Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலி

Featured Replies

எனக்கொரு சின்ன சந்தேகமுங்கோ

தாலி தமிழினத்தில் இந்துமதத்தினரின் திருமண அடையாளம் என்கிறீங்களே. அந்த தாலி & கொடி கட்டாயம் பவுணில் தான் செய்தணியணுமா? மஞ்சள் கயிறு பூணுதல் தப்பா? கொஞ்சம் சொல்லுங்களன்

மஞ்சல் கயிற்றை அடைவுகடையில் வைக்க முடியாது அதனால்தான் தங்கத்தாலி :rolleyes: B) :)

Edited by இலக்கியன்

  • Replies 55
  • Views 4.9k
  • Created
  • Last Reply

புத்தனின் இந்தக் கவிதையை பிரபலப்படுத்திய எங்களின் கருத்துக்களை அலம்பல் என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டார் நிதர்சன். :)

சரி பறவாயில்லை. யமுனா அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கென்று சொல்லிவிட்டார். அந்த ஆயிரத்தையும் ஒன்றுவிடாமல் பட்டியலிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :angry:

ஆண் என்ன சொன்னாலும் செய்தாலும், பெண் என்பவள் அடங்கித்தான் போகவேண்டும். விட்டுக்கொடுத்து வாழவேண்டும். விட்டுக்கொடுப்புகள் இல்லாட்டி வாழ்க்கையை எப்படி வாழமுடியும்? பிள்ளை குழப்படி செய்தால் அம்மா கண்டிக்கிறேலயா? அதுமாதிரித்தான் இதுவும். கணவனே கண்கண்ட தெய்வம். புல்லானாலும் புருசன். கணவன் சொல்லே மந்திரம். போன்ற பழமொழிகள் எல்லாம் சும்மாவா சொல்லப்பட்டன. அவற்றுள் தான் எத்தனை பெரும் தத்துவம் உள்ளது. சும்மா, சுதந்திரம் விடுதலை என்றுகொண்டு பெண்கள் இப்படி கூச்சலிடுவதால் தான் கலாச்சாரம் சீரழிந்து எங்கள் சமூகம் தனித்துவம் இழந்து திரிகிறது. :angry:

மஞ்சல் கயிறை அடவு கடையில வைக்க முடியாதாகும் :rolleyes: B) :)

இலக்கியன் ஒருவரியில சொன்னாலும் சும்மா நச்சென்று சொன்னீர்கள்.

வெண்ணிலா பார்த்தீங்களா, தமிழர் பொருளாதார ரீதியில் தொலைநோக்குப் பார்வையோட சிந்தித்திருக்கிறார்கள் என்பது இப்பவாவது விளங்குதா? B)

Edited by இளைஞன்

எனக்கு தாலியைப் பற்றி நிறைய விசயங்கள் தேவைப்படுகின்றது. ஆவன செய்யுங்கோ

கவிதை பார்த்து புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் :rolleyes:

தமிழ் நாட்டு பெண்ணுக்கு

மஞ்சல் கயிற்றில் தாலிதான் வேலி

ஈழத்து பெண்ணுக்கு-ஜந்து

பவுனில் தாலிதான் வேலி

புலம் பெயர் பெண்ணே-ஏன்

உனக்கு நூறு பவுனில் தாலி?

இளைஞ அண்ணா உங்கள் கருத்தை அலம்பல் என்ற ரீதியில் சொல்லவில்லை ஏன் என்றா நான் அலம்புவதை பற்றி எல்லாருக்கும் தெரியும் நான் நிசர்சனின் வரியில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்று சொன்னது வேறொரு பொருளிள் அதற்காக ஆயிரம் அர்த்தத்தை காண்பிக்கும்படி இந்த நள்ளிரவு 2 மணிக்கு கேட்டா காண்பிக்கிறது கொஞ்சம் கடினம் அதனால கொஞ்சம் பரிசீலனை செய்யவும்!! :rolleyes:

மற்றம்படி பெண்கள் பற்றியும் தாலி பற்றியும் நீங்கள் கூறிய கருத்துகள் ஒன்றையும் என்னால் ஏற்கமுடியாது....புல்லானும் புருசன் என்று எல்லாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை........ஒருத்தரும் யாரிடமும் சுகந்திரத்தை எதிர்பார்க்கமுடியாது அவர்கள் அவர்களுக்கு ஒரு சுகந்திரம் என்ற வரையறையை அமைத்து செயற்பட வேண்டும் அதனுள் பெண்களும் அடங்கும்!!! :)

"அர்த்தமுள்ள நிதர்சனின் வசனம்" (அர்த்தமுள்ள இந்து மதம் மாதிரி) :rolleyes: சரி சரி. சும்மா சொன்னேன்.

