Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் அணி அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ளை வித்து இருக்கும் குப்பை அணி

அடித்தா மொட்டை இல்லாட்டி குடும்பி.

  • Replies 167
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அடித்தா மொட்டை இல்லாட்டி குடும்பி.

நான் சொல்ல‌ வ‌ந்தது என்ன‌ என்றால்
 வெஸ்சின்டீஸ் அணி வீர‌ர்க‌ள் அனுப‌வ‌ம் இல்லாத‌ குப்பை வீர‌ர்க‌ள் என்று

ந‌ல்லா இருந்த‌ அணிய‌ முற்றிலும் சிதைச்ச‌து வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழுவின‌ர் தான் , 

ட‌ர‌ன் சாமி போல் நிக்கில‌ஸ் போர்ர‌ன் திற‌மையான‌ க‌ப்ட‌ன் கிடையாது , 

அணிய‌ ப‌ல‌ வ‌ருட‌மாய் ட‌ர‌ன் சாமி ந‌ல்லா வ‌ழி ந‌ட‌த்தினார் , க‌ட‌சி க‌ட்ட‌த்தில் இற‌ங்கி அணிக்கு ப‌ல‌ வெற்றியும் தேடி த‌ந்த‌ பெருமை ட‌ர‌ன் சாமிக்கு தான் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அடித்தா மொட்டை இல்லாட்டி குடும்பி.

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ வீர‌ர்க‌ளை பார்த்தாலே அருவ‌ருப்பு தான் வ‌ரும் ,

அமெரிக்கா அணிக்காக‌ விளையாடிட்டு இருந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரை வெஸ்சின்டீஸ் அணியில் விளையாட வைச்ச‌து முட்டாள் த‌ன‌ம் , அவ‌ரின் ப‌ந்துக்கு ம‌ற்ற‌ அணிக‌ள் ஈசிய‌ ர‌ன்னை குவிப்பார்க‌ள் ,

 ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து விச்சாள‌ர் சுனில் ந‌ர‌ன் இருக்கும் போது , அமெரிக்கா அணிக்காக‌ விளையாடின‌வ‌ர் வெஸ்சின்டீஸ் அணிக்கு தேவை இல்லா ஆனி 😏

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

15/09/2022
148
PAK-Squad-T20-WC-England-T20Is-696x455.j
sms-voting.gif 
  

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தானின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் போட்டி நடுவர் மரணம்

இந்த ஆண்டுக்கான (2022) ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடிய அதே அணியே பெரும்பாலான மாற்றங்களின்றி T20 உலகக் கிண்ணத்திற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் குழாத்தில் அதிரடிவீரர் பகார் சமானிற்குப் பதிலாக இடதுகை துடுப்பாட்டவீரரான ஷான் மசூத் இடம்பெற்றிருக்கின்றார்.

இதுவரை T20 சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெறாத ஷான் மசூத் பாகிஸ்தானின் உள்ளூர் தொடர்களான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) மற்றும் நெஷனல் T20 கிண்ணம் (National T20 Cup) ஆகிய தொடர்களில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதில் ஷான் மசூத் இந்த ஆண்டுக்கான PSL தொடரின் 12 இன்னிங்ஸ்களில் ஆடி 478 ஓட்டங்கள் குவித்ததோடு, நெஷனல் T20 கிண்ணத் தொடரில் 204 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷான் மசூத் தடுமாறி வருகின்ற பாகிஸ்தான் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் காயம் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரில் ஆடாது போன நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி, T20 உலகக் கிண்ண குழாத்தில் மீண்டும் இடம்பெற்றிருப்பதோடு ஆசியக் கிண்ணத்தில் காயத்துக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் வஸீமும் அணியில் மீண்டிருக்கின்றார்.

இதேவேளை ஹஸன் அலி மற்றும் சஹ்நவாஸ் தஹானி ஆகியோர் பாகிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பினை பெறத் தவறியிருக்கின்றனர். எனினும் சஹ்நவாஸ் தஹானி, பகார் சமானுடன் இணைந்து T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தானின் மேலதிக வீரராக காணப்படுகின்றார்.

