Jump to content

ராஜீவ் கொலையில் பழி சுமத்தப்பட்ட நளினி உட்பட்ட ஆறுபேர் விடுதலை


Recommended Posts

நளினியின் செவ்வி ஒன்று முகப்புத்தகத்தில் வந்தது. அதற்கான பின்னூட்டங்களை பார்த்த போது தமிழ்நாடு அவருக்கு பாதுகாப்பான இடமாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியங்காவை சிறையில் சந்தித்தவேளை - மனம் திறந்தார் நளினி

By RAJEEBAN

14 NOV, 2022 | 02:58 PM
image

பிரியங்கா காந்தி தன்னை சிறையில் சந்தித்தவேளை தனது தந்தை ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்து கேள்விகளை எழுப்பினார் என நளினி ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலையான பின்னர் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

5CsPFCLX.png

எனக்கு தெரிந்த அனைத்தையும் பிரியங்காவிடம் தெரிவித்தேன் என தெரிவித்துள்ள நளினி பிரியங்கா உறுதியானவராக காணப்பட்டாரா அல்லது உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டாரா என்ற கேள்விக்கு பிரியங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு பல வருடங்களிற்கு பின்னரே பிரியங்கா தன்னை சந்தித்த போதிலும் தனது தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட காயங்கள் ஆறாத நிலையில் பிரியங்கா காணப்பட்டார் என நளினிதெரிவித்துள்ளார்.

பிரியங்கா அழுதாரா என்ற கேள்விக்கு ஆம் என நளினி குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி 1991இல் கொலை செய்யப்பட்டார் 2008 இல் நளினியை  பிரியங்கா வேலூர் சிறைச்சாலையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது ஏனென்றால் அவை  பிரியங்காவின் விருப்பத்துடன் தொடர்புபட்டவை எனவும் நளினி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி  குடும்பத்தை சந்திப்பதில் ஏதாவது தயக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு அவர்கள்  விரும்பினால் நான் அவர்களை சந்திப்பேன் ஆனால் படுகொலை வழக்கு காரணமாக தயக்கம் கொண்டிருந்தேன் எனவும் நளினி தெரிவித்துள்ளார்.

5CsPFCLX.png

30 வருடங்கள் சிறையில் கற்றுக்கொண்ட பாடம் குறித்த கேள்விக்கு சிறைச்சாலை என்பது மிகப்பெரிய பல்கலைகழகம் அங்கு நான் பல விடயங்களை கற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் சிறைவாழ்க்கை குறித்தும் நீதிக்கான போராட்டம் குறித்தும் நூல் ஒன்றை எழுதும் எண்ணமுள்ளதா என்ற கேள்விக்கு நான் தற்போது எனது கணவர் மகளுடன் இணைந்து வாழ்வது குறித்தே கவனம் செலுத்துகின்றேன் என நளினி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

நளினியின் செவ்வி ஒன்று முகப்புத்தகத்தில் வந்தது. அதற்கான பின்னூட்டங்களை பார்த்த போது தமிழ்நாடு அவருக்கு பாதுகாப்பான இடமாக தெரியவில்லை. 

இவர்கள்.... ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காமல் இருப்பதுதான், இவர்களுக்கு பாதுகாப்பு.
என்ன சொன்னாலும்... அதில் குற்றம், குறை கண்டு பிடிக்க 
வெவ்வேறு கட்சிக்காரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
ஊடகங்களும்... இவர்களது வாயை கிளறி வம்பில் மாட்டி விடுவார்கள் கவனம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு நபரை தண்டனையை குறைத்து விடுதலை செய்கிறது மாகாராஷ்ரா அரசு.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு அநியாயமான விசயம்.

ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

https://www.vinavu.com/2022/11/14/rajiv-gandhi-is-fascist-maruthu-video/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 14:29, nunavilan said:

நளினியின் செவ்வி ஒன்று முகப்புத்தகத்தில் வந்தது. அதற்கான பின்னூட்டங்களை பார்த்த போது தமிழ்நாடு அவருக்கு பாதுகாப்பான இடமாக தெரியவில்லை. 

