Jump to content

சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி!

7-28.jpg

தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது.

இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக தகுந்த கால அவகாசம் கிடைக்காமையால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியவில்லையென அறிவிக்கப்பட்டது. ஆகவே இது தொடர்பில் விக்னேஸ்வரன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த கடிதம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தன்னை விமர்சனம் செய்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“என்னைவிட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் ஒன்றும் விளங்காமல் புலம்பியுள்ளார். மேலும் நான் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் குறிப்பிட்டார் என்று சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். அவர் சிறியவர். அப்படித்தான் பேசுவார். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

நான் அதிபருக்கு கடிதம் எழுதியமை சிறுபிள்ளைத்தனம் என அவர் சொன்னாராம். ஆனால், அந்தக் கடிதம் எழுதியதால் பல விடயங்கள் நடந்துள்ளன.

நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் சுமந்திரன் தொலைபேசியில் அழைத்து ரணில் கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் என்றார்.

ஆகவே போதிய அவகாசம் வழங்காமல் சந்திப்பு திகதி குறிப்பது பொருத்தமற்றது என அதிபருக்கு நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் அனுப்பியதன் பின்னர் தான் அதிபர் செயலகத்திலிருந்து சொன்னார்கள், அந்தச் சந்திப்பு அதிபர் திட்டமிட்டதல்ல, சந்திக்க வரலாமா என சுமந்திரன் கேட்டுள்ளார், சரி,கேட்கிறீர்கள் வாருங்கள் என்று தான், அதிபர் கூறியுள்ளார்.

அதிபர் அழைக்கின்றார் என எமக்குச் சுமந்திரன் சொன்னார். அதையும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர் தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி செய்திருக்கின்றார்.

நான் அதிபருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பப்பட்ட பதிலில், சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது எனவும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தாலேயே இதெல்லாம் நடந்துள்ளது. என்ன விட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் இவையெல்லாம் விளங்காமல் புலம்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=233611

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் தலைமையை விரும்பும் விக்கி.!

IMG-20221228-131017.jpg

தற்போதைய நிலையில் மாவை சேனாதிராஜாவைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சுயநலவாதிகளே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தரப்புகளுக்குள் பிரிவினை இருப்பதால்தான் சிங்கள அரசுகள் எம்மை ஏமாற்ற முடிந்தது. நமக்கு ஒற்றுமை இருக்கின்றது என்பதைக் கண்டால் அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என நம்புகின்றோம்.

இப்போதும் தமிழ்த் தரப்பில் சிலர்தான் தனித்துப் போக வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளை இயன்ற வரை ஒன்றிணைத்துச் செயற்படவே நாம் முனைகின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட முடிவுகள் பற்றி செய்திகள் வெளியாகின. அந்தச் செயற்குழுவில் உள்ள ஒன்பது பேரில் பெரும்பான்மையானவர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு எதிரானவர்கள். ஆனால், ஜனவரியில் கொழும்பில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு உள்ளது என்று மாவை சொன்னதாகவும் செய்தி வந்தது. இது முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடும்.

இந்த முரண்பாடு ஏற்படுவதற்கு சிலரது சுயநல சிந்தனைகள்தான் காரணம். மாவை சேனாதிராஜாவை சிறையில் இருந்து விடுவித்த நீதிபதி நான்தான். ஆனால், இப்போதைய நிலையில் மாவையை எங்கள் தலைவராகக் கொண்டு விடயங்களை நகர்த்தலாம் என்றுதான் சொல்கின்றேன். மக்களுக்காக நாங்கள் செயற்பட ஆரம்பித்தால் சுயநல சிந்தனைகளை கைவிட்டு மக்கள் சார்பில்தான் சிந்திக்க வேண்டும்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2022/12/181780/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் சுமந்திரன் தொலைபேசியில் அழைத்து ரணில் கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் என்றார்.

ஆகவே போதிய அவகாசம் வழங்காமல் சந்திப்பு திகதி குறிப்பது பொருத்தமற்றது என அதிபருக்கு நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் அனுப்பியதன் பின்னர் தான் அதிபர் செயலகத்திலிருந்து சொன்னார்கள், அந்தச் சந்திப்பு அதிபர் திட்டமிட்டதல்ல, சந்திக்க வரலாமா என சுமந்திரன் கேட்டுள்ளார், சரி,கேட்கிறீர்கள் வாருங்கள் என்று தான், அதிபர் கூறியுள்ளார்.

