

11 minutes ago, goshan_che said:

கடாபியும், சதாமும் இருந்திருதால் - ஐசில் தலை தூக்கி இராது. சவுதி அடக்கி வாசித்திருக்கும்.

இவர்கள் இருவரும் இருந்திருந்தால் ஐரோப்பாவிற்கு இவ்வளவு பொருளாதார/அரசியல் அகதி வருகைகள் இருந்திருக்காது.

12 minutes ago, goshan_che said:

இவர்களை நீக்கிய பின் அதனால் மேற்கு பெரும் இலாபத்தை அடைந்தது என்றும் சொல்லமுடியாது.

இவர்களின் அழிப்பின் பின்னரே எரிபொருள் ஏற்றம் ஏறத்தொடங்கியது. இவர்கள் காலத்தில் ஒரு பெரல் மசகு எண்ணை 60 டொலர் மட்டுமே.

14 minutes ago, goshan_che said:

நீண்ட, குறுகிய கால நோக்கில் எப்படி பார்த்தாலும் - இவர்கள் இருவரையும் அகற்றியது மேற்குக்கு பின்னடைவே.

இதே போல்தான் புட்டினை அழிக்க நினைக்க வெளிக்கிட்டு உலக பொருளாதாரமே தள்ளாட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, goshan_che said:

சதாம் - புஷ்சின் பழிவாங்கும் குணம் மட்டுமே காரணம் என நினைக்கிறேன்.

நான் தொடர்ந்து இருக்கின்றேன். அமெரிக்காவில் வந்து வந்து போகின்றார்கள் என்ற சதாமின் நக்கல்....

17 minutes ago, goshan_che said:

கடாபி - காரணம் தெளிவில்லை, சிலவேளை ஹிலரியுடன் எண்ணை வியாபாரிகள் டீல் போட்டிருக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அரபு ஒன்றியம் உருவாக்க முயற்சித்தார்.

18 minutes ago, goshan_che said:

தேர்தலில் சாயிப் கடாபி போட்டியிட போவதாக சொன்னார்கள். 

போட்டியிடுகின்றார். ஆனால் பாவம்.

⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அரபு ஒன்றியம் உருவாக்க முயற்சித்தார்.

அமெரிக்கன் டொலருக்கு இணையாக ஆபிரிக்கன் டொலரை உருவாக்க முற்பட்டதன் விளைவே!!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

இது போன்ற   தெளிவான பிந்திய ஞானோதயம் உக்கல் உக்ரேன் விடயத்திலும் 5/6 வருடங்களுக்கு பின் நிச்சயம் வரும். அது வரை காத்திருங்கள்.

39 minutes ago, goshan_che said:

இல்லை நான் ஈராக் யுத்தம் போகும் போதே அதை எதிர்த்தேன். நான் மட்டும் அல்ல 1.5 மில்லியன் மக்கள் லண்டனில் இறங்கி போராடினார்கள் யுத்தம் வேண்டாம் என.

மேற்கு செய்யும் எல்லாமுமே நல்லது இல்லை, எல்லாமுமே கெட்டதும் இல்லை.

ஒரு யுத்தத்துக்கு ஆயிரம் காரணம் இருக்கும் ஆனால் அடிப்படை காரணம் வலுவாக, வழுவற்றதாக இருக்க வேண்டும்.

பொஸ்னிய தலையீடு, கொசொவோ, 1ம் வளைகுடா யுத்தம், உக்ரேன் போன்றவை அடிப்படை காரணம் சரியான யுத்தங்கள்.

34 minutes ago, குமாரசாமி said:

இது போலவே புட்டினும் மேற்கின் உற்ற தோழனாக இருந்தார்.தொடர்ந்து இருக்க விரும்பினார்.

43 minutes ago, goshan_che said:

இதை பற்றி முன்பே நாம் போதுமானளவு உரையாடிவிட்டதால் தவிர்கிறேன்.

35 minutes ago, குமாரசாமி said:

இதே போல்தான் புட்டினை அழிக்க நினைக்க வெளிக்கிட்டு உலக பொருளாதாரமே தள்ளாட்டம்.

இது தவிர்க்க முடியாத விலை. ஆனால் இப்போ ஜேர்மனி 86% எரிவாயு கொள் அளவை அடைந்து விட்டது. ஒரு குறுகியகால எரிபொருள், பணவீக்கம் ஏற்றம் இருந்தாலும் - அதை காரணமாக்கி பூச்சிய காபன் பொருளாதாரததை நீண்ட கால நோக்கில் எழுப்புகிறார்கள்.