பாகிஸ்தான் அணி T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இங்கிலாந்துடன் 7 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ளதோடு, அதன் பின்னர் நியூசிலாந்துக்கு பயணமாகி அங்கே நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு T20 தொடரிலும் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2009ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி, 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க பயிற்சிவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ள மார்க் பௌச்சர்

அதேநேரம் 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் குழு B இல் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் மெல்போர்ன் நகரில் இடம்பெறவுள்ள தமது முதல் போட்டியில் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் T20 உலகக் கிண்ண குழாம்

பாபர் அசாம் (தலைவர்), சதாப் கான் (பிரதி தலைவர்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவுப், இப்திக்கார் அஹ்மட், குஸ்தில் சாஹ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வஸீம், நஸீம் சாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்

மேலதிக வீரர்கள் – பகார் சமான், சஹ்நவாஸ் தஹானி, மொஹமட் ஹரிஸ்

https://www.thepapare.com/shan-masood-picked-for-t20-wc-fakhar-zaman-misses-out-news-tamil/

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானின் T20 உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

16/09/2022
3
Afghanistan-cricket-squad-696x464.jpg
sms-voting.gif 
  

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய தமது அணிக் குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது.

ஆப்கானிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாம், ஆசியக் கிண்ணத்தில் பங்கெடுத்த அதே அணியுடன் சில மாற்றங்கள் அடங்கலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாத்தில் அறிமுக வேகப்பந்துவீச்சாளரான சலீம் சயிப் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். இவர் தவிர மணிக்கட்டு சுழல்பந்து சகலதுறைவீரர் கைஸ் அஹ்மட், மத்திய வரிசை துடுப்பாட்டவீரர் தார்வீஷ் ரசூலி ஆகியோரும் T20 உலகக் கிண்ணக் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த வீரர்களில் கைஸ் அஹ்மட் மற்றும் சலீம் சயிப் ஆகியோர் அண்மையில் உள்ளூர் T20 லீக் தொடரில் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாகவே அவர்கள் உலகக் கிண்ண வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஆசியக் கிண்ண குழாத்தில் காணப்பட்ட சமியுல்லா சின்வாரி, ஹஸ்மத்துல்லா சஹிதி, அப்சார் சஷாய், கரீம் ஜனாட் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோருக்கு T20 உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதேநேரம் அணிக்கு நம்பிக்கை தர எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்டவீரர்களாக ஹஸ்ரத்துல்லா சஷாய், இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் காணப்பட அணிக்கு நம்பிக்கை தரும்

பந்துவீச்சாளர்களாக ரஷீட் கான், பஷால் ஹக் பரூக்கி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் காணப்படுகின்றனர்.

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிக விலை போகவுள்ள சாமிக கருணாரத்ன

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான சுபர் 12 சுற்றில் நேரடி வாய்ப்பினைப் பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் குழுவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் காணப்படுவதோடு, ஆப்கானிஸ்தான் அணி தமது முதல் உலகக் கிண்ணப் போட்டியில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி இங்கிலாந்துடன் ஆடவிருக்கின்றது.

ஆப்கானிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாம்

மொஹமட் நபி (அணித்தலைவர்), நஜிபுல்லா சத்ரான் (பிரதி தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்சய், தர்வீஷ் ரசூலி, பரீட் அஹ்மட் மலிக், பசால் ஹக் பரூக்கி, ஹஸ்ரத்துல்லா சஷாய், இப்ராஹிம் சத்ரான், முஜிபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், கைஸ் அஹ்மட், ரஷீட் கான், சலீம் சபி, உஸ்மான் கனி

மேலதிக வீரர்கள் – அப்சார் சஷாய், ஷரபுத்தீன் அஷ்ரப், குல்படின் நயீப், ரஹ்மத் சாஹ்

https://www.thepapare.com/afghanistans-t20-world-cup-squad-nabi-to-lead-news-tamil/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பையன்26 said:

புலிக் குட்டிய‌ல் வீர‌த்தோடு க‌ள‌த்தில் குதிக்க‌ த‌யாராகி விட்டின‌ம்

இன்னும் ஏன் தாம‌தம் பெரிய‌ப்பா

போட்டி கேள்விக‌ளை சீக்கிர‌ம் போடுங்கோ...........ந‌ன்றி 

இந்த வார இறுதியில் திரி திறக்கின்றேன்😀

15 hours ago, ஈழப்பிரியன் said:

அது தானே.இன்னும் ஒரு மாதம் தானே இருக்கு.எறும்புகள் பூச்சி பூரானுகளை ஓடவிட்டு சாத்திரம் பார்க்க வேண்டாமோ?

