Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, satan said:

சர்வதேசம் தன்னை விட்டு, தான் விரும்பாத ஏதாவது சலுகையை தமிழருக்கு செய்துவிடுமோ என்கிற பயம், அந்தரிக்கும் தமிழர் தன்னை விட்டு போய்விடுவார்களோ என்கிற ஆதங்கம், ஆகவே யாரையும் நெருங்க விடாமல் தள்ளி வைப்பதற்கு பலவந்தமாக அழையா விருந்தாளியாக பூந்து சில சில்லறை வேலைகளை செய்து, தான் தமிழர் பக்கம், தமிழர் தம்மை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குகிறது

இது தான் நடக்கிறது.

முதலில் ரணில் ஜனாதிபதி ஆவதை தமிழத் தேசியக் கூட்டமைப்பை வைத்து தடுக்கப் பார்த்தது இந்தியா. அது முடியவில்லை. காரணம் ரணில் மேற்கின் ஆள். இந்தியாவின் தகிடுத்தனங்களுக்கு ஆடும் ஆள் அல்ல. ஆகவே இப்பொழுது பதறுகின்றது.

மாவை, உதயன் பேப்பர் சரவணபவான் போன்றோர் இந்தியாவின் முழுமையான செல்வாக்குக்கு உட்பட்ட நபர்கள். ரணிலுக்கு எதிராக வாக்காளிக்க இந்தியா சொல்லியதை வெளியில் சொன்ன சில தமிழ் அரசியல் வாதிகளை முதல் ஆளாகக் கண்டித்து தனது இந்திய விசுவாசத்தைக் கான்பித்தவர் மாவை. அவரைத் தான் அடுத்த வட மாகாண முதல்வராக்க துடிக்கிறது இந்தியா.

17 minutes ago, Kandiah57 said:

எல்லாம் இருக்கட்டும்   ஒரு கற்பனை செய்து பார்ப்போம் அதாவது  தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம்.    ...இலங்கையை தமிழர்கள் தான் ஆட்சி புரிகிறார்கள்..இந்நிலையில் .இந்திய தமிழர்கள்...[.தமிழ்நாடு தமிழர்கள் ] உருமைக்காக  இந்தியா அரசாங்கத்துடன் போரடுகிறார்கள்.    இலங்கையில் ஆட்சியிலுள்ள தமிழர்கள்   இந்தியா மத்திய அரசுக்கா. ?அல்லது தமிழ்நாடு தமிழருக்கா. ?ஆதரவு அளிப்பார்கள்?   

1...இந்தியா மத்திய அரசுக்கு ஆதரவு எனில் ஏன?. விளக்கம் தரவும் 

2..தமிழ்நாடு தமிழருக்கு எனில்   அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? இந்தியாவை எதிர்த்து ...உங்களால் அமைதியாக   உறுதியாக பலமாக. இலங்கையை ஆட்சி செய்ய முடியுமா?

தமிழ் நாட்டுத் தமிழருக்கு மானசீக ஆதரவை மட்டுமே கொடுக்க முடியும். மீறிப்போக வெள்ளிக்கிட்டால் இலங்கையின் சிறுபான்மையினரைப் பயன்படுத்தி நாட்டுக்குள் இந்தியா பிரிவினையைத் தூண்டும் 

  • Replies 82
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

இதெல்லாம் நடந்து முடியேக்க அங்கு தமிழ் மக்கள் எவளவு பேர் மிஞ்சி இருப்பார்கள்.

இதுக்கை வந்த கன கருத்துக்களை பார்த்தால் ஈழத்தமிழனுக்கு சாகிறதை தவிர வேற வழியில்லை போல கிடக்கு....

இருந்தாலும் ஒரு யோசனை.

முதலில் புலம்பெயர் தமிழர்களாவது பழைய பேதங்களை மறந்து ஈழத்தமிழராக ஒன்றிணைந்து அரசியல்/பொருளாதார ரீதியாக பலப்பட வேண்டும். தாம் வாழும் அந்தந்த நாடுகளில் அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

இருந்தாலும் ஒரு யோசனை.

புலம்பெயர் நாட்டு தமிழர்கள் சார்பாக வலிமைமிக்க,பேச்சு திறன் மற்றும் ஈழத்தமிழர் வரலாற்று அறிவு கொண்ட ஒரு தலைமை அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எல்லாம் இருக்கட்டும்   ஒரு கற்பனை செய்து பார்ப்போம் அதாவது  தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம்.    ...இலங்கையை தமிழர்கள் தான் ஆட்சி புரிகிறார்கள்..இந்நிலையில் .இந்திய தமிழர்கள்...[.தமிழ்நாடு தமிழர்கள் ] உருமைக்காக  இந்தியா அரசாங்கத்துடன் போரடுகிறார்கள்.    இலங்கையில் ஆட்சியிலுள்ள தமிழர்கள்   இந்தியா மத்திய அரசுக்கா. ?அல்லது தமிழ்நாடு தமிழருக்கா. ?ஆதரவு அளிப்பார்கள்?   

1...இந்தியா மத்திய அரசுக்கு ஆதரவு எனில் ஏன?. விளக்கம் தரவும் 

2..தமிழ்நாடு தமிழருக்கு எனில்   அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? இந்தியாவை எதிர்த்து ...உங்களால் அமைதியாக   உறுதியாக பலமாக. இலங்கையை ஆட்சி செய்ய முடியுமா?

