Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கொரோனா தடுப்பூசிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லண்டனின் அறிவியல் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓர் அலமாரியில் ஓர் ஊசி, ஒரு மருந்து பாட்டில் மற்றும் அட்டையிலான ஒரு தட்டு ஆகியவை உள்ளன. இவை, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியுடன் தொடர்புடையவை. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் அந்தப் பெண்மணி அன்று பெற்றார்.

அந்தக் கணம் முதல் தற்போதுவரை உலகளவில் 13 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் பூஸ்டர்கள் டோஸ்களும் அடங்கும். இந்த இரண்டு வருடங்களில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த தரவு என்ன வெளிப்படுத்துகிறது? பக்க விளைவுகள் பற்றி என்ன தெரியும்?

சுருக்கமாக கூறுவதென்றால், உலகெங்கிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கொரோனாவுக்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் முதன்மை பங்கு வகித்ததாக ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. தடுப்பூசி இல்லாவிட்டால், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.

 

மிகக் கடுமையான பக்க விளைவுகள் அரிதாகவே இருந்ததாக பொது சுகாதார நிறுவனங்கள் கூறுகின்றன.

அந்த அறிக்கைகளின் பின்னணி குறித்து பார்ப்போம்.

நடைமுறை விளைவுகள்

கொரோனா தடுப்பூசிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா தடுப்பூசிகள் பெரிய அளவில் மக்களை சென்றடையைத் தொடங்கியதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு விகிதம் உலகம் முழுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது.

ஓமிக்ரான் போன்ற அதிகம் பரவக்கூடிய திரிபுகள் உச்சத்தில் இருந்தபோது கூட, பெரும்பாலான மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படவில்லை அல்லது இறக்கவில்லை என்பதை தடுப்பூசி உறுதி செய்துள்ளது.

டிசம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், காமன்வெல்த் நிதியம் அமெரிக்க யேல் பல்கலைக்கழக பொது சுகாதார துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்க அழைப்பு விடுத்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் 18.5 மில்லியன் கூடுதல் மருத்துவமனை அனுமதி மற்றும் 3.2 மில்லியன் இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் என்று அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கூடுதல் தொற்று ஏற்பட்டிருந்தால் மருத்துவச் செலவுக்காக செலவழித்திருக்க வேண்டிய 1.15 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை தடுப்பூசித் திட்டம் மூலம் அமெரிக்கா சேமித்துள்ளது.

"டிசம்பர் 12, 2020 முதல், அமெரிக்காவில் 82 மில்லியன் நோய்த்தொற்றுகள், 4.8 மில்லியன் மருத்துவமனைகள் அனுமதி மற்றும் 7,98,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. வேறுவிதமாக கூறினால், தடுப்பூசி இல்லாவிட்டால் அமெரிக்கா 1.5 மடங்கு அதிகமான தொற்றையும், 3.8 மடங்கு அதிகமான மருத்துவமனை அனுமதிகளையும், 4.1 மடங்கு அதிகமான இறப்புகளையும் சந்தித்திருக்கும்" என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

"கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பலருக்கு இறப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்கிறார் பிரேசிலியன் சொசைட்டி ஆஃப் இம்யூனைசேஷன் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் இசபெல்லா பல்லாலாய்.

டாக்டர் பல்லாலாயின் சொந்த நாடான பிரேசில், வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு பிரேசில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

2021ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டபோது, பிரேசிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. தேசிய சுகாதார செயலாளர்கள் கவுன்சில் கூறியதன்படி, பிரேசிலில் கடந்த ஆண்டு மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில், தினசரி புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 72,000 ஆகவும், தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 3,000ஐயும் தாண்டியது. வாரங்கள் செல்லச் செல்ல தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரேசிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், இறப்பு எண்ணிக்கையும் பெரிய அளவில் குறையத் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு ஜனவரியில் ஓமிக்ரான் திரிபு காரணமாக இந்த எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கினாலும், இந்த புதிய அலையின் உச்சமாக தினசரி 950 இறப்புகள் பதிவானது. இது முந்தைய அலையோடு ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.

