Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                    தையல்கடை.

  தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1).

 

                                                                                            சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு.  சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை  தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்"  சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று.

                                                                    அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும்.

                                                                        ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர  பர  வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன்  நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது.  நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே.

                                                                        மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் "  ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள்  எல்லாரையும்  அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க....

 

                                                                        இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே !  உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக  உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........!

                                                                                              அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து  வீட்டிற்குள் வருகிறார்.

இன்னும் தைப்பார்கள்........!   🥻

  • Like 14
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

திரில் ஆன கதை போல இருக்கு.... 😎
மொத்தமாக வந்த சீட்டுக்காசை, ஏழரைச் சனியன்...   
கொண்டு போகப் போகுது போலை கிடக்கு. 
தொடருங்கள் சுவியர், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள்.

என்னையா போட்டு குழப்புகிறீர்களே?

2 hours ago, suvy said:

சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.

அப்படி என்ன தான் A ஜோக்கு சொல்லியிருப்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா போட்டு குழப்புகிறீர்களே?

நீங்கள் மீண்டும் ஒரு முறை கதையை நன்றாக ஊன்றிக்  கவனித்து வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிண்றீர்கள்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு.

நானும் ஒருமுறை (20 வருடம் முன்பு)சீட்டு கட்டினேன்.

சீட்டு அன்று மறந்திடால் அந்த நேரத்துக்கு போன் அடித்து ஏத்திவிட்டுடுவேன்.

ஒருதடவை கூட நேரில் போனதில்லை.

2 minutes ago, suvy said:

நீங்கள் மீண்டும் ஒரு முறை கதையை நன்றாக ஊன்றிக்  கவனித்து வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிண்றீர்கள்......!  😂

ஒரு வீட்டுகாரர்.

ஒரு கணவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் ஒருமுறை (20 வருடம் முன்பு)சீட்டு கட்டினேன்.

சீட்டு அன்று மறந்திடால் அந்த நேரத்துக்கு போன் அடித்து ஏத்திவிட்டுடுவேன்.

ஒருதடவை கூட நேரில் போனதில்லை.

ஒரு வீட்டுகாரர்.

ஒரு கணவர்.

ஆஹா.....கற்பூரம் ஐயா நீங்கள் .....!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை வெகு சுவாரசியமாக போகிறது. கும்பராசிக்கு சுக்கிர பெயர்ச்சி 18 ம் திகதி வரைக்கும் நல்லமில்லையாம்🤣.

நானும் முந்தி சீட்டு எடுத்தால் நல்லா கழிவு எடுக்க விட்டு கடைசியாய்தான் எடுப்பேன். ஆனால் ஏத்தி விடும் ரிஸ்க் எடுத்ததில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்"  கையோடு கூடி வந்துள்ளீர்கள்.   தொடருங்கள் வேடிக்கையை  வாசிப்போம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு.

8 hours ago, suvy said:

சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.

8 hours ago, suvy said:

இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார்.

9 hours ago, suvy said:

அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து  வீட்டிற்குள் வருகிறார்.

இன்னும் தைப்பார்கள்........!   🥻

நம்ம தல லேசில கதை சொல்லாது. கதை சொல்ல வெளிக்கிட்டால் ஒரே அதிரடிதான். :beaming_face_with_smiling_eyes:

சமூகக்கதை பிரமாதம் தொடருங்கள். :red_heart:

நாயகன் மீண்டும் வாறார் :smiling_face_with_heart_eyes:
நம்ம தையல் நாயகி :cool:

 

  • Like 1
Link to comment
Share on other sites

தையல் கதை நகைச்சுவையோடு சுப்பராக போகிறது. லா சப்பலில் கடை போடுறாவோ இல்லையோ என்பதை பாத சனி முடிவெடுக்கும் போல.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்?

சரி…தொடருங்கள், சுவியர்…!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(2).

 

                                  கதவைத் திறந்து கொண்டு வரும்போதே இவங்கள் துலைவராலை மனுஷர் நிம்மதியா ஒரு வேலை வெட்டிக்கு போய்  வர ஏலாமல்    இருக்கு ......!

--- ஏனப்பா வரும்போதே புறுபுறுத்துக் கொண்டு வாறியல் .....

---அதுக்கில்லையப்பா வருமானம் வருதோ இல்லையோ மாசக்கடைசியில வீட்டுக்காரர் வாடைக்காசுக்கும், மெட்ரொக்காரரின்  வேலைநிறுத்தமும் வந்திடும். நான் இரண்டு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருப்பன் இவங்களால சனத்துக்குள்  இடிபட்டு நெரிபட்டு இப்ப வாறன் வேர்த்தொழுக .......உள்ளே போய் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்தண்ணீர்ப் போத்தலை எடுத்து குடித்து விட்டு ஒரு பியர் டின்னையும் எடுத்துக் கொண்டு மேசையில் இருந்த வறுத்த கடலை, கசுகொட்டை, பாதாம் பைக்கட்டையும்  எடுத்துக் கொண்டு வந்து சுமதியின் அருகில் அமர்கிறார். சுமதியும் எழுந்துபோய் காற்றாடி பொத்தானை அழுத்தி விட்டு வந்து அவரருகில் மார்பு உரச நெருக்கமாக உட்காருகிறாள். நல்ல காற்றும் அவளின் அருகாமையும் சுரேந்தரின் மன இறுக்கத்தை தளர்த்தி இதமாக்குகின்றது.

                                                       ---இஞ்சயப்பா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டே ......ம்....சொல்லு......

சேகரிட்ட நாங்கள் போட்ட சீட்டு இந்தமுறை எங்களுக்குத்தான் விழுந்திருக்கு. வழக்கமா சீட்டு ஏத்தி விடுகிற ஆட்கள் இந்த ஸ்ட்ரைக்கால வர பிந்திப் போட்டினம். கழிவு குறைவென்ற படியால் நான் எடுத்துப் போட்டன். வார கிழமை சேகர் காசை கொண்டுவந்து தாறனெண்டு சொன்னவர்.