புல்லானாலும் புருசன் என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டால், fullஆனாலும் புருசன் என்று இருக்கலாம். பிரச்சனையில்லை. அதெப்படி அவரவருக்கு ஒரு சுதந்திரம் என்று வரையறுத்து வாழ்வது. பிறகெதற்கு மதங்களும், கலச்சாரங்களும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் சட்டங்களும்? சுதந்திரம் என்ற பேரில் பெண்கள் மேற்கத்தேய நாடுகளில் கட்டாக்காலிகளாகத் திரிவது போல எமது தமிழ்ப் பெண்களும் திரியவேண்டுமா? மதங்களும், கலாச்சாரங்களும் மனிதரை நல்வழிப்படுத்தவே சொல்லப்பட்டிருக்கின்றன. அதன்படி பெண் ஆணுக்கு அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். விட்டுக்கொடுப்புகள் செய்து கணவனுடன் வாழவேண்டும். கணவனுடன் ஒரு பெண் சேர்ந்திருந்தால் தான் பெண்ணுக்கு பெருமை. :angry:

அதெப்படி வெண்ணிலா இந்து மதத்தையும் தமிழ் இனத்தையும் பிரித்து பார்ப்பீர்கள். இந்து மதமும் தமிழ் இனமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. இந்து என்றால் தமிழ், தமிழ் என்றால் இந்து. இந்து மதம் தான் தமிழரின் மதம். மற்றையதெல்லாம் இடையில் வந்து புகுந்த மதங்கள். தமிழர் மேல் ஆதிக்கம் செலுத்திய மதங்கள்.எனவே இனிமேல் இப்படி இந்து மதம், தமிழினம் என்று பிரிக்காதீர்கள். வேதனையாக இருக்கிறது.

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:

ஏனையவை இடையில் வந்த மதங்களாம் :rolleyes:

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:
இந்து சமய என்கின்ற மாயைப் போர்வையைப் போர்த்தவர்கள் தமிழர்கள் :rolleyes: அதனால் அது தமிழர்களுடைய கலாச்சாரமாக காலப்போக்கில் மாறிவிட்டது B)
ஏனையவை இடையில் வந்த மதங்களாம் :)
ஆமாம் வெண்ணிலாஅண்ணாவின் கவிதை பக்க கருத்துக்கள் மாறி எங்கோ போய்விட்டதுகத்திரிக்கோல் கொண்டு வரப்போகினம் எல்லோரும் ஓடுங்கோ :)

Edited by இலக்கியன்

மஞ்சல் கயிற்றை அடைவுகடையில் வைக்க முடியாது அதனால்தான் தங்கத்தாலி :) B) :)

:lol::lol: உப்படியும் இருக்குதோ.

இலக்கியன் ஒருவரியில சொன்னாலும் சும்மா நச்சென்று சொன்னீர்கள்.வெண்ணிலா பார்த்தீங்களா, தமிழர் பொருளாதார ரீதியில் தொலைநோக்குப் பார்வையோட சிந்தித்திருக்கிறார்கள் என்பது இப்பவாவது விளங்குதா? B)

ஆமாம் இப்போ விளங்கி விட்டன. ஒத்துழைப்புக்கு நன்றிகள். :P

கவிதை பார்த்து புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் :)

தமிழ் நாட்டு பெண்ணுக்கு

மஞ்சல் கயிற்றில்

தாலி தான் வேலி

ஈழத்து பெண்ணுக்கு-

ஜந்து பவுனில்

தாலி தான் வேலி

புலம் பெயர் பெண்ணே-

ஏன் உனக்கு நூறு பவுனில் தாலி?

