Jump to content

தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்: பசுமை நிறைந்த அதிகம் அறியப்படாத பகுதிகள்

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக
48 நிமிடங்களுக்கு முன்னர்
கோவை சுற்றுலா
 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக சென்று வரக்கூடிய பெரிதும் அறியப்படாத இடங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

கோவை குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி

கோவை சுற்றுலா

கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களுள் கோவை குற்றாலமும் ஒன்று. அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்தை அடியொட்டி கோவை குற்றாலம் என்கிற பெயர் வந்துள்ளது. சிறுவாணி நீர்வீழ்ச்சிதான் பரவலாக கோவை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது.

கோவையிலிருந்து எளிதாக அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கவும் சிறிய தொலைவில் பைக் ரைடு செல்ல விரும்புபவர்களும் தேர்வு செய்யும் இடமாகவும் உள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 40 கி.மீ பயண தூரம். காந்திபுரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. சொந்த வாகனத்திலும் செல்லலாம்.

சாடிவயல் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் சிறிது தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றால் கோவை குற்றாலத்தை அடையலாம். நொய்யல் நதி இங்குதான் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

 

கேத்தரின் நீர்வீழ்ச்சி

கோவை சுற்றுலா

கோவையில் வசிப்பவர்கள் தேநீர் குடிப்பதற்குக்கூட ஊட்டி வரை செல்வார்கள் எனப் பிரபலமாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான இடங்களைவிடவும் சாகசமான பயணங்களை மேற்கொள்ளும் இடங்களும் உள்ளன.

அதில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் ஒன்று. கோத்தகிரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேயிலை தோட்டங்கள் வழியாகக் காட்டிற்குள் பயணம் செய்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியை அடையலாம். வனப்பகுதிக்குள் இருப்பதால் குளிரான வானிலையே இங்கு நிலவும்.

நீர்வீழ்ச்சியிலும் பற்களை நடனமாட வைக்கும் உறை குளிர் வெப்பநிலையில் நீர் ஆர்ப்பரித்து ஓடும். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு உகந்த நேரம்.

கொடிவேரி அணைக்கட்டு

கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொடிவேரி அணைக்கட்டு. கோவையிலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் கொடிவேரியை அடைந்துவிடலாம். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லும் விதத்தில் மூன்று மாவட்டங்களுக்கும் மையமான இடத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. நீர்வரத்து சரியாக உள்ள காலங்களில் பொதுமக்கள் அணைக்கட்டில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. 90களில் முக்கியமான படப்பிடிப்பு தளமாகவும் கொடிவேரி விளங்கியுள்ளது. சின்னத்தம்பி திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கட்டி

கோவை சுற்றுலா

கோவையைச் சுற்றி பல்வேறு மலைவாசல் தலங்கள் இருந்தாலும் எளிதாக அடையக்கூடிய இடமாக ஆனைக்கட்டி உள்ளது. கோவையிலிருந்து 30 கி.மீ தொலைவில் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் ஆனைக்கட்டி அமைந்துள்ளது.

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஆனைக்கட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இங்கு சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. இங்குள்ள மிதமான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தனியார் ரிசார்ட்களில் தங்குவது வழக்கம். கோவையைச் சுற்றி பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஆனைக்கட்டியும் இடம்பெறும்.

பரளிக்காடு சூழல் சுற்றுலா

கோவை சுற்றுலா

கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பில்லூர் அணையையொட்டி அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம்.

இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. இணைய வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.

கோவை சுற்றுலா

பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து மற்றும் ஆற்றுக் குளியல் என வனத்துறையால் முழுமையாக இந்த சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் காடு, மலை சார்ந்து ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏதுவான இடமாகப் பரளிக்காடு உள்ளது.

மலம்புழா அணை

கோவை சுற்றுலா

கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலம்புழா அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கோவையிலிருந்து எளிதாக செல்லும் இடமாக உள்ளது மலம்புழா அணை. மலம்புழா அணை அருகே பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

படகு பயணம், கேபில் கார் பயணம் என சாகசம் நிறைந்த பல விஷயங்கள் இங்கு அமைந்துள்ளன. மலம்புழா அணை அருகே சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன.

வால்பாறை

கோவை சுற்றுலா

கோவையிலிருந்து ஒரு நிறைவான பயணம் செல்பவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் தவிர்க்காமல் வால்பாறை முதலிடத்தில் இருக்கும். கோவையிலிருந்து 100 கிமீ தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 40 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்தால் வால்பாறையை அடையலாம்.

வால்பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்து பசுமை போர்த்தி காணப்படும். மேல் சோலையாறு அணை, சின்ன கல்லார், நல்லமுடி வியூ பாயிண்ட் ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.

ஆழியாறு அணை, குரங்கு நீர் வீழ்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. கோவை - வால்பாறை செல்பவர்கள் அவசியம் வந்து செல்லும் இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. அணையின் மேல் பகுதியில் முழு நீளத்திற்கும் நடந்து செல்ல முடியும். அணையின் எழில்மிகு தோற்றத்தை முழுவதும் ரசிக்க முடியும் என்பதால் இளைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கும் முக்கியமான இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது.

இங்கு பூங்கா, மீன் காட்சியகம், பார்க் தமிழ்நாடு மீன்வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் குரங்கு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வருபவர்கள் நிச்சயம் குரங்கு நீர் வீழ்ச்சிக்குச் செல்வார்கள்.

வெள்ளியங்கிரி ட்ரெக்கிங்

கோவை சுற்றுலா

கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவார்கள்.

வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டுள்ளது. ஆறு கிலோ மீட்டர் தூரம் மலை பாதைகளில் பயணித்து ஏழு மலைகளைக் கடந்து சென்றால் வெள்ளியங்கிரி மழை உச்சியை அடையலாம். பக்தர்கள் மட்டுமில்லாமல் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் பலரும் தேர்வு செய்யும் இடமாக வெள்ளியங்கிரி உள்ளது.

பாலமலை

கோவை சுற்றுலா

கோவை மாநகருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு சிறிய மலைக் குன்றுதான் பாலமலை. இங்கு அரங்கநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் வழியாகச் சென்றால் பாலமலையை அடையலாம். நகரின் கூச்சல்களுக்கு நடுவே சிறிது நேரம் இளைப்பாற விரும்புபவர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்யலாம். பாலமலையில் நிலவும் மிதமான வெப்பநிலையையும் இயற்கை காட்சியையும் ரசித்துவிட்டு வரலாம்.

உடுமலைப்பேட்டை

கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் உடுமலைப்பேட்டை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை முக்கியமான சுற்றுலா தலமாக அமைந்துள்ளன.

திருமூர்த்தி அணைக்கு மேல் பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி உள்ளது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல முடியும். 20 நிமிடங்கள் நடைபயணமாகச் சென்றால் நீர் வீழ்ச்சியை அடையலாம். திருமூர்த்தி அணையிலிருந்து 20 கிமீ தொலைவில் அமராவதி அணை அமைந்ந்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-64682857

தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்வோர் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன்.சென்னையை அண்மித்து பாக்க கூடிய இடங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் பற்றி யாரும் அறியத்தர முடியுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள் நன்றி ஏராளன் ........அடுத்த தேன்நிலவு அங்குதான்......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல தகவல்கள் நன்றி ஏராளன் ........அடுத்த தேன்நிலவு அங்குதான்......!   😂

யாருக்கு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
2 hours ago, suvy said:

நல்ல தகவல்கள் நன்றி ஏராளன் ........அடுத்த தேன்நிலவு அங்குதான்......!   😂

யாருக்கு😂

பேரன் பேத்திக்கு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பேரன் பேத்திக்கு தான்.

