Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!

4RTWLRQ3ANCN7NKXYZUEKQ4IQQ-127-720x375.j

கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்களுடன் புடினின் தொடர்புகளை ஆராயும் பிபிசி ஆவணப்படத்தில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, கிரெம்ளினுடனான அசாதாரண தொலைபேசி அழைப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று புடின் தன்னிடம் கூறியதாக ஜோன்சன் கூறினார்.

முன்னாள் பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, அழைப்பின் போது போர் ஒரு முழு பேரழிவாக இருக்கும் என்று முன்னாள் எச்சரித்ததை அடுத்து புட்டினின் கருத்து வந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுப்பது மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் அதிக நேட்டோ துருப்புக்களுக்கு வழிவகுக்கும் என்று ஜோன்சன் புடினை எச்சரித்தார்.

உக்ரைன், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) எதிர்காலத்திற்கு சேராது என்று புடினிடம் கூறி ரஷ்ய இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் ஜோன்சன் முயன்றார்.

புடின், ‘நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், ஒரு ஏவுகணை மூலம் அதுவும் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்’ என கூறியதாக ஜோன்சன் கூறினார்.

https://athavannews.com/2023/1322388

  • கருத்துக்கள உறவுகள்

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

பதிவதற்கு நேரம் இல்லை என்றாலும், இது சொல்லப்படவேண்டியது. 

முதலில், போரிஸ் ஜோன்சன் ஐ ஏவுகணை தாக்குதல் மூலம்  தனிப்பட்ட முறையில் கொல்லப்படும்   எச்சரிக்கை என்றே செய்திகள் வந்தன.

இப்பொது, 1 நிமிட ஏவுகணை பொதுவான  தாக்குதல் என்று செய்திகள் வருகிறது, ருசியா தரப்பு மறுத்து விளக்கம் அளித்த பின்.

அனால், இவை பொதுவாக எந்த ராஜசதந்திர மட்டத்தில் பாவிக்கப்படும் மொழிகள் என்பது இங்கேப பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

இத்தகைய நிலைமையில், uk  வழமையான அச்சுறுத்தல் நாம் SAS ஐ உங்களுக்கு அனுப்புவோம் என்பது.

அமெரிக்காவின் ராஜதந்திரிகள், உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள், உங்கள் சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்று  ஏனைய தரப்பின் ராஜதந்திரிகளை தனிப்பட்ட அடிப்படையில் அச்சுறுத்துவது தொடக்கி, உங்களின் ஒரு வேளை  உணவை எப்படி பெறுவீர்கள் என்பதில் தொடர்ந்து (ருசியாவுக்கு பொருளாதரத்தை ஒரே இரவில் உருக / குளிர வைக்கும் செயற்பாடு) ,    விமானந்தாங்கி கப்பல் (மிதக்கும் படைத்தளம்), மற்றைய நாடுகளில் அமெரிக்கா செய்தவை போன்றவையும் பாவிக்கப்பட்டு உள்ளது.

 மற்ற நாடுகளிடம் இது போன்ற பலம் இல்லாத வரைக்கும், இத்தகைய ராஜதந்திர மொழிகள் மேற்கிற்கு வசதியாக, உவப்பாக இருந்தது. மற்ற நாடுகள், பலத்தை கொண்டுள்ள போது , அத்தகைய மொழி செந்தணலான  நாரசமாக   காதுக்கும், மனதுக்கும் இருக்கிறது. 

(Huvawei தடையை ஐரோப்பிய நாடுகள் போடுவதற்கு, அமெரிக்கா அதட்டலுடன், நேட்டோ பாதுகாப்பய் பணயம் வைக்கும் பேரம்)  

ஆகவே, இவை ஒன்றும் புதிதல்ல. ஜோன்சன் ஒன்றும் அறியாதவர் போல சொல்வது தான் செய்தியாக உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

பொரிஸ் என்ன சொன்னார்?
1.
 He told the makers of Putin vs the West that he did not regard Putin’s comments as a threat.

2. “He sort of threatened me at one point and said, ‘Boris, I don’t want to hurt you, but with a missile, it would only take a minute’, or something like that,” Johnson said.

“I think from the very relaxed tone that he was taking, the sort of air of detachment that he seemed to have, he was just playing along with my attempts to get him to negotiate.”

பதிலாக பெஸ்கோவ் என்ன சொன்னார்?

3. Peskov said: “There were no threats of missiles. It is either a deliberate lie – so you have to ask Mr Johnson why he chose to put it that way – or it was an unconscious lie and he did not in fact understand what Putin was talking to him about.”

