Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு !

By DIGITAL DESK 5

12 JAN, 2023 | 12:11 PM
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதேநேரம் நிலந்த ஜயவர்தன, பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் சொந்த நிதியில் இருந்து 75 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது சொந்த நிதியில் இருந்து 50 மில்லியன் ரூபாவையும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தனது சொந்த நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/145596

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை

எதுக்கு சொந்த நிதியில் இருந்து???

அவ்வளவு இவர்களிடம் இருக்கிறதா???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

புரியவில்லை

எதுக்கு சொந்த நிதியில் இருந்து???

அவ்வளவு இவர்களிடம் இருக்கிறதா???

 100 மில்லியன் = 10 கோடி

முன்னாள் சனாதிபதியிடம் இருக்கும் அண்ணா.

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நிஞாயமாக நடக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு, ஆனால் நஷ்ட ஈடு என்பது எல்லாம் சும்மா. அவர்களுக்கு பறிக்கத்தெரியுமே தவிர கொடுக்கத்தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

 100 மில்லியன் = 10 கோடி

முன்னாள் சனாதிபதியிடம் இருக்கும் அண்ணா.

 

ஒரு அரசாக  இருக்கும்போது நடைபெற்றதற்கு ....

சொந்த  நிதியில் கேட்பது தான் உதைக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

ஒரு அரசாக  இருக்கும்போது நடைபெற்றதற்கு ....

சொந்த  நிதியில் கேட்பது தான் உதைக்குது?

அதை புரிந்துகொண்ட காரணமாகத்தான் சொந்த நிதியில் என்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நிதியையும் அரசுக்கு செலுத்த வேண்டும். அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் கொடுக்காது????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் 2019, ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (12/01/2023) வழங்கியுள்ளது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் வழங்கியது.

இதன்படி, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இதற்கேற்ப, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மிலலியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நஷ்ட ஈடு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தால் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோன்று, தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தால் 5 லட்சம் ரூபா வீதம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக 6 மாத காலத்திற்குள் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, எல்.ரி.பீ.தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ.நவாஸ், சிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 8 தற்கொலை குண்டுதாரிகள் அடங்களாக 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தாக்குதலில் 40 வெளிநாட்டு பிரஜைகளும் 45 குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர்.

இலங்கையிலுள்ள முக்கிய மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு இந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு நடத்தியமை, விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹாசிம் இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியிருந்ததுடன், அவரும் இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.

முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கும் இதனூடாக சேதம் விளைவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c6p50x2deyno

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

இந்த நஷ்ட ஈடு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது

செலுத்த தவறும் பட்சத்தில் ( ? ) சிறை தண்டனையோ அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்வதையோ குறிப்பிட படவில்லை..

vadivel-pocket.gif

அதற்கும் மேலே மஞ்சள் நோட்டிசு ( என்னிடம் எதுவும் இல்லை .. நான் ஒரு அன்னகாவடி ) கொடுத்தால் என்ன ஆவது.?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா?  பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, நட்டஈட்டு தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

 

இதன்படி, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாய் வீதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாயும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாயை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்த நிலையில், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்தித்து பிபிசி தமிழ் வினவியது.

 

கொழும்பு - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த கோமஸ், ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தனது மகன், மருமகள் மற்றும் மூன்று பேரப் பிள்ளைகளை இழந்துள்ளார்.

 

கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்திருந்தனர்.

 

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, கோமஸ் கருத்து தெரிவித்தார்.

 

கேள்வி :- உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியளிக்கின்றதா?

 

பதில் :- இல்லை. இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம், இது ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. கால தாமதமாகிலும், இந்த தீர்ப்பு வந்ததற்கு ஓரளவிற்கு நாங்கள் திருப்தி அடைகிறோம். ஏனென்றால், நாங்கள் அவர்களை பற்றிய சிந்தனையிலும் அவர்களின் இழப்பை பற்றிய சிந்தனையிலும் எப்போதும் துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் சிறியதொரு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவே கருத்திற் கொள்கின்றோம்.

 

கேள்வி :- இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், எவ்வாறானதொரு நியாயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

 

பதில் :- இறைவனின் தீர்ப்பை தவிர நாங்கள் எதுவும் மேலதிகமாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே சம்பாதித்ததில் ஒரு சிறிய பங்கை இழக்கின்றார்கள்.