Linda Listen To Me GIF - Linda Listen To Me - Discover & Share GIFs

பிறகென்ன கோதாரிக்கு  அங்க போவான்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி ஏராளன்.சென்னையை அண்மித்து பாக்க கூடிய இடங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் பற்றி யாரும் அறியத்தர முடியுமா.

நீங்கள் என்ன மாதிரி இடங்கள் போக விருப்பம் என்று சொல்லுங்கோ, நம்மட @புரட்சிகரத் தமிழ்த்தேசியன் விபரம் தருவார்.

5 hours ago, suvy said:

நல்ல தகவல்கள் நன்றி ஏராளன் ........அடுத்த தேன்நிலவு அங்குதான்......!   😂

அண்ணை திருமணங் கடந்த உறவில்லைத் தானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

நீங்கள் என்ன மாதிரி இடங்கள் போக விருப்பம் என்று சொல்லுங்கோ, நம்மட @புரட்சிகரத் தமிழ்த்தேசியன் விபரம் தருவார்.

அண்ணை திருமணங் கடந்த உறவில்லைத் தானே?!

என்ன ஏராளம் இது கூடத் தெரியாமல் இருக்கிறீங்கள் ........ திருமணம் செய்யாமல் போவது தேன்நிலவுக்குள் வராது, அது டேட்டிங் என்று சொல்லப்படும்......! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

என்ன ஏராளம் இது கூடத் தெரியாமல் இருக்கிறீங்கள் ........ திருமணம் செய்யாமல் போவது தேன்நிலவுக்குள் வராது, அது டேட்டிங் என்று சொல்லப்படும்......! 😁

ஓஹோ! அண்ணையிடம் முழுத் தகவலும் விரல் நுனியில் இருக்கே. அப்பிடியெண்டா வாழ்த்தைச் சொல்லி விடுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 17:23, ஏராளன் said:

நீங்கள் என்ன மாதிரி இடங்கள் போக விருப்பம் என்று சொல்லுங்கோ, நம்மட @புரட்சிகரத் தமிழ்த்தேசியன் விபரம் தருவார்.

 

நன்றி ஏராளன்.புரட்ச்சி மேடைக்கு வரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி ஏராளன்.புரட்ச்சி மேடைக்கு வரவும்.

இந்த திரியில்தான் நிற்கிறேன் தோழர்..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஞ்சோலை முதல் அத்ரிமலை வரை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 25 பிப்ரவரி 2023
குத்திரபாஞ்சான் அருவி
 
படக்குறிப்பு,

குத்திரபாஞ்சான் அருவி

தமிழ்நாட்டின், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் உள்ளன.

அவற்றைப் பற்றிய சுவரசியமான விவரங்களை, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

தேங்காய் உருளி அருவி

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணைக்கு கீழ் பகுதியில் உள்ளது தேங்காய் உருளி அருவி. சுற்றிலும் பச்சை பட்டு உடுத்தியது போல் காட்சி அளிக்கும் மரக்கூட்டங்களுக்கு நடுவே, காண்போர் கண்களை மட்டுமின்றி, உள்ளத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கும்.

அருவி அருகே ஒரு பாறையில் ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் சிற்பங்களும் உள்ளன.

 

இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அருவி வன எல்லைக்கு வெளியே இருப்பதாலும் வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்த அருவிக்கு செல்ல களக்காடு பேருந்து நிலையத்தில் இருந்து தலையணை செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். தலையணைக்கு கீழே வலது புறம் திரும்பும் சாலையில் திரும்பி சென்றால் சிவபுரம் வழியாக தேங்காய் உருளி அருவி க்கு செல்லலாம். சிவபுரம் வரை மட்டுமே கார்கள், டூவீலர்கள் செல்ல முடியும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மட்டுமே செல்ல முடியும்.சுற்றிலும் இதுதவிர பச்சையாறு அணையில் இருந்தும் இந்த அருவிக்கு பாதை உள்ளது.

தேங்காய் உருளி அருவி
 
படக்குறிப்பு,

தேங்காய் உருளி அருவி

பச்சையாறு அணையில் இருந்து ஊட்டு கால்வாய் கரையின் வழியாக சென்றால் தேங்காய் உருளி அருவியை அடையலாம். இரு பாதைகள் வழியாகவும் கார், வேன், டூவீலர்களில் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அங்கிருந்து சிறு தூரம் சென்றால் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு பல அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் விலங்குகள் உள்ளன.

இங்கு விழும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி தலையணை வழியாக ஓடி வருவதால் அதில் குளித்தால் நோய்கள் அணுகுவதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கு வரும் பொது மக்கள் அருவியில் குளித்து மகிழ்வதுடன், குடும்பத்துடன் உணவருந்தி விடுமுறை நாட்களை கழித்து விட்டு செல்கின்றனர்.

குத்திரபாஞ்சான் அருவி

குத்திரபாஞ்சான் அருவி
 
படக்குறிப்பு,

குத்திரபாஞ்சான் அருவி

நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரான மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ளது, குத்திரபாஞ்சான் அருவி.

இந்த அருவி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவி செங்குத்தாக பாய்வது தனி சிறப்பாகும்.

இந்த அருவிக்குச் செல்ல சரியான பாதை வசதி இல்லாமல் கரடு முரடான மலைப் பாதை மட்டுமே உள்ளது. எனவே வாகனங்களில் வருபவர்கள் அருவிக்கு முன் உள்ள கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருவியை நோக்கி நடந்தால் ஒரு ஆற்றை கடக்க செல்ல வேண்டும்

பருவமழையின்போது மட்டுமே இங்கு பெருமளவில் தண்ணீர் வரத்து இருக்கும். அருவியிலிருந்து வரும் தண்ணீர், கன்னிமார்கள் தோப்பு என்னும் தடுப்பணையில் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மதுரை, சென்னை, திருச்சி, கேரளாவில் இருந்து மக்கள் குடும்பத்துடன் அதிக அளவு வந்து குளித்து மகிழ்கின்றனர்

கார் நிறுத்தும் இடத்தில் வனத்துறையினர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அங்கு சிறுவர் சிறுமியர்களுக்கு திண்பண்டங்கள் மட்டும் கிடைக்கும். அந்த இடம் முழுவதும் ஆலமரங்கள் உள்ளதால் அந்த நிழலில் அமர்ந்து குடும்பத்துடன் உணவருந்த வசதியாக இருக்கிறது. மேலும் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அருவி ஊரை விட்டு சற்று தொலைவில் மலை அடிவாரத்தில் உள்ளதால் குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்லும் மக்கள் செல்லும் வழியில் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அத்ரி மலை

அத்ரி மலை
 
படக்குறிப்பு,

அத்ரி மலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அத்ரி மலை.

தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து அல்லது ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

மலைக்கு சென்று விட்டு பக்தர்கள் திரும்பி வருவதற்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டால் ; மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன் செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள்.

மலைமேல் விசேஷ நாட்களில் மட்டும் மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ள வேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக் பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.

செல்லும் வழியில் வனத்துறையினர் சோதனை சாவடி உள்ளது. வனத்துறையினர் வருகை பதிவேடு ஒன்று வைத்திருப்பார்கள் அதில் பெயர் முகவரி செல்போன் எண் எழுதி கையெழுத்திட்டு செல்ல வேண்டும்.