ரிவிட்டர் பக்கம் போய் ஒரு சில பின்னோட்டங்களை வாசித்தால் எதுவுமே நல்லதாக தெரியவில்லை. பெரிய பிரமுகர்கள் உட்பட ஏதோவெல்லாம் திட்டி தீர்க்கின்றார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினி வாயை மூடிக்கொண்டு இருப்பது மற்ற விடுவிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து செய்யும் நல்ல செயல்… கெதியெண்டு வேற பாதுகாப்பான நாட்டுக்கு போய்விட்டு இவற்றை கதைக்கலாம்..

  • Like 2
Link to comment
Share on other sites

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நளினி வாயை மூடிக்கொண்டு இருப்பது மற்ற விடுவிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து செய்யும் நல்ல செயல்… கெதியெண்டு வேற பாதுகாப்பான நாட்டுக்கு போய்விட்டு இவற்றை கதைக்கலாம்..

மீடியா அவரை தொடர்ந்த படி உள்ளார்களாம்.

என்ன கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்  என தெரியவில்லை. வெளிநாடு போக  வி டுவார்களா தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

மீடியா அவரை தொடர்ந்த படி உள்ளார்களாம்.

என்ன கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்  என தெரியவில்லை. வெளிநாடு போக  வி டுவார்களா தெரியவில்லை. 

ஏதாவது… இசகு, பிசகாக கதைத்து…
திரும்ப உள்ளுக்குப் போய் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்தாலே…
ஊடகங்களும், மக்களும் மறந்து அடுத்த அலுவல் பார்க்கப் போய் விடுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

ஏதாவது… இசகு, பிசகாக கதைத்து…
திரும்ப உள்ளுக்குப் போய் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்தாலே…
ஊடகங்களும், மக்களும் மறந்து அடுத்த அலுவல் பார்க்கப் போய் விடுவார்கள்.

முப்பத்திரண்டு வருட தடுக்கப்பட்ட காட்டாற்று வெள்ளம்.

தடுக்கமுடியாத உள்ளக்கொதிப்பு.....

இனி இழக்க எதுவுமே இல்லையே என்று வரும் குரல்.

சட்டம் தடுத்து வைத்தது..... சட்டம் விடுதலைசெய்தது.

தூற்றூவார் தூற்ற, வாழ்த்துவார் வாழ்த்த, வாழ்வு அது பாட்டில் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினி ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை விடுத்து தான் வெளியே வருவதற்கு உதவிய முக்கியஸ்தர்களை சந்தித்து கதைத்து நன்றி கூற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2022 at 23:31, தமிழ் சிறி said:

இந்திரா காந்தியின் கொலையையே... மன்னித்தவர்கள்.
ஏனென்றால்... அவன் சீக்கியன் 

ராஜீவ் காந்தி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தும்...
தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக... 
30 வருடம் கடந்தும் வன்மம் கக்கிக்  கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வளவிற்கும்... சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் 
அவர்களை மன்னித்து விட்டதாக  10 வருடத்துக்கு முன்பே தெரிவித்து விட்டார்கள்.
இவர்களுக்கு... எதில் அரசியல் செய்வது என்று விவஸ்தையே இல்லை.

2008 இல் ஒரு கதையொன்று உலாவியது. அக்காலத்தில் நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா காந்தி, ராஜீவ் கொலையில் அவரின் பங்குபற்றியும், புலிகள் பற்றியும் கேட்டதாக சொல்லப்பட்டது. அதன் பின்னரே இனக்கொலையாளி ராஜீவின் குடும்பம் புலிகளை அழிப்பதுடன், அவர்களுக்குப் பக்கபலமாக இருந்த ஈழத்தமிழர்களுக்கும் கடுமையானதொரு பாடத்தை புகட்ட முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. இதில் எவ்வளவுக்கு உண்மையுள்ளதென்று தெரியவில்லை.