:rolleyes: அப்போ 5 பவுனில் தாலி எனில் அது ஈழத்து பொண்ணு. சரி அப்படியே ஆகட்டும் :D நல்லா இருக்கு உங்கள் தாலி விளக்க கவிவரிகள்

Edited by வெண்ணிலா

புல்லானாலும் புருசனாகா இருந்தா குவாட்டார் ஆனாலும் யார் இளைஞன் அண்ணா??மதங்கள்,கலாசாரங்கள் என்பவற்றை நீங்களே உருவாகிவிட்டு அதன் பின் அந்த கோட்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்.....மேற்கத்தைய பெண்களிற்கும் மதம் இருகிறது ஆனா அளவோடு பாவிகிறார்கள்....அளவிற்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு அதை போல் நாம் எல்லாவற்றிலும் அளவுகதிகமாக செல்வது தான் பிரச்சினையே அது மத விசயத்திலும் பொருந்தும்..மேற்கத்தைய பெண்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பழகாமல் ஏன் அந்த மாதிரி குணங்களை மட்டும் எடுத்து கொள்கிறார்கள்........ஆணுக்கு பெண் அடக்க ஓடுக்கமாக இருக்க வேண்டும் என்றா அதற்கு நீங்க தங்களுடைய பாட்டியின் காலதிற்கு தான் செல்ல வேண்டும்.......கணவணோட சேர்து இருந்தா தான் பெருமை பெண்ணிற்கு என்று இல்லை இருவரும் சேர்திருந்தா தான் தாமதியதிற்கு பெருமை............. :rolleyes:

சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வாதாடுறீங்க............ :P

ஆமாம் வெண்ணிலாஅண்ணாவின் கவிதை பக்க கருத்துக்கள் மாறி எங்கோ போய்விட்டதுகத்திரிக்கோல் கொண்டு வரப்போகினம் :)

எங்காவது ஒரு பக்கத்தில் போடுவார்கள் தானே வெட்டினால். அங்கை போய் தொடரலாமே :rolleyes:

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ? :angry:

அதெப்பிடியென்றால், கிறிஸ்தவ மதம் எப்ப இலங்கைக்கு வந்தது? இந்து மதம் எப்ப இலங்கைக்கு வந்தது? கேள்விக்கு அச்சா பிள்ளை மாதிரி பதில் சொல்லுங்கோ பார்ப்பம். :rolleyes:

]

புத்தன் கவிதை நல்லாருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரே வரியில் சொலலி எல்லாம் உங்களை சிறுமைப்படுத்துவா தெய்வமே,

இல்ல கல்லை வணங்கல் ஆகுமோ என்று கேட்ட ஆக்கள் எல்லாம் கடவுள் பற்றி கதைக்கும் போது அதை அலம்பல் என்று தானே சொல்ல வேண்டும்.

இது ஏதோ நக்கலடிச்சு கதைக்கிறது போலவே இருக்கு. அதான் அப்பிடி சொன்னன்

புல்லானாலும் புருசனாகா இருந்தா குவாட்டார் ஆனாலும் யார் இளைஞன் அண்ணா??மதங்கள்,கலாசாரங்கள் என்பவற்றை நீங்களே உருவாகிவிட்டு அதன் பின் அந்த கோட்பாட்டில் தான் நடக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்.....மேற்கத்தைய பெண்களிற்கும் மதம் இருகிறது ஆனா அளவோடு பாவிகிறார்கள்....அளவிற்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு அதை போல் நாம் எல்லாவற்றிலும் அளவுகதிகமாக செல்வது தான் பிரச்சினையே அது மத விசயத்திலும் பொருந்தும்..மேற்கத்தைய பெண்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பழகாமல் ஏன் அந்த மாதிரி குணங்களை மட்டும் எடுத்து கொள்கிறார்கள்........ஆணுக்கு பெண் அடக்க ஓடுக்கமாக இருக்க வேண்டும் என்றா அதற்கு நீங்க தங்களுடைய பாட்டியின் காலதிற்கு தான் செல்ல வேண்டும்.......கணவணோட சேர்து இருந்தா தான் பெருமை பெண்ணிற்கு என்று இல்லை இருவரும் சேர்திருந்தா தான் தாமதியதிற்கு பெருமை............. :)

சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வாதாடுறீங்க............ :P

full ஆனாலும் புருசன், Quater ஆனாலும் காதலன். :rolleyes:

மதங்கள், கலாச்சாரங்களை நாங்கள் உருவாக்கினாங்களா? யார் சொன்னது? ஆதாரம் இருக்கா? அப்பிடி மனுசரால உருவாக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஒண்டும் தெரியாத ஞான சூன்யங்களாலயா உருவாக்கப்பட்டிருக்கும். ஞானிகளாலும் மேதைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்படி நீங்கள் குறை சொல்லலாம். அவற்றை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. :angry:

ஏன் நாங்கள் மேற்கத்தையவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளோணும். எங்கள் மதம் எல்லாவற்றையும் வடிவாக வரையறுத்து வைத்திருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரம் இவ்வளவுதான் என்று மதங்களிலும் கலாச்சாரத்திலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதுக்கு அமைவாக தான் நடக்கவேண்டும். மேற்கத்தையவர்களிடம் இருப்பது கீழ்த்தரமான கலாச்சாரம். அதைக் கலாச்சாரம் என்பதே தவறு. அது காட்டுமிராண்டித்தனம். இந்துக்கள் நாம் தான் கலாச்சாரத்திலும் ஒழுக்கத்திலும் மத விழுமியங்களிலும் உயர்ந்தவர்கள். ஏன் பாட்டியின்ர காலத்துக்கு போகோணும். இந்தக் காலத்திலயும் எந்தக் காலத்திலயும் பெண்கள் அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உலகமே மிருகத்தனமாய் மாறிப்போய்விடும். பெண் ஆணுடன் சேர்ந்திருந்தால் தான் பெண்ணுக்கு மதிப்பு. ஒரு பெண் கணவனை விட்டு விலகியிருந்தால், ஒழுக்கம் கெட்டவள் என்று எங்கள் மதம் நல்லதை போதித்திருக்கிறது. அதன்படி நடந்தால் தான் வாழ்வில் உய்யமுடியும். எனக்கு ஒன்றுமட்டும் விளங்கிவிட்டது. நீங்கள் சுதந்திரம், பகுத்தறிவு, நாத்தீகம் என்று சொல்லிச் சொல்லி எங்கள் கலாச்சாரத்தையும் மதத்தையும் சீரழித்து தமிழரின் அடையாளங்களை குழிதோண்டிப் புதைத்து தமிழர் என்ற இனமே இல்லையென்று ஆக்கப் போகிறீர்கள். :angry:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்..

பெண்களுக்கு நிச்சயம் வேலி போடத்தான் வேணும். இல்ல ஊரில தெருவில உள்ள விலங்குகள் மேஞ்சிடாது..??! ஏனென்றால் பெண்கள் மேய்சல் நிலம்..! :rolleyes::lol:

தமிழ் பெண்கள் தாலி என்று வேலி போடுறதை மட்டும் பிச்சு எறியச் சொல்வது புரட்சி... ஆனால் பர்தா போட்டு.. மூடிக்கிறதை மூடிட்டு ரசிப்பினம்.. இந்து என்றால் தமிழ்.. இஸ்லாம் என்றால்.. மெளனம். :D:)

பர்தா போடுபவள் பெண்ணல்ல.. தாலி போடுபவள் மட்டும்.. வேலி சுமக்கும்.. பெண்..!

பொட்டுப் போட்டா அடிமைத்தனம்.. கழற்றி எறிஞ்சிட்டு... மனைவியாகி.. மண்டியிட்டுக் கிடந்தா.. புரட்சி..!

எத்தனை வடிவங்கள்.. எத்தனை விவாதங்கள்... இறுதியில்.. 20 பவுணில் தாலிக் கொடியும் தாலியும் தொங்க யாழின் கணவன் மாரும் மனைவி மாரும்.. கோவில்களில்.. பிரதிஸ்டை..!