கடனா நதி நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்தால அது வழியாக குறுக்கு பாதையை பயன்படுத்தி கொள்ளலாம்

மலைக்கு நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஏற்றமுள்ள பாதை உள்ளது.

அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண் பாதையாக உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும் படியாக உள்ளது. மலை ஏற இரண்டு மணி நேரம் இறங்க இரண்டு மணிநேரம் ஆகிறது. அதன் அருகில் பெரிய பாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

மலை ஏறி சென்றதுடன், அருள்மிகு அனுசுயா தேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர்.

கோரக்கர் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படும் குகை ஒன்று உள்ளது. இது பார்பதற்கே ரம்மியமாய் இருக்கும். அங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தன மழை பொழியும் என்றும் நம்பப்படுகிறது. அத்ரி மலைக்கு சென்று வருவது ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் பலர் சுற்றுலாவாக சென்று அங்கு தங்கி அருவிகளில் குளிப்பது, கடனாநதி அணையின் அழகை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அரியநாயகிபுரம் அணைக்கட்டு

அரியநாயகிபுரம் அணைக்கட்டு
 
படக்குறிப்பு,

அரியநாயகிபுரம் அணைக்கட்டு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அரசன் குளத்துக்கு அடுத்துள்ளது வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி இந்த அணைக்கட்டு வழியாக கடந்து செல்கிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகளவு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

அரியநாயகிபுரம் அணைக்கட்டு க்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வயல்வெளிகள் உள்ளது. அரியநாயகிபுரம் அணைக்கட்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அரியநாயகிபுரம் அணைக்கட்டு 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு தளவாய் அரியநாதர் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டு கட்டியதன் முக்கிய நோக்கம் இங்கு வரக்கூடிய தண்ணீரை கால்வாய்களுக்கு திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டது. அணைக்கட்டில் உள்ள மறுகால் வழியாக நடந்து சென்று அக்கரைக்கு செல்ல வேண்டும்.

செல்லும் போது மரு காலில் விழும் தண்ணீரில் செயற்கை அருவி போன்று அமர்ந்து குளிக்க வசதியாக இருக்கும் அதேபோல் அணைக்கட்டின் மறுபுறம் நீச்சல் குளம் போல் மணல் நிறைந்து விழுந்து குளிப்பதற்கு ஏதுவாக இருப்பதால் விடுமுறை நாட்களில்; பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இங்கு குளித்து மகிழ்கின்றனர்.

அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் அங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவி
 
படக்குறிப்பு,

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வரும். அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பிக்கிறது. இரு புறமும் பசுமையான காட்சிகள் ரசித்த படி செல்லும் போது, இடது பக்கத்தில் அகஸ்தியர் அருவி செல்லும் வழி என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பாதையில் சென்றால், நீர் மின் தொகுப்பு, அதன் அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் இருந்து இறங்கி அருவிக்கு செல்லும் வழியில் ஏராளமான குரங்குகள் கூட்டங்களையும் காண முடியும். அங்கிருந்து கடந்து சென்றால்; அகஸ்தியர் அருவிக்கு சென்று விடலாம்.

இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். தண்ணீர் மிகக் குளிர்ச்சியாகவும், மூலிகைகளின் மணம் கலந்தும் கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவியில் பெண் சுற்றுலாப் பயணிகள், ஆண் சுற்றுலாப் பயணிகள் தனித் தனியாக நின்று குளிக்கும் வகையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண்களுக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியர் அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.

மாஞ்சோலை - குதிரைவெட்டி

மாஞ்சோலை - குதிரைவெட்டி
 
படக்குறிப்பு,

மாஞ்சோலை - குதிரைவெட்டி

திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் 3 மணி நேர பயணித்து 3500 அடி உயரத்தில் நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க மாஞ்சோலைக்கு செல்லலாம்.

அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் நிறைந்துள்ளன.

மாஞ்சோலை சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி வசதிகள் எதுவும் இல்லை. காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும். வழக்கமாகச் சென்று வரும் பேருந்துகளில் சென்று வருவதற்கு அனுமதி தேவையில்லை. சொந்தக் காரில், வாடகைக் காரில் செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்து ஒரு நாளைக்கு நான்கு முறையும், பாபநாசத்திலிருந்து 4 முறையும் இயக்கப்படுகின்றன.

நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கல்லிடைக் குறிச்சி வழியாக மாஞ்சோலை போகலாம். சாலை மார்க்கமாக செல்வோர் கல்லிடைக்குறிச்சி அடைந்து அங்கிருந்து செல்லலாம். இங்கிருந்து சில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாஞ்சோலை அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்ட வாட்ச் டவரில் ஏறி நின்று பார்த்தால் நாலாபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். மாஞ்சோலை க்கும் மேல் ஊத்து வழியாக குதிரைவெட்டி க்கு செல்லலாம்

குதிரைவெட்டியை சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த ஊரின் வாயிலிலே இடதுபுரம் உள்ளடங்கி ஒரு மேடான இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு தங்குவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விடுதியில் தங்க வரும்புவர்கள் முன்னதாக

என்ற இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யலாம் தங்குமிடத்தில் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

இந்த விடுதி அருகில் காட்சி கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் வயர்லெஸ் கோபுரமும் உள்ளது. இந்த காட்சி கோபுரம் மூலம் இங்கிருந்து கயத்தாறு வரை பார்க்கலாம். மேலும் கரையார், மணிமுத்தாறு ஆகிய அணைகள் தெரியும்.

மாஞ்சோலை - குதிரைவெட்டி
 
படக்குறிப்பு,

மாஞ்சோலை - குதிரைவெட்டி

https://www.bbc.com/tamil/articles/cw0188yjdkyo

Link to comment
Share on other sites

  • நியானி changed the title to தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2023 at 03:49, சுவைப்பிரியன் said:

நன்றி ஏராளன்.புரட்ச்சி மேடைக்கு வரவும்.

அவர் தமிழ்நாடாய் இருந்தால் தானே அவருக்கு தமிழ்நாட்டை பற்றி தெரிந்திருக்கும்.
 

  • Confused 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தேரிக்காடுகள் முதல் தென்மலை வரை: குற்றாலத்தைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள்

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 28 ஜூன் 2023

குற்றாலம் என்றாலே அனைவரது மனதிலும் தோன்றுவது அருவிகளும் அழகான மேற்கு தொடர்ச்சி மலையும் தான். பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி ஆகிய ஐந்து அருவிகள் மட்டுமே இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடங்கள்.

மற்ற அருவிகளான செண்பகா தேவி, தேனருவி, மற்றும் பழத்தோட்ட அருவிக்கு பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை.

பெரும்பாலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஐந்து பிரதான அருவிகளில் ஆசை தீர குளித்துவிட்டு கிளம்பி விடுவது வாடிக்கை. ஆனால் குற்றாலத்தை சுற்றி பல அழகான சுற்றுலா தலங்கள் உள்ளன. அத்தகைய அதிகம் அறியப்படாத இடங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குண்டாறு அணை

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது.

குற்றாலத்திலிருந்து 13கி.மீ. தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணைக்கட்டு. இது 1983ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் பலர் தங்களது திருமண போட்டோ ஷூட்டுகளுக்கு இந்த இடத்தையே விரும்புகின்றனர்.

 

ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, பலாப்பழம், மாம்பழம் என சுற்றியுள்ள மலைகளில் விளைந்த பழங்களை இங்குள்ள சிறு வியாபாரிகளிடம் வாங்கலாம். இந்த அணையை ஒட்டி இருக்கும் மலையில் இயற்கை எழில் கொஞ்சும் சில அழகிய அருவிகள் உள்ளன. அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல முடியாது.