Peskov said Putin had explained to Johnson how, if Ukraine joined the Nato alliance, US or Nato missiles placed near Russia’s borders would mean any missile could reach Moscow in minutes, and suggested that there may have been a misunderstanding.

https://amp.theguardian.com/uk-news/2023/jan/30/boris-johnson-says-putin-claimed-he-could-send-missile-to-hit-uk-in-a-minute

பிகு

# lost in translation 

பெஸ்கோவ் சொன்னது போல, புட்டின் சொன்னதை மொழிமாற்றத்தினூடு கேட்ட ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டுள்ளார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஆனால் ஜோன்சன் கூட இதை ஒரு மிரட்டலாக அப்போதும், எப்போதும் கருதவில்லை என்பதை கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

On 31/1/2023 at 13:18, nunavilan said:

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

பதவியில் இருக்கும் போது வெளிப்படுத்துவது, மற்ற தரப்பை முற்றாக மூடிவிடும் பிரித்தானிய அரசிடம் இருந்து. 

இங்கே, (ஜோன்சன் (அல்லது எந்த மட்டத்தில்  உள்ள எந்த நாட்டின் ராஜதந்திரியோ, அதுவும் ஜோன்ஸனின் மட்டத்தில் உள்ள ராஜதந்திரி - அன்று ஜோன்ஸனின் நிலை பிரித்தானியாவின் எவரும் நிகரில்லாத, அதி உயர் ராஜதந்திரி) பொதுவாக எதிர்கொள்ளப்படலாம்  என்று நடந்த உரையாடலை )  ஏன் வெளிப்படுத்தி இருக்க  வேண்டும், அதுவும் இப்பொது, என்பதே நான் கேட்பது?

குறிப்பாக, ஜோன்சனின்  வெளிப்படுத்தல், செலன்ஸ்கியை சந்தித்த பின் வருவது.

மற்றும், உக்கிரேனிய படைபொறுப்பாளரின், ஓராண்டு முடிவில் , ருசியா நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்பும்.

இவை காரணகாரியமின்றி, எனது சதிக்கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டது என்றால், அப்படியே இருக்கட்டும்.

அனால், ஜோன்ஸனின் முனைப்பு, நேட்டோவை இழுப்பது, இறக்குவததற்கான, பொதுமக்கள் அபிப்பிராயம், அரசியல் அபிப்பிராயம் ... சிந்தனைவாதம் போன்றவற்றுக்கு  முதல் புகை.

இதை ஜோன்சன் தனித்து செய்கிறாரா அல்லது வேர் எவர்களுடனும் சேர்ந்து செய்கிறாரா என்பது தெளிவில்லாதது ஆயினும், தனித்து செய்யும் சாத்திய கூறு மிகவும் குறைவு. 

2007 இல் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த Nicolas Sarkozy யை புதின் பரிசில் சந்தித்தார். செய்தியாளர்க்களைச் சந்திப்பதற்கு முன் இருவரும் மூடிய அறையில் என்ன பேசுவதென்று ஆலோசனை செய்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். இருவரும் அறையை விட்டு வரும்போது சார்க்கோசி தடுமாற்றத்தோடு வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஏதோ உளறியுள்ளார். இருவரும் அறையில் இருந்து வொட்கா அருந்தியுள்ளனர் சார்க்கோசிக்குக் கொஞ்சம் வெறு அதிகமாகிவிட்டது என்றே அப்போது பேசப்பட்டது.

சார்கோசி பதவியை விட்டு விலகிய பின்னர்தான் உண்மை வெளிவர ஆரம்பித்தது. இருவரும் அறையில் பேசும்போது சார்க்கோசி பேசவேண்டிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போயுள்ளார். புதின் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக, நீ பேசி முடித்து விட்டாயா ? பிரான்ஸ் ஒரு சிறு துரும்பு. ரஸ்யா மிகப் பெரியது. உன்னை நசுக்கி விடுவேன் என்று கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சார்க்கோசி மிரண்டு விட்டார்.

தன்னைச் சுற்றி உள்ள நாடுகளை நட்புடன் அணைக்கத் தெரியாத இராஜதந்திரம் இல்லாத புதின் தனது சர்வாதிகாரத்துக்காக ரஸ்யாவின் பலத்தைத் துஸ்பிரயோகம் செய்கிறார்.

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 13:18, nunavilan said:

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது சரியான திசையில் இருக்கிறது (அதாவது  நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு), ஜோன்சன் போர்ர்விமான்களை வழங்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்து  உள்ளார். 

ஜோன்ஸோனுக்கு உழைப்பு, பணம் போன்ற வேறு நன்மைகள் இருக்கலாம்; ஆனால்  இதில் குறிப்பான நோக்கம் (அதாவது  நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு) இருக்கிறது என்பது.