31 minutes ago, குமாரசாமி said:

நான் தொடர்ந்து இருக்கின்றேன். அமெரிக்காவில் வந்து வந்து போகின்றார்கள் என்ற சதாமின் நக்கல்....

இதில் கோபப்பட என்ன இருக்கிறது. வந்து வந்து போவதுதான் நாம் ஒரு மேம்பட்ட நாகரிகம் என்பதன் அடையாளம். புஷ் ஜூனியர் ஒரு கழண்ட கேஸ்🤣.

32 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அரபு ஒன்றியம் உருவாக்க முயற்சித்தார்.

இதையெல்லாம் கடைசியில் கைவிட்டு விட்டார் என நினைக்கிறேன். பிளேர் போய் சந்திக்கும் போது - அவர் முற்றாக சொல்வழி கேட்டு நடக்கும் பிள்ளை.

லொக்கபி வழக்கை கூட ஒரு மாரி ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டிருந்தார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

பொஸ்னிய தலையீடு, கொசொவோ, 1ம் வளைகுடா யுத்தம், உக்ரேன் போன்றவை அடிப்படை காரணம் சரியான யுத்தங்கள்.

கொசோவோ பிரிவு முற்றிலும் சூழ்ச்சி அரசியல் கொண்டது.
கொசோவோ நிலப்பரப்பு சேர்பியாவுக்கு சொந்தமானது. மார்ஷல் டிட்டோ காலத்தில் அல்பேனியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு குடியிருக்க/தங்க உதவிசெய்ய்ப்பட்ட நிலம். ஆனால் அவர்கள் மக்கள் தொகையால் பல்கி பெருகி தமது நிலம் நாடு என போராட ஆரம்பித்தவர்கள். மேற்குலகு சேர்பியர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் கொசோவோ தனிநாடு என அங்கீகரித்து விட்டது.
இன்றும் கோசோவோகாரரகள் தங்களை கோசோவோ என தனிப்பட சொல்ல மாட்டார்கள். கொசோவோ அல்பேனியர் என்று சேர்த்து விளிப்புடன் குறிப்பிடுவார்கள். 

13 minutes ago, goshan_che said:

இது தவிர்க்க முடியாத விலை. ஆனால் இப்போ ஜேர்மனி 86% எரிவாயு கொள் அளவை அடைந்து விட்டது. ஒரு குறுகியகால எரிபொருள், பணவீக்கம் ஏற்றம் இருந்தாலும் - அதை காரணமாக்கி பூச்சிய காபன் பொருளாதாரததை நீண்ட கால நோக்கில் எழுப்புகிறார்கள்.

நீங்கள் நினைப்பது போல் ஜேர்மனி நிலவரம் சுலபமானதாக இல்லை.அரசியல் வட்டத்திற்குள் பல குமுறல்கள் இருக்கின்றது.ஏதோ பூசி மெழுகிக்கொண்டு இருக்கின்றார்கள். எப்போது வெடிக்குமென தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

கொசோவோ பிரிவு முற்றிலும் சூழ்ச்சி அரசியல் கொண்டது.
கொசோவோ நிலப்பரப்பு சேர்பியாவுக்கு சொந்தமானது. மார்ஷல் டிட்டோ காலத்தில் அல்பேனியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு குடியிருக்க/தங்க உதவிசெய்ய்ப்பட்ட நிலம். ஆனால் அவர்கள் மக்கள் தொகையால் பல்கி பெருகி தமது நிலம் நாடு என போராட ஆரம்பித்தவர்கள். மேற்குலகு சேர்பியர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் கொசோவோ தனிநாடு என அங்கீகரித்து விட்டது.
இன்றும் கோசோவோகாரரகள் தங்களை கோசோவோ என தனிப்பட சொல்ல மாட்டார்கள். கொசோவோ அல்பேனியர் என்று சேர்த்து விளிப்புடன் குறிப்பிடுவார்கள். 

உலகில் எல்லா அரசியலுமே சூழ்சி மயப்பட்டதுதான்.

கொசோவோ பாரம்பரியமாக சேர்பிய பகுதி என்பது உண்மை. அங்கே சேர்பியாவின் பல வரலாற்று சின்னங்கள் இருப்பதும் உண்மை.

