Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கடன் நெருக்கடி: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடன் நெருக்கடி: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஷேஹான் சேமசிங்க இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வில்லியம் ருஸ், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர்

பட மூலாதாரம்,SHEHAN SEMASINGHE/TWITTER

 

படக்குறிப்பு,

ஷேஹான் சேமசிங்க இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வில்லியம் ருஸ், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர்

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

இலங்கை பெருமளவிலான கடனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுல்ளதால் அது பற்றியே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சமீபத்தில் சீன நிதி அமைச்சருடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கிய பிரதான மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுடன் இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், இந்த பேச்சுவார்த்தைகளை நேற்று முன்தினம் (15) ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு கருத்துரைத்த போதே இந்த விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.

விவாதம் செய்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வீதிக்கு வந்து இரத்தம் சிந்தப் போவதாக சிலர் கூறியதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டிய ஜனாதிபதி, இரத்தம் சிந்துவதற்கு முன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மாத்திரமே அரசியல் பேசப்பட வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டன் பேச்சுவார்த்தை

இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்கவிற்கும், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர் வில்லியம் ருஸ்ஸிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத் தொடரின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயார் என வில்லியம் ருஸ், தெரிவித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கடனை உரிய வகையில் செலுத்துமாறு வங்கதேசம் தெரிவிப்பு

இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை உரிய நேரத்தில் இலங்கை செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர், அந்த நாட்டு ஊடகமொன்றிற்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலேயே, இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும், பங்களதேஷ் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கதேசத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை, உரிய நேரத்தில் இலங்கையினால் வழங்க முடியவில்லை.

இந்த நிலையில், குறித்த கடனை செலுத்தும் கால எல்லையை வங்கதேசம் நீடிப்பதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்த கடனை செலுத்துவதற்கு இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கை உரிய நேரத்தில் கடனை செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக வங்கதேச மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பொருளியல் நிபுணரின் பார்வை

சீனா, கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்

பட மூலாதாரம்,VIJESANDIRAN

 

படக்குறிப்பு,

பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்

''ஜெனீவாவில் இலங்கையின் பொருளாதார பிரச்னை தொடர்பில் இம்முறை பேசப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச ரீதியாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்குண்ட நாடாகவும், கடனிலிருந்து வெளிவர முடியாத நாடாகவும், சர்வதேச ஆதரவு தேவை என்ற விடயமும் முன்வைக்கப்பட்டு, அதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த அடிப்படையில், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளில் பிரதான நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கும் கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளமையினால், அதற்கு சீனாவும் ஆதரவு தெரிவிக்கும். கடன் கொடுக்கப்பட வேண்டிய காலம், அதற்கான வட்டி, திருப்பி செலுத்த வேண்டிய தொகைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதையே இலங்கை எதிர்பார்க்கின்றது. அது பெரும்பாலும் சாத்தியமாகும். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கைக்கு அமைய, சீனா இதற்கு இணக்கம் தெரிவிக்கும். அதில் பிரச்னை ஏற்படாது." என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள கடனை அடிப்படையாகக் கொண்டே, வங்கதேசம் தமது கடனை உரிய நேரத்தில் திரும்பி செலுத்துமாறு கோரியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

''இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள கடன்களில் வங்கதேசத்திடம் பெற்றுக்கொண்ட கடனானது, மிகவும் குறைவான கடன் தான். இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான கடன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு தொகுதி கடன் கிடைக்கவுள்ளது. அந்த கடன் வழங்கப்படுமாக இருந்தால், அதிலிருந்து தங்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினையை தீர்க்குமாறு வங்கதேசம் எதிர்பார்க்கின்றது. சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மீள் செலுத்த முடியாதுள்ள கடன்களின் பெருந் தொகையை செலுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் தொகை உதவி அளிக்கும்," என பொருளாதார நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-63285780

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎2 people and ‎text that says '‎حمم wAM wm wA un wu குறிப்பிட்ட நேரத்தில் இலங்கை கடனை திருப்பிச் செலுத்தும்- பங்களாதேஷ் நம்பிக்கை News mt 新 mt அப்படித்தான் நம்புங்க நம்பிக்கைதான் வாழ்க்கை WAT 商新/团進团目 Ⅲ LITrm‎'‎‎

