Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

200 மில்லியன் ரூபா செலவில் 75 ஆவது சுதந்திரதின ஏற்பாடுகள் : பிரதான நிகழ்வில் ஜனாதிபதியின் உரை இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

200 மில்லியன் ரூபா செலவில் 75 ஆவது சுதந்திரதின ஏற்பாடுகள் : பிரதான நிகழ்வில் ஜனாதிபதியின் உரை இல்லை

By T. SARANYA

12 JAN, 2023 | 05:13 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , 200 மில்லியன் ரூபா செலவில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

மேலும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய் சங்கர் உள்ளிட்ட 400 இராஜதந்திரிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளை , வைபவத்தின் போது ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும்  உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த ஆகியோர் இவ்விடயங்களை தெரிவித்தனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிக்கையில் ,

'நமோ நமோ தாயே - நூற்றாண்டை நோக்கி அடியெடுத்து வைப்போம்' என்ற தொனிப் பொருளின் கீழ் 75 ஆவது சுதந்திர தின வைபவம் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மத வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் அவை ஆரம்பமாகும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு சித்திர போட்டி, கலாசார மாநாடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தவுள்ளன.

சுதந்திர தினத்திற்கான பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் காலி முகத்திடலில் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். முப்படையினர் , பொலிஸார் மற்றும் தேசிய பயிற்சிப்படையணி மாத்திரம் பங்கேற்கும் மரியாதை அணி வகுப்பு இடம்பெறும்.

முப்படையினர் , பொலிஸ் மற்றும் தேசிய பயிற்சிப்படையணியைச் சேர்ந்த 6,012 படையினரும் , 320 வாகனங்களும் இந்த பேரணியில் பங்குபற்றவுள்ளன. மேஜர் ஜெனரல் தீபால் புஸ்வெல்லவின் தலைமையில் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

இந்த வைபம் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பிரதாய பூர்வமாக இடம்பெறும் ஜனாதிபதியின் உரை வைபத்தின் போது இடம்பெறாது. மாறாக அன்றைய தினம் மாலை வேளையில் ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறும்.

எதிர்வரும் 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களின் அடிப்படையில் சுதந்திர தின வைபவ கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. அனைத்து இன மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை ஒன்றிணைப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்கமைய சுதந்திர தின வைபவங்கள் ஆரம்பமாகும் போது தேசிய கீதம் சிங்கள மொழியிலும் , நிறைவடையும் போது தமிழ் மொழியிலும் பாடப்படும் என்றார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவிக்கையில் ,

கண்டி - தலதா மாளிகையில் பெப்ரவரி 2 ஆம் திகதி மாலை 3 மணிக்கு விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன. கொள்ளுபிட்டி பொல்வத்தை விகாரையில் சுதந்திர தினத்தன்று காலை 7.30 க்கு பௌத்த மத வழிபாடுகள் இடம்பெறும்.

சுதந்திர தின வைபவங்கள் ஒரே நாளில் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக மாவட்ட மட்டத்திலும் , பிரதேச செயலக மட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதே போன்று பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி சகல மத வழிபாட்டு தலங்களில் 75 விளக்குகளை அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஏற்பாடுகளுக்கு அப்பால் 1996 குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 2 மில்லியன் குடும்பங்களை இலக்காகக் கொண்டு 10 கிலோ கிராம் என்ற அடிப்படையில் இரு சந்தர்ப்பங்களில் அரிசி வழங்கப்படவுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் வீதிகளின் இரு மருங்கிலும் பொது மக்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 1,000 ரூபா நாணயக் குற்றிகள் 75 வெளியிடப்படவுள்ளன.

அத்தோடு டீ.எஸ்.சேனாநாயக்க , ஜவஹர்லால் நேரு மற்றும் மொஹம்மட் அலி ஜூம்மா ஆகியோரது நிழற்படங்கள் பதிக்கப்பட்ட முத்திரைகளும் வெளியிடப்படவுள்ளன.

மேலும் பொது நலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரச தலைவர்கள் உள்ளிட்ட 400 இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளை தேசிய மட்டத்தில் அரச தலைவர்கள் , நாட்டு நலனுடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட 3,250 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவங்களுக்கு 757 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று ஆரம்பத்தில் மதிப்பிப்பட்ட போதிலும் , உள்ளுராட்டலுவல்கள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கிடையிலான சுமார் 20 கலந்துரையாடல்களின் பின்னர் அந்த செலவுகள் 200 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதி விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சிக்களினாலும் , சுய விருப்பத்தின் பேரில் தனியார் நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/145639

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திரதின விழா

By T. SARANYA

12 JAN, 2023 | 03:01 PM
image

அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின்  புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 "நமோ நமோ மாதா - நூற்றாண்டுக்கு ஒரு படி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பெருமை மிகு விழாவில், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமாகவுள்ளது.