ஆனால் டிட்டோ காலத்துக்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக அல்பேனியர் அங்கே குடியேற ஆரம்பித்து விட்டார்கள்.

உண்மையில் டிட்டோ அல்பேனியர்களை துருக்கிக்கி நாடு மாற்றும், துருக்கியில் படிபிக்கும் turkfication நடைமுறையை கைக்கொண்டார்.

கொசொவோவில் பெரும்பான்மை இனமாக அல்பேனியர்கள் உள்ளமைக்கு காரணம் அவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். 

டிட்டோ காலத்தில் மிக சொற்ப அளவு அல்பேனியரே அல்பேனியாவில் இருந்து கொசொவோ வந்தார்கள்.

இது வரலாறு. ஆனால், மிலோசவிச் காலத்தில் கொசாவோவுக்கு இருந்த சுய ஆட்சியையும் அவர் பறித்தார்.

எது எப்படியோ பல நூற்றாண்டுகளாக அது அல்பேனிய பெரும்பான்மை மண்.

அங்கே சேர்பிய படைகளை அனுப்பினார்.

இப்படி இல்லாமல் - நிகழ்காலத்தில் கொசோவோ எந்த பெரும்பான்மை என பார்த்து, அவர்களுக்கு ஒரு சுயாட்சியை மிலோசவிச் கொடுத்திருந்தால், போரும் வந்திராது. கொசோவோவும் பிரிந்திராது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கொசாவோவில் கையில் எடுக்க பட்டது right to protect எனப்படும் உருவாகி வருவதாக சொல்லப்படும் சர்வதேச சட்டம்.

இலங்கையிலும் இதை பயன்படுத்துமாறுதான் நாம் 2008-9 இல் கோரினோம்.

ஆனால் இவர்கள் பயன்படுத்தவில்லை.

எமக்கு பயன்படுத்தவில்லை என்பதால் கொசோவோவில் பயன்படுத்தியது தவறு என கூற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை நான் ஈராக் யுத்தம் போகும் போதே அதை எதிர்த்தேன். நான் மட்டும் அல்ல 1.5 மில்லியன் மக்கள் லண்டனில் இறங்கி போராடினார்கள் யுத்தம் வேண்டாம் என.

மேற்கு செய்யும் எல்லாமுமே நல்லது இல்லை, எல்லாமுமே கெட்டதும் இல்லை.

ஒரு யுத்தத்துக்கு ஆயிரம் காரணம் இருக்கும் ஆனால் அடிப்படை காரணம் வலுவாக, வழுவற்றதாக இருக்க வேண்டும்.

பொஸ்னிய தலையீடு, கொசொவோ, 1ம் வளைகுடா யுத்தம், உக்ரேன் போன்றவை அடிப்படை காரணம் சரியான யுத்தங்கள்.

இதை பற்றி முன்பே நாம் போதுமானளவு உரையாடிவிட்டதால் தவிர்கிறேன்.

இது தவிர்க்க முடியாத விலை. ஆனால் இப்போ ஜேர்மனி 86% எரிவாயு கொள் அளவை அடைந்து விட்டது. ஒரு குறுகியகால எரிபொருள், பணவீக்கம் ஏற்றம் இருந்தாலும் - அதை காரணமாக்கி பூச்சிய காபன் பொருளாதாரததை நீண்ட கால நோக்கில் எழுப்புகிறார்கள்.

இதில் கோபப்பட என்ன இருக்கிறது. வந்து வந்து போவதுதான் நாம் ஒரு மேம்பட்ட நாகரிகம் என்பதன் அடையாளம். புஷ் ஜூனியர் ஒரு கழண்ட கேஸ்🤣.

இதையெல்லாம் கடைசியில் கைவிட்டு விட்டார் என நினைக்கிறேன். பிளேர் போய் சந்திக்கும் போது - அவர் முற்றாக சொல்வழி கேட்டு நடக்கும் பிள்ளை.

லொக்கபி வழக்கை கூட ஒரு மாரி ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டிருந்தார்கள். 

வளைகுடா யுத்தம் சரியான முடிவா? 🥺

18 minutes ago, goshan_che said:

கொசாவோவில் கையில் எடுக்க பட்டது right to protect எனப்படும் உருவாகி வருவதாக சொல்லப்படும் சர்வதேச சட்டம்.