  • கருத்துக்கள உறவுகள்

பில்லியன் டொலர் தந்தவனே… சும்மா இருக்கிறான்.
பங்களாதேஸ்… 250 மில்லியன் டொலர், பிச்சை காசை தந்து போட்டு
திரும்ப வரும் நம்பிக் கொண்டு இருக்கு. 😁
 

நாங்கள்… 75’வது சுதந்திர தினம் கொண்டாட,
ஆரிட்டை கடன் வாங்கலாம் என்று இருக்கிறம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பில்லியன் டொலர் தந்தவனே… சும்மா இருக்கிறான்.
பங்களாதேஸ்… அரை மில்லியன் டொலர், பிச்சை காசை தந்து போட்டு
திரும்ப வரும் நம்பிக் கொண்டு இருக்கு. 😁
 

என்ன அது?அரை மில்லியனா?.  வட்டியை  சொல்லுகிறீர்களா. ?    அல்லது   அசல் முதல் இலை சொல்லுகிறீர்களா?.    மீண்டும் மீண்டும்..வாசித்து பாருங்கள் பலைப்பழம் போல...200 மில்லியன் டொலர்.....பிச்சை கரன்சி இலங்கை ருபாய் இல்லை  🤣😂 அனைவராலும் மதிக்கப்படும் அமெரிக்கா டொலர் 😁 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

என்ன அது?அரை மில்லியனா?.  வட்டியை  சொல்லுகிறீர்களா. ?    அல்லது   அசல் முதல் இலை சொல்லுகிறீர்களா?.    மீண்டும் மீண்டும்..வாசித்து பாருங்கள் பலைப்பழம் போல...200 மில்லியன் டொலர்.....பிச்சை கரன்சி இலங்கை ருபாய் இல்லை  🤣😂 அனைவராலும் மதிக்கப்படும் அமெரிக்கா டொலர் 😁 

ஶ்ரீலங்கா…. உலக நாணய நிதியத்தை, இது வரை 16 தடவை ஏமாற்றியதாக வாசித்தேன்.
அப்போ பங்களாதேஸ் எந்த மூலைக்கு.
இந்தக் காலத்தில்…. கடன் வாங்கினவனை விட,
கடன் கொடுத்தவன்  தான் மன உழைச்சலில் இருக்கின்றான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலங்கை கடன் நெருக்கடி: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா?

ஐயா சம்பந்தர் தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற மாதிரி

அரசும் ஒன்றை இழுத்துவிட வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேசுக்கு அண்மையில் கடல் இருப்பதால் இவ்விடயத்தை புரிந்து கொள்வது அவ்வளவு கஸ்டமில்லை.

 

 

 

 

அதாவது $250 ஐ நீங்கள் கடலில் போட்டதாக எண்ணிக்கொள்ளுங்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பில்லியன் டொலர் தந்தவனே… சும்மா இருக்கிறான்.
பங்களாதேஸ்… 250 மில்லியன் டொலர், பிச்சை காசை தந்து போட்டு
திரும்ப வரும் நம்பிக் கொண்டு இருக்கு. 😁
 

நாங்கள்… 75’வது சுதந்திர தினம் கொண்டாட,
ஆரிட்டை கடன் வாங்கலாம் என்று இருக்கிறம்.

எல்லாம் சேர்த்து வட்டியோட தல்லாம். இன்னும் கொஞ்சம் தருவியலே....  😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

எல்லாம் சேர்த்து வட்டியோட தல்லாம். இன்னும் கொஞ்சம் தருவியலே....  😁

😀

  • கருத்துக்கள உறவுகள்

காலம் நேரம் தெரியாமல் கடனை திருப்பி கேட்கிறவர்களிடம் கடனே வாங்கியிருக்கக்கூடாது அல்லது திருப்பி கேட்கமாட்டோம் என்று வாக்கும் கேட்டு  வாங்கியிருக்க வேண்டும்.  எந்த நாட்டிடம் வாங்கிய கடனை இலங்கை சரியாய் திருப்பி கொடுத்திருக்கென்று இவை இப்போ  திருப்பி கேட்கினம்? இன்னும் கொடுப்பதை விட்டு .....

6 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காலத்தில்…. கடன் வாங்கினவனை விட,
கடன் கொடுத்தவன்  தான் மன உழைச்சலில் இருக்கின்றான்

ரொம்ப அனுபவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.