இதற்கு இருக்கிற ஒரே வழி இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும், இந்தியா எதிர்க்கிற நாடுகளோடு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும், அவர்களையே நம்பாமல் பொதுவான உறவுகளை பேணவேண்டும் நம்ப நட நம்பி நடவாதே போன்று. இந்திய ராஜதந்திர ரீதியில் தோல்விகளை கண்டு வருகிறது போல் தெரிகிறது. அதனாலேயே ஏதிலிகளான ஏதோ ஒருவகையில் அதற்கு உதவுகிறோம் என்பதால் நம்மை அசையவிடாமல் வைத்து பயன்படுத்துகிறது. அதற்கு துணையாக தமிழக தமிழரை துணைக்கு அழைக்கிறது. அண்மையில் ஒரு கதை கேட்டேன். ஒரு கணவர் தன் மனைவியை எவ்வளவு அவமானப்படுத்த, சிறுமைப்படுத்த, கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்கிறார். பொறுமையிழந்த மனைவி அவரை விட்டுப்பிரிய முனையும் பொழுது நீ எனது மனைவி, நான் உன்னோடுதான் வாழுவேன் இதில் வேறு யாரும் தலையிட முடியாதென்கிறார். காரணம் அவரது பலமே அவள்தான். அவளும் விட்டுப்போனால் அவரால் எதுவும் செய்ய முடியாது, அடிச்சுப்போட்ட சாரை என்பது நன்றாகவே தெரியுமவருக்கு. அவள் சொல்கிறாள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் இந்த மனநிலை மாறவேண்டும் சுய மரியாதை அவசியம். இது மாறாவிட்டால் இப்படிப்பட்ட புருஷர்களுக்கு கொண்டாட்டந்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகிடி said:

நன்றி ஏராளன். இது தான் எனது நிலைபாடும். 

நீங்கள் யாழில் இணைந்து ஒருவருடம்தான் ஆகின்றது அதுக்கு முதல் என்ன பேரில் இருந்தீர்களோ யார் அறிவார் திடீர் என்று வந்து சிங்களம் தருவதை வாங்கிகொள்ளுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறிர்கள் இந்தியாவை யாரும் நம்புவது கிடையாது வாலியின் காலத்தில் இருந்து எழுமணி நேரத்துக்கு முன் இலங்கை நேரப்படி சாத்தானை எராளன் ஆக்கும் அளவுக்கு உங்களுக்கு சிந்தனை சிதறிவிட்ட காரணம் என்னவோ ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இவ்வளவும் நடந்து, சிங்களவனே வெளிப்படையாக இந்தியாவின் போரையே நாங்கள் செய்து முடித்தோம் என்று சொல்லிக்காட்டிய பின்னும் இந்தியாவை  நம்புகிறீர்கள் என்றால் உங்கள் நம்பிக்கையை என்ன சொல்வது? நாம் இலங்கையில் இரண்டாந்தர பிரஜைகள் இல்லை அடிமைகள் இப்போது. நீதி அமைப்பிலும் சரி, அரசியலமைப்பிலும் சரி. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. பிறகு எதை கதைப்பது உங்களுடன்?     

2 hours ago, பகிடி said:

நீங்கள் இந்தியாவைப் பற்றி ஓரளவுக்கு சரியாகவே சிந்திக்கிறீர்கள் ஆனால் பின் எதற்காக திரும்பவும் இந்தியாவுடன் இணக்க மனப்பான்மையில் இருந்தால்த் தான் தீர்வு சாத்தியம் என்கிறீர்கள்?

இந்தியாவினை கடந்து எம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற உண்மை நிலையினை புலிகளும் உணர்ந்திருந்தனர் என்றே கருதுகிறேன், எமக்கு வேறு தெரிவு இல்லை.

மேற்கின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கூட, புலிகள் இந்தியாவில் வைத்து பேச்சுவார்த்தியினை நடத்த முயன்றனர், மேற்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம், இது தற்போதய உலக ஒழுங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் மேற்கில் ஆதிக்கம் செலுத்தும் போது நிகழ்ந்தது.

ஆனாலும் பனிப்போர் காலத்திலேயே இந்தியாவின் முக்கியத்துவம் குறைவாக இருந்த போதே இந்தியாவினால் இலங்கையில் மேற்கிற்கு எதிராக இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடிந்திருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்கள் மீது மட்டும் திணிக்கபட்டதாக நாம் கருதும் வேளை சிங்களவர்கள் அரசு நாட்டை விற்று விட்டது எனும் நிலைப்பாட்டில் தென்பகுதியில் கலவரம் ஏற்படலாம் அனும் நிலையில் இலங்கை அரசு தேசிய தொலைக்காட்சியில் ஒரு ஆவணத்தினை ஒளிபரப்பியிருந்தது.

அதன் தலைப்பு சரியாக நினைவில் இல்லை(according and withdrawal? தலைப்பு சரியாக நினைவில் இல்லை),நீண்ட காலத்திற்கு முன் பார்த்த நினைவுண்டு(ஆங்கில மூலம்) ஆங்கில அறிவு அப்போது மிகவும் குறைவு, ஆனால் அதில் உள்ள காட்சிகளில் இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கையினை சூழ இருந்த நிலையில் இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்காவிடில் இலங்கையின் மீது இந்தியா படையெடுக்கும் என்பதாக உணர்ந்து கொண்டேன்.

இங்கு சிங்களவர்கள் தமது ஜென்ம விரோதிகளாகக்கருதும் இந்தியாவினை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு எம்மை அழித்தார்கள் ?

1987 இல் சிங்களத்தின் போரை இந்தியா பொறுப்பெடுத்ததும் அதனாலேயே,வேலை முடிவடைய போகிறது என தெரிந்ததும் இந்தியாவினை அவமானப்படுத்தி வெளியேற்றவும் இலங்கையால் முடிந்திருந்தது.

அதே போல எமது தேவைகளை ஏன் இந்தியாவினை பயன்படுத்தி நிறைவேற்ற கூடாது? இதில் இந்திய தரப்பிற்கும் இலாபம் தமிழருக்கும் இலாபம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2023 at 19:30, பெருமாள் said:

நீங்கள் யாழில் இணைந்து ஒருவருடம்தான் ஆகின்றது அதுக்கு முதல் என்ன பேரில் இருந்தீர்களோ யார் அறிவார் திடீர் என்று வந்து சிங்களம் தருவதை வாங்கிகொள்ளுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறிர்கள் இந்தியாவை யாரும் நம்புவது கிடையாது வாலியின் காலத்தில் இருந்து எழுமணி நேரத்துக்கு முன் இலங்கை நேரப்படி சாத்தானை எராளன் ஆக்கும் அளவுக்கு உங்களுக்கு சிந்தனை சிதறிவிட்ட காரணம் என்னவோ ?

