Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது!

யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் வைத்து , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
 
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் யாழ், போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் , ‘ தன் மீது ஆவா வினோதன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடாத்தினார்கள்’ என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தான்.
 
அதன் அடிப்படையிலையே வினோதன் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்க்கிழவி: அப்பாடா.... இனி வாள்வெட்டு இருக்காது. 

பொலிஸ்காரன்: அதெப்படி... இதுவரை  101 ஆவா குழு தலைவர்களை, 
கைது பண்ணி இருக்கிறோம். இன்னும் வருவார்கள்.

ஊர்க்கிழவி: பிறகு  ஏன்(டா) ஆவா குழு தலைவன் என்று போட்டு, 
ஒசாமா பின்லேடனை  கைது பண்ணின மாதிரி சொல்லுறீங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ..... இந்த ஆவா என்கிற சொல் எங்கிருந்து தோன்றியது? ஆவா என்றால் வந்துவிட்டோம் என்று பொருள் என நினைக்கிறன். தெரிந்தவர்கள் யாருமிருந்தால் திருத்தவும். இதை சொன்னவர்கள், சொல்பவர்கள், சொல்லி அனுப்புபவர்கள் யார்? அவர்களை முதலில் கைது செய்யுங்கள் பிரச்சனை தானாகவே தீரும்!

16 hours ago, தமிழ் சிறி said:

17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் வைத்து , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

 இது சொல்லும் செய்தியென்ன? தமிழர் நிலம், பாரம்பரிய விழா, மகிழ்ச்சி எதிர்காலத்தில் இருக்கக்கூடாது என்கிற செய்தியா? வீட்டுக்குள் முடங்கி இருக்கச் சொல்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

 

The Aava Gang is a Sri Lankan outlaw motorcycle club, active in the Western Province of the ... nicknamed 'Haava' ('rabbit' in Sinhalese) is known under the name Aava.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 

The Aava Gang is a Sri Lankan outlaw motorcycle club, active in the Western Province of the ... nicknamed 'Haava' ('rabbit' in Sinhalese) is known under the name Aava.

 

தகவலுக்கு நன்றி நிலா. ஆக ..... கதை வசனம் மேற்கு; நடிகர், கைது  மட்டும் நம்மவர். எவ்வளவிற்கு நமது கலாச்சாரம், பண்பு, எதிர்காலம், அழிக்கமுடியுமோ அவ்வளவிற்கு குறி வைத்து,  திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகத்தின் பெயர் ஆவா! வடக்கில் இயங்குபவர்களுக்கு இந்த நாமத்தின் பொருள் என்ன, ஏன் வைக்கப்பட்டது என்பதன் நோக்கம் கூட தெரியாது செயற்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

பொலிஸ்காரன்: அதெப்படி... இதுவரை  101 ஆவா குழு தலைவர்களை, 
கைது பண்ணி இருக்கிறோம். இன்னும் வருவார்கள்.

இது தான் எனது கேள்வியும்.

ஒரு தலைவனை எத்தனை முறை ஐகது பண்ணுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி  எதாவது   கைது என்று  அறிக்கை  சொன்னால் தானே, நாங்களும் நாட்டுக்கு உழைக்கிறோம் ( ? )  என்று நம்புவீர்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இது தான் எனது கேள்வியும்.

ஒரு தலைவனை எத்தனை முறை ஐகது பண்ணுவார்கள்?

ஆவா ஒரு ஜனநாயக குழு.அங்கு எல்லாரும் தலைவர்கள் தான்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றியவர் கைது!

யாழில். ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இருந்த கலையகம் ஒன்றினுள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கிருந்த 06 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு, அங்கிருந்த வாகனம் மற்றும் கலையகத்திற்கும் தீ வைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் , யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடையவர் எனவும் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1307555

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இருந்த கலையகம் ஒன்றினுள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கிருந்த 06 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு, அங்கிருந்த வாகனம் மற்றும் கலையகத்திற்கும் தீ வைத்தனர்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் , யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு நிலப்பரப்பை அடைத்துக்கொண்டு இராணுவம் நிலைகொண்டிருக்கு, கோண்டாவிலுக்கும் இணுவிலுக்கும் இடையில் அதிக தூரமில்லை, இவரை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகள். மக்களின் பாதுகாப்புக்காக இராணுவம் வடக்கில் நிலை கொண்டிருக்காம், கதையளக்கிறார் அமைச்சர் ஒருவர். இதில புலிகள் உருவாகிறார்கள் என்று அப்பப்ப கண்டுபிடிப்பு வேறை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/10/2022 at 06:17, தமிழ் சிறி said:

யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது!

இரண்டு கொட்டன், நாலு அருவாள்,இரண்டு கத்தி,பின்னாலை நாலைஞ்சு பேர். கொஞ்சம் துணிச்சல் இவ்வளவும் இருந்தால் சண்டியன்.....தலைவன் ☺️

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இரண்டு கொட்டன், நாலு அருவாள்,இரண்டு கத்தி,பின்னாலை நாலைஞ்சு பேர். கொஞ்சம் துணிச்சல் இவ்வளவும் இருந்தால் சண்டியன்.....தலைவன் ☺️

அதன் புதுப்பெயர் ஆவா! வடக்குதமிழ்ச் சண்டியருக்கு தமிழில் பெயர் வைக்கத்தெரியவில்லை, சிங்களத்திலிருந்து கடன் வாங்கி வைச்சிருக்கினம் என்றால் பாருங்கோவேன் அவர்களின் துணிச்சலை!

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.