என்ன சாத்திரம் பார்த்தாலும் ஆப்கானிஸ்தானே வெல்லப்போகின்றது😆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ட‌ர‌ன் சாமி போல் நிக்கில‌ஸ் போர்ர‌ன் திற‌மையான‌ க‌ப்ட‌ன் கிடையாது , 

கிரோன் பொலார்ட் ஐ விட நிக்கோலஸ் பூரான் எவ்வளவோ மேல் பையா! 

சுனில் நாராயண், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்றோர் நாட்டைவிட காசுக்கு விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கிரோன் பொலார்ட் ஐ விட நிக்கோலஸ் பூரான் எவ்வளவோ மேல் பையா! 

சுனில் நாராயண், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்றோர் நாட்டைவிட காசுக்கு விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள்!!

இல்லை ந‌ண்பா சுனில் ந‌ர‌ன் அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்டு ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு

 

நீங்க‌ள் சொல்லுவ‌தும் ச‌ரி தான் தேசிய‌ அணிக்கு விளையாடுவ‌தை விட‌ வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டுக்க‌ளில் கூடுத‌ல் ஆர்வ‌ம் கார‌ண‌ம் ப‌ண‌ம்

 

வெஸ்சின்டீஸ் அணி விளையாடும் போது கிரிக்கேட் வைர்னையாள‌ர்க‌ள் கூட‌ சுனில் ந‌ர‌னின் பெய‌ரை சொல்வ‌தை ப‌ல‌ த‌ட‌வை கேட்டு இருக்கிறேன் ந‌ண்பா

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் சுனில் ந‌ர‌னை சேர்த்து இருக்க‌னும்

 

இப்ப‌ வெஸ்சின்டீஸ் அணியில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து விச்சாள‌ர் இல்லை , 

 

2012ம் ஆண்டு உல‌க‌ கோப்பை பின‌லில் சிறில‌ங்காவை வீழ்த்தி வெஸ்சின்டீஸ் கோப்பை வெல்ல‌ சுனில் ந‌ர‌னின் ப‌ங்கு பெரிய‌து ந‌ண்பா

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கிரோன் பொலார்ட் ஐ விட நிக்கோலஸ் பூரான் எவ்வளவோ மேல் பையா! 

சுனில் நாராயண், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்றோர் நாட்டைவிட காசுக்கு விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள்!!

வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் ஊதிய‌ பிர‌ச்ச‌னையில் 2005ம் ஆண்டே தேசிய‌ அணியில் விளையாட‌ மாட்டோம் என்று பெரிய‌ பிர‌ச்ச‌னையே ந‌ட‌ந்த‌து , ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌லும் இதே பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்த‌து , 

ப‌ல‌மாய் இருந்த‌ அணிய‌ புதைகுழியில் கொண்டு போய் த‌ள்ளின‌து தேர்வுக்குழு தான் ந‌ண்பா

இந்த‌ உல‌க‌ கோப்பையிலும் வேண்டி க‌ட்டிக் கொண்டு நாடு திரும்புவின‌ம் போன‌ வ‌ருட‌த்தை போல்...............ட‌ர‌ன் சாமி தேசிய‌ அணிக்காக‌ இன்னும் எவ‌ள‌வு கால‌ம் விளையாடி இருக்க‌ம் , சாமிய‌ ஒரு கார‌ன‌மும் இன்றி அணியில் இருந்து 2016ம் ஆண்டே ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌வ‌ர் ,

சாமி அணிய‌ ப‌ல‌ வ‌ருட‌ம் சிற‌ப்பாய் வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர்...........இனி சாமிய‌ போல‌ ஒரு க‌ப்ட‌ன் வெஸ்சின்டீஸ் அணிக்கு கிடைக்காது.....................

