Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!

கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது.

இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்ய துருப்புக்களின் தன்னலமற்ற மற்றும் தைரியமான நடவடிக்கையை பாராட்டினார். இது சோலேடரில் முன்னேற அவர்களுக்கு உதவுவதாக அவர் கூறினார்.

https://athavannews.com/2023/1319927

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், நிலத்தை, வளத்தை மட்டும் குறிவைத்து நடத்தப்படவில்லை. பொதுவான ருஷ்யா இராணுவ கோட்பாடு.

உக்கிரைன் சொல்வதை பார்த்தால் கூட வெளிப்படையாக தெரிகிறது, ரஷ்யா உக்கிரனின் போரிடக் கூடிய மனித வளத்தை, பலத்தை குறிவைத்து இருக்கிறது என்பது.

உக்கிராயினும் அப்படி செஐயா முயற்சிக்கலாம்; 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும்.

என்ன இது? :cool:
நேட்டோ நாடுகள் நித்தா கொள்ளுதா? கமோன்......கமோன் பைடன் சுறுசுறுப்பா இயங்கணும். இப்பிடியே விட்டா புட்டின் ஜேர்மனி இங்கிலாந்து எல்லாத்தையும் புடிச்சுடுவார்.😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன இது? :cool:
நேட்டோ நாடுகள் நித்தா கொள்ளுதா? கமோன்......கமோன் பைடன் சுறுசுறுப்பா இயங்கணும். இப்பிடியே விட்டா புட்டின் ஜேர்மனி இங்கிலாந்து எல்லாத்தையும் புடிச்சுடுவார்.😂

உக்ரேனை அழிப்பது என்று NATO முடிவெடுத்து பல காலமாகிVட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை விலத்திக்கொண்டதுகூட உக்ரேன் யுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்காக என்று கூறப்படுகிறது. 

இதில் வினோதமான விடயம் என்னவென்றால், EU வும் North Americaவும் உக்ரேனுக்கு உதவுவது மனிதாபிமானத்திற்காக என்று எமது வித்துவான்கள் பலர் இன்னமும் நம்புவதுதான். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

நம்ம வீட்டு கதவை தட்டமுன் தடுத்தல் மனிதாபிமானம்??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நம்ம வீட்டு கதவை தட்டமுன் தடுத்தல் மனிதாபிமானம்??

நீங்களும் போய் நின்று தடுத்தால் அது மனிதாபிமானமும் சுயநலமும் கலந்தது. 

ஆனால் முதலில் கல்லைக் கொடுத்து எறியச் சொல்லி, பின்னர் சிறிய கரண்டியைக் கொடுத்து நன்றாக  அடிபடு என்று சொல்லிவிட்ட, பின்னர் சிறிய தடி பெரியதடியாகி தற்போது கொஞ்சம் பெரிய தடியைக் கொடுத்து அடிபடு என்று கூறுவதுடன் பின்னால் நின்று உசுப்பேற்றி விசிலடிப்பதற்குப் பெயர் பச்சைச் சுயநலம். 

உக்ரேனே தான் NATO வின் யுத்தத்தைச் செய்வதாகக் கூறியபின்னரும் தங்கள் அவற்றை மறைக்க நினைப்பது அரசன் கண்களால் பார்க்க முடியாத ஆடையை உடுத்திக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடப்பதைப்போன்றது ஆகும். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

மீண்டும் மேலே நீங்கள் எழுதிய மனிதாபிமானத்தை வாசிக்கவும்

எனக்கு இன்று உங்களால் நேரம் மிச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

மீண்டும் மேலே நீங்கள் எழுதிய மனிதாபிமானத்தை வாசிக்கவும்

எனக்கு இன்று உங்களால் நேரம் மிச்சம் 

நன்றி. 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்ன இது? :cool:
நேட்டோ நாடுகள் நித்தா கொள்ளுதா? கமோன்......கமோன் பைடன் சுறுசுறுப்பா இயங்கணும். இப்பிடியே விட்டா புட்டின் ஜேர்மனி இங்கிலாந்து எல்லாத்தையும் புடிச்சுடுவார்.😂

பயப்படதீர்கள்  உக்ரேன் இராணுவம் விடமாட்டார்கள்....போருக்கு எப்படி இரண்டு பேர் தேவையே...அப்படியே சமாதானத்துக்கும்.  தேவை......அந்த இரண்டு பேர்.  ரஷ்யாவும்  உக்ரேன்  தான்    நோட்டோக்கு அடிபடும் நோக்கமில்லை    மேற்படி இரண்டு நாடுகளும் நன்றாக அடிபட்டு  ....களைத்து.....இந்த அடிபட்டால்....ஒரு பிரயோஜனம் இல்லை என்பதை அனுபவத்தின் அடிப்படையில் உணர்ந்து...போரை நிறுத்தி   ...உளப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.   🤣 புட்டின். ஆயுதம் கேட்கவில்லை கொடுக்காதே என்று தான்  சொல்லுகிறார்.     ....கொடுத்து பழகிய கை எப்படி கொடுக்கமால் இருக்க முடியும் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்ன இது? :cool:
நேட்டோ நாடுகள் நித்தா கொள்ளுதா? கமோன்......கமோன் பைடன் சுறுசுறுப்பா இயங்கணும். இப்பிடியே விட்டா புட்டின் ஜேர்மனி இங்கிலாந்து எல்லாத்தையும் புடிச்சுடுவார்.😂

சின்னவரை @தமிழ் சிறி மிஸ் பண்ணுறியள் போல🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது.

இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும்.

ஆனால், இதை மறுத்துள்ள உக்ரைனிய அதிகாரிகள், சோலேடருக்கான சண்டை இன்னும் நடந்து வருவதாகக் கூறுகின்றனர்.

இந்த நகரம் ஒப்பீட்டளவில் சிறியது, போருக்கு முந்தைய மக்கள் தொகை வெறும் 10,000, மற்றும் அதன் மூலோபாய முக்கியத்துவம் விவாதத்திற்குரியது. ஆனால் ரஷ்யப் படைகள் அதைக் கைப்பற்றியது உறுதியானால், இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

வியாழனன்று 15 குழந்தைகள் உட்பட 559 பொதுமக்கள் சோலேடர் நகரில் தங்கியிருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.
 
https://athavannews.com/2023/1320099

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு முதன்மை ஊடகங்கள், மற்றும் மேற்கு பார்வையுடன் அநேகமாக ஒத்து போகும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் இது ஒன்றும் முக்கியமல்ல, pyric ஆக ருஸ்யா  பிடித்துள்ளது என.

அனால், உக்கிரனுக்கு மேற்கு இராணுவ ஆலோகசர்கல் அவர்களின் வழிகாட்டுதல் (திட்டமிடலில் கூட) உள்ளது என்பது வெளிப்படடை.      
 
  அப்படி முக்கியம் அல்ல ஆயின், உக்கிரைன் ஏன்  இறுதியான 3-4 உக்கிரமான எதிர்த்தாக்குதல் இறுதி கட்டத்தில் செய்தது, அதுவும் இழப்புகளோடு என்பது தெளிவு இல்லாது  உள்ளது. (ஆனால், புவியலை பார்க்கும் போது soledar ருஸ்சியா  கட்டுப்பாட்டில் வந்தால், பாஹ்முட் ஐ ஒப்பீட்டளவில் சிரமம் குறைவாக ருசியா சுற்றிவளைக்கும் வாய்ப்பு கூட; இது காரணமாக இருக்கலாம்). 

அனால், இப்பொது ஓர் செய்தி (உறுதிப்பாடு தெரியவில்லை), soledar க்கு அடிபட்ட wagner (அமைப்பில்  கூலிப்படைதான்; அனால் இப்பொது அது ரஷ்யா வுக்கு ஆகவே அடிபடுகிறது) ரஷ்ய படைகளின் எண்ணிக்கை உகிரினியப்படைகளை விட குறைவு.

ருஷ்யா மரபுவழி இரவுணுவம் அடிபடவில்லை.

இது புதிய திருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kadancha said:

1. இந்த நகரம் டொன்பாசில் இருப்பதால், இதையும் பஹ்மூட்டையும் பிடிப்பதன் மூலம் டொன்பாசை பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ரஸ்ய திட்டம் முன்நகர்கிறது.

2. இந்த பகுதியின் கனிமவள செறிவு

3. ஆறு மாதமாக பின்வாங்கலை மட்டுமே செய்த ரஸ்ய படைகளுக்கு ஒரு உத்வேக வழங்கி.

இவை அனுகூலங்கள். ஆகவே இதை மேற்கு/உக்ரேன் கதையாடல் படி தனியே வெற்று வெற்றி (pyrrhic victory) என கருத முடியாது.

ஆனால் வக்னர் கூலிப்படை, மாலி, சிரியாவிலும் இறங்கி உள்ளது முன்னர்.

அதே போல் உத்தியோக ரஸ்ய ராணுவத்தின் தலைமைக்கும் வாக்னர் தலைமைக்கும் கூட ஆகாது.

ஆகவே இது ரஸ்ய-உக்ரேன் போரில் கொடுக்கும் தாக்கத்தை விட ரஸ்யா உள்ளே நடக்கும் வலு-பிணக்கில் (power struggle) அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

பிகு

வாக்னர் கூலிப்படைதான் ஆனால் அவர்களும் மரபுவழி இராணு உத்திகளையே (ஆடிலெறி, தாங்கி, infantry ) அதிகம் பயன்படுத்துவர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

சின்னவரை @தமிழ் சிறி மிஸ் பண்ணுறியள் போல🤣

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்களுக்கு கிடைத்த
புத்தாண்டு பரிசு தான்… சோலேடர் நகரம். 😂
இனி நான்…. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரத்தின் உப்பை மட்டுமே வாங்குவேன். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, goshan_che said:

சின்னவரை @தமிழ் சிறி மிஸ் பண்ணுறியள் போல🤣

போன இடத்திலை ஏதாவது நல்ல அசம்பாவிதம் நடந்திட்டுதோ எண்டு நினைச்சன்....சாச்சா அப்பிடியொண்டுமில்லை போல கிடக்கு.......😆

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

போன இடத்திலை ஏதாவது நல்ல அசம்பாவிதம் நடந்திட்டுதோ எண்டு நினைச்சன்....சாச்சா அப்பிடியொண்டுமில்லை போல கிடக்கு.......😆

அசம்பாவிதம் நடந்தது - ஆனால் அவருக்கு இல்லையாம்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.