Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தூர் நிலாவரையில் திடீரென தோன்றிய புத்தர் சிலை; எதிர்ப்பினால் அகற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தூர் நிலாவரையில் திடீரென தோன்றிய புத்தர் சிலை; எதிர்ப்பினால் அகற்றம்

புத்தூர், நிலாவரையில் திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்று இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே இதை அமைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

333641861_719414586306866_21182704559305

எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அகற்றப்பட்டது.

இந்தப் பிரதேசம் அதிகளவில் தென் பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/241981

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

May be an image of 4 people, people standing and outdoors

May be an image of 3 people, people standing, outdoors and tree

May be an image of 4 people, people standing, outdoors and text

அரச மரத்தை கண்டால் காணும்....
லைட் போஸ்ட்டை... கண்ட,  நாய் 🐕‍🦺 மாதிரி... ஓடி வந்திடுவாங்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச மரங்களை தறித்து விட்டு புளியமரம் ஆலமரம் நட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச மரங்களை தறித்து விட்டு புளியமரம் ஆலமரம் நட வேண்டும்.

அரச மரத்தை தறிப்பதை விட… அங்கு வைரவர் சூலத்தை நாட்டினால்,
புத்தர் கிட்ட வரமாட்டார் என நினைக்கின்றேன். 😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச மரங்களை தறித்து விட்டு புளியமரம் ஆலமரம் நட வேண்டும்.

மரம் கண்டபடி தறித்தால் சட்டம் பாயும்.

அதுவும் அரச மரம் எண்டால் அதி விசேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பு தேசத்தில் தான் இந்த எடுப்பு. தென்பகுதி அரச மரங்களின் கீழ் சொறி நாய்கள் தான் படுத்துறங்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

ஆக்கிரமிப்பு தேசத்தில் தான் இந்த எடுப்பு. தென்பகுதி அரச மரங்களின் கீழ் சொறி நாய்கள் தான் படுத்துறங்குது. 

என்ன இருந்தாலும் பிக்குக்களை இப்படி சொல்லக்கூடாது🤣

  • கருத்துக்கள உறவுகள்

அரச மரங்களையெல்லாம் தறித்து விட்டு வேறு பிரயோசனமான மரங்களை நடவேணும். அவர்களுக்கு அரச மரத்தை கண்டால் உடனே புத்தர் ஞாபகம் தான்.

1 hour ago, nedukkalapoovan said:

ஆக்கிரமிப்பு தேசத்தில் தான் இந்த எடுப்பு. தென்பகுதி அரச மரங்களின் கீழ் சொறி நாய்கள் தான் படுத்துறங்குது. 

அதுவும் ஒருவகையில் உண்மைதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

அரச மரத்தை தறிப்பதை விட… அங்கு வைரவர் சூலத்தை நாட்டினால்,
புத்தர் கிட்ட வரமாட்டார் என நினைக்கின்றேன். 😜

5 hours ago, goshan_che said:

மரம் கண்டபடி தறித்தால் சட்டம் பாயும்.

அதுவும் அரச மரம் எண்டால் அதி விசேசம்.

நாங்களே அரச மரங்களுக்கு கீழை புத்தர் சிலையை வைச்சு ஐயர்மாரையும் வைச்சு மூண்டு வேளையும் மணியடிச்சு பூசை செய்தால் சிங்களம் என்ன செய்யும்?

இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை புடிக்க திரியிற எங்கடை சனத்தை  கொஞ்சத்தை அமுக்கி காவி வேட்டி சட்டையையும் குடுத்துதேவாரத்தை படியுங்கோ எண்டு திரத்தி விடுறது.... உந்த ஜெகோவா அல்லலூயா ஜேசு அழைக்கிறார் கொம்பனிக்கு கொஞ்ச காசை குடுத்தாலும் விசயம் சக்ஸஸ்..... என்ன நான் சொல்லுறது சரிதானே :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இது உண்மையில் ஒரு சூப்பர் ஐடியா. மொழியை தக்க வைக்க.

