Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னது உனக்கு நான் இப்போ சாகணுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
War of the Roses படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி இது: நாயகனுக்கு உடல் நலமில்லாமல் போகிறது. சாகும் நிலை. ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போகிறார்கள். அவன் திரும்பத் திரும்ப என் மனைவிக்கு தெரிவித்து விட்டீர்களா எனக் கேட்கிறான். ஆஸ்பத்திரியில் நாங்கள் பலமுறை போன் செய்துவிட்டோம் என்கிறார்கள். சாகும் தறுவாயில் இருப்பதாக எண்ணும் அவன் அவளிடம் தன் காதலை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு குறிப்பை கடும் வலியின் இடையே எழுதுகிறான். ஆனால் அவள் வரவில்லை. அவன் தப்பித்து விடுகிறான். அவளோ கடைசி வரை அவனைப் பார்க்க வரவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னர் நீ ஏன் வரவில்லை எனக் கேட்கிறான். அவள் காரணம் சொல்லவில்லை. பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.
 
இது ஒரு கூர்மையான அவதானிப்பு. பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன் வாழும்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. ஒரு சில பத்தாண்டுகளிலோ சில ஆண்டுகளிலோ அவர்களுக்கு மூச்சுத்திணற ஆரம்பிக்கிறது. அவர்கள் விடுதலைக்காக தவிக்கிறார்கள். பிரச்சினை பல சமயங்களில் குடும்பத்தில் மட்டும் இருக்காது. அது இயற்கையின் விழைவு. நமது மரபான குடும்ப அமைப்பு அண்மைக்காலம் வரை அவர்கள் மீது கடும் சமூகப்பொருளாதார,பண்பாட்டு அழுத்தங்களை சுமத்தியதால் மட்டும் ஒரு ஆணுடன் தம் வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இயற்கை பெண்ணுடலை அப்படி அமைக்கவில்லை. ஆண்களுக்கு உள்ளதைப் போல நீடித்த இளமையும் குழந்தை பெறும் வளமையும் பெண்களுக்கு இல்லை. நவீன சமூகத்தில் முப்பது வயதிற்கு மேல் midlife crisis இப்படியே தோன்றுகிறது. கூடுதலாக வேறு இணைகளை அடைந்து பிள்ளை பெற வேண்டும் என வனத்தில் வாழ்கையில் ஒரு ஆதிப்பெண்ணுக்குத் தோன்றியிருக்குமெனில் நவீன பெண்ணுக்கு தன் அடையாளத்தைக் கண்டடைய வேண்டும், அதன் வழி காலத்தில் அனந்தரமாக வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனாலே கணவனின் இருப்பு - குழந்தைகள் அல்ல - அவளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. ஒரு பெரும் பாரம் தம்மை அழுத்துவதாகத் தோன்றுகிறது. அவன் செத்து ஒழிய மாட்டானா என அவள் ஆழ்மனம் ஏங்குகிறது.
இந்த படக்காட்சியில் அதுதான் வருகிறது.
நேற்று ஒரு யுடியூப் காணொளியைப் பார்த்தேன். கவிஞரும் மருத்துவருமான பிரபு திலக்கை அவரது மனைவி பொதுவெளியில் தாக்கியது, அவருக்கு. விஷம் கொடுக்க திட்டமிட்டது (ஆர்ஸெனிக் கலந்த ஒரு மருந்து), மாமியாரும் எழுத்தாளருமான திலகவதிக்கு எதிராக ஐ.பி.ஸி 498A வில் வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்தது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசியிருந்தார்கள். அந்த பெண்ணின் பிரச்சினையும் இதில் வரும் பார்பராவின் பிரச்சினையும் ஒன்றும். எத்தனையோ மணமான பெண்களின் பிரச்சினையும் ஒன்று தான். அவர்கள் அடக்கிக் கொண்டு எப்படியோ வாழ்கிறார்கள். 
 
அதனாலே இந்த திருமண அமைப்பு செயற்கையானது, ஆபத்தானது என்கிறேன். பெண்கள் கூட நினைத்தால் தப்பித்து விடுவார்கள். அவர்கள் தமது சமிக்ஞைகளை நுட்பமாக வெளிப்படுத்துவார்கள். அது ஆணுக்கு சுலபத்தில் புரியாது. அப்போதே அவனை ஒன்று கொல்ல வேண்டுமென்றோ வேறுவழிகளில் அவனை வதைத்து நடுத்தெருவில் நிறுத்த வேண்டுமென்றோ நினைப்பார்கள்!புரிந்த ஆண்கள் ஆண்கள் தப்பிப்பார்கள்!  அதிர்ஷடசாலி ஆண்களும் தப்பிப்பார்கள்.
மற்றவர்களின் கதி?
 