மிகவும் கரடு முரடான காட்டு வழிப்பாதை என்பதால் வாகனங்களை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் அல்லது தனியார் ஜீப்புகள் மூலமாகவும் நீங்கள் செல்லலாம். ஜீப்பில் செல்ல ஒரு நபருக்கு 100 முதல் 200 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த காட்டுப்பாதை வழியாக அருவிக்கு செல்வதே ஒரு சாகசப் பயணம் தான்.

பருவமழைக் காலங்களில் இந்த அணைக்கட்டு வேகமாக நிரம்பி விடும். அணை நிரம்பி மறுகால் பாய்வதை பார்க்க ரம்மியமாக இருக்கும். குற்றாலத்திலிருந்து செங்கோட்டை வழியாக பயணம் செய்தால் 30 நிமிடங்களில் இந்த அணைக்கட்டை அடையலாம்.

 

அடவிநயினார் அணை

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் என்றால் ஒரு முழு நாளையும் கூட இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுப்பதில் செலவிடக்கூடும்.

குற்றாலத்திலிருந்து 21கி.மீ. தொலைவில், கேரள எல்லை அருகே அமைந்துள்ளது இந்த அணை. இந்த அணைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் இருக்கும் பசுமையான வயல்வெளிகளை ரசித்தபடியே செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்தச் சாலையை பாபநாசம், அந்நியன், தர்மதுரை போன்ற பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் என்றால் ஒரு முழு நாளையும் கூட அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுப்பதில் செலவிடலாம். அவ்வளவு அழகான இடம் இது.

அணைக்கு மேலே அருவி உண்டு, ஆனால் அங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை. காரணம் ஆபத்தான காட்டு வழிப்பாதை மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும்.

குற்றாலத்திலிருந்து பண்பொழி வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை அடைந்த பின் பிரதான சாலையிலிருந்து வலது புறம் திரும்பி 3 கி.மீ. தூரம் பயணித்தால் இந்த அணையை அடையலாம்.

கும்பாவுருட்டி அருவி

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணத்தின் போது மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை பார்க்கலாம்.

குற்றாலம்-அச்சன்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்தால் கேரள எல்லையை அடையலாம். அங்கிருக்கும் கேரள வனத்துறையின் சோதனைச் சாவடியில் உங்கள் வாகனம் குறித்த விவரங்களைப் பதிவு செய்த பின், கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணம் தொடங்குகிறது. அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம்.

இங்கு பயணிப்பது ஊட்டி, மசினகுடி போன்ற சாலைகளில் பயணிக்கும் உணர்வை தரும். வழியெங்கும் தென்படும் சிறு அருவிகளும், அழகிய நீரோடைகளும் நம்மை கவர்ந்து இழுக்கும். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சற்று கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும்.

குற்றாலத்திலிருந்து 29கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. தென்காசி-அச்சன்கோவில் இடையே தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலமும் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லலாம்.

கும்பாவுருட்டி அருவி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு பின்பற்ற வேண்டிய விதிகள் அதிகம். ஒரு நபருக்கான நுழைவு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி விட்டு, பிரதான சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி காட்டிற்குள் நடந்து சென்றால் இந்த அருவியை பார்க்கலாம். சற்று தொலைவு தான் என்றாலும் அருவியை கண்டவுடன் கிடைக்கும் அந்த புத்துணர்வு களைப்பை போக்கி விடும். அருவியை மிகச் சிறந்த முறையில் பராமரிக்கிறார்கள். வார நாட்களில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும், அதிக நேரம் குளிக்கலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற அருவி.

பாலருவி

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், பாலருவியில் 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம்

குற்றாலத்திலிருந்து 27கி.மீ. தூரத்தில் கேரளாவின் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி.

புளியரை வழியாக கேரள எல்லையைக் கடந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால் ஆரியங்காவு ஊரை அடையலாம். அங்கு உள்ள சோதனைச் சாவடிக்கு அருகில் இடது புறம் திரும்பினால் இந்த அருவிக்கு செல்லும் பாதையின் நுழைவு வாயிலை பார்க்கலாம். செங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆரியங்காவுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருவி அமைந்திருக்கும் காட்டுப் பகுதிக்கு கேரளா வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். பிரதான சாலையிலிருந்து 4கி.மீ. தூரம் என்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும் நடந்தோ அல்லது தங்கள் சொந்த வாகனங்களிலோ சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. ஒரு நபருக்கான நுழைவு கட்டணம் 50 ரூபாய்.

காடுகளின் வழியே செல்லும் ரம்மியமான சாலையில் பயணிக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிப்பது சற்று கடினம் தான். அருவிக்கு 200 மீட்டர் தொலைவில், வனத்துறையின் வாகனத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால், இதமான சாரலை உணர முடியும்.

பருவமழைக் காலங்களின் போது திருவிதாங்கூர் மகாராஜாக்கள் இங்கு வந்து நீராடி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக சிதிலமடைந்த கல் மண்டபத்தையும், குதிரை லாயங்களையும் இங்கு காணலாம். ஜூலை-செப்டம்பர் மாதங்களில் சென்றால், 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம்.

தென்மலை அணை மற்றும் சூழலியல் சுற்றுலா பூங்கா

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம்.

ஆரியங்காவு ஊரிலிருந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால், 20 நிமிடங்களில் தென்மலை அணையை அடையலாம். பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம்.

அணைக்கு முன்பாக மரத்தாலான ஒரு தொங்கு பாலம் உள்ளது. ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே இந்த பாலத்தில் செல்ல அனுமதி உண்டு. தொங்கு பாலத்தில் நடந்தவாறு அணையை மிகவும் அருகிலிருந்து பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

அணைக்கு அருகில் அமைந்துள்ள தென்மலை சூழலியல் சுற்றுலா பூங்கா, குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கு ஏற்ற இடம். இங்கு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்கா, நடனமாடும் இசை நீரூற்று, காட்டிற்குள் சைக்கிள் ஓட்டுவது முதல் அணையில் படகு சவாரி செல்வது வரை, இயற்கை விரும்பிகளை குதூகலப்படுத்தும் வகையில் பல அம்சங்கள் இங்கு உள்ளன.

இங்குள்ள மான் பூங்காவில் சாம்பார் மான்கள் மற்றும் அழகான புள்ளி மான்களை அதிகம் பார்க்க முடியும். மான் பூங்கா செல்வதற்கான நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இரவில் தங்குவதற்காக கேரள சுற்றுலாத்துறையின் சார்பாக இங்கு சிறப்பு விடுதிகள் உள்ளன. Thenmalaecotourism.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

 

வர்கலா

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

வர்கலாவின் அழகே, ஒரு மலையிலிருந்து கடலை ரசிப்பது போன்று அமைந்திருக்கும் நிலப்பரப்பு தான்.

கேரளாவின் கோவா என அழைக்கப்படுகிறது வர்கலா, காரணம் இங்குள்ள அழகான கடற்கரைகள். ஒருநாள் பயணமாக குற்றாலத்திருந்து 104கி.மீ. தொலைவில் இருக்கும் வர்கலாவிற்கு சென்று வரலாம். பல வருடங்களாக கோவா செல்ல திட்டமிட்டு ஆனால் செல்ல முடியாத இளைஞர்களுக்கு வர்கலா சிறந்த ஆறுதலாக இருக்கும்.