அதிபர் அழைக்கின்றார் என எமக்குச் சுமந்திரன் சொன்னார். அதையும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர் தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி செய்திருக்கின்றார்.

நான் அதிபருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பப்பட்ட பதிலில், சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது எனவும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுமந்திரன் திருந்தவே மாட்டாரா. 😡
அரசியல் நாகரீகம் எதுவும் இல்லாமல், அவர்  நினைத்த படி செயல்படுவதால் 
தமிழ் மக்களுக்கு மேலும், மேலும் சிக்கலை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறாரே...

மற்றைய கடசித் தலைவர்கள் எல்லாரும் யாழ்ப்பாணம் வந்த பின்,
கொழும்பில் இருந்து... ரணிலுக்கு தொலை பேசி எடுத்து சந்திக்க வரலாமா என்று கேட்க,
சரி... நீங்கள் கேட்கிறீர்கள், வாருங்கள் என்று தான், 
ஜனாதிபதி மாளிகையில் இருந்து தெரிவிக்கப் பட்ட பதில்.  

உடனே... சுமந்திரன் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசி எடுத்து,
ஜனாதிபதி அழைக்கிறார் வாருங்கள் என்று கூறுகிறார்.

பொது விடயத்தில்... எவ்வளவு சுத்துமாத்து காட்டிக் கொண்டு இருக்கிறார். 😡

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் திருந்தவே மாட்டாரா. 😡
அரசியல் நாகரீகம் எதுவும் இல்லாமல், அவர்  நினைத்த படி செயல்படுவதால் 
தமிழ் மக்களுக்கு மேலும், மேலும் சிக்கலை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறாரே...

மற்றைய கடசித் தலைவர்கள் எல்லாரும் யாழ்ப்பாணம் வந்த பின்,
கொழும்பில் இருந்து... ரணிலுக்கு தொலை பேசி எடுத்து சந்திக்க வரலாமா என்று கேட்க,
சரி... நீங்கள் கேட்கிறீர்கள், வாருங்கள் என்று தான், 
ஜனாதிபதி மாளிகையில் இருந்து தெரிவிக்கப் பட பதில்.  

உடனே... சுமந்திரன் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசி எடுத்து,
ஜனாதிபதி அழைக்கிறார் வாருங்கள் என்று கூறுகிறார்.

பொது விடயத்தில்... எவ்வளவு சுத்துமாத்து காட்டிக் கொண்டு இருக்கிறார். 😡

இதை இன்னொரு சின்னக் கதிர்காமனெனப் பலர் கூறியது உண்மையாகி வருகிறது. டக்ளஸ் போன்றவர்களைவிட ஆபத்தான நச்சுக் கோடரிகாம்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

இதை இன்னொரு சின்னக் கதிர்காமனெனப் பலர் கூறியது உண்மையாகி வருகிறது. டக்ளஸ் போன்றவர்களைவிட ஆபத்தான நச்சுக் கோடரிகாம்பு.

ஆம்... சரியான சபை குழப்பியும், சுயநல பிறவியும்... கலந்த கலவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கட்சிக்குள் இறக்கி விட்டதே சிங்களந்தானே! கொடுத்த வேலையை செய்ய வேண்டாமோ? கையில கூலி வர வேண்டாமோ? விக்கியர் கட்சிக்குள்ளே வந்ததும் வெருள தொடங்கி அவரை ஓடோட விரட்டியவர், ஆனால் அரசியலை விட்டு விரட்ட முடியவில்லை. அதோட நிப்பாட்டியிருந்தா தப்பியிருப்பார். பேராசை ஒவ்வொருத்தரா விரட்ட வெளிக்கிட்டு இப்போ இவரையே களட்டி விட எண்ணுகிறார்கள். இதில சாணக்கியன் தெரியாமல், சொல்வார் பேச்சுக்கேட்டு முளையிலேயே கருகப்போகுது அவரது அரசியல் கனவு. ஏதோ மொழியாற்றலை வைத்து மக்களை பேய்க்காட்டலாம் என்று நினைத்திருப்பார், இரண்டும் சிங்களத்தின் ஏவல்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

இப்போ... சாணக்கியன் பேசுவதெல்லாம்,
சுமந்திரன் எழுதிக் கொடுத்த கதை வசனங்கள்.

