Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

https://athavannews.com/2023/1320215

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் விழாவுக்கு ஜனாதிபதி வருகிறார் என்றார்கள்,
ஆனால் அவரின் கார்… நாக விகாரைக்குள் போகின்றது.
அங்குதானா… பொங்கல் விழா நடக்குது. 😁
தமிழரின் புக்கையையும் சிங்களவன் திருடி விட்டானா… 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சென்ற ஜனாதிபதி மதத்தலைவர்களை சந்தித்தார்

15 Jan, 2023 | 01:54 PM

By Digital Desk 5

15 Jan, 2023 | 01:54 PM
image

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார். 

4__4_.jpg

4__4_.jpg

பலாலி விமான நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை விசேட விமானம் மூலம் வந்த ஜனாதிபதி முன்னதாக நாக விகாரைக்கு சென்று நாக விகாரை விகாராதிபதியை சந்தித்தார். 

4__5_.jpg

4__8_.jpg

அதனை தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயரை , ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பின்னர் நல்லை ஆதீனத்திற்கு சென்று நல்லை ஆதீனத்தை சந்தித்தார். 

4__5_.jpg

4__3_.jpg

4__1_.jpg

 

 

https://www.virakesari.lk/article/145840

 

 

  • கிருபன் changed the title to யாழ் தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பொங்கல் விழாவுக்கு ஜனாதிபதி வருகிறார் என்றார்கள்,
ஆனால் அவரின் கார்… நாக விகாரைக்குள் போகின்றது.
அங்குதானா… பொங்கல் விழா நடக்குது. 😁
தமிழரின் புக்கையையும் சிங்களவன் திருடி விட்டானா… 🤣

நாங்கள் 1ம் வட்டாரம், 3ம் வட்டாரம் என குறுக்கிகொண்டே போகும் போக்காளர்…

சிங்களவர்கள் ….எல்லாரையும் சுவீகரித்து…நீலப்பெருமாளை நீலப்பெருமவாகவும், அழகர்கோனை அழக்கூனாகவும் உள்ளீர்த்து கொள்பவர்கள்.

தமிழகத்து அருகில் நாம் இருந்தும், எங்கோ ஒரிசாவுக்கு மேல் இருந்து வந்த விஜயனின் குடிகள் எப்படி இலங்கை தீவில் 70% ஆனார்கள்? இப்படித்தான்.

மிகவிரைவில் சிங்களவன் தமிழரின் புக்கையை மட்டும் அல்ல, பனங்கொட்டையையும் திருடிவிடுவான். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்: 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில் உறுதி

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

6 நிமிடங்களுக்கு முன்னர்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆனால், அவரது யாழ்ப்பாணப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் போலீசார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

ஜனாதிபதி உரை

யாழ்ப்பாணம் நிகழ்வில் பேசிய ரணில், அனைத்து இன மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து, அனைவரும் ஒன்றாக வாழும் நாடொன்றை கட்டியெழுப்பும் சமூக நியதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும், பொருளாதார செழிப்பை ஏற்படுத்தும் நாடொன்றை கட்டியெழுப்பும் நோக்கில், 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தும் இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்வரும் பிப்ரவரி 8ம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் வாரம் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையிலும், உண்மையை கண்டறியும் வகையிலும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக, புதிய சட்டமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். வடகிற்கு எதிராகவே இந்த சட்டம் கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் ஸ்திர தன்மையை ஏற்படுத்துவதற்காகவே இதனை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல், காணி உரிமை பிரச்சனைகள்...

''13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நான் எதிர்பார்க்கின்றேன். தென் பகுதியிலுள்ள முதலமைச்சர்களும் இதனை கோருகின்றார்கள். அதனால், இது குறித்து கலந்துரையாடல்களை நடத்தி, அதனை அமல்படுத்த எதிர்பார்க்கின்றேன். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் படிப்படியாக அமுல்படுத்துவோம்.