---அப்படியே சங்கதி....இந்த ஸ்ட்ரைக்கால நல்லதும் நடந்திருக்கு எண்டு சொல்லுறாய். நல்லது....நீங்கள்தான் உடுப்புகள் தைத்து கஷ்டப்பட்டு  சீட்டு போட்டனீங்கள், வாங்கி பத்திரமாய் வைத்திருங்கோ.

--- நானும் முதல் அப்படிதானப்பா நினைச்சனான், பிறகுதான் யோசித்தன், நாங்கள் ஏன் "லா சப்பலில்" ஒரு இடம் எடுத்து தையல் கடை போடக்கூடாது.

சுரேந்தர் இடைமறித்து உது  உமக்கு இப்ப தேவையோ, ஏற்கனவே நீங்கள் அங்க இங்க என்று அலைந்து திரிந்து செய்யும் வேலை சிரமமானது,......

சுமதியும் கொஞ்சம் பொறப்பா நான் சொல்லுறதையும் கேளுங்கோவன். அதுக்குள்ளே "ஆடறுக்கமுதல் விதைக்கு விலை பேசுறியள் "

--- சரி சொல்லும், அவளும் (கிளாசில் பியரை நிரப்பி விட்டு பருப்பு பக்கட்டையும் பிரித்து வைக்கிறாள்).

ம்...தங்கட காரியம் நடக்க வேணுமென்றால் எல்லாம் செய்வினம்.மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான், சொல்லவில்லை

--- என்னிடம் இப்ப தைக்க வாற ஆட்கள் கனபேர் வருகினம்.கடை திறந்தால் இரண்டு பேரை கூட வைத்தும் வேலை செய்யலாம். அதுக்கு மேல கடை என்று ஒன்று இருந்தால் பின்னடி காலத்திலும் எங்களுக்கு உதவும்.

---சிறிது யோசித்த சுரேந்தரும் சுமதி சொல்வதும் சரியென்று தோன்றவே, ம்....முதல்ல காசு கைக்கு வரட்டும் பிறகு இடம் பார்க்கலாம் என்ன .....!

சுமதியும் புருஷனை சரிகட்டிய மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று கோப்பையில் இடியாப்பமும் சொதியும் விட்டுகொண்டுவந்து குடுக்கிறாள். சுரேந்தரும் என்னப்பா ஒரு முட்டையாவது பொரித்திருக்கலாமே  என்று சொல்லிப்  போட்டு சாப்பிட்டுவிட்டு கட்டிலுக்கு செல்கிறான்.

சுமதியும்  காற்றடியையும்  தொலைக்காட்சி பெட்டியையும் அனைத்து விட்டு அறைக்குள் போகிறாள். சிறிது நேரத்தில் அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........!

தைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..........!  💞  

  • Like 6
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

85-A9-AE5-D-19-EA-4356-B1-A8-E2-E7-B3193
தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சூடுப்பிடிக்கின்றது போல கிடக்குது…!

தொடருங்கள், சுவியர்….!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3).

 

"லா சப்பல்"  யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு  சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள்.

                                           கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன.

                                                       சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல்  சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது.

---ஹலோ....ஓ....ஓ  நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க ,  அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் .....

---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ....

--- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள்.

--- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள்.

--- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு  கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும்.

--- சுமதியும் அவளிடம், பிரேமா  நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான்.

                                       அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ.

--- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன்.

---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல .......

---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன்.

--- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன்.  பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான்  இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு  என்று சொல்லி விட்டு போகிறாள்.

 

                                         அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள்.

இன்னும் தைப்பார்கள் ..........!  👗

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .......

தைக்கட்டும்......தைக்கட்டும் ..நல்லாய் தைச்சு கிழிக்கட்டும் :pokal:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(4).

 

                                                                  பிறிதொருநாள் சுமதி வெளியில் இருந்து தனது வீட்டுக்குள் வரும் போது அங்கு அவள் கணவன் சுரேந்தருடன் ஒரு ஆணும் பெண்ணுமாக  இருவர் கதைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.அவளும் அவர்கள் தனது கணவனின் நண்பர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுக்கு bonjour (வணக்கம்) சொல்கிறாள்.திரும்பி அவள் உள்ளே போக எத்தனிக்கையில் சுரேந்தர் அவளை அழைத்து இவர் எனது வேலையிடத்து சக நண்பர்.எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இந்தப் பெண் மிருதுளா இவரது மருமகள் என்று சொல்ல அவர்களும் சுமதிக்கு bonjour சொல்கின்றனர். தொடர்ந்து இவாவும் இங்கு தையல் வகுப்புகளுக்கு போயிருக்கிறா. மற்றும் புடவைக் கடைகளில் விற்பனைப் பகுதியில் வேலைசெய்த அனுபவமும் இருக்கு என்று சொல்ல சுமதியும் மிருதுளாவைப் பார்க்கிறாள். அவள் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாள். வயதும் ஓரு இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். சரளமாக பிரெஞ்சும் கதைக்கிறாள்.......அவர்களும் இவர்களின் கடையில் வேலை கேட்டுத்தான் வந்திருந்தார்கள்.

                                                                                                மிருதுளாவுடன் கதைத்த சிறிது நேரத்திலேயே அவள் கடையை நிர்வகிக்கக் கூடிய ஆளுமையான பெண் என்று சுமதி புரிந்து கொள்கிறாள்.  சுமதி ஆண்களைப் பார்த்து நீங்கள் சற்று நேரம் கதைத்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு, மிருதுளாவைக் கூட்டிக் கொண்டு தான் தைக்கும் மிசின் உள்ள அறைக்குப் போகிறாள்.அங்கு அவள் ஒரு ப்ளவுஸ் துணியையும் அதை கத்தரித்து தைக்க வேண்டிய அளவுகளையும் குடுத்து இதை இப்போது உன்னால் வெட்டித் தைக்க முடியுமா என்று கேட்க, மிருதுளாவும் ஓம்....டிசைனை சொல்லுங்கள் என்று எதுவித பதட்டமுமின்றி சொல்கிறாள். உடனே சுமதி அவளிடம் இது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியுடையது,ஒரு நாற்பது வயதிருக்கும். அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும்.

--- நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும். ..... ஓம் அப்படித்தான், லைனிங் துண்டும் மேசையில் இருக்கு, நீங்கள் வேலை செய்யுங்கோ, நான் போய் முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கிளம்பும் பொழுது மிருதுளாவும் அந்த சில்க் துணிக்கேற்றவாறு மிசின் ஊசி மற்றும் பொபின் இலக்கங்களை சரிசெய்கிறாள். அதை பார்த்த சுமதியும் திருப்தியுடன் ம்......இவளிடம் கொஞ்சம் விசயம் இருக்கு என்று நினைத்துக் கொண்டு கதவைச்சாத்தி விட்டு போகிறாள்......!

                                சற்று நேரத்தின் பின் சுமதி  தன்னை சிறிது அலங்கரித்துக் கொண்டு ட்ரேயில் நான்கு கோப்பியும் சீனிக்கட்டிகளும் சிறிய கரண்டிகளுடனும் வந்து ஆண்களிடம் இரண்டைக் குடுத்து விட்டு அறைக்குள் சென்று மிருதுளாவுக்கும் கோப்பியை வைக்கும் போது அவளும் அந்த ப்ளவுசை தைத்து முடித்து அங்கிருந்த பொம்மைக்கு அதை அணிவித்து பினிஷிங் வேலையை செய்து கொண்டிருந்தாள். சுமதிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. தான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு சிறப்பாக வேலை செய்திருந்தாள். மேலும் தன கற்பனையையும் செலுத்தி தேவையான இடங்களில் பொன் நிற லேஸ்சும் சின்ன முத்துக்களும் தைத்திருந்தாள். பின் இருவரும் கோப்பியை அருந்திவிட்டு கதைத்துக் கொண்டு ஹாலுக்கு வருகின்றார்கள்.......!   

இன்னும் தைப்பார்கள்.........!   🦺

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தைக்கிறது இருக்கட்டும், சுவியர்…! உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண்களின் உடல் வாகு தெரியும்?😁

தொடருங்கள்….!

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையலாள் என்றும் ஒரு பெயர் இல்லத்தரசிகளுக்கு உண்டெல்லோ.
கதை நன்றாகப் போகிறது அண்ணை, முடிவு(சனி) தான் என்னாகுமோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 14:00, தமிழ் சிறி said:

திரில் ஆன கதை போல இருக்கு.... 😎
மொத்தமாக வந்த சீட்டுக்காசை, ஏழரைச் சனியன்...   
கொண்டு போகப் போகுது போலை கிடக்கு. 
தொடருங்கள் சுவியர், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.....உங்களின் வழமையான பொழிப்பா எடுத்து வர்ணம் தீட்டிய கருத்துக்கள்தான் பிடிக்கும்.... 😁

On 13/2/2023 at 18:35, goshan_che said:

கதை வெகு சுவாரசியமாக போகிறது. கும்பராசிக்கு சுக்கிர பெயர்ச்சி 18 ம் திகதி வரைக்கும் நல்லமில்லையாம்🤣.

நானும் முந்தி சீட்டு எடுத்தால் நல்லா கழிவு எடுக்க விட்டு கடைசியாய்தான் எடுப்பேன். ஆனால் ஏத்தி விடும் ரிஸ்க் எடுத்ததில்லை.

இப்போதெல்லாம் கடைசி சீட்டை காண்பதே அரிது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோஷான் -சே.......! 😂

On 13/2/2023 at 18:46, நிலாமதி said:

ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்"  கையோடு கூடி வந்துள்ளீர்கள்.   தொடருங்கள் வேடிக்கையை  வாசிப்போம். 

வாசியுங்கள் சகோதரி, உங்களின் ஊக்கம்தான் என்னையும் இங்கு கதையென்று எதோ ஒன்றை எழுத வைக்கின்றது......நன்றி தாயே......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 04:59, suvy said:

அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள்.

அப்ப பிரோமா செலக்ரட்.

4 hours ago, suvy said:

அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும்.

சுவி நீங்க தையலிலும் கில்லாடி போல கப் எல்லாம் வைத்து தைக்கிறீங்க.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு  விபரமாக பெண்களின் பிளவுஸ் பறறி தெரிந்து வைத்திருக்கிறார் . அடுத்த பிளவுஸ் ...சுவியரிடம் ( தையல் காரியிடம்) தான்  தைக்கவேண்டும்.நன்றாக தையுங்கோ . வாடிக்கையாளர் லைன் இல் வந்து கொண்டு   இருக்கிறார்கள்.

எனக்கு மட்டும் சொல்லுங்க பிட்டிங் ரூம் இல்  கேமரா கிமரா  இல்லைத்தானே 😀  .

Link to comment
Share on other sites

 

16 hours ago, suvy said:

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும்

8256_1091856820854740_675958239374446747

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(5).

                                                                                      அன்று "லா சப்பலில்" சுரேந்தர் சுமதியின் தையல்கடை "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" அதிக ஆடம்பரமின்றி எளிமையாக திறப்புவிழா நடந்தேறியது. அங்கிருக்கும் அக்கம் பக்கத்து கடை முதலாளிமார் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.எல்லோருக்கும் சிற்றூண்டிகளுடன்  குளிர்பானங்களும் வழங்கப் பட்டன. கண்ணாடி அலுமாரிகள் நிறைய துணிகள்,புடவைகள் இத்யாதியுடன் நவீனமான நான்கு தையல் மெஷின்களும் கொலுவீற்றிருந்தன.சுமதி சுரேந்தர் ,ரோகிணி,மிருதுளா, பிரேமா எல்லோரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

                                                                                 சிலர் குறும்பாக அக்காமாரே மத்தியானம் சாப்பாடும் இருக்குதோ என்று கேட்க ரோகிணி முன்வந்து ஓமண்ணை பக்கத்தில கோயிலில் அன்னதானம் நடக்குது வயிறு முட்ட சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். அன்றுமட்டும் சுமதிக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் நிறைய சேர்ந்திருந்தன. காரணம் அவள் எல்லோர் வீட்டு வைபவங்களுக்கு போய் தாராளமாய் மொய் வைத்துவிட்டு வருவாள். அதுகள் எல்லாம் இப்ப வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.அவையெல்லாம் தனியாக பிரேமாவின் பாதுகாப்பில் இருந்தன. ஆரம்பத்தில் கடை வேலைகளைக் கவனிப்பதற்காக சுமதி ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தாள்.