யுடியூப் லிங்க்: 
  • கருத்துக்கள உறவுகள்

மனித உடல் - ஆணோ, பெண்ணோ- கூர்ப்பின் பாதையில் பல விடயங்களைச் சேர்த்தும் இழந்தும் உருவாகியிருக்கிறது. ஒரு புள்ளியில் அப்படியே தங்கி விடுவது கூர்ப்பில் நடப்பதில்லை. இனம் பிழைத்தல் (survival) தழைத்தல் (thriving) என்ற நோக்கமே கூர்ப்பின் இலக்கு. ஆணின் இனப்பெருக்கும் இயலுமை நீடிக்க, பெண்ணின் இயலுமை குறைதல் என்பது பல இணைகளோடு வாழ்ந்த ஆதி காலத்தில் இனம் தழைக்க உதவியது என்பது உண்மை. இப்போது இது இனம் தழைக்க உதவுமா என்பது தான் கேள்வி.

எங்கள் நவீன சமூக அமைப்பில் ஒரு வாரிசை வளர்க்க இரு பெற்றோர் அவசியமாக இருக்கிறது. இரு பெற்றோரும் இல்லாத சில சமூகங்களில் உருவாகும் வாரிசின் பாதுகாப்பு மிகக் குறைவாக இருக்கிறது (அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இது). எனவே, எண்ணிக்கையைக் கூட்ட பெண்ணோ ஆணோ திருமண உறவை மீறி swing culture இற்குள் செல்ல வேண்டுமென்பது தற்போதைய மனித சமூகத்தில் இனம் பிழைக்க உதவாது.

அபிலாஷ் நன்கு எழுதுகிறார், ஆனால் சில விடயங்களில் மிகக் குறைந்த அவதானிப்புகளைக் கொண்டு தவறான முடிவுகளையும் தியரியையும் முன்வைக்கிறார். இந்த தியரிகளை முன்வைப்பதற்கு முன்னர் மேலதிக வாசிப்புகள் அவசியம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

நான்  சொல்ல  வந்ததை சொல்லி  விட்டீர்கள்  விஞ்ஞான விளக்கத்துடன்....

நான்  அனுபவத்தின்  அடிப்படையில்  இன்னொன்றையும்  வைப்பேன்

இவ்வாறானவர்கள்  தமது இறதிக்காலத்தில் நாறும்  பிணங்களாக அயலவர்களால்  அகற்றப்படுகிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

மனித உடல் - ஆணோ, பெண்ணோ- கூர்ப்பின் பாதையில் பல விடயங்களைச் சேர்த்தும் இழந்தும் உருவாகியிருக்கிறது. ஒரு புள்ளியில் அப்படியே தங்கி விடுவது கூர்ப்பில் நடப்பதில்லை. இனம் பிழைத்தல் (survival) தழைத்தல் (thriving) என்ற நோக்கமே கூர்ப்பின் இலக்கு. ஆணின் இனப்பெருக்கும் இயலுமை நீடிக்க, பெண்ணின் இயலுமை குறைதல் என்பது பல இணைகளோடு வாழ்ந்த ஆதி காலத்தில் இனம் தழைக்க உதவியது என்பது உண்மை. இப்போது இது இனம் தழைக்க உதவுமா என்பது தான் கேள்வி.

எங்கள் நவீன சமூக அமைப்பில் ஒரு வாரிசை வளர்க்க இரு பெற்றோர் அவசியமாக இருக்கிறது. இரு பெற்றோரும் இல்லாத சில சமூகங்களில் உருவாகும் வாரிசின் பாதுகாப்பு மிகக் குறைவாக இருக்கிறது (அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இது). எனவே, எண்ணிக்கையைக் கூட்ட பெண்ணோ ஆணோ திருமண உறவை மீறி swing culture இற்குள் செல்ல வேண்டுமென்பது தற்போதைய மனித சமூகத்தில் இனம் பிழைக்க உதவாது.

அபிலாஷ் நன்கு எழுதுகிறார், ஆனால் சில விடயங்களில் மிகக் குறைந்த அவதானிப்புகளைக் கொண்டு தவறான முடிவுகளையும் தியரியையும் முன்வைக்கிறார். இந்த தியரிகளை முன்வைப்பதற்கு முன்னர் மேலதிக வாசிப்புகள் அவசியம் என்பது என் கருத்து.

நன்றி உங்கள் கருத்துகளிற்கு ஜஸ்ரின் அண்ணை.