துருப்பிடித்த விவாதங்களும் கருத்துக்களும்.. இவை இன்றேல் யாழ் என்ற மாட்டு வண்டி இயங்காது...! :):)

ஊரில பழைய காரை துருப்பிடிக்க துருப்பிடிக்க... ஓடித்திரிவார்கள்.. அந்தப் பரம்பரை தானே... :lol::D

Edited by nedukkalapoovan

புத்தன் நான் சொன்ன அர்த்தத்தில் கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அவர் செய்கின்ற மற்றைய ஒப்பீடுகளாலும், வேலி என்ற சொல்லை பாவிப்பதாலும், மற்றைய உதாரணங்களில் வேலி என்ற சொல்லை அடக்குமுறைக்கு குறியீடாக காட்டுவதாலும் நான் கூறியபடியான அர்த்தம் கவிதையில் வந்துவிடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நான் சொன்ன அர்த்தத்தில் கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அவர் செய்கின்ற மற்றைய ஒப்பீடுகளாலும், வேலி என்ற சொல்லை பாவிப்பதாலும், மற்றைய உதாரணங்களில் வேலி என்ற சொல்லை அடக்குமுறைக்கு குறியீடாக காட்டுவதாலும் நான் கூறியபடியான அர்த்தம் கவிதையில் வந்துவிடுகிறது.

நிச்சயமாக நான் தேசதிற்கு எதிரான கருத்து ஒன்றையும் இதில் இடவில்லை இனியும் இடபோவதும் இல்லை,சிங்கள இனவாதிகளுக்கு எதிராக தமிழர்களை பாதுகாக்க போராளிகள் தமது உயிர்தியாகத்தால் வேலியிட்டனர் என்ற கருத்தில் தான் எழுதினேன்.

தேசியதிற்கு ஆதரவானவர்கள் இதை வாசித்தால் இதை ஆதரவாக தான் சிந்திபார்கள் என்று நினைகிறேன் எந்த படைப்பையும் மாற்றி விளங்குவதிற்கு சந்தர்ப்பங்கள் உண்டு அந்த வகையில் தான் உங்கள் பார்வையும் இருந்திருபது போல் தெரிகிறது.இந்த புத்தன் எங்கையோ ஒரு சொகுசு மூலையில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு .பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து கிறுக்குவதால் ஆலவிருட்சம் போல் வேருன்றி வளர்ந்திருக்கும் எமது போராட்டம் கடைசி வரையும் அசைய போவதில்லை என்பதே என்னுடைய கருத்து.......... :D

full ஆனாலும் புருசன், Quater ஆனாலும் காதலன்.

மதங்கள், கலாச்சாரங்களை நாங்கள் உருவாக்கினாங்களா? யார் சொன்னது? ஆதாரம் இருக்கா? அப்பிடி மனுசரால உருவாக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஒண்டும் தெரியாத ஞான சூன்யங்களாலயா உருவாக்கப்பட்டிருக்கும். ஞானிகளாலும் மேதைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்படி நீங்கள் குறை சொல்லலாம். அவற்றை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

ஏன் நாங்கள் மேற்கத்தையவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளோணும். எங்கள் மதம் எல்லாவற்றையும் வடிவாக வரையறுத்து வைத்திருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரம் இவ்வளவுதான் என்று மதங்களிலும் கலாச்சாரத்திலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதுக்கு அமைவாக தான் நடக்கவேண்டும். மேற்கத்தையவர்களிடம் இருப்பது கீழ்த்தரமான கலாச்சாரம். அதைக் கலாச்சாரம் என்பதே தவறு. அது காட்டுமிராண்டித்தனம். இந்துக்கள் நாம் தான் கலாச்சாரத்திலும் ஒழுக்கத்திலும் மத விழுமியங்களிலும் உயர்ந்தவர்கள். ஏன் பாட்டியின்ர காலத்துக்கு போகோணும். இந்தக் காலத்திலயும் எந்தக் காலத்திலயும் பெண்கள் அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உலகமே மிருகத்தனமாய் மாறிப்போய்விடும். பெண் ஆணுடன் சேர்ந்திருந்தால் தான் பெண்ணுக்கு மதிப்பு. ஒரு பெண் கணவனை விட்டு விலகியிருந்தால், ஒழுக்கம் கெட்டவள் என்று எங்கள் மதம் நல்லதை போதித்திருக்கிறது. அதன்படி நடந்தால் தான் வாழ்வில் உய்யமுடியும். எனக்கு ஒன்றுமட்டும் விளங்கிவிட்டது. நீங்கள் சுதந்திரம், பகுத்தறிவு, நாத்தீகம் என்று சொல்லிச் சொல்லி எங்கள் கலாச்சாரத்தையும் மதத்தையும் சீரழித்து தமிழரின் அடையாளங்களை குழிதோண்டிப் புதைத்து தமிழர் என்ற இனமே இல்லையென்று ஆக்கப் போகிறீர்கள்.