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு இந்தியாவில் பல நாடுகளில் இருந்து வீரர்களை தெரிவு செய்ய வேண்டும்.  அங்கும் கறுப்பு, பிரவுண் பிரச்சனை உண்டு. இதனால் தான் சுனில் குழுவில் இடம் பெறவில்லை.  அடுத்தது சிறிய நாடுகளில் இருந்து வீரர்கள் தெரிவாவதும் ( திறமை இருந்தும்) கஸ்டமான நிலை. ஜமேக்கா இவற்றுக்கு தலமையாக உள்ளது.
பணம் வீரர்களுக்கு அதிகம் கொடுக்கப்படுவதில்லை என்பது மேற்கிந்திய குழுவின் மிகப்பெரிய பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போது வேறொரு இடத்தில் நிற்பதால் இரு வாரங்களாக இன்ரநெற் இன்னும் கிடைக்கவில்லை ......அது வந்ததும் வந்து கலந்து கொள்கிறேன்.......ஒரே வேலைப்பளு, இன்று மகன் வீட்டில் வந்துநின்றுதான் எழுதுகின்றேன்......!

அநேகமாய் வாறகிழமை கிடைக்கும் போல.....!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

என்ன சாத்திரம் பார்த்தாலும் ஆப்கானிஸ்தானே வெல்லப்போகின்றது😆

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பல பில்லியன் டொலர்களை கொட்டி ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சி கொடுத்து கஷ்டபட்டு உருவாக்கிய ஆப்கானிஸ்தான் இராணுவம்  கடைசியில் என்ன செய்தது என்பதை வைத்து பார்த்தால் நீங்கள் சொல்வது தான் நடைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

கராச்சி, 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். 

சோயிப் அக்தர் கூறியதாவது:- 

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/Sports/Cricket/pakistans-world-cup-squad-disappointing-former-pakistan-fast-bowler-794495

  • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு - மகேல ஜெயவர்த்தனே கருத்து

By RAJEEBAN

18 SEP, 2022 | 01:03 PM
image

துபாய்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. இந்நிலையில் அவர், இடம் பெறாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மகேல ஜெயவர்த்தன   கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், ஐசிசி நிகழ்வில் கூறும்போது, “டி 20 உலகக் கோப்பையை ரவீந்திர ஜடேஜா இல்லாமல் எதிர்கொள்வது சவால்தான். இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் 5-வது இடத்தில் ஜடேஜா சரியாக பொருந்தியிருந்தார். அவரும், ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் வரிசையில் முதல் 6 இடங்களில் இருப்பது என்பது இந்திய அணிக்கு அதிக நெகிழ்வு தன்மையை கொடுத்தது.

 

இந்திய அணிக்கு இது கடினமான ஒன்று, இடது கை பேட்ஸ்மேன் இல்லாதது கவலையாக இருக்கக்கூடும். இதனால் தினேஷ் கார்த்திக்கை தவிர்த்து விட்டு ரிஷப் பந்த்தை பேட்டிங் வரிசையில் 4 அல்லது 5-வது இடத்துக்கு கொண்டுவர யோசிக்கக்கூடும். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்த விஷயங்களை சரிசெய்ய வேண்டும். ஆனாலும் ஜடேஜா இருந்த பார்முக்கு அவர், இல்லாததது இந்திய அணிக்கு பெரிய இழப்புதான்.

 

அதேவேளையில் விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பதை பார்க்க சிறப்பாக உள்ளது. புத்திசாலித்தனமான வீரர்கள் அனைவரும் உலகக் கோப்பையில் சிறந்த ஃபார்மில் இருக்க வேண்டும், அதுதான் உலகக் கோப்பைக்கும் தகுதியானது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடர் சுவாரசியமானதாக இருக்கும்.

 

என்னை பொறுத்தவரையில் இந்திய அணி விளையாடும் விதம் சிறப்பாக உள்ளது. செயல், திறமை அனைத்தும் உள்ளது. அவர்களுக்கு பேட்டிங், பந்து வீச்சு மற்றும் களத்தில் செயல்படுவதில் சிறிது நம்பிக்கை தேவை. இவை இந்தியா மேம்படுத்த விரும்பக்கூடிய சிறிய விஷயங்களாகும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்த முடியும், திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பெற வேண்டும்.

 

ஆசிய கோப்பையில் பந்து வீச்சில் இந்தியா தேக்கம் கண்டதற்கு ஜஸ்பிரீத் பும்ராஇல்லாததும் ஒரு காரணம். புதிய பந்திலும், இறுதிக்கட்ட பந்து வீச்சிலும் ஒரு பெரிய இடைவெளியை நிரப்புவார். அவர், அணிக்கு திரும்பி இருப்பதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சுத் துறை செட்டிலாகிவிடும்” என்றார்.

https://www.virakesari.lk/article/135875

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
NAM FlagNAM
163/7
SL FlagSL
(10.3/20 ov, T:164) 74/5

Sri Lanka need 90 runs in 57 balls.