பெளத்தம் எமக்கு புதியதல்ல. ஐம்பெரும் காப்பியத்தில் இரெண்டு பெளத்த இலக்கியமே.

இப்படிச் செய்தால் இனவாத தலைமகள் ஒரு கணம் மின்னி முழிப்பார்கள். 

ஆனால் நடைமுறைச்சாத்தியமா? நாம் தயாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, goshan_che said:

இது உண்மையில் ஒரு சூப்பர் ஐடியா. மொழியை தக்க வைக்க.

பெளத்தம் எமக்கு புதியதல்ல. ஐம்பெரும் காப்பியத்தில் இரெண்டு பெளத்த இலக்கியமே.

இப்படிச் செய்தால் இனவாத தலைமகள் ஒரு கணம் மின்னி முழிப்பார்கள். 

ஆனால் நடைமுறைச்சாத்தியமா? நாம் தயாரா?

பௌத்தம் என்பது நமக்கும் உலகிற்கும் எதிர் இல்லயே?
அதை  வைத்து அரசியல்,இனவாதம் செய்வது தானே இப்போதுள்ள பிரச்சனை.
நமது அரசியல் தலைவர்கள் முன்னெடுப்பார்களாயின் எதுவும் சாத்தியமே.

இனவாத புத்த பிக்குகளை அடக்க இதுதான் வழி என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, குமாரசாமி said:

நாங்களே அரச மரங்களுக்கு கீழை புத்தர் சிலையை வைச்சு ஐயர்மாரையும் வைச்சு மூண்டு வேளையும் மணியடிச்சு பூசை செய்தால் சிங்களம் என்ன செய்யும்?

இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை புடிக்க திரியிற எங்கடை சனத்தை  கொஞ்சத்தை அமுக்கி காவி வேட்டி சட்டையையும் குடுத்துதேவாரத்தை படியுங்கோ எண்டு திரத்தி விடுறது.... உந்த ஜெகோவா அல்லலூயா ஜேசு அழைக்கிறார் கொம்பனிக்கு கொஞ்ச காசை குடுத்தாலும் விசயம் சக்ஸஸ்..... என்ன நான் சொல்லுறது சரிதானே :beaming_face_with_smiling_eyes:

நல்ல யோசினை தான்... ஆனால் எங்களுக்கு மேல இருக்கிற பருந்துகளுக்கு இது புண்ணில புளி பத்தின மாதிரி இருக்கும்!

புத்தரும் சைவத்திலை இருந்துதானே பிரிஞ்சு போனவர். அதாலை தேவாரம் படிக்கிறது குற்றமில்லைத்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, நன்னிச் சோழன் said:

நல்ல யோசினை தான்... ஆனால் எங்களுக்கு மேல இருக்கிற பருந்துகளுக்கு இது புண்ணில புளி பத்தின மாதிரி இருக்கும்!

புத்தரும் சைவத்திலை இருந்துதானே பிரிஞ்சு போனவர். அதாலை தேவாரம் படிக்கிறது குற்றமில்லைத்தானே?

எங்களுக்கு இப்போது தேவையானது கிறுக்குத்தனமான நடவடிக்கையும் அரசியலுமே. நியாயபூர்வமான சண்டையும் அரசியலும் தோற்றுப்போனவைகள் என்பதை நேரிலேயே பார்த்து விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, குமாரசாமி said:

எங்களுக்கு இப்போது தேவையானது கிறுக்குத்தனமான நடவடிக்கையும் அரசியலுமே. நியாயபூர்வமான சண்டையும் அரசியலும் தோற்றுப்போனவைகள் என்பதை நேரிலேயே பார்த்து விட்டோம்.

உண்மை தான்...

ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேணும்!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆனால் நடைமுறைச்சாத்தியமா? நாம் தயாரா?