23 hours ago, ஏராளன் said:

பெண்கள் நெடுங்காலம் ஒரு ஆணுடன் வாழும்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. ஒரு சில பத்தாண்டுகளிலோ சில ஆண்டுகளிலோ அவர்களுக்கு மூச்சுத்திணற ஆரம்பிக்கிறது. அவர்கள் விடுதலைக்காக தவிக்கிறார்கள். பிரச்சினை பல சமயங்களில் குடும்பத்தில் மட்டும் இருக்காது. அது இயற்கையின் விழைவு. நமது மரபான குடும்ப அமைப்பு அண்மைக்காலம் வரை அவர்கள் மீது கடும் சமூகப்பொருளாதார, பண்பாட்டு அழுத்தங்களை சுமத்தியதால் மட்டும் ஒரு ஆணுடன் தம் வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இயற்கை பெண்ணுடலை அப்படி அமைக்கவில்லை. ஆண்களுக்கு உள்ளதைப் போல நீடித்த இளமையும் குழந்தை பெறும் வளமையும் பெண்களுக்கு இல்லை. நவீன சமூகத்தில் முப்பது வயதிற்கு மேல் midlife crisis இப்படியே தோன்றுகிறது. கூடுதலாக வேறு இணைகளை அடைந்து பிள்ளை பெற வேண்டும் என வனத்தில் வாழ்கையில் ஒரு ஆதிப்பெண்ணுக்குத் தோன்றியிருக்குமெனில் நவீன பெண்ணுக்கு தன் அடையாளத்தைக் கண்டடைய வேண்டும், அதன் வழி காலத்தில் அனந்தரமாக வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனாலே கணவனின் இருப்பு - குழந்தைகள் அல்ல - அவளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. ஒரு பெரும் பாரம் தம்மை அழுத்துவதாகத் தோன்றுகிறது.
 
இந்த பந்தி தொடர்பான உங்கள் கருத்துகளை இன்னும் எதிர்பார்க்கிறேன். 

ஆணாதிக்கம் நிறைந்த குடும்ப அமைப்புகளில் தொடர்ந்து வாழும் போது பெண்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

நன்றி உங்கள் கருத்துகளிற்கு ஜஸ்ரின் அண்ணை.

இந்த பந்தி தொடர்பான உங்கள் கருத்துகளை இன்னும் எதிர்பார்க்கிறேன். 

ஆணாதிக்கம் நிறைந்த குடும்ப அமைப்புகளில் தொடர்ந்து வாழும் போது பெண்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

அத்தகைய குடும்பங்களில் வாழும் பெண்கள் நிலை பரிதாபம் தான் - அவர்கள் தீர்வுகளைத் தேட வேண்டும். பிரிந்து போதல் தீர்வுகளில் ஒன்று. ஆனால், கொலை செய்து விட்டு தாங்கள் போய் சிறையில் மிகுதி வாழ்வைக் கழித்தல் என்பது நல்ல தீர்வாகத் தெரியவில்லை.

சட்டப் பாதுகாப்புகள் உடைய நாடுகளில் battered wife defense மூலம் நிவாரணம் கிடைக்கலாம். இலங்கை, இந்தியா போன்ற கண்ணறைச் சட்ட அமைப்புடைய நாடுகளில் பெண்கள் நிலை கஷ்டம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

கொலை செய்யச் சொல்லவில்லை, அக்கட்டுரைக் குறிப்பின்படி நாயகன்/கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கையில் மனைவி ஆஸ்பத்திரி சென்று பார்க்கவில்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருந்து மீண்டு வீடு சென்று ஏன் வரவில்லை என வினவியபோதே இப்பதில்:- பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சிறைகளின் கம்பிகளையும் நாமேதான் அமைத்து கொள்கிறோம்.

ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கும் தம்பதிகள் மிக சுந்திரமாகவும், மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன Open relationship இல் இருப்பவர்கள் மிக இறுக்கமான உறவிலும் இருப்பதும் உண்டு.

இதை எந்தளவுக்கு பொதுமை படுத்தலாம் என்பது தெரியவில்லை.

உடல், மன வன்முறை வேறு, அதை தாண்டி

சலிப்பு, நானே எல்லாவற்றையும் செய்கிறேன், எதோ ஒருவகையில் சிறைப்பட்டதான உணர்வு இவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலரிடம் இருப்பதே இல்லை போல் இருக்கும்.

ஆனால் ஒன்று,

சில ஆண்களிடம் பழகும், பேசும், வாசிக்கும் போது - இவர்கள் போன்ற ஒருவரிடம் என் வீட்டு பிள்ளைகள் மாட்ட கூடாது என நினைப்பேன்.