  • கருத்துக்கள உறவுகள்
NAM FlagNAM
163/7
SL FlagSL
(14/20 ov, T:164) 88/7

Sri Lanka need 76 runs in 36 balls.

  • கருத்துக்கள உறவுகள்
NAM FlagNAM
163/7
SL FlagSL
(18.6/20 ov, T:164) 108/10

Namibia won by 55 runs

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221016-142346.jpg

விடப்பா.. தர்மனே நாட்ட விட்டு ஓடி இருக்கான்.. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்..👌

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் உலக சம்பியன் இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது நமிபியா

16 OCT, 2022 | 02:45 PM
image

(நெவில் அன்தனி)

 

மெல்பர்ன் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் ஆசிய சம்பியனும் முன்னாள் உலக சம்பியனுமான இலங்கையை 55 ஓட்டங்களால் நமிபியா அபார வெற்றியீடடி வரலாறு படைத்தது.

இந்த வெற்றி மூலம் மிகவும் கடுமையான முதலாவது தடையை நமிபியா இலகுவாக கடந்து இருபது 20 உலகக் கிண்ணத்தில் தனது நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டது.

அதேவேளை, ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் (2 தடவைகள்) ஆகிய அணிகளை மண்டியிடச் செய்த இலங்கைக்கு    இன்றைய தோல்வியினால் எஞ்சிய 2 முதல் சுற்று போட்டிகளில் பெரும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்து.

இருபது உலகக் கிண்ண முதலாம் சுற்றில் (தகுதிகாண்) இலங்கையும் நமிபியாவும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன.

இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் இலங்கையை விஞ்சும் வகையில் நமிபியா விளையாடி முழு கிரிக்கெட் உலகையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்கள் என்ற ஓரளவு கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

ஓவருக்கு 8.2 ஓட்டங்கள் வீதம் பெறவேண்டிய இக்கட்டான நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சீரான இடைவெளியில் முதல் 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது.

முன்வரிசை வீரர்களான குசல் மெண்டிஸ் (6), பெத்தும் நிஸ்ஸன்க (6), தனுஷ்க குணதிலக்க (0) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க 3.3 ஓவர்களில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 21 ஓட்டங்களாக இருந்தது.

மொத்த எண்ணிக்கை 40 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வா 12 ஓட்டங்களுடன் களம் விட்டகல இலங்கை மேலும் அழுத்தத்திற்குள்ளானது.

எனினும் பானுக்க ராஜபக்ஷவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி  5ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 80 ஓட்டங்களாக உயர்த்தினர். அவர்கள் இருவரும் பகிர்ந்த 34 ஓட்டங்களே இலங்கை அணியின் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

ஆனால், இலங்கை அணியின் கடைசி 6 விக்கெட்கள் 36 பந்துகளில் வெறும் 28 ஓட்டங்களுக்கு சரிய நமிபியா வரலாற்று வெற்றியை ஈட்டியது.

பானுக்க ராஜபக்ஷ (20), வனிந்து ஹசரங்க டி சில்வா (4), தசுன் ஷானக்க (29), ப்ரமோத் மதுஷான் (0), சாமிக்க கருணாரட்ன (5), துஷ்மன்த சமீர (8) ஆகியோரே 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தவர்களாவர்.

மஹீஷ் தீக்ஷன 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நமிபியா பந்துவீச்சில் டேவிட் வைஸ் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பேர்னார்ட் ஷோல்ட்ஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஷிக்கொங்கோ 22 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜான் ஃப்ரைலின்க் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.

ஐசிசியில் முழு அந்தஸ்துடைய டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கு முன்னர் ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோவில் கடந்த மே மாதம் பெறப்பட்ட 161 ஓட்டங்களே டெஸ்ட் அணிக்கு எதிராக நமிபியாவினால் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் 15ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்த நமிபியா, 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஜான் ஃப்றைலின்க், ஜொஹானெஸ் ஸ்மித் ஆகிய இருவரினது நிதானம் கலந்த வேகத்துடனான துடுப்பாட்டங்களின் மூலம் பலமான நிலையை அடைந்தது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இருபது 20 உலகக் கிண்ண முதலாம் சுற்றில் நமிபியா 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

எனினும் இந்த வருடம் மிகுந்த நம்பிக்கையுடனும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடிய நமிபியா, 163 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு கடும் சவாலாக திகழ்ந்தது.