மாபெரும் தத்துவத்தை சொல்லிவிட்டு இவ்வளவு அமைதியாக இருகிறீங்க............. :lol:

அடித்து சொல்லுவேன் மனிதர்கள் தான் உருவாக்கினது தான் மதங்கள் மற்றும் கலாசாரங்கள் எல்லாமே.........அது ஞான சூனயங்களாகவும் உருவாக்கபட்டிருக்கலாம் உங்களை போல் என்னை போல் சிறந்த அறிவாளிகளாளும் உருவாக்கபட்டிருக்கலாம். :P .........எனக்கு இருகிற ஒரே தகுதி எந்த மதமும் நமக்கு சம்மதம் அந்த ஒரு தகுதி காணும்.........மதம் எவ்வாறு உருவாகிறது என்பதிற்கு நடைமுறை ஆதாரம்...........சாய்பாபா என்று குறிபிடலாம் அங்கே புதிய மததோற்பாடு முயற்சி ஒன்று நடைபெற்றுவருகிறது அதில் என்னை போல் மற்றும் உங்களை போல சிறந்த அறிவாளிகளும் ஞானசூனியங்களாக போய் சேர்ந்து அதை தொடர்கிறது பல ஆண்டுகள் கழித்து இதை யாழில் நானும் நீங்களும் இருக்கமாட்டோம் ஆனால் இந்த மதத்தை பற்றி விவாதிபார்கள்.............. :D

ஏன் எனில் எங்கள் மதம் உறுபடியாக ஒன்றையும் மக்களிற்கு போதிக்கவில்லை ஆகவே மேற்கத்தையவரிடம் இருந்து கொஞ்சத்தை கற்று தான் முன்னுக்கும் வரலாம் இல்லாட்டி நானும் நீங்களும் இப்படி யாழில் பொன்னான கருத்துகளை இடமுடியுமா எங்கயோ ஒரு கிராமத்தில் கோயிலிற்கு முன்னால நின்று கொண்டுருபோம் :) ..............மதங்கள் ஒன்றையும் தீர்மானிக்கமுடியாது எங்களுக்கு என்று தனிமனித சுகந்திரம் இருக்கு அதன் படி நாங்கள் எங்கள் நடவடிக்கை மற்றும் விருப்பு வெறுப்பில் ஈடுபடவேண்டும்............சற்று மாதங்களிற்கு முன் யாழை எடுத்தால் இறுக்கமன வரையறைகள் இருந்தது அதை நான் கடைபிடிக்கவில்லை அது வேற விடயம் ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு சலிப்பு தனமை இருந்தது ஆனால் தற்போது அவ்வாறு இல்லை இதை நான் ஏன் சொல்கிறேன் என்று தங்களுக்கு விளங்கும்........... :)

மேற்கத்தையநாகரீகத்தை கலாசாரம் என்று போர்வையில் பார்க்கமுடியாது என்றா எங்களுடையது தான் கலாசாரம் என்று குறிப்புகள் இருகிறதோ ஏதோ நாங்களே எங்களுக்கு ஒரு வரையறையை வைத்து போட்டு அதற்குல் இருந்து வர பயந்து கொண்டு இப்டியான விளக்கங்கள் வேற............அவர்கள் காட்டுமிராண்டி தனம் என்றா இந்துகள் இறைவனுக்கு பலி எடுபார்கள் இப்படி பல கீழ்தரமான செயல்களை கடவுளின் பெயரில் செய்வது காட்டுமிராண்டிதனம் இல்லையா தங்களுக்கு?? B)