அந்தவகையில் ஆண்களின் மமதை பல பெண்களை மூச்சு முட்ட வைப்பது - ஓரளவு பொதுமையான விடயம் என்றே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

கொலை செய்யச் சொல்லவில்லை, அக்கட்டுரைக் குறிப்பின்படி நாயகன்/கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கையில் மனைவி ஆஸ்பத்திரி சென்று பார்க்கவில்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருந்து மீண்டு வீடு சென்று ஏன் வரவில்லை என வினவியபோதே இப்பதில்:- பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

இந்த உணர்வினுடைய தோற்றுவாய்  ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்வது என நினைக்கிறேன். எல்லா திருமண அல்லது இணைந்து வாழும் வாழ்க்கையிலும் இத்தகைய நிலை ஒரு கட்டத்தில் வரலாம். இந்த உணர்வைச் செயலாக்குவதா இல்லையா என்பதை, அந்த உறவில் இருக்கும் வேறு காரணிகள் தீர்மானிக்கும். உதாரணமாக,

1. குழந்தைகள் இருக்கின்றனவா?
2. இணையின் நாளாந்த வாழ்க்கைக்கு என் இருப்பு அவசியமாக தேவையா?
3. சேர்ந்து வாங்கிய வீட்டுக் கடன் இருவரையும் மூழ்கடிக்குமா? குழந்தைகளைத் தெருவில் விடுமா?

என்னுடைய தனிப்பட்ட கருத்து, ஒரு வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கையின் pivot point மற்றவர்களாக (அனேகமாக குழந்தைகளாக) இருக்கும். அதை முன்வைத்தே இந்த உணர்வுகள் செயல் வடிவமாகுமா இல்லையா என்பது தீர்மானிக்கப் படும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணாதிக்கம் நிறைந்த குடும்பங்களில் வாழும் ஆண்களின் நிலை பற்றி ஏன் யாரும் அலசுவதில்லை..?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

பெண்ணாதிக்கம் நிறைந்த குடும்பங்களில் வாழும் ஆண்களின் நிலை பற்றி ஏன் யாரும் அலசுவதில்லை..?

இப்படி எல்லாம் அலசப்படனும் என்று யாழ் கூர்ப்படையாத காலத்தில் கருத்து வைத்த பொழுது.. நெடுஸ் என்பவர் பெண்களுக்கு எதிரானவர்.. பெண்களை வெறுப்பவர்.. இப்படி பல அவதூறுகளை எழுதியோர் இப்பவும் இருக்கினம். ஆனால்.. அன்றே ஆணாதிக்கம் போல் பெண்ணாதிக்கம் ஆண்களுக்கு எதிரான வன்முறைகளும் பெருகி வருகிறது.. ஆண்களின் கல்வித்தரம் தொடர் வீழ்ச்சி அடைகிறது அதனை வேடிக்கை பார்க்கக் கூடாது.. அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பாதிப்பாகும் என்று எச்சரித்ததும் நாங்களே. 

பெண்ணியம் என்ற கருத்து ஊன்றப்பட்ட போது ஆணியம் என்ற பதத்தை கொண்டு வந்து போட்டதும் நாங்களே. அதற்காக பெண்களை சக மனிதர்களாக பார்க்கக் கூடாதோ அவர்களுக்குள்ள உரிமைகளை மதிக்கக் கூடாதோ என்று எங்கும் கூறியதில்லை. ஆணுக்குப் பெண் சமூக ரீதியில் சமன் (உடலியல் ரீதியில் சமனல்ல) என்றால்.. ஆண்களுக்கு எதிரான பெண் குற்றவாளிகள் அவர்களின் வன்முறைகள் குறித்தும் பேசனும் அறிவூட்டனும் அவற்றை கட்டுப்படுத்த குரல்கொடுக்கனும் என்பதே வாதம். எப்படி ஆண்களின் பெண்களுக்கு எதிரான செயல்களுக்கு குரல் எழுப்பப்படுகிறதோ அப்படி.

இப்பவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆண்களுக்கு எதிரான பெண்களின் வன்முறைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. அவற்றில் இருந்து சட்டப்பாதுகாப்புக் கூட ஆண்களுக்கு கிடைப்பதில்லை. இதனை பாதிக்கப்பட்ட ஆணாக இருந்து சொல்லனுன்ன அவசியமில்லை. மாறாக சமூகத்தின் மாற்றங்களை அவதானிப்பதில் இருந்து சொல்ல முடியும். சட்டப்பாதுகாப்பற்ற நிலையில்.. ஆண்களுக்கான மனிதன் என்ற அடிப்படை உரிமைகள் பெண்களால் பறிக்கப்படுவது அல்லது மதிக்கப்படாமல் போவது தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

உண்மை.. பொய்யான மீ ரூக்களால் பாதிக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் ஆண்கள் பட்டியல் வேறு இப்போ புதுசாக…

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பெண்ணாதிக்கம் நிறைந்த குடும்பங்களில் வாழும் ஆண்களின் நிலை பற்றி ஏன் யாரும் அலசுவதில்லை..?

அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டியது தானே ஓணாண்டியார்? பெரும்பாலான பெண்கள் அப்படி வாழும் போது ஆண்களும் செய்ய வேண்டியது தானே? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பெண்ணாதிக்கம் நிறைந்த குடும்பங்களில் வாழும் ஆண்களின் நிலை பற்றி ஏன் யாரும் அலசுவதில்லை..?

