Jump to content

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

By RAJEEBAN

20 DEC, 2022 | 01:18 PM
image

தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

https://www.virakesari.lk/article/143640

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்போ தமிழகத்தில் தமிழே இல்லையா கோப்பால்?

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

ஆம். முக்கியமாக முதலில் ஓர் சட்டம் கொண்டு வரவேண்டும்.

பொது  நிகழ்வுகளில், அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் முழுமையாக தமிழிலியே கட்டாயமாக அறிவிக்க வேண்டும். வேற்று மொழிகளை தமிழ் அறிவிப்பில் கலப்பது தண்டனைக்கு உரிய குற்றம்.

வேற்று மொழியில் பிறிம்பான அறிவுப்பு இருக்கலாம், ஆனால், கலப்பு கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும்.

அறிவிப்பாளர், தொகுப்பாளர்கள், தமிழக அரசு பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழில் அறிவிப்பதற்கு பயிற்றுவிக்கப்ப்பட்டு  இருக்க வேண்டும்.

தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி ஏதாவது ஒரு  மொழியில் கூட உரையாடலை முழுமையாக தொடர முடியாத இளைய சமூகம் உருவாக்கி வருகிறது.   

எமது மொழியை நாம் செம்மை படுத்தாமல், வேறு யார் செய்வது.

தமிழக அரசு செய்யாத தொடங்கினால், வேற்று மாநிலங்கள் முந்திக்  கொள்ளும்.   
 
வளர்ந்த மேலை நாடுகளில் கூட, அவர்கள் மொழியை உரிய மட்டத்தில் பிரயோகிக்கும் தகமை வேண்டப்படுகிறது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ தமிழகத்தில் தமிழே இல்லையா கோப்பால்?

உந்த வருத்தம் இலங்கை தமிழ் ஊடகளிடமும் மக்களிடமும் தொற்றி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தமிழ் பேசும்படி உயர் நீதிமன்றம் சொல்ல வேண்டிய நிலை 😭

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிவியல் மொழியாக்க வேண்டும். அதுவே தீர்வு. தமிழ் மொழி என்பது பழைய கம்பராமாயணத்தின் புகழ் பாடும் பழமை இலக்கியமாக மட்டும் வைத்திருக்காமல், காலத்திற்கேற்ப சீர் திருத்தப்பட்டு செம்மை டுத்தபடல் வேண்டும்.  பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறை படுத்த 50 ஆண்டுகள் தேவைப்படும் அளவுக்கு நாம் மிக பின்தங்கி இருந்திருக்கிறோம். (அறிமுகம் 1935. நடைமுறை 1980 க்கு பின்பு) 
 
அந்த சீர்திருத்தம் கணணித்தமிழுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. அது போல் நவீன காலத்திற்கு ஏற்ப அதை திருத்தி அமைப்பது தமிழ் அறிஞர்கள் என்று கூறுவோரின் கடமை.  உயர் கல்வியை கற்பதற்கு தமிழில் நூல்கள் இல்லை.  அந்த குறை நீங்க உயர்கற்கை நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கபட்டல் வேண்டும்.  

தமிழ் அறிஞர்கள் பழந்தமிழ் பெருமை பேசுவதில் செலவிடும் நேரத்தை விட்டு  எதிர்கால தமிழுக்கு தம்மாலானதை செய்ய வேண்டும்.  சீதையின் கற்பை பற்றியும்,  இராமனின் பெருமை பற்றியும் மணிக்கணக்கில் மேடை பேச்சே தமிழ் தொண்டு என்று இருப்பதை தமிழ் அறிஞர்கள் முற்றாக கைவிட வேண்டும்.  வைத்தியம், வணிகம், தொழில்நுட்பம், கட்டிக்கலை முதலிய துறைகளில் உலக மொழிகளில் உள்ள நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கபடல் வேண்டும் அல்லது தமிழில் அவ்வாறான நூல்கள் எழுதப்படல் வேண்டும். அதன் மூலமே தமிழ் அறிவியல் மொழி என்பதை நடைமுறை  நிரூபிக்க முடியும்.  இதன் மூலமே எதிர் கால சந்ததியினருக்கு பெருமையுடன் எமது மொழியை கடத்த முடியும். அதை விடுத்து தமிழ், தமிழ் என்று பழம் பெருமை பேசுவதில் எந்த பயனும் இல்லை.
 
மனித வாழ்க்கைக்கு எந்த மொழி உதவுகிறதோ அந்த மொழியையே மக்கள் நாடுவர்.  நாம் வாழ்வதற்கும் சுலபமாக தொடர்பாடல் செய்வதற்குமே மொழியே தவிர மொழிக்காக மனிதர்கள் வாழ முடியாது என்ற ஜதார்த்தத்தை புரிந்து செயற்பட்டடால்  இவ்வாறான பயம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

Edited by island
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

உண்மை.

இந்தத் திசையிலான முயற்சி ஏற்கனவே தமிழ் நாடு அரசின் மொழிப்பிரிவினால் ஆரம்பிக்கப் பட்டு விட்டது. கடந்த ஒரு  வருடமாக தமிழில் கலைச் சொற்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் நிபுணர்களிடமிருந்து சேகரித்து ஒரு சொற்குவை ஏழு இலட்சம் சொற்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இது இன்னும் தொடர்கிறது. நானும் ஒரு நாற்பது மருத்துவ உயிரியல் சொற்கள் பங்களித்திருக்கிறேன். 

இணைப்பு: https://www.sorkuvai.com/

அடுத்த முயற்சியாக ஒவ்வொரு விஞ்ஞான தொழில் நுட்பத் துறையிலும் ஒரு கலைச்சொல் அகராதி உருவாக்கப் போகிறார்கள். முதல் அகராதி மருத்துவ உயிரியல் அகராதியாக 2023 இறுதியில் வெளிவர இருக்கிறது. இதன் ஆலோசனைக் குழுவிலும் என் பங்களிப்பு இருக்கும்.

விளம்பரங்கள் இல்லாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், திராவிடன் தமிழுக்கு சேவை செய்தால் சில தமிழருக்கு விளம்பரம் செய்தாலும் கூட அது மூளையில் ஏறாது.😂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2022 at 17:11, ஈழப்பிரியன் said:

அப்போ தமிழகத்தில் தமிழே இல்லையா கோப்பால்?

13 hours ago, விசுகு said:

தமிழ் நாட்டில் தமிழ் பேசும்படி உயர் நீதிமன்றம் சொல்ல வேண்டிய நிலை 😭

13 hours ago, Kadancha said:

எமது மொழியை நாம் செம்மை படுத்தாமல், வேறு யார் செய்வது.

தமிழக அரசு செய்யாத தொடங்கினால், வேற்று மாநிலங்கள் முந்திக்  கொள்ளும்.   
 
வளர்ந்த மேலை நாடுகளில் கூட, அவர்கள் மொழியை உரிய மட்டத்தில் பிரயோகிக்கும் தகமை வேண்டப்படுகிறது. 

சரியாகச் சொன்னீர்கள் 👍

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.