பக்க விளைவுகள்

கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"காலம் செல்ல செல்ல, அதிக அளவு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் அதன் பாதுகாப்பு குறித்து நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று டாக்டர் பல்லாலாய் கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், தடுப்பூசிக்குப் பிந்தைய பக்க விளைவுகள் குறித்த ஒவ்வொரு வழக்கையும் கண்காணித்து விசாரிக்க ஒழுங்குமுறை முகமைகளும் பொது சுகாதார நிறுவனங்களும் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

"தீவிரமான பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை" என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை சுட்டிக்காட்டுகிறது.

ஊசி போட்ட இடத்தில் வலி, சோர்வு, தலைவலி, உடல் வலி, காய்ச்சல் ஆகியவை தடுப்பூசிக்குப் பிறகான மிகவும் பொதுவான அசௌகரியங்கள்.

"இந்தப் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை மற்றும் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே நீடிக்க வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் கடுமையான பக்க விளைவுகள் குறித்து சமீபத்திய புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? இது தொடர்பான புள்ளிவிவரங்களின் புதுப்பித்த பதிவு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் (CDC) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை அறியப்பட்ட மிகவும் தீவிரமான பக்க விளைவுகளின் விகிதாசார எண்கள் இவை:

அனாபிலாக்ஸிஸ் (தடுப்பூசிக்குப் பிறகான ஒவ்வாமை) - ஒரு மில்லியன் டோஸ்களில் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜான்சென் தடுப்பூசி தொடர்பான ரத்த உறைவு - ஒரு மில்லியன் டோஸ்களில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜான்சென் தடுப்பூசியுடன் தொடர்புடைய குய்லின்-பாரே நோய் அறிகுறி - இது குறித்த அதிகாரப்பூர்வ எண்கள் எதுவும் இல்லை. ஆனால் ஃபைசர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சிறிய அதிகரிப்பு இருந்தது.

மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் (இதய அழற்சி) - ஃபைசர் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 16 முதல் 17 வயதுடையவர்களிடம் ஒரு மில்லியனுக்கு 105.9 வழக்குகளும், 18 முதல் 24 வயதுடையவர்களில் ஒரு மில்லியனுக்கு 52.4 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளின் பல ஆய்வுகள் மற்றும் மதிப்பாய்வுகள் தொடர்பான தரவுகள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதைக் காட்டுகின்றன.

இறப்பு என்று வரும்போது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 7 வரை தடுப்பூசிக்குப் பிறகு 17,800 இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இது நாட்டில் செலுத்தப்பட்ட 657 மில்லியன் டோஸ்களில் 0.0027 சதவிகிதம். எனினும், இந்த மரணங்களுக்கான நேரடி காரணம் தடுப்பூசி என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

மருத்துவப் பதிவுகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் மூலம் இந்த வழக்குகள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் ஜான்சன் தடுப்பூசியுடன் தொடர்புடைய ஒன்பது இறப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டன.

அடுத்து என்ன வரும்?

கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும், கொரோனா வைரஸை திறம்பட கட்டுப்படுத்தும் வரை இன்னும் பல சவால்கள் உள்ளன.

"உலகளாவிய கண்ணோட்டத்தில், நோய்த்தடுப்பு நிலையில் மிகவும் பின்தங்கிய நாடுகள் சில உள்ளன" என்று தொற்றுநோய் நிபுணர் ஆண்ட்ரே ரிபாஸ் ஃப்ரீடாஸ் கூறுகிறார்.

உதாரணமாக, ஹைதியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு ஆரம்ப டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர். அல்ஜீரியா (15%), மாலி (12%), காங்கோ (4%) மற்றும் ஏமன் (2%) போன்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.

வைரஸ் பரவல் அதிகரிக்கும் போது தீவிரமான பரவல் அல்லது புதிய திரிபுகள் உருவாகும் என்பதால் இது மிகப்பெரும் கவலையை வெளிப்படுத்துவதாக ஆண்ட்ரே ரிபாஸ் ஃப்ரீடாஸ் எச்சரிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c4n2g4xkwkko

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:

கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பெரிய பெரிய கம்பனிகள் பணம் பண்ணியிருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

பெரிய பெரிய கம்பனிகள் பணம் பண்ணியிருக்கமாட்டார்கள்.

இப்படி கருத்து எழுத பல வயசாளிகள் இருந்திருக்கவும் மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படி கருத்து எழுத பல வயசாளிகள் இருந்திருக்கவும் மாட்டார்கள்.

கோசான் நான் நான்காவதும் போட்டுவிட்டேன்.