16 minutes ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் அலசப்படனும் என்று யாழ் கூர்ப்படையாத காலத்தில் கருத்து வைத்த பொழுது.. நெடுஸ் என்பவர் பெண்களுக்கு எதிரானவர்.. பெண்களை வெறுப்பவர்.. இப்படி பல அவதூறுகளை எழுதியோர் இப்பவும் இருக்கினம். ஆனால்.. அன்றே ஆணாதிக்கம் போல் பெண்ணாதிக்கம் ஆண்களுக்கு எதிரான வன்முறைகளும் பெருகி வருகிறது.. ஆண்களின் கல்வித்தரம் தொடர் வீழ்ச்சி அடைகிறது அதனை வேடிக்கை பார்க்கக் கூடாது.. அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பாதிப்பாகும் என்று எச்சரித்ததும் நாங்களே. 

பெண்ணியம் என்ற கருத்து ஊன்றப்பட்ட போது ஆணியம் என்ற பதத்தை கொண்டு வந்து போட்டதும் நாங்களே. அதற்காக பெண்களை சக மனிதர்களாக பார்க்கக் கூடாதோ அவர்களுக்குள்ள உரிமைகளை மதிக்கக் கூடாதோ என்று எங்கும் கூறியதில்லை. ஆணுக்குப் பெண் சமூக ரீதியில் சமன் (உடலியல் ரீதியில் சமனல்ல) என்றால்.. ஆண்களுக்கு எதிரான பெண் குற்றவாளிகள் அவர்களின் வன்முறைகள் குறித்தும் பேசனும் அறிவூட்டனும் அவற்றை கட்டுப்படுத்த குரல்கொடுக்கனும் என்பதே வாதம். எப்படி ஆண்களின் பெண்களுக்கு எதிரான செயல்களுக்கு குரல் எழுப்பப்படுகிறதோ அப்படி.

இப்பவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆண்களுக்கு எதிரான பெண்களின் வன்முறைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. அவற்றில் இருந்து சட்டப்பாதுகாப்புக் கூட ஆண்களுக்கு கிடைப்பதில்லை. இதனை பாதிக்கப்பட்ட ஆணாக இருந்து சொல்லனுன்ன அவசியமில்லை. மாறாக சமூகத்தின் மாற்றங்களை அவதானிப்பதில் இருந்து சொல்ல முடியும். சட்டப்பாதுகாப்பற்ற நிலையில்.. ஆண்களுக்கான மனிதன் என்ற அடிப்படை உரிமைகள் பெண்களால் பறிக்கப்படுவது அல்லது மதிக்கப்படாமல் போவது தொடரும். 

14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை.. பொய்யான மீ ரூக்களால் பாதிக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் ஆண்கள் பட்டியல் வேறு இப்போ புதுசாக…

உங்கள் கருத்துக்களில் உண்மையுண்டு, ஆனால் ஓப்பீட்டளவிலான பாதிப்பு பெண்களுக்குத் தானே?
 
"அவர் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு அவரின் பழைய நினைவுகள் அனைத்தும் பாடாய்ப் படுத்துகின்றது என்பதனை உணர முடிகின்றது.  
 
வெளியுலகம் என்பது என்றால் என்னவென்றே தெரியாது தன் வாழ்க்கையை முடித்து விட்டோம் என்ற ஆதங்கம் உள்ளே இருக்குமோ? என்று பலமுறை யோசித்துள்ளேன்.  
 
அங்கீகாரம் என்பது அவர் வாழ்க்கையில் கிடைத்ததே இல்லை.  
 
காரணம் அப்பா, சித்தப்பாக்கள், தாத்தா,  என்று அனைவரும் முரட்டுத்தனமான ஆணாதிக்க வல்லூறுகள்.  
 
கொத்திக் கொண்டேயிருப்பது தான் தங்களின் வீரத்தின் அடையாளம் என்பதாகக் கருதியவர்கள்.  எந்த ஆண்களும் இப்போது இல்லை. அனைவரும் இறந்த விட்டனர்.  ஆனால் அம்மாவின் கோபம் இன்னமும் அடங்கவில்லை. 
 
ஒவ்வொருவரும் தன்னை நடத்திய விதத்தை உள்ளே வைத்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது தான் அதன் நினைவலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றது என்று மூத்த சகோதரி அழைத்துச் சொன்னார்.
 
மனைவி மகள்களை நான் திட்டுவதே இல்லை.  என் கோபத்தை என் புறக்கணிப்பு மூலம் அவர்களை உணரவைக்கின்றேன். 
 
