Jump to content

இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போராட்டப் பேரணியில் பங்கேற்றபோது நடந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போராட்டப் பேரணியில் பங்கேற்றபோது நடந்தது

3 நவம்பர் 2022, 12:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்
 

Pakistan's former Prime Minister and head of political party Pakistan Tehreek-e-Insaf (PTI) Imran Khan, gestures during a protest march towards Islamabad, in Gakhar, Pakistan, 02 November 2022

பட மூலாதாரம்,RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK

 

படக்குறிப்பு,

தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி தனது அரசியல் கட்சியான தெஹ்ரீக்- இ- இன்சாஃப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கையசைக்கும் இம்ரான்கான். இந்த பேரணியில்தான் இம்ரான் சுடப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70.

வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

"இது அவரைக் கொல்வதற்கான முயற்சி, படுகொலை செய்வதற்கான முயற்சி," என்று அவரது மூத்த உதவியாளர் ஒருவர் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் கூறினார். ஆனால், அவரைக் குறிவைத்துதான் தாக்குதல் நடந்ததா என்பதை போலீஸ் உறுதிப்படுத்தவில்லை.

இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் பிறகு கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஜியோ டிவி தெரிவிக்கிறது.

 

ஏப்ரல் மாதம் அவர் ஆட்சி கவிழ்ந்த நிலையில், உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்திவந்தார் இம்ரான். 'நீண்ட பயணம்' என்று பெயரிடப்பட்ட இந்த பேரணியின்போதுதான் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இது தொடர்பான காட்சிகளில் அவர் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

அவர் முழங்காலின் முன் பகுதியில் குண்டு பாய்ந்ததாக அவரது பிடிஐ கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இம்ரான்கான் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக பிடிஐ கட்சித் தலைவரும், மாகாண சுகாதார அமைச்சருமான யாஸ்மீன் ரஷீத் கூறினார்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?

இந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது பேரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி அப்துல் ரஷீத், துப்பாக்கிச்சூடு சத்தத்தை தாம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்.

இம்ரான் கான் இருந்த கன்டெயினரில் இருந்து சற்று தொலைவில் தாம் தள்ளி இருந்ததாகவும், துப்பாக்கி சுடப்படும் சத்தம் தமக்கு கேட்டதாகவும் அவர் கூறினார். இதையடுத்து பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் நெரிசல் தோன்றியது என்றும், இம்ரான் கான் காலில் சுடப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

கண்டெயினரிலேயே அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு வேறு வாகனத்துக்கு அவர் மாற்றப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். அப்படி வேறு வண்டிக்கு இம்ரான் மாற்றப்பட்டபோது, தாம் அருகில் இருந்ததாகவும், அப்போது இம்ரான் நினைவோடு இருந்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

அகமது சட்டா, ஃபைசல் ஜாவேத் என்பவர்கள் இந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

தகுதி நீக்கம்

பொதுப் பதவிகள் எதையும் இம்ரான்கான் வகிக்கக்கூடாது என்று கடந்த மாதம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணமான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.

பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்கள் தொடர்பாக தவறான விவரங்களைத் தாக்கல் செய்ததாகவும், அவை விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவற்றின் மூலம் வந்த வருவாய் விவரத்தையும் தவறாகக் காட்டியிருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், மோதிரம், கஃப்லிங்குகள் போன்றவை இந்த சர்ச்சைக்குரிய பரிசுப் பொருள்களில் அடக்கம்.

இந்தப் பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-63501652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

ஏப்ரல் மாதம் அவர் ஆட்சி கவிழ்ந்த நிலையில், உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்திவந்தார் இம்ரான். 'நீண்ட பயணம்' என்று பெயரிடப்பட்ட இந்த பேரணியின்போதுதான் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

 

இவர் ஆட்சி கவிழ்ந்ததா?

அல்லது கவிட்டதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

இவர் ஆட்சி கவிழ்ந்ததா?

அல்லது கவிட்டதா?

 

உலகப் பொலிஸ் கவிட்டதாக பேசினார்கள்.

Link to comment
Share on other sites

ரஸ்ய உக்ரேன் போர் தொடங்கிய அன்று ரஸ்ய தொலைக்காட்சியில் தோன்றி ரஸ்யாவுக்கு ஆதரவாக பேசியவர் இம்ரான் கான். இவரது ஆட்சி மேற்கால் கவிழ்க்கப்பட்டிருக்க சாத்தியம் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி குண்டு வெடிப்புகளும் நடக்கலாம்...🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனி குண்டு வெடிப்புகளும் நடக்கலாம்...🤣

நிச்சயம் நடக்கும். இது ஒன்றும் பாகிஸ்தானுக்குப் புதல்லவே. 

☹️

  • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இனி குண்டு வெடிப்புகளும் நடக்கலாம்...🤣

அதுகளுக்கு பாகிஸ்தான் எப்ப குறை  வைச்சவங்கள். பஞ்சியை பாராமல் போட்டுக்கொண்டே இருப்பாங்கள். அது மசூதியோ பாடசாலையோ என்பதெல்லாம்  ஒரு பொருட்டே அவர்களுக்கு  இல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘இம்ரான் கானை கொல்லவே வந்தேன்’- துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

‘இம்ரான் கானை கொல்லவே வந்தேன்’- துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும் இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பான காணொளியை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  எனினும் இந்த விடயத்தை பொலிஸார் உறுதி செய்யவில்லை.

பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் இம்ரான் கான் நேற்று அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.

திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அத்துடன், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1308819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"என்னைக் கொல்ல இடம்பெற்ற சதி குறித்து முன்னரே தெரியும்" - இம்ரான்கான்

By T. SARANYA

05 NOV, 2022 | 09:48 AM
image

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னை கொல்ல நடந்த சதி குறித்து தனக்கு முன்னரே தெரியும் என தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர் பைசல் சுல்தான் என்பவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

313092035_417962940536296_48048562514968

எனினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

இந்நிலையில் இம்ரான்கான் நேற்று இரவு வைத்தியசாலையில் இருந்தவாறே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாளே எனக்கு தெரியும். வெளியே செல்ல வேண்டாம் என்று என்னிடம் அறிவுறுத்தப்பட்டது. அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன்.

4 துப்பாக்கி குண்டுகள் என் காலை துளைத்தன. அங்கு 2 பேர் இருந்தனர். அவர்கள் ஒரே நேரத்தில் என்னை தாக்கியிருந்தால் நான் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்.

பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சரான ராணா சனுல்லா மற்றும் உளவுத்துறையின் தலைவர் பைசல் ஆகியோரே இந்த சதிக்கு பின்னால் இருக்கிறார்கள். இந்த தேசத்தை காப்பற்ற இராணுவ தளபதி மற்றும் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.

https://www.virakesari.lk/article/139166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கொல்ல திட்டமிட்டது இவர்கள்தான் : இம்ரான் கான்

SelvamNov 05, 2022 10:09AM
BeFunky-collage-96-scaled.jpg

உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் என்னை கொல்ல திட்டமிட்டனர் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பஞ்சாப் மாகாணத்திலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்ற முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,

குஜ்ஜன்வாலா பகுதியில் கண்டெய்னர் லாரி மீது ஏறி நின்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

imran khan

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இம்ரான் கானை நோக்கி சுட்டார்.

இதில் அவரது வலது காலில் தோட்டா துளைத்து உடனடியாக கீழே விழுந்தார். அருகிலுள்ள ஷாகட் ஹான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மருத்துவமனையில் இருந்தபடியே இம்ரான் கான் வீல் சேரில் அமர்ந்துகொண்டு நாட்டு மக்களிடம் உரையாடினார்.

அப்போது அவர், “என் மீது தாக்குதல் நடக்கும் என்பது எனக்கு ஒரு நாள் முன்னதாகவே தெரியும். நான் நான்கு தோட்டாக்களால் தாக்கப்பட்டேன். எனது வலது காலில் தோட்டாக்கள் துளைத்தன.

எனக்கு சிகிச்சையளித்த டாக்டர் பைசல் சுல்தான், வலது காலில் எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது, திபியா (மூட்டுப்பகுதி) சேதமடைந்திருப்பதையும், முறிந்திருப்பதையும் காண முடிகிறது” என்றார்.

imran khan

எனது காலில் இருந்த தோட்டா குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. நான் லாரியில் ஏறி நின்ற போது தோட்டாக்கள் என்னை நோக்கி செலுத்தப்பட்டன. காலில் தோட்டாக்கள் துளைத்ததும் கீழே விழுந்தேன்.

இரண்டாவது குண்டு வந்தபோது இரண்டு பேர் இருந்தனர். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் என் மீது துளைக்கப்பட்டிருந்ததால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். 

நான் கீழே விழுந்ததால், என்னை துப்பாக்கியால் சுட்டவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்தார்கள்.

தீவிரவாதி என்று ஒரு சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தீவிரவாதி அல்ல.

இந்த முயற்சிக்குப் பின்னால் வேறு ஒரு திட்டம் இருந்தது. நாங்கள் அதை வெளிக்கொண்டு வருவோம்.

உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் என்னை கொல்ல திட்டமிட்டனர். 

முன்னாள் பஞ்சாப் கவர்னர் சல்மான் தசிர் கொல்லப்பட்டது போல் என்னையும் கொல்ல பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த தருணத்தில் ராணுவ தளபதி மற்றும் தலைமை நீதிபதியிடம் பாகிஸ்தானை காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார்.
 

https://minnambalam.com/political-news/4-people-include-shebaz-sharif-planned-to-kill-me-imran-khan/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கொலை முயற்சியில் இராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்" - இம்ரான்கான் வலியுறுத்தல்

12 NOV, 2022 | 10:50 AM
image

தன்னை கொல்ல முயன்ற சதி திட்டத்தில் இராணுவ அதிகாரியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டுமென இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3 ஆம் திகதி பஞ்சாப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். 

இதையடுத்து, லாகூரில் உள்ள வைத்தியசாலையிர் அனுமதிக்கப்பட்ட இம்ரான்கானுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது காலில் இருந்து 3 துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டதாக இம்ரான்கான் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னை கொல்ல முயன்ற இந்த சதி திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்நாட்டு அமைச்சர் ராணா சனவுல்லா மற்றும் மூத்த இராணுவ அதிகாரி பைசல் நசீர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். 

துப்பாக்கி சூடு தொடர்பாக இம்ரான்கான் தரப்பில் பஞ்சாப் மாகாண பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் இராணுவ அதிகாரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால் அந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய பொலிஸார் மறுத்து வந்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்திய அந்த நாட்டின் உயர் நீதிமன்றம், 24 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

எனினும் இந்த வழக்கில் பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் இராணுவ அதிகாரியின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தது. 

இந்நிலையில் லாகூரில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த இம்ரான்கான், "இராணுவ அதிகாரி பைசல் நசீர் எனது கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது உறுதி. எனவே பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்" என்றார். பொலிஸார் வழக்கு பதிவு செய்தது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னாள் பிரதமரால் அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை என்றால், பாகிஸ்தானில் உள்ள ஒரு சாமானியருக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்யலாம். எனவே இதுகுறித்தும் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்திய சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/139782

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.