இவர்களின் கேலிக் கூத்தைப் பார்த்து, உலகமே சிரிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே! சுமந்திரன் அடுத்து கெடுத்தவர்களின் கதையை வாசித்துவிட்டு பின் எழுதிக்கொடுத்ததை வாசித்தால் விளங்கும். சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று சொல்வார்கள், அதுவும் எதிரி வீட்டில் இருந்து வந்தவர் வந்த இடத்துக்கே திரும்பார் என்பது என்ன நிட்சயம்? சம்பந்தர் பயிற்றுவித்து சிங்களத்துக்கே தாரை வார்ப்பவர் ஆயிற்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மாடி…ஆத்தாடி…அரசியல்…ஆட்டம்…சும்மாடி…

அரைத்த “மாவை”….. அரைப்போமா…..

தமிழரசை ரெண்டா…உடைப்போமா….

சும்மா….

சம்மா….

சும்மா…

சம்மா…

சாணக்ஸ்….விக்கி…. அம்மம்மா…..

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

அவர் சிறியவர். அப்படித்தான் பேசுவார். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

நிலவைப்பாத்து ஏதோ குரைத்தால் அதுக்குதான் வாய் வலிக்கும் என்பார்கள். தங்கள் திட்டத்தை விக்கியர் உடைத்து பகிரங்கப் படுத்துகிறாரே என்கிற கோவம் இருக்கத்தான் செய்யும் அவர்களுக்கு. இவர்களுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணாக்குவதை விடுத்து காரியத்தில் இறங்கவேண்டும். அவர்களை மக்கள் பாத்துக்கொள்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

அவரை கட்சிக்குள் இறக்கி விட்டதே சிங்களந்தானே! கொடுத்த வேலையை செய்ய வேண்டாமோ? கையில கூலி வர வேண்டாமோ? விக்கியர் கட்சிக்குள்ளே வந்ததும் வெருள தொடங்கி அவரை ஓடோட விரட்டியவர், ஆனால் அரசியலை விட்டு விரட்ட முடியவில்லை. அதோட நிப்பாட்டியிருந்தா தப்பியிருப்பார். பேராசை ஒவ்வொருத்தரா விரட்ட வெளிக்கிட்டு இப்போ இவரையே களட்டி விட எண்ணுகிறார்கள். இதில சாணக்கியன் தெரியாமல், சொல்வார் பேச்சுக்கேட்டு முளையிலேயே கருகப்போகுது அவரது அரசியல் கனவு. ஏதோ மொழியாற்றலை வைத்து மக்களை பேய்க்காட்டலாம் என்று நினைத்திருப்பார், இரண்டும் சிங்களத்தின் ஏவல்களே.

என்ன பிரச்சினை என்றால்…
சுமந்திரன் என்ன சுத்துமாத்து செய்தாலும், உடனே பிடிபட்டு சந்தி சிரிக்க  நிற்பார்.
ஆனால் அதற்க்காக…. வெட்கப் படுவது கிடையாது.
பத்திரிகையாளர் தொடக்கம், பொது மக்கள் வரை…
இவரின் செயலை நினைத்து அருவருப்பதை பற்றி சிந்திப்பது கிடையாது.
ஒரிரு நாட்கள் மட்டும்… ஒளித்து இருந்து விட்டு,
வேறொரு சுத்துமாத்து செய்து மாட்டுப் பட்டு நிற்பதே சுமந்திரனின் ராசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

அந்தச் சந்திப்பு அதிபர் திட்டமிட்டதல்ல, சந்திக்க வரலாமா என சுமந்திரன் கேட்டுள்ளார், சரி,கேட்கிறீர்கள் வாருங்கள் என்று தான், அதிபர் கூறியுள்ளார்.

அதிபர் அழைக்கின்றார் என எமக்குச் சுமந்திரன் சொன்னார். அதையும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர் தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி செய்திருக்கின்றார்.