 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அதன்படி, பௌத்த சமய நிகழ்வுகள், பெப்ரவரி 02 ஆம் திகதி மாலை ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், அன்றிரவு விக்டோரியா அணைக்கு அருகில் 9:00 மணிக்கு தர்ம பிரசங்கமும் ஆரம்பமாகவுள்ளது. மறுநாள் காலை அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு மருதானை பாத்திமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடுகளும், அதே நேரத்தில் காலி முகத்திடல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ மத வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. இந்து சமய நிகழ்வுகள், பெப்ரவரி 03 ஆம் திகதி காலை திருகோணமலை கோணேஷ்வரம் ஆலயத்தில், இடம்பெறவுள்ளன.

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமய வழிபாடுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பிலும் பௌத்த மற்றும் இந்து சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி 4 ஆம் திகதி முற்பகல் 6.30 மணிக்கு கொழும்பு 3 பொல்வத்தை தர்மகீர்த்தியாராம விகாரையில் பௌத்த சமய நிகழ்வும் கொழும்பு 4 பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இந்து மத நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் மார்ச் மாதம் ஸ்ரீ தலதா கண்காட்சி, கபில வஸ்து தாது கண்காட்சி,  மே மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சி ஜூன் மாதம் அனுராதபுர நகரில் நடைபெறவுள்ளதுடன், மேலும் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சியொன்றை ஜூலை மாதம் தென் மாகாணத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலாசார கலை விழாவான "லங்காரலங்கா" பெப்ரவரி 03 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 750 கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

யாழ் கலாசார நிலையம், பெப்ரவரி 11ஆம் திகதி காலை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், யாழ் கலாசார நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் கலாசார ஊர்வலம் யாழ்.நகரின் ஊடாக வீதி உலா வந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நிறைவடையும். (பழைய பேருந்து நிலையம்) அங்கு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், அன்று இரவு அதே இடத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நடன மரபுகளையும் ஒன்றிணைத்து, வீதி உலாவரும் ஊர்வலம் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு கண்டி நகரில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் பூரண பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திரம் தொடர்பான 30 நிமிட குறும்படமொன்றை தயாரித்து  அனைத்து திரையரங்குகளிலும் கலையரங்குகளிலும் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இளைஞர் சமுதாயத்தை இலக்கு வைத்து "சுதந்திரம்" என்ற தலைப்பில் குறும்படங்கள், தேசபக்தி பாடல்கள் மற்றும் ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட வடிவமைப்புப் போட்டியொன்றை மே மாதம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி சிரேஷ்ட ஓவியக் கலைஞர் எச்.எஸ். சரத் தலைமையில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய அருங்காட்சியக திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கையின் வரலாற்றை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள் கண்காட்சி பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின விழாவின் போது  பத்திரிகை செய்திகள் மற்றும் பிற கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது . 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட  முத்திரை ,சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க ,சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர பாகிஸ்தானின் முதல் பிரதமர்  முஹம்மது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்களை உள்ளடக்கிய அரிய வகை விசேட  நினைவு முத்திரையையும்  வெளியிடப்பட  உள்ளது. மேலும் ரூ.1000/- மதிப்புள்ள  சிறப்பு நினைவு நாணயமும்  வெளியிடப்படும்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட நகர்ப்புற வன எண்ணக்கரு  நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், ஸ்ரீலங்கா டெலிகொம் அனுசரணையுடன் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரையிலான சுதந்திர தின  சைக்கிள் சவாரி ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது தவிர, மாகாண மற்றும் மாவட்ட  மட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பொது பூங்காக்கள், தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு   வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய தேசிய பூங்காக்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள்  திணைக்களத்திற்குரிய  தேசிய பூங்காக்கள்  என்பன  சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும்.

 குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன்   குடும்பங்களுக்கு 02 மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்   குறித்த  வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டு 75 ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தப் பயணத்தை 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரையில் மாற்றமில்லாத அரச கொள்கையாக மாற்றுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்  நோக்கமாகும். எதிர்வரும் 25 வருடங்களுக்கான திட்டமும் இந்த தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

இதன்படி, பல புதிய நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் ஒரு வரலாற்று நிறுவனம், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம் , பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான  நிறுவனம்  என்பன  நிறுவப்படும்.