இலங்கையிலும் இதை பயன்படுத்துமாறுதான் நாம் 2008-9 இல் கோரினோம்.

ஆனால் இவர்கள் பயன்படுத்தவில்லை.

எமக்கு பயன்படுத்தவில்லை என்பதால் கொசோவோவில் பயன்படுத்தியது தவறு என கூற முடியாது.

use and throw ? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வளைகுடா யுத்தம் சரியான முடிவா? 🥺

1ம் வளைகுடா யுத்தம் - குவைத் அமரிக்காவின்   நேசநாடு, அதை ஆக்கிரமித்தால் அமெரிக்கா உதவிக்கு போகும் என்ற அளவில் சரிதான். குவைத்தை அமெரிக்கா மீட்டிருக்காவிட்டால் use and throw என குற்றம் சாட்டி இருப்போம்.

சதாம் செய்த பேய் வேலை குவைத்தை ஆக்கிரமித்தது. என்ன காரணம் இருந்தாலும் - ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது பலதை யோசிக்க வேண்டும். இது அமெரிக்கா கூட வியட்நாமில் கற்ற பாடம்தான். 

சீனா தைவானில் இறங்க ஏன் யோசிக்கிறது?

இந்தியா ஏன் மறுபடியும் இலங்கையில் இறங்குவதை முடிந்தளவு தவிர்கிறது?

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க முன் இந்த நிதானம் மிக முக்கியம். இல்லாவிட்டால் ஆப்பிழுத்த நிலை வரக்கூடும்.

21 minutes ago, Kapithan said:

use and throw ? 

yes but we also can do the same, in our own way.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, goshan_che said:

கொசொவோவில் பெரும்பான்மை இனமாக அல்பேனியர்கள் உள்ளமைக்கு காரணம் அவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். 

டிட்டோ காலத்தில் மிக சொற்ப அளவு அல்பேனியரே அல்பேனியாவில் இருந்து கொசொவோ வந்தார்கள்.

என்னது பல நூற்றாண்டு காலமாகவா??????? சுத்த உருட்டுதான்...

ஐயோ சாமி எனக்கு உப்பிடி உருட்ட வராது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

என்னது பல நூற்றாண்டு காலமாகவா??????? சுத்த உருட்டுதான்...

ஐயோ சாமி எனக்கு உப்பிடி உருட்ட வராது. 😎

1389 முஸ்லிம் ஒட்டமான் சாம்ராஜ்ஜத்தின் சேர்பியா (ஸ்லாவிக், கிறீஸ்தவ) மீதான படை எழுப்பும் - அதில் ஒட்டமான்கள் வெற்றி கொண்ட battle of Kosovo வோடு ஆரம்பிக்கிறது கொசோவாவில் முஸ்லிம் அல்பேனியர்கள் வருகை. இதன் பின் பல நூற்றாண்டு காலமாக அருகில் இருந்த அல்பேனியாவில் இருந்து கொசோவா நிலப்பரப்பில் அல்பேனியரகள் குடியேறினர்.

1948 குடிசன வகை எடுப்பில் கொசோவாவில் அல்பேனியர் - 68.5%.

சேர்பியர் - 23.6% என்கிறது விக்கி.

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Kosovo

மார்சல் டிட்டோ ஆட்சிக்கு வந்தது 1953.

ஆகவே டிட்டோவுக்கு முன்பே அல்பேனியர்கள் கொசோவோவில் அறுதி பெரும்பான்மை ஆகி விட்டனர் என்பதும், ஒரு பாரம்பரிய சேர்பிய மண்ணில் அவர்கள் இப்படி காலூன்ற நூற்றாண்டுகள் சென்றிருக்கும் என்பதும் வெளிப்படை தானே அண்ணை.

#உருப்படியா வரலாறை படித்தால் உருட்டுக்களுக்கு அஞ்சவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சதாம், கடாபியின் நிலை நிச்சயமாக தனக்கு வரும் என சிரிய தலைவர் அசாட் முற்பாதுகாப்பாக தன்னை காப்பாற்ற ரஸ்யாவின் உதவியை நாடினார். அங்கும் நாறடித்தது மேற்கு.

அசாட் எப்படிப்பட்ட தலைவர் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது.( who cares)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

1948 குடிசன வகை எடுப்பில் கொசோவாவில் அல்பேனியர் - 68.5%.