ஆரம்ப வீரர்களான மைக்கல் வென் லிஞ்சென் (3), டிவான் லா குக் (9) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களில் ஆட்டமிழக்க நமிபியாவின் மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜான் நிக்ல் லொவ்டி ஈட்டன் 12 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார். (35-3 விக்.)

எனினும் ஸ்டெபான் பார்ட் (26), அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ் (20) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு நகர்த்தினர்.

அவர்கள் இருவரும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்ததுடன் (91-5 விக்.), டேவிட் வைஸ் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (14.2 ஓவர்களில் 93 - 6 விக்.)

ஆனால், ஜான் ஃப்றைலின்க், ஜொஹானெஸ் ஸ்மித் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து நமிபியாவின் மொத்த எண்ணிக்கையை 163 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஜான் ஃப்றைலின்க் 28 பந்துகளில் 4 பவுண்டறிகளின் 44 ஓட்டங்களையும் ஜொஹான் ஸ்மித் 16 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹேஷ் தீக்ஷன, அணிக்கு மீள்வருகை தந்த துஷ்மன்த   சமீர, சாமிக்க கருணாரட்ன, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஏ குழுவில் இடம்பெறும் மற்றைய இரண்டு அணிகளான ஐக்கிய அரபு இராச்சியமும் நெதர்லாந்தும் 2ஆவது போட்டியில் விளையாடுகின்றன.

https://www.virakesari.lk/article/137747

  • கருத்துக்கள உறவுகள்

இருபது 20 உலகக் கிண்ணம் : ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியது நெதர்லாந்து 

16 OCT, 2022 | 06:07 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான முதல் சுற்றின் 2ஆவது போட்டியில் நெதர்லாந்து 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

112 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று  ஒரு பந்து மீதமிருக்க   மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

பவர்ப்ளே ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களைப்  பெற்று  சற்று பலமான நிலையில் நெதர்லாந்து இழந்தது. ஆனால், அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற முயற்சித்த போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால் தடுமாற்றம் அடைந்தது.

விக்ரம்ஜித் சிங் (10), மெக்ஸ் ஓ'டவ்ட் (23), பாஸ் டி லீட் (14), கொலின் அக்கர்மன் (17) ஆகிய முதல் 4 துடுப்பாட்ட வீரர்களும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்

14ஆவது ஓவரில் திறமையாக பந்துவீசிய ஜுனைத் சித்திக் 2 விக்கெட்களை வீழ்த்தி ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

ஆனால், அதே ஓவரில் டிம் ப்றிங்ளின் இலகுவான பிடியை அணித் தலைவர் ரிஸ்வான் தவறவிட்டமை நெதர்லாந்துக்கு திருப்புமுனையாக அமைந்து.

அப்போது ஓட்டம் பெறாமல் இருந்த ப்ரிங்ள் 15 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை   101 ஓட்டங்களாக உயர்த்தி 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ், 9ஆம் இலக்க வீரர் லோகன் வன் பீக் ஆகிய இருவரும் ஒற்றை, இரட்டைகளாக ஓட்டங்களைப் பெற்று நெதர்லாந்து வெற்றி இலக்கை அடைய உதவினர்.

எட்வேர்ட்ஸ் 16 ஓட்டங்களுடனும் வன் பீக் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஆரம்ப வீரர்களான சிராக் பூரியும் மொஹமத் வசீமும் 33 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பூரி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து காஷிப் தாவூத் 15 ஓட்டங்களுடனும் விரித்தியா அரவிந்த் 18 ஓட்டங்களுடனும் களம்விட்டகன்றனர்.

ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்nடுத்தாடிய மொஹம்மத் வசீம் 41 ஓட்டங்களைப் பெற்றார். 

மொஹமத் வசீம் ஆட்டமிழந்தபோது ஐக்கிய அரபு இராச்சியம் 16 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரெட் க்ளாசென் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/137786

  • கருத்துக்கள உறவுகள்
160/5
WI FlagWI
(11/20 ov, T:161) 72/5

West Indies need 89 runs in 54 balls.