அதேபோல் 2002 இல் கிளிநொச்சி பத்திரிக்கையாளர் மாநாட்டில் வைத்து தலைவரிடம் இனக்கொலையாளி ராஜிவின் மரணம் தொடர்பாகக்  கேள்விகேட்ட இந்தியப் பத்திரிக்கையாளன் ஒரு ரோ உளவாளியென்றும், அந்தக் கேள்வியின் நோக்கமே புலிகளிடமிருந்து வெளிப்படையான பதிலொன்றைப் பெறுவதுதானென்றும் கூறப்பட்டது. அப்போது தலைவர் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று கூறியதும், அக்கொலையினை புலிகளே செய்ததாக சோனியாவும் இந்தியாவும் எடுத்துக்கொண்டன என்றும் கூறப்பட்டது. 

ஆகவேதான் விதவையும் அவளது வேட்டை நாய்களும் முள்ளிவாய்க்கால் இனக்கொலையினை தமக்கு உகந்த நேர அட்டவணையில் நடத்தி முடித்ததாக நான் நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

2008 இல் ஒரு கதையொன்று உலாவியது. அக்காலத்தில் நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா காந்தி, ராஜீவ் கொலையில் அவரின் பங்குபற்றியும், புலிகள் பற்றியும் கேட்டதாக சொல்லப்பட்டது. அதன் பின்னரே இனக்கொலையாளி ராஜீவின் குடும்பம் புலிகளை அழிப்பதுடன், அவர்களுக்குப் பக்கபலமாக இருந்த ஈழத்தமிழர்களுக்கும் கடுமையானதொரு பாடத்தை புகட்ட முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. இதில் எவ்வளவுக்கு உண்மையுள்ளதென்று தெரியவில்லை.

அதேபோல் 2002 இல் கிளிநொச்சி பத்திரிக்கையாளர் மாநாட்டில் வைத்து தலைவரிடம் இனக்கொலையாளி ராஜிவின் மரணம் தொடர்பாகக்  கேள்விகேட்ட இந்தியப் பத்திரிக்கையாளன் ஒரு ரோ உளவாளியென்றும், அந்தக் கேள்வியின் நோக்கமே புலிகளிடமிருந்து வெளிப்படையான பதிலொன்றைப் பெறுவதுதானென்றும் கூறப்பட்டது. அப்போது தலைவர் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று கூறியதும், அக்கொலையினை புலிகளே செய்ததாக சோனியாவும் இந்தியாவும் எடுத்துக்கொண்டன என்றும் கூறப்பட்டது. 

ஆகவேதான் விதவையும் அவளது வேட்டை நாய்களும் முள்ளிவாய்க்கால் இனக்கொலையினை தமக்கு உகந்த நேர அட்டவணையில் நடத்தி முடித்ததாக நான் நினைக்கிறேன். 

ஆம் ரஞ்சித். நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
இந்தியாவின்... முக்கிய கொள்கையே தமிழரை மட்டம் தட்டி வைப்பது தான்.

மேற்கூறியது நடந்திருக்கா விட்டாலும், 
வேறு ஏதோ....கரணம் சொல்லி, தமிழரின் பல்லை, இந்தியா புடுங்கியே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“தாயை இழந்தேன், வாய்ப்பை இழந்தேன், எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவது?” - ராஜீவ் காந்தியோடு பலியான காங்கிரஸ் பிரமுகர் மகன் கேள்வி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அப்பாஸ்

 

படக்குறிப்பு,

சம்பவத்தில் பலியான காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளளை அடுத்து, 30ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதை அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