அவ்வளவு தான். இது எங்களுக்கு எந்தவிதத்திலும் திருப்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம், எங்களுடைய அன்றாடத் தேவைகளை பொருத்த வரை ஒரு பக்கம் இந்த பணத்தின் மூலம் திருப்தி அடையலாம். ஆனால், இழந்ததை எந்தவிதத்திலும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினால் திருப்பி கொடுக்க முடியாது. எவ்வளவு பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் அவர் அந்த ஜனாதிபதி நாற்காலியை மாத்திரம் யோசித்தாரே தவிர, பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டார்.

அது இந்த தீர்ப்பின் மூலம் நன்றாக விளங்குகின்றது. அனைவரையும் பாதுகாக்குமாறு கோரியே  ஜனாதிபதியாக நாங்கள் அவரை  தேர்ந்தேடுத்தோம். ஆனால், அவர் அதை முழுமையாக செய்யவில்லை என்கின்றது தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

கேள்வி :- இந்த தீர்ப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?

 

பதில் :- அவர்களினாலும் இதனை ஜீரனிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால், எங்களுக்கு பண ரீதியிலான குறைபாடு பெரிதாக தெரியவில்லை. எனது குழந்தைகளின் சகோதரன், என்னுடைய மகன் எனக்கு பிறகு கிடைப்பாரா? கிடைப்பதற்கு ஏதாவது உத்தரவாதத்தை இவர்கள் கொடுப்பார்களா? என்னுடைய குழந்தைகள் என்னுடன் செலவிட்ட நாட்கள், நடந்துக்கொண்ட விதங்கள், இன்னும் எங்களை துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றதே தவிர, இந்த பணத்தினால் அதனை திருப்திப்படுத்த முடியாது.

 

கேள்வி :- பொருளாதார நெருக்கடி தற்போது நாட்டை பெரிதும் பாதித்திருக்கின்றது.  உங்களது மகன், உங்களின் குடும்பத்திற்கு உழைத்துக் கொடுக்கும் நபராக இருந்துள்ளார். அவர் இந்த தருணத்தில் உயிருடன் இருந்திருந்தால், இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நீங்கள் எவ்வாறு மீண்டெழுந்திருப்பீர்கள்?

 

பதில் :- இதுவொரு நல்ல கேள்வி. என்னுடைய இறந்த மகன் நல்ல உழைப்பாளி. அவன் ஒரு நேரம் கூட வீட்டில் இருப்பதில்லை. ஆட்டோ ஒன்று இருந்தது. ஆட்டோ செலுத்திக் கொண்டு, வேலைக்கும் சென்றார். ஒரு நாளைக்கு இரண்டு வேலைகளை செய்யக்கூடிய ஒரு உழைப்பாளியாக இருந்தார். எனக்கு நல்ல உதவியாக இருந்தது. இப்போதுள்ள பொருளாதார பிரச்னைக்கு அவர் இருந்திருந்தால், கஷ்டம் கொஞ்சம் குறைந்திருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

கேள்வி :- இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது பொறுப்பிலிருந்து தவறியவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் நீதித்துறை ஊடாக எவ்வாறானதொரு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?

 

பதில் :- அநேகமாக நான் எதிர்பார்க்கின்றது அவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டும். உள்ளே இருக்கும் போது, என்ன பொறுப்பை தவறவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். ஏன் நான் இப்படி செய்தேன் என்பதை தனிமையில் இருக்கும் போது ஓரளவுக்கேனும் உணர்வார்கள். அதனை உணரும் விதமாக சரி, அவர்களை உள்ளே தள்ள வேண்டும். அவர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. பணத்தை கொடுத்து, தப்பிச் சென்றுவிடாமல், உள்ளே தனிமையில் இருந்து அவர்கள் உணர வேண்டும்.

இறந்த ஆத்மாக்களுக்கு தாங்கள் செய்த துரோகம் என்ன என்பதை உணர வேண்டும். இந்த வேதனையை அவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் இறந்தவர்களின் தாய், தந்தையர்கள் படும் பாடு, வேதனையை இவர்கள் இன்னும் உணரவில்லை. இந்த தீர்ப்பின் ஊடாக அவர்களின் பொருளாதாரத்தில் ஒரு சிறிய பகுதியைத்தான் இழக்கின்றார்கள். முழுவதையும் இழக்கவில்லை. அவர்களை உள்ளே தள்ளி, அவர்கள் தனிமையில் இருந்து, என்ன நடந்தது என்பதை யோசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். 

https://www.bbc.com/tamil/articles/cpelzwpxezlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 கோடியை செலுத்தாவிடின் மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் - ஹர்ஷண ராஜகருணா

By VISHNU

16 JAN, 2023 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து தனது நண்பர்கள் , உறவினர்களிடமிருந்து உதவி பெற்றாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும்.