தோல்வி குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை : அடுத்த போட்டியில் மீண்டெழுவோம் - இலங்கை அணித் தலைவர் தசுன்

By DIGITAL DESK 5

17 OCT, 2022 | 09:36 AM
image

(என்.வீ.ஏ.)

நமிபியாவுடனான தோல்வியையிட்டு கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் அப் போட்டியிலிருந்து படிப்பினைகளை விரைவாக கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருவோம் எனவும் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

2022 ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண எட்டாவது அத்தியாயத்தில் நமிபியாவுடனான ஆரம்பப் போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட சில கேள்விகளும் தசுன் ஷானக்க அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: உலகக்கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை. போட்டியை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? சரியாக எந்த விடயத்தில் தவறு நிகழ்ந்தது?

தசுன் ஷானக்க: 'அது முதலாவது போட்டி என்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நாங்கள் விளையாடிய விதம்தான் கவலை தருகிறது. குறிப்பாக பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் எமது அணி இதனைவிட சிறப்பாக விளையாடக்கூடியது. அவர்கள் சரியான இலக்குகளில் முறையாக பந்துவீசினார்கள். எமது பந்துவீச்சளார்கள் அதில் தவறினர். எமது துடுப்பாட்டமும் பிரகாசிக்கவில்லை. பவர்ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்திருக்கக்கூடாது. அது 150 ஓட்டங்களுக்கு மேற்பட்ட வெற்றி இலக்கை அடைவதற்கு சிரமத்தைக் கொடுக்கும்' என்றார் தசுன் ஷானக்க.

கேள்வி: முதல் 15 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் திறமையாக செயற்பட்டதால் ஒரு கட்டத்தில் நமிபியா 6 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அதன் பின்னர் என்ன நேர்ந்தது?

தசுன் ஷானக்க: 'எமது பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஏதேதோ முயற்சி செய்தனர். ஆனால், குறைநீள பவுண்டறிகள் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது. எமது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்கு விக்கெட் பந்துவீசியிருக்க வேண்டும். அந்த வகையில் நமிபியா பந்துவீச்சாளர்கள் அதில் சிறப்பாக செயற்பட்டனர். நமிபியாவின் 6ஆவது விக்கெட் வீழ்த்த பின்னர் அடுத்த விக்கெட்டை நாங்கள் கைப்பற்றியிருக்க வேண்டும். எமது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்கு விக்கெட் பந்துவீசாதது   அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அனுபவம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் அது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என நான் நினைக்கிறேன். பந்துகளை அடிக்க விடுவதை விடுத்து விக்கெட்களை வீழ்த்துவது குறித்து விரைவாக கற்றுக்கொள்ளவேண்டும்' என்றார்.

கேள்வி: முதல் சுற்றில் ஏ குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றால் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளை இலங்கை எதிர்கொள்ளவேண்டிவராது. பதிலாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென் ஆபிரிக்க அணிகளை சந்திக்கவேண்டிவரும், அது நல்லது என கருதுகிறீர்களா?

தசுன் ஷானக்க: 'அடுத்த இரண்டு போட்டிகளில் எவ்வாறு விளையாடவேண்டும் என்பதே எமது நோக்கம். எந்த குழுவில் எந்தெந்த அணிகளுடன் விளையாடப்போகிறோம் என்பதைப் பற்றி கருத்தில் கொள்ள மாட்டோம்.. முதல் சுற்றில் எஞ்சிய இரண்டு போட்டிகள் குறித்து கவனம் செலுத்தி அடுத்த சுற்றுக்கு செல்வதை உறுதிசெய்வதே முக்கியம்' என பதிலளித்தார்.

கேள்வி: போட்டியைக் கண்டுகளித்தவர்களில் கணிசமான அளவு இலங்கையர்கள் இருந்தார்கள். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பார்கள் என்பது வெளிப்படையான ஒன்று. நமிபியா போன்ற அணியிடம் தோல்வி அடைந்து, ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து போன்ற அணிகளுடன் விளையாடவுள்ளது குறித்து அவர்களது கரிசணை எவ்வாறாக இருக்கும்?

தசுன் ஷானக்க: வெற்றிபெறவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்பினார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் எமது இரசிகர்கள் எமக்கு ஆதரவு அளிக்கின்றனர். குறிப்பாக மெல்பர்னில் இலங்கையர்கள் பெருமளவில் இருக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அவர்களை மகிழ்விக்கச் செய்யவெண்டும். அடுத்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை உறுதிசெய்வோம்.'