இப்போ இந்தியாவுக்கு தமிழரை எப்படி வளைத்துப்போடுவது, யாரைப்பிடிப்பது, தமிழரின் அன்பைப்பெற்றவர்கள் யார் அவர்களை வைத்து தமிழரின் அசைவுகளை தடுப்பது என்று தவிக்குது. தமிழக தமிழரை, நம்மளை என்று சுத்துவதைப்பாத்தால் நிலைமை இறுகுகிறது போல் தெரிகிறது. அதற்கு ஒரு பயம்; அமெரிக்கா இறங்கிவிடுமோ ரணிலை வைத்து என்பது பெரிய கவலை. புலம்பெயர் நாடுகளில் அரசியல் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியல் செயற்பாடுகளில் சிங்கள அரசின் கொடுமைகளை எடுத்துரைக்கும்போது, இந்தியா செய்தவற்றையும் ஆதாரத்தோடு விளக்கி அதன் போலி அஹிம்ஸை போதனைகளை கிழித்தெறியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

எவ்வளவோ நம்பினோம் ஆனால் இந்தியா நம்பிக்கைக்கு உரியதல்ல என நிரூபித்தது. அது எமது நம்பிக்கையை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி அழிக்கிறது. நம்ம தலைவர்கள் அங்கேயே தவமாக கிடந்து முயல்கிறார்கள் அதை தனது எதிரிகளை விரட்டும் பிராணிகளாகவே அவர்களை பாவிக்கிறது.  இதற்கு மேல் எப்படி முயற்சிப்பது என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்! இந்தியாவை இருபகுதியும் பயன்படுத்துவதால் பயன்பெறுவது இந்தியாதான் உண்மை என்பது இல்லை. எதிரியின் நண்பனிடம் போய் நாம் முறையிடுவதால் பலன் கிடைக்குமா? இங்குள்ள போலீஸ்காரமாதிரி இரண்டு பக்கமும் அடிபட விட்டு இரண்டு பக்கமும் லஞ்சம் பெறுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

இப்போ இந்தியாவுக்கு தமிழரை எப்படி வளைத்துப்போடுவது, யாரைப்பிடிப்பது, தமிழரின் அன்பைப்பெற்றவர்கள் யார் அவர்களை வைத்து தமிழரின் அசைவுகளை தடுப்பது என்று தவிக்குது. தமிழக தமிழரை, நம்மளை என்று சுத்துவதைப்பாத்தால் நிலைமை இறுகுகிறது போல் தெரிகிறது. அதற்கு ஒரு பயம்; அமெரிக்கா இறங்கிவிடுமோ ரணிலை வைத்து என்பது பெரிய கவலை. புலம்பெயர் நாடுகளில் அரசியல் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியல் செயற்பாடுகளில் சிங்கள அரசின் கொடுமைகளை எடுத்துரைக்கும்போது, இந்தியா செய்தவற்றையும் ஆதாரத்தோடு விளக்கி அதன் போலி அஹிம்ஸை போதனைகளை கிழித்தெறியலாம். 

எதற்காக அமெரிக்கா இலங்கையில் இறங்கும் என கருதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2023 at 19:30, பெருமாள் said:

நீங்கள் யாழில் இணைந்து ஒருவருடம்தான் ஆகின்றது அதுக்கு முதல் என்ன பேரில் இருந்தீர்களோ யார் அறிவார் திடீர் என்று வந்து சிங்களம் தருவதை வாங்கிகொள்ளுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறிர்கள் இந்தியாவை யாரும் நம்புவது கிடையாது வாலியின் காலத்தில் இருந்து எழுமணி நேரத்துக்கு முன் இலங்கை நேரப்படி சாத்தானை எராளன் ஆக்கும் அளவுக்கு உங்களுக்கு சிந்தனை சிதறிவிட்ட காரணம் என்னவோ ?

நீங்கள் என்னை சந்தேகியுங்கள் அதில் எனக்கு எந்த நட்டமும் இல்லை.

ஆனால் நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்யலாம்? தீர்வை எப்படி பெறுவது? நாங்கள் எப்படி ஓரளவுக்காவது நிம்மதியாக இருப்பது?

இந்தியா எம்மையும் சிங்களவரையும் கூர் தீட்டி அடி பட வைக்கிறது என்ற உண்மை அப்பட்டாமாகத் தெரியும் பொழுது என்ன தான் செய்ய முடியும்? இன்னொரு போரைத் தொடங்கி நடத்தலாமா?

அடுத்த 100 வருடத்துக்கு எல்லாம் யோசிக்க வேண்டாம். இன்னும் அடுத்த இருப்பது வருடங்களுக்கு என்று யோசியுங்கள். கிடைப்பதை இப்போதைக்கு வாங்குவோம். அடுத்த தலைமுறை ஊரில் இருக்க வேண்டும் அது தான் இப்போதைக்கு நாங்கள் செய்ய வேண்டியது. மீதியை அடுத்த தலை முறை பார்த்துக்கொள்ளும்.

அடி பட பலம் இல்லை, அங்கே எம் சனங்களின் தொகையும் குறைகிறது, கஞ்சா பாவனை, பிள்ளைகள் படிப்பு முந்தின மாதிரி இல்லை. வெளியில் இயக்கம் போன பின் ஒரு உருப்படியான அமைப்பும் இல்லை, இருக்கிரவர்களும் இந்திய அடிமைகள் ஊரில் அரசியல் வாதிக்களும் அதே.ஆக இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? பேசிப் பேசி இப்படியே எதையும் வாங்காமல் அழிவது தான் நீங்கள் சொல்லும் தீர்வா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இந்தியாவினை கடந்து எம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற உண்மை நிலையினை புலிகளும் உணர்ந்திருந்தனர் என்றே கருதுகிறேன், எமக்கு வேறு தெரிவு இல்லை.

மேற்கின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கூட, புலிகள் இந்தியாவில் வைத்து பேச்சுவார்த்தியினை நடத்த முயன்றனர், மேற்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம், இது தற்போதய உலக ஒழுங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் மேற்கில் ஆதிக்கம் செலுத்தும் போது நிகழ்ந்தது.

