Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரவாத பௌத்தத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல அரச அனுசரணை - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

"சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

329931939_3307403922832141_6911138855361

"சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்மசதகனீப்பகரண’ வெளியிடப்பட்டுள்ளது.

07 நூல்களைக் கொண்ட “அபிதர்ம பிடகத்தின்” முதல் நூல் இதுவாகும்.

330506069_5874722645946192_3749778760174

இதன் முதற் பிரதியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அத்துடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட மஜ்ஜிம நிகாய 3, சன்யுக்த நிகாய 1, அங்குத்தர நிகாய 3, குத்தக நிகாய 1, ஜாதக பாலி 1 ஆகிய ஐந்து நூல்களும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

330400951_1251661572226419_6970148874551

சிங்கள மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மேற்படி நூல்களை ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ராஜகீய பண்டித வண. திருகோணமலை ஆனந்த தேரர், வண. மெதஉயங்கொட விஜயகித்தி தேரர், கலாநிதி வண. பலாங்கொட சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேரவாத பௌத்தத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல அரச அனுசரணை - ஜனாதிபதி | Virakesari.lk

இதுக்கும் தேரவாதத்துக்கும் ஏதும் தொடர்புகள் உள்ளனவா ஐயன்களே ?

531394.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இதுக்கும் தேரவாதத்துக்கும் ஏதும் தொடர்புகள் உள்ளனவா ஐயன்களே ?

531394.jpg

தேர வாத பெளத்தத்தை இழிவாக பேசி தேரை யுடன் ஒப்பிட்டமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
சிட்னி புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு டொலர்.. ரணிலின் சொத்தை வித்தாலும் காணாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

அவ்வாறு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியுமெனவும் தெரிவித்தார்

இதனால் என்ன பயன் அதிகரிக்குமென ரணிலும் இவர்களும்  எதிர்பார்க்கிறார்கள்? புத்தரின் உருவப்படத்தை சட்டையில் பதித்த, உடலில் பச்சை குத்தியிருந்த உல்லாசப்பயணிகளை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தார்கள், ஏதோ புத்தன் தங்களுக்கு மட்டுந்தான் சொந்தம் என்றும் அவர் சொல்லாத போதனை, செய்யாத அக்கிரமங்களை வரிந்து கட்டிக்கொண்டு நாட்டை எரித்துக்கொண்டு, இரத்த ஆறில்நீந்திக்கொண்டு பேரினவாத பவுத்ததை நல்லாய் விதையுங்கோ. உங்களின் எதிர்பார்ப்பு பல மொழிகளில் மொழிபெயர்த்தால் பலநாடுகள் அழியும் உங்களை கேள்விகேட்கமாட்டார்கள் என, அவர்கள் யாரும் உங்களைப்போல் இந்த அராஜக நூலை எரிக்கப்போவதில்லை, இதை எதிர்த்து கேள்விகேட்காமல் உங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு பிச்சைப்பாத்திரம் ஏந்தும் ரணிலும் பரிகாசத்துக்குரியவரே! அவர் போட்டிருக்கும்  இரட்டை  வேடத்தை இங்கே மறைக்க முடியவில்லை அவரால். தன் பெயரால் நடக்கும் உங்களின் அக்கிரமம் தாங்காமல் அந்தப் புத்தனே வந்து நாட்டை அழிக்கவும் கூடும்.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தரின் பௌத்த போதனை என்பது உலகம் முழுவதும் வேரூன்றி விட்டது. வெள்ளை இனத்து பெரிய பிரமுகர்களும் அந்த போதனைகளை பின் பற்றுகின்றார்கள்.பௌத்த மதத்தை கலவரமில்லாத ஆன்மீகமாகவே  பார்க்கின்றார்கள். மன அமைதிக்கும் புத்தரின் தியான  படங்களை உபயோகிக்கின்றார்கள்.

இதனால் சிங்கள பிக்குகள் செய்யும் அஜாரகங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விடுகின்றன.

சைவத்தை அழித்த இந்துமதம் அப்படியா?

சாதி கொலைகள்,அரச சட்டங்கள் மூலம் சாதி முன்னெடுப்புகள், சாதி தீண்டாமைகள், சாதி கட்சிகள் என இருக்கும் போது எவன் இந்து ஆன்மீகத்தை பின்பற்றுவான்?

சைவம் சாக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரியதல்ல, இந்து மதத்தில் உதித்த சித்தாத்தானே பின்னாளில் அரச சுகபோகத்தை துறந்து  புத்தன் ஆனான். அவன் கடவுளல்ல, முக்தியடைந்த மனிதன் முனிவன் என்றுஞ்சொல்லலாம் . திரிந்த மதத்தை,  வந்தேறிய இனத்தை வைத்து எல்லாவற்றையும் தாமதாக்கிக்கொள்ளும் அடாவடித்தனம் உள்ளது சிங்கள பவுத்தம். அதை யாரும் விரும்பப்போவதில்லை. பவுத்தத்துக்கும், பவுத்த போதனைகளுக்கும், சிங்கள பவுத்தத்துக்கும் எந்தச்சம்பந்தமுமில்லை! ஓடும் குருதியிலும், வடிந்தொழுகும் கண்ணீரிலும் தேடிப்பாத்தாலும் சாதி தெரிவதுண்டோ எனக்கூறி தீண்டாமையை வெறுத்தவர் புத்தன். ஆனால் இவர்கள் சிறுபான்மையினரின் கண்ணீரில், குருதியில்,  உழைப்பில், உரிமையில், நிலத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களை அடக்கியாள நினைக்கிறார்கள், இவர்களுக்கும் அந்தப் புத்தனுக்கும் என்ன சம்பந்தம்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.