அவ்வாறில்லை எனில் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட சொத்து விவகாரங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது. எவ்வாறிருப்பினும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து அவர் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தன்னிடம் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதை விடுத்து , உறவினர்கள் , நண்பரிகளிடமிருந்து உதவி பெற்றாவது அவர் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க வேண்டும். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருப்பதால் அக்கட்சியும் முன்னாள் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும்.

தேர்தல் தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்மறையான கருத்துக்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமேயாகும். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியால் எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூற முடியும்?

நிதி அமைச்சும் , திறைசேரியும் செலவீனங்களுக்கு சரியென்று கூறுகின்ற போதிலும் , அரசாங்கமே அதற்கு எதிர்ப்புக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களின் இறையான்மையை பாதுகாப்பதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கம் , ஏதேனுமொரு வழியில் இலஞ்சம் வழங்கியாவது தமது வெற்றியை உறுதி செய்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்.

சுயாதீன தேர்தலொன்றை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான பொறுப்பு பொது மக்களுக்கும் உண்டு.

தற்போது பொதுஜன பெரமுனவும் , ஐ.தே.க.வும் இணைந்து நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் 2000 இலட்சம் (200 மில்லியன்) செலவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினம் கொண்டாடப்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடல்ல.

ஆனால் செலவுகளைக் குறைத்து கௌரவத்துடன் கொண்டாடுமாறு வலியுறுத்துகின்றோம். சுதந்திர தின கொண்டாட்ட செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு தேவையான மருந்துகள் , உரம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மொட்டு , ஹெலிகொப்டர் இரு அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.

ஜே.வி.பி.க்கு தற்போது பித்துப் பிடித்துள்ளது. அவர்களால் மேடைகளில் பேசுவதற்கு மாத்திரமே முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சின் மூலம் தேர்தலுக்கு முன்னரே வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் உண்மையான முடிவுகள் அதற்கு முரணானதாகவே இருக்கும்.

எனவே ஜே.வி.பி. குறித்து மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 1980 களில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்றும் மாறக் கூடியவையல்ல. எதிர்பாராத விதமாக இம்முறை ஜே.வி.பி.யை மக்கள் தெரிவு செய்து விட்டால் , 5 ஆண்டுகளின் பின்னர் இவர்களை விட கோட்டாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்று எண்ணும் நிலைமையே ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/145933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: நஷ்ட ஈடாக ரூ.10 கோடி செலுத்த இயலாது - மைத்திரிபால சிறிசேன

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மைத்ரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன,  ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 5 கோடி ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஒரு கோடி ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என்பது நீதிமன்றம் உத்தரவு.

இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றிருந்த நிலையில், உத்தரவுக்கு அமைய குறித்த நபர்கள் நட்டஈட்டை எவ்வாறு வழங்குவார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

நட்டஈட்டை செலுத்தாதிருக்க சிறிசேன முயற்சி - கொழும்பு பேராயர் இல்லம் 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், நட்டஈடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாயை செலுத்தாதிருப்பதற்கு முயற்சித்து வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவிக்கின்றது.

 

 

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை இல்லாது செய்வதற்கு, நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்த அவர்  தயாராகி வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

''7 நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக, இந்த நாட்டை போலியாக ஆட்சி செய்ய முடியாது என்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சில விடயங்களை அறிந்துக்கொள்ள முடிகின்றது. மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட அந்த தண்டனையை இல்லாது செய்வதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

 

அவ்வாறான விடயங்களை செய்ய முடியாது. அந்த தீர்ப்பை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். தண்டனைக்கு மைத்திரிபால சிறிசேனவை கீழ்படிய வைக்க வேண்டும்" என அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,PMD

மைத்திரிபால சிறிசேன பதில்

நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் தடவையாக நேற்றைய தினம் பொது வெளியில் கருத்து தெரிவித்தார்.

 

உயர்நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் பணத்தை செலுத்தும் பின்புலம் தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கிக்னறார். எனினும், நீதிமன்ற தீர்ப்பை தான் மதித்து, தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேகரித்து, இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்த தயாராகி வருவதாக அவர் கூறுகின்றார்.

''நான் சட்டத்தை மதிக்கின்றேன். இந்த சம்பவம் நேரும் தருணத்தில், நான் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்த போதிலும், தனக்கு இது தொடர்பில் எந்தவொரு நபரும் அறிவிக்கவில்லை என நான் தொடர்ச்சியாக கூறி வருகின்றேன். இந்த தீர்ப்பில் 85 பக்கங்களுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. 