ஆனாலும் பனிப்போர் காலத்திலேயே இந்தியாவின் முக்கியத்துவம் குறைவாக இருந்த போதே இந்தியாவினால் இலங்கையில் மேற்கிற்கு எதிராக இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடிந்திருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்கள் மீது மட்டும் திணிக்கபட்டதாக நாம் கருதும் வேளை சிங்களவர்கள் அரசு நாட்டை விற்று விட்டது எனும் நிலைப்பாட்டில் தென்பகுதியில் கலவரம் ஏற்படலாம் அனும் நிலையில் இலங்கை அரசு தேசிய தொலைக்காட்சியில் ஒரு ஆவணத்தினை ஒளிபரப்பியிருந்தது.

அதன் தலைப்பு சரியாக நினைவில் இல்லை(according and withdrawal? தலைப்பு சரியாக நினைவில் இல்லை),நீண்ட காலத்திற்கு முன் பார்த்த நினைவுண்டு(ஆங்கில மூலம்) ஆங்கில அறிவு அப்போது மிகவும் குறைவு, ஆனால் அதில் உள்ள காட்சிகளில் இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கையினை சூழ இருந்த நிலையில் இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்காவிடில் இலங்கையின் மீது இந்தியா படையெடுக்கும் என்பதாக உணர்ந்து கொண்டேன்.

இங்கு சிங்களவர்கள் தமது ஜென்ம விரோதிகளாகக்கருதும் இந்தியாவினை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு எம்மை அழித்தார்கள் ?

1987 இல் சிங்களத்தின் போரை இந்தியா பொறுப்பெடுத்ததும் அதனாலேயே,வேலை முடிவடைய போகிறது என தெரிந்ததும் இந்தியாவினை அவமானப்படுத்தி வெளியேற்றவும் இலங்கையால் முடிந்திருந்தது.

அதே போல எமது தேவைகளை ஏன் இந்தியாவினை பயன்படுத்தி நிறைவேற்ற கூடாது? இதில் இந்திய தரப்பிற்கும் இலாபம் தமிழருக்கும் இலாபம்.

உங்கள் கணக்கு சரிதான் ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்தியா எங்கள் இருவரையும் என்றைக்கும் நிம்மதியாக இருக்க விடாது என்கிற உண்மை தான்.

13 ஐ ரணில் தர முயலும் பொழுது குழப்புவது யார்?

திஸ்ஸவிதாரண அரசியல் சட்டத்தை வரைந்த பொழுது கூப்பிட்டு குழப்பியது யார்?

மைத்திரி ரணில் அரசைக் கவிழ்த்தது யார்?

நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவை எப்படி நாம் பாவிப்பது?

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இதற்கு இருக்கிற ஒரே வழி இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும், இந்தியா எதிர்க்கிற நாடுகளோடு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும், அவர்களையே நம்பாமல் பொதுவான உறவுகளை பேணவேண்டும் நம்ப நட நம்பி நடவாதே போன்று. இந்திய ராஜதந்திர ரீதியில் தோல்விகளை கண்டு வருகிறது போல் தெரிகிறது. அதனாலேயே ஏதிலிகளான ஏதோ ஒருவகையில் அதற்கு உதவுகிறோம் என்பதால் நம்மை அசையவிடாமல் வைத்து பயன்படுத்துகிறது. அதற்கு துணையாக தமிழக தமிழரை துணைக்கு அழைக்கிறது. அண்மையில் ஒரு கதை கேட்டேன். ஒரு கணவர் தன் மனைவியை எவ்வளவு அவமானப்படுத்த, சிறுமைப்படுத்த, கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்கிறார். பொறுமையிழந்த மனைவி அவரை விட்டுப்பிரிய முனையும் பொழுது நீ எனது மனைவி, நான் உன்னோடுதான் வாழுவேன் இதில் வேறு யாரும் தலையிட முடியாதென்கிறார். காரணம் அவரது பலமே அவள்தான். அவளும் விட்டுப்போனால் அவரால் எதுவும் செய்ய முடியாது, அடிச்சுப்போட்ட சாரை என்பது நன்றாகவே தெரியுமவருக்கு. அவள் சொல்கிறாள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் இந்த மனநிலை மாறவேண்டும் சுய மரியாதை அவசியம். இது மாறாவிட்டால் இப்படிப்பட்ட புருஷர்களுக்கு கொண்டாட்டந்தான்.  

மிகச் சரியான உதாரணம்.குமரப்பா புலெந்திரன் சாவு காலம் முதல் நாம் குடிகார புருசனுக்கு மனைவியாகவே வாழ்கின்றோம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

கிடைப்பதை இப்போதைக்கு வாங்குவோம்.

எதை அவர்கள் தருகிறார்கள், எதை நாங்கள் வாங்குவது என்று நீங்கள் குறிப்பிடவில்லையே? எதையுமே தர அவர்கள் தாயாரில்லை, நீங்களோ தாறதை  வாங்குவோம் என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை?

8 hours ago, vasee said:

மேற்கின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கூட, புலிகள் இந்தியாவில் வைத்து பேச்சுவார்த்தியினை நடத்த முயன்றனர்,

நம்பக்கூடாதவர்களை நம்பியதும், கூட வைத்திருந்ததுமே அவர் செய்த பிழை. எதிரியை அடக்க தெரிந்த அவருக்கு துரோகியை இனங்காணத்தெரியவில்லை, அது அவர்களுக்கு இலகுவாகிவிட்டது. தமிழரின் அழிந்த போராட்டம் எல்லாம் துரோகத்தாலேயே அழிந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகிடி said:

தமிழ் நாட்டுத் தமிழருக்கு மானசீக ஆதரவை மட்டுமே கொடுக்க முடியும். மீறிப்போக வெள்ளிக்கிட்டால் இலங்கையின் சிறுபான்மையினரைப் பயன்படுத்தி நாட்டுக்குள் இந்தியா பிரிவினையைத் தூண்டும் 