முதல் சுற்றில் இலங்கை தனது இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை நாளை சந்திக்கவுள்ளதுடன் நெதர்லாந்தை 20ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/137799

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்திடம் மண்டியிட்டது மேற்கிந்தியத் தீவுகள்

By DIGITAL DESK 5

17 OCT, 2022 | 03:46 PM
image

(நெவில் அன்தனி)

ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண பி குழுவுக்கான முதல் சுற்று (தகுதிகாண்) ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 42 ஓட்டங்களால் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது.

8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் ஆரம்ப நாளான ஞாயிற்றுக்கிழமை (16) முன்னாள் சம்பியன் இலங்கையை நமிபியா அதிர்ச்சி அடையச் செய்திருந்ததைத் தொடர்ந்து இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு முன்னாள் உலக சம்பியன்கள் அடுத்தடுத்த தினங்களில் தோல்வியைத தழுவியுள்ளன.

Michael Jones drives one firmly down the ground, West Indies vs Scotland, Men's T20 World Cup 2022, First round, Group B, Hobart, October 17, 2022

ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே குவித்த நிதானமான அரைச் சதம், மார்க் வொட், மைக்கல் லீஸ்க் ஆகியோரின் மிகத் திறமையான பந்துவீச்சு என்பன மேற்கிந்தியத் தீவுகளை மண்டியிட வைத்தன.

அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட ஸ்கொட்லாந்து அணி சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டும் பெற்று அதிர்ச்சி தோல்வி  அடைந்தது.

George Munsey guides one behind square, Scotland vs West Indies, Men's T20 World Cup 2022, Hobart, October 17, 2022

எட்டாவது ஓவரில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று ஒரளவு பலமான நிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் கடைசி 8 விக்கெட்களை 60 ஓட்டங்களுக்கு இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

அவர்களில் மத்திய வரிசை வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப்     பெற்றார்.

Scotland celebrate the fall of Kyle Mayers, West Indies vs Scotland, Men's T20 World Cup 2022, First round Group B, Hobart, October 17, 2022

அவரைவிட கைல் மேயர்ஸ் (20), ப்றெண்டன் கிங் (17), எவின் லூயிஸ் (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் நிக்கலஸ் பூரண், ஷம்ரா ப்றூக்ஸ், ரோவ்மன் பவல் ஆகிய பிரதான வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஸ்கொட்லாந்து சார்பாக மிகவும் துல்லியமாக பந்துவீசிய மார்க் வொட் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மைக்கல் லீஸ்க் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றெட் வீல் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைக் குவித்தது.

Saafyan Sharif and Brad Wheal celebrate dismissing Evin Lewis, West Indies vs Scotland, Men's T20 World Cup 2022, First round Group B, Hobart, October 17, 2022

சரியான திட்டமிடல், புத்திசாதுரியம் ஆகியவற்றுடன் ஸ்கொட்லாந்து ஓட்டங்களைப் பெற்றது. ஸ்கொட்லாந்து சார்பாக துடுப்பெடுத்தாடிய 7 பேரில் இருவரைத் தவிர மற்றைய ஐவரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் ஜோர்ஜ் முன்சேயின் துடுப்பாட்டும் எடுத்துக்காட்டாக அமைந்தது.

நிதானம் கலந்த வேகத்துடன் மிகவும் சாதுரியமாக துடுப்பெடுத்தாடிய

ஜோர்ஜ் முன்சே ஆட்டமிழக்காமல் 66  ஓட்டங்களைப்     பெற்றார். 

அத்துடன் கெலம் மெக்லியொட் 23 ஓட்டங்களையும் மைக்கல் ஜோன்ஸ் 20 ஓட்டங்களையும் கிறிஸ் க்றீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

http://fe.virakesari.lk/article/137846

  • கருத்துக்கள உறவுகள்
ZIM FlagZIM
174/7
IRE FlagIRE
(0.6/20 ov, T:175) 7/1

Ireland need 168 runs in 114 balls.

  • கருத்துக்கள உறவுகள்
ZIM FlagZIM
174/7
IRE FlagIRE
(3.6/20 ov, T:175) 23/4

Ireland need 152 runs in 96 balls.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.