ஆனாலும் இன்னமும் ஒரு தடவை கூட ஊசி போடாத வயசானவர்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் நான் நான்காவதும் போட்டுவிட்டேன்.

ஆனாலும் இன்னமும் ஒரு தடவை கூட ஊசி போடாத வயசானவர்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் முன்பே ஊசி போடுகிறேன் என சொல்லி உள்ளீர்கள்தானே அண்ணை. நான் பொதுவாகத்தான் சொன்னேன்.

ஊசி போடத சிலர் உளர்தான். ஆனால் பலர் இல்லை என்பதை மறக்ககூடாது அல்லவா. 

இப்ப சைனாவில் நடப்பதை பார்க்க தெரியவில்லையா அண்ணை RNA அடிப்படையிலான ஊசி இல்லாவிட்டால் நிலமை எப்படி இருந்திருக்கும் என.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிய பெரிய கம்பனிகள் பணம் பண்ணியிருக்கமாட்டார்கள்.

இப்பவெல்லாம் நோயையும் அதற்குரிய மருந்தையும் கண்டு பிடித்துவிட்டு தான் வெள்ளோட்டம் பார்ப்பார்களாம் எண்டு என்ரை முதலாளி பகிடிக்கு சொன்னான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நீங்கள் முன்பே ஊசி போடுகிறேன் என சொல்லி உள்ளீர்கள்தானே அண்ணை. நான் பொதுவாகத்தான் சொன்னேன்.

ஊசி போடத சிலர் உளர்தான். ஆனால் பலர் இல்லை என்பதை மறக்ககூடாது அல்லவா. 

இப்ப சைனாவில் நடப்பதை பார்க்க தெரியவில்லையா அண்ணை RNA அடிப்படையிலான ஊசி இல்லாவிட்டால் நிலமை எப்படி இருந்திருக்கும் என.

 

ரம்பும் அதிபராக இருந்த கடைசி காலத்தில் கொரோனா தொற்றி ஊசிகள் வெளிவர முதலே தான் போட்டுக் கொண்டார்.

ஆனாலும் அதற்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார்.

அவருக்கு ஆதரவான மாநிலங்களில் இன்னமும் ஊசி போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ரம்பும் அதிபராக இருந்த கடைசி காலத்தில் கொரோனா தொற்றி ஊசிகள் வெளிவர முதலே தான் போட்டுக் கொண்டார்.

ஆனாலும் அதற்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார்.

அவருக்கு ஆதரவான மாநிலங்களில் இன்னமும் ஊசி போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஓம். இந்த விசயத்தில் பலரின் செயலும், சொல்லும் வேறு வேறாகவே இருந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் 3.5 கோடி பேருக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளதாம். சீனா ஊசி விசயத்தில் கோட்டை விட்டுள்ளது போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

சீனாவில் 3.5 கோடி பேருக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளதாம். சீனா ஊசி விசயத்தில் கோட்டை விட்டுள்ளது போலுள்ளது. 

 

அமெரிக்க

ஐரோப்பியர்கள்  நாம்  தரமான ஊசிகளால் தப்பித்தோம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

அமெரிக்க

ஐரோப்பியர்கள்  நாம்  தரமான ஊசிகளால் தப்பித்தோம்

சிறிலங்காவிலும் சீன ஊசிகள் போடப்பட்டன. அங்கு பெரிதாக சீனா அளவுக்கு பாதிக்கப்பட்டதாக தெரியவில்லையே??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சிறிலங்காவிலும் சீன ஊசிகள் போடப்பட்டன. அங்கு பெரிதாக சீனா அளவுக்கு பாதிக்கப்பட்டதாக தெரியவில்லையே??

 

தீவுகளில்

மற்றும் வெப்பநிலை அதிகமான நாடுகளில்  இதன்  தாக்கம்  அண்ணளவாக  குறைவு  தானே???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சிறிலங்காவிலும் சீன ஊசிகள் போடப்பட்டன. அங்கு பெரிதாக சீனா அளவுக்கு பாதிக்கப்பட்டதாக தெரியவில்லையே??

இலங்கையில் கலந்து போடப்பட்டது. 

இப்படி போடுவது ஒரு வகையையே போடுவதை காட்டிலும் வினைதிறனானது எனும் ஒரு கருதுகோள் உண்டு.