நாங்கள் இலங்கையில் ஆட்சியில் இருந்தாலும் இந்தியாவில் உள்ள தமிழருக்கு வழங்க கூடிய அதிகூடிய உதவி மானசீக உதவி மட்டுமே ..இதனால் எந்தவொரு பிரயோஜனமில்லை     இன்று தமிழ்நாடு தமிழர்களும்  எமக்கு தரக்கூடிய அதிகூடிய உதவியும் மானசீக  உதவி தான்    ஏனெனில் அவர்கள் இந்தியா அரசால் ஆளப்படுகீறார்கள. ...அவர்கள் விரும்பினால்  புதுடெல்லியில்   இந்தியா பாராளுமன்றத்துக்கு எதிரில் நாலு   ஐந்து பேர் கொண்ட குழுவாக..மாறி மாறி  பல ஆண்டுகளுக்கு   இலங்கை தமிழருக்கு சுயாட்சி பெற்று கொடு. என்ற கோரிக்கை முன் வைத்து போராட்டங்களை நடத்தலாம். சிலநேரம்.  வெற்றி அளிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

எதை அவர்கள் தருகிறார்கள், எதை நாங்கள் வாங்குவது என்று நீங்கள் குறிப்பிடவில்லையே? எதையுமே தர அவர்கள் தாயாரில்லை, நீங்களோ தாறதை  வாங்குவோம் என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை?

நம்பக்கூடாதவர்களை நம்பியதும், கூட வைத்திருந்ததுமே அவர் செய்த பிழை. எதிரியை அடக்க தெரிந்த அவருக்கு துரோகியை இனங்காணத்தெரியவில்லை, அது அவர்களுக்கு இலகுவாகிவிட்டது. தமிழரின் அழிந்த போராட்டம் எல்லாம் துரோகத்தாலேயே அழிந்தது. 

கிடைப்பதை இப்போதைக்கு வாங்குவோம் என்று நான் சொல்லி இருக்கக்கூடாது. ஆனால் இந்தியாவை முற்றிலும் ஒதுக்கி விட்டு இலங்கை அரசுடன் பேசுவோம். இந்தியாவை முற்று முழுதாக ஒதுக்கி விட்டு மேற்கோடு இணைவோம். இந்தியாவுக்கு எதிராக( இன்றைய மோடி arasukku)மேற்கு நாடுகள் அணி திரள்கின்றன. இந்தியா பதறுகின்றது. இனியும் இந்தியாவுக்கு வால் பிடிக்கும் அரசியலை நாம் நடத்த வேண்டாம் என்கிறேன். சீனாவோடு ஒரு உறவையாவது ஏற்படுத்துவோம். அப்போது தான் சிங்கள அரசு எம்மை நம்பி ஒரு தீர்வைத் தர முடியும் 

2 minutes ago, Kandiah57 said:

நாங்கள் இலங்கையில் ஆட்சியில் இருந்தாலும் இந்தியாவில் உள்ள தமிழருக்கு வழங்க கூடிய அதிகூடிய உதவி மானசீக உதவி மட்டுமே ..இதனால் எந்தவொரு பிரயோஜனமில்லை     இன்று தமிழ்நாடு தமிழர்களும்  எமக்கு தரக்கூடிய அதிகூடிய உதவியும் மானசீக  உதவி தான்    ஏனெனில் அவர்கள் இந்தியா அரசால் ஆளப்படுகீறார்கள. ...அவர்கள் விரும்பினால்  புதுடெல்லியில்   இந்தியா பாராளுமன்றத்துக்கு எதிரில் நாலு   ஐந்து பேர் கொண்ட குழுவாக..மாறி மாறி  பல ஆண்டுகளுக்கு   இலங்கை தமிழருக்கு சுயாட்சி பெற்று கொடு. என்ற கோரிக்கை முன் வைத்து போராட்டங்களை நடத்தலாம். சிலநேரம்.  வெற்றி அளிக்கும் 

அதனால்தான் நான் என்றைக்கும் அன்றைய தி மு க அரசை கலைஞரை ஒரு போதும் வைததில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

எதை அவர்கள் தருகிறார்கள், எதை நாங்கள் வாங்குவது என்று நீங்கள் குறிப்பிடவில்லையே? எதையுமே தர அவர்கள் தாயாரில்லை, நீங்களோ தாறதை  வாங்குவோம் என்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லை?

அவர்கள் ஒன்றும் தரமாட்டார்கள்    ஆனால்  பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஏனென்றால் ...ஒன்றும் தரமாட்டேன் என்று பகிங்கரமாக சொல்ல முடியாது    எனவேதான் பேச்சுவார்த்தை வைத்து    தமிழருக்குள்   ஒன்றுமையில்லை  என்பார்கள்   அல்லது  உடன்பாடில்லை என்பார் 🙂 சரிவந்தால்.  உடன்படிக்கை எழுதி விட்டு  ...அடுத்து வரும் இரண்டு நாளில் புத்தபிக்களை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு  எழுதிய உடன்படிக்கையை  கிழித்து எறிவார்கள். 🤣😂.  இல்லாவிட்டால் அமுல் படுத்தமால் விட்டுட்டு   பழைய கிராம சபைக்கு தேர்தல் வைப்பார்கள்....இந்த தேர்தலில் போட்டியிடுவதில். தமிழ்  கட்சிகள் அடிபட தொடங்கி விடுவார்கள் 🤣  🤪 பிறகு நானா ?நீயா? றோட்டு  போட்டது  பள்ளிக்கூடம் கட்டியது...மலசலகூடங்கள் கட்டியது.....🤣...என்று தேர்தல் பிரசாரம் களை கட்டும்  ...இதிலேயே பொலிஸ் காணி அதிகாரங்களை மறந்துவிடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாட்டு தமிழர்கள் சார்பாக வலிமைமிக்க,பேச்சு திறன் மற்றும் ஈழத்தமிழர் வரலாற்று அறிவு கொண்ட ஒரு தலைமை அவசியம்.

தாத்தா அமெரிக்காவில் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் அவை என்ன‌ மாதிரி...............