காரணம் அப்பாவைப் போல நானும் என் மனைவிக்கு முன்னால் இறக்க விரும்புகின்றேன். நான் இறந்த பிறகு என் மனைவி என் அம்மா போலக் கொந்தளிப்பான மனநிலையில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன்."
மேலுள்ள இணைப்பில் இருந்து பகிர்ந்த பகுதி தடித்த எழுத்தில் உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

கொலை செய்யச் சொல்லவில்லை, அக்கட்டுரைக் குறிப்பின்படி நாயகன்/கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கையில் மனைவி ஆஸ்பத்திரி சென்று பார்க்கவில்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருந்து மீண்டு வீடு சென்று ஏன் வரவில்லை என வினவியபோதே இப்பதில்:- பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

இவ்வாறான ஒரு நிகழ்வு எனது  வாழ்வில்  நடந்தது

முதல்  நாள் ஒருவரின் கணவர் இறந்து  விட்டார் (அவர் எனது  நெருங்கிய  நண்பர்)

அடுத்த நாள் காலையில் அவரது மனைவியை (அவர் எனக்கு  மருமகள் முறை) 

எனது  காரில் ஏற்றிக்கொண்டு

அவரை வைத்திருக்கும் வைத்திருக்கும் வைத்தியசாலையின் பிணவறைக்கு  சென்று  கொண்டிருக்கின்றேன்

அப்பொழுது  எனது மருமகளிடம்  கேட்கின்றேன்

எப்படியம்மா  இருக்கிறாய்  என்று

அவரது பதில்

இன்று  இரவு  தான் மாமா நிம்மதியாக  நித்திரை  கொண்டேன் என்பது...😭

எனக்கு உடல்  முழுவதும் விறைத்து  விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சகோதரா, உங்கள் மருமகளின் நிலையில் உள்ள பலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன். சமுதாய கட்டுப்படாடுகளுக்கு பயந்து ஒன்றாக வாழ்வதே திருமணத்தின் புனிதம் என்பதற்காக தமது வாழ்க்கையைத் தொலைத்த பல உறவுகள் பற்றி அறிந்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பெண்ணாதிக்கம் நிறைந்த குடும்பங்களில் வாழும் ஆண்களின் நிலை பற்றி ஏன் யாரும் அலசுவதில்லை..?

ஒருவர்: இலங்கையில் தமிழர் மீதான ஆண்டாண்டு கால இனவாதத்தை அலசவேண்டும்.

இன்னொருவர்: வெள்ளவத்தையில் சோமவன்ச மீது சோமசேகரம் இனவாதமாக நடந்ததை ஏன் யாரும் அலசுவதில்லை?

மற்றொருவர் : இதை நான் முன்பே எழுதி உள்ளேன். தமிழர் மீதான இனவாதத்துக்கு நிகரானதே சிங்களவர் மீதான இனவாதமும். இரெண்டும் ஒரே அளவிலானவையே. இரெண்டையும் தீர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அழிக்கப்பட்டதை விட மாற்று இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அழிக்கப்பட்டது மிகக்குறைவே.. ஆயினும் மாற்று இயக்கத்தினர் தங்கள் இழப்பை பேசவே கூடாது என்பது போன்றதுதான் தங்கள் நிலைப்பாடும் யுவர் ஆனர்..

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

கொலை செய்யச் சொல்லவில்லை, அக்கட்டுரைக் குறிப்பின்படி நாயகன்/கணவன் நோய்வாய்ப்பட்டிருக்கையில் மனைவி ஆஸ்பத்திரி சென்று பார்க்கவில்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருந்து மீண்டு வீடு சென்று ஏன் வரவில்லை என வினவியபோதே இப்பதில்:- பலமுறை கேட்கிறான். அவள் சொல்லவில்லை. பின்னர் நள்ளிரவில் அவனை எழுப்பி காரணத்தை சொல்கிறாள்: "நீ செத்து விடுவாயோ என எண்ணிய போது சட்டென ஒரு பயம் ஏற்பட்டது. அப்படியே நின்றுவிட்டேன். மிக சுதந்திரமாக நான் இருக்கப் போவதான எண்ணத்தில் உறைந்து போய் விட்டேன். தாள முடியாத சந்தோஷம். அதனாலே வர முடியவில்லை." அவன் அதிர்ச்சியில் குழம்பிப் போகிறான்.

இங்கு எத்தனைபேர் காலை தேநீருக்கும் கோப்பிக்கும் மனைவியை எதிர்பார்ப்பவர்கள் ?

பிள்ளைகளுக்கான காலை உணவு கிழமையில் மூன்று நாலாவது அவர்கள் பிடித்த உணவை மனைவியை செய்ய விடாமேல்  தாங்கள்  ஆக செய்வது ?

கிழமையில் இரண்டு நாலாவது முழுமையாக சமையலறையை உங்களின் கட்டுப்பாட்டில் வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன ?