அடுத்து இலங்கையில் சனதொகை குறைவு, வெளிதொடர்பு இல்லை என்பதால் விரைவாக நிரம்பல் நிலை (ஹெர்ட் இம்முனிட்டி) அடைந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஓம். இந்த விசயத்தில் பலரின் செயலும், சொல்லும் வேறு வேறாகவே இருந்தது.

கொரோனா தடுப்பூசி போடுகின்ற விசயத்திலா பலரின் செயலும் சொல்லும் வேறு வேறாகவே இருந்தது.
செயல் - மேற்குலகநாடுகளில் விரும்பி குடியேறி வசதியாக மகிழ்ச்சியாக வாழ்வது
ரஷ்யா போன்ற சர்வாதிகார நாடுகளுக்கு சென்று ஒரு போதும் வாழதயார் இல்லை.
சொல் - புதினுக்கும் ரஷ்யாவுக்கும் புகழ் பாடுவது, மேற்குலக நாடுகளை தூற்றுவது
இப்படி தான் அமெரிக்க முன்னாள் அதிபர் ரம்பும் தான் ஆரோக்கியமாக நன்றாக வாழவேண்டும் அதற்காக  கொரோனா தடுப்பு ஊசி தனக்கு போட்டு கொண்டார். ஆனால் நாட்டு மக்கள் தடுப்பு ஊசி போட கூடாது என்பது அவருடைய கொள்கை. அவர் அவருடைய கொள்கை படி தான் செயல்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

சீனாவில் 3.5 கோடி பேருக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளதாம். சீனா ஊசி விசயத்தில் கோட்டை விட்டுள்ளது போலுள்ளது. 

சீன ஊசி தானே இலங்கையில் பெரும்பாலும் போடப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சீன ஊசி தானே இலங்கையில் பெரும்பாலும் போடப்பட்டது?

ஆம். வேறு பல ஊசிகளும் போடப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

ஆம். வேறு பல ஊசிகளும் போடப்பட்டன.

யாழில் இரண்டாவது ஊசியாக பைசர் போட்டார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nunavilan said:

சீனாவில் 3.5 கோடி பேருக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளதாம். சீனா ஊசி விசயத்தில் கோட்டை விட்டுள்ளது போலுள்ளது. 

இல்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த சீனா போட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்த்தார்கள். வீதியில் இறங்கி போராட்டங்கள்,அடிதடியில் இறங்கினார்கள். அதன் விளைவுதான் இவைகள்.

தொட்டால் சுடும் என தெரியாதவர்களுக்கு பட்டு தெளிந்தால்தான் புத்தி வரும்.

யாழ்களத்திலும் சீனாவில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

சர்வாதிகார ஆட்சி....ஆர்ப்பாட்டம்....மக்களாட்சி ஹா......ஹா 😷

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இல்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த சீனா போட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்த்தார்கள். வீதியில் இறங்கி போராட்டங்கள்,அடிதடியில் இறங்கினார்கள். அதன் விளைவுதான் இவைகள்.

தொட்டால் சுடும் என தெரியாதவர்களுக்கு பட்டு தெளிந்தால்தான் புத்தி வரும்.

யாழ்களத்திலும் சீனாவில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

சர்வாதிகார ஆட்சி....ஆர்ப்பாட்டம்....மக்களாட்சி ஹா......ஹா 😷

சீனாவில் நல்லாட்சி அல்லவா நடக்கிறது?

பாலும், தேனும், பட்டரும், ஜாமும் அல்லவா ஓடுகிறது.

நாம் எல்லாம் 1.5 வருடம் முதல் வெளியே வந்த கொரோனா அடைப்புக்குள் ஏன் போன மாதம் வரை சீன மக்களை வைத்திருந்தது அரசு?

மக்கள் ஏன் போராடுகிறார்கள்?

 

11 minutes ago, குமாரசாமி said:

தொட்டால் சுடும் என தெரியாதவர்களுக்கு பட்டு தெளிந்தால்தான் புத்தி வரும்.

இலங்கை அரசின் தமிழ் சனம் மீதான அடக்குமுறையை இப்படித்தான் நியாயப்படுத்துவார்கள் - பல இனவாதிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

சீனாவில் நல்லாட்சி அல்லவா நடக்கிறது?

பாலும், தேனும், பட்டரும், ஜாமும் அல்லவா ஓடுகிறது.