நான் அதிபருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பப்பட்ட பதிலில், சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது எனவும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தாலேயே இதெல்லாம் நடந்துள்ளது. என்ன விட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் இவையெல்லாம் விளங்காமல் புலம்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் சடையல் மன்னன் ...அவரது சடையலுக்கு சாண்ஸ் வாளாந்தவக்கை போல கிடந்து கத்துது.
கூத்தமைப்பு வால்களுக்கோ அதைக்கேட்டு  தீர்வை வாங்கிவிட்ட புல்லரிப்பு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

என்ன பிரச்சினை என்றால்…
சுமந்திரன் என்ன சுத்துமாத்து செய்தாலும், உடனே பிடிபட்டு சந்தி சிரிக்க  நிற்பார்.
ஆனால் அதற்க்காக…. வெட்கப் படுவது கிடையாது.
பத்திரிகையாளர் தொடக்கம், பொது மக்கள் வரை…
இவரின் செயலை நினைத்து அருவருப்பதை பற்றி சிந்திப்பது கிடையாது.
ஒரிரு நாட்கள் மட்டும்… ஒளித்து இருந்து விட்டு,
வேறொரு சுத்துமாத்து செய்து மாட்டுப் பட்டு நிற்பதே சுமந்திரனின் ராசி.

அந்தராசி ஒருநாள் இவரை சிங்களத்திடம் மாட்டிவிட்டு வேடிக்கை பாக்காமலா போய்விடும்? உங்களுக்கு நினைவிருக்கோ என்னோ? முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கப்போய், அவர்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று அலம்பித்திரியேக்கை, அவர்களும் ஆகா.... ஓகோ.... என்று இவரை புகழ்ந்து கொண்டாடும்போது, இவர் தெரியாத்தனமாக அவர்களுடைய சமயத்தைப்பற்றி கருத்துச் சொல்லப்போய் வாங்கிக் கட்டினார். அதன்பிறகு அவர்கள் விடயத்தில் கொஞ்சம் அடக்கம். இப்போ சாணக்ஸ் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் கனவில, வெகு சீக்கிரம் குப்புற விழுவார் பாருங்கோ! எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம் என்கிற கதைபோல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அந்தராசி

இந்த சொல்லின் அர்த்தம், தோற்றுவாய் என்ன சாத்ஸ்?

செங்கை ஆழியான் ஒரு கதையில் ஒரு போத்துகேயருக்கு வேலை பார்த்த ஒரு பாத்திரத்தை குறிக்க பாவித்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

வேறொரு சுத்துமாத்து செய்து மாட்டுப் பட்டு நிற்பதே சுமந்திரனின் ராசி.

11 hours ago, satan said:

அந்தராசி ஒருநாள் இவரை சிங்களத்திடம் மாட்டிவிட்டு வேடிக்கை பாக்காமலா போய்விடும்? 

4 hours ago, goshan_che said:

இந்த சொல்லின் அர்த்தம், தோற்றுவாய் என்ன சாத்ஸ்?

செங்கை ஆழியான் ஒரு கதையில் ஒரு போத்துகேயருக்கு வேலை பார்த்த ஒரு பாத்திரத்தை குறிக்க பாவித்திருப்பார்.

கோசான்….   நீங்கள், “அந்தராசி” விடயத்தில் “கன்ஃபியூஸ்” ஆகி
போர்த்துக்கேயர் மட்டும் போனது ரொம்ப ஓவர். 😂
சாத்தான்… அந்த  ராசி என்ற இரண்டு சொல்லை, அந்தராசி என்று சேர்த்து எழுதியதால் வந்த குழப்பம்தான் இது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்….   நீங்கள், “அந்தராசி” விடயத்தில் “கன்ஃபியூஸ்” ஆகி
போர்த்துக்கேயர் மட்டும் போனது ரொம்ப ஓவர். 😂
சாத்தான்… அந்த  ராசி என்ற இரண்டு சொல்லை, அந்தராசி என்று சேர்த்து எழுதியதால் வந்த குழப்பம்தான் இது. 🤣

அசிங்கபட்டான் ஆட்டோகாரன்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அசிங்கபட்டான் ஆட்டோகாரன்🤣

வருச முடிவில்… கடக ராசி, வேலையை காட்டத் தொடங்குது போலை. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

வருச முடிவில்… கடக ராசி, வேலையை காட்டத் தொடங்குது போலை. 😂 🤣

நான் சிங்கம் எல்லோ🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.