 

முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்னைகள் உள்ளன. இந்த பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சமூக நியதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன். இந்த பிரச்னைகளை கலந்துரையாடி, இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவோம் என கூறிக் கொள்கின்றேன்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். காணி பிரச்னைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், யுத்தக் காலத்தில் தமது பாதுகாப்பு தேவைகளுக்காக 30000 ஏக்கருக்கு மேல் நிலங்களை ராணுவம் தம்வசப்படுத்தியிருந்தது என குறிப்பிடுகின்றார். இந்த நிலையில், தற்போது 3000 ஏக்கர் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு எஞ்சியுள்ள பகுதிகளில் ஒரு தொகுதியை மீள வழங்க ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனை மீள வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களுக்கு மாத்திரமே பிரச்னை கிடையாது என அவர் கூறுகின்றார். இந்த நிலையில், குறிப்பாக மலையக மக்களின் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இரண்டாவது கட்டமாக தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் கிடைக்கும் வகையில், மலையக மக்களையும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்கும் வழங்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். அனைத்து இன மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து, இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போலீஸார் நீர்தாரை பிரயோகம்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த நிலையில், அவரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். தமக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், போராட்ட பேரணிக்கு இடைநடுவில் தடை விதித்த போலீஸார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரின் கோரிக்கையை நிராகரித்து, முன்னோக்கி செல்ல முயற்சித்த நிலையில், போலீஸார் போராட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c1dz7kmy128o

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்: 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில் உறுதி

சமஸ்டி சுயாட்சி என்றது பொய்யா கோபால்.

18 minutes ago, ஏராளன் said:

தமக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், போராட்ட பேரணிக்கு இடைநடுவில் தடை விதித்த போலீஸார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரின் கோரிக்கையை நிராகரித்து, முன்னோக்கி செல்ல முயற்சித்த நிலையில், போலீஸார் போராட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் தமிழர்களுக்கு நல்ல பொங்கல் பரிசு கொடுத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்பவே சொல்லியிருக்கலாமே, ஏன் யாழ்ப்பாணத்தை தெரிந்தெடுத்து வந்து சொன்னார்? சொன்னதை அப்படியே தெற்கிலும் போய்ச் சொல்ல முடியுமா இவரால்? நம்ம சுமந்திரனே கொழும்பில் சொன்ன செய்தியை கனடாவிலோ, யாழ்ப்பாணத்திலோ, இந்தியாவிலோ சொல்ல முடியாமல் வேறேதோ மாற்றி மாற்றி சொல்கிறார், பத்திரிகையாளரை குற்றம் சுமத்துகிறார். இப்படி நேரத்துக்கு நேரம் இடத்துக்குஇடம் மாற்றி மாற்றி பேசுபவர்கள் செயல் பூச்சியமே!

முற்றுந்துறந்த துறவிகள் அனுபவிப்பதோ சுகபோகம்!

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கியதையும் காணவில்லை....புக்கையும். காணவில்லையே.....அதாவது காணொளியில்....புழுகு    பிரமாதம்… 🤣🤣 இந்த ரணிலுக்கு எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கும் ஆற்றல் திறமை .....அறவே இல்லை. நம்ம தமிழ் ஈழத்துக்கு விசா இல்லாமல் அடிக்கடி வருகின்றார்.   😂.  ஒன்றை அமுல் செய்யக்காணவில்லை 13 அமுல் செய்ய போகிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

பொங்கியதையும் காணவில்லை....புக்கையும். காணவில்லையே.....அதாவது காணொளியில்....புழுகு    பிரமாதம்… 🤣🤣 இந்த ரணிலுக்கு எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கும் ஆற்றல் திறமை .....அறவே இல்லை. நம்ம தமிழ் ஈழத்துக்கு விசா இல்லாமல் அடிக்கடி வருகின்றன்.   😂.  ஒன்றை அமுல் செய்யக்காணவில்லை 13 அமுல் செய்ய போகிறார் 

அதே! முறையற்ற விதத்தில் ஜனாதிபதியாக குந்திக்கொண்டு, தேர்தலுக்கு போக அச்சம். எதையும் குழப்பி அலுவல் பாப்பதே வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலும் அதுவுமாய் நரியை கூப்பிட்டு மக்களின்  பண்டிகை மனநிலையை கெடுத்து, மக்கள் கோயிலுக்கும் போகாமல், பொங்கவும் முடியாமல் தெருவில போராடினதுதான் மிச்சம். ஒரு அரசியல்வாதியின் தலையையும் காணேல்ல மக்களோடு மக்களுக்காய் குரல் கொடுக்க. ஒருவர் வேட்டியை சிரைச்சுப்பிடிச்சுக்கொண்டு வால் பிடிக்கிறார், அதில அறிக்கை வேறை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி திட்டம்!

தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பண்டிகையாக இந்த ‘பொங்கல்’ பண்டிகை அமையட்டும்-ஜனாதிபதி

13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களில் முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்று பங்கேற்றார்.

இந்தநிலையில், அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் தீர்வு என்பது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் இந்த கோரிக்கையினை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

அதற்காக 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன்.

அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கும் விரும்புகின்றேன்
கட்டங்கட்டமாக அந்த 13ஆவது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் அந்த காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

https://athavannews.com/2023/1320259

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களில் முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அப்போ சுதந்திர தினத்துக்கு முன் தீர்வு எண்டு அலப்பறை விட்டார்களே அதற்கு என்னாயிற்று?

அதற்கு முதல் தேர்தலில் இவருக்கு வேண்டியது தமிழரின் வாக்குகள். தேர்தலுக்கு முன் எல்லோரும் விடுகிற புழுகுதான் இது. மஹிந்தர் சொன்னவர் தான் தேர்தலில் வென்றால் காட்டுக்கு போய் புலிகளுடன் பேசி பிரச்சனையை தீர்ப்பேன் என்றார், வென்றபின் என்ன நடந்தது? பத்திரிகையாளர் கேட்டபோது என்னை காட்டுக்குப்போய் புலிகளிடம்  சாகவேணும் என்கிறீர்களா என்று கேட்டார். கதிரை ஏறமுதல் ஒன்று ஏறியபின் வேறொன்று மாறிமாறி பேசிக்கொண்டு அனுபவிக்க வேண்டியதுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் - விமல்

By DIGITAL DESK 5

16 JAN, 2023 | 02:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும்.

13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமே தவிர,தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)இடம்பெற்ற அரச பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்துக்கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி,பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் குறுகிய காலத்தில் நாடு இரண்டாக பிளவடையும்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத,சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்த்தும் இன அடிப்படையிலான பிரச்சினை,நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம்  ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச காலநிலை  தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் 2002 ஆம் ஆண்டு முன்வைத்த கொள்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம்,வடக்கிழக்கு மாகாண சபையை தற்காலிக அரசாங்கமாக மாற்றியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக பதவி வகித்த நீங்கள் (ஜனாதிபதி)அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். அதற்கமைய 'ஒஸ்லோ ஒப்பந்தம்'கைச்சாத்திடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்,சர்வதேச பிரிவினைவாத அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதுடன் ஒருசில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விடுதலை புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை விடுதலை செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல்,இராணுவ முகாம் மற்றும் அதனை அண்மித்த காணிகளை விடுவித்தல்,மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான 'எல்' வலய காணிகளை பிரதேச செயலகம் ஊடாக விடுவித்தல்,காணி கொள்கையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்கும் திட்டத்தை வகுத்தல்,ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.காணாமல் போனார் அலுவலகம் சட்டத்தின் ஊடாக இயற்றப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சர்வதேச தலையீடு தென்னாப்பிரிக்காவில் வெளிப்படையாக காணப்படுவதை அறிய முடிகிறது.

2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களை திசைத்திருப்பி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கீன்றீர்கள் என்பதை நன்கு அறிவோம். பிரிவினைவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்து வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 10 பிரதான யோசனைகளை முன்வைக்கிறோம்.

இராச்சியத்தின் நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரிவுப்படுத்தி அதற்கு இணையாக மக்கள் சபை என்பததொன்றை உருவாக்கி அரச செயற்பாடுகளில் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை வினைத்திறனான முறையில் செயற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளை உள்ளடக்கிய வகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் உள்ளூர் அதிகார சபைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தின் பிரதி அமைச்சரின் அதிகாரத்துடன் குறைந்தளவிலான அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்க கூடாது.

நாட்டின் சகல இனங்களின் தேசியத்துவம் மதிக்கப்படுவதுடன்,மதம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பாடுகள் காண்பிக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல்,ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

https://www.virakesari.lk/article/145913

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மட்டும் நாடு  ஒன்றுபட்டு இருக்கிறது என்கிற கனவிலா இந்தக்கோமாளி இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2023 at 16:22, ஏராளன் said:

''13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நான் எதிர்பார்க்கின்றேன். தென் பகுதியிலுள்ள முதலமைச்சர்களும் இதனை கோருகின்றார்கள். அதனால், இது குறித்து கலந்துரையாடல்களை நடத்தி, அதனை அமல்படுத்த எதிர்பார்க்கின்றேன். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் படிப்படியாக அமுல்படுத்துவோம்.

அப்போ 2022 டிசம்பருக்கு முதல் தீர்வு.அடுத்த சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வு என்று சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்!
தமிழத்தேசியக்கூட்டமைப்பை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியது உலகை ஏமாற்றும் நாடகம்தானே. கூட்டமைப்பினரும் அதை கண்டு கொள்ளாதது மாதிரி தேர்வேலைகளில் பிசியாகி விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.