நாம் எல்லாம் 1.5 வருடம் முதல் வெளியே வந்த கொரோனா அடைப்புக்குள் ஏன் போன மாதம் வரை சீன மக்களை வைத்திருந்தது அரசு?

மக்கள் ஏன் போராடுகிறார்கள்?

அப்படி என்றால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியது சரி என்கிறீர்கள்?

5 minutes ago, goshan_che said:

இலங்கை அரசின் தமிழ் சனம் மீதான அடக்குமுறையை இப்படித்தான் நியாயப்படுத்துவார்கள் - பல இனவாதிகள்.

ஒரு விடயத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஆட்டுக்குள் மாட்டை ஓட்டுதல் என்பது நீங்கள் எழுதியதைத்தான்....எனவே........

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2022 at 22:09, ஈழப்பிரியன் said:

கோசான் நான் நான்காவதும் போட்டுவிட்டேன்.

ஆனாலும் இன்னமும் ஒரு தடவை கூட ஊசி போடாத வயசானவர்கள் இருக்கிறார்கள்.

நான் இதுவ‌ரை ஒரு ஊசியும் போட‌ல‌

டென்மார்க்கில் என‌க்கு தெரிஞ்சு ப‌ல‌ பேர் போட‌ல‌ 😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்படி என்றால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியது சரி என்கிறீர்கள்?

2 hours ago, goshan_che said:

1. தாமும் வல்லரசு என காட்ட, வினைதிறன் குறைந்த வக்சீன்களை மட்டும் நம்பி, ஏனைய நாட்டின் வக்சீன்களை புறம் தள்ளியது தவறு.

2. ஒரு அளவுக்கு மேல் உலக நாடுகள் எல்லாம் வக்சீன்+ படிப்படியாக வெளி வரல், கூட்டு நோயெதிர்ப்பை வளர்த்தல் என்ற நடைமுறையை கைக்கொள்ள, சீனா மட்டும் சீரோ-கொவிட் என்ற அணுகுமுறையை எடுத்தது தவறு. 

3. மக்களை நகரம் நகரமாக மந்தைகள் போல், அடைத்து வைத்து - உலக கால்பந்து போட்டியில் மக்கள் மாஸ்க் இல்லாமல் வழமையாக திரள்வதை கூட சென்சார் பண்ணி காட்டி மக்களை மடையர் ஆக்கியது தவறு.

4. வருட கணக்கில் லொல்டவுண்ட் என்ற முடக்கத்தை எந்த மக்கள் கூட்டமும் சகிக்காது. அதை செய்தது தவறு.

5. மக்கள் புரட்சி வெடித்த பின் பயத்தில் ஒரேயடியாக எல்லா கட்டுப்பாட்டையும் உடனடியாக தளர்தியதும் தவறு.

இப்படி தவறுகள் முழுவதும் சீன அரசில்தான்.

2 hours ago, குமாரசாமி said:

ஒரு விடயத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஆட்டுக்குள் மாட்டை ஓட்டுதல் என்பது நீங்கள் எழுதியதைத்தான்....எனவே........

இல்லை ஒன்று அநியாயமான இனவாதத்தை எதிர்த்த மக்கள் போராட்டம். மற்றையது அநியாயமான பொது முடக்கத்தை எதிர்த்த மக்கள் போராட்டம். ஒப்பீடு சரிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் ஒமிக்ரான் BF.7 திரிபு: மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
corona mask

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒமிக்ரான் BF.7 திரிபு மூலமாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தற்போதுதான் உலக பொருளாதாரம் மீண்டுவரும் வேளையில், மீண்டும் சீனாவில் இந்த புதிய திரிபு காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

 அதேநேரம், இந்த புதிய வகை கொரோனா வைரசின்  தாக்கத்தை எதிர்கொள்ள இதுவரை எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் போதுமா, புதிய தடுப்பூசி எதுவும் தேவையா, என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழர் கார் முத்துமணி. இவர், ஓர் உயிரி மருந்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வு அதிகாரியாக செயல்படுகிறார்.

அவரிடம் தற்போது நடைபெறும் ஆராய்ச்சி, கொரோனாவை தடுக்கும் புதிய தடுப்பு மருந்துகள் பற்றி விளக்கம் கேட்டோம். பேட்டியிலிருந்து...