கூடுதலான தமிழ்ச்சனங்களின்ரை வீடுகளில புத்தர் சிலை கட்டாயம் வைச்சிருப்பினம். அட்லிஸ் வடிவுக்காகவது வைச்சிருப்பினம். கவனிக்கேல்லையோ? :beaming_face_with_smiling_eyes:

எல்லாரும் தயார் பூனைக்கு மணி ஆர் கட்டுறது எண்டதுதான் பிரச்சனை. :cool:

7 minutes ago, நன்னிச் சோழன் said:

உண்மை தான்...

ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமும் வேணும்!

திட்டங்கள் பல இருந்தாலும் சட்டங்கள் பல தெரிந்தவர்கள் வெளிப்படையாக வந்தால் தான் எதுவுமே சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

கூடுதலான தமிழ்ச்சனங்களின்ரை வீடுகளில புத்தர் சிலை கட்டாயம் வைச்சிருப்பினம். அட்லிஸ் வடிவுக்காகவது வைச்சிருப்பினம். கவனிக்கேல்லையோ? :beaming_face_with_smiling_eyes:

எல்லாரும் தயார் பூனைக்கு மணி ஆர் கட்டுறது எண்டதுதான் பிரச்சனை. :cool:

திட்டங்கள் பல இருந்தாலும் சட்டங்கள் பல தெரிந்தவர்கள் வெளிப்படையாக வந்தால் தான் எதுவுமே சாத்தியம்.

அவ்வளவு சுலபமில்லை.

நாவுக்கரசர் போல் மாசில்வீணையும் எண்டு வெப்பறையில் இருந்து பாடவேண்டியும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில்லாமல் எங்கட நிலத்திலை அடைஞ்சுகொண்டு நிக்கிறதுகளுக்கு இப்ப இதுதான் வேலை. சொறி பிச்சவன் கை சும்மா இராது. காலம் எவ்வளவோ சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கு உரிமைகளை பகிர்ந்து, அமைகியாக வாழ. அதை மறுத்து கொடி பிடித்து சும்மா இருக்கும் தமிழரை தெருவில் நின்று  வம்புக்கிழுத்து சண்டித்தனம் காட்ட வெளிக்கிட்டு, ஒருநாள் எல்லாம் இவர்கள் கையை விட்டு விலகி முழுவதும் பறிபோய் தமிழருக்கென்றொரு தீர்வு வரும்போது இதே  தெருவில் நின்று நாங்கள் தமிழரோடு ஒற்றுமையாக, உரிமைகளை பகிர்ந்து வாழ்கிறோம் பிரிந்து போகாதீர்கள் என்று புலம்புவார்கள். அப்போ தமிழர் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். பிக்குகளே நாட்டின் அமைதியை சமாதானத்தை குலைத்த பிசாசுகள் என்று இவர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள், தாங்கள் பவுத்தர்களாய் இருப்பதை இட்டு வெட்கப்படுவார்கள். வளைய மறுப்பது வெடித்துத்தான் போகும். ஆனால் அதற்கு முதல் சிங்களத்தின் கால் பிடிப்பவர்கள், வக்காலத்து வாங்குபவர்கள் தமிழரிடம் இருந்து ஒதுக்கப்படவேண்டும்.                              

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச மரங்களை தறித்து விட்டு புளியமரம் ஆலமரம் நட வேண்டும்.

ஆலமரம் அரிதாகி வருகின்றது. ஆனால் அது முளைத்து வர நீண்டகாலம் எடுக்கும்.

புளியமரத்தில் முனி வந்து குடியிருக்கும்!

இப்போது புங்கைமரம் நடுவதுதான் அதிகம் என மரங்கள் நடுவதில் தேர்ச்சிபெற்ற நண்பர் சொன்னார்.