UK, இதுவரையில், மறுத்துவிட்டது (மறுத்தாலும் ஜெர்மனி போல அறுதியான மறுத்தல் அல்ல என்பதும்   நோக்கப்பட வேண்டும். அல்லது, எதிர்மறை ராஜதந்திரத்தை UK பவிக்கிறது  என்பதற்க்கும் இடம் இருக்கிறது - அதாவது போர்விமானம் கொடுப்பது தாங்கி கொடுப்பதை விட இலகு - அதை மறுப்பதன் மூலம் UK, உக்கிரைன் அதன் தூரத்தை அறியவேண்டும், அதுபோல UK யும் எவ்வளவுபித்த தூரம்  இறங்கும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் உக்கிரனுக்கு அறிவிக்கிறது என்பது ). 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/2/2023 at 19:21, இணையவன் said:

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

காகம் கரிச்சட்டியை பார்த்து சிரிச்சுதாம்...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/2/2023 at 19:40, goshan_che said:

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

மாண்புமிகு புட்டின் ஐயா 😍🙏🏼 சொல்லியிருந்தாலும்  நாட்டுக்கு ஆபத்தான விசயத்தை உடனை சொல்லாமல்  இப்ப கம்பு சுத்தினால் என்ன அர்த்தம்???? :cool:

ஜோஞ்சனுக்கு காசாம் கட்டுரையாம் நேரமில்லையாம்.....இளம் பெட்டையாய் தேடி கலியாணம் கட்ட நேரமிருக்கு..அவங்கள்  ஒரு தரம் கம்பு சுத்தினால் தம்பியர் நூறு தரம் கம்பு சுத்துவாராம்.....:491: :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜோன்சன் அடிப்படையில் ஒரு வாடகை மேளம்.

யார் காசு கொடுத்தாலும், எங்கே தான் பதவியை அடையலாம் என்றாலும் அங்கே சமா வைப்பார்.

பிரித்தானிய பிரதமராக இருந்த போது - சிலதை அதிகாரிகள் சொல்லவிடாமல் கட்டுபடுத்தி இருப்பார்கள்.

இந்த விடயத்தில் நான் உண்மையில், பெஸ்கோ சொன்னதுடன் ரஸ்யாவுடன் உடன்படுகிறேன்.

எனது பார்வையில்,

புட்டின் இப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. 

பெஸ்கோ சொல்வதை போல் ஒன்றில் புட்டின் சொன்னதை ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டார், அல்லது கவனத்தை ஈர்பதற்க்காக வேணும் எண்டே பொய் சொல்கிறார்.

பொரிசை பொறுத்தவரை இரண்டுக்கும் 50:50 வாய்ப்பு உண்டு.

பிகு

பொரிஸ் தன்னை சர்சிலாக கற்பனை செய்பவர். சேர்சிலை போல தானும் 2ம் இனிங்ஸ் ஆடலாம் என கனவில் மிதப்பவர். 2ம் இனிங்ஸ்சுக்காகன இலகு வழியாக உக்ரேனை எடுத்துள்ளார்.

கிட்டதட்ட உக்ரேனின் தூதர் போலவே அண்மைய 2 நாளில் ஆளின் பேச்சு.

 இடையில் கொஞ்சம் காசும் பார்க்கலாம், நேட்டோ பதவி கிடைத்தால் சந்தோசாம்.

ஆனால் பொரிஸ் போல ஒரு வெறும் பயலை நேட்டோ எடுக்கும் என நான் நினைக்கவில்லை.

பொரிஸ் சொன்னதுக்கு இலகுவில் உணர்சிவசபடும் ஊடகங்கள்தான் (sensationalist media) அதிகம் எதிர்வினை காட்டின. 

ரஸ்யா, அமெரிக்கா, யூகே அரசுகள் பெரிதாக எதிர்வினை காட்டவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 13:40, goshan_che said:

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

 Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

 Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காரணம், நேட்டோ / மேற்கில் ஒரு பகுதி நேரடியாக இறங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறது,  இந்த நிலைப்பாடு உத்தியோகபூர்வம் இல்லாது இருப்பினும். 
      
தாங்கிகளும் முதலில் தாண்டப்படக்கூடாத செங்கோடு என்றே நேட்டோ சொன்னது; அதை அதுவாகவே பச்சை கோடாக  மாற்றி தாண்டியும் உள்ளது.