 
Karmuthumani
 
படக்குறிப்பு,

முனைவர் கார் முத்துமணி

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், மீண்டும் மக்கள் அங்கு இறந்துபோவதாகவும் செய்திகள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா மீண்டும் அங்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ஏன்?

 கொரோனா முதல் அலையில் சீனாவில் அதிக பாதிப்புகள் இருந்தன. அதன் பின்னர், பிற நாடுகளுக்கு பரவியது. அங்கு கொரோனா கட்டுக்குள் வந்தபோது, பிற நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி வந்ததும், பல்வேறு நாடுகளிலும், தடுப்பூசி பயன்பாடு அதிகரித்தது. அதனால், இரண்டாம் அலைக்கு பின்னர், கொரோனாவின் தாக்கம் பெரும்பாலும் உலகளவில் கட்டுக்குள் இருந்தது. பல நாடுகளில் தடுப்பூசி முகாம் பெரியளவில் நடைபெற்றது.

ஆனால் சீனாவை பொறுத்தவரை,  பிற நாடுகளில் கண்டறியப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அங்கு, அவர்களாகவே ஒரு தடுப்பூசியை அறிமுகம் செய்தார்கள், இருந்தபோதும், பிற நாடுகளைப் போல, தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

தற்போது புதிய கொரோனா திரிபு அங்கு வந்துள்ளதோடு, இறப்புகளும் அதிகரித்துள்ளன. அந்த நாட்டில் இருந்து பலரும் பல நாடுகளுக்கு சென்றிருப்பார்கள் என்பதால், உலகளவில் மீண்டும் இந்த கொரோனா தாக்கம் கவனம் பெற்றுள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸை சமாளிக்க இதுவரை எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் போதுமானதாக இருக்குமா? மீண்டும் நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி தேவையா?

 நான்காவது தடுப்பூசி தேவையா இல்லையா என்று தற்போது உறுதியாக நாம் சொல்லமுடியாது. நான்காவது முறையாக நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், புதிய வகை கொரோனவால் பாதிப்பு ஏற்பாடாது என்று எந்த உறுதியும் சொல்லமுடியாது. தடுப்பூசி போடுவதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். ஆனால் அதனால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று உறுதியாக சொல்லமுடியாது.

கொரோனா வைரஸை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் திரிபுகள் உருவாவதை தடுக்கமுடியாதா?

வைரஸ் என்பது தன்னை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற உறுதியோடு பரவும் என்பதால், முதலில் நம்மை நாம் தற்காத்துகொள்வதுதான் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

 எளிமையாக புரிந்துகொள்வதற்கான உங்களுக்கு விளக்குகிறேன். ஒரு சிக்கலான பாதையில் நீங்கள் பயணிக்கும்போது, வளைந்து நெளிந்து செல்வீர்கள், உங்கள் இலக்கை அடைய முயற்சிப்பீர்கள், கடினமான பாதையாக அது இருந்தால், முயற்சி செய்வீர்கள் தானே, அதுபோலதான் இந்த கொரோனா வைரஸ் தனது இருப்பை உறுதி செய்துகொள்ள, அதனுடைய தன்மையை மாற்றிக்கொண்டு வாழ முயற்சிக்கும். அதனால்தான் மியுடேஷன்ஸ் (மரபணுப் பிறழ்வு) நடக்கிறது. புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அவ்வப்போது உருவாவதை தடுக்கமுடியாது.

 கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்த அதே தன்மையில் தற்போது இல்லை. பலவகையில் அது மாறிவிட்டது. இதுவரை சுமார் 10 முதல் 15 வகையான திரிபுகளாக தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளது. அறிவியல்பூர்வமாக சொல்வதென்றால், ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ என்ற இரண்டு வகையாக வைரஸ் உள்ளது. கொரோனா வைரஸ் ஓர் ஆர்.என்.ஏ வைரஸ், இது தனது உருமாற்றிக்கொண்டே இருக்கும். இதனை கட்டுப்படுத்துவது சிரமம்தான்.  