 

இந்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்த போதிலும், ஜனாதிபதி எந்தவொரு விதத்திலும் இது குறித்து அறிந்திருக்கவில்லை என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், 10 கோடி ரூபாயை செலுத்த ஏன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என நீங்கள் சிந்திக்க முடியும்?. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகள், ஏதேனும் ஒரு தவறிழைக்கும் பட்சத்தில், அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு கூற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. 

 

10 கோடி ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்கு எந்தவொரு வகையிலும் பொருளாதார பின்புலத்தை நான் கொண்டிருக்கவில்லை. எமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேர்ப்போம் என நானும், எனக்கு நெருங்கியவர்களும் தீர்மானித்துள்ளோம். 

 

எனக்கு எந்தவொரு வருமானமும் கிடையாது. நான் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலத்திலும், எனது சொத்து விபரங்களை நாடாளுமன்றத்திடம் வெளிப்படுத்தியுள்ளேன். தேவை ஏற்படுமாயின், தகவலறியும் சட்டத்தின் ஊடாக அதனை பெற்றுக்கொண்டு, பார்வையிட முடியும்." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பெரும் தொழிலதிபரான சிறிசேன சகோதரர் சொல்வது என்ன?

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், இலங்கையின் பிரதான தொழிலதிபர். மிகப் பிரமாண்ட அரிசி ஆலை, காணி விற்பனை, ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்து, இலங்கையின் பிரமாண்ட தொழிலதிபராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன விளங்குகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,DUDLEY SIRISENA'S FACEBOOK

 
படக்குறிப்பு,

டட்லி சிறிசேன

நாடு முழுவதும் அரிசி தேவையில் பெரும் பகுதியை, டட்லி சிறிசேன விநியோகித்து வருகின்றமையின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றார். இவ்வாறான பல்வேறு துறைகளின் தடம் பதித்து, மிக செல்வந்தராக காணப்படும் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன, தனது மூத்த சகோதரனான மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டார்.

 

ஊடகவியலாளர் :- ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களின் அண்ணாவிற்கு நட்டஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நீங்களா பணம் வழங்க போகின்றீர்கள்?

டட்லி சிறிசேன :- நீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. தம்பியிடமிருந்து பணத்தை பெற்று, நட்டஈட்டை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. தேவையற்ற கேள்விகளை என்னிடம் எழுப்ப வேண்டாம்.

ஊடகவியலாளர் :- அப்படியென்றால், அவருக்கு அந்தளவு தொகையை செலுத்த முடியுமா?

டட்லி சிறிசேன :- அதனை அவரிடமே கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்பது குறித்து நான் கவலை அடைகின்றேன்.

உலகையே உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பு சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார். மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவங்களில், தற்கொலை குண்டுதாரிகள் 8 பேர் அடங்கலாக 277 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன், இந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 400 பேர் காயமடைந்திருந்தனர்.

 

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி வழங்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரினால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் தமது பொறுப்புகளை தவறவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/czrk12we4kzo

  • கருத்துக்கள உறவுகள்

சரி சிறிசேன பிச்சை எடுத்தோ உறவினர் நண்பர்கள் மூலமாகவே செலுத்தி விடுவார் எஞ்சிய குற்றஞ்சாட்டப்பட்டோர் என்ன செய்வர்? மக்களிடம் எல்லோருக்கும் பிச்சையிட முடியுமா?  சொந்தத்தம்பியே அவரது பிரச்சனையை அவர் பாத்துக்கொள்ளட்டும் எனும்போது, நண்பர்கள், சில உறவினர் கொடுக்க காரணம் என்ன? அவரின் குற்றத்தில் இவர்களுக்கும் பங்குண்டோ? அவர் பதவி வகிக்கும்போது இவர்கள் சலுகைகளை பெற்றிருப்பார்களோ? இல்லை சிலர் தாங்கள் அகப்பட்டுக்கொள்ளாமல் உறவினர் நண்பர்கள் பேரில் வைப்புச்செய்வதுமுண்டு, பிடிபடுவதுமுண்டு. அந்த அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அனுதாபம் தெரிவிக்காதவர்கள், அவர்களுக்கு உதவி செய்யாதவர்கள், ஒரு குற்றவாளிக்கு உதவுகிறார்கள். சமுதாயத்தின் மனநிலை! ஏமாற்றுபவன், சமுதாயத்தில் உயர் பதவியில், அந்தஸ்த்தில் இருந்தால்; அவர் மதிக்கப்படவேண்டும், காப்பாற்றப்படவேண்டும். ஏமாறுபவர், தாக்கப்பட்டவர் அவர்களை எதிர்த்து பொது வெளியில்  கேள்வி கேட்கக்கூடாது, சுட்டிக்காட்டக்கூடாது மரியாதை மதிப்பு கொடுக்கவேண்டும்! இது பாதிக்கப்பட்டவர்களை அடிமைப்படுத்தும் ஒருவகை மேட்டுக்குடி மனநிலை!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2023 at 08:05, விசுகு said:

புரியவில்லை

எதுக்கு சொந்த நிதியில் இருந்து???