வர்கலாவின் அழகே, ஒரு மலையிலிருந்து கடலை ரசிப்பது போன்று அமைந்திருக்கும் நிலப்பரப்பு தான். வருடம் முழுவதும் இங்குள்ள கடற்கரைகளில் வெளிநாட்டினர் சூரியக் குளியல் எடுப்பதை காணலாம். கோவாவின் ஹிப்பி கலாசாரத்தை வர்கலாவிலும் பார்க்க முடியும். ஹிப்பி பொருட்களை வாங்குவதற்கென்றே ஒரு சந்தை கடற்கரை அருகே உள்ளது.

இங்குள்ள ரெஸ்டோ கஃபேக்களில் காபி குடித்தவாறே அரபிக் கடலின் அழகை பார்த்து ரசிக்கலாம். இரவு நேரங்களில் கடற்கரை உணவகங்களில் நாம் தேர்வு செய்யும் மீன் வகைகளை உடனடியாக நமக்கு சமைத்து தருவார்கள். விலை சற்று அதிகம் என்றாலும் மலையும் கடலும் சங்கமிக்கும் அந்த பகுதியில் அமர்ந்து இரவு உணவு உண்ணும்போது, விலை பற்றிய கவலை பறந்து விடும்.

உவரி மற்றும் மணப்பாடு

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

கூட்டம் அதிகம் இல்லாத அமைதியான கடலோர கிராமம் உவரி, குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு அமைதியான கடலோர கிராமத்தில் அமர்ந்து கடலை ரசிக்க விரும்பினால், உவரி மிகச் சிறந்த இடம். உவரியின் கப்பல் மாதா கோயில் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம்.

போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ் கட்டிடக்கலையைத் தழுவி கட்டப்பட்ட சில கட்டிடங்கள், தேவாலயங்களை இங்கு பார்க்க முடியும். குற்றாலத்திலிருந்து 116கி.மீ. தூரத்தில் உள்ளது உவரி. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து உவரிக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குற்றாலம், அருவி, காடுகள், சுற்றுலா, விடுமுறை, பயணம்
 
படக்குறிப்பு,

கப்பல் மாதா கோயில் உவரி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம்.

உவரியிலிருந்து அழகான தேரிக்காடுகள் வழியாக 30 நிமிடங்கள் பயணம் செய்தால் மணப்பாடு கிராமத்தை அடையலாம். மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம் போன்ற அமைப்பில் உள்ளது மணப்பாடு. மீன் ஏற்றுமதிக்கு பெயர்பெற்ற ஊர் இது.

கடற்கரை குன்றின் மேல் அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயம், 400 வருடங்களுக்கு முன் போர்த்துகீசிய மாலுமியர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் ஒரு இடமாக இந்த ஆலயம் உள்ளது.

அதிகம் வெயில் இல்லாத பருவமழைக் காலங்களின் போது, பனைமரங்கள் நிறைந்த சாலைகளின் வழியாக இந்த இரு கடலோரக் கிராமங்களுக்கு பயணம் செய்தால், ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

எனவே அடுத்த முறை குடும்பத்துடன் குற்றாலம் செல்கிறீர்கள் என்றால், அங்குள்ள அருவிகளில் மட்டுமே குளித்து விட்டு வராமல், மேலே குறிப்பிட்டுள்ள இடங்களுக்கும் செல்வதன் மூலம் பசுமையான காடுகள், மலைகள், கடல்கள், தேரிக்காடுகள் என பல்வேறு வகையான நிலப்பரப்புகளை காணக்கூடிய ஒரு அருமையான அனுபவம் கிட்டும்.

https://www.bbc.com/tamil/articles/cy0jdngymnxo

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குற்றாலம் செல்கிறீர்களா! ஆர்ப்பரிக்கும் அருவிகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

குற்றாலம் செல்கிறீர்களா! ஆர்ப்பரிக்கும் அருவிகளை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அரபிக் கடலுடன் இணைந்து குஜராத் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் ஒரு வரப் பிரசாதம் என்று சொன்னால் மிகையாகாது.

அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்று இந்த மலைகளால் தடுக்கப்பட்டு பருவமழை பொழியக் காரணமாகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தின்போது இந்த மலைத் தொடர்களில் அமைந்துள்ள ஏராளமான நீர் வீழ்ச்சிகளும், ஆறுகளும் நிரம்பி வழியும்.

அதில் முக்கியமானவை குற்றால அருவிகள். உங்கள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் குறைந்த செலவில் ஒரு நிறைவான சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்கள் என்றால் உங்களுக்காகத்தான் இந்த சிறப்பு கட்டுரை.

குற்றாலம் செல்வது எப்படி?
குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

குற்றால நுழைவு வாயில்

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள் குற்றாலத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

சென்னையிலிருந்து குற்றாலம் செல்ல விரும்புவோருக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை வழியாக தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் போன்றவை தினசரி ரயில்களாக இயக்கப்படுகின்றன.

சிலம்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்று ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு தினமும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு பயணிகள் ரயில்களும் அரசுப் பேருந்துகளும் தினமும் இயக்கப்படுகின்றன.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

குற்றாலப் பேரருவி

குற்றால அருவிகள்

ஊரின் நுழைவுவாயிலை கடக்கும்போதே பிரமாண்டமான மேற்குத் தொடர்ச்சி மலை உங்களை வரவேற்கும். இங்குள்ள அருவிகளில் விழும் தண்ணீர், பொதிகை மலைகளில் உள்ள பல்வேறு மூலிகைச் செடிகளைக் கடந்து வருவதால், அருவி நீரிலும் மூலிகை குணங்கள் நிறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள ஐந்து பிரதான அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பருவமழைக் காலங்களின்போது இந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். சில நிமிடங்களில்கூட இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும்.

எனவே இந்த அருவிகளில் குளிப்பவர்கள் காவல்துறை எச்சரிக்கை விடுத்தவுடன் அருவி பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இந்த அருவிகளில் சோப்பு, ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

பருவமழை காலத்தில் பேரருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு

பேரருவி

பேரருவி என்று சொல்வதைவிட “மெயின் அருவி” என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். குற்றாலத்தின் முதல் பிரதான அருவியான பேரருவியின் அருகில்தான் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது.

‘குற்றால சீசன்’ என்று அழைக்கப்படும் பருவமழைக் காலங்களின்போது பிற அருவிகளைவிட பேரருவியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

60 மீட்டர் உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது. இடையே உள்ள பொங்குமாக்கடல் எனும் 19 மீட்டர் ஆழமுள்ள குழி போன்ற அமைப்பில் முதலில் தண்ணீர் விழுந்து, பொங்குமாக்கடல் நிரம்பிய பிறகு தண்ணீர் குளிக்கும் பகுதியில் விழுகிறது.

இந்த பொங்குமாக்கடல் என்ற அமைப்பு இல்லையென்றால், பேரருவி மக்கள் குளிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்காது, காரணம் அதிக உயரத்திலிருந்து தண்ணீர் விழுவதால் அழுத்தமும் அதிகமாக இருந்திருக்கும்.

குற்றாலம்
 
படக்குறிப்பு,

குற்றால கடை வீதிகளில் கிடைக்கும் இரம்புட்டான், மங்குஸ்தான், முட்டைப் பழம், பன்னீர் கொய்யா உள்ளிட்ட அரிய வகை பழங்கள்

கடைவீதி உலா

ஆசை தீர குளித்து முடித்துவிட்டு பேரருவிக்கு அருகிலுள்ள கடை வீதியில் ஒரு சிறு உலா வந்தால் தேங்காய் எண்ணெயில் பொரித்த வாழைக்காய் சிப்ஸ், சூடான ரவை அல்வா, மிளகாய் பஜ்ஜி, பாதாம் பால் எனப் பல்வேறு வகையான சிற்றுண்டிகளைச் சுவைக்கலாம்.