ஒவ்வொரு வீக்கெண் பொழுதுகளிலும் நண்பர்களுடன் ரெஸ்ரோறன்ட் சென்று  கும்மியடிப்பவர்களால்  ஏன் தங்கள் மனைவிகளை கூட்டி செல்ல முடிவதில்லை ?

வீட்டின் கூவர்  எங்குள்ளது என்று மனைவியை தவிர மற்றவர்களுக்கு தெரிவதில்லை .

விலை கூடிய சாப்பாட்டு  மேசை  அதில் குடும்பமாக இருந்து கதைத்து உணவு உண்டு எவ்வளவு காலம் ? தினமும் குடும்பம் அங்கு சந்தித்து உணவு உண்ணவே அவ்வளவு விலை கொடுத்து மேசை வேண்டியதாக சொல்பவர்கலால் நடைமுறை படுத்த முடிவதில்லை .

இன்னும் மோசமான செயல்பாடு சாப்பிட தொடங்கினா முன்னாள் இருக்கும் சொதியை விட பக்கத்தில் மனைவி இருக்கணும் எனும் அளவுக்கு நிலைமை .

16 hours ago, விசுகு said:

எப்படியம்மா  இருக்கிறாய்  என்று

அவரது பதில்

இன்று  இரவு  தான் மாமா நிம்மதியாக  நித்திரை  கொண்டேன் என்பது...😭

எனக்கு உடல்  முழுவதும் விறைத்து  விட்டது

மேல்  உள்ளது போல் இருந்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட பதில் போல் இனி நிறைய வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அழிக்கப்பட்டதை விட மாற்று இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அழிக்கப்பட்டது மிகக்குறைவே.. ஆயினும் மாற்று இயக்கத்தினர் தங்கள் இழப்பை பேசவே கூடாது என்பது போன்றதுதான் தங்கள் நிலைப்பாடும் யுவர் ஆனர்..

பேசலாம் யுவர் ஆனர் - ஆனால் எல்லாத்துக்கும் ஒரு வரலாற்று பின் புலம், நடக்கும் எண்ணிக்கை இருக்கும். அதை விட்டு விட்டு மேலோட்டமான ஒற்றுமைகளை மட்டும் வைத்து இரெண்டும் ஒன்றென சொல்ல கூடாது.

பெண்கள் மீதான அடக்குமுறை என்பது மனித குல வரலாற்றின் கருக்கலில் இருந்து வருகிறது. நிறுவன மயப்பட்டது. அதை பெண்களால் வஞ்சிக்கபடும் ஆண்களோடு ஒப்பிடவே முடியாது.

அதாவது - புலிகள் மாற்று இயக்கத்தை அடித்ததும், இலங்கை தமிழரை அடித்ததும் ஒன்றே என வாதாட முடியாது.

1 hour ago, பெருமாள் said:

இங்கு எத்தனைபேர் காலை தேநீருக்கும் கோப்பிக்கும் மனைவியை எதிர்பார்ப்பவர்கள் ?

பிள்ளைகளுக்கான காலை உணவு கிழமையில் மூன்று நாலாவது அவர்கள் பிடித்த உணவை மனைவியை செய்ய விடாமேல்  தாங்கள்  ஆக செய்வது ?

கிழமையில் இரண்டு நாலாவது முழுமையாக சமையலறையை உங்களின் கட்டுப்பாட்டில் வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன ?

ஒவ்வொரு வீக்கெண் பொழுதுகளிலும் நண்பர்களுடன் ரெஸ்ரோறன்ட் சென்று  கும்மியடிப்பவர்களால்  ஏன் தங்கள் மனைவிகளை கூட்டி செல்ல முடிவதில்லை ?

வீட்டின் கூவர்  எங்குள்ளது என்று மனைவியை தவிர மற்றவர்களுக்கு தெரிவதில்லை .

விலை கூடிய சாப்பாட்டு  மேசை  அதில் குடும்பமாக இருந்து கதைத்து உணவு உண்டு எவ்வளவு காலம் ? தினமும் குடும்பம் அங்கு சந்தித்து உணவு உண்ணவே அவ்வளவு விலை கொடுத்து மேசை வேண்டியதாக சொல்பவர்கலால் நடைமுறை படுத்த முடிவதில்லை .

இன்னும் மோசமான செயல்பாடு சாப்பிட தொடங்கினா முன்னாள் இருக்கும் சொதியை விட பக்கத்தில் மனைவி இருக்கணும் எனும் அளவுக்கு நிலைமை .

மேல்  உள்ளது போல் இருந்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட பதில் போல் இனி நிறைய வரும் .

👏🏾 சபாஷ் அற்புதமான கருத்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

👏🏾 சபாஷ் அற்புதமான கருத்துகள். 