அவ்வளவு இவர்களிடம் இருக்கிறதா???

மைத்திரி ஒரு நசியல் கள்ளர். அவர் கையில் ஒன்றுமே இல்லை. ஆனால் அவரது குடும்பம், இலங்கையில் பெரும் பணக்கார குடும்பம். அவரது சகோதரர் நாட்டின் பெரும் அரிசி ஆலை ஒன்றை பொலநறுவையில் வைத்துள்ளார்.

அவரது குடும்பத்தின், மிகப்பெரிய உல்லாச பயண விடுதி ஒன்று தென் இலங்கையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

காசு  தராவிடின் சொத்துக்களை ப்றிக்கக்கூடிய சட்டங்கள் சிறிலங்காவில் இருக்குமென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

காசு  தராவிடின் சொத்துக்களை ப்றிக்கக்கூடிய சட்டங்கள் சிறிலங்காவில் இருக்குமென நம்புகிறேன்.

இப்படியான எவருமே சொந்த பெயரில் வைத்திருக்க மாட்டார்கள்.

பணம் இல்லை என்று ஓரிரு வருடம் சிறை சென்று வந்தால் இன்னும் கூடிய அளவான வாக்குகளால் வெற்றியடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

காசு  தராவிடின் சொத்துக்களை ப்றிக்கக்கூடிய சட்டங்கள் சிறிலங்காவில் இருக்குமென நம்புகிறேன்.

அதை சட்டத்தரணி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஆனால் மைத்திரி தன்னிடம் சொத்தேதும் இல்லையென்கிறார். உதவி செய்யும் நண்பர், உறவினரின் வைப்புக்கணக்குகளை ஆராய்ந்தால் வெளிவரும் உண்மை. அதற்கு முதல் சரியான காரணம் காட்டி உத்தரவு வாங்க வேண்டும் நீதிமன்றத்திடம். 

குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக செய்தி கிடைத்தும் அதை தடுக்காது, நடத்துவதற்கு அனுமதியளித்துவிட்டு தான் தப்பிப்பதற்காக சிங்கப்பூருக்கு போவதற்கு முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வளவு கையூட்டு வாங்கினாரோ? மொத்தத்தில் நஷ்ட ஈடு செலுத்த முடியாத பிச்சைக்காரன், தன்னைத் தெரித்தெடுத்த மக்களை காப்பாற்ற முடியாத, விரும்பாத செயற்திறனற்ற ஒருவரை மக்கள் தெரிந்தெடுத்தனர், நம்ம தலீவர்களும் தங்கள் கையை காட்டினார் இவர் பக்கம். இதே நாளைக்கு ராஜபக்ஸாக்களுக்கு எதிராக நீதிமன்றம் போனாலும் பணப்பையை கவிட்டுக்கொட்டி  கையை விரித்து தப்பிப்பார்கள்! அவ்வாறே ஊழலில் மாட்டும் எவரும் செய்து தப்பிக்கலாம். இப்போவாவது தனது தவறை, நம்பிக்கைத்துரோகத்தை நினைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக்கேட்க தோன்றுகிறதா இவர்களுக்கு? நஷ்ட ஈடு வழங்க வேண்டி வந்து விட்டதே என நொந்து கொள்வார். அவர் நினைத்திருப்பார் ராஜபக்சக்கள் ஆட்சியில் நிலைப்பார், இப்படியான நிலையெல்லாம் வராதென்று நம்பியிருப்பார். இத்தனை ஆயிரம் மக்களை காலங்காலமாய் கொன்றிருக்கிறோம் யாரும் யாருக்கும் இப்படி  நஷ்ட ஈடு கொடுத்ததில்லையே, நீதிமன்றங்களும் கோரவில்லை, வழக்குகள்  தள்ளுபடியானதே சரித்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிடம் 3 ஏக்கர் மாந்தோட்டம் மட்டுமே உள்ளதாம். மிகுதியை மக்களிடம் திரட்டப்போகிறாராம். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போவெல்லாம் பிச்சைக்காரர் தங்கள் படுக்கையின் கீழே பிச்சையெடுத்த, கொள்ளையடித்த பணத்தை பதுக்குகின்றனர். கோத்தாவின் படுக்கையறையில் போராட்டக்காரர் எடுத்த பணம் நினைவுக்கு வரலாம் எல்லோருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.