குற்றாலத்தில் கிடைக்கும் துரியன், இரம்புட்டான், மங்குஸ்தான், முட்டைப் பழம், பன்னீர் கொய்யா, ஸ்டார் பழம், பிளம்ஸ் போன்ற அரிய வகை பழங்களைச் சுவைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

அருவிகள் மட்டும் அல்லாது இத்தகைய அரிய பழங்களுக்கும் குற்றாலம் மிகவும் பிரசித்தம்.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

புலியருவியில் ஆனந்தமாய் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

புலியருவி

குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் பழைய குற்றால அருவிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புலியருவி. மிகச் சிறிய அருவியான இது, குழந்தைகளும் பெரியவர்களும் குளிப்பதற்கு ஏற்ற அருவி எனச் சொல்லலாம்.

ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் நின்று குளித்தாலே, அருவியில் நிற்க இடம் இருக்காது. அருவிக்கு முன் இருக்கும் சிறு தடாகம், குழந்தைகளுக்கான ஒரு சிறிய நீச்சல் குளம் போலக் காட்சியளிக்கிறது.

பிற பிரதான அருவிகளில் தண்ணீரின் வேகமும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். அதை விரும்பாதவர்களுக்கு இதுபோன்ற சிறிய அருவிகளில், குறைவான உயரத்திலிருந்து விழும் மிதமான தண்ணீரில் குளிப்பது நிச்சயம் ஓர் அழகான அனுபவமாக இருக்கும்.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

பளழய குற்றால அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

பழைய குற்றால அருவி

குற்றால அருவிகளில் இந்த அருவி சற்றுத் தனித்துவமானது. இங்கு விழும் தண்ணீரின் வேகமும் அழுத்தமும் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பேரருவியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு குற்றால பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நுழைவு வாயிலில் இருந்து அருவிக்குச் செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கும். வாகனத்தை நிறுத்திவிட்டு படிக்கட்டுகளில் ஏறி அருவியின் அழகை ரசித்துக்கொண்டே நடந்தால், நம் மீது விழும் சாரல் மூலமாகவே தண்ணீரின் வேகத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இந்த அருவியின் பாறையில் மிகப் பெரிய படிக்கட்டுகள் போல செதுக்கப்பட்டு, அந்த ஒவ்வொரு படிக்கட்டிலும் தண்ணீர் விழுந்து பிறகு குளிக்கும் பகுதியில் விழுகிறது. முடிந்தளவு தண்ணீரின் வேகத்தை குறைக்கவே இதைச் செய்துள்ளார்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான அருவியின் இரு பிரிவுகளின் முன்பு அதிக ஆழமில்லாத சிறு தடாகங்கள் உள்ளன. அருவியின் முன்பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கென்று ஒரு சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. பிற அருவிகளுடன் ஒப்பிடும்போது விடுமுறை அல்லாத நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும்.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

பருவமழை காலங்களின்போது தண்ணீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவது தான், ஐந்தருவி எனப் பெயர் வரக் காரணம்.

ஐந்தருவி

வழக்கமாக ஐந்தருவிகளில் குளிப்பவர்களுக்குத் தெரியும், பிற அருவிகளின் நீரைவிட இங்கு விழும் நீரின் குளிர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். பருவமழை காலங்களின்போது தண்ணீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவது தான், ஐந்தருவி எனப் பெயர் வரக் காரணம்.

இதில் ஆண்களுக்கு மூன்று பிரிவுகளும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் பல பிரிவுகளில் குளித்து மகிழ வாய்ப்பு கிடைப்பதால் இங்கு வழக்கமாகவே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பேரருவியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு குற்றால பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஐந்தருவிக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலா துறையின் படகு குழாம் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குற்றால சீசனுக்கும் சுற்றுலாத் துறை சார்பாக படகு சவாரி ஏற்பாடு செய்யப்படுகிறது.

சிறிய படகு குழாம்தான் என்றாலும் மலைகளை ரசித்தவாறே, குற்றால சாரலில் உங்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

குற்றாலத்தில் காணக் கிடைக்கும் அரிய வகை இரம்புட்டான் பழ மரம்

சுற்றுச்சூழல் பூங்கா

இந்த அருவிக்கு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான இடம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையின் சார்பாக ஐந்தருவியின் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா.

முப்பது ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீருற்றுப் பூங்கா, ரோஜா தோட்டம், வண்ணத்துப் பூச்சி தோட்டம், மரப்பாலம் எனப் பல அம்சங்கள் உள்ளன.

தோட்டக்கலைத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் மா, பலா, இரம்புட்டான், மலை வாழை, மங்குஸ்தான் போன்ற பழக் கன்றுகளையும், மிளகு, கிராம்பு போன்ற செடிகளையும் குறைந்த விலைக்கு வாங்கலாம்.

வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த குற்றால சுற்றுச்சூழல் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.

செண்பகாதேவி அருவி

இந்த அருவியை அதிகமானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாகவே இங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று வனக்காவலர் ஒருவருடன் சேர்ந்து இந்த அருவிக்குச் செல்லலாம்.

பேரருவிக்கு மேலே அமைந்திருக்கும் மலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அருவியின் அருகே உள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கும் வனத்துறையிடமிருந்து சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த அருவியில் குளிப்பதற்கு மட்டும் யாருக்கும் அனுமதி கிடையாது.

குற்றால அருவிகள்
 
படக்குறிப்பு,

தண்ணீர் கொட்டும் செண்பகாதேவி அருவி

பேரருவியிலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் உள்ள சிற்றருவியைக் கடந்து ஒரு காட்டுப் பாதையின் வழியாகவே இந்த அருவிக்குச் செல்ல முடியும். பார்ப்பதற்கு எளிதான பாதை போலத் தெரிந்தாலும், காட்டுயிர்களின் நடமாட்டம் இந்தப் பாதையில் அதிகமாக உள்ளது. இது அகத்திய முனிவர் நடந்து சென்ற பாதை எனவும் நம்பப்படுகிறது.

செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் வழியில் பேரருவிக்கு நீர் செல்லும் பாதையைப் பார்க்கலாம். இவ்வாறு பாயும் நீர்தான் பொங்குமாக்கடலில் விழுந்து பிறகு மெயின் அருவியாக விழுகிறது. மழைக் காலங்களின்போது இந்தப் பாதையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் இங்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செண்பகாதேவி அருவிப் பகுதியில் இருந்துதான் குற்றாலத்தைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத, நெகிழிக் குப்பைகள் இல்லாத, ஒரு தூய்மையான அழகான அருவியைக் காண விரும்பினால் செண்பகாதேவி அருவிதான் சிறந்த இடம். இதற்கு மேலே உள்ள தேனருவிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

குற்றால அருவிகளின் தனிச் சிறப்பு

மற்ற சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு குற்றால அருவிகளுக்கு உண்டு.

இங்குள்ள அனைத்து பிரதான அருவிகளும் மக்கள் எளிதாக செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

பருவமழை காலங்களின்போது அருவிகளில் குளித்து மகிழ உயரமான மலைகளில் ஏற வேண்டாம்.

ஆபத்தான காடுகளின் வழியே பயணம் செய்ய வேண்டாம்.