அரச மற்றும்  அரசாங்கக் கொள்கைப் பல்கலைக்கழகம், விவசாய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான  பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்  என்பனவும் நிறுவவுதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு , பாலின சமத்துவச் சட்டம், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், காலநிலை மாற்றம்  தொடர்பான  சட்டம், சமூக நீதிக்கான ஆணைக்குழுச்  சட்டம், காடுகளை மீள உருவாக்கல்   மற்றும் விருட்சப் பாதுகாப்புச்  சட்டம்  என்பனவும்  அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மகாவலி கங்கை, சிங்கராஜ வனம் , சிவனொலிபாத பிரதேசம், ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ், ஆதாம் பாலம் போன்ற இயற்கை வளங்களின்  பாதுகாப்பிற்காக புதிய சட்டம்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடல் வள ஆய்வு மற்றும் முகாமைத்துவம்  தொடர்பில்  புதிய சட்டங்கள் மற்றும் முதுராஜவெல பாதுகாப்பு சட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதில் 75 நகர்ப்புற காடுகளின் திட்டம் மற்றும் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொழும்பில்  1996 வீடுகள் கட்டும் திட்டம்  என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதோடு  தேசிய இளைஞர் தளம் உட்பட பல  வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

https://www.virakesari.lk/article/145615

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை பங்களாதேசிடம்  பட்ட கடன் 200 மில்லியனுக்கு பல்லுக்காட்டி 6 மாதம் தவணை கேட்டிருக்கினம்...

தமிழிலை தேசிய கீதம் பாடவோ அல்லது கடைசியாக சம்பந்து அய்யாவிடம் கொடி கொடுத்து அசைக்கவோ இந்த கடன் பட்ட ஏற்பாடு...எதுக்கும் பெப்ருவரி4 முதல் 11வரை வெயிற் பண்ணுவம்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட  முத்திரை ,சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க ,சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர பாகிஸ்தானின் முதல் பிரதமர்  முஹம்மது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்களை உள்ளடக்கிய அரிய வகை விசேட  நினைவு முத்திரையையும்  வெளியிடப்பட  உள்ளது.

தமிழர் யாரும் இந்த சுதந்திரத்துக்கு உழைக்கவில்லையோ? அவர்களின் படத்தையும் அச்சிடலாமே முத்திரையில். நம்ம ராஜதந்திரிகளுக்கும் அதை கேட்கத்தோன்றவில்லை. அதுதான் தாங்கள் அடிமைகள் என்று ஏற்றுக்கொண்ட பிறகு கேள்வி எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொண்டாட்டம் உண்மையில் தமிழருக்கு மட்டுமல்ல, பார்க்கப்போனால் சிங்களவர்களுக்கும் கூடத்தான் அவசியமா என்பது அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். அரசியல் வாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் வேண்டுமானால் இந்த நாளை  ஒரு களியாட்ட நிகழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தேவை இருக்கலாம் ஆனால் ஒரு பாமர  இலங்கையனுக்கு இந்த நிகழ்வு ஆண்டாண்டு காலத்துக்கு தனது மூதாதையர்கள் ஒரு காலத்தில் வெள்ளையனுக்கு அடிமையாக இருந்ததை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒரு நாளாகும். 

அடிமைப்பட்டிருந்த தாய்நாட்டை எஜமானர்களிடமிருந்து மீட்டுத் தந்த எமது முன்னோர் எவரும் தமது நாட்டு மக்களை சுபீட்சமாகவும் சந்தோசமாகவும் வாழ வைக்கவும்  ஜன நாயக கோட்பாடுகளுடன் பொருளாதார முன்னேற்றம் கண்ட உலக நாடுகள் பலவற்றுடன் புது யுகமொன்றில் சமாந்திரமாக பயணிக்க வேண்டிய தேவையை  இதுவரை உணர்ந்ததாக தெரியவில்லை.

இனி வரும் காலங்களில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு, சமத்துவம்,  தனிமனித சுதந்திரம், அந்தஸ்த்து என்பன உள்ளடங்கிய இலங்கை தேசத்தை கட்டியெழுப்பி புதிய  அரசியல் யாப்பு எழுதும் அந்த தினத்தையே முழு இலங்கை தேசத்துக்கும் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம், தமிழில் உரை - சுரேன் ராகவனின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி

By Digital Desk 5

13 Jan, 2023 | 11:03 AM
image

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கும் தமிழில் ஒருவர் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தமிழில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் விடுத்திருந்தார்.

நான் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமானால்  தமிழில் உரையாற்றுவேன் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/145673

 

  • கருத்துக்கள உறவுகள்

பதவி போகும் முன் ஜனாதிபதியாக கொடியேற்றவும்,ஆடம்பர விழா நடத்தவும் ரணிலுக்கு ஆசையாக்கும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம், தமிழில் உரை - சுரேன் ராகவனின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி

தமிழ்மக்களின் தலையாய பிரச்சனை தீர்த்து வைக்கப்படுகின்றது. :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.