சேர்பியர் - 23.6% என்கிறது விக்கி.

https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Kosovo

விக்கியில் யாரும் எப்படியும் எழுதலாம். அது உண்மை வரலாறு ஆகாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

விக்கியில் யாரும் எப்படியும் எழுதலாம். அது உண்மை வரலாறு ஆகாது.

அது உண்மைதான் அண்ணை. நானும் விக்கியை ஆதாரமா காட்டுவதை விரும்புவதில்லைதான் ஆனால் ஓட்டமன் காலத்தில் இருந்து அல்பேனியர் கொசவோவில் வாழ தொடங்கி விட்டார்கள் என்பது வெளிப்படையாக எல்லாரும் ஏற்க்கும் ஒன்று.

இருங்கோ உங்களுக்கு நல்ல ஆதராம்மாய் தேடி எடுத்துதாறன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இருங்கோ உங்களுக்கு நல்ல ஆதராம்மாய் தேடி எடுத்துதாறன்.

The Serbs and Albanians are divided by the two most important defining elements of national identity in the Balkans: language and religion. The Albanians speak Albanian and are mainly Muslims, the Serbs speak Serbian and are mainly Orthodox Christians. The Albanians are descendants of the ancient Illyrians who were living in the southeast Balkans as far back as 700 BC. The Serbs arrived as part of the huge movement of Slavs in the sixth or seventh centuries. Some Serb historians claim that the Albanians in fact only moved into Kosovo in the 17th and 18th centuries. The Albanians maintain that they have been there ever since Illyrian times.[1] In any event, the two national groups have rarely lived together in peace and harmony. Moreover, the relationship between them has for centuries been one of barely disguised hatred punctuated by occasional outbursts of violence.

………

The importance of Kosovo to the Serbs is explained in large part by a battle fought there in 1389. The Battle of Kosovo Polje (or Kosovo Field) was fought chiefly between the Serbs and the Turks. The Turks won and as a consequence established their rule over the Serbs for the next five centuries.

………

While Kosovo has clear historical significance for the Serbs, it also has some importance to the Albanians. It was in Kosovo that the Albanian national revival started with the establishment in 1878 of the League of Prizren.[7]But when the modern Albanian state was created in 1912, it did not include Kosovo, which was instead to become part of Yugoslavia. The status of Kosovo has been disputed ever since. Kosovo did briefly become a part of Albania during World War II. Having taken over Albania, Italy created a nascent Greater Albania including Kosovo and some Macedonian and Montenegrin territory.[8] After the war, the victorious Yugoslav partisan leader, Tito, emerged predominant: Kosovo was returned to Yugoslavia.

……..

https://www.refworld.org/docid/3ae6a6b9c.html

மேலே உள்ளதன் சுருக்கம்.

1. அல்பேனியர்கள் தாம் கொசோவோவில் 700 BC முதல் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சேர்பிய வரலாற்று ஆசிரியர்கள் அவர்கள் 17, 18ம் நூற்றாண்டில் வந்ததாக சொல்லிறார்கள் (சேர்பியர்களே அவர்கள் நூற்றாண்டுகளாக கொசோவோவில் இருப்பதை ஏற்கிறார்கள்).

2. நூற்றாண்டுகளாக கொசாவோவில் சேர்பிய, அல்பேனிய உறவுகள் மோசமாக இருந்தன.

3. அல்பேனிய தேசிய இன மீள் எழுச்சியானது கொசோவோவில் 1878 இல் ஆரம்பமாகியது.

4. இரெண்டாம் உலக யுத்தத்தின் போது இத்தாலி, கொசோவோவை (இன்னும் சில பகுதிகளை சேர்த்து) அல்பேனியாவுடன் சேர்த்தது.

இதில் இருந்து கொசோவோவில் அல்பேனியர் வருகையும், இருப்பும் நூற்றாண்டுகாளாய் நடந்தது என்பது தெளிவாகிறது.

30 minutes ago, குமாரசாமி said:

விக்கியில் யாரும் எப்படியும் எழுதலாம். அது உண்மை வரலாறு ஆகாது.

நான் தந்த ஆதாரம் நம்பகமானது என்பதற்கு ஆதாரம்👇.

https://www.unhcr.org/uk/news/latest/2007/6/4671697f4/unhcr-relaunches-refworld-state-of-art-online-protection-tool.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.