அண்மையில்  திடீரென தோன்றிய சிவலிங்கம் என்ற செய்தி வந்தது. அதைப் பார்த்தபோது நம்ம சச்சியின் சிவசேனையைக் கொண்டு தமிழர்களின் ஊரெல்லாம் ஒரு சிவலிங்கம் வைத்தால் என்ன என்று தோன்றியது. இந்தியாவின் மோடியையும், பிஜேபியையும், அண்ணாமலையையும் ஸ்பொன்ஸர் செய்யக் கேட்டுப் பார்க்கலாம்!

கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!

கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழ் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு புத்தரின் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

அது தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊரவர்கள் அறிந்து அவ்விடத்தில் கூடியதுடன் , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து தவிசாளர் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு இராணுவத்தினர் மற்றும் அச்சுவேலி பொலிஸார் ஆகியோரும் சென்று இருந்தனர்.

பிரதேச சபை தலையீட்டினை அடுத்து, புத்தர் சிலையை இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகற்றினர்.

இந்நிலையில் அவ்விடத்தில் புத்தர் சிலை வைத்தார் என கூறப்பட்ட இராணுவ சிப்பாயியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது ,  புத்த பெருமான் கனவில் வந்து தன்னை வழிபடுமாறு கூறியமையால் , இவ்விடத்தில் அவரை வைத்து வழிபட்டேன் என கூறியுள்ளார்.

https://athavannews.com/2023/1325514

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன், @குமாரசாமி, @goshan_che, @nedukkalapoovan, @nilmini @நன்னிச் சோழன், @satan

கனவில் புத்தர் வந்து வழிபடச் சொன்னால்.. தனது விடுதி அறையில் வைச்சு வழிபட வேண்டியது தானே. அதேன் புத்தர் வெளில வந்தார்.. அரச மரத்தடி தேடி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன்

எனக்கும்தான் கீர்த்தி சுரேஷ் தினமும் கனவில் வந்து ஏதேதோ எல்லாம் செய் என்கிறார்….

சிப்பாய் என்றால் ஒரு மனக்கட்டுப்பாடு வேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

கனவில் சிவன் வந்தார், கனவில் அம்மாள் வந்தார் , முருகன் வந்தார் என்ற கதைகளை அவிழ்தது விடப்படுவதை கேள்விப்பட்டு இப்போது புத்தர் வந்தார் என்ற அளவுக்கு வந்து நிற்கிறது திருகுதாளம். நாம கனகாலமா உருவாக்கின உருட்டுகளை  நம்மிடமே வுட்டு பார்கிறார் அண்ணாச்சி. இது முழுக்க முழுக்க உருட்டு என்பதை  தமிழர்களை விட யாரும் உணர முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, island said:

இப்போது புத்தர் வந்தார் என்ற அளவுக்கு வந்து நிற்கிறது திருகுதாளம்.

ஷோபாசக்தி எழுதிய பல்லிராஜா கதையைப் படிச்சிருப்பார் போலிருக்கு.

சிப்பாய் தம்மத்தையும் ததாகதரையும் தமிழ் மக்களின் இருதயங்களையுமே நம்பி வைச்சிருக்கிறாராக்கும். ஆனால் தமிழரது இருதயங்கள் காலச்சுழற்சியில் எதையும் மறப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நாங்களே அரச மரங்களுக்கு கீழை புத்தர் சிலையை வைச்சு ஐயர்மாரையும் வைச்சு மூண்டு வேளையும் மணியடிச்சு பூசை செய்தால் சிங்களம் என்ன செய்யும்

நாங்கள் புத்தர் சிலையை வைத்தால் நாங்களே பூசை செய்வது தான் நியாயம். இதில் ஐயர்மாருக்கு என்ன வேலை. ஏற்கனவே கோவில்களை கட்டி ஐயர்மாரிடம் கொடுத்து ஏமாந்தது போதாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 21:11, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச மரங்களை தறித்து விட்டு புளியமரம் ஆலமரம் நட வேண்டும்.

அண்ணை வெள்ளரசு தான் புத்தர் ஞானம் அடைந்த மரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.