பின்னே உங்கள் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் பாட்டியிற்கு கூட வராது என்று நினைகிறேன் :angry: ...........பெண்கள் அப்படிதான் இருக்கவேண்டும் என்று நீங்க சொன்னாபோல பெண்கள் அவ்வாறு இருந்துவிடுவார்களா இது நல்ல சிந்தனை..............ஏன் மிருகதனமாய் மாறபோகிறது அப்ப ஆண்கள் என்றால் என்னவும் செய்யலாம் என்று கூறுகிறீர்களா அது எப்படி சாத்தியமாகும்................இரண்டும் உயிரினம் தானே.........ஏன் ஆண்கள் ஒழுங்கா இருப்பதன் மூலம் மிருகதனம் இல்லாத சமூகத்தை உருவாக்கமுடியும் என்று கூறுங்களேன்........... பெண் கணவணை விட்டு பிரிவதிற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை என்பவற்றை ஆராய்ந்து தான் அந்த பெண்ணை பற்றி சொல்லமுடியும் வெறும் பெண்ணை மட்டும் சொல்ல முடியாது ஆணையும் கூறலாம் தானே.............

இப்ப குற்றம் செய்தால் நீதிபதி,பொலீஸ் எல்லாம் இருக்கு அப்ப மதம் சொன்னது இப்படி என்று போட்டு அவனை குற்றவாளி என்ற முத்திரியை குத்தமுடியாது தானே அதை போல் தான் இதுவும்........... :D

நீங்கள் சொன்ன் பகுதறிவு,நாத்திகம் என்பவனவற்றை வாழ்கையில் கணுகொள்ளாம விட்டாலே வாழ்க்கை இனிமை அத்துடன் மதம் போதிப்பது எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று இல்லை உங்களுக்கு பிடித்ததை எடுத்து கொள்ளுங்கோ வாழ்வை இனிமையாக வாழுங்கள் அதைவிடுத்து மற்றவர்களிற்கு திணிக்கமுற்படுவதால் ஒருவித பயனும் இல்லை........... :angry:

இந்த மதம் எல்லாவற்றையும் விடுத்து தமிழன் எப்ப வாறானோ அப்ப அவன் முழுமனிதன் ஆகிடுவான் இல்லாட்டி காலதிற்கும் இந்த புராணத்தை பாடி காலத்தை கொண்டுபோயிடுவார்கள்.......... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சின்ன சந்தேகமுங்கோ

தாலி தமிழினத்தில் இந்துமதத்தினரின் திருமண அடையாளம் என்கிறீங்களே. அந்த தாலி & கொடி கட்டாயம் பவுணில் தான் செய்தணியணுமா? மஞ்சள் கயிறு பூணுதல் தப்பா? கொஞ்சம் சொல்லுங்களன்

பிள்ளை வெண்ணிலா தங்க தாலி ஊரில மணவறையில 5 பவுண்,10 பவுணில கட்டின சனம் அதையே தாலியை வெளிநாடு வந்தவுடன் 20 பவுனாக்கி போடீனம் பணம் இருந்தா கலாச்சாரம் என்ன சம்பிரதாயம் என்ன மதம் என்ன எல்லாம் ஜீஜிப்பி........ :D ;)

ஆஹா.. இளைஞனின் யாழ் இணைய ஐடியை திருடி விட்டார்கள் போலை :)

அதெப்படி இளைஞன் , இந்து எண்டால் தமிழ் , தமிழ் எண்டால் இந்து. அப்ப தமிழ் பேசும் கிறிஸ்ரியன் ஆக்கள் இலங்கையில் இல்லையோ ? இருக்கினம் தானே அவை தமிழ் இல்லையா ?

எண்டு அனி கேக்குறீங்கள். அது வேறொன்றும் இல்லை, இளைஞன் சின்னவயதில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் படிச்சவர். அதுதான் அவர் அப்படி பேசுகின்றார். :)

தமிழ் எண்டால் இந்து, இந்து எண்டால் தமிழ் எண்டு சொல்வது தவறு. மேலும், தமிழர்கள் இந்துக்கள் அல்ல.