உங்கள் வாகனங்கள் மூலமாகவே அருவியை அடைந்து, சில நிமிடங்கள் நடந்தாலே குற்றாலத்து அருவிகளின் சாரலில் நனையலாம்.

https://www.bbc.com/tamil/articles/c72mv381jgpo

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை - ஏன் இந்த ஏற்பாடு?

கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை - ஏன் இந்த ஏற்பாடு?

பட மூலாதாரம்,PARTHIBAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுரேஷ் அன்பழகன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 41 நிமிடங்களுக்கு முன்னர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.

நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில் கொஞ்சும் கொல்லிமலையின் அடிவாரப் பகுதி.

70 கொண்டை ஊசி வளைவு

அடிவாரப் பகுதியில் வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இங்கிருந்து சுமார் 500 மீட்டரில் இருந்து கொண்டை ஊசி (HAIR PIN BEND) வளைவுகள் துவங்குகின்றன.

அங்கிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். பேருந்து நிலையம் இங்குதான் உள்ளது. பேருந்து வசதியைப் பொருத்தவரை பிரச்னை இல்லை, தாராளமாகவே கிடைக்கிறது. ஆனால், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களே அதிகம்.

அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 300 அடி உயரம் கொண்டது. மூலிகைகள் ஊடாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் இதில் குளிக்கவே, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இத்தனை கஷ்டப்படுகின்றனர்.

 
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

பட மூலாதாரம்,PARTHIBAN

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 15 வயதில் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள். சிறியவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இளையவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்தில் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிடலாம், சுமார் 50 வயதுடையவர்கள் செல்ல சுமார் 3 மணி நேரமாகும்.

அருவியில் சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர் குறைவாகவும் வரும், இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கோவில்.

மயங்கி விழுந்த வாலிபர்

கொல்லிமலையை சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நிதிஷ் காந்த், 22 என்பவர் வந்தார்.

மலைப்பகுதியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியைக் காண அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 700 படிக்கட்டுகளைக் கடந்தபோது நிதிஷ்காந்த் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கொல்லிமலை தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர்.

அருவிக்குச் செல்லத் தடை

இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது.

சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கொல்லிமலை வனத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

உடல் தகுதி அவசியம்

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

பட மூலாதாரம்,PARTHIBAN

அந்த வகையில் தற்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில் பகுதியில் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதில் உடல்நிலை குறைவால் வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுறுத்தலின் பேரில் கொல்லிமலை வனத்துறையினர் தற்போது இதைக் கடைபிடித்து வருகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுமார் 1,200 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் முன்பே இதயப் பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளோம்," என்று கூறினார்.

அதிக உடல் பருமனோடும் நடக்க முடியாமலும் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை மூலம் கண்டறிந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், "சுற்றுலா பயணிகள் சிலர் தெரியாமல் சென்று விடுகின்றனர். அவர்கள் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு, கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுத்துச் சென்றாலும் பரவாயில்லை. போட்டி, போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சிக்குச் சென்ற நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவர் தனது அண்ணனுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளது. மேலும், உடல் பருமனுடன் இருந்துள்ளார்," என்று கூறுகிறார் ராஜாங்கம்.

 

மருத்துவ பரிசோதனை

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

பட மூலாதாரம்,PARTHIBAN

இந்தச் சம்பவத்திற்கு பிறகு வனத்துறை மூலமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணித்து சந்தேகம் வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியே அனுப்பி வருவதாகக் கூறுகிறார் ராஜாங்கம்.

சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவற்றை வனத்துறையினர் பரிசோதனை செய்கிறார்கள். இதற்காக வனத்துறைக்கு உரிய மருத்துவ உபகரணம் கொடுத்து, உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை மூலம் பரிசோதித்து, அதில் இந்த நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளை ஏறும் உடல் தகுதி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களை அனுப்ப வேண்டாம் என வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும் மூச்சு வாங்கும்படி செல்லாமல் ஆங்காங்கே அமர்ந்து உரிய ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டும். இதை உணர்ந்து நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் பிரச்னை வராது. இதை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்," என்று வலிபஉறுத்துகிறார் ராஜாங்கம்.

வனத்துறை மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புவது வரவேற்கத்தக்கது என்று கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

"பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப நீர்வீழ்ச்சிக்குச் சென்று குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு பெரிய இலக்குதான்.

கவனமாகச் சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டும். பாறை நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும்," என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதை சுற்றுலா பயணிகள் உணர்ந்து பத்திரமாக நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு நலமோடு திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் கூறினர்.

https://www.bbc.com/tamil/articles/c2jzg922dx4o

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

21 ஏப்ரல் 2024

சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. 40 டிகிரி செல்சியஸை கடந்து, வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் தலைநகரம் தகிக்கிறது. அருவி, அதை சுற்றி ஓடை, குட்டைகள் என நீர்நிலைகள் சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஆனால், பல்வேறு சூழல்களால் ஒருநாளை தாண்டி உங்களால் விடுப்பும் எடுக்க முடியாதா? ஒரே நாளில் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று திரும்ப வேண்டுமா? சென்னையை சுற்றி சுமார் 100-150 கி.மீ. தொலைவில் இருக்கக்கூடிய நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் இதோ.

தடா அருவி

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

சென்னை அருகேயுள்ள அருவி என்றாலே அந்த பட்டியலில் முதலிடம் தடா அருவிக்குத்தான். சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த தடா அருவி. சென்னையிலிருந்து தூரம் குறைவு என்றாலும் இந்த அருவி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உள்ளூரில் உப்பலமடுகு அருவி என இது அழைக்கப்படுகிறது.

சென்னையின் புழல், கும்மிடிப்பூண்டி வழியே தடா செல்லலாம். எல்லாவித போக்குவரத்து மூலமாகவும் தடாவுக்கு செல்லலாம். கார், பைக்கில் சென்றால் தடா நீர்வீழ்ச்சியின் நுழைவுவாயில் வரை செல்லலாம். பேருந்து என்றால் சென்னை கோயம்பேட்டில் இருந்து தடா வரை செல்லும் பேருந்துகளும் உள்ளன. ரயிலில் செல்ல வேண்டுமென்றால் சூலூர்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் தடாவுக்கு செல்லலாம். பொதுப் போக்குவரத்தில் செல்பவர்கள் தடா வரை சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் நுழைவு வாயிலுக்கு செல்ல வேண்டும்.

நுழைவுவாயிலில் உங்களுக்கும் உங்களின் வாகனத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கிருந்து நடந்துதான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். மலைப்பாங்கான பகுதி என்பதால் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடம். அதனால், டிரெக்கிங் செல்வதற்கு தகுந்த ஷூ எடுத்துச்செல்ல வேண்டும். சுமார் 10 கி.மீ தூரம் வரை டிரெக்கிங் சென்றுதான் தடா அருவியை அடைய முடியும். அதனால் சற்று கடினமான பயணமாகத்தான் இது இருக்கும். நடக்கும் வேகத்தைப் பொருத்து 2 மணிநேரமாவது ஆகும்.

முதியவர்கள், குழந்தைகள் தடா அருவி வரை செல்வது கடினமானதுதான் என்றாலும் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகள், குட்டைகளை அவர்கள் கண்டுகளிக்கலாம். எனவே, குடும்பத்துடன் இங்கு செல்லலாம். கரடுமுரடான பாதைகளும் பாறைகளும் இருக்கும் என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். நீச்சல், டிரெக்கிங் பிடிக்கும் என்பவர்கள் இங்கு நிச்சயம் செல்லலாம்.