எடுத்துக்காட்டாக, எச்.ஐ.வி என்பது ஓர் ஆர்.என்.ஏ வைரஸ், இதுவரை எச்.ஐ.வி வைரஸில் சுமார் 400கும் அதிகமான திரிபுகள் வந்துவிட்டன. ஒரு சில வகையான எச்.ஐ.வி வைரஸ் மேற்கத்திய நாடுகளில் மட்டும் காணப்படுகிறது, ஒரு சில வகை ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. அதாவது, எச்.ஐ.வி வைரஸ் ஒவ்வொரு பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளமுடியுமோ அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு வாழ்கிறது. அதே போன்ற நிலைதான் தற்போது கொரோனா வைரசிலும் காணப்படுகிறது.    

உருமாறும் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனாவில் புதிய வகை திரிபு பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசி கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடங்கிவிட்டனவா?

கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்தபோது, அதனை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை எதிர்ப்பதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டது. ஒரு வைரஸின் பேட்டர்ன்-ஐ (மாதிரி) கண்டறிவதற்குதான் அதிக காலம் தேவைப்படும். அதன் திரிபு வகையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு திரிபுக்கும் தடுப்பூசி என்பது அறிவியல் உலகில் தேவையற்றது என்று கருதப்படும்.

ஏனெனில், நீங்கள் தடுப்பு மருந்து கண்டறிவதற்கு ஒரு சில தினங்கள்தான் ஆகும். ஆனால் அதனை முதலில், விலங்குகளிடம் சோதனை செய்யவேண்டும், பின்னர் மனிதர்களிடம் சோதனை செய்யவேண்டும். அதற்கான காலம் அதிகம் தேவைப்படும். அதற்குள் மீண்டும் வேறு திரிபு வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதால், பொதுவாக திரிபுகளுக்கு தடுப்பூசி கொண்டுவருவது என்பது வரவேற்பை பெறுவதில்லை.

ஆனால், தற்போது, உலகளவில் பல்வேறு தடுப்பூசி ஆய்வு நிறுவனங்கள் பேன் கொரோனா (PAN CORONA ) என்ற பல்வேறு விதமான கொரோனா திரிபுகளுக்கும் சேர்ந்த வகையில் ஒரு தடுப்பூசியை கண்டறியும் சோதனைகள் நடத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் தற்போது இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் என்பது, டெங்கு, சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை போல, நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டிய நோய்களின் பட்டியலில் வந்துவிட்டது. தடுப்பு மருந்து வரும்வரை தற்காப்பு என்பதுதான் ஒரே வழி.

புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி?

தடுப்பூசிகள் மூலம் நம்மை தற்காத்துக்கொள்வது என்பது தற்போது இரண்டாவது வாய்ப்பாகதான் நாம் கருதவேண்டும். முதல் வாய்ப்பு என்பது நம்மை நாம் தற்காத்துக்கொள்வதுதான் சிறந்தது. கொரோனா வைரஸ் என்பது ஆர்.என்.ஏ வைரஸ், அதாவது விரைவாக தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

தடுப்பூசி கண்டறிந்து, அதனை நாம் போட்டுக்கொள்வதற்கு ஒரு காலம் தேவைப்படும். ஆனால் அந்த காலத்தை விட குறுகிய காலத்தில் கொரோனா வைரஸ் தனது அடுத்த திரிபு நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், தடுப்பூசியை மட்டுமே வாய்ப்பாக நாம் கருதுவதைவிட, நம்மை தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை முதன்மையாகக் கருதவேண்டும்.

 

அரசாங்கம் அறிவிப்பு கொடுக்கும்வரை காத்திருக்காமல், நாமாகவே கூட்டநெரிசலான இடங்களை தவிர்க்கலாம்.

முகக்கவசம்  அணிவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளலாம். நாம் இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது.  

பயத்தை விடுத்து, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தலாம்.

https://www.bbc.com/tamil/articles/cj5m4z7qqeyo

  • கருத்துக்கள உறவுகள்

தரமான ஊசி இருந்தும் அமெரிக்காவில் இறந்த மக்கள் தொகை 1.1 மில்லியன். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

தரமான ஊசி இருந்தும் அமெரிக்காவில் இறந்த மக்கள் தொகை 1.1 மில்லியன். 

இல்லை சகோ 

அசாதாரணமாக எடுத்துக் கொண்ட அரசின் அசமந்தப்போக்கே காரணம்

இதற்கு பிரான்ஸ் முன் மாதிரி. 

ஒரு சனம் கூட வைத்தியம் இல்லாமல் வீதிகளில் இறக்கவில்லை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.