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

இலங்கை அரசுடன் பேசுவோம்

எவ்வளவு காலந்தான் பேசிக்கொண்டிருப்பீர்கள்? நெருக்கடி வரும்போதெல்லம் பேச்சுக்கழைப்பது பிறகு கிடப்பில் போட்டுவிட்டு விரட்டியடிப்பதும், வீறாப்புபேசுவதும், பிறகு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதில்லை, மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பது. எத்தனை காலந்தான் ஏமாற்றுவது மக்களை?பண்டாரநாயக்கா செல்வநாயகம், டட்லி சேனநாயக்கா செல்வநாயகம் உடன்படிக்கை தொடங்கி திம்புப் பேச்சுவார்த்தை, ஜெனிவா பேச்சுவார்த்தை எத்தனையோ பேசினோம், பேசிக்கொண்டிருக்கிறோம் எதுவுமே நடைபெறவில்லையே, ஏமாற்றப்பட்டுக்கொண்டல்லவா இருக்கிறோம்? எங்களது வழிகாட்டிகளோ குருட்டு வழிகாட்டிகளாக இருபக்கமும் தலையாட்டி மக்களை நடுத்தெருவில் விட்டது போதாமல் இன்னும் நாங்கள்தான் மக்களின் ஏகோபித்த குரல், பேரம் பேசுகிறோம் என்று பேரம் பேசி விற்றுக்கொண்டிருக்கிறார்கள் மக்களை. அவர்களை ஒதுக்கினால் அந்த இடைவெளியில் இன்னொரு ஓநாய் பூந்து விளையாடுகிறது. படித்தவர்கள் நல்ல இராஜ தந்திரிகளை உருவாக்க வேண்டும். யாராக இருந்தாலும் அவர்களோடு பேசும்முன் சில எச்சரிக்கை நடவடிக்கைகள்; என்ன பேசப்போகிறோம்? அவர்களின் முனைப்பு என்ன என ஆராய்ந்து பேச வேண்டும். பேச்சுவார்த்தை என்றவுடன் புகழ்ந்து தள்ளிக்கொண்டு காலடியில் விழுந்து கிடப்பதையும், விழுத்தடித்துக்கொண்டு ஓடுவதையும் நிறுத்த வேண்டும். கூப்பிட்டால் போதியளவு பேசிவிட்டோம் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை  சொன்னதை நிறைவேற்றுவதே பாக்கி அதன்பின் யோசிப்போம் என்று சொல்லுங்கள். அவர்கள் சொன்னதை நினைவூட்டுங்கள் எங்களை அரணைகள் என்று மீண்டும் மீண்டும் பேசியதையே பேசிப்பேசி நிரூபியாதீர்கள், காலத்தை இழுத்தடித்து கதிரையை சூடாக்காதீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவியுங்கள். என்னவோ தெரியாது; திடீரென்று தாறத்தை வாங்குவோம், தாறத்தை வாங்குவோம் என்று ஆலோசனை வருகிறது. எங்கிருந்து வருகிறது? எதை வாங்குவது? என்று எந்த ஒரு விளக்கமுமில்லாமல், நடந்த, நடக்கிற விடயங்கள் நடக்கிற தெரியாமல்.

2 hours ago, Kandiah57 said:

 உடன்படிக்கை எழுதி விட்டு  ...அடுத்து வரும் இரண்டு நாளில் புத்தபிக்களை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு  எழுதிய உடன்படிக்கையை  கிழித்து எறிவார்கள்.

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே, எங்களின் பொருளாதாரத்தை எரித்து, மக்களை கொன்று, ஏதிலிகளாக விரட்டியதன் பயன் இன்று பூதாகரமாக வளர்ந்து நாடு முழுவதையும்  இறுக்குகிறது. இதைத்தான் காலங்காலமாக பாத்து வெறுத்து நம்ம தலைவர்கள் வாக்குக்குத்தான் லாயக்கு என தங்கள் இன்னுயிரை இழந்தார்களே, கண்டது என்ன? இளைஞரை உசுப்பேற்ற முதல் சர்வதேசத்திடம் எமது பிரச்சனையை எடுத்துரைத்திருந்திருக்க வேண்டும்,  வழி கேட்டிருக்க வேண்டும், அதன் விளைவை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும், இல்லையேல் இளைஞரை ராசதந்திர வழியில் நடத்தி தயார் செய்திருக்க வேண்டும்.  எதுவுமில்லாமல் எமது செல்வங்களுக்கு உணர்ச்சியூட்டி சுடுகாடான பின் அவர்களை குற்றம் சொல்லிக்கொண்டு, சர்வதேசத்திடம் இலங்கைக்கு அவகாசம் கேட்க்கும், வலிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் இவர்களை வைத்து நாம் என்ன செய்வது? 

21 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாட்டு தமிழர்கள் சார்பாக வலிமைமிக்க,பேச்சு திறன் மற்றும் ஈழத்தமிழர் வரலாற்று அறிவு கொண்ட ஒரு தலைமை அவசியம்.

இப்போதைக்கு இதுதான் அவசியம்! புலம்பெயர் நாடுகளில் அவர் வாழும்நாடுகளில், எமது வரலாறு எப்படி மாற்றியமைக்கப்பட்டது, எப்படி ஏமாற்றப்பட்டோம், யார்யார் சகுனி வேலை பாத்தார்கள், யார் யார் எம்மை எமது பிரச்சனையை வளத்தார்கள் எல்லாம் தெரிவிக்க வேண்டும். எமது இருப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். நாம் யாரும் விரும்பி ஆயுதத்தை ஏந்தவில்லை, நம்மை, நமது இருப்பை காப்பாற்றவேறு வழியில்லாமல்  நிற்பந்திக்கப்பட்டோம். அந்தந்த நாடுகளில் உள்ள தூதுவராலயங்கள், சகுனியின் பிரஜைகள் வெட்க்கித் தலைகுனிய வேண்டும். அவர்கள் தம் போலிப்போதனைகளை கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அவர்கள் ஒன்றும் தரமாட்டார்கள்    ஆனால்  பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஏனென்றால் ...ஒன்றும் தரமாட்டேன் என்று பகிங்கரமாக சொல்ல முடியாது    எனவேதான் பேச்சுவார்த்தை வைத்து    தமிழருக்குள்   ஒன்றுமையில்லை  என்பார்கள்   அல்லது  உடன்பாடில்லை என்பார் 🙂 சரிவந்தால்.  உடன்படிக்கை எழுதி விட்டு  ...அடுத்து வரும் இரண்டு நாளில் புத்தபிக்களை கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு  எழுதிய உடன்படிக்கையை  கிழித்து எறிவார்கள். 🤣😂.  இல்லாவிட்டால் அமுல் படுத்தமால் விட்டுட்டு   பழைய கிராம சபைக்கு தேர்தல் வைப்பார்கள்....இந்த தேர்தலில் போட்டியிடுவதில். தமிழ்  கட்சிகள் அடிபட தொடங்கி விடுவார்கள் 🤣  🤪 பிறகு நானா ?நீயா? றோட்டு  போட்டது  பள்ளிக்கூடம் கட்டியது...மலசலகூடங்கள் கட்டியது.....🤣...என்று தேர்தல் பிரசாரம் களை கட்டும்  ...இதிலேயே பொலிஸ் காணி அதிகாரங்களை மறந்துவிடுகிறார்கள் 