                                                                          அடுத்தநாள் சுமதியின் போனில் துறைமுகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வருகின்றது. அதில் அவள் இந்தியாவில் இருந்து தருவித்த சில பெட்டிகள் வந்திருப்பதாகவும் அவற்றை வந்து பெற்றுக்கொள்ளும் படியும் குறிப்பிட்டிருக்கின்றது. அந்தப் பெட்டிகளுக்குள்தான் நிறைய துணிமணிகள், றோல்கோல்டு ஆபரணங்கள்,கைக்கடிகாரங்கள் மற்றும் தையல்களுக்கு தேவையான ஊசிகள்,கிளிப்புகள் லொட்டு லொசுக்குகள் எல்லாம் இருக்கின்றன.அவற்றை எடுப்பதற்காக ஒன்லைனில் ஒரு வானை ஒழுங்கு செய்துகொண்டு பாரிஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும்" le havre"என்னுமிடத்துக்கு பயணப் படுகிறாள். வானை ஒட்டிக்கொண்டு வந்தவர் ஒரு இளைஞன்.நல்ல களையான முகம் முகத்தில் இருக்கும் குறுந்தாடி மிகவும் அழகாய் இருக்கின்றது. (இந்த சுரேனிடம் சொல்லுறனான் நீங்கள் ஒரு தாடி வையுங்கோப்பா   உங்களுக்கு எடுப்பா இருக்கும் என்று சொன்னால் மனுஷன் கேட்குதே இல்லை. இந்தப் பொடியனுக்கு நல்ல வடிவாயிருக்கு என்று நினைத்துக் கொள்கிறாள்) இருவரும் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டு வருகிறார்கள். வெளியே மென்மையான மழைத்தூறல். வானின் வைப்பர் 10 செக்கண்டுக்கு ஒருமுறை அசைந்து கொண்டிருக்கு. வானுக்குள்  A / C யின் கதகதப்பு இதமாய் இருக்கிறது.

--- என்ன இன்று மழை பெய்து கொண்டிருக்கும் போல ....(இங்கு அறிமுகம் இல்லாதவருடன் பேச்சு வரும்பொழுது முதல்ல காலநிலை பற்றி கதைப்பினம்).

--- பெரிசாய் மழை வராது, நாள் முழுதும் இப்படித்தான் தூறிக்கொண்டிருக்கும்.

--- என்பெயர் சுமதி......உங்களை எப்படி அழைப்பது.....

---என் பெயர்  கபிரியேல் ஜான்சன் .....ஆனால் முதற்பெயர் கபிரியேல் மேடம்.....

---மேடம் அவசியமில்லை நீ சுமதி என்றே அழைக்கலாம்.....கபிரியேல் நீ கனகாலமாக இங்கு வேலை செய்கிறாயா .....(இங்கு பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி  ஒருமையிலும் பெயர் சொல்லியும் அழைப்பது வழமை).

---  ஓம் சுமதி, சுமதி அழகான பெயர்.......மூன்று வருடங்கள் இருக்கும்.

--- உனக்கு இந்த வேலை நல்லா பிடித்திருக்குது போல ரசித்து வண்டி ஓட்டுவதுபோல் தெரிகிறது.

--- ரொம்பப் பிடிக்கும் சுமதி  ஆனால் இந்த வாரத்துடன் எனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இனி வேறு வேலை தேட வேண்டும்....

--- எதற்காக வேலையை விடுகிறாய்.

--- எங்கள் கொம்பனியை  வேறொரு கொம்பனி வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கொம்பனி பாரிசில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது அதுதான் சிலரை சம்பளத்துடன் நிப்பாட்டுகிறார்கள்.

--- இதற்கு முன் நீ என்ன வேலை செய்தனி.

--- நான் முன்பு ஒரு தோல் ஆடைகள் தைக்கும் பக்டரியில் வேலை செய்தேன். சில நாட்களில் அந்த தோல் சுவாசம் எனக்கு அலர்ஜி ஆகி விட்டது.அதனால் அதை விட்டுட்டு இந்த வேலையில் சேர்ந்தேன்.

--- அப்படியா.....அதற்குள் வானும் அவர்களது பொதி இருக்கும் களஞ்சிய அறைக்கு வந்து விட்டிருந்தது.

                                                அங்கிருந்த அவர்களின் பார்சல்கள், பெட்டிகள் எல்லாம் எடுத்து வானில் ஏற்றிவிட்டு அருகே இருந்த கடற்கரையில் ஒரு நல்ல ரெஸ்டூரன்ரில் போய் மதிய உணவை சாப்பிட்டபின் பில் குடுக்கப் போன காபிரியேல்லை சுமதி தடுத்து தானே பணமும் டிப்ஸும் குடுக்கிறாள். சிறிது ஓய்வெடுத்தபின் இருவரும்  பரிசுக்கு திரும்பி வருகிறார்கள்.

                                           ஏன் சுமதி நீங்கள் இவ்வளவு பொருட்கள் இறக்குமதி செய்திருக்கிறீர்கள் ஏதாவது ஒன்லைனில் விற்பனை செய்கிறீர்களா......

--- இல்லை கபிரியேல்,நான் சமீபத்தில்தான் லா சப்பலில் ஒரு தையற்கடை திறந்திருக்கிறேன்.அதற்குத்தான் இவையெல்லாம். இனியும் மலேசியா சிங்கப்பூரில் இருந்தெல்லாம் பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டும்.

---வெறும் தையற்கடை மட்டுமா.

--- தையற்கடையுடன் டெக்ஸ்ட்டைலும். இப்போது நாங்கள் அங்குதான் போகிறோம், அப்போது நீ பார்க்கலாம்.

மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம்.

--- ஓ.....நீங்கள் இவ்விதம் சொன்னதுக்கு நன்றி சுமதி, ஆனால் நான் யோசித்து பதில் சொல்கிறேன்.

 

இன்னும் தைப்பார்கள்......!  🥽

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம்.

தம்பிக்கு வெள்ளி திசை வேலை செய்ய போகுது போல.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் வாசனையை அநுர எவ்வாறு முகர்ந்து பிடித்தார்? பாகம் 5 டி.பி.எஸ்.ஜெயராஜ் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வுக்கும் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் 2019 நவம்பர்  ஜனாதிபதி தேர்தலும்  2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஒரு தந்திரோபாய நகர்வாகவே ஜே.வி.பி. அந்த இரு தேர்தல்களிலும் திசைகாட்டி புதிய சின்னத்தின் கீழ் புதியதொரு அரசியல் முன்னணியின் அங்கமாக  போட்டியிட்டது.  அந்த கட்சி தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த  ஒரு  முன்னணியை அமைத்துக்கொண்டது. பெயரளவில்  சமத்துவமான அமைப்புக்கள் மத்தியில் முதலாவதாக தோன்றினாலும், நடைமுறையில் தேசிய மக்கள் சக்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கம் கொண்ட கட்சியாக அதுவே விளங்கியது. ஒரேயொரு எளிமையான காரணத்துக்காகவே ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி என்ற ஆடையை அணிந்துகொண்டது. தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அது விரும்பியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறிய ஜே.வி.பி. இரு தடவைகள் முயற்சித்தது. இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன. நூற்றுக் கணக்கான அர்ப்பணிப்புச் சிந்தையுடைய  செயற்பாட்டாளர்களை கொண்டிருந்த ஜே.வி.பி.யின் பொதுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டாலும் கூட, குறிப்பிட்ட ஒரு  எல்லைக்கு அப்பால் தங்களால் வாக்குகளைப் பெறமுடியாமல் இருக்கிறது என்பதை செஞ்சட்டைத் தோழர்கள் கண்டுகொண்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் இலங்கை அரசியலில் நிலையான  மூன்றாவது சக்தியாகவும் இருக்கவேண்டியதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போய்விட்டது போன்று தோன்றியது. அதனால் ஜே.வி.பி. அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்ற புதிய தோற்றத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உள்ளடக்கம் ஒன்று தான் ஆனால் வடிவத்தில் அது வேறுபட்டதாக தோன்றும். தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றமாற்றம் இரு காரணங்களுக்காக ஜே.வி.பி.க்கு தேவைப்பட்டது. முதலாவதாக, கடந்த காலத்தில்  ஜே.வி.பி.யின் அட்டூழியங்களை அனுபவித்த பழைய தலைமுறையினர்  அவற்றை மறந்து புதிய தேசிய மக்கள் சக்தியாக மறுசீரமைப்புக்குள்ளாகிவிட்டதாக அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் ஜே.வி.பி. விரும்பியது. இரண்டாவதாக, வன்முறைக் கடந்த காலத்தை மறந்து முற்போக்கான தேசிய மக்கள் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டதை காட்டுவதன் மூலமாக இளந் தலைமுறையினரை கவருவதற்கு ஜே.வி.பி. விரும்பியது. புதிய மொந்தையில் பழைய கள்ளு ஜே.வி.பி. நம்பிக்கையுடன் செயற்பட்டபோதிலும், 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் தேர்த்களில் மிகவும் குறைந்தளவு வாக்குகளையே தேசிய மக்கள் சக்தியினால் பெறக்கூடியதாக இருந்தது. பெயரளவில் புதிய தேசிய மக்கள் சக்தியாக தோன்றினாலும், அது பழைய ஜே.வி.பி.யே, அதாவது புதிய மொந்தையில் பழைய கள்ளு என்றே அதை மக்கள் நோக்கினார்கள் போன்று தோன்றியது. மேலும், புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒப்பிடும்போது ஜே.வி.பி.யாக  கூடுதல் வாக்குகளை பெற்றிருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உதாரணமாக, ஜே.வி.பி.யின் தாபகத்தலைவர் றோஹண விஜேவீர 1982 ஜனாதிபதி தேர்தலில் 273, 428 ( 4.18 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். அதேபோன்று நந்தன குணதிலக 1999 ஜனாதிபதி தேர்தலில் 344, 173 ( 4.08 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். இருவரும் அந்த தேர்தல்களில் மூன்றாவதாக வந்தனர். அநுர குமார திசாநாயக்க 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது 418, 553 (3.16 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். விஜேவீரவையும் குணதிலகவையும் விட அநுர கூடுதலான வாக்குகளைப் பெற்றபோதிலும், சதவீதம் குறைவானதாகவே இருந்தது. பல வருடங்களாக இடம்பெற்ற சனத்தொகை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மற்றைய இருவரையும் விட அநுரா கூடுதலான வாக்குகளைப் பெற்றதை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் சதவீதம் தேசிய மக்கள் சக்தி என்ற வேடத்தில் ஜே.வீ.பி.க்கான மக்கள் ஆதரவில் ஒரு குறைவு ஏற்பட்டிருந்ததையே வெளிக்காட்டியது.  2020 பாராளுமன்ற தேர்தலில் அது மேலும் மோசமானதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியினால் திசைகாட்டி சின்னத்தில் வெறுமனே 445,958 ( 3.84 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. பெற்ற 543,944 (4.87 சதவீதம்)  வாக்குகளையும் விட குறைவானதாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைலாசியாகக் குறைந்தது. 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் நான்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தேசியப்பட்டியல் மூலம் இரு ஆசனங்கள் கிடைத்தன. மொத்தம் ஆறு உறுப்பினர்கள் பாராளூமன்றம் வந்தார்கள். 2020 ஆம் ஆண்டில் இருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர 49,814 விருப்பு வாக்குகளை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அநுரவுக்கு 65,066 விருப்பு வாக்குகள் கிடைத்த அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட விஜித ஹேரத் 37, 008 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். அநுரவுக்கு எதிரான உணர்வு தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் பரிசேதனை எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. என்னதான் தேர்தல் தந்திரோபாயங்களை வகுத்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்குப்பங்கை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டதோ இல்லையோ ஜே.வி.பி.