மறுபக்கம், அந்த சம்பவத்தில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் கடுமையான விமர்சனத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் தனு என்ற பெண் நடத்திய தற்கொலைப் படை மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில், மனித வெடிகுண்டு தனு, ராஜீவ் காந்தி அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 16 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் மோசமான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு காரணம் விடுதலைப் புலிகள் என குற்றம்சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தனர். கடந்த மே மாதம், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்தது. தற்போது மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை பெற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலையுண்ட சமயத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகமும் உயிரிழந்தார். அவரது மகன் அப்பாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அந்தச் சம்பவத்தால் அனாதையாக வளர்ந்ததாகக் கூறுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய அப்பாஸ், ''நாங்கள் மூவரும் சிறுவர்கள். என் அண்ணன்களுக்கு 12, 14 வயது, எனக்கு 10 வயது. எங்களின் தந்தை 1988இல் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால், எங்கள் தாயார் மட்டும்தான் எங்களை வளர்த்தார். அன்று அந்த கூட்டத்தில் அவர் இறந்துபோவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரும் எங்களை புறம்தள்ளினர். எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அரசாங்கம் அப்போது, ரூ.40,000 இழப்பீடு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். யார் அதைப் பெற்றார்கள் என்றுகூட எங்களுக்கு தெரியாது. இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் அனாதையாக வளர்ந்தோம்,'' என்கிறார் அப்பாஸ்.

 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர்

 

படக்குறிப்பு,

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர்

தற்போது சென்னை பாடி பகுதியில் கடிகார கடை ஒன்றை நடத்திவரும் அப்பாஸ், சிறுவயதில் பெற்றோரை இழந்து, படிப்பை இழந்து, முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறார். ''ஏழு பேரையும் விடுவித்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவார்கள். எங்களுக்காக யார் பேசுவார்கள்? அவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள், அவர்கள் குடும்பத்துடன் இருப்பார்கள், எங்களுக்கு நாங்கள் இழந்தவர்கள் மீண்டு வரப்போவதில்லை,''என்கிறார் அப்பாஸ்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தபோது காவல் ஆய்வாளராக இருந்தவர் அனுசுயா எர்னஸ்ட். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அவர், ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அவர் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''இப்போதும் என் முகத்தில் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் உள்ளன. என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. எனக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? என்னைப் போல காயம் அடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு யார் நீதி வாங்கி தருவார்கள்?,''என கேள்வி எழுப்புகிறார்.

 

சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த அனுசுயா

 

படக்குறிப்பு,

சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த அனுசுயா

ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள், குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக பேசியதை பற்றி கேட்டபோது, ''அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் நேரடியாக குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டனர். ஆனால் அவர்கள் மன்னித்துவிட்டனர். நாங்கள் தினமும் அந்த இழப்பின் சுவடுகளுடன் வாழ்கிறோம். எங்களுக்கு ஆதரவு தருபவர்கள் யாரும் இல்லை,''என்கிறார்.

மேலும், ''ஒரு (முன்னாள்) பிரதமரை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் விடுதலை தந்தால், யாருக்குதான் தூக்குதண்டனை கொடுப்பார்கள்? இந்த தீர்ப்பை வைத்து, இனி பலரும் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்,''என்கிறார் அனுசுயா.

குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கும் குடும்பங்கள் நீதி கேட்பது குறித்து, ராஜீவ் காந்தி கொலையான சமயத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் பகவான் சிங்கிடம் கேட்டபோது, ''இந்த கொலையை திட்டமிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை.

கொலையில் பலியான ராஜீவ் காந்தி குடும்பத்தினர் கூட, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொலை வழக்கில் கைதானவர்கள் யாருக்கும் அந்த சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரியாது என்பது புலன்விசாரணையில் வெளியானது.

அதனால், அவர்களை விடுவித்துள்ளது என்பது, நம் நீதிமன்றத்தின் தன்மையை உணர்த்துகிறது. இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு பெரிய வலி ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அதற்காக எத்தனை ஆண்டுகள் தண்டனை தந்தாலும், அது ஈடாகாது, மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும்''என்கிறார்.

மேலும், ''குற்றவாளிகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், தனது குறிப்பில், பேரறிவாளன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றார். அதனால், இந்த வழக்கும், அதன் விசாரணையிலும் பல ஓட்டைகள் உள்ளன. மேலும், அதனைப் பற்றி விசாரிக்க தொடங்கபட்ட விசாரணை ஆணையமும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும் குரல் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்,''என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3g9v0kq36lo

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.