ச‌ரியான‌ பார்வை சிங்க‌ள‌வ‌னிட‌ம் க‌தைச்சு பேசி ஒரு தீர்வும் பெற‌ முடியாது

நில‌மை கைமீறி போனால் புத்த‌ பிக்குக‌ள் க‌ல‌வ‌ர‌ம் செய்வாங்க‌ள்....................ஏதும் வ‌ல்ல‌ர‌சு நாடு அலுத்த‌ம் கொடுத்தா வ‌ழிக்கு வ‌ருவின‌ம் இல்லையேனில் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் பேசி ஒன்னையும் பெற‌ முடியாது.....................இந்தியா அமெரிக்கா ம‌ன‌ம் வைச்சா த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னைக்கு தீர்வு கிடைக்கும்.............எம‌க்கு பெரும் த‌டையே இவ‌ர்க‌ள் தான்...............இந்தியாவில் புலிக‌ள் மீதான‌ தடையை நீக்க‌ போராடாம‌ , இன‌த்துக்காக‌ உயிரை விட்ட‌ த‌லைவ‌ர் இருக்கிறார் என்று எம‌து த‌மிழீழ‌ மீட்புக்கான‌ அகிம்சை போராட்ட‌த்தை ப‌ல‌ வ‌ருட‌ம் பின்னுக்கு த‌ள்ளிய‌ பெருமை😡 ப‌ழ‌ நெடுமாற‌னுக்கு................... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, பையன்26 said:

தாத்தா அமெரிக்காவில் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் அவை என்ன‌ மாதிரி...............

அட அப்பிடி ஒண்டும் இருக்கெல்லே....எனக்கு துண்டற மறந்தே போச்சுது. :beaming_face_with_smiling_eyes:

15 minutes ago, satan said:

இப்போதைக்கு இதுதான் அவசியம்! புலம்பெயர் நாடுகளில் அவர் வாழும்நாடுகளில், எமது வரலாறு எப்படி மாற்றியமைக்கப்பட்டது, எப்படி ஏமாற்றப்பட்டோம், யார்யார் சகுனி வேலை பாத்தார்கள், யார் யார் எம்மை எமது பிரச்சனையை வளத்தார்கள் எல்லாம் தெரிவிக்க வேண்டும். எமது இருப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். நாம் யாரும் விரும்பி ஆயுதத்தை ஏந்தவில்லை, நம்மை, நமது இருப்பை காப்பாற்றவேறு வழியில்லாமல்  நிற்பந்திக்கப்பட்டோம். அந்தந்த நாடுகளில் உள்ள தூதுவராலயங்கள், சகுனியின் பிரஜைகள் வெட்க்கித் தலைகுனிய வேண்டும். அவர்கள் தம் போலிப்போதனைகளை கைவிட வேண்டும்.

இப்ப பூனைக்கு மணி கட்டுறது யார் எண்ட பிரச்சனை வரும். என்றாலும் யாரையாவது தெரிவு செய்ய வேண்டும். வருபவருக்கு ஆங்கில மொழியறிவு மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அட அப்பிடி ஒண்டும் இருக்கெல்லே....எனக்கு துண்டற மறந்தே போச்சுது. :beaming_face_with_smiling_eyes:

நீங்க‌ள் ந‌கைச்சுவையாய் எழுதுவ‌தை பார்த்தா அவை மேலும் ந‌ம்பிக்கை இல்லை போல் தெரிகிற‌து.............2009க‌ட‌சியில் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்துக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பு இருந்த‌து..............அவை செய‌லில் இற‌ங்கின‌ மாதிரி தெரிய‌ வில்லை , அவையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் இப்ப‌ வ‌ருவ‌தில்லை தாத்தா 😁..................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அட அப்பிடி ஒண்டும் இருக்கெல்லே....எனக்கு துண்டற மறந்தே போச்சுது. :beaming_face_with_smiling_eyes:

இப்ப பூனைக்கு மணி கட்டுறது யார் எண்ட பிரச்சனை வரும். என்றாலும் யாரையாவது தெரிவு செய்ய வேண்டும். வருபவருக்கு ஆங்கில மொழியறிவு மிக அவசியம்.