யினால் மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்தில் இருந்து மேம்பட முடியவில்லை என்று தோன்றியது. இந்த நிலைவரங்களின் விளைவாக ஜே.வி.பி. அணிகளுக்குள் அநுராவுக்கு எதிராக சிறிய ஒரு எதிர்ப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது. தேசிய மக்கள் சக்தி தந்திரோபாயம் ஒரு தோல்வி என்று பொதுச் செயலாளர் தலைமையிலான செல்வாக்குமிக்க ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் குழுவொன்று உணர்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. தேசிய மக்கள் சக்கதியுடன் பிணைந்திருக்காமல் ஜே வி.பி. அதன் முன்னைய அந்தஸ்துக்கு திரும்ப வேண்டும் அவர்கள் விரும்பினார்கள். தேசிய மக்கள் சக்தியை அமைக்கும் யோசனையை பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆதரித்த போதிலும், அந்த யோசனையின் உந்துசக்தியாக இருந்தவர் அநுரவே. அது ஜே.வி.பி.யின் ஒரு கூட்டுத் தீர்மானமாக இருந்தாலும், அதை  செயல் முறையில் வழிநடத்தி சாத்தியமாக்கியதற்கு அநுரவே பெரிதும் பொறுப்பாக இருந்தார். அதனால், தேசிய மக்கள் சக்தி மீதான விமர்சனங்கள் மறைமுகமாக அநுராவை நோக்கியவையாகவே இருந்தன. எதிர்ப்புக்கு மத்தியில் அநுரா பின்வாங்கவில்லை. தலைவர் என்ற வகையில் அதற்காக அவர் மெச்சப்பட வேண்டியவர். உட்கட்சி நெருக்குதலின் கீழ் தளர்ந்துபோவதற்கு பதிலாக  அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டு ஒருவருடமே கடந்திருக்கும் நிலையில், அந்த தந்திரோபாய மாற்றம் வெற்றியா தோல்வியா என்று தீர்ப்புக் கூறுவதற்கு மேலும் சில காலம் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியாக மேலும்  கொஞ்சக்காலம் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி கோட்பாட்டை எதிர்காலத்தில் பெரிய அளவில் ஆதரித்து ஊக்கமளிக்க  வேண்டியிருக்கும்  என்றும் என்றும் அநுர கூறினார். அவரின் நிலைப்பாட்டுக்கே வெற்றி கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியாக தொடருவதற்கு ஜே.வி.பி. இறுதியில் தீர்மானித்தது. ஒரு எதிர்க்கட்சி என்ற கருத்துக் கோணத்தில் இருந்து பார்த்தபோது  அன்றைய நிலைவரம் மனச்சோர்வைத்  தருவதாகவே இருந்தது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் கோட்டாபய ராஜபக்ச  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாராளுமன்றத்தில் 146 ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறுவதற்கு தூண்டியதன் மூலமாக  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 20  வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்ட ராஜபக்சாக்கள் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்த பல நேர்மறையான  அம்சங்களைை நீக்கினார்கள். ராஜபக்சாக்களும் அவர்களை அடிவருடிகளும் அட்டகாசமாக ஆட்சி செய்தார்கள். துடிப்பில்லாத எதிர்க்கட்சி  எதிர்க்கட்சி துடிப்பில்லாததாக இருந்ததால் ராஜபக்சாக்களுக்கு அது வசதியாகப் பே்ய்விட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 2020 பாராளுமன்ற தேர்தலில் துடைத்தெறியப்பட்டது. அதில் இருந்து பிரிந்து வந்தவர்கள் சஜித் பிரேமதாச தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியை ( சமகி ஜன பலவேகய)  அமைத்தார்கள். அதற்கு பாராளுமன்றத்தில் 54 ஆசனங்கள் கிடைத்தன. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக வந்தார். தமிழ், முஸ்லிம் கட்சிகள் அவற்றின் சமூகங்களை பாதித்த பிரச்சினைககளில் பிரதானமாக கவனத்தை செலுத்திய நிலையில் தேசிய கவனக்குவிப்பில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தனது கட்சியின் ஏனைய உறூப்பினர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்காமல் அனேகமாக சகல விடயங்களிலும் அவரே பேசினார். அவரது  உரைகளில் ஆழமோ தெளிவோ இருந்ததில்லை. தந்தையாரின் பேச்சுக்களில் இருந்து முற்றிலும்  வேறுபட்டதாக இருந்தது. ரணசிங்க ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளர். தனது சிந்தனைகளை சபையோருக்கு உறுதியான முறையில் தெளிவாகச் சொல்வார். மறுபுறத்தில், அளவு கடந்தை  சொல் அலங்காரத்துடனான சஜித் பிரேமதாசவின் பேச்சு கேட்போரை கவருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஜே வி.பி./ தேசிய மககள் சக்தியின்  அநுர, ஹரினி, விஜித மூவரும் பாராளுமன்றத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அநுர குமார திசாநாயக்க  ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிறப்பாகச் செயற்பட்டு அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தினார். நடப்பில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கலாம்,  ஆனால் மெய்யான எதிர்க்கட்சி தலைவராக அநுராவே காணப்பட்டார். இதை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். முன்னணி எதிர்க்கட்சி சக்தியாக அநுர வருவதற்கு சஜித் இடமளித்துவிட்டார் என்று அவர் கூறினார். முன்மாதிரியாக பசில் ராஜபக்ச  தேசிய மக்கள் சக்தி பசில் ராஜபக்சவின் வழமுறையை பின்பற்றத் தொடங்கியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கியபோது பசில் பாராளுமன்றத்தின் மீதோ அல்லது மாகாணசபைகள் மீதோ கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அவர்  உள்ளூராட்சி சபைகளில் சமூகத்தின் அடிமட்டத்தில்  கிளைகளை அமைத்தார். வேட்பாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களை தெரிவுசெய்து தங்களின் " வாக்காளர்  தொகுதிகளை "  வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டினார். தேர்தல் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றம் வட்டாரங்களில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடன் மேலதிகமாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள்   தெரிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. தனது வேட்பாளர்களைக் கொண்டு விசேடமாக வாக்காளர்களை இலக்குவைக்க பசிலினால் இயலுமாக இருந்தது. இந்த அணுகுமுறையின் விளைவாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவினால் 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் 5, 006, 837 (40.47 சதவீதம்) வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் வட்டார அடிப்படையில் 3,265 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் இன்னொரு 181 உறுப்பினர்களுக்கும் பொதுஜன பெரமுன உரித்துடையதாகியது. அந்த கட்சி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தில் நாடுபூராவும் 126 உள்ளூராட்சி சபைகளின் கடடுப்பாட்டை பெற்றது. மறுபுறத்தில் ஜே.