அனி, இப்ப பாருங்கோ, நீங்கள் இப்போது கிறீஸ்தவராக இருந்தாலும் உங்கள் மூதாதையர் முன்பு இந்துக்களாகவே இருந்தார்கள். உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பாவின் அப்பாவின் அப்பா ஒரு இந்துவாக இருப்பார். இதுபோல் உங்கள் அம்மாவின் அம்மாவின் அம்மாவின் அம்மாவின் அம்மாவும் ஒரு இந்துவாகவே இருப்பார்.

இந்துக்களாக ஆரம்பத்தில் இருந்தவர்களே கிறீஸ்தவர்களாக மதம் மாறினார்கள். இதுபோலவே, ஆரம்பத்தில் தமிழர்கள் இந்துக்களாக இருக்கவில்லை. தமிழருக்கு என்று ஒரு தனித்துவமான கலாச்சாரம் இருந்தது. ஆனால், அது இந்துமதம் மூலம் கலக்கப்பட்டு சின்னா பின்னமாகிவிட்டது. ஆரம்பத்தில் தமிழர்கள் இந்துக்களாக இருக்கவில்லை. அவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.

ஒரு மதத்தில் இருப்பதும், இல்லாதுவிடுவதும், மாறுவதும் அவரவர் விருப்பம். ஆனால், தமிழ் இனத்தை ஒரு மதம் மூலம் இனம்காட்ட முடியாது. தமிழினம் மதங்களிற்கு அப்பாற்பட்டு இருக்கும், இருக்கவேண்டும். அப்படி இல்லையாயின் அவ்வாறு இருக்க வைக்கப்படவேண்டும். சுதந்திர தமிழீழம் மலரும்போது இது நிச்சயம் நடக்கும்.

மேலும் இனம் என்பது ஒரு குழுவாக, மக்கள் கூட்டமாகவும் கொள்ளப்படமுடியும். தமிழில் கதைக்காவிட்டாலும், பல தமிழ் பின்னணியை கொண்ட மக்கள் ஒரு குழுவாக வாழும்போது நீங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அவர்களை தமிழர் என்றுதான் அழைக்கவேண்டும். நீங்கள் அவ்வாறு அழைக்காவிடினும் வெள்ளைக்காரன் அவ்வாறுதான் அழைப்பான். தாய்மொழி mother tongue என்னவோ அதைத்தான் வெள்ளைக்காரன் முக்கியமாக பார்ப்பான்.

இப்ப என்னை எடுத்துக்கொண்டால் முதலில் நான் ஒரு இந்து என்று இப்போது என்னை கூறமாட்டேன். அப்படியானால் நான் ஒரு தமிழன் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் எல்லாவற்றையும் விடுத்து தமிழன் எப்ப வாறானோ அப்ப அவன் முழுமனிதன் ஆகிடுவான் இல்லாட்டி காலதிற்கும் இந்த புராணத்தை பாடி காலத்தை கொண்டுபோயிடுவார்கள்.......... :)

ஜம்முபேபி இப்படியான ஜடியா எல்லாம் எங்கே இருந்து கற்றுகொண்டனீங்க..சபாஷ் சின்னகுட்டி இளைஞனிட்ட கேட்ட மாதிரி தங்களின்ட ஜடியையும் ஒருத்தரும் திருடவில்லை தானே. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இந்தக் கவிதையை பிரபலப்படுத்திய எங்களின் கருத்துக்களை அலம்பல் என்று ஒரு சொல்லில் சொல்லிவிட்டார் நிதர்சன்
.

கவிதையை பிரபலயபடுத்திய அனைவருக்கும் நன்றிகள் :)

ஜம்முபேபி இப்படியான ஜடியா எல்லாம் எங்கே இருந்து கற்றுகொண்டனீங்க..சபாஷ் சின்னகுட்டி இளைஞனிட்ட கேட்ட மாதிரி தங்களின்ட ஜடியையும் ஒருத்தரும் திருடவில்லை தானே. :P

:)<_<:( எனக்கும் உந்த சந்தேகம் வந்திருக்கு மாமா :angry: யார் திருட போகினம்? ஜம்முதான் யாருக்காவது கொடுத்திருப்பார். மடல்கள் கதை வாசிக்கவில்லையோ புத்து மாமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.