 

கைலாசகோனா அருவி

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கைலாசகோனா அருவியும் சித்தூர் மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 92 கி.மீ. தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. திருப்பதிக்கு அருகிலுள்ள நகரி மலைகளின் பள்ளத்தாக்கில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து செல்பவர்கள் அம்பத்தூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வழியாக நாகலாபுரம் என்ற கிராமத்தை அடையலாம். நாகலாபுரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கைலாசகோனா நீர்வீழ்ச்சி. அருவி வரை செல்வதற்கான பொதுப் போக்குவரத்து இல்லை என்பதால், பைக் அல்லது காரில் செல்வது சிறந்தது.

கைலாசகோனாவில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பிரதான நீர்வீழ்ச்சி 40 அடி உயரம் கொண்டதாகும்.

அந்த நீர்வீழ்ச்சிக்கு முன்பாக கைலாசநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த முதல் நீர்வீழ்ச்சி வரை குடும்பத்துடன் செல்லலாம். ஆனால், அதனைக் கடந்து இரண்டாவது நீர்வீழ்ச்சி, மூன்றாவது நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது வழியில் மிகவும் ஏற்ற-இறக்கமான பாறைகள் நிறைந்திருப்பதாலும் சரியான பாதை இல்லாததாலும் நிச்சயம் அங்கு செல்வது எல்லோருக்கும் ஏற்றதல்ல.

டிரெக்கிங்கில் அனுபவம் உள்ளவர்கள் அந்த நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லலாம். அங்கு மலை மேலே நின்று பார்த்தால் சிறப்பான இயற்கை காட்சியை ரசிக்கலாம்.

 

தலகோனா அருவி

சென்னையிலிருந்து ஒரே நாளில் சென்று திரும்பலாம் - கோடையை குளிர்ச்சியாக்கும் ஐந்து அருவிகள்

பட மூலாதாரம்,APTOURISM

படக்குறிப்பு,தலகோனா அருவி

சென்னையிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் தலகோனா அருவி அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ளது. சுமார் 270 அடி உயரத்தில் உள்ள இந்த தலகோனா அருவி, ஆந்திர மாநிலத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். சேசாசலத்தின் மலைப்பாங்கான அடர்ந்த காடுகளுக்கு நடுவே தலகோனாவுக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது.

இந்த அருவிக்கு செல்லும் வழியில் மயில்களை காண முடியும். நீங்கள் சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால், மயில்களுக்கு ஆபத்து நேராமல் வாகனங்களை இயக்குவது அவசியம்.

நுழைவுவாயிலில் இருந்து பார்க்கிங் வரை செல்ல சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும். அருவிக்கு செல்லும் ஆரம்பப் புள்ளியில் அருவியிலிருந்து விழும் நீர் தேங்கி நீச்சல் குளம் போல காட்சியளிக்கும். அங்கிருந்து படிக்கட்டுகள், சிமெண்ட் பாதையைக் கடந்து செல்ல வேண்டும். நடப்பதற்கு சிரமம் பார்க்காமல் இந்த அருவிக்கு சென்றால், மிக உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை ரசிக்க முடியும். இயற்கை விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த இடம் விருந்தாக அமையும்.

 

சதாசிவ அருவி

சென்னை - 5 அருவிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து அம்பத்தூர், திருவள்ளூர், நகரி, புத்தூர், தடுகு வாயிலாக வேணுகோபாலபுரத்தை அடைய வேண்டும். அங்கிருந்து செம்மண் நிறைந்த சாலையில் செல்ல வேண்டும். இங்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்வது கடினம் என்பதால் பைக்கில் செல்வது சிறப்பானது. இந்த சாலையில் பைக்கில் செல்லும்போது ஒருபுறத்தில் உள்ள வளைவான மலைகளை கண்டு ரசிக்க முடியும். நக்லேரு எனும் பகுதிதான் அந்த மலையின் அடிவாரம். அங்கிருந்து டிரெக்கிங் சென்றுதான் நீர்வீழ்ச்சியை அடைய முடியும்.

வழியெங்கும் உள்ள சிறு பாறைகளில் உள்ள அம்புக்குறிகளை பின் தொடர்ந்தால், அருவியை சென்றடையலாம். செல்லும் வழியில் சில சிறிய கோவில்களும் உள்ளன. வன விநாயகர், ஆகாய லிங்கேஷ்வரர் ஆகிய மிகச்சிறிய கோவில்களை கடந்து செல்ல வேண்டும். இங்கு இரண்டு அருவிகள் உள்ளன. அவற்றை ஐயாவாரி, அம்மாவாரி அருவிகள் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். அருவிகளுக்கு அருகிலேயே சதாசிவேஸ்வரா ஆலயமும் உள்ளது.

மலை மேலே உணவு உள்ளிட்டவை கிடைக்காது என்பதால், நிச்சயம் நீங்கள் முன்னதாகவே அவற்றை தயார் செய்து எடுத்து வரவேண்டும். அருவிகளை கடந்து கோவில்கள் இருப்பதால், அவற்றை தரிசிக்க நினைப்பவர்களும் இங்கு செல்லலாம். அருவி போன்ற இடங்களுக்கு அதிகாலையிலேயே சென்றால் மாலைக்குள் மீண்டும் திரும்புவதற்கு சரியாக இருக்கும்.

ஆரே அருவி

சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆரே அருவி அமைந்துள்ளது. தடா உள்ளிட்ட அருவிகளுக்கு சென்றவர்கள் புதிதாக அருவிகளுக்கு செல்ல வேண்டும் என விரும்பினால் அவர்களுக்கு ஆரே அருவி பொருத்தமானதாக இருக்கும். இந்த அருவியின் உண்மையான பெயர் சுவாமி சித்தேஸ்வரா கோனா அருவி. ஆனால், ஆரே என்ற இடத்தில் இருப்பதால் இதை ஆரே அருவி என்று அழைக்கின்றனர். ஐந்து அருவிகள் இங்குள்ளன. அதில் ஒரு அருவியில் கீழே உள்ள தடாகத்தின் ஆழம் குறைவு என்பதால், குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் இந்த அருவிக்கு செல்லலாம். கோடைக்காலத்திற்கு செல்ல மிகவும் பொருத்தமானது இந்த அருவி.

சென்னை - 5 அருவிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்குறிப்பிட்ட அருவிகளில் பல அருவிகளுக்கு செல்லும் வழிகளில் குரங்குகள் பல தென்படும். அதனால், அவற்றிடமிருந்து நம் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பலவும் வனம், மலைப்பகுதி என்பதால், அங்கு வாழும் மற்ற விலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமலும் குப்பைகள் போன்றவற்றால் அப்பகுதிகளை அசுத்தமாக்காமலும் சுற்றுலாப் பயணிகள் இருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c51ng23xq3qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள்

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம்,KERALATOURISM

படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு
10 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது.

இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன.

குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம்.

இடுக்கி ராமக்கல்மேடு

‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம்.

‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

 

திண்டுக்கல் மலைக்கோட்டை

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம்,TAMILNADUTOURISM

படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை

மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.

சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.

 

கும்பக்கரை அருவி

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம்,TAMILNADUTOURISM

படக்குறிப்பு,கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி.

இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும்.

கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது.

அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

 

தேனி மேகமலை

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேனி மேகமலை

தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும்.

தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள்.

யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.

மதுரை யானைமலை

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும்.

இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது.

சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

சமணர் மலைகள்

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம்,TAMILNADUTOURISM

மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம்.

பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.