வி.பி. அந்த உள்ளூராட்சி தேய்தலில் 710, 932 (5.75 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. வட்டார அடிப்படையில் ஜே.வி.பி.யின் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே தெரிவாகக் கூடியதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் அந்த கட்சியின் 433 உறூப்பினர்கள் தெரிவாகினர். நாட்டின் எந்தப் பாகத்திலுமே தனியொரு உள்ளூராட்சி சபையின் கட்டுப்பாட்டைக் கூட ஜே.வி.பி.யினால் பெறமுடியவில்லை. 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வெற்றி அநுராவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. அடுத்த உள்ளூராட்சி தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியவையாக இருந்தன. தேசிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவின் அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு தீர்மானித்தது. பிரதேச மட்டத்தில் வட்டாரங்களை இலக்கு வைப்பதற்கு கட்சியின் கிளைகள் மீளக் கடடமைக்கப்பட்டன. வீடுவீடாக கவனம் செலுத்தப்பட்டது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் திட்டமிட்ட முறையில் ஒவ்வொரு வீட்டுக்கு விஜயம் செய்து ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகினார்கள். அது ஒரு குறுகிய நோக்க அணுகுமுறை. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் ஸ்கூட்டர்களிலும் வீடுகளுக்கு சென்று வந்தார்கள். இது மறுபுறத்தில்  இந்த இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு வெளிநாடொன்று நிதயுதவி செய்கிறது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடம் தள்ளி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. முக்கியமான தினம் நெருங்கும்போது ஜே.வி.பி. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளிலும்  தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையா வாழும் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகவும் விருப்பம் கொண்டும் இருந்தது. அந்த நேரமளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ரணில் வி்க்கிரமசிங்க பதவிக்கு வந்தார். புதிய ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை தடு்க்க சகல விதமான தந்திரங்களையும் கையாண்டார். உள்ளூராட்சி தேர்தல்ளை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடியது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறூப்பினர் சுனில் ஹந்துனெத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோர் 2023 மார்ச் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.  சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது. இது அந்த நேரத்திலேயே தேர்தல் வெற்றியின் நறுமணத்தை தேசிய மக்கள் சக்தி முகரத் தொடங்கிவிட்டது எனபதைக் காட்டியது. ஆனால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தப்படவில்லை. அறகலய அனுபவம் அதேவேளை, நாடு முன்னென்றும் இல்லாத வகையில் அறகலய ( போராட்டம் ) அனுபவமொனறைச் சந்தித்தது. பொதுவில் அரசாங்கத்துக்கு எதிராகவும் குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை ஜே.வி.பி.யும் தனக்கு வாய்ப்பாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியது. சஜித்தையும் விட அநுர காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு கூடுதலான அளவுக்கு ஏற்புடையவராக இருந்தார். அநுர காலிமுகத்திடலில் வரவேற்கப்பட்ட அதேவேளை சஜித் விரட்டியடிக்கப்பட்டார். ஆனால் அறகலயவை ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தலைமைத்துவ பாத்திரத்தை வகித்தது. போரட்டத்தை பொறுத்தரை  முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை  மேவிவிட்டது. இறுதியில் கோட்டாபய பதவி விலக ரணில் ஜனாதிபதியாக வந்தார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தனது கட்சிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தபோதிலும், அநுராவும் போட்டியிட்டார். அந்த போட்டியில் இருந்து பின்வாங்கிய சஜித், டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தார். அதன் மூலமாக மீண்டும  சஜித் ஒரு பலவீனமான தலைவர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ரணில் விக்கிரமசிங்க 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவுக்கு மூன்று வாக்குகள் மாத்திரமே  கிடைத்த போதிலும், அரசியல் ரீதியில் அவர் சஜித்தை விடவும் கூடுதல் புள்ளிகளைத் தட்டிக்கொண்டார். அதன் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர   ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது தான் ஒரு முக்கியமான வேட்பாளராக  இருக்கப்போதை  முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டார். அதேவேளை சஜித்  உறுதிப்பாடும் அரசியல் துணிச்சலும் இல்லாததன் விளைவாக ஒரு பலவீனமான - தடுமாறுகிற அரசியல்வாதியாக நோக்கப்பட்டார். 2024 ஜனாதிபதி தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப்போகிறது என்பது அப்போதே தெரிந்தது. ஜனாதிபதியாக ரணில்  இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப்  பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்நிய செலாவணி அருகிப்போயிருந்த நிலையில்  பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துநின்றார்கள். ஆனால் விநியோகங்கள் கிடைக்கவில்லை அல்லது போதுமானவையாக இருக்கவில்லை. மின்சக்தி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் நாட்டை உண்மையில் முடங்கச் செய்திருந்தன. ரணிலிடம் என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், அவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் ஜனாதிபதியாக ஆட்சிப்  பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது துணிச்சலையும் பற்றுறுதியையும் வெளிக்காட்டினார். மேலும், உருப்படியான முறையில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு  ராஜபக்சாக்களின் நல்லெண்ணத்திலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததால் விக்கிரமசிங்கவுக்கு  இடையூறுகள் இருந்தன. அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே இருந்த காரணத்தினால் ராஜபக்சக்களின் தலைமையிலான " தாமரை மொட்டு " கட்சியின் உதவியுடன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணில் அதை இலங்கையினதும் அதன் மக்களினதும் நீண்டகால நலன்களுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு வசதியீனமாக கருதிச் செயற்பட்டார். பொருளாதாரப் பிரச்சினையை ஒரு தேசிய நெருக்கடியாக விக்கிரமசிங்க சரியான முறையில் அடையாளம் கண்டார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கியப்பட்ட தேசிய முயற்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பாராளும்னறத்தில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளை அவர் திரும்பத் திரும்ப அழைத்தார். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒத்துழைப்புச் செயற்பாடு அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால், அவர் இடையறாது விடுத்த அழைப்புக்கள் தொடர்ச்சியாக அலட்சியம் செய்ப்பட்டன. முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பம்  சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொருளாதார நெருக்கடியில் தாங்கள் அரசியல் ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கண்டார்கள். விக்கிரமசிங்கவுடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக அவர்கள் விலகி இருந்துகொண்டு ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதிலேயே தீவிர நாட்டம் காட்டினர். பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை அவர்கள் குறைத்து மதிப்பிடவும் செய்தார்கள். நெருக்கடியின் தன்மையை  ஜனாதிபதி மிகைப்படுத்துகின்றார் என்று கூறி அநுர ஏளனமும் செய்தார். அநுரவைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, ரணில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கருதினார். விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதையும் தேசிய மக்கள் சக்தி கண்டனம் செய்தது. இலங்கையில் இடதுசாரிகள்  " பிரெட்டன் வூட்ஸ் இரட்டை " என்று அழைக்கப்டுகின்ற சர்வதேச நாணய திதியம் மற்றும் உலக வங்கி மீது வெறுப்புணர்வைக் கொண்ட வரலாற்றை உடையவை. இப்போது அந்த வெறுப்புக்கு  ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி புத்தூக்கம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விளைவாக  மக்கள் குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இடர்பாடுகளை எதிர்நோக்கப் போகிறார்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைச் சமூகத்திடம் இருந்து பெறக்கூடிய உதவிகளின் ஊடாக பொருளாதார பிரச்சினைக்கு தங்களால் தீர்வு காணமுடியும் என்று கூட  ஜே.வி.பி.யின் பொருளாதார ' மந்திரவாதி '  சுனில் ஹந்துனெத்தி கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்பது விரைவாகவே தெளிவாகத் தெரிந்தது. ஒரு ஆரோக்கியமான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக எடுத்ததற்கெல்லாம் பிழை கண்டுபிடிக்கும் அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு மக்களின் ஒவ்வொரு பொருளாதார குறைபாடும் உச்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது. பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதை விக்கிரமசிங்கவினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தபோதிலும், அவற்றை பெரும்பாலான மககளினால் வாங்க முடியாமல் இருந்தமை கூர்மையானஒரு பிரச்சினையாக விளங்கியது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டு போனது, ஆனால் சம்பளங்கள் அதிகரிக்கவில்லை. தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டுபோக வறியவர்கள் மேலும் வறியவர்களானார்கள். நடுத்தர வர்க்கம் தாழ்வுற்றது. அறகலய பேராட்டம் ராஜபக்சக்களின் ஆட்சி தூக்கியெறியப்படுவதை துரிதப்படுத்தியதற்கு மேலதிகமாக அறகலய போராட்டம் பல விடயங்களை சாதித்தது. பொதுவில்  மக்கள் சக்தியினதும் குறிப்பாக இளைஞர் சக்தியினதும் வெற்றியை அது நிரூபித்தது. குடும்ப அரசியல் அதிகாரம், நெரூங்கியவர்களுக்கு சலுகை செய்யும் போக்கு மற்றும் ஊழலுக்கு எதிரான உணர்வை அது அதிகரித்தது. முறைமையில் அல்லது தற்போதுள்ள ஒழுங்கில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையுடைய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை  அறகலய வளர்த்து வளமாக்கியது. மாறிவிட்ட சமநிலையை  கணக்கில் எடுத்த தேசிய மக்கள் சக்தி ஒரு ஆய்வுச் செயன்முறையை ஆரம்பித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்தது. இதில் அநுர குமார திசாநாயக்க முக்கியமான பாத்திரத்தை வகித்தார். ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து பெரியளவில் தயாராவதன் மூலமாக தங்களது அரசியல் மேம்பாட்டுக்கு மிகவும் சாதகமான நிலைவரம் ஒன்று இருப்பதை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உணர்ந்தது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனியாக போட்டியிட வேண்டும் என்பதில் மீண்டும் அநுரா உறுதியாக இருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக அவரே களமிறங்குவார் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு பிறகு தேசிய மக்கள் சக்தி 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியது. ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்தில் தேர்தலை நடத்துவாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அவ்வாறு அவர் நடத்த முன்வராத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி நாடுதழுவிய பாரிய அரசியல் போராட்த்தை முன்னெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருந்தது. ஆனால்,  ரணில் தேர்தலை நடத்துவதற்கே எப்போதும் உத்தேசித்திருந்ததால் எந்தவொரு போராட்டத்துக்கும் தேவை இருக்கவில்லை. அவர் அவ்வாறே செய்தார். வெற்றியின் கதை  ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக பிரசாரங்களை தேசிய மக்கள் சக்தி விடாமுயற்சியுடன் முன்னெடுத்தது. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெற்றியின் நறுமணத்தை முகரத்தொடங்கிய அநுர இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தன்னை காட்சிப்படுத்தினார். இந்த ' கனவு ' 2024 செப்டெம்பரில் நனவாகியது. ஜனாதிபதி தேர்தலில் அநுராவின் வெற்றியின் மருட்சியூட்டும் கதையை அடுத்தவாரம் விரிவாக எழுதுவேன். அதுவே இந்த கட்டுரைத் தொடரின் இறுதிப்  பாகமாகவும் நிச்சயமாக அமையும். https://www.virakesari.lk/article/198000
    • வன்னியர் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்
    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.