இது போலவே, போர்விமானம், மற்றும் நேரடி இறக்கத்தை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

பிரான்ஸ்; uk இன் போர்விமான மறுப்பு நேரடி அறுதியாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இது சிந்திக்க வேண்டிய கோணம்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

எங்கடை பேனைக்காரர் இங்கிலாந்திலை பிறந்திருந்தால் அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் அவருக்குத்தான் சொந்தமாகியிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

அவர் வல்லவனுக்கும் வல்லவன் எல்லோ...:grinning_face_with_sweat:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

எங்கடை பேனைக்காரர் இங்கிலாந்திலை பிறந்திருந்தால் அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் அவருக்குத்தான் சொந்தமாகியிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

அவர் வல்லவனுக்கும் வல்லவன் எல்லோ...:grinning_face_with_sweat:

உங்களுக்கு விளங்குது எசமான்…

இந்த ஊருக்கு விளங்கலியே…🤣

பேனைகாரார் = கருணாநிதிதானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.

ஜோன்சன் வாங்கிய 750 ஆயிரம் பவுண்ஸ்  எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
பவுண்ஸ் நல்லாக தானே இருக்கு 😄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜோன்சன் வாங்கிய 750 ஆயிரம் பவுண்ஸ்  எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
பவுண்ஸ் நல்லாக தானே இருக்கு 😄

ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்….

#பிரெக்சிற் அனுகூலங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் மிரட்டினார் பழிச்சார் என்று நேசறிப் பிள்ளைகள் போல சொல்ல வேண்டியதில்லையே. பதிலுக்கு இவரும் புட்டினைப் பார்த்து.. நானும் ஏவுகணை அனுப்புவன் என்று மிரட்டிட்டு போனை வைக்க வேண்டியது தானே.

எல்லாம்.. ஜோன்சனுக்கு கட்டின கோவணமும் கிழிஞ்சு தொங்கும் நிலையில்.. தன்னை முன்னிலைப்படுத்த ஒரு செய்தி தேவை. அதுக்குத்தான் இது இப்ப. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்….

#பிரெக்சிற் அனுகூலங்கள்🤣

வாக்களித்த குடிமக்களின் தவறான முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

தனது மத்யத்தஸ்த்தில் உக்ரேன், ரஸ்யா போரை நிறுத்த வெளிக்கிட்டபோதும், மேற்கு அதை தடுத்தது என்கிறார் முன்னைநாள் இஸ்ரேலிய பிரதமர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 13:21, இணையவன் said:

2007 இல் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த Nicolas Sarkozy யை புதின் பரிசில் சந்தித்தார். செய்தியாளர்க்களைச் சந்திப்பதற்கு முன் இருவரும் மூடிய அறையில் என்ன பேசுவதென்று ஆலோசனை செய்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். இருவரும் அறையை விட்டு வரும்போது சார்க்கோசி தடுமாற்றத்தோடு வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஏதோ உளறியுள்ளார். இருவரும் அறையில் இருந்து வொட்கா அருந்தியுள்ளனர் சார்க்கோசிக்குக் கொஞ்சம் வெறு அதிகமாகிவிட்டது என்றே அப்போது பேசப்பட்டது.

சார்கோசி பதவியை விட்டு விலகிய பின்னர்தான் உண்மை வெளிவர ஆரம்பித்தது. இருவரும் அறையில் பேசும்போது சார்க்கோசி பேசவேண்டிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போயுள்ளார். புதின் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக, நீ பேசி முடித்து விட்டாயா ? பிரான்ஸ் ஒரு சிறு துரும்பு. ரஸ்யா மிகப் பெரியது. உன்னை நசுக்கி விடுவேன் என்று கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சார்க்கோசி மிரண்டு விட்டார்.

தன்னைச் சுற்றி உள்ள நாடுகளை நட்புடன் அணைக்கத் தெரியாத இராஜதந்திரம் இல்லாத புதின் தனது சர்வாதிகாரத்துக்காக ரஸ்யாவின் பலத்தைத் துஸ்பிரயோகம் செய்கிறார்.

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

உங்கள் கூற்றுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

தனது மத்யத்தஸ்த்தில் உக்ரேன், ரஸ்யா போரை நிறுத்த வெளிக்கிட்டபோதும், மேற்கு அதை தடுத்தது என்கிறார் முன்னைநாள் இஸ்ரேலிய பிரதமர்.

குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை அமோகமாக போகும் போது போரை நிறுத்த முன்வர மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை அமோகமாக போகும் போது போரை நிறுத்த முன்வர மாட்டார்கள்.

ஓம் ஆயுத விற்பனை மட்டும் அல்ல,  எல்லாவகையிலும் லாபம் வருகிறது. அரசியல், பொருளாதார, இராணுவ, கேந்திர, ராஜதந்திர துறைகளிலும் கொள்ளை லாபம்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.