33 minutes ago, குமாரசாமி said:

அட அப்பிடி ஒண்டும் இருக்கெல்லே....எனக்கு துண்டற மறந்தே போச்சுது. :beaming_face_with_smiling_eyes:

இப்ப பூனைக்கு மணி கட்டுறது யார் எண்ட பிரச்சனை வரும். என்றாலும் யாரையாவது தெரிவு செய்ய வேண்டும். வருபவருக்கு ஆங்கில மொழியறிவு மிக அவசியம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இளையோர், ஈகோ இல்லாமல் பல துறைகளில் திறம்பட செயற்படக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்த்து  தாயக பொருளாதார வளர்ச்சியை எப்படி இலங்கை அரசின் தடைகளை தாண்டி பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையச் செய்வது, எப்படி அரசு கோரும் உதவிகளை வைத்து அவர்களை பணிய வைப்பது, பேச்சுவார்த்தை ஏமாற்று இல்லாமல் பயனுள்ள வகையில் அமைய நிர்ப்பந்திப்பது போன்ற பயிற்சிகளை அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் தமது சமுதாயத்தின் மீது பொறுப்பு, பற்று, பாதுகாக்கவேண்டிய உந்துதல் எழும். போராட்டம் என்பதை  விடுத்து, ஏமாற்றத்தை தவிர்த்து சுழிச்சோடும் தந்திரங்களை கையாள வேண்டும். சிங்களவனால் தீமைகளை உருவாக்கி வெல்ல முடியுமென்றால் அதை தடுத்து வெல்வதற்கு வழிகளுமுண்டு. ஒற்றுமை, தன்னலமற்ற சேவை, அயரா முயற்சி, அவர்களின் வழிகளை உன்னிப்பாக கவனித்து தடுத்தாடும் திறமை, மொழியாற்றல், பகிர்ந்து, சேர்ந்தியங்கும் திறமை போதும் சாமியார். புலத்தில் இது முடியாது. இந்தியாவால் நமது பிரச்சனைகளில்  அதிகாரம் செலுத்த முடியுமென்றால்  நம்ம இளையோரால் ஏன் இது முடியாது?            

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் ந‌கைச்சுவையாய் எழுதுவ‌தை பார்த்தா அவை மேலும் ந‌ம்பிக்கை இல்லை போல் தெரிகிற‌து.............2009க‌ட‌சியில் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்துக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பு இருந்த‌து..............அவை செய‌லில் இற‌ங்கின‌ மாதிரி தெரிய‌ வில்லை , அவையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் இப்ப‌ வ‌ருவ‌தில்லை தாத்தா 😁..................

அப்பன்! முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின்னர் ஈழத்தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசை பெரிதும் நம்பினார்கள்.நம்பினேன். இது சம்பந்தமாக ஜேர்மனிய உறுப்பினர்களுடனும் உறவாடினேன். உப்புச்சப்பில்லாமல் கதைத்தார்கள். வெட்டினோம் புடுங்கினோம் பீலிங்....ஏதோ கோவில்  அங்கத்தவர் போல் இருக்கின்றார்கள். திருவிழா காலங்களில் மட்டும் தலையை வெளியே காட்டுவர் போல் அவர்களது நடத்தைகள்.

கவனிக்க.....

இவர்களை பற்றி இவ்வளவு நாகரீகமாக எழுதிவிட்டேனா என நினைக்கும் போது என்னை நானே கிள்ளிப்பார்க்கின்றேன்.:face_savoring_food:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, satan said:

புலம்பெயர் நாடுகளில் உள்ள இளையோர், ஈகோ இல்லாமல் பல துறைகளில் திறம்பட செயற்படக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்த்து  தாயக பொருளாதார வளர்ச்சியை எப்படி இலங்கை அரசின் தடைகளை தாண்டி பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையச் செய்வது, எப்படி அரசு கோரும் உதவிகளை வைத்து அவர்களை பணிய வைப்பது, பேச்சுவார்த்தை ஏமாற்று இல்லாமல் பயனுள்ள வகையில் அமைய நிர்ப்பந்திப்பது போன்ற பயிற்சிகளை அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் தமது சமுதாயத்தின் மீது பொறுப்பு, பற்று, பாதுகாக்கவேண்டிய உந்துதல் எழும். போராட்டம் என்பதை  விடுத்து, ஏமாற்றத்தை தவிர்த்து சுழிச்சோடும் தந்திரங்களை கையாள வேண்டும். சிங்களவனால் தீமைகளை உருவாக்கி வெல்ல முடியுமென்றால் அதை தடுத்து வெல்வதற்கு வழிகளுமுண்டு. ஒற்றுமை, தன்னலமற்ற சேவை, அயரா முயற்சி, அவர்களின் வழிகளை உன்னிப்பாக கவனித்து தடுத்தாடும் திறமை, மொழியாற்றல், பகிர்ந்து, சேர்ந்தியங்கும் திறமை போதும் சாமியார். புலத்தில் இது முடியாது. இந்தியாவால் நமது பிரச்சனைகளில்  அதிகாரம் செலுத்த முடியுமென்றால்  நம்ம இளையோரால் ஏன் இது முடியாது?            

உலகில் அதிக நாடுகளில் விலை மதிக்கமுடியாத செல்வங்கள் உண்டு. ஆனால் அதை எப்படி உபயோகிப்பது என தெரியாமல் உண்ண உணவில்லாமல் ஏழ்மையாகவே வாழ்கின்றார்கள். 

அது போல்தான் ஈழத்தமிழர்களும்..... சகல திறமைகளும் இருந்தும்  திக்கற்று திரிகின்றார்கள்.

இன்றைய தேவை திறமை மிக்க அரசியல் தலைமை.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்ற முடியாததை  ஏற்றுக்கொள்ள வேண்டும். குறை சொல்லிப்பயனில்லை ஆனாலும் ஆற்றாமையின் வெளிப்பாடு புலம்புகிறோம். இல்லையேல் மாற்றிக்காட்ட வேண்டும். இந்தியா இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப முடிந்ததென்றால், சாபாட்டுப்பொட்டலம் போட முடிந்ததென்றால் நமது உறவுகளால் ஏன்முடியவில்லை? கப்பலை நடுக்கடலில் நிறுத்தி காத்திருந்து விட்டு இந்தியா தான் விடுவிக்கிறேன் என்று போலி வாக்குறுத்திவிட்டு ஒன்றுமில்லாமல் சும்மா திரும்பிய சம்பவமும் உண்டு. இதை  ஐ. நாவும், சர்வதேசமும் கைகட்டி, வாய்பொத்தி பாத்துக்கொண்டுதானே இருந்தது. இது சர்வதேச  இனவழிப்பின் உச்சக்கட்டம். அதை மாற்றி எழுத முடியும் நினைத்தால், அதற்கு தடுத்தாடும், கேள்வி கேட்க்கும் சட்ட நுணுக்க  திறமை வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.