ஊர் ஒழுங்காகத்தான் இருந்தது 80களில்  இந்தியாவுக்கு நம்மடையல்  பல்வேறு காரணங்களால போக அங்குள்ள  கல்யாண வாழ் வியல் சோம்பேறித்தனமான புருஷ லட்சணத்தை படிப்பித்து விட்டு சென்று விட்டது ஆனால் அவர்கள் திருந்தி விட்டார்கள் நம்மடையல்  அங்கேயே தொங்கிக்கொண்டு உள்ளனர் .

இங்கும் சரியாகத்தான் போனது குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து லண்டன்  வந்து சேருமட்டும் கிழமையில் மூன்று நாள் நளபாகம் அப்படி இப்படி தனக்கான தேநீரை தானே போட்டுக்கொண்ட நண்பன் மனைவி வந்து சேர்ந்தபின் விடிகாலையில் மனைவியின்  தேநீருக்கு காத்து கொண்டு இருக்கிறார் . இப்படி மாறுவதுக்கு  பெண்களும் காரணம் என்பதை இலகுவில் மறந்து விடுகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு எத்தனைபேர் காலை தேநீருக்கும் கோப்பிக்கும் மனைவியை எதிர்பார்ப்பவர்கள் ?

பிள்ளைகளுக்கான காலை உணவு கிழமையில் மூன்று நாலாவது அவர்கள் பிடித்த உணவை மனைவியை செய்ய விடாமேல்  தாங்கள்  ஆக செய்வது ?

கிழமையில் இரண்டு நாலாவது முழுமையாக சமையலறையை உங்களின் கட்டுப்பாட்டில் வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன ?

ஒவ்வொரு வீக்கெண் பொழுதுகளிலும் நண்பர்களுடன் ரெஸ்ரோறன்ட் சென்று  கும்மியடிப்பவர்களால்  ஏன் தங்கள் மனைவிகளை கூட்டி செல்ல முடிவதில்லை ?

வீட்டின் கூவர்  எங்குள்ளது என்று மனைவியை தவிர மற்றவர்களுக்கு தெரிவதில்லை .

விலை கூடிய சாப்பாட்டு  மேசை  அதில் குடும்பமாக இருந்து கதைத்து உணவு உண்டு எவ்வளவு காலம் ? தினமும் குடும்பம் அங்கு சந்தித்து உணவு உண்ணவே அவ்வளவு விலை கொடுத்து மேசை வேண்டியதாக சொல்பவர்கலால் நடைமுறை படுத்த முடிவதில்லை .

இன்னும் மோசமான செயல்பாடு சாப்பிட தொடங்கினா முன்னாள் இருக்கும் சொதியை விட பக்கத்தில் மனைவி இருக்கணும் எனும் அளவுக்கு நிலைமை .

சிந்திக்க வைக்கும்... அருமையான கருத்துக்கள் பெருமாள். 👍🙂

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்காக ஆண்களாக தமது புரிதலுக்கு ஏற்ப கொடுக்கப்படும் விளக்கங்களாக இந்த திரி உள்ளது, இதுவும் யானை பார்த்த பார்வையற்றவர்களின் கதை போல உள்ளது, கருத்துகளுக்கு நன்றி.

மேற்கில் ஒரு கதை உள்ளது, ஆர்தர் மன்னன் இளம்பிராயத்தில் ஒரு சிக்கலில் மாட்டிவிடுவார் ஒரு வருடத்திற்குள் ஒரு கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கவேண்டும், தவறினால் உயிரினை துறக்கவேண்டும்.

கேள்வி: ஒரு பெண் உண்மையில் எதனை விரும்புகிறாள்?

இந்த கேள்விக்கு பதில் பலருக்கு தெரிந்திருக்கலாம் (கதையினை அறிந்ததனால்), இந்த கேள்வியினை முதல் முறையாக கேள்விப்படும் போது அவரவர் புரிதலுக்கு ஏற்ப வரும் பதில்கள் சுவாரசியமாக இருக்கும்.

இதனைதான் Perception என கூறுகிறார்கள், சரியோ தவறோ மற்றவர்களின் கருத்திற்கும், நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளிற்கும் மதிப்பு கொடுக்கவேண்டும்.

நம்வர்களிடம் உள்ள குறைபாடு பேச்சு சுதந்திரம் அது இது என கதைப்பார்கள், ஆனால் மற்றவர்களின் கருத்துகளின் கழுத்துகளை நெரிப்பார்கள், இருவர் பேசிக்கொண்டிருக்கும் போதெ இடையில் வந்து சம்பாசனையினை திசைதிருப்பிவிடுவார்கள், சம்பாசணையினை குழப்புவதற்காக குறைந்த பட